அன்புடையீர்,அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
மிகவும் முக்கியமான ரமழானுடைய மாத மாகிய லைலத்துல் கத்துருடைய மாதம் மிக, மிக அருகில் வந்துவிட்டது. போன வருடம் இரண்டு நாட்கள் விடுபட்டது போல் இவ்வருடமும் ஆகிவிடக் கூடாது.ரமழான் வருவது கியாமத் நாளைப் போல் இரகசியமாக இல்லை. வேறு தேதிகளை கணிப்பது போல் ரமழானின் முதல் தேதியை முன் கூட்டியே சரியாக கணிக்க முடியும். அதற்காகத்தான் அல்லாஹு தாலா சூரியனையும், சந்திரனையும் நமக்காக வசப்படுத்தி தந்துள்ளான். நமது உலக காரியங்கள் எல்லாம் சந்திரனின் தேதிப்படி செய்யப்படவேண்டும் என அல்லாஹ் திருகுர்ஆனில் கட்டளையிட்டுள்ளான்.
பிறையை பார்த்ததற்கு பிறகு தான் மாதத்தை தொடங்கவேண்டும் என நபி(ஸல்) அவர்கள் கூறவில்லை மாறாக நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள் மாதங்களில் 29 அல்லது 30 நாட்கள் என்றும் அதை சந்திரனின் அடிப்படையில்தான் கணிக்கவேண்டும். 29-க்கு பிறை இல்லாவிடில் 30 நாட்கள் பூர்த்தி செய்து பிறை பார்க்காமலேயே அடுத்த மாதம் தொடங்கவேண்டும் என்ற சொல்லுக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடுகிறது.
அல்லாஹ்வின் அடையாளமாகிய சூரியனின் கணக்கை ஒப்புக் கொள்கிறவர்கள் சந்திரனின் கணக்கையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். உலகில் உள்ள அனைத்து மக்களும் மாதத்தின் ஐக்கியத்தை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என அல்லாஹ் குர்ஆனில் அறிவித்துள்ளான். அவ்வாறு இல்லையயனில், உதாரணமாக திருவனந்தபுரத்தில் உள்ளவர்களுக்கு தடுக்கப்பட்டது, நாகர்கோவிலில் உள்ளவர்களுக்கு அனுமதிக்கப்படும்.
இந்த ஃபான் ரஜபு 30 பூர்த்தியாகியதற்கு பிறகு 23-12-95 சனிக்கிழமை ஆரம்பம் ஆகிவிட்டது. சில பத்திரிகைகளிலும், காலண்டர்களிலும் ஃபான் பிறை தவறாக கொடுக்கப்பட்டிருப்பதனை பார்க்க முடிகிறது. இஸ்லாத்தின் தேதியுடைய முக்கியத் துவத்தை கணக்கில் கொண்டு, இத்தவறுகளை உடனே சரிபார்க்க வேண்டும்.
இரண்டு முஸ்லிம்கள் சாட்சியாகிவிட்டால் நோன்பை தொடங்கவும் என நபி(ஸல்) அவர்கள் கூறியதை நாம் மறந்துவிடக் கூடாது. அரேபிய பிரதேசங்களில் உள்ள அனைத்து முஸ்லிம்களும் ரமழான் வந்ததற்கு சாட்சியாகி விட்டால் அதை ஏற்றுக் கொள்வதற்கு நாம் ஏன் தயங்க வேண்டும்.
அரேபிய நாட்டிலுள்ள நாட்களுக்கும் இந்தியாவில் உள்ள நாட்களுக்கும் வேறுபாடுகள் கிடையாது. ஒன்றாகத்தான் இருக்கின்றது, அரேபிய நாட்டில் ஜும்ஆ தொழுவது இந்தியாவை காட்டிலும் இரண்டரை மணி நேரத்திற்கு பிறகே! அவ்வாறே இங்குள்ள மக்கள் எல்லா வணக்கங்களையும் இரண்டரை மணி நேரம் முன் கூட்டியே செய்து விடுகின்றோம். நோன்பு மாதத்தில் நுழையும் போதும் அவர்களை விட இரண்டரை மணி நேரம் முன் கூட்டியே நாம் இருக்கவேண்டும்.
போன ரமழான் 30-1-95 திங்கட்கிழமை றூ.னி.வீ.,22,48க்கு பிறந்ததினால் 31-1-95 செவ்வாய்க்கிழமை ரமழான் 1-ம் தேதி என கணிக்கப்பட்டது. இந்த வருட ரமழான் இன்ஷா அல்லாஹ் 20-1-96 சனிக்கிழமை பிறப்பதினால் 21-1-96 ஞாயிற்றுக்கிழமை ரமழான் பிறை 1 ஆக கணிக்கப்பட வேண்டும் இந்த பிறை நமது புவிப்பகுதியில் தென்படாது ஆனால் மறுபகுதிகளில் தென்படும் என நமக்கு தெரியும்.
ரமழான் பிரச்சாரம் 20-1-96 சனிக்கிழமை இரவு சுமார் 10 மணிக்கு மக்கா ரேடியோ அறிவிப்பு செய்யும் அதுபடி எல்லா தலைமை ஹாஜிமார்களும் ஹிலால் கமிட்டிகளும் ரமழான் செய்தியை மக்களுக்கு தெரிய வைக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
இப்படிக்கு,
அலி மனிக்பான்
சேர்மன் ஹஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா, கேரிகட்,
கேரளா.