K.M.H அபூ அப்தில்லாஹ்
அஹ்மதியா இயக்கம்!
அடுத்து தங்களை அஹ்மதியா முஸ்லிம்கள் என்று கூறும் காதியானிகள் பற்றி 1963-லேயே அறிந்தோம். அப்போது எமது உறவினர் ஒருவரிடம் இருந்த குலாம் அஹ்மது மிர்சாவுடைய “இஸ்லாமிய ஞான போதம்” மற்றும் சில நூல்கள் கிடைத்துப்படித்தோம். அதேபோல் அப்துல்காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களது சில நூல்களின் மொழிபெயர்ப்புகளையும், இமாம் கஸ்ஸாலியின் கீமியா ஸஆதத் என்ற நூல் நான்கு பாகங்களையும் பார்த்தோம். அப்போது எங்கள் பகுதியில் சில காதியானிகள் இருந்தும் அவர்களின் தாக்கம் எம்மிடம் ஏற்படவில்லை. தப்லீகில் தீவிரமாகச் செயல்பட்டோம். மனித அபிப்ராயத்திற்கு மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லை; குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என்ற தெளிவு கிடைத்த பின்னரும், அஹ்மதியா ஜமாஅத்தைப் பற்றியும் தீவிரமாக ஆய்வு செய்தோம். அவர்களும் சமுதாயத்தைப் பிளவுபடுத்துவதன் மூலம் பெரியதொரு வழிகேட்டில் இருப்பதே தெளிவானது.
குலாம் அஹ்மது தன்னை ஒரு சீர்திருத்தவாதி என்ற நிலையோடு அவரது ஆரம்பகால முயற்சிகளையே தொடர்ந்திருந்தால் உரிய பலன் கிடைத்திருக்கலாம்; முஸ்லிம்களிடையே மண்டிக் கிடக்கும் சமாதி வழிபாடுகள், மூடச் சடங்கு சம்பிரதாயங்கள் இவை அனைத்தையும் மிகக் கடுமையாகக் கண்டிக்கக் கூடியவராகவே அவர் இருந்துள்ளார். மக்களிடையே நல்ல செல்வாக்கு ஏற்பட்டுத்தான் இருக்கிறது. தான் எதைச் சொன்னாலும் அதைக் கண்ணை மூடி ஏற்கும் ஒரு கூட்டம் இருக்கிறது என்ற நிலை ஏற்படும்போது, மனிதனை ஷைத்தான் வழிகெடுத்துவிடத் தான் செய்கிறான். அவனது சூழ்ச்சிக்குப் பலியாகியே குலாம் அஹ்மது தன்னை நபி, மஸீஹ் என பிதற்ற ஆரம்பித்தார். குர்ஆன், ஹதீஸ் வெளிச்சத்தில் பார்க்கும்போது அவரது இக்கூற்றுக்கள் கடைந்தெடுத்த பொய்கள் என்பதை குர்ஆன், ஹதீஸில் உள்ளதை உள்ளபடி ஏற்பவர்கள் அறியமுடியும். சிலர், அவர் நபி என்ற வாதத்தை வைக்கவில்லை; அவரது மகனே, தலைமைப் பொறுப்பேற்ற பின்னர் அப்படியொரு கற்பனையை கட்டிவிட்டார் என்கின்றனர். உண்மையை அல்லாஹ்வே நன்கறிந்தவன்.
நபிமார்களின் வருகை ஏன்?
நேர்வழியை மக்களுக்கு எடுத்துச் சொல்லவே நபிமார்கள் அனுப்பப்பட்டார்கள். ஒரு நபி வரும்போது அவருக்கு முன்னால் வந்த நபியின் நேர்வழி போதனை பதிந்து பாதுகாக்கப்படவில்லை. அந்த சமூகத்தில் திருட்டுத்தனமாகப் புகுந்து கொண்ட புரோகிதர்கள், அந்த நபியின் நேர்வழி போதனைகளில் இவர்களின் அற்ப உலக ஆதாயத்திற்காக பல பொய்யான தகவல்களை அல்லாஹ்வின் பெயராலும், அந்த நபியின் பெயராலும் இட்டுக்கட்டினார்கள். நேர்வழி போதனை என்ற பெயரில் பல கோணல்வழி போதனைகள் பெருகின. எனவே அடுத்து வந்த நபி நேர்வழி போதனையை நேரடியாக அல்லாஹ்விட மிருந்து வஹீ மூலம் பெற வேண்டிய நிலை இருந்ததே அல்லாமல் வேறு மாற்று வழி இருக்கவில்லை. எனவே அல்லாஹ் நபிமார்களை அனுப்பி அவர்களுடன் வஹீ மூலம் தொடர்பு கொள்ளும் கட்டாய நிலை இருந்து வந்தது.
தூதுத்துவ வஹீ முற்றுப் பெற்று பாதுகாக்கப்பட்டது!
ஆனால் இறுதி நபி முஹம்மது(ஸல்) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட அல்குர்ஆன் முழுமை பெற்றதாகவும், உலகம் அழியும் வரை அதுவே நேர்வழியைத் தெளிவாகக் கூறும் நெறி காட்டும் நூலாகவும், முஸ்லிம்கள் என்ற பெயரில் அதன்படி நடப்பவர்கள் மட்டுமே வெற்றி பெற முடியும் என்று கூறும் 5:3, 3:19, 85 இறைவாக்குகளைக் கொண்ட தாகவும் இருக்கிறது. அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப் பட்டதோடு, உலகம் அழியும் வரை அதை அல்லாஹ்வே பாதுகாப்பதாகவும் வாக்களித்துள்ளான். (அல்ஹிஜ்ர் 15:9)
குர்ஆன் பாதுகாக்கப்பட்டபின் நபி அவசியமில்லை!
இந்த நிலையில் நபி(ஸல்) அவர்களுக்குப் பின் ஒரு நபி வந்து, அவர் அல்லாஹ்விடமிருந்து வஹீ பெற்று மார்க்கச் சட்டங்களைச் சொல்ல வேண்டும் என்று ஒருவன் நம்பினால், அவன் மேலே கண்ட 5:3, 3:19, 85, 15:9 அனைத்து இறைவாக்குகளையும் மறுக்கிறான்; நிராகரிக்கிறான் என்பதே அதன் பொருளாக இருக்க முடியும். காரணம் அல்குர்ஆனில் இல்லாத ஒன்றை மார்க்கமாக்குவதாக இருந்தால்தான் புதிதாக ஒரு நபியை தேர்ந்தெடுத்து அவருக்கு வஹீ மூலம் அதை அறிவிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். எனவே நபி(ஸல்) அவர்களுக்குப்பிறகு ஒரு நபியை நம்பிக்கை கொள்வதாக இருந்தால் மேலே கண்ட5:3, 3:19, 85, 15:9 இறைவாக்குகள் கூறுபவை உண்மையல்ல. மார்க்கம் நிறைவு பெறவில்லை. அதை நிறைவு செய்ய நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு நபி வந்தே மார்க்கத்தை நிறைவு செய்ய வேண்டியுள்ளது என்றே அவன் நம்பிக்கை வைக்கிறான். அவன் உண்மையான ஒரு முஸ்லிமாக இருக்க முடியுமா? ஒருபோதும் சாத்தியமில்லை. எனவே நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு நபி வருவார் என்பது பகிரங்கமான வழிகேடேயாகும்.
நபி வருகை பற்றி அல்லாஹ்வே அறிவிக்க வேண்டும்!
மேலும் அப்படி ஒரு நபி வருவதாக இருந்தால் அதை அல்லாஹ் தெளிவாக நேரடியாக அல்குர்ஆனில் அறிவித்திருப்பான். நபி(ஸல்) அவர்களும் தனக்குப் பின்னால் நபி வருவதை அறிவித்திருப்பார்கள். அப்படி ஓர் ஆதாரத்தையும் கூட காதியானிகள் காட்ட முடியாது. அல்குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் திரித்தும் வளைத் துமே தங்களின் பொய் வாதத்தை நிலைநாட்ட மட்டுமே முடியும். உதாரணமாக ஒருவர் இறை நம்பிக்கை கொண்டு வெற்றி பெறுவதாக இருந்தால் அவரிடம் கட்டாயம் இருக்க வேண்டிய அவசியமான நம்பிக் கைகள், செயல்பாடுகள் பற்றி அல்பகரா 2:1-5 வரையுள்ள வசனங்கள் தெள்ளத் தெளிவாக நேரடியாகக் கூறுகின்றன. அவற்றில் 4வது இறைவாக்கில் “அவர்கள் உமக்கு அருளப்பெற்றதின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்டவை மீதும் நம்பிக்கைக் கொள்வார்கள்” என்று கூறியிருக்கிறானே அல்லாமல் “உமக்குப் பின்னர் அருளப்படுவதின் மீதும் நம்பிக்கைக் கொள்வார்கள்” என்று கூறவில்லை.
ஓர் இறை விசுவாசியின் நம்பிக்கை இப்படித்தான் இருக்க வேண்டும்; அவர்தான் நேர்வழியில் இருக்கிறார் (2:5) என்று கூறும் இந்த முக்கியமான இடத்தில், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு நபி வந்து அவரை நபியாக ஏற்பது முஸ்லிம்களின் கடமை என்றால், அதை நிச்சயமாக அல்லாஹ் இந்த இடத்தில் குறிப்பிட்டிருப்பான். அதுவும் நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த எண்ணற்ற நபிமார்களையும், அவர்களுக்கு அருளப்பட்டவற்றையும் நம்ப வேண்டுமே அல்லாது, அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆணை இல்லை. இந்த நிலையிலேயே நபி(ஸல்) அவர்களுக்கு முன்னர் வந்த நபிமார்களையும் அவர்களுக்கு அருளப்பட்டவற்றையும் நம்பிக்கைக் கொள்வதை அறிவுறுத்தியிருக்கும் அல்லாஹ், நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ஒரு நபி வந்து அவரை நபியாக ஏற்று, அவரது போதனைகள் படி நடக்க வேண்டும் என்றால், இந்த முக்கியமான இடத்தில் அதை அறிவிக்காமல் விட்டிருப்பானா? அல்லாஹ் மறதியாளனோ, தவறிழைப்பவனோ இல்லை என்பதுதான் ஓர் உண்மை விசுவாசியின் உறுதியான நம்பிக்கையாக இருக்க முடியும். (பார்க்க 20:52)
நபி வருகை முத்திரை இடப்பட்டு முடிவுக்கு வந்துவிட்டது!
எனவே நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு நபிமார்களின் வருகை முத்திரையிடப்பட்டு முற்றுப்பெற்றுவிட்டது என்பதுதான் குர்ஆன் கூறும் உண்மையாகும். இதை அல்குர்ஆன் அஹ்ஜாப் 33:40 தெள்ளத் தெளிவாக நேரடியாக உறுதிப்படுத்துகிறது. நபி(ஸல்) அவர்களும் தனக்குப் பின்னர் நபி அனுப்பப்படமாட்டார் என்பதைப் பல கட்டங்களில், பல சந்தர்ப்பங்களில் கூறி உறுதிப்படுத்தி யிருக்கிறார்கள்.
ஆனால் இந்த குர்ஆன் வசனங்களையும், ஹதீஸ்களையும் சுய விளக்கங்கள் கொடுத்து காதியானிகள் நிராகரிக்கின்றனர். 2:4-ல் உள்ள “இன்னும் ஆகிரத்தாகிய மறுமையை உறுதியாக நம்புவார்கள்” என்ற இறுதிப்பகுதி நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு வரும் நபியையே குறிக்கிறது என்று கூறி அவர்களின் ஆதரவாளர்களின் காதுகளில் பூ சுற்றுவார்கள். “33:40 இறைவாக்கு நபி(ஸல்) அவர்கள் எல்லா நபிமார்களிலும் சிறப்புக்குரியவர்கள் என்று கூறுகிறதே அல்லாமல் இறுதி நபி என்று கூறவில்லை” என்று தங்களை நம்புபவர்களை ஏமாற்றுவார்கள். நபி(ஸல்) அவர்கள் தனக்கு பின்னால் நபிமார்கள் வரமாட்டார்கள் என்று சொன்னது ஷரீஅத்துடைய நபியையே அல்லாமல், ஷரீஅத்தோ, உம்மத்தோ இல்லாத நபியைப் பற்றி அல்ல என்று சுயவிளக்கம் கொடுத்து ஏமாற்றுவார்கள்.
மார்க்கம் அப்பன், பாட்டன் சொத்தல்ல!
காதியானிகளுக்கும், மற்றும் சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் பிரிவினைவாதிகளுக்கும் மார்க்கம் ஏதோ அவர்களின் அப்பன்-பாட்டன் சொத்து என்ற நினைப்புப் போலும். மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று ஜுமர் 39:3 கூறுவதை எளிதில் மறந்து விடுகிறார்கள்; புறக்கணித்தும் விடுகிறார்கள். 39:3 கூறும் களங்க மற்ற-தூய மார்க்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது. புரோகிதர்களின் கைபடாமல் இருந்தால்தான் அது தூய்மை யாக கலப்படம் இல்லாமல் இருக்கும்; புரோகிதர்களின் மனிதக்கரம் பட்டால் அது மார்க்கம் என்ற நிலையிலிருந்து திரிந்து மதமாக மாறிவிடும் என்பதை உறுதிப்படுத்துகிறது. அல்குர்ஆனுக்கு அல்குர்ஆனே விளக்கமாக இருக்கிறது. அதற்கு விளக்கம் கொடுப்பதாக இருந்தால், அந்த அதிகாரம் நபி(ஸல்) அவர்களுக்கு மட்டுமே உண்டு (பார்க்க 16:44,64). மனிதர்களில் யாருக்குமே சுய விளக்கம் கொடுக்கும் அதிகாரம் இல்லை என்பதை காதியானிகளும், பிரிவினை வாதிகளும் உணர வேண்டும்.
காதியானிகளின் அறியாமைக்கு அளவில்லையா?
காதியானிகள் எந்த அளவு மூடர்களாகவும், வழிகேடர்களாகவும் இருக்கிறார்கள் என்பதற்கு அவர்கள் அல்குர்ஆன் வசனங்களுக்கு கொடுக்கும் சுய விளக்கங்களே போதிய சான்றாகும். அல்குர்ஆன் ஸஃப் 61:6-ல்
மர்யமின் குமாரர் ஈஸா: “இஸ்ராயீல் மக்களே!” எனக்கு முன்னுள்ள தவ்ராத்தை மெய்ப்பிப்பவனாகவும், எனக்குப் பின்னர் வரவிருக்கும் “அஹ்மது” எனும் பெயருடைய தூதரைப்பற்றி நன்மாராயம் கூறுபவனாகவும் இருக்கும் நிலையில் அல்லாஹ்வின் தூதனாக உங்களிடம் வந்துள்ளேன்”…….. (61:6) என்ற இறை வாக்கில் கூறப்படும் “அஹ்மது” நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு வந்த குலாம் அஹ்மதையே குறிக்கிறது என்பது காதியானிகளின் பிதற்றலாகும். சிறிது அளவே சுய சிந்தனை இருந்தால் கூட அவர்கள் இப்படி பிதற்ற முடியாது.
ஈஸா(அலை) தனக்கு முன்னர் மூஸா(அலை) அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தவ்ராத்தைக் குறிப்பிட்டு விட்டு, பின்னர் வரவிருக்கும் தூதரைப் பற்றிக் குறிப்பிடுவதாக இருந்தால், நிச்சயமாக அவர் தவ்றாத்தைப் போல் ஒரு நெறி கூறும் நூல் கொடுக்கப்படுகிறவராக மட்டுமே இருக்க முடியும். குலாம் அஹ்மதுக்கு நெறிநூலும் இல்லை; தனி உம்மத்தும் இல்லை; அவரும் குர்ஆனையே பின்பற்ற வேண்டும் என்று ஒப்புக் கொள்ளும் காதியானிகள், எந்த முகத்தோடு 61:6 இறைவாக்கு குலாம் அஹ்மதைக் குறிப்பிடுகிறது என உளறுகிறார்கள். இந்த 61:6 இறை வாக்கிலுள்ள “அஹ்மது” எனும் பெயர் குலாம் அஹ்மதைக் குறிக்கிறது என்றால் அதை யார் தெளிவு படுத்த வேண்டும்? தெளிவு படுத்த கடமைப்பட்ட நபி(ஸல்) அவர்கள்தானே தெளிவுபடுத்தி இருக்கவேண்டும். 1300 ஆண்டுகளுக்குப் பின்னர் வந்த இந்த குலாம் அஹ்மதா தெளிவு படுத்த வேண்டும்?
“அஹ்மது” என்று 61:6-ல் குறிப்பிடுவது குலாம் அஹ்மதுதான் என்று விதண்டாவாதம் செய்கிறவர்கள் எந்த அளவு அடிமுட்டாள்களாக இருக்கிறார்கள் என்பதை சிறிது அளவே சிந்திப்பவனும் விளங்க முடியும். “குலாம் அஹ்மது” என்றால் அஹ்மதின் வேலையாள்- அடிமை என்ற பொருளையே தரும். அஹ்மதின் அடிமை அஹ்மதாக முடியும் என்றால் இதைவிட மடமை இருக்க முடியுமா?
அப்துல்லாஹ் அல்லாஹ்வாக முடியுமா?
“அப்துல்லாஹ்”- அல்லாஹ்வின் அடிமை என்ற பெயரை உடையவன், தான்தான் “அல்லாஹ்” என்று பிதற்றினால், அது எவ்வளவு பெரிய மடமையோ, வழிகேடோ, நரகில் சேர்க்கும் செயலோ, அது போன்றதொரு உளறல்தான் 61:6லுள்ள “அஹ்மது” என்ற பெயர் குலாம் அஹ்மதைக் குறிக்கும் என்ற உளறலுமாகும்.
இது போன்றதொரு இன்னொரு பிதற்றலைப் பாருங்கள். அல்லாஹ் அல்குர்ஆன் அன்னிஸா 4:157, 158 இறைவாக்குகளில் தெளிவாக நேரடியாக இவ்வாறு கூறுகிறான்.
“……..நிச்சயமாக அவர்கள், அவரை(ஈஸா) கொல்லவே இல்லை; ஆனால் அல்லாஹ் அவரைத் தன்னளவில் உயர்த்திக் கொண்டான்; இன்னும் அல்லாஹ் வல்லமை மிக்கோனாகவும் ஞானமுடையோனாகவும் இருக்கிறான். ” (4:157,158)
காதியானிகளுக்கு அல்லாஹ்வின் வல்லமையில் சந்தேகம்!
இந்த இறைவாக்குகளைப் படிக்கும் அற்ப அறிவுடையவனும் அதில் நேரடியாக கூறப்பட்டுள்ளபடி, அல்லாஹ் தனது வல்லமையையும், ஞானத்தையும் கொண்டு ஈஸா(அலை) அவர்களைக் கொல்லப் படாத நிலையில் தன்னளவில் உயர்த்திக் கொண்டான் என்று எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். இறைவனது வல்லமை-ஆற்றல், ஞானம் இவற்றில் சந்தேகமுடையவன் மட்டுமே, உயிரோடு ஈஸா