“மைல் கற்கள்” ஷஹீத் செய்யித் குதுப்
இஸ்லாமிய ஆட்சியை மீண்டும் நிலை நாட்டிட வேண்டும்; இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும், என விழைவோர் ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும்; முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு கால கட்டத்தில் இந்தத திருத்தூது ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபி(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம்தான்.
இந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு, சமுதாயத்தை வரலாற்றின் பிந்தைய காலக்கட்டத்தில், ஏன் மனித வரலாற்றின், ஒட்டத்தில் இங்கொன்றும், அங்கொன்றுமாக சில மனிதப் புனிதர்கள் தோன்றுகின்றார்கள் என்றாலும், அந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை நாம் வரலாற்றில் சந்திக்க இயலவில்லை.
அந்த முதல் சமுதாயத்தை உருவாக்கியவை இரண்டு பெரும் பொக்கிஷங்கள்; அவை திருகுர்ஆன், நபி(ஸல்) அவர்களில் சொல், செயல். இந்த திருகுர்ஆன் அன்று போல் இன்றும் நம்மிடம் அப்படியே இருக்கின்றது. அது போல நபி(ஸல்) அவர்களின் வாழ்வின் வாக்கும், அணுவும் திரிபடாமல் நம்மிடம் இருக்கின்றது.
சிலர் இப்படிக் கருதலாம்; அன்று அந்த முதல் சமுதாயத்தினரிடையே நபி(ஸல்) அவர்கள் இருந்தார்கள். நம்மிடையே அவர்கள் இல்லையே!
இஸ்லாம் என்ற இந்த இறைவழி காட்டுதல் நிலை நாட்டப்படவும், பலன் தரவும் நபி(ஸல்) அவர்கள் இருந்திட வேண்டியது, நிரந்தர தேவை என்றிருந்திருந்தால்,
அல்லாஹ், இஸ்லாம்தான் இந்த உலகம் உள்ளளவும் மனித இனத்திற்கு உள்ள இறுதி இறைவழி காட்டுதல் என்றாக்கி இருக்கமாட்டான். திருகுர்ஆனை இறுதி நாள் வரை அப்படியே பாதுகாத்திடும் பொறுப்பை இறைவனே ஏற்றுக் கொண்டிருக்க மாட்டான்.
ஏனெனில், அவன் நன்றாக அறிவான். இந்த இஸ்லாம் – இந்த இறைவழிகாட்டுதல் நபி(ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னாலும் பலன் தரும். நிலை நாட்ட முடியும் என்பதை இறைவன் நன்றாக அறிவான்.
அதனால்தான் அந்தக் கருணையாளன் இறைவன், பக்கம் அழைத்துக் கொண்டான். இந்த இஸ்லாத்தை இறைவனின் வழிகாட்டுதலை இந்த உலகம் உள்ளவரை மனிதனின் இறுதியான வழிகாட்டுதல் என அறிவித்தான்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வும் வாக்கும் நம்மிடையே அப்படியே இருக்கும்போது, நபி(ஸல்) அவர்கள் நம்மிடையே இல்லை என்பது நாம் நமது பொறுப்புகளிலிருந்து தப்பித்து கொள்வதற்கு கண்டெடுத்த வாதமே!
இதனால்தான், வரலாற்றில் அந்த முதல் சமுதாயத்தைப் போல் இன்னொரு சமுதாயம் அமையாமல் போனதற்கு வேறு காரணங்கள் உண்டு என்பதை நம்மால் உணர முடிகிறது இதனை ஆழ்ந்து கவனித்திடும்போது பல உண்மையான காரணங்கள் நமக்கு தெரிகின்றன.
முதல் காரணம்
இறைவனின் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழர்கள், தங்கள் தாகம் தணித்திட்ட முதல் தடாகம் திருகுர்ஆன்தான். திருகுஆன் மட்டும்தான்.
நபி(ஸல்) அவர்களின் வாழ்வு, வாக்கு என்பவையெல்லாம் இந்த தடாகத்தின் ஊற்றிலிருந்து பிறந்தனவே!
ஆகவேதான் நம்பிக்கையாளர்களின் தாய், ஆயிஷா(ரழி) அவர்களிடத்தில் இறைவனின் தூதர் நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை எப்படியிருந்தது என வினவப்பட்ட போது, நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாக இருந்தது என பதில் கிடைத்தது. (நஸயீ)
அவர்கள், அப்படித் தங்களைத் திருகுர்ஆனிடம் ஒப்படைத்து அதன் வழியில் தங்கள். வாழ்வை அமைத்துக் கொண்டதற்கான காரணம், அவர்களுக்கு அன்றைய சூழ்நிலையில், வழிகாட்டுவதற்கு வேறு மார்க்கங்களோ, வழிகாட்டுதல்களோ, நெறிமுறைகளோ, இல்லை என்பதினால் அல்ல.
அன்று, அந்த மக்களிடையே, ரோம் நாட்டுச் சட்ட திட்டங்கள், பண்பாடுகள், சித்தாந்தங்கள், சிந்தனைப் போக்கு இவையனைத்தும் இருக்கவே செய்தன.
இந்த ரோம நாட்டுச் சட்ட திட்டங்களும், பண்பாடுகளும் தான், இன்று பீடு நடைபோடும் ஐரோப்பிய பண்பாடுகளின் அடிப்படைகள் எனப்போற்றப்படுகின்றன.
அதே போல் கிரீஸ் நாட்டுப் பண்பாடுகளும், தத்துவங்களும் அறிவு விளக்கங்களும் அந்த மக்களிடையே புழக்கத்திலிருக்கவே செய்தன.
சீனத்து சிந்தனைகளும், இந்தியாவின் புனஸ்காரங்களும் அந்த மக்களின் கைகளுக்கு எட்டவே செய்தன. யூதர்களின் பழக்க வழக்கங்களும், கிருஸ்துவர்களின் மத நம்பிக்கைகளும் அவர்களிடையே செயலில் இருந்தன.
ஆகவே, அந்த முதல் இலட்சியத் திருக் கூட்டம், திருகுர்ஆனை மட்டுமே தங்களைத் தயாரிக்கும் ஆலையாக எடுத்துக் கொண்டது என்றால், வேறு கொள்கைகளோ, கோட்பாடுகளோ வழிமுறைகளோ அவர்களுக்கு கிடைக்கவில்லை என்பதினால் அல்ல.
அவர்கள், வேற்றுக் கொள்கைகள் அவர்களை வழிநடத்துவதை விரும்பவே இல்லை.
இதனால் தான், அன்று உமர்(ரழி) அவர்கள் தெளராத் வேதத்திலிருந்து சில வரிகளை எடுத்துக் காட்டிய போது, இறைவனின் இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்கள்.
“இறைவனின் பெயரால், நபி மூஸா(அலை) அவர்களே உங்களோடு இருந்தால், அவர்களுக்கும் என்னைப் பின்பற்றுவதைத் தவிர வேறு வழியிருக்காது”, என்று தெளிவுபடுத்தினார்கள்.
இந்த நிகழ்ச்சி, நபி(ஸல்) அவர்கள், அந்த முதல் சமுதாயத்தினரை, முழுக்க முழுக்க இந்த இறைமறையாம், திருமறையிலேயே தோய்த்தெடுத்தார்கள். அவர்களை வேறு எந்தப் பாசறையிலும் பயிற்றுவிக்க விரும்பவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அதனால்தான் உமர்(ரழி) அவர்கள் திருகுர்ஆனுக்கு அப்பாற்பட்ட ஒரு வழிகாட்டுதலை எடுத்துக் காட்டிய போது, தனது அதிருப்தியை வெளிக்காட்டினார்கள் நபி(ஸல்) அவர்கள்.
இதையே வேறு சொற்களால் சொன்னால், இறைவனின் இறுதித்தூதர் நபி(ஸல்) அவர்கள் எண்ணத்தில், நினைப்பில், வாழ்வில் தூய்மையான தோர் சமுதாயததை உருவாக்க விரும்பினார்கள். அந்த தூய்மையான சமுதாயம் திருகுர்ஆன் எனும் தூய்மையான பாசறையில் பயிற்சி பெற வேண்டும் என்று விரும்பினார்கள் ஆகவே அந்த முதல் சமுதாயத்தினர் வரலாற்றில் இணையற்ற தோர் சமுதாயமாக இலங்கினார்கள்.
ஆனால் இதற்குப் பின்னால் வந்த சமுதாயத்தினர், திருகுர்ஆனை மட்டுமல்லாம்ல், இதரக்கொள்கைகளிடம் அடைக்கலம் தேடினார்கள்.
இவர்கள் தங்களைச்சுற்றி இருந்த சித்தாந்தங்களுக்கும் சிந்தனைப் போக்குகளுக்கும் தங்களை அடிக்கடி ஆட்படுத்தி கொண்டார்கள்.
இந்த அறியாமையை அடிப்படையாகக் கொண்ட கொள்கைகள் அன்றைய நிலையை விட சற்று வலுவாகவே நம்மை வளைத்துப் பிடித்துள்ளன.
இந்த அறியாமையை அடிப்படையாகக் கொண்ட சூழ்நிலையின் தாக்கம், நமது எண்ணங்களில், சிந்நதனைகளில், பழக்க வழக்கங்களில், நமது இங்கிதங்களில், பண்பாட்டில், கலாச்சாரத்தல், நமது கலைகளில், நமது இலக்கியங்களில் நமது நடைமுறை சட்டதிட்டங்களில் நிறைந்து காணப்படுகிறது.
எந்தளவிற்கு என்றால், இவற்றில் பலவற்றை அதாவது இஸ்லாத்திற்கு எதிரான அறியாமையை, அடிப்படையாகக் கொண்ட வற்றை – நாம் இஸ்லாம் என்று சொல்லி செயல்படுத்தும் அளவிற்கு, இவற்றின் தாக்கம் நம்முள் ஊடுருவி விட்டது.
இதனால் தான் பல இஸ்லாமிய எண்ணங்களும், கோட்பாடுகளும், நம் இதயங்களுக்குள் நுழைய மறுக்கின்றன.
இதனால்தான் நமது உள்ளங்கள் இஸ்லாத்தின் போதனைகளால் விழிப்படையவும், விரிவடையவும் இயலாமற் போயிற்று.
இப்படி மாற்றுச் சித்தாந்தங்களும் , வேற்றுக் கொள்ககைளும் நம்முள் ஊடுருவி நிலை பெற்று விட்டதால்தான். நம்மால் அநத் முந்தைய சமுதாயத்தினரைப் போன்றதொரு சமுதாயமாக உருவாக்கிட இயலவில்லை.
இஸ்லாத்திற்கு எதிரான பழக்க வழக்கங்களையும் கொள்கைக் கோட்பாடுகளையும், விட்டொழித்திட வேண்டும்.
இஸ்லாம் அல்லாத இந்த அறியாமை காலத்து சூழ்நிலைகளிலிருந்தும். அவை ஏற்படுத்திய நிறுவனங்களிலிருந்தும், நாம் பல பயன்களைப் பெற்றுக் கொண்டிருக்கின்றோம். அவற்றையும் விட்டு விட்டு நாம் வெளியே வந்தாக வேண்டும். இவற்றால் நமக்கு எத்துனை இழப்புகள் ஏற்பட்டாலும் சரியே!
இரண்டாவது காரணம்
நபி(ஸல்) அவர்கள் காலத்தில், ஒருவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் அந்தக் கணம் முதல், அவர் இஸ்லாம் அல்லாத தனது பழைய பழக்க வழக்கங்களிந்து, தனது முந்தைய சிந்தனைகளிலிருந்து, தன்னை முற்றாக விடுவித்துக் கொள்வார்.
இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது, தனது வாழ்க்கையை முற்றாக மாற்றியமைத்துக் கொள்வதாகும் என்பதை நன்றாக உணர்ந்தார்.
அவர்கள் தங்களை பிணைத்திருந்த அத்தனையையும் துறந்து திருகுர்ஆனின் வழிகாட்டுதலுக்குள் தஞ்சம் புகுந்த பின்னர், தங்களுடைய முந்தைய வாழ்விலிருந்து தங்களை முற்றாக விடுவித்துக் கொண்டார்கள் என்பது மட்டுமல்ல,
திருகுர்ஆன் நிழலில் தங்களது வாழ்க்கை, அடி முதல் முடிவரை மாறிப் போய் விட்டதை கண்டனர்.
இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொண்ட நாள் முதல், அவர்கள் திருகுர்ஆனின் நடமாடும் விளக்கங்களாக மாறினார்கள்.
ஜாஹிலியா நாட்களின் பழக்க வழக்கங்கள் -அறியாமை காலத்து – இஸ்லாத்திற்கு முந்தைய காலத்துப் பழக்க வழக்கங்களை பண்பாடுகளை- கொள்கைகளை – கோட்பாடுகளை விட்டுவிடுவதுதான் பல தெய்க கொள்கைகளிலிருந்து விடுபடுவது என்று பொருள்படும்.
பின்னர் தமது வாழ்வை திருகுர்ஆனின் வழியில் திருகுர்ஆனின் வழியல் மட்டும் அமைத்துக் கொள்வது தான், இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்று பொருள்படும்.
இன்று, நம்மைச் சுற்றியும் மெளட்டீக கொள்கைகள் – பல தெய்வ கொள்கைகள் மண்டிக் கிடக்கின்றன. அத்தோடு நம்மை அறைகூவி அழைக்கவும் செய்கின்றன.
அல்லாஹ் அந்த வழிகாட்டுதல்களை இறுதிநாள் வரை பாதுகாப்பை தன் பொறுப்பு என ஏற்றுக் கொண்டானோ அந்த வழிகாட்டுதல்களின் பக்கம் திரும்பியாக வேண்டும்.
இந்த மகத்தான பணியை, நம்மை சீரமைப்பது திருகுர்ஆனின் பாதையில் வடிவமைப்பது என்பதில் ஆரம்பித்து இந்த அறியாமையில் உழலும் சமுதாயத்தின் அடிப்படையையே மாற்றி, அதனையும் இஸ்லாமிய மயமாக்கி விடுவது என்பதில் முடிந்திடவேண்டும்.
இஸ்லாத்திற்கு புறம்பான கொள்கைகளின் தற்காலிக கவர்ச்சி எத்துனை அலங்காரமானதாக இருந்தாலும் அவற்றை நாம் கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.
அவற்றை ஊசிமுனை அளவிற்குக் கூட நாம், சமரசம் செய்திடக் கூடாது.
நமது பாதை (திருகுர்ஆனின் பாதை) வேறு; அதன் பாதை (இஸ்லாம் அல்லாத இதரக் கொள்கைகளின் பாதை) வேறு. நாம் அவற்றின் வழியில் கடுகளவு தூரமே சென்று விட்டால் கூட நாம் நமது லட்சியத்தில் முழுமையாக தோல்வியடைந்து விடுவோம். (அல்லாஹ் நம்மை காப்பாற்றட்டும்!)
இன்றைய சூழ்நிலையில், இந்தப் பாதையில் குர்ஆன் காட்டும் இந்த பாதையில் மட்டுமே நாம் பயணத்தை துவக்கினால்.
எண்ணற்ற இன்னல்களுக்கு ஆளாவோம். நாம் கடுமையான – விலை மதிப்பற்றத் தியாகங்ககளைச் செய்திட வேண்டி வரும். இதையெல்லாம் நாம் நன்றாக அறிவோம் ஆனால் நாம் ஒப்புமையற்ற அந்த முதல் சமுதாயத்தைப் போல் ஆகிட வேண்டும் என்றால் இதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.
ஆகவே இஸ்லாமிய எழுச்சியை ஏற்றி வைக்கும் முதல் நடவடிக்கையாக நாம்- நபி(ஸல்) அவர்களின் உற்ற தோழர்களைப் போல் – இஸ்லாம் அல்லாதவற்றிலிருந்து வெளியேறிட வேண்டும். திருகுர்ஆனிடம் முழுமையாக தஞ்சம் புகுந்திட வேண்டும்.
தொகுப்பு S.II. அலீ, ஜித்தா