அபூ அப்தில்லாஹ்
ஷைத்தானின் சபதம்
ஆதித் தந்தை ஆதம்(அலை) படைக்கப்பட்டு, மலக்குகளுக்கும் அவர்களுக்குமிடையே போட்டி நடந்தது. அதில் மலக்குகளும், ஜின் இனத்தைச் சேர்ந்த (18:50) இப்லீசும் தோல்வி அடைந்தனர். அதன் காரணமாக மலக்குகளையும், இப்லீசையும் ஆதமுக்குச் சிரம் பணிய அல்லாஹ் கட்ட ளையிட்டான். மலக்குகள் அடிபணிந்தனர். இப்லீஸ் அடிபணிய மறுத்ததோடு ஆணவம் பேசி, அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகி ஷைத்தான் ஆனான்; நரகவாதியானான்.
தான் நரகிற்கு ஆளாகக் காரணமாக இருந்த ஆதம் அவர்கள் மீது கடும் கோபம் கொண்டு, அவரது சந்ததிகளை வழி கெடுத்துத் தன்னுடன் நரகம் புகச் செய்ய உலகம் அழியும் வரை தனக்கு மிகமிக நீண்ட ஆயுளைக் கேட்டான். அல்லாஹ்வும் அவனது கோரிக்கையை ஏற்று மிக நீண்ட நெடிய ஆயுளை அவனுக்குக் கொடுத்தான். (பார்க்க: 7:11-18) அது மட்டுமல்ல; ஷைத்தானது சபதப்படி அவனது சூன்யப் பேச்சில் மயங்கி அவன் பின்னால் செல்லும் பெருங்கொண்ட ஆதத்தின் சந்ததிகளைக் கொண்டு நரகத்தை நிரப்புவதாகவும் அல்லாஹ் வாக்களித்தான். இந்த வாக்கு நிறைவேறியே தீரும் என்றும் உறுதி அளித்தான். (பார்க்க: 32:13, 11:118,119)
ஷைத்தான் தனது மயக்கும் சூன்யப் பேச்சை முதன் முதலாக நமது ஆதித்தந்தை ஆதத்தின் மீதே பிரயோகித்தான். ஆதம்(அலை) அவர்க ளும் அவனது பேச்சில் மயங்கி அல்லாஹ்வின் கட்டளையை நிராகரித்து அல்லாஹ் தடுத்திருந்த மரத்தின் கனியைப் புசித்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானார். ஆயினும் அல்லாஹ் அவரது தவறைச் சுட்டிக் காட்டியவுடன் ஷைத்தானைப் போல் ஆணவம் பேசாமல் தவறை உணர்ந்து அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார். அல்லாஹ்வும் அவரை மன்னித்து இவ்வுலகிற்கு அனுப்பி வைத்தான். (பார்க்க. 7:19-25)
இவ்வுலகிற்கு வந்த பின்னர் ஆதத்தை வழி கெடுத்த ஷைத்தான், அவரின் சந்ததிகளையும் வழி கெடுத்து நரகை நிரப்ப, அவரது சந்ததிகளிளிருந்தே 5%ஐ தனது நேரடி முகவர்களாக (Direct Agents) தேர்ந்தெடுத்தான். அவர்களே தங்களை அவதாரங்கள், ஆன்மீக குருக்கள் எனத் தங்களைத் தாங்களே பீற்றிக் கொள்வோர். தங்களைக் கடவுளின் பொருத்தம் பெற்றோர் என்றும், நேர்வழி நடப்போர் என்றும், மக்களுக்கு நேர்வழிகாட்டி சுவர்க்கத்தில் கொண்டு சேர்ப்போர் என்று வஞ்சகமாகக் கூறிக் கொள்வோர். பல சித்து, மாயாஜாலத் தந்திரங்களைக் காட்டி அவை மூலம் சுய சிந்தனையற்ற பெருங்கொண்ட மக்களை மயக்கி உலகியல் ஆதாயங்கள் அடைவதோடு அந்த அப்பாவி மக்களை நரகில் தள்ளுவோர். ஆம்! ஷைத்தானின் நேரடி முகவர்களாக இருந்து அவனது நரகை நிரப்பும் வேலையை எளிதாக்குவோர் அவதாரங்கள், ஆன்மீக குருக்கள் எனும் இம் மதகுருமார்கள்!
நெறிநூல்கள் பதிந்து பாதுகாக்கப்படாததால்…!
இந்த மதகுருமார்கள் முதல் இறைத் தூதர் ஆதம்(அலை) அவர்கள் காலத்திலிருந்து இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் வரை அருளப்பட்ட நெறிநூல்கள் பதிந்து பாதுகாக்கப்படாததால், முன் சென்ற இறைத் தூதர்களை அவதாரங்களாகவும், சிலர் தங்களையே அவதாரங்களாகவும் கூறி மக்களை ஏமாற்றி ஷைத்தானுடைய வேலையை எளிதாக்கினர். கடவுள் சொன்னதாக, இறைத் தூதர்கள் சொன்னதாகச் சொல்லி மக்களை மிக எளிதாக அம்மத குருமார்களால் ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்க முடிந்தது; முடிகிறது. பல லட்சம் கோடி, மக்கள் பணத்தை சுருட்ட முடிந்தது; முடிகிறது. பிரேமானந்தாக்கள், நித்யானந்தாக்கள், சாயி பாபாக்கள், சங்கர மடத்து சங்கராச்சாரியார்கள், கிறித்தவ குரு குல மடத்து குருமார்கள், துறவிகள், இன்னும் எண்ணற்ற மதங்களின் ஆன்மீக குருக்கள், மதகுருமார்கள், துறவிகள் என இப்பட்டியல் நீளும்.
இறுதி நெறிநூல் பதிந்துப் பாதுகாக்கப்பட்ட பின்…!
இறையளித்த நெறிநூல்கள் பதிந்து பாதுகாக்கப்படாதவரை, இம்மத குருமார்கள் இறைவன் சொன்னதாக இறைத் தூதர்கள் சொன்னதாக அப்பட்டமானப் பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றி வஞ்சிக்க முடிந்தது. ஜமாய்த்தார்கள். இறையருளிய இறுதி நெறிநூல் அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டப் பின்னர் இம்மத குருமார்களால் இறைவன் சொன்னதாகப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றும் வழி அடைக்கப்பட்டுவிட்டது.
ஹதீதுகள் பதிந்து பாதுகாக்கப்படாததால்…!
இறுதி நெறிநூல் அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டது போல், இறைத் தூதரின் அறிவுரைகள் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்படவில்லை. இது இந்த மதகுருமார்களுக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்து விட்டது. எனவே பல லட்சம் பொய்ச் செய்திகளை இறுதி இறைத் தூதர் சொன்னதாக, ஹதீஸ் என்ற பெயரால் மக்களிடையே பரப்பி வயிறு வளர்ப்பதோடு, உலகியல் ஆதாயங்களை அடைய முற்பட்டார்கள். ஷைத்தானின் நேரடி முகவர்களான இம்மதகுருமார்கள் வேறு என்ன செய்வார்கள்? மதகுருமார்களின் இந்த நரித் தந்திரம் அவர்களுக்கு சுமார் இரண்டு நூற்றாண்டுகள் வரை கைக்கொடுத்தது; ஜமாய்த்தார்கள்.
ஹதீதுகள் பதிந்து பாதுகாக்கப்பட்ட பின்….!
ஹி. 200க்குப் பின்னர் சில நல்லடியார்களின் உள்ளங்களில் இம்மதகுருமார்களின் தில்லு முல்லுகள் வேதனையை ஏற்படுத்தியது. அப்படிப்பட்டவர்களின் கடும் முயற்சியால் ஹதீஸ்கள் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் எனத் தரம் பிரிக்கப்பட்டு தெளிவுபடுத்தப்பட்டன. இதற்காக சுமார் 5 லட்சம் அறிவிப்பாளர்கள் பற்றி விபரங்கள் (அஸ்மாவுர் ரிஜால்) கடுமையான உழைப்பிற்குப் பிறகு சேகரிக்கப்பட்டன.
இறுதித் தூதருக்கு முன்னால் வரை இறைவன் சொன்னான். இறைத் தூதர் சொன்னார் என அப்பட்டமான பொய்களை இந்த மதகுருமார்கள் அவிழ்த்து விடுவதிலிருந்து, இறுதித் தூதரைக கொண்டு இறுதி நெறிநூல் பதிந்து பாதுகாக்கப்பட்ட பின்னர் இறைவன் சொன்னதாகச் சொல்லும் பொய்களின் வாசல் அடைபட்டு இறைத் தூதர் சொன்னார் (ஹதீஸ்) என்று பொய்களை அவிழ்த்துவிடும் இம்மத குருமார்களுக்கு, இந்த இரண்டாவது வாசலும் அடைபட்டுப் போனது பெரும் வேதனையை ஏற்படுத்தியது.
இமாம்களின் நேரடிக் கட்டளை….!
வேதனையின் உச்சத்தில் நின்று கொண்டு தங்களின் வயிற்றுப் பிழைப்பை வெற்றிகரமாக நடத்த என்ன வழி என இந்த மதகுருமார்கள் தங்களின் மூளையைக் கடுமையாகக் கசக்கும் போதுதான் அவர்களின் மூளையில் உதித்தது தான் இந்த மத்ஹபுகள். பல இமாம்களின் பெயரால் பல மத்ஹபுகளைக் கற்பனை செய்தார்கள். அவற்றில் நான்கு மத்ஹபுகளைத் தவிர எஞ்சியவை மறைந்து விட்டன. அந்த நான்கு இமாம்களின் காலம் ஹிஜ்ரி 80 லிருந்து 241 வரை மட்டுமே. அக்காலத்தில் ஹதீஸ்கள் முழுமையாக தரம் பிரிக்கப்பட வில்லை. அவர்கள் தங்கள் பெயர்களால் மத்ஹபுகளை அமைக்கவுமில்லை. தங்களை தக்லீது செய்யும்படிச் சொல்லவுமில்லை. குர் ஆன், ஹதீஸை பின்பற்றும்படியே கட்டளையிட்டார்கள். தங்களை தக்லீது செய்யக் கூடாது. தாங்கள் கூறுவதை குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் பார்க்காமல் எடுத்து நடக்கவே கூடாது என்று தெளிவாக நேரடியாகக் கட்ட ளையிட்டுள்ளதே பல நூல்களில் காணப்படுகிறது.
அக்கால கட்டத்தில் (ஹி.80 -241) யூதக்கைக் கூலிகளான இம்மத குருமார்களுக்கு இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான ஹதீஸ்கள் கைக் கொடுத்து வந்த காரணத்தால், மத்ஹபுகளைக் கற்பனை செய்யும் கட்டாயம் ஏற்படவில்லை. கற்பனை ஹதீஸ்களைக் கொண்டே மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்த்து வந்தார்கள். ஷைத்தானின் ஏஜண்டுகளாக செம்மையாகச் செயல்பட்டு வந்தார்கள். ஹதீஸ்களில் இட்டுக் கட்டப்பட்டவை, பலவீனமானவை எனத் தெளிவாக அடையாளம் காட்டப்பட்ட பின்னரே இம்மத குருமார்களுக்கு வயிறு வளர்க்க வேறுவழி தேடும் கட்டாயம் ஏற்பட்டது.
மத்ஹபுகளின் தோற்றம்!
அப்போது அவர்களின் மூளையில் உதித்தது தான் மத்ஹபுகள். ஆனால் மத்ஹபுகளை யாருடைய பெயர்களால் கற்பனை செய்வது? நான்கு கலீஃபாக்களின் பெயர்களால் மத்ஹபு களைக் கற்பனை செய்ய முடியுமா? முடியாது. காரணம் அவர்களைப் பற்றிய வரலாறுகள் தெள்ளத் தெளிவாக சந்தேகத்திற்கிடமின்றி பதியப்பட்டுவிட்டது. நபி தோழர்களில் சிலரின் பெயரால் மத்ஹபுகளைக் கற்பனை செய்ய முடியுமா? அதுவும் முடியாது. அவர் கள் பற்றிய வரலாறுகளும் சந்தேகத்திற்கிட மின்றி கிடைக்கின்றன. எனவே நான்கு கலீஃபாக்களின் பெயராலோ, நபிதோழர்களின் பெயராலோ, பொய்களை அரங்கேற்ற முடி யாது. வகையாக மாட்டிக் கொள்வார்கள். எனவே கலீஃபாக்களின் பெயராலோ, நபி தோழர்களின் பெயராலோ மத்ஹபுகளைக் கற்பனை செய்யும் திட்டத்தைக் கைவிட்டார்கள்.
மனிதக் கற்பனைகளைப் புகுத்தாமல்….
மார்க்கத்தில் மனிதக் கற்பனைகளைப் புகுத்தி அதை மதமாக்காதவரை, இம்மதகுருமார்களால், ஷைத்தானின் நேரடி முகவர்கள் என்ற அரும் பணியை(?) நிறைவேற்ற முடியாது; வயிறு வளர்க்க முடியாது; ஆதத்தின் சந்ததிகளை நரகில் தள்ள முடியாது. எனவே மார்க்கத்தில் மனிதக் கற்பனைகளைப் புகுத்தும் கட்டாயத்தில் இந்த மதகுருமார்கள் இருந்தார்கள்; இருக்கிறார்கள்.
அதற்குள்ள ஒரே வழி மக்களுக்காக அரும் பணியாற்றி இருந்தாலும், மக்களிடையே புகழ் பெற்றிருந்தாலும், அவர்களது வரலாறுகள் அறிவிப்பாளர்கள் வரிசையுடன் முழுமையாகப் பாதுகாக்கப்படாத காரணத்தால், இப் புரோகிதர்கள் கற்பனையாக அவிழ்த்து விடும் கட்டுக் கதைகளின் உண்மை நிலையை அறிய வாய்ப்பு இல்லாத இந்த நான்கு இமாம்களின் பெயர்கள் அவர்களுக்குப் பெரிதும் கைகொடுத்தன. உதாரணமாக, இமாம் அபூ ஹனீஃபா(ரஹ்) அவர்கள் அல்லாஹ்வை 99 முறை கனவில் கண்டதாகவும், நூறாவது முறை கனவில் கண்டு இந்த உம்மத்தின் வெற்றி எதில் இருக்கிறது என்று கேட்டதாகவும், அல்லாஹ் ஒரு துஆவைக் கற்றுக் கொடுத்ததாகக் கூறுவதையும், ஒருவர் ஒளூ செய்யும்போது வடியும் தண்ணீரிலிருந்து அவர் செய்த பாவத்தை இமாம் அறிவார்கள் என்று கூறுவதையும், அவர்கள் 40 ஆண்டுகள் தொடர்ந்து இஷாவுக்குச் செய்த ஒளூவுடன் தூங்காமலேயே அமல் செய்து விட்டு, அந்த ஒளூவுடனேயே பஜ்ர் தொழுதார்கள் என்று கூறுவதையும் அறிவிப்பாளர் வரிசையுடன்(சனது) இம்மத குருமார்களால் நிலைநாட்ட முடியுமா? ஒருபோதும் முடி யாது. காரணம் இவை இம்மதகுருமார்களின் கற்பனைக் கட்டுக்கதைகளே அல்லாமல், உண்மையில் நடந்த சம்பவங்கள் அல்ல.
இப்படிப் பல கற்பனைக் கட்டுக் கதைகளைக் கூறி இந்த இமாம்களை ஆகா, ஓகோ என வரம்பு மீறிப் புகழ்ந்து மக்களுக்கு அவர்கள் பற்றிய ஒரு பொய்த் தோற்றத்தை உருவாக்கி அதை நம்பச் செய்து குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களுக்கும் முரண் பட்ட பிக்ஹு சட்டங்களை கற்பனை செய்து அவற்றையே வேதவாக்காக(?) கொண்டு செயல்பட வைத்து மக்களை வழிகேட்டிலாக்கி நரகில் தள்ளுகிறார்கள். ஷைத்தானின் நேரடி முகவர்கள் வேலையைக் கனக்கச்சிதமாகச் செய்து வருகிறார்கள்.
மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்ட காலம்!
ஆக இந்த மத்ஹபுகள் கற்பனை செய்யப் பட்ட காலகட்டம் அந்த இமாம்களின் காலத்திற்கும் சுமார் 200 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது ஹிஜ்ரி 400க்குப் பிறகே அல்லாமல், அதற்கு முன்னர் அல்லது மட்டுமல்ல இந்த மத்ஹபுகளைக் கற்பனை செய்து நடைமுறைக்குக் கொண்டு வந்தவர்கள் யார் என்று இப் போதைய மதகுருமார்களுக்கே தெரியாது என்றால் இந்த மத்ஹபுகளின் கேட்டை அறிந்து கொள்ளுங்கள்.
நெறிநூல் அல்குர்ஆன் பதிந்து பாதுகாக்கப் பட்ட பின்னர், மக்களை வழிகெடுப்பதையே கொள்கையாகக் கொண்ட இம்மதகுருமார்கள் முதலில் கையிலெடுத்த ஆயுதம் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான ஹதீஸ்கள்; அந்த வாசல் அடைபட்ட பின்னர் அவர்கள் இரண்டாவது கையிலெடுத்த ஆயுதம் மத்ஹபுகள்; இக்கால கட்டத்தில்தான் குர்ஆன் விரிவுரைகள் (தஃப்ஸீர்) ஹதீஸ் விரிவுரைகள் (தஃப்ஸீர்) என்ற பெயர்களால் மனிதக் கற்பனைகளும், யூகங்களும் தூய மார்க்கத்தில் நுழைக்கப்பட்டன. இவை கொண்டு பிக்ஹு சட்டங்களைக் கற்பனை செய்து மக்கள் மத்தியில் புழக்கத்தில் விட்டனர்.
தரீக்காக்களின் தோற்றம்!
வழிகேட்டை மக்களுக்குப் போதிக்கும் மத்ஹபுகளின் பரிணாம வளர்ச்சியாக உருவானவைதான் தரீக்காக்கள். மத்ஹபுகள் கற்பனை செய்யப்பட்டது ஹி.400க்குப் பிறகு என்றால் தரீக்காக்கள் கற்பனை செய்யப்பட்டது அதிலிருந்து 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஹி.600ல் ஆகும். முதல் தரீக்கா அப்துல் காதிர் ஜீலானிக்குப் பிறகு அவரது பெயரால் கற்பனை செய்யப்பட்ட காதிரியா தரீக்காவாகும். அவர் பிறந்தது ஹி.470 இறந்தது 561. அவரது ஆதாரபூர்வமான நூல்களான குன்யத்துத் தாலிபீன், ஃபுதூகுல்கைப், ஃபத்ஹுர்ரப்பானி நூல்களைப் படித்தவர்கள் திட்டமாக அறிந்து கொள்ள முடியும் காதிரியா தரீக்காவிற்கும் அவருக்கும் அணுவளவும் சம்பந்தமில்லை என்று. எப்படி மத்ஹபுகளுக்கும் அந்த இமாம்களுக்கும் அணுவளவும் சம்பந்தமில்லையோ அதே போல் காதிரியா தரீக்காவுக்கும் அப்துல் காதிர் ஜீலானிக்கும் அணுவளவும் சம்பந்தமில்லை என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ள முடியும்.
ஷைத்தானின் நேரடி முகவர்களான மதகுருமார்கள் அற்ப உலக ஆதாயம் கருதி மத்ஹபுகளைக் கற்பனை செய்து புழக்கத்தில் விட்டது போல், இந்த தரீக்காக்களையும் கற்பனை செய்து புழக்கத்தில் விட்டிருக்கிறார்கள். இமாம்களுக்கோ, அப்துல்காதிர் ஜீலானிக்கோ, இம்மத்ஹபுகளிலோ, தரீக்காக்களிலோ அணுவளவும் சம்பந்தமில்லை என்பதை குர்ஆன் ஹதீஸ்களையும், அவர்களின் ஆதாரபூர்வமான செய்திகளையும் நடுநிலையுடன், சுய சிந்தனையுடன், படித்து அறிகிறவர்கள் நிச்சயமாக உணர முடியும்.
கட்டுக் கதைகளும் புனைந்துரைகளும் ….!
இம்மதகுருமார்கள் மத்ஹபுகளுக்கு மூல கர்த்தாக்களாகக் கற்பனை செய்த நான்கு இமாம்களைப் பற்றி நிறைய கட்டுக்கதைகளைப் புனைந்து வைத்திருப்பதுபோல், தரீக்காக்க ளுக்கு மூல கர்த்தாவாக இவர்கள் கற்பனை செய்த அப்துல் காதிர் ஜீலானி பற்றியும் அளவு கடந்த கட்டுக்கதைகளையும் அவர்கள் பெயரால் கற்பனை செய்து பல நூல்களை எழுதியுள்ளனர். இருட்டில் இருந்து கொண்டு அவரை ஆயிரம் முறை அழைத்தால் (இருட்டு திக்ர்) அவர் அங்கு ஆஜராவார் என்பது இம்மதகுருமார்களின் கட்டுக் கதையே!
“”அனல் ஹக்”-“”நானே இறைவன்” என வலீயாக நம்பப்பட்ட ஒருவர் கூறத் துணிந்ததற்கு அடிப்படைக் காரணமான ஆன்மாவும் இறைவனும் இரண்டல்ல, ஒன்றே எனக் கூறும் அத்துவைதம் (வஹ்தத்துல்வுஜூது) என்ற இணை வைப்புக் கொள்கையை மாற்று மதங்களிலிருந்து முஸ்லிம்களிடையே இறக்குமதி செய்த மூலவர் இமாம்(?) கஜ்ஜாலி என்பதும் அதை முஸ்லிம் சமுதாயத்தில் புரையோடச் செய்தவர் இப்னு அரபி என்பதும் வரலாறுகளிலிருந்து தெரிகிறது. இந்த வழிகேட்டிற்கு ஷைத்தான் துணை செய்வதால் இந்த இணை வைக்கும் மூடக் கொள்கை முஸ்லிம் சமுதாயத்தினரையும் ஆட்கொண்ட தில் வியப்பில்லை.
அனைத்து மதங்களிலும் வழிகெட்ட கொள்கை!
இந்த இணை வைக்கும் கொடிய பாவமான கொள்கை அனைத்து மதங்களிலும் காணப்படுவதற்கும், ஒவ்வொரு மதத்தினரும் தங்கள் மதம் நிச்சயம் மறுமையில் வெற்றியைத் தரும் என்ற குருட்டு நம்பிக்கையில் நிலைத்திருப்ப தற்கும் முக்கியமான ஒரு காரணம் உண்டு; அது வருமாறு.
இயற்கையாகச் சிதறிய சிந்தனையுடைய மனிதன் ஏதாவதொரு பயிற்சி மூலம் சிதறும் அந்தச் சிந்தனையை ஒன்றுபடச் செய்தால் சில அதிசயக் காட்சிகளும் தோற்றங்களும் ஏற்படத் தான் செய்யும். உதாரணமாக சூரியனிலிருந்து இயற்கையாக வெளிவரும் சூரியக் கதிர்கள் சிதறிய நிலையில்தான் பூமியை அடைகின்றன. சிதறிய நிலையில் வரும் அச்சூரியக் கதிர்களை ஒரு குவிலென்ஸ் மூலம் ஓரிடத்தில் குவியச் செய்தால் அந்த இடத்தில் மிகப் பயங்கரமான சூடு ஏற்பட்டு நெருப்புப் பிடித்து எரிவதைப் பார்க்கிறோம்.
இது ஒன்றும் அற்புதமோ, ஆச்சரியமோ அல்ல என்பதை ஒவ்வொருவரும் தெளிவாக அறிகிறோம்.
ஆச்சரியமோ, அதிசயமோ இல்லை!
இங்கு சிதறி வரும் சூரியக் கதிர்களை ஒன்று சேர்க்கக் கண்டிப்பாகத் தேவை ஒரு குவிலென்ஸ். ஆனால் மனிதனின் சிதறிய சிந்தனையை ஒன்றுபடுத்த ஒரு கல்லோ, ஒரு சிலையோ, குரு ஷைகு என்ற பெயரில் ஒரு மனிதனோ, அது எப் பொருளாக இருந்தாலும் அதிலேயே தனது முழு கவனத்தையும், ஈடுபாட்டையும் செலுத்தி ஸ்தோத்திரித்து-ஜபித்து-தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தால் போதும் சிதறிய சிந்தனை ஒன்றுபடும்போது அதனால் பயங்கர விளைவு ஏற்படுவதில் ஆச்சரியப்பட ஒன்று மில்லை. பல காட்சிகள் தோன்றவே செய்யும்.
ஆனால் அனைத்து மதங்களிலுமுள்ள மதகுருமார்களான இந்தப் புரோகிதர்கள் இதைப் பெரும் சாதனையாகச் சொல்லி தாங்கள் கடவுளுடன் ஒன்றிவிட்டதாகவும் சாயுச்சிய பதவியை அடைந்துவிட்டதாகவும் தங்களுக்கு இறைவன் புறத்திலிருந்து செய்திகள் கிடைப்பதாகவும், கனவுக் காட்சிகள் தோன்றுவதாகவும் கதை அளப்பார்கள். ஒரு குடிகாரன் போதை தலைக்கேறிய நிலையில் தன்னை மறந்து உளறும் நிலை போன்றதே இதுவும் என்பதை வசதியாக மறைத்து விடுகிறார்கள். அத்துடன் சில சித்து வேலைகளையும் கண் கட்டி வித்தைகளையும், தந்திரங்களையும் கற்றுக் கொண்டு அவற்றைச் சுய சிந்தனையற்ற மக்களிடம் காட்டி ஏமாற்றுவார்கள்; தங்களை கடவுளின் அவதாரமாகவும், கடவுளின் நேசர்களாகவும் (வலீ) சொல்லி மக்களை வஞ்சித்து ஏமாற்றுவார்கள். மக்களின் பணத்தைப் பகற் கொள்ளையடிப்பார்கள். இப்படிப்பட்ட சித்தர்கள் உலகிலிருக்கும் அனைத்து மதங்களிலும் இருக்கிறார்கள்.
பகிரங்கமான வழிகேடேயாகும்!
முஸ்லிம் மதகுருமார்களும் மற்ற மதங்களிலுள்ள இந்தச் சித்து வேலைகளை முஸ்லிம்களிடையே இறக்குமதி செய்து கொண்டு தங்களை வலிமார்கள் என்றும் தங்களுக்கு “”விலாயத் துடைய வஹீ” வருகிறதென்றும், தங்களுக்கு “”இல்ஹாம்” வருகிறதென்றும், விழிப்பிலும், தூக்கத்தில் கனவிலும் சில “”அற்புதக் காட்சிகள்” தோன்றுவதாகவும் கதையளந்து மக்களை ஏமாற்று வார்கள். இதற்கு அவர்கள் திக்ரு என்ற பெயரால் பயன்படுத்தும் ஹூ, ஹா, ஹீ, ஹக்தூஹக் போன்ற உளறல்களே போதிய ஆதாரமாகும். இது ஆதம்(அலை) அவர்களிலிருந்து தொட ர்ந்து உலகம் அழியும் வரை ஷைத்தானின் நேரடி முகவர்களான இந்த மத குருமார்கள் அரங்கேற்றி வரும் இறை வனுக்கு இணை வைக்கும் வழிகேடாகும்.
முஸ்லிம்களிடையே இந்தக் கூத்துகள் அரங்கேற ஆரம்பித்தது ஹி.400க்குப் பின்னர் மத்ஹபு, 600க்குப் பின்னர் தரீக்கா வழிகேடுகள் இஸ்லாத்தில் நுழைந்த பின்னரே! ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃறிபத், தஸவ் வுஃப், ஸூஃபி, ஸுலூக், விலாயத்துடைய வஹீ, இல்ஹாம், கனவுக் காட்சிகள் என இம்மத குருமார்கள் மக்களை ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்ப்பது அப்பட்டமான கடைந்தெடுத்த பொய் என்பதை குர்ஆன் ஹதீஸ்களைக் கொண்டே ஆராய்வோம்.
குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் இல்லை!
அல்குர்ஆனில் “வஹ்யி’ என்று 21:45, 53:4 இரண்டு இடங்களிலும் “வஹ்யன்’ என்று 42:51 ஒரு இடத்திலும், “வஹ்யினா’ என்று 11:37, 23:27 இரண்டு இடங்களிலும் வஹ்யுஹூ என்று 20:114 ஓரிடத்திலும் ஆக மொத்தம் ஆறு இடங்களில் காணப்படுகின்றன. அல்லாஹ் மனிதர்களுக்கென்றே தெளிவாக விளக்கிய அல்குர்ஆன் நிச்சயம் நமக்கு விளங்கும் என்ற தன்னம்பிக்கையுடன் சுய சிந்தனையுடன் அல்குர்ஆனின் இந்த இறைவாக்குகளை நேரடி யாகப் படிப்பவர்கள் இவற்றில் “”விலாயத்துடைய வஹீ” என்று நேரடிக் கருத்தில் ஓரிடத்தில் கூட இல்லை என்பதை விளங்க முடியும்.
47:24ல் அல்லாஹ் கூறுவதுபோல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு, இம்மதகுருமார்கள் பின்னால் செல்லும் பெருங் கூட்டம் மட்டுமே இம்மதகுருமார்களின் சுய விளக்கங்களை வேதவாக்காகக் கொண்டு “”விலாயத்துடைய வஹீ” “”இல்ஹாம், கனவுக் காட்சிகள்” போன்றவற்றை மார்க்கமாகக் கொண்டு வழிகேட்டில் சென்று நாளை நரகை நிரப்புவார்கள். இதேபோல் ஆதாரபூர்வமான ஹதீஸ்களிலும் இவற்றிற்கு ஆதாரத்தைப் பார்க்க முடியாது. இம் மதகுருமார்கள் இட்டுக் கட்டியுள்ள லட்சக்கணக்கான ஹதீஸ்களில் வேண்டுமானால் ஆதாரம் காட்டுவார்கள்.
நபி(ஸல்) அவர்களது காலத்திலோ, அவர்களின் இறப்புக்குப் பின் நபிதோழர்களின் காலத்திலோ இப் பொய்க் கூத்துகள் இருந்ததாக ஒரேயொரு உண்மையான ஆதாரத்தையும் பார்க்க முடியாது.
5:3, 3:19,85, 33:36, 15:9 இறைக் கட்டளைகளை நேரடியாகச் சுய சிந்தனையுடன் படித்து விளங்குகிறவர்கள் நபி(ஸல்) அவர்களுக்கு பிறகு மார்க்கத்தில் அணுவளவு என்ன? அணுவின் முனை அளவும் கூட்டவோ, குறைக்கவோ திட்டமாக முடியாது என்பதைத் திட்டமாக அறிய முடியும்.
நரகத்தை நிரப்புவோர் யார்?
அல்குர்ஆன் 4:28, 33:72, 76:27, 87:16, 10:44, 89:20, 100:8 போன்ற இறைவாக்குகளைப் படித்து உணர்கிறவர்கள் மனிதனின் பலகீனங்கள் அனைத்தையும் உணர முடியும். இந்த உண்மையைப் படிப்பினையாகக் கொள்ள முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களைப் படைத்து 2:31 சொல்வது போல் அனைத்தையும் கற்றுக் கொடுத்து, ஷைத்தானின் கெடுதிகளைத் தெளிவாக விளக்கிய நிலையிலேயே ஆதம் அல்லாஹ்வின் சொல்லை நிராகரித்து (2:35-37)ஷைத்தானுக்கு வழிப்பட்டதை அல்லாஹ் நமக்குச் சொல்லிக் காட்டுகிறான். ஆக மனித இனத்தினர் ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்கி வழி கேட்டில் செல்லக் கூடியவர்களே. ஆயினும் அத்தவறுகள் குர்ஆன் வசனங்கள் கொண்டு சுட்டிக் காட்டப்பட்டால் ஆதம்(அலை) போல் உடனடியாக அதை ஏற்று தவ்பா செய்து மீள்பவர்களே வெற்றியாளர்கள். தங்கள் தவறான போக்கை ஷைத்தானைப் போல் சுய விளக்கம் கொடுத்து நியாயப்படுத்துபவர்கள் ஷைத்தானு டன் நரகத்தை நிரப்புகிறவர்களே என்பதையும் அல்குர்ஆன் அழகாக எடுத்தியம்புகிறது. (பார்க்க 2:30-39, 7:11-25)
அதேபோல் நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு ஷைத்தான் இம்மதகுருமார்களைக் கொண்டு “”விலாயத்துடைய வஹீ” “”இல்ஹாம்” “”கனவுக் காட்சி” போன்ற நரகில் சேர்க்கும் பித்அத்களால் மக்களை நரகில் வீழ்த்துவான்; அவ னது சூழ்ச்சி வலையில் விழுந்துவிடக் கூடாது என எச்சரிக்க நபி(ஸல்) அவர்கள் இறந்து, அவர்களது உடலில் சூடு தணியுமுன்னரே, நபி தோழர்களிலேயே தலைசிறந்த, இரண்டாவது இடத்தை வகித்த உமர்(ரழி) அவர்களின் வாயாலேயே ´ஷிர்க்குடைய சொல்லை ஷைத்தான் மூலம் வெளிப்படுத்தி அதன் மூலம் முஸ்லிம்களை எச்சரித்துள்ளான் அல்லாஹ்.
உமர்(ரழி) எப்படிப்பட்ட உயர் பதவிகள் உடையவர்?
உமர்(ரழி) யார்? அரபி மொழியைக் கசடறக் கற்று அன்றைய ஜ.உ.சவான தாருந்நத்வா சபையில் மிக முக்கியப் பதவியை வகித்தவர், ஆரம்பத்தில் நபி(ஸல்)அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்தவர். அல்லாஹ் அருள் புரிந்து சில குர்ஆன் வசனங்களை நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்கியவுடன் நேர்வழியான இஸ்லாத்தை ஏற்றவர். சுவர்க்கத்து நன்மாராயம் பெற்ற தலைசிறந்த இறைநேசர் -வலியுல்லாஹ். நபி தோழர்களில் அபூபக்கர் (ரழி) அவர்களுக்குப் பின் இரண்டாவது இடத்தை வகித்தவர். அவர்களுக்குப் பின் இரண்டாவது கலீஃபாவாகப் பொறுப்பு ஏற்று சுமார் 12 வருடங்கள் மிகச் சிறந்த முறையில் ஆட்சி செய்தவர். இந்தியாவில் உமர்(ரழி) அவர்களின் ஆட்சி முறை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று திரு.காந்தி சிறப்பித்துச் சொன்ன அளவிற்குச் சிறப்புப் பெற்றவர்.
“”தனக்குப் பின்னர் நபியோ, ரசூலோ இல்லை; அப்படி வருவதாக இருந்தால் அதற்கு முழுத் தகுதி பெற்றவர் உமர்” என நபி(ஸல்) அவர்களாலேயே சிறப்பித்துச் சொல்லப்பட்டவர். அவரது விருப்பப்படியே அல்லாஹ் அல்குர் ஆனில் சில இறைவாக்குகளை இறக்கியருளியுள்ளான். “”உமர் ஒரு பாதையில் சென்றால் ஷைத்தான் அப்பாதையில் வர அஞ்சுவான். வேறு பாதையில் சென்றுவிடுவான்” என நபி (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டவர்.
இப்படி எண்ணற்றச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் நபி(ஸல்) அவர்கள் இறந்து, நுபுவ்வத்துடைய வஹீ முற்றுப் பெற்று சூடு தணியவில்லை. அதற்குள் இறைவனுக்கு மட்டுமே சொந்தமான இறவா நிலையை, இறுதி இறைத்தூதருக்குக் கொடுத்து ´ஷிர்க் செய்யும் மாபெரும் குற்றத்திற்கு ஆளாகிவிட்டார். இறந்து போன நபி(ஸல்) அவர்கள் இறக்க வில்லை. அவர்கள் இறந்து விட்டதாக யார் சொன்னாலும் அவரது தலையைக் கொய்து விடுவேன் என வாளை உயர்த்தி கர்ஜித்துக் கொண்டிருந்தார். அருகிலிருந்த எந்த நபிதோழரும் அதை மறுத்துக் கூறவில்லை.
உமர்(ரழி) அவர்களுக்கே “”விலாயத்துடைய வஹீ” வரவில்லை!
அந்த நிலையில் கூட மாபெரும் வலியுல்லாஹ் உடைய பதவியில் இருந்த உமர் (ரழி) அவர்களுக்கே “”விலாயத்துடைய வஹீ” வர வில்லை. “”இல்ஹாமும்” வரவில்லை. எவ்விதக் “”காட்சியும்” தோன்றவில்லை. அவர்களது “”நபி (ஸல்) அவர்கள் இறக்கவில்லை; இறக்க மாட் டார்” என்ற ´ர்க்கை ஏற்படுத்தும் இமாலயத் தவறை இவை எவற்றின் மூலமும் அல்லாஹ் உணர்தித்திருத்தவில்லை. அந்தத் தவறான நிலையே நீடித்துக் கொண்டிருந்தது.
தவறு எதன் மூலம் உணர்த்தப்பட்டது?
அத்தவறு எவ்வாறு உணர்த்தப்பட்டது? நேரம் கடந்து அபூ பக்கர்(ரழி) வருகிறார்கள்.நபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்க்கிறார்கள்; வெளியே வந்து “யார் முஹம்மதை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும். நிச்சயமாக அந்த முஹம்மது இறந்து விட்டார், யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் அறிந்து கொள்ளட்டும், நிச்சயமாக அல்லாஹ் நித்திய ஜீவன், நிலையானவன், அவனுக்கு மட்டுமே மரணமே இல்லை” என உரத்தக் குரலில் கூறி 3:144, 39:30 இரண்டு இறைவாக்குகளை எடுத்துக் காட்டி நபி(ஸல்) அவர்களின் மரணத்தை உறுதிப் படுத்தினார்கள். இந்த இறைவாக்குகள் படித்துக் காட்டப்பட்டவுடன் உமர்(ரழி) அவர் கள் தனது தவறை உணர்ந்து வாளை கீழே போட்டு விட்டு அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார். இப்படி இறைவாக்குகளும், வரலாறும் உள்ளங்கை நெல்லிக் கனியாக இருக்கும் நிலையில், இன்றும் இந்த மூட முல்லாக்களில் பலர் நபி(ஸல்) அவர்கள் இறக்கவில்லை; கபுரில் உயிரோடு இருக்கிறார்கள்-ஹயாத்து நபி என உளறிக் கொண்டிருப்பதையும் பார்க்கத்தானே செய்கிறோம்.
பாடம் பயில வேண்டாமா?
இந்த இடத்தில் இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற விரும்புகிறவர்கள் இதிலிருந்து பாடம் பயிலக் கடமைப் பட்டிருக்கிறார்கள். எப்படி ஆதி மனிதர் படைக்கப்பட்டவுடன் ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்கி இறைக் கோபத்திற்கு ஆளானாரோ, பின்னர் இறைவனின் அறிவுரையை ஏற்று பாவமீட்சி பெற்றாரோ அதிலிருந்து மனித இனம் ஷைத்தானின் சூழ்ச்சியில் வீழ்ச்சி அடையும் பரிதாப நிலையிலேயே இருக்கிறது. அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து இறைவாக்குகளுக்குச் சுயவிளக்கம் கொடுக்காமல் உள்ளது உள்ளபடி எடுத்து நடப்பதே வெற்றிக்குரிய ஒரே வழி என்பதைப் போல், ஆதத்தின் சந்ததிகளில் நபிமார்களாக இருக்கட்டும், நபிதோழர்களாக இருக்கட்டும், எவ்வளவு பெரிய பதவியில் இருப்பவர்களாக இருக்கட்டும் அவர்கள் ஷைத்தானின் சூழ்ச்சி வலையில் சிக்கக் கூடியவர்களே! நபிமார்கள் அல்லாஹ்வின் கண்காணிப்பிலும், (52:48) வஹியின் தொடர்பிலும் இருந்த காரணத்தால் நபிமார்களின் தவறுகள் வஹி மூலம் உடனுக்கு டன் திருத்தப்பட்டன. (பார்க்க: 3:128,28:56, 66:1-4, 80:1-12)
இறைவனது கண்காணிப்பில் நபி(ஸல்) அவர் களின் நடைமுறைகள் ஒழுங்குபடுத்தப்பட்ட தால் அவற்றை மார்க்கமாக எடுத்து நடக்க எவ்விதத் தடையும் இல்லை. அதனால் நபியைப் பின்பற்றும்படி அல்குர்ஆனில் பல இடங்களில் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.
இறுதித் இறைத்தூதருக்குப் பிறகு கலீஃபாக்கள், நபிதோழர்கள், இமாம்கள் என எவரது சுய நடைமுறையும் மார்க்க ஆதாரமாகாது என்பதைத்தான், நபி(ஸல்) இறந்த அடுத்த வினாடியே நபியாக வரும் அளவுக்குத் தகுதி பெற்ற உமர்(ரழி) அவர்களை ´ஷிர்க்கான பெரும் தவறைச் செய்ய வைத்து மனித சமுதாயத்திற்கு நேர்வழியை அல்லாஹ் உணர்த்தியுள்ளான். சுவர்க்கத்து நன்மாராயம் பெற்ற, வலிமார்களுக்கெல்லாம் மாபெரும் வலியாகிய உமர் (ரழி) அவர்களுக்கே அந்த இக்கட்டான நிலையிலும் “”விலாயத்துடைய வஹியோ” “”இல்ஹாமோ” “”இறைக் காட்சிகளோ” வரவில்லை. அதன் மூலம் அவர்கள் தனது பெருந்தவறை திருத்திக் கொள்ளவில்லை; இறுதி நெறிநூல் அல்குர் ஆனின் 3:144, 39:30 இறைவாக்குகள் மூலமே அப்பெரும் தவறு உணத்தப்பட்டது என்பதை மீண்டும் நினைவூட்டுகிறோம்.
பின் வந்தவை மார்க்கமாகுமா?
நபி(ஸல்) அவர்களின் இறப்பிலிருந்து சுமார் 600 ஆண்டுகளாக முஸ்லிம்களிடையே புழக்கத்திலில்லாத இந்த “”விலாயத்துடைய வஹீ” “”இல்ஹாம்” “”இறைக் காட்சிகள்” போன்றவை அதன் பின் மார்க்கத்தில் எந்த அடிப்படையில் வந்து நுழைந்தன? அவை மார்க்கமாக முடியுமா? என நடுநிலையுடன் சிந்திப்பவர்கள் 5:3, 3:19,85, 7:3, 33:36, 59:7 இறைக் கட்டளைகள்படி இவை பெருத்த வழிகேடுகள், பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற பெரும் பாவங்களை உண்டாக்குபவை என்பதை தெளிவாக உணர முடியும். இல்லை! இவை மார்க்கத்திற்கு உட்பட்டவைதான் எனக் கூறுகிறவர்கள் அதற்குரிய குர்ஆன் வசனங்களை, ஆதாரபூர்வமான ஹதீஸ்களைத் தந்தால் நிச்சயமாக நாம் எமது இந்தக் கருத்தை மாற்றிக் கொள்ள தவ்பா செய்ய என்றும் தயாராகவே இருக்கிறோம்.
மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம்!
அல்குர்ஆனை முழு நம்பிக்கையுடன், சுய சிந்தனையுடன் தொடர்ந்து படித்து வருகிறவர்கள் மார்க்கம் முழுக்க முழுக்க அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம்; அதில் நபிமார்களின் சுய விருப்பங்களையே நுழைக்க அனுமதி இல்லை; மிகக் கடுமையாக எச்சரிக்கப்பட்டிருக்கிறார்கள். யார் நேர்வழியில் இருக்கிறார்? யார் வழி கேட்டில் இருக்கிறார் என்பதை அல்லாஹ்வே மிக அறிந்தவன். தாங்கள் நேர்வழியில் இருப்பதாகவும், பரிசுத்தவான்கள் என்றும் வலியுல்லாஹ்க்கள் என்றும் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ள, அறிவித்துக் கொள்ள, இம் மதகுருமார்கள் மற்றவர்களை அப்படிச் சொல்ல அணுவளவும் அனுமதி இல்லை என்பதைத் திட்டமாக அறிந்து கொள்ள முடியும். (பார்க்க. 5:3, 3:19,85, 7:3, 33:36, 39:3, 7:178, 6:117, 16:125, 28:56, 68:7, 4:49, 53:32)
49:14 இறைவாக்கு “முஃமின்” என்று சொல்வதை மறுத்து “முஸ்லிம்” என்று கூறுவதை அனுமதிக்கிறது. ஒரு சமயம் நபி(ஸல்) அவர்கள் பொருட்களைப் பங்கிடும்போது ஒரு நபி தோழர் இன்னொரு நபி தோழரைச் சுட்டிக் காட்டி அவர் “முஃமின்” அவருக்குப் பங்கு கொடுக்கும்படி வேண்டினார். நபி(ஸல்) அவர்கள் “முஃமின்”என்று சொல்லாதே “முஸ்லிம்”என்று சொல் எனக் கட்டளையிட்டார்கள். இப்படி மூன்று முறை அவர் “முஃமின்” என்று சொல்ல நபி(ஸல்) அவர்கள் “முஸ்லிம்” என்று சொல்லும்படி கட்டளையிட்டதாக ஹதீஸில் காணப்படுகின்றது. (புகாரீ அரபி 1419, முஸ்லிம் 1816, புகாரீ (தமிழ் ர.அ.) 1478) நபி தோழர்களே தங்க ளையோ மற்றவர்களையோ “முஃமின்” என்று சொல்லிக் கொள்ள மார்க்கம் அனுமதிக்க வில்லை எனத் திட்டமாகத் தெரிகிறது. 4:49, 53:32 இறைவாக்குகளும் இதையே உறுதிப் படுத்துகின்றன.
நபி தோழர்களுக்கே இல்லாத அதிகாரம் இம் மதகுருமார்களுக்கு உண்டா?
நபி தோழர்களே தங்களையோ, பிறரையோ “முஃமின்” என்று கூற அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், நபி(ஸல்) அவர்களின் மறைவுக்குப் பிறகு அதுவும் 400 ஆண்டுகளுக்குப் பின்னர் தங்களைத் தாங்களோ மற்றவர்களை விளித்தோ “முஃமின்” என்றோ, “ஆலிம்” என்றோ, தவ்ஹீத்வாதி என்றோ, நேர்வழியில் இருப்ப வர் என்றோ, வலீ என்றோ கூற மார்க்கத்தில் அனுமதி இருக்க முடியுமா? அனுமதி இருப்பதாக நம்புகிறவர்கள் மேலே நாம் எடுத்தெழுதி யுள்ள இறைவாக்குகளை நிராகரித்துப் புறக்கணிக்கிறார்கள் என்பதே உண்மையாகும். (பார்க்க 2:39)
ஆம்! யார் “முஃமின்” என்கிறாரோ அவர் “முஷ்ரிக்”, யார் “ஆலிம்” என்கிறாரோ அவர் “ஜாஹில்” யார் தவ்ஹீத்வாதி என்கிறாரோ அவர் முஷ்ரிக்வாதி, யார் நேர்வழியில் இருப்பதாகச் சொல்கிறாரோ அவர் கோணல் வழிகளில் இருக்கிறார், யார் வலீ என்கிறாரோ அவர் ஷைத்தானின் தோழர்-வலியுஷ்ஷைத் தான் என்பதே குர்ஆன், ஹதீஸ் கூறும் உண்மையாகும். சுமார் 50க்கும் மேற்பட்ட இறைவாக்குகளை நிராகரித்து மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்களே இந்த ´ஷிர்க், குஃப்ர், பித்அத் நிறைந்த சொற்றொடர்களை மக்களிடையே பரப்பி வருகிறார்கள்.
இறைவன் வழியா? ஷைத்தான் வழியா?
“”விலாயத்துடைய வஹீ” என்பதும், “”இல்ஹாம்” என்பதும், “”காட்சிகள்” என்பதும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருபவை அல்ல; ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து நரகை நிரப்பு வதாகச் சபதம் செய்துள்ள ஷைத்தானின் புறத்திலிருந்து வருபவையாகும். (பார்க்க 26:221, 222, 223) நபி(ஸல்) அவர்களின் மறை வுக்குப் பிறகு சுமார் 600 ஆண்டுகள் கழித்து ஷைத்தானின் நேரடி முகவர்களான-தாஃகூத்களான இந்த மதகுருமார்களின் கற்பனையில் ஷைத்தான் போட்ட போலி சித்தாந்தங்களாகும்-வழிகேடுகளாகும்.
இந்த உண்மையை வலிமார்களின் வரலாறுகள் என இம்மதகுருமார்கள் கற்பனையாக எழுதிக் குவித்திருக்கும் நூல்களை நடுநிலை யோடு படித்துப் பார்ப்பவர்கள் எளிதாக விளங்கலாம். அவற்றில் “அனல்ஹக்” -நானே இறைவன் எனப் பிதற்றியவர்களையும், நபிமார்களின் மதிப்பை விட என்னுடைய மதிப்பு உயர்வானது எனப் பிதற்றியவர்களையும், தங்களின் பக்தர்களை “லாயிலாஹ இல்லல்லாஹ்” …… ரசூலுல்லாஹ்” என அவர்களின் பெயராலேயே கலிமாவை ஜபம் செய்ய வைத்தவர்களையும், இன்னும் மனித அறிவுக்கே எட்டாத அற்புதங்களைச் செய்ததாகப் புளுகி வைத்திருப்பதையும் பார்க்கலாம்.
இப்படிப்பட்ட குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும் முற்றிலும் முரண்பட்ட ´ஷிர்க், குஃப்ர், பித்அத் நிறைந்த வார்த்தைகளை எல்லாம் வெளிப்படுத்திய இவர்கள் இம்மத குருமார்களான மவ்லவி(?) ஆலிம்(?) அல்லாமா(?) போன்றவர்களிடம் பெரும் மேதைகள், வலியுல்லாஹ்க்கள்; காரணம் இவர்கள் அனைவரும் நரகில் கொண்டு சேர்க்கும் மத்ஹபுகள், தரீக்காக்கள், கபுரு சடங்குகள், மீலாது, மவ்லூது,பித்அத்கள். கந்தூரி, வகைவகையான ஃபாத்தியாக்கள் போன்ற அனைத்து மூடச் சடங்குகளையும் ஆதரித்தவர்கள். அதனால் அவர்கள் அனைவரும் நல்லவர்கள், வல்லவர்கள், வலியுல்லாஹ்க்கள். குர்ஆனுக்கும், ஹதீசுக்கும் முரண்படும் அவர்களின் கட்டுக்கதைகளையும் பொய்களையும் வேதவாக்காக(?)கண்மூடி ஏற்பவர்கள் அவற்றின்படி நடப்பவர்கள் முஸ்லிம்கள்.
இவர்களிடம் காதியானிகள் ஏன் காஃபிர்கள்?
ஆனால் காதியான் பிரிவு அஹ்மதிகள் கூற்றுப் படி தனி உம்மத்தோ, ஷரீஅத்தோ இல்லாத விருதா நபி என குலாம் அஹ்மதை ஈமான் கொள்வதால் அவர்கள் காஃபிர்களாம், முர்த்தத்களாம். இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களாம்; காரணம் என்ன?
ஆம்! அவர்கள் வலிமார்களாக நம்பும் எண்ணற்றவர்கள் குலாம் அஹ்மதை விட விபரீத மான ´ஷிர்க், குஃப்ர், பித்அத் நிறைந்த மூடக் கருத்துக்களை வெளிப்படுத்தி இருந்தாலும் அவர்கள் அனைவரும் இவர்கள் கடந்த 1000 வருடங்களாக நடைமுறைப்படுத்தி வரும் அனைத்து ´ஷிர்க்,குஃப்ர், பித்அத்கள் நிறைந்த மூடச் சடங்குகளைச் சரிகண்டவர்கள். அவர்களுக்குச் சமாதிகள்(தர்கா)கட்டிமேற்படி மூடச் சடங்குகள் அனைத்தையும் ஜாம் ஜாம் என நடத்தி வர துணை புரிந்தவர்கள். அதனால் வலியுல்லாஹ்க்கள். குர்ஆனுக்கும், ஹதீஸுக் கும் முரண்படும் அவர்களின் கட்டுக்கதைகளையும், பொய்களையும் வேதவாக்காக(?) கண்மூடி ஏற்பவர்கள், அவற்றின்படி நடப்பவர்கள் முஸ்லிம்கள்.
ஆனால் தன்னை நபி என்று வாதிட்டதாகச் சொல்லப்படும் குலாம் அஹ்மது இம்மதகுரு மார்கள் வயிறு வளர்க்கக் கற்பனை செய்துள்ள மத்ஹபுகள், தரீக்காக்கள், கபுரு சடங்குகள், கந்தூரி, மீலாது, மவ்லூது, பித்அத்கள் வகை வகையான ஃபாத்திஹாக்கள் போன்ற அனைத்து மூடச் சடங்கு சம்பிரதாயங்களைக் கடுமையாக எதிர்த்த காரணத்தால் மட்டுமே அவரும் அவரை நபியாக ஏற்பவர்களும் காஃபிர்கள் என்பதே இம்மூட முல்லாக்களின் முரட்டு ஃபத்வாவாக இருக்கிறது.
பொதி சுமக்கும் கழுதை யார்?
அல்லாஹ் தவ்றாத்தில் இறக்கியருளிய இறை வாக்குகளை நிராகரித்துவிட்டு, அவர்கள் மத குருமார்களாக நம்பிய ரிப்பிய்யூன்களின் சுய கருத்துக்களை மார்க்கமாக-நேர்வழியாக எடுத்து நடந்த யூதர்களும், அக்காலத்து மதகுருமார் களும் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளுக்கு ஒப்பானவர்கள் என 62:5ல் அல்லாஹ் கடுமை யாக எச்சரிக்கிறான். யூத மதகுருமார்களைப் போலவே முஸ்லிம் மதகுருமார்களும் அல்லாஹ் அல்குர்ஆனில் நேரடியாகக் கூறியுள்ளவற்றைப் புறக்கணித்து நிராகரித்துவிட்டு, ஆலிம்கள், உல மாக்கள், இமாம்கள், நாதாக்கள் பெயரால் சொல்லப்படும் கட்டுக்கதைகளையும், பொய் களையும் வேதவாக்காக(?) ஏற்றுச் செயல்படுவதால், முஸ்லிம் மதகுருமார்களும் அல்குர்ஆன் சுமத்தப்பட்டும் அதன்படி நடவாததால் இவர்களும் ஏடுகளைச் சுமக்கும் கழுதைகள் எனக் கூறினால் அது தவறா? சொல்லுங்கள்!
மதகுருமார்கள் நேர்வழி நடக்க முடியாது!
ஆன்மீக வழிகாட்டி, மதகுருமார்கள் என்ற பெயரால் எந்த மதத்தில் இருந்தாலும், அவர்கள் நேரடியாக இறைவன் கூறியுள்ளதையோ, இறைத் தூதர் நடைமுறைப்படுத்தியதையோ உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்லவும் மாட்டார்கள்; அதன்படி நடக்கவும் மாட்டார்கள். அவற்றிற்கு காது, மூக்கு என அவர்களின் கற்ப னைகளைக் கலந்தால்தான் அவர்கள் வயிறு வளர்க்க முடியும். இறைக் கட்டளைப் படிதான் நடக்கிறோம் என வாய்ப்பந்தால் போடுவார் களே அல்லாமல், மக்களுக்குப் போதிப்பது என்னவோ இறைக் கட்டளைக்கு முரணான வற்றைத்தான்.
இந்து மதகுருமார்கள் கடவுளின் அவதாரம் என்று கூறி மனிதனைக் கடவுளாக்கும் இணை வைப்பு செய்ய வைத்து இந்துப் பெருங்குடி மக்களை நரகில் தள்ளுகிறார்கள். மூஸா(அலை) அவர்களுக்கு இறக்கியருளப் பட்ட “தவ்றாத்’ படிதான் நடக்கிறோம் என யூதர்கள் சொல்லிக்கொண்டு அதில் கலப்படங்கள் செய்து இறைவனுக்கு இணை வைக்கும் கொள்கையைத்தான் யூத மதகுருமார்கள் போதிக்கிறார்கள். ஈஸா(அலை) அவர்களுக்கு இறக்கியருளப்பட்ட “இன்ஜீல்’ படிதான் நடக் கிறோம், மக்களுக்குப் போதிக்கிறோம் என சொல்லிக் கொண்டு கிறித்தவ மதகுருமார்கள் இன்ஜீலில் கலப்படங்கள் செய்து, முக்கடவுள் கொள்கையை ஈஸா(அலை) போதித்ததாகப் பொய்யாகக் கூறி கிறித்தவர்களை வழி கேட்டிலாக்கி நரகில் சேர்க்கிறார்கள்.
முஸ்லிம் மதகுருமார்களும் வழிகேட்டையே போதிக்கிறார்கள்!
இதே வழிகேட்டு வழியைத்தான் முஸ்லிம் மதகுருமார்களும் பின்பற்றுகிறார்கள். ஆனால் அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப்பட்டு விட்டால், உலகம் அழியும் வரை அது பாதுகாக்கப்படும் என அல்லாஹ் உறுதி அளித்திருப்பதால் (15:9) அதில் கலப்படம் செய்ய வழியில்லாமல், பொய்யான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலமும், 33:36 இறைக் கட்டளையை நிராகரித்து குர்ஆனுக்கு சுய விளக்கங்கள் கொடுத்தும் முஸ்லிம்களை அல்லாஹ்வுக்கு இணை வைக்கும் மாபெரும் பாவத்தைச் செய்ய வைக்கிறார்கள்.
ஷைத்தானின் நேரடி முகவர்களான இம்மத குருமார்கள் தங்கள் ´ஷிர்க்கான கொள்கைக்கு ஏற்ப விதவிதமான கற்பனைகளைக் கூறி மக்களை நம்பச் செய்து அவர்களை வழி கெடுத்து நரகில் சேர்க்கிறார்கள். மத்ஹபு மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என அல்லாஹ்வும், அவனது தூதரும் திட்டமாகச் சொல்லி இருக்க அதை நிராகரித்துவிட்டு குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் இந்த நான்கும் மார்க்கம் என மக்களை நம்ப வைத்துள்ளனர். தர்கா, தரீக்கா, மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ், இஜ்மா, கியாஸ் மற்றும் விலாயத்துடைய வஹீ, இல்ஹாம், காட்சிகள், ஷரீஅத், தரீக்கத், ஹக்கீகத், மஃறிஃபத், தஸவ்வுஃப், சூஃபிசம், ஸுலூக் இவை அனைத்தும் மார்க்கம் என மக்களை நம்ப வைத்து பெருங்கொண்ட மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள்.
இயக்க மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் மட்டுமே மார்க்கம் என வாயால் பீற்றிக் கொண்டு அதற்கு மாறாக குர்ஆன், ஹதீஸ், லாஜிக், பாலிசி இந்த நான்கும் மார்க்கம் என வாயால் சொல்லாமல் செயல் அளவில் நடை முறைப்படுத்தி அவர்களின் பக்தர்களை நம்பச் செய்து நரகில் தள்ளுகிறார்கள். ஸலஃபி மதகுருமார்கள் அல்குர்ஆன் உலக மக்கள் அனைவருக்கும் குறிப்பாக எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களுக்கும் தெள்ளத் தெளிவாக விளங்கும் எனத் திட்டமாக நேரடியாக எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் கூறிக்கொண்டிருக்க, இந்த வசனங்கள் அனைத்தையும் நிராகரித்துவிட்டு மக்கள் அனைவராலும் குர் ஆனை நேரடியாக விளங்க முடியாது. ஸலஃபிகள் விளங்கியபடி தான் நாம் நடக்க வேண்டும் என அவர்களை நம்புகிறவர்களை ஏமாற்றி நரகில் சேர்க்கிறார்கள். (பார்க்க 54:17,22,32,40, 5:6, 7:2, 9:91, 22:78, 12:1, 15:1, 16:64, 27:1, 28:2, 36:69, 43:2, 4:82, 18:1, 39:23,28, 55:2,4, 4:113, 87:6, 62:2)
ஏன் இந்தத் தற்பெருமை நாடகம்?
இத்தனை இறைக் கட்டளைகளையும் நிராகரித்துவிட்டு ஏதாவதொரு நொண்டிக் காரணத்தைச் சொல்லி இந்த அனைத்துத் தரப்பு மவ்லவிகள், ஆலிம்கள், ஷேக்கள் என பெருமை பேசும் மதகுருமார்கள் ஏன் அல்லாஹ்வுக்கும் அடியானுக்கும் இடையில் 2:186, 50:16, 56:85 நேரடி இறைக் கட்டளைக்கு முரணாக இடைத்தரகர்களாக- புரோகிதர்களாக- மதகுருமார்களாகப் புக முற்படுகிறார்கள் தெரியுமா?
அங்குதான் இரகசியமே இருக்கிறது. ஆம்! இடைத்தரகர்களாக உள்ளே புகுந்தால்தான் உலகியல் மதிப்பு, மரியாதை, கெளரவம் இவற்றோடு வயிற்றுப் பிழைப்பையும் ஜாம் ஜாம் என்று நடத்த முடியும். ஷைத்தானின் நேரடி முகவர்-தாஃகூத் என்ற பணியையும் செம்மையாக நடத்த முடியும். அதனால் தான் அல்லாஹ் 2:186, 50:16, 56:85 ஆகிய இறை வாக்குகளில் அல்லாஹ் அடியானுக்கு மிகமிக நெருக்கமாக இருக்கிறான். பிடரி நரம்பை விட நெருக்கமாக இருக்கிறான். எப்படிப்பட்ட இடைத்தரகனும், புரோகிதனும் இடையில் நுழைய முடியாது என்று திட்டமாக, தெளிவாக, நேரடியாக அல்லாஹ் கூறி இருப்பதெல்லாம் இம் மதகுருமார்களின் உள்ளத்தில் உறைக்காது. காரணம் ஹராமான உணவு, உடை, இருப்பிடம் காரணமாக அவர்களது உள்ளங்கள் கற்பாறைகளை விடக் கடினமாக இறுகிவிட்டன. (பார்க்க 2:74, 5:13,6:125)
எனவே நேரடியான தெளிவான அல்குர்ஆனின் போதனைகள் அவர்களின் உள்ளத்தில் எவ்வித மாறுதலையும் ஏற்படுத்தாது.
நேர்வழியை மறுப்பவர்கள்தான் மதகுருமார்கள்! உலகிற்கு மக்களுக்கு நேர்வழியை போதிக்க வந்த நபிமார்கள் அல்லாஹ்விடமிருந்து வஹீ மூலம் பெற்ற நேரடி போதனைகளையே மறுத்து நிராகரித்த மதகுருமார்களின் அடியொற்றி வந்த இந்த முஸ்லிம் மதகுருமார்கள், ஒரு பாமரன் அல்குர்ஆனின் நேரடி வசனங்களை எடுத்துக் காட்டும்போது, அதை ஏற்கவா போகிறார்கள்? மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்ட மவ்லவி, ஆலிம், அல்லாமா, ஷேய்க் எனப் பீற்றிக் கொள்ளும் இம்மத குருமார்கள் அதே நிலையில் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்; நேர்வழிக்கு ஒருபோதும் வரமாட்டார்கள் என அல்லாஹ் பல இடங்களில் உறுதிப்படுத்தி இருப்பது பொய்யாகுமா? ஒருபோதும் பொய்யாகாது. அல்குர்ஆன் அல்பகரா 2:8 முதல் 20 வரையுள்ள இறைவாக்குகளை சுய சிந்தனையோடு தன்னம்பிக்கையோடு நேரடியாக நடுநிலையுடன் படித்து விளங்குகிறவர்கள் இந்த உண்மையை நிச்சயம் உணர முடியும்.
2:14, 6:117, 7:30, 178, 16:125, 28:56, 43:37, 68:7,8 இறைவாக்குகளை நேரடியாக, நடுநிலையுடன் படித்து விளங்குகிறவர்கள் நேர்வழி அல்லாஹ்விடமே இருக்கிறது. அவன் விரும்புகிறவர்களுக்கு மட்டுமே அந்த நேர்வழியைக் கொடுக்கிறான். இம்மத குருமார்கள் ஒரு போதும் நேர்வழியைக் காட்ட முடியாது. இம் மதகுருமார்களில் யாரெல்லாம் நாங்கள்தான் நேர்வழியில் இருக்கிறோம், நேர்வழியைக் காட்டுகிறோம் என்று மார்தட்டுகிறார்களோ, தம்பட்டம் அடிக்கிறார்களோ, பீற்றுகிறார்களோ அவர்கள் அனைவரும் மேல்கண்ட இறைவாக்குகளையும் 4:49, 53:32 இறை வாக்குகளையும் நிராகரித்துக் கோணல் வழி சென்று நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்பதை இந்த இறைவாக்குகளைத் தன்னம் பிக்கையோடு நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் நிச்சயமாக அறிய முடியும்.
தாழ்வு மனப்பான்மை உடையோர் தேர்வு பெறுவதில்லை!
யாரெல்லாம் மவ்லவி, ஆலிம்களுக்கு மட்டுமே அல்குர்ஆன் விளங்கும்; நம்மால் விளங்க முடியாது என்ற தாழ்வு மனப்பான்மையுடன் 47:24 கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு இந்த மவ்லவி, ஆலிம், ஷேக் மதகுருமார்கள் பின்னால் அவர்கள் கற்பனையாகச் சொல்வதையே வேதவாக்காக(?) கொண்டு கண்மூடிச் செல்கிறார்களோ அவர்கள் சென்றடையும் இடம் நரகம் என்பதை 33:66,67,68 இறைவாக்குகள் நெத்தியடியாகக் கூறுகின்றன.
பின்பற்றத் தகுதியற்றவர்கள்!
18:28, 25:52, 33:1, 48, 68:10, 76:24 இந்த இறை வாக்குகளை தன்னம்பிக்கையுடன், சுய சிந்தனையுடன், நடுநிலையுடன் படித்துப் பாருங்கள். மனோ இச்சையைப் பின்பற்றுபவன், நிராகரிப்பாளன், நயவஞ்சகன், அதிகம் சத்தியம் செய்பவன், பாவி, நன்றியற்றவன் போன்றோருக்கு நீர் வழிபடாதீர் என்று இறைத் தூதருக்கே அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். இவர்கள் எல்லாம் யார்? நேரடி குர்ஆன் வசனங்களை மறுத்து இறைத்தூதரை கடுமையாக எதிர்த்த அன்றைய ஜ.உ.சவான தாருந்நத்வா மத குருமார்களும், அவர்களைக் கண்மூடிப் பின் பற்றியவர்களுமே என்பதில் சந்தேகம் உண்டா? இப்படிப்பட்ட மதகுருமார்களுடன் குர்ஆனாகிய இதன் மூலம் கடுமையாகப் போராடுவீராக என்று 25:52ல் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான். எனவே இம்மதகுருமார்களுக்குரிய பதில் அல்குர்ஆன் வசனங்களே அல்லாமல் எமது சுய கற்பனைகள் அல்ல. எடுத்துக் காட்டும் குர்ஆன் வசனங்களை, அல்குர்ஆனை நீங்களே எடுத்து நேரடியாகப் படித்துப் பாருங்கள். அந்த குர்ஆன் வசனங்கள் நேரடியாக என்ன கூறுகின்றனவோ அவைதான் அவற்றின் பொருள். அதன்படி நடப்பவன் நிச்சயம் வெற்றி பெற்றுவிட்டான்.
அல்குர்ஆன் மட்டும் போதும் என்பவர்களும் வழிகேடர்களே!
காரணம் 7:3ல் அல்லாஹ்வால் இறக்கப்பட்டதை மட்டுமே நேரடியாகப் பின்பற்றக் கட்டளையிட்டுள்ளான். இம்மதகுருமார்ககளைப் பாதுகாவலர்களாக-வழிகாட்டிகளாக நம்பிப் பின்பற்றக்கூடாது என்று நேரடியாகக் கட்ட ளையிட்டுள்ளான். 33:36ல் இதையே உறுதிப் படுத்தியுள்ளான். இந்த இடத்தில் அஹ்லகுர்ஆன் மதகுருமார்கள் அல்லாஹ்வே அவனால் இறக்கப்பட்ட குர்ஆனை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளான். எனவே நபியின் நடைமுறைத் தேவை இல்லை எனப் பிதற்றுவார்கள். அல்லாஹ் இவர்களை விட பல லட்சம் கோடி மடங்கு அறிவுடையவன். குர்ஆனை மட்டுமே பின்பற்றுவதே அவனது கட்டளையாக இருந்தால் இந்த இடத்தில் நேர டியாக குர்ஆனை மட்டுமே பின் பற்றுங்கள் எனக் கட்டளை இட்டிருப்பான். உங்கள் ரப்பிடமிருந்து இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள் என சுற்றி வளைத்து ஒருபோதும் சொல்லி இருக்கமாட்டான்.
நபியின் நடைமுறையும் இறைவனால் வஹீ மூலம் இறக்கப்பட்டதுதான் என்பதை 53:2,3,4 இறைவாக்குகள் நெத்தியடியாகக் கூறுகின்றன. இது அல்லாமல் எண்ணற்ற இறைவாக்குகளில் “”அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள்; அவனது தூதருக்கும் வழிப்படுங்கள்’ என்று நேரடியாகக் கட்டளையிடுகிறான். எனவே குர்ஆன் மட்டும் போதும் என்போர் அல்குர்ஆனின் எண்ணற்ற வசனங்களை நிராகரித்துப் பெரும் பாவிகளாகவே இருக்கிறார்கள். இவர்களும் மதகுருமார்களைப் பின்பற்றும் வழிகேடர்களே அல்லாமல் நேரடியாக குர்ஆனைப் படித்து விளங்கி அதன்படி நடப்பவர்கள் அல்ல.
நேர்வழி நடப்போர்!
எனவே நேர்வழி நடந்து அல்லாஹ்வின் பொருத்தம் பெற்று சுவர்க்கம் புக விரும்பும் யாராக இருந்தாலும் அவர்கள் வழி கெடுக்கும் இந்த மதகுருமார்களை நிச்சயம் புறக்கணித்தே தீரவேண்டும். 3:102,103 இறைக்கட்டளைகள் படி நேரடியாக அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து, அதிலுள்ள இறைவாக்குகளை தனக்குத் தெரிந்த மொழிகளில் படித்துச் சிந்தித்து விளங்கி அதன்படி நடக்க வேண்டும். இதுவே நேர்வழி!
நமது எஜமானன் அல்லாஹ்வே!
ஒவ்வொரு ஆணும், பெண்ணும் இப்போது நாம் இங்குக் குறிப்பிடும் கருத்தை ஊன்றிக் கவனிக்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். அல்லாஹ்வே நமது எஜமானன்; மதகுருமார்கள் உட்பட நாம் அனைவரும் அவனது அடிமைகளே! எஜமானனாகிய அல்லாஹ் அடிமைகளாகிய நம்மைப் பார்த்து, அவன் நேர்வழியாக இறக்கி அருளியவற்றை மட்டுமே பின் பற்றவேண்டும் என்று கட்டளை இட்டுள்ளான் (7:3, 53:2-4) எஜமானனின் கட்ட ளைக்கு அடிமைகள் அடிபணிவது கட்டாயக் கடமை. இந்த நிலையில் மனிதர்களில் மவ்லவிகள், ஆலிம்கள், இமாம்கள் என்று யாரையும் பாதுகாவலர்களாக, வழி காட்டிகளாக ஏற்றுப் பின்பற்றக் கூடாது என்று கண்டிப்பாகக் கட்டளையிட்டுள்ளான். அடிமைகளான நாம் அல்லாஹ்வின் இந்தத் தெளிவான நேரடியான இரு கட்டளைகளையும் நிரகாரித்துப் புறக்கணித்து விட்டு இந்த மவ்லவிகள், ஆலிம்கள் பின்னால் சென்றால் இதை அல்லாஹ் ஏற்பானா? நிச்சயம் ஏற்கமாட்டான். 2:39ல் அல் லாஹ் கூறுவது போல் நரகமே நமது ஒதுங்கு மிடமாகும். அந்நரகிலிருந்து நமக்கு விடுதலையே இல்லை!
அல்குர்ஆன் அரபி மொழியில் இருக்கிறது. அரபி மொழி கற்ற மவ்லவிகள் மட்டுமே அதை விளங்க முடியும். நம்மால் அல்குர்ஆனை விளங்க முடியாது. அதற்கு நமக்கு அவகாசமும் இல்லை என நம்பிக்கை இழந்து, தாழ்வு மனப் பான்மையுடன் ஆலிம்கள் என பெருமை பேசும் இந்த மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் சென்றால் நமது இறுதி முடிவு நரகமே!
தன்னம்பிக்கை உடையோர் மட்டுமே வெற்றியாளர்!
அதற்கு மாறாக தன்னம்பிக்கையுடன் நமக்குத் தெரிந்த மொழிகளிலுள்ள குர்ஆனை நேரடியாகப் படித்து, அதுபோல் நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் நேரடியாகப் படித்து விளங்க முற்பட்டால், முயற்சி செய்தால், அல்லாஹ் நேர்வழியை எளிதாக்கித் தருவதாக 29:69ல் உறுதி கூறுகிறான். அப்படி முயற்சி செய்து ஒரு முடிவுக்கு வந்து அதன்படி நடந்தால், அது சரியாக இருந்தால் நமக்கு இரண்டு கூலிகள் கிடைக்கும். ஒன்று குர்ஆன், ஹதீஸில் பாடுபட்டதற்காக, இரண்டு சரியான முடிவிற்கு வந்து செயல்பட்டதற்காக, தவறான முடிவு எடுத்துச் செயல்பட்டிருந்தாலும் முயற்சி செய்ததற்கு ஒரு கூலி நிச்சயம் உண்டு. தவறான முடிவு எடுத்ததற்கு தண்டிக்கப்பட மாட்டோம். இது நபி (ஸல்) அவர்கள் நமக்கு அளித்துள்ள உறுதிமொழி.
இவ்வுலக வாழ்வும் பரீட்சை வாழ்க்கையே!
உலகியல் பரீட்சையில் ஒருவன் சுயமாகச் சிந்தித்து விளங்கி விடை எழுதினால், 100க்கு 35 புள்ளிகள் எடுத்தாலும் வெற்றி அடைந்து விடுவான். அதற்கு மாறாகத் தன்னுடைய திறமையில் நம்பிக்கை இல்லாமல், பக்கத்திலுள்ளவனைப் பார்த்து எழுதினால் என்ன நடக்கும்? விடை 100க்கு 100 கிடைக்கும் அளவில் சரியாக இருந்தாலும் வெற்றி கிடைக்காது, தண்டிக்கப் படுவான். இதேபோல் வாழ்க்கைப் பரீட்சையில் (பார்க்க 5:48, 6:165, 11:7, 67:2) இந்த மவ்லவிகளைக் கண்மூடிப் பின்பற்றுவது பரீட்சையில் பார்த்து எழுதுவது போல்தான். நிச்சயமாகப் பெருத்த வழிகேடுதான், ஒதுங்குமிடம் நரகம்தான் என்பதை 33:36,66,67,68 இறைவாக்குகளை நேரடியாகப் படித்து உறுதி செய்து கொள்ளுங்கள். 36:21 இறைவாக்குக் கூலிக்காக மார்க்கப் பணி புரியும் மத குருமார்கள் நேர்வழியில் இல்லை; மக்களை வழிகெடுக்கத்தான் செய்வார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள், முஃப்திகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ஆணவம் பிடித்த மதகுருமார்கள் அனைவரும் வழிகேடர்களே! மக்களை வழிகெடுத்து நரகில் தள்ளுபவர்களே! ஷைத்தானின் நேரடி முகவர்களே! எச்சரிக்கை! அவர்கள் பின்னால் செல்வது பேராபத்தேயாகும்.
தண்டிக்கப்பட மாட்டோம்!
நமது செயல்கள் குறித்து நாளை மறுமையில் நமது எஜமானனாகிய அல்லாஹ்வுக்கே பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளோம். மறுமையில் விசாரணையின்போது, அல்லாஹ் நம்மி டம் ஏன் இப்படிச் செயல்பட்டாய் என்று கேட்கும்போது “”யாஅல்லாஹ் நீ உனது இறுதி நெறி நூலில், உன்னால் இறக்கியருளப்பட்ட வற்றையே பின்பற்ற வேண்டும். மற்றவர்களை வழிகாட்டிகளாகக் கொண்டு பின்பற்றக் கூடாது என்று நேரடியாக கட்டளையிட்டிருக்கிறாய். உன் கட்டளையை தலைமேல் கொண்டு உனது கலாமான அல்குர்ஆனைப் படித்துப் பார்த்து நான் விளங்கியபடி நடந்தேன்” என்று பதில் அளித்தால் நாம் தவறாக நடந்திருந்தாலும் அல்லாஹ் மன்னிப்பான். நிச்சயம் தண்டிக்க மாட்டான். காரணம் அவனுக்கே வழிப்பட்டோம்.
தண்டிக்கப்படுவோம்!
அதற்கு மாறாக “யா அல்லாஹ் நீ குர்ஆனை அரபி மொழியில் இறக்கி விட்டாய், அதன் மொழி பெயர்ப்பைப் படித்து விளங்கும் அளவுக்கு எனக்குத் திறமை இல்லை; நேரமும் இல்லை, அதனால் நான் மார்க்க அறிஞரான இன்னாரை நம்பி அவர் கூறியபடி செயல்பட்டேன்” என்று கூறினால், என் தூதர் அல்லாத வேறு யாரையும் நீ பின்பற்றக் கூடாது என்று நான் நேரடியாகக் கட்டளையிட்டிருக்கிறேன். அப்படிப்பட்டவர்களைப் பின்பற்றக்கூடாது என்று 7:3, 33:36, 18:102-106 போன்ற வாக்குகளில் கட்டளையிட்டிருந்தும் அவற்றை நிராகரித்துவிட்டு அவர் பின்னால் சென்றாயா? 33:66,67,68 எனது எச்சரிக்கையை நீ கண்டு கொள்ளாததால் நரகம் புகுந்து வேதனையை அனுபவி என்று அல்லாஹ் கூறினால் நமது நிலை என்ன? காரணம் அவனுக்கே வழிப்பட வில்லை.
7:30 இறைவாக்கு உணர்த்தும் உண்மை!
இந்த 7:30 இறைவாக்குக் கூறுவதை ஊன்றிக் கவனியுங்கள்.
“”ஒரு கூட்டத்தாரை அவன்(அல்லாஹ்) நேர் வழியிலாக்கினான்; இன்னொரு கூட்டத்தாருக்கு வழிகேடு உறுதியாகிவிட்டது. ஏனெனில் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வை விட்டு ஷைத்தான்களை பாதுகாவலர்களாக்கிக் கொண்டார்கள். எனினும் தாங்கள் நேர்வழி பெற்றவர்கள் என எண்ணுகிறார்கள். (7:30)
இங்கு ஷைத்தான்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுவது மனித ஷைத்தான்களான மத குருமார்களையே அல்லாமல் ஜின் ஷைத்தான்களை அல்ல. எமது இந்த கூற்றுக்கு இதோ குர்ஆன் ஆதாரம்:
இன்னும் (இந்தப் போலி விசுவாசிகள்) நம்பிக்கை கொண்டிருப்போரைச் சந்திக்கும் போது, “”நாங்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார்கள். ஆனால் அவர்கள் தங்கள் (தலைவர்களாகிய) ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது, “”நிச்சயமாக நாங்கள் உங்களுடன்தான் இருக்கிறோம்; நிச்சயமாக நாங்கள் (உண்மையான நம்பிக்கையாளர்களை) பரிகாசம் செய்பவர்களாகவே இருக்கிறோம்” எனக் கூறுகிறார்கள் (2:14)
இந்த 2:14 இறைவாக்கில் அல்லாஹ் ஷைத்தான்கள் எனக் குறிப்பிடுவது அன்றைய ஜ.உ. தாருந்நத்வா தலைவர்களான அபூ ஜஹீல் போன்ற மதகுருமார்களையே. ஆம்! இன்றைய மதகுருமார்கள் அனைவரும் மனித ஷைத்தான்களே! நாங்கள்தான் மவ்லவிகள், ஆலிம்கள், அல்லாமாக்கள் என 4:49, 53:32 இறைவாக்குகளை நிராகரித்து ஆண வம்-பெருமை பேசுகிறவர்கள், ஷைத்தானைப் பின்பற்றுகிறார்களா? அல்லது 4:49, 53:32 இறைக் கட்டளைகளைத் தலைமேல் கொண்டு அல்லாஹ்வுக்கு அடிபணிகிறார்களா என நிதானமாக நடுநிலையுடன் சிந்தியுங்கள். அல்லது ஆலிம்கள் என்றும் அவாம்கள் என்றும் சமுதாயத்தில் இரு பிரிவினர் இருக்கின்றனர் என்பதற்கு குர்ஆனிலிருந்தோ, ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களிலிருந்தோ ஆதாரம் காட்டச் சொல்லுங்கள்.
7:30 இறைவாக்கு கோணல் வழிகளில் செல்பவர்களே தாங்கள் நேர்வழியில் இருப்ப தாக மனப்பால் குடிப்பார்கள், பீற்றிக் கொள் வார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. முஸ்லிம்களில் மதகுருமார்கள் பின்னால் செல்லும் அனைத்துப் பிரிவினரும் இப்படி உண்மைக்கு மாறாகப் பீற்றிக் கொள்வதை கண் கூடாகப் பார்த்து வருகிறோம். இதுவும் அவர்கள் அனைவரும் வழிகேட்டில் இருப்பதை உறுதிப்படுத்துகிறது.
அயோக்கியர்களிலும் கேடுகெட்ட அயோக்கியர்கள்!
மேலும் 2:256,257, 4:51,60,76, 5:60, 16:36, 39:17 போன்ற இறைவாக்குகளை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் குர்ஆனை மொழி பெயர்ப்புச் செய்த இந்த மவ்லவிகள் “தாஃகூத்’ என்று வரும் இடங்களில் ஷைத்தான்கள் என்று மொழி பெயர்த்திருந்தாலும் அவை அனைத்தும் 2:14 குறிப்பிடும் மனித ஷைத்தான்களான மதகுருமார்களையே குறிப்பிடுகின்றன என்பதை விளங்க முடியும்.
ஆம்! நாங்கள்தான் மார்க்க அறிஞர்கள்-ஆலிம்கள், மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்க அதிகாரம் பெற்றவர்கள் என ஆணவம் பேசும், பெருமை அடிக்கும் மதகுருமார்களை விட கேடுகெட்ட அயோக்கியர்கள் வேறு யாரும் இல்லை. உலகியல் அயோக்கியர்கள் மக்களின் சொத்து சுகங்களை மட்டுமே அபகரிக்க முடியும்; அதிகபட்சம் உயிரைப் பறித்து இவ்வுலக வாழ்வை முடிவுக்குக் கொண்டுவர மட்டுமே முடியும். ஆனால் மதகுருமார்களான இந்தப் படு அயோக்கியர்களோ மக்களின் சொத்து சுகங்களை இறைவனின் பெயராலேயே சுரண்டிக் கொள்ளை அடிப்பதுடன் நாளை மறுமையிலும் அவர்களை நிரந்தர நரகில் கிடந்து வேதனை தாங்க இயலாது, இந்த மதகுருமார்களைக் கடுமையாகச் சபிப்பதற்கு வழிவகுக்கிறார்கள். இதை 33:66,67,68, 38:55-64, 43:33-39, போன்ற இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. படைக்கப்பட்ட படைப்பினங்களிலேயே மிகவும் கேடுகெட்ட ஜென்மம் இம்மதகுருமார்களே என்று 7:175-179 இறைவாக்குகள் பறைசாற்றுகின்றன. முஸ்லிம்களே எச்சரிக்கை!
மதகுருமார்களின் அறியாமையா? ஆணவமா?
இம்மத குருமார்கள் 5:3, 3:19,85, 33:66,67,68, 42:21, 49:13-16 போன்ற இறைவாக்குகளைப் படித்து விளங்கவில்லையா? அல்லது 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் நேர்வழியை நன்கு அறிந்த நிலையிலேயே ஷைத்தானைப் போல், முன்னைய நபிமார்களைக் கடுமையாக எதிர்த்த மதகுருமார்களைப் போல் நேர்வழியை-சத்தியத்தை மூடி மறைக்க முற்படுகிறார்களா? அல்லாஹ்வே அறிவான்.
இம்மதகுருமார்களைப் போல் புரோகித குருகுல மடமான மதரஸாவில் போய் பல ஆண்டுகள் செலவிட்டுப் பட்டம் பெறாத ஓர் அறிஞரான டாக்டர் ஜூலியஸ் ஜெர்மான்ஸ் கூறுகிறார். நடுநிலையோடு படித்துப் பாருங்கள்.
“முஹம்மது அவர்கள் புரோகிதத்தின் வசீகர வலையை 1400 ஆண்டுகளுக்கு முன்பே கிழித்தெறிந்து விட்டார். அல்குர்ஆனின் ஞான போதனைகள் மூலமே ஒவ்வொருவரும் இறைவனிடம் நேரடித் தொடர்பு கொள்ள உரிமை ஏற்பட்டு விட்டது. இதன்மீது எந்தப் புரோகிதக் குழுவினரும் எப்படிப்பட்டத் தடை உத்திரவையும் பயன்படுத்த வழி இல்லாமல் போய் விட்டது”.
மதகுருமார்கள் கூறும் ஆலிம் அல்லாத ஒருவர் அல்குர்ஆனை விளங்கிய அளவுக்குத் தானும் தங்களை ஆலிம்கள் எனப் பீற்றிக் கொள்ளும் இம்மதகுருமார்கள் நேர்வழியை- சத்தியத்தை விளங்கவில்லை என்றால் அதன் பொருள் என்ன? ஆம்! அவர்கள் ஆலிம்கள் அல்ல; ஜாஹில்கள்; நபி(ஸல்) அவர் காலத்தில் தங்களை மெத்தப் படித்த ஆலிம்கள், அல்லா மாக்கள் எனப் பெருமை பேசிய அன்றைய ஜ.உ.சவான தாருந்நத்வா மதகுருமார்களான வடிகட்டிய ஜாஹில்களை அடியயாற்றி நடக் கும் ஜாஹில்கள் என்பது உறுதியாகிறதா? இல்லையா? நீங்களே முடிவுக்கு வாருங்கள்.
மதகுருமார்களின் சூன்ய, வசீகரப் பேச்சு!
இம்மதகுருமார்களின் கபட நாடகத்திற்கும், மக்களை மயக்கும் சூன்யப் பேச்சிற்கும் அடிமைப்பட்டு பெருங்கொண்ட மக்கள் அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்வதற்கும் காரணம் உண்டு. இம்மதகுருமார்களின் வழி கேடான கொள்கையில் மயங்கி அதன்படி நடப்பதற்கு முக்கியக் காரணம் அப்படிச் செயல்படுவதால் மன அமைதியும், இவ்வுலகில் இன்பமும் கிடைப்பதால், அப்படி ஷைத்தான் காட்டுவதால் பெருங்கொண்ட மக்கள் இம்மத குருமார்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறார்கள்.
இந்த உண்மையை ஸ்ரீ ராமகிருஷ்ண பரம ஹம்சரின் முதன்மைச் சீடரும் மேதையுமான சுவாமி விவேகானந்தரின் அறிவுரை “ஸ்ரீராம கிருஷ்ண விஜயம்” அக்டோபர் 1984 இதழில் வெளியாகி இருப்பதை அறியத் தருகிறோம்.
“”இறைவனை வழிபடுவது, அவன் ஒருவனை மட்டுமே வழிபடுவது பக்தியாகும். வேறு எந்தப் பொருளையும், தேவர்களையோ, பித்ருக்களையோ, வேறு எந்த மனிதனையோ வழிபடுவது பக்தியைச் சேர்ந்தது அன்று, அது பக்தியே அன்று. பல்வேறு தேவதைகளைப் பல வழிகளில் வழிபடுவது சடங்குகளோடு கூடிய வழிபாட்டைச் சேர்ந்ததாகும். இந்த வழிபாட்டினால் வழிபடுபவன் மேலான ஓர் இன்பத்தை அடையலாமே தவிர, பக்தியைப் பெறவோ முக்தி பெறவோ இயலாது.
அனைத்து மதங்களின் புரோகிதர்களும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே!
பொதுவாக அனைத்து மதங்களிலுமுள்ள மதகுருமார்களின் செயல்பாடுகளை உற்று நோக்கினால், ஏறக்குறைய அவை அனைத்தும் ஒன்று போலவே இருக்கும். பெயர் வித்தியாசம் இருக்கலாம். செயல் வித்தியாசம் இருக்காது. இந்துக் கோவில்கள், கிறித்தவ சர்ச்சுகள், முஸ்லிம் தர்க்காக்கள் இவற்றில் நடைபெறும் மூடச் சடங்கு சம்பிரதாயங்களை உற்று நோக்குங்கள். பெயர் வித்தியாசம் இருக்குமே அல்லாமல் செயல் வித்தியாசமோ, நம்பிக்கை வித்தியாசமோ இருக்காது. அந்த அடிப்படையில் இந்துக்கள் தேவர்கள், தேவதைகள், பித்ருக்கள் பெயரால் வழிபாடு செய்கிறார்கள் என்றால், முஸ்லிம்கள் அவுலியாக்கள், இமாம்கள் பெயரால் தர்காக்கள், கொடி மரங்கள் போன்றவற்றில் வழிபாடுகள் செய்கிறார்கள். இவை மத்ஹபுகள் என்றும் தரீக்காக்கள் என்றும், திக்ரு மஜ்லிசுகள் என்று அறியப்படுகின்றன.
முஸ்லிம்கள் இவற்றில் முழு நம்பிக்கை வைத்து மூழ்குவதால் திக்ரு, பிக்ருகளில் ஈடுபடுவதால் மன அமைதியும், மேலான ஓர் இன்பத்தையும் அடையத்தான் செய்கிறார்கள். அதனால் மத்ஹபுகள், தரீக்காக்கள், ஷரீஅத், தரீக்கத், ஹகீகத், மஃறிஃபத் போன்ற மத குருமார்களின் கற்பனைகள் மார்க்கத்தில் உள்ளவைதான் என்று நம்புகின்றனர்.
ஆனால் விவேகானந்தர் சொல்வது போல் இணை வைக்கும் வழிபாடுகள் மூலம் இவ்வுலகில் மன அமைதியும், மேலான இன்பமும் கிடைக்கலாமே தவிர, மறுமையில் அல்லாஹ் வின் பொருத்தமோ, சுவர்க்கமோ ஒரு போதும் கிடைக்காது. காரணம் இவை அனைத்தும் அல்லாஹ் தனது இறுதித் தூதர் மூலம் காட்டித் தந்தவை அல்ல. சுயநல மதகுருமார்கள் மாற்று மதங்களிலிருந்து இறக்குமதி செய்த மனிதக் கற்பனைகளே. 33:36 இறைக் கட்டளைப்படி பகிரங்க வழிகேடுகளே; நரகில் சேர்ப்பவையே. இங்கும் இந்த மதகுருமார்கள் ஆதத்தின் சந்ததிகளை வழிகெடுத்து நரகில் சேர்க்கச் சபதமிட்டு அனுமதி பெற்ற ஷைத்தானின் நேரடி முகவர்கள் என்பதே உறுதியாகிறது.
முடிவுரை :
இறுதியாக ஒரு சில வார்த்தைகள்:
5:3, 3:19,85, 7:3, 33:36, 59:7 இறைக் கட்ட ளைகள்படி அல்லாஹ் மனித குலத்திற்கு அளித்த நேர்வழி-மார்க்கம் 1432 வருடங்க ளுக்கு முன்னரே முற்றிலும் நிறைவடைந்து விட்டது. இறுதித் தூதரின் மறைவுக்குப் பின்னர் மார்க்கத்தில் அணுவளவு அல்ல; அணுவின் முனை அளவும் கூட்டவோ, குறைக்கவோ எந்த கலீஃபாவுக்கோ, நபி தோழர்களுக்கோ, இமாம்களுக்கோ, ஆலிம்களுக்கோ அனுமதியே இல்லை என்பதை நெத்தியடியாக நேரடியாகக் கூறுகின்றன. இவை முழுக்க முழுக்க மார்க்கம் சம்பந்தப்பட்டவையே அல்லாமல் விஞ்ஞான வளர்ச்சி மூலம் கண்டுபிடிக்கப்படும் சாதனங்களை முஸ்லிம்கள் பயன்படுத்துவதற்கோ, அனுபவிப்பதற்கோ குர்ஆன் ஹதீஸில் தடை அணுவளவும் இல்லை என்பதையும் இவை உறுதிப் படுத்துகின்றன.
2:213, 16:44,64 இறைக் கட்டளைகள்படி அல்குர்ஆனுக்கு நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு மேல் விளக்கம் கொடுக்க எந்த அல்லாமாவுக்கோ, அவுலியாவுக்கோ அணுவளவும் அனுமதி இல்லை என நெத்தியடியாகக் கூறுகின்றன. குர்ஆன் ஆதாரமில்லாமல் குர்ஆன் வசனங்களுக்குச் சுய விளக்கம் கூறுவோர் அநியாயக்காரர்கள், அவர்களுடன் நபியே அமராதீர், அவர்களைப் புறக்கணித்தவிடும் என 6:68.69 இறைவாக்குகளில் அல்லாஹ் நபிக்கே கட்டளையிட்டுள்ளான்.
அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த எவ்வித ஆதாரமும் இல்லாமல், குர்ஆன் வசனங்களின் நேரடிக் கருத்துக்களை மறுத்து தர்க்கம் செய்வது அல்லாஹ்விடத்திலும், நம்பிக்கை கொண்டவர்களிடத்திலும் மிகவும் வெறுக்கப்பட்ட தாகும். பெருமையடித்து ஆணவம் கொள்ளும் ஒவ்வொரு இருதயத்தின் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விடுகிறான் என்று 40:35 மிகக் கடுமையாக எச்சரிக்கிறது. அல்லாஹ்வின் இந்தக் கடுமையான எச்சரிக்கையை துச்சமாக எண்ணி தூக்கி எறிந்து விட்டு இம்மத குருமார்கள் ஆலிம் -அவாம் வேறுபாடு, மத்ஹபுகள், தரீக்காக்கள், மஸ்லக்கள், இயக்கங்கள் என 21:92, 23:52, 3:103,105, 6:153, 159, 30:32, 42:13,14 போன்ற பல இறைவாக்குகளுக்குச் சுய விளக்கங்கள் கொடுத்து முஸ்லிம் சமுதாயத்தைச் சின்னாப் பின்னப்படுத்தியுள்ள ஆலிம்கள் என பெருமை பேசும் இந்த மதகுருமார்களை விட கேடு கெட்டவர்கள், அல்லாஹ்வால் இருதயத்தின் மீது முத்திரையிடப்பட்டவர்கள் வேறு யாரும் இருக்க முடியுமா? நிதானமாகச் சிந்தியுங்கள்.
இடைத்தரகர்களுக்கு அனுமதி அணுவளவும் இல்லை!
2:186, 50:16, 56:85, 7:3, 33:36 இறை வாக்குகள் அல்லாஹ்வுக்கும் அடியாருக்கும் இடையில் இடைத்தரகர்களாக, பரிந்து பேசுபவர்களாக, மேல் விளக்கம் அளிப்பவர்களாக இறந்துபோன நல்லடியார்களோ, உயிரோடிருக்கும் மதகுருமார்களோ ஒரு போதும் வரமுடியாது என்பதை உறுதிப் படுத்துகின்றன. மீறி இம் மதகுருமார்களின் வழிகாட்டல்படி நடந்தால் நாளை நரகம் புக நேரிடும் என்பதை 33:66-68, 38:55-64, 43:33 -40 இறை வாக்குகள் உறுதிப் படுத்துகின்றன.
மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்கள் நேர்வழியில் இல்லை!
மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்கள் நேர்வழியில் இல்லை என்று 36:21 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. அதற்கு மாறாக இந்த மதகுருமார்கள் மீது நம்பிக்கை வைக்காமல் அல்லாஹ் மீது மட்டுமே முழு நம்பிக்கை வைத்து, தன்னம்பிக்கையுடன் நேரடியாக அல்குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்து விளங்க முற்படுகிறவர்களுக்கு, பாடுபடுகிறவர்களுக்கு அல்லாஹ் அவனது வழிகளை எளிதாக்கித் தருவதாக 29:69ல் உறுதி அளிக்கிறான். பயபக்தியுடன் நடந்தால் அல்லாஹ் கற்றுக் கொடுப்ப தாக 2:282ல் வாக்களிக்கிறான்.
அல்லாஹ்வால் பாமர மக்களுக்காகவே அல்குர்ஆன் மிகமிக எளிதாக்கப்பட்டுள்ளது என்று 54:17,22,32,40, 19:97, 44:58, 80:20, 5:6, 7:2, 9:91, 22:78, 12:1, 15:1, 16:64, 27:1, 28:2, 36:69, 43:2, 4:82, 18:1, 39:23,28, 55:2,4, 4:113, 87:6, 62:2 போன்ற எண்ணற்ற இறைவாக்குகளில் அல்லாஹ் உறுதி கூறியுள்ளான். இவ்வளவு தெளிவான விளக்கத்திற்குப் பிறகும் 47:24 கூறுவது போல் தங்கள் இருதயங்களுக்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு இம்மதகுருமார்கள் பின்னால் கண்மூடிச் செல்கிறவர்கள், நாளை மறுமையில் தங்கும் இருப்பிடமாக நரகத்தை முன்பதிவு செய்து கொள்கிறார்கள். (33:66,67,68)
அன்பு வேண்டுகோள்!
எனவே அன்பார்ந்த சகோதர சகோதரிகளே நீங்கள் சுயமாகச் சிந்தித்து விளங்க எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்களைக் குறிப்பிட்டுள்ளோம். சோம்பல்படாமல், சிரமம் பாராமால், தன்னம்பிக்கை இழக்காமல், உள்ளத்தில் முன்னர் போட்டுக் கொண்ட பூட்டை கழற்றி தூர எறிந்து விட்டு, சுய சிந்தனையுடன் அல்குர்ஆனை எடுத்து நாம் இந்த ஆக்கத்தில் எடுத்தெழுதியுள்ள வசனங்கள் அனைத்தையும் ஒன்றுவிடாமல் நீங்களே படித்து விளங்க முற்படுங்கள். அவை நேரடியாகக் கூறும் கருத்துக்களே நீங்கள் எடுத்து நடக்க வேண்டியவை. 3:7 இறை வாக்கில் முஹ்க்கமாத் வசனங்கள் பற்றி இவ்வாறு தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்திற்கும் வெளிப்படையான பொருளும் உண்டு. அந்தரங்கமான பொருளும் உண்டு. அலிஃபுக்கே ஆயிரம் அர்த்தங்கள் உண்டு என இம்மதகுருமார்கள் சுயநலத்துடன் கூறுவதைப் புறக்கணியுங்கள். குருகுல மடமான மதரஸாக்களில் தங்கி, உண்டு, உறங்கி காலம் கழித்தவர்களே அல்குர்ஆனை விளங்க முடியும் என்ற இந்த மதகுருமார்களின் ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யையும் தூக்கி எறியுங்கள்.
எழுதப் படிக்கத் தெரியாத கைநாட்டுப் பேர் வழியாக, பாமரனாக இருந்தாலும் பிறர் படிக்கக் கேட்டு விளங்கும் அளவில் அல்குர்ஆன் எளிதாக்கப்பட்டுள்ளது என்று அல்லாஹ் எண்ணற்ற இடங்களில் கூறி இருப்பதை உறுதியாக நம்புங்கள். ஏமாற்றியே பிழைக்கும் இம்மதகுருமார்களை முற்றிலும் புறக்கணியுங்கள். குர்ஆன், ஹதீஸைப் பற்றிப் படியுங்கள். அதுவே இவ்வுல கிலும் மறு உலகிலும் நிரந்தர வெற்றியைப் பெற்றுத் தரும்.
இவை எதுவுமே எமது சுய கருத்துக்கள் அல்ல; மதகுருமார்களைப் போல் எமது கற்பனை கட்டுக்கதைகளை மார்க்கமாக அவிழ்த்து விடவில்லை. அனைத்திற்கும் அல்குர்ஆன் ஆதாரங்களையே எடுத்துத் தந்துள்ளோம். இப்போது உங்களுக்கு அல்குர்ஆனுடன் நேர டித் தொடர்பு ஏற்பட்டு விட்டது. 18:29 கூறுவது போல் விரும்புகிறவர்கள் நம்பி ஏற்று நடந்து வெற்றி பெறலாம். விரும்புகிறவர்கள் நிராகரித்து தோல்வி அடையலாம்.
எமது கருத்துக்கள் தவறு என்று குர்ஆன், ஹதீஸ் மூலம் எடுத்துக் காட்டப்பட்டால் தவ்பா செய்து மீளத் தயார்!
இந்த ஆக்கத்தில் குறை காண்கிறவர்கள், ஏற்றி எண்ணப்பட்ட இமாம்கள், மேதைகள், அல்லாமாக்கள், அவுலியாக்கள் போன்றோர் கடந்த 1000 வருடங்களாக கட்டி எழுப்பிய கொள்கைக்கு மாற்றமானது; பெரியார்கள், நாதாக்கள் போன்றோரை இழிவுபடுத்துவது என்று கூறி அப்பாவி மக்களை ஏமாற்றாமல், அபூ அப்தில்லாஹ் மவ்லவி அல்ல; அவருக்கு அரபி மொழி தெரியாது; குர்ஆன் வசனங்களைத் தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்று பொத்தாம் பொதுவாகக் கூறி மக்களை ஏமாற்றாமல், இந்த வசனத்திற்கு இதுதான் பொருள்; இப்படித் தவறாக மொழி பெயர்த்துள்ளார் என்று புள்ளி விபரத்துடன் எடுத்துக் காட்டினால், அவை சரியாக இருந்தால், உடன டியாக தவ்பா செய்து எமது போக்கை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம்.
அதற்கு மாறாக 2:134, 141 குர்ஆன் வசனங்களை நிராகரித்து, 2:170, 5:104, 7:28, 10:78, 21:53,54 31:21, 43:22,23,24, 37:69,70, 7:70,71, 12:40, 34:43, 53:23, 11:62,87, 14:10, 11:109 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முரணாக முன் சென்றவர்களைக் காரணம் காட்டி, முன்னோர்கள், பெரியார்கள், நாதாக்கள், அவுலியாக்கள், இமாம்கள், காட்டித் தந்ததுதான் நேர்வழி என வாதிடுவார்களேயானால் அதை நாம் பொருட்படுத்துவதாக இல்லை. காரணம் 6:153 சொல்வது போல் அல்லாஹ் காட்டியது தான் நேர் வழியே அல்லாமல், ஷைத்தானோ, ஷைத்தானின் நேரடி முகவர்களான தாஃகூத் எனும் மதகுருமார்களோ காட்டுவது ஒரு போதும் நேர்வழி ஆகாது. அவை கோணல் வழிகளே! எல்லாம் வல்ல அல்லாஹ் முஸ்லிம் சமு தாயத்தை இந்த மதகுருமார்களின் சூன்ய, வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுவித்து 3:103 இறைக் கட்டளைப்படி அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து நேர்வழி நடக்க ஈருலகிலும் வெற்றி பெற அருள் புரிவானாக.