உண்மை பேசுக!
இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களு டைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு அவற்றில் அவர் கள் என்றென்றும் இருப்பார்கள். (5:119)
நேர்மையாக பேசுக!
ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ் வுக்கு அஞ்சுங்கள். (எந்நிலையிலும்) நேர்மையான சொல்லையே சொல்லுங்கள். (33:70)
அழகானதைப் பேசுக!
பெற்றோருக்கும், உறவிறனர்களுக்கும், அநா தைகளுக்கும், மிஸ்கீன்களான ஏழைகளுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகான தைப் பேசுங்கள். (2:83)
கனிவாகப் பேசுக!
உறவினர்களோ, அநாதைகளோ, ஏழைகளோ வந்து விடுவார்களானால் அவர்களுக்கும் அ(ச் சொத்)திலிருந்து வழங்குகள்; மேலும் அவர்களி டம் கனிவான வார்த்தைகளைக் கொண்டே பேசுங்கள். (4:8)
நியாயமாகப் பேசுக!
நீங்கள் பேசும்பொழுது அதனால் பாதிக்கப் படுபவர் நெருங்கிய உறவினராக இருந்த போதிலும் நியாயமே பேசுங்கள். (6:152)
அன்பாகவே பேசுக!
அண்டை வீட்டிலுள்ள உறவினர்களுக்கும், அருகிலுள்ள அண்டை வீட்டாருக்கும், (பிர யாணம், தொழில் போன்றவற்றில்) கூட்டாளி களாக இருப்போருக்கும், வழிப்போக்கர்களுக் கும், உங்களிடமுள்ள அடிமைகளுக்கும் அன்பு டன் உபகாரம் செய்யுங்கள்;நிச்சயமாக அல் லாஹ் கர்வமுடையோராக, வீண் பெருமை உடையோராக இருப்பவர்களை நேசிப்ப தில்லை. (4:36)
வீண் பேச்சை தவிர்த்திடுக!
நம் வசனங்களைப் பற்றி வீண் விவாதம் செய்து கொண்டிருப்போரை நீர் கண்டால், அவர்கள் அதை விட்டு வேறு வியங்களில் கவனம் செலுத்தும் வரையில் நீர் அவர்களைப் புறக்கணித்த விடும். (6:68)
பொய் பேசாதீர்!
உங்கள் நாவுகள் (சில பிராணிகள் பற்றி) பொய்யாக வர்ணிப்பது போல், இது ஹலாலா னது. இது ஹராமானது என்று அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டாதீர்கள் நிச்சய மாக, எவர் அல்லாஹ்வின் மீது பொய்யை கட்டுகிறார்களோ அவர்கள் வெற்றியடைய மாட்டார்கள். (16:16)
புறம் பேசாதீர்!
உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேச வேண்டாம். (49:12)
ஆதாரமின்றி பேசாதீர்!
யாதோர் ஆதாரமின்றி, அல்லாஹ்வின் வசனங்களைப் பற்றித் தர்க்கம் செய்வது, அல்லாஹ்விடத்திலும் மிகவும் வெறுக்கப் பட்டதாகும். (40:35)
அவதூறு பேசாதீர்!
எவர்கள் மூஃமீனான ஒழுக்கமுள்ள, பேதைப் பெண்கள் மீது அவதூறு செய்கிறார் களோ, அவர்கள் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் சபிக்கப்பட்டவர்கள். (24:23)
பரோகிதன் நான் செய்த வேலைக்கு எனக் குக் கூலி வேண்டும் என்று கேட்டால், அதை விட மடத்தனம் வேறு இருக்க முடியாது. இது பெரும் நஷ்டத்தில் போய் முடியும்.
தந்தையாக இருக்கிறோம்; தாயாக இருக்கி றோம்; இதற்கெல்லாம் கூலி கேட்டால் என்ன வாகும்?
ஆணும் பெண்ணும் கணவன் மனைவியாகக் கூடி வாழ்வதால் பெறுகிற இன்பம் வசதி இவற் றைக் கணக்கிட்டால் அவர்கள் கேட்கும் கூலி யைவிட அதிகமாகவே இருக்கும். ஆண், பெண்ணாகப் படைத்து, அவர்கள் கூடலில் பேரின்பத்தை வைத்தது. அதற்கான கருவிகளையும் உணர்வுகளையும் உண்டாக்கி யது. இவற்றுக்கெல்லாம் இறைவன் விலை கேட்டால், நம்மால் கொடுக்க முடியுமா?
நம் வேலைக்கான கூலி மட்டும்தான் நமக்கு என்றால், நாம் இந்த உலகில் வாழவே முடியாது. பலருடைய கூட்டு முயற்சியால் உற்பத்தி செய்யப்படுகின்ற பல பொருள்களை நாம் அனுபவிக்கிறோம். சிந்தித்துப் பார்த்தால், இவையயல்லாம் நாம் உழைக்காமல் நமக்குக் கிடைக்கும் கூலி; பயன் கருதுபவன் பாவமும் செய்வான்.