எம்.பி. ரபீக் அஹ்மத்
உலகில் எத்தனை மதங்கள் இருக்கின்றனவோ, அத்தனை மதங்களையும், அதன் போதகர்களையும் பெயர்கள் குறிப்பிட்டு வரிசையாக பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள். பிறகு அந்த போதகர்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கவனியுங்கள்.அதில் எத்தனை பேர் அப்பழுக்கற்ற தூய்மையான வாழ்வை வாழ்ந்தார்கள் என்பதை கவனியுங்கள். அவர்களில் நாம் அறிந்தவரை ஒரு சிலர் தான் தேறுவார்கள். அந்த ஒரு சிலரின் பெயர்கள் வருமாறு:
1. நபி(ஸல்) அவர்கள் இஸ்லாத்தை போதித்தார்கள்.
2. இயேசு கிறிஸ்து(அலை) அவர்கள் கிறிஸ்துவ மத போதகராக கருதப்படுபவர்.
3. கெளதம புத்தர் அவர்கள் புத்தமத போதகர்.
4. மகாவீர் ஜெயின் அவர்கள் ஜைன மதத்தை போதித்தவர்.
இந்த நால்வர்களின் தூய்மையைப் பற்றியும், வாய்மையைப் பற்றியும் நேர்மையைப் பற்றியும் யாரும் சந்தேகம் கொள்ளாத அளவிற்கு இவர்களுடைய வாழ்க்கை வரலாறுகள் நமக்குக் கிடைக்கின்றன.
தங்கள் மத போதகர்களை தூய்மையானவர்களாக விட்டு வைத்த இந்த நான்கு மதத்தவர்களையும் நாம் நன்றி சொல்ல வேண்டும்.
இஸ்லாமிய வேதமான திருகுர்ஆன் எல்லா இறைத்தூதர்களையும் புனிதர்கள், தூயவர்கள் என்று பறை சாற்றுகின்றனது. இது இஸ்லாத்தின் பெருந்தன்மை மட்டுமல்ல அது உண்மையைத்தான் உரைக்கின்றது. தூய்மையும், வாய்மையும், நேர்மையும் இல்லாதவர்கள் போதகர்களாக ஆக முடியாது.
மற்றவர்களுக்கு போதிப்பதற்கு எந்த தகுதியும் அவர்களுக்கு இராது. அப்படி அவர்கள் போதித்தாலும் அவை போதனைகளாக இராது. அவற்றை மக்களால் ஏற்றுக் கொள்ளவும் முடியாது.
நான் மேலே சொன்ன இந்த நான்கு மதங்களைத் தவிர இன்னும் எத்தனையோ மதங்கள் இருக்கின்றன. அந்த மத போதகர்கள் தூய்மையானவர்கள் எந்த குறையும் காண முடியாதவர்கள் என்று அந்த மதங்களே சொல்லவில்லை. ஆக, அந்த மதங்கள் தங்கள் போதகர்களை களங்கப்படுத்திவிட்டன. யார் தங்கள் மத போதகர்களையே களங்கப்படுத்தி விட்டார்களோ, அவர்கள் நிச்சயம் அவர்களின் போதனைகளையம் களங்கப்படுத்துவதற்கு எந்த குறையும் வைத்திருக்க மாட்டார்கள். ஆக, களங்கப்படுத்தப்பட்ட அந்த போதகர்களையும் கலப்படம் செய்யப்பட்ட அவர்களின் போதனைகளையும் மதங்களாக ஏற்றுக் கொள்வது அறிவுடைமையாகாது. நியாய உணர்வுள்ள எவரும் அவர்களைப் பின்பற்ற முடியாது. அதனால் இப்படிப்பட்ட மதங்களை நாம் கருத்தில் கொள்வது அவசியம் இல்லாமல் போய்விடுகின்றது.
இப்படி அவற்றை உதாசீனம் செய்வதற்கு நாங்கள் பொறுப்பாளிகள் அல்ல.
யார் அவற்றை களங்கப்படுத்தினார்களோ அவர்கள் தான் அதற்கான பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
மிச்சமுள்ள போதகர்களில் மனிதருள் மானிக்கங்களாக, நல்லொழுக்கச் சீலர்களாக இந்த நால்வர்தான் நம் கருத்தை கவருகின்றனர்.
இந்த நால்வருக்கும் ஒரு விஷயத்தில் ஒற்றுமையிருக்கின்றது. இந்த நால்வரும் பல தெய்வக் கொள்கையை ஆதரிக்காதவர்கள்.
இந்த நால்வருக்கும் இன்னொரு விஷயத்திலும் ஒற்றுமையிருக்கின்றது. அது என்ன?
17:81 ்படி அசத்தியம் அழிந்து அல்லாஹ்வின் வாக்கை உண்மைபடுத்தி விட்டார்கள்.
குர்ஆன், ஹதீஸ்படி தான் நடப்போம். பிரச்சாரம் செய்வோம் என்று உறுதிமொழி எடுத்து அடி, உதை, ஏச்சு, பேச்சு வாங்கிய பல துன்பங்களை சந்தித்து சகித்து வாழும் நம் தவ்ஹீத் ஆலிம்களும், தவ்ஹீத் சகோதரர்களும் குர்ஆன், ஹதீஸில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆதாரமும் இல்லாமல் பல அமைப்பு, இயக்க, கழக, மன்ற பெயர்களில் செயல்பட்டு வருகின்றனர்.
அந்நஜாத் இதழில் 500க்கு மேற்பட்ட பக்கங்கள் மூலம் பல பெயர்களில் செயல்படுவதும், சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் என்று எழுதியதால்…. நம் சகோதரர்கள் நம்மை எதிர்த்தார்கள், வசைப்பாடினார்கள். பத்திரிகையை படிக்காதீர்கள் என பிரச்சாரம் செய்தார்கள். நம் மார்க்கக் கூட்டம், மாநாடுகளுக்கு போக தடை விதித்தார்கள்.
ஆனால் நாம் எதற்கும் யாருக்கும் அஞ்சாமல் பொறுமையாக பல பெயர்களில் செயல்படுவது வழிகேடு என எழுதி வந்தோம். இனியும் எழுதுவோம் இன்ஷா அல்லாஹ்.
அல்லாஹ்வின் 17:81 வசனப்படி சத்தியம் என்றைக்கும் அழியாது. அசத்தியமே அழிந்து போகும் என்பதை அல்ஜன்னத் இதழ் (1996 ஆகஸ் செப்.) பக்கம் 124ல் M.S. சுலைமான் பிர்தவ்ஸி எழுதிய கட்டுரை நிரூபித்து விட்டது. அக்கட்டுரையையும் அதே இதழில் பக்கம் 3ல் உள்ள அறிவிப்பையும் படித்து சிந்தித்து ஒருவர் பின்னால் செல்லாமல் குர்ஆன், ஹதீஸ்படி செயல்பட்டு ஒரே ஜமாஅத்தாக செயல்பட அன்போடு இருகரம் நீட்டி அழைக்கிறேன். நம் கொள்கை சகோதரர்களால் கீழ்க்கண்ட பெயர்களில் உள்ள எந்த அமைப்புகளில் ஒரே ஜமாஅத்தாக சேர்ந்து செயல்படலாம் என்பதை சிந்தித்து நீங்களே முடிவு செய்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் நல்லருள் புரிவானாக ஆமீன்.
(1996 ஆக., செப்.)அல்ஜன்னத் கட்டுரையின் வாசகங்களில் சில.
பக்கம் 124 முதல் வரியில் ….சமுதாயம் பிளவுபட்டு போவதையும் பிரிந்து கிடப்பதையும் கடுமையாக அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். (8:46) வசனம் ஆதாரமாக எழுதப்பட்டுள்ளது.
பக்கம் 124 5வது பாராவில்; எவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்து பல்வேறு குழுக்களாக செயல்படுகிறார்களோ அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்.(3:105) ஆதாரமாக தந்துள்ளனர்.
அன்பு கொள்கைச் சகோதரர்களே!
கருத்து வேறுபாடு ஏற்பட்டு அந்நஜாத்தை விட்டு விலகி பிரிந்து த.ஜ.உ.ச. துவங்கியது யார்? AQH. பிறகு JAQH பிறகு தனிதனி நபர்க்கு ஒரு அமைப்பு ஏற்படுத்த தூண்டி பல ஊரை இரண்டாக்கி தனிப் பள்ளி கட்டி சமுதாயத்தை பிளவுபடுத்தியது யார்? நீங்களே முடிவு எடுங்கள். பக்கம் 127 முதல் பாராவில்;..
எந்த அடிப்படையில் நபித் தோழர்கள் ஒன்றுபட்டு ஒரே ஜமாஅத்தாக இருந்தார்களோ அதே அடிப்படையில் தற்கால சூழ்நிலையில் நாம் ஒன்றுபடுவது இன்றியமையாததாகும்.
அன்பர்களே யார் எற்படுத்திய அமைப்பில் நாம் ஒரே ஜமாஅத்தாக இணைந்து செயல்படுவது?
1. K.M.I தொடங்கிய இஸ்லாமிய எழுச்சி மையம்(IAC) (துபை)
2. S.K. தொடங்கிய ஜம்மியத்துல் அஹ்லுல் குர்ஆன் வல் ஹதீஸ் (தமிழ்நாடு) (JAQH)
3. பழனிபாபா தொடங்கிய ஜிஹாத் அமைப்பு (தமிழ்நாடு)
4. கேரள சகோதரர்கள் தொடங்கிய முஜாஹித்
5. அதிரை ஜமீல் அஹ்மத் சாலிஹ் தொடங்கிய இஸ்லாமிய இயக்கம் (ஷார்ஜா)
6. பஜ்லுல் இலாஹி தொடங்கிய தமிழ் முஸ்லிம் பேரவை (துபை)
7. குனங்குடி ஹனீபா தொடங்கிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (தமிழ்நாடு)
8. அப்துல் ஸமத் தொடங்கிய முஸ்லிம் லீக் (தமிழ்நாடு)
9. அப்துல் லத்தீப் தொடங்கிய இந்திய தேசிய லீக்(இந்தியா)
மற்றும் பல தவ்ஹீத் அமைப்புகள், ஜ.உ.ச., த.ஜ.உ.ச முஸ்லிம்கள் எந்த பெயரில் ஒரே ஜமாஅத்தாக செயல்படுவது? அல்லாஹ்வின் கட்டளைப்படி உண்மையாக (வேசம் போடாமல்) நடப்பவர்கள் என்றால் 41:33படி செயல்படுங்கள்; நடப்பவர்கள் என்றால் 41:33படி செயல்படுங்கள்; சமுதாயம் ஒன்றுபடும். இன்ஷா அல்லாஹ்.