M.ஜமாலுத்தீன்,
நாகர்கோவில்,
9894932446
அன்பான முஸ்லிம் சகோதர சகோதரிகளே, உங்கள் கவனத்திற்கு, நாம் நமது அறிவைப்
பயன்படுத்தாமல் நம் தலைவர்களையும், இமாம்களையும், அமைப்பு அமீர்களையும் பின்பற்றி
வருகிறோம், இது சரியா? அல்லாஹ் தனது நெறிநூலில் நம்மை சிந்திக்கச் சொல்கிறான்.
மறுமையில் அல்லாஹ்விடம் தன்னந் தனியாக நிற்கும்போது இமாம்களோ, தலைவர்களோ, அமீர்களோ
நமக்காக பரிந்து பேச முடியாது. அல்லாஹ் கூறுகிறான்.
மனிதர்களே, உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள்.
அவனையன்றி (வேறு எவரையும்) பொறுப் பாளர்(களாக்கி கொண்டு அவர்)களை பின்பற் றாதீர்கள்.
நீங்கள் குறைவாகவே சிந்திக்கிறீர்கள். (அல்குர்ஆன் 7:3)
நிச்சயமாக இது உபதேசம் ஆகும். ஆகவே எவர் விரும்புகிறாரோ அவர் தம்முடைய இறைவனிடம் (செல்லும்
இவ்) வழியை எடுத்துக் கொள்வாராக! (அல்குர்ஆன் 73:19) மேலும் எவர்கள் நம்முடைய
வழியில் முயற்சிக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை நம்முடைய நேரான வழிகளில் நாம்
செலுத்து வோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோருடனேயே இருக்கிறான். (அல்குர்ஆன்
29:69)
இவ்வளவு சொல்லியும் நாம் திருந்தவில்லை. கடைசியில் நமது நிலைப் பற்றி அல்லாஹ்
கூறுகிறான்.
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப்படும் அந்நாளில் “ஆ, கைசேதமே! அல்லாஹ்வுக்கு
நாங்கள் வழிபட்டு இருக்க வேண்டுமே! இத்தூதருக்கும் நாங்கள் கட்டுப் பட்டிருக்க
வேண்டுமே என்று கூறுவார்கள். எங்கள் இறைவா நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும்,
எங்கள் பெரியவர்களுக்கும் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டார்கள்
என்றும் கூறுவர். எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனை யைத் தருவாயாக!
அவர்களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக! என்றும் கூறுவர். (அல்குர்ஆன்:
33:66,67,68)
அன்பு சகோதர சகோதரிகளே இன்று நம்முன் இருக்கும் பிரச்சனை என்ன தெரியுமா? ரமழான்
பிறையும், ஷவ்வால் பிறையும் தான். நமது தமிழகத்தில் மூன்று பிறை உண்டு என மூன்று
தரப்பினரும், இல்லை இல்லை அதற்கு முன் ஒரு பிறை உண்டு, அதுதான் முதல் பிறை என்றும்,
கூறி மக்களை திணரவைத்து விட்ட னர். எதைப்பற்றியும் கவலைப்படாத நம் மக்கள் நமக்கு
எடுத்துச் சொல்ல நமது ஜமாத் உள்ளது. அதையே நாம் பின்பற்றுவோம் என்ற முடிவில் இவர்கள்
இருக்கிறார்கள். அல்லாஹ் கூறுகிறான்.
மேலும் அல்லாஹ் இறக்கி வைத்த இ(ந் நெறிநூ)லைப் பின்பற்றுங்கள் என்று அவர்களிடம்
கூறப்பட்டால் அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்களை எதன் மீது கண்டோமோ அதையே
நாங்களும் பின்பற்று கிறோம் என்று கூறுகிறார்கள். என்ன? அவர்க ளுடைய மூதாதையர்கள்
எதையும் விளங்காத வர்களாகவும் நேர்வழி பெறாதவர்களாகவும் இருந்தால் கூடவா? (அல்குர்ஆன்
2:170)
அல்லாஹ் இறக்கி அருளிய (நெறிநூ)லின் பாலும் இத்தூதரின்பாலும் வாருங்கள், என
அவர்களுக்குக் கூறப்பட்டால், எங்களுடைய மூதாதையர்களை நாங்கள் எ(ந்த மார்க்கத்)தில்
கண்டோமோ அதுவே எங்களுக்குப் போது மானது என்று அவர்கள் கூறுகிறார்கள். என்ன?
அவர்களுடைய மூதாதையர்கள் ஒன்றும் அறியாதவர்களாகவும், நேர்வழி பெறாதவர் களாகவும்
இருந்தாலுமா? (அவர்களைப் பின் பற்றுவார்கள்) (அல்குர்ஆன் 5:104)
அல்லாஹ் இறக்கி வைத்த(நெறிநூல்)தை நீங்கள் பின்பற்றுங்கள் என அவர்களுக்குச்
சொல்லப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! நாங்கள் எங்கள் மூதாதையர்களை எதில் கண்டோமோ
அதைத்தான் நாங்கள் பின் பற்றுவோம் என்று கூறுகிறார்கள். அவர்களை ஷைத்தான் கொழுந்து
விட்டெரியும் (நரக) நெருப்பின் வேதனையின் பக்கம் அழைத்தா லுமா (பின்பற்றுவர்)? (அல்குர்ஆன்
31:21)
உலமா சபைக்கும், உலமாக்களுக்கும் ஒரு கேள்வி, நாம் பார்க்கும் பிறை இன்றைய
தேதிக்குள்ள பிறையா? நாளைய தேதிக்குள்ள பிறையா? மஃக்ரிபில் தெரியும் பிறை உதிக்கும்
பிறையா? மறையும் பிறையா? பிறை மேற்கில் உதிக்குமா? கிழக்கில் உதிக்குமா? உங்கள்
கூற்றில் உறுதியுடன் நீங்கள் இருந்தால் குர்ஆனுக்கும் ஹதீசுக்கும் மாற்றம்
இல்லாதிருந்தால் ஒரு பொது மேடையில் வாருங்கள். மக்கள் மன்றத்தில் விவாதம் செய்து
மக்களை நேர்வழியில் நடத்துங்கள், இல்லையேல் மக்களை விட்டு விடுங்கள், அவர்கள்
குர்ஆனை அணுகி நேர்வழியில் செல்வார்கள்.
மேலும் எவர்கள் நம்முடைய வழியில் முயற்சிக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை
நம்முடைய நேரான வழிகளில் நாம் செலுத்து வோம். நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்வோ
ருடனையே இருக்கின்றான். (அல்குர்ஆன் 29:69)
ஜம்மியத்துல் அஹ்லில் குர்ஆன் வல்ஹதீஸ் (JAQH) அமைப்பின் நிர்வாகிகளே, தலைவர்களே,
நீங்கள் கூறும் பிறைப் பற்றி நீங்களே முரண்பட்டிருக்கிறீர்கள். மூன்று வருடத்திற்கு
முன் அப்போதைய மாநில துணைத்தலைவர் செய்யது அலி பைஜீ அவர்கள் வெளியிட்ட நோட்டீஸ்,
19.8.2011 அன்று கோட்டாறில் வெளியிட்ட நோன்பு பெருநாள்JAQH அமைப்பின் நிலைபாடு
என்ற நோட்டீசுக்கு முரணாக உள்ளது. உலகில் எங்கிருந்தாயினும், பிறை பற்றிய செய்தி
வந்தால் அதை ஏற்று நோன்பு நோற்கலாம். பெருநாள் கொண்டாட லாம் எனக் கூறும் நீங்கள்
மற்ற எந்த நாடும் நமக்கு முன் பிறை அறிவிப்பு செய்தால் ஏற்கா மல் சவுதி அரேபியா
செய்திக்காக காத்திருப்ப தன் நோக்கம் என்னவோ? அல்லாஹு அஃலம்.
.8.2011 அன்று
கோட்டாறில் வெளியிட்ட நோட்டீசில் பிறையை பார்த்து நோன்பு வையுங்கள். பிறையைப்
பார்த்து நோன்பை விடுங்கள். இந்த ஹதீசில் பிறை என்ற அரபி பதம் எங்கிருக்கிறது
என்றும் இன்னும் ஹதீஸில் மேகமூட்டம் என்ற அரபி பதம் எங்கிருக்கிறது என்றும் (மூபுஞக்ஷி)
அமைப்பில் உள் ளவர்களே கேள்வி வைக்கிறார்கள். உங்கள் பதில் என்ன? மேலும் அந்த
நோட்டீசில் இதுவே பிறை வியத்தில் குர்ஆன் ஹதீஸை
அடிப்படையாகக்கொண்டுJAQH அமைப்பு தமிழகம் முழுவதும் பின்பற்றி வரும் நிலைப் பாடாகும், இதற்கு மாற்றமாக
யாராவது செயல்பட்டால் அவருக்கும் நமது அமைப்புக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று
எழுதப் பட்டிருந்தது. அப்படியானால் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கும் மேலாக
ஏர்வாடிJAQH ஜமாஅத்தினர் அனைவருமே ஹிஜ்ரா காலண்டர் அடிப்படையில் முதல் நாளில்
நோன்பு நோற்று முதல் நாளில் பெருநாள் கொண்டாடி வருகிறார்களே. அவர்கள் அனைவரும்
JAQH அமைப்பிற்கு சம்மந்தமில்லாதவர்களா? மேலும் சென்னை மண்டலJAQH-ன் செயலாளர்
AMG. மசூத், மாநிலJAQH-ன் செயலாளர் இமாம் உசைன், மற்றும் கோவை
ஜலீல், பாம்பன் JAQH ஜமாஅத்தினர்களும் ஹிஜ்ரி காலண்டர் அடிப்படையிலே பின்பற்றி
வருகிறார்களே இவர்களுக்கும்JAQH அமைப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லையா?
மேலும்JAQH-ன் முன்னாள் மாநிலத்தலைவர்
S.கமாலுதீன் அவர்கள் தாயிகள்
கூட்டத்தில் பிறை விஷயத்தில் என்னுடைய நிலைபாடு கணக்குத் தான் என்று
பகிரங்கப்படுத்தினார். தற்போது அவருடைய நிலைபாடு என்ன? இல்லை குமரி மக்களை
ஏமாற்றுகிறீர்களா? மாநிலத்திற்கு ஒரு சட்டம், வட்டத்திற்கு ஒரு சட்டமா? உங்கள்
கூற்றில் உறுதியிருந்தால் ஒரு பொது மேடையில் வாருங்கள், குர்ஆன் ஹதீஸின்
அடிப்படையில் விவாதம் செய்து மக்களை தெளிவுபடுத்துங்கள். இல்லையேல் மக்களை விட்டு
விடுங்கள். அவர்கள் குர்ஆன் பக்கம் நெருங்கட்டும்.
சுன்னத்துல் ஜமாத் தலைவர்களே, இமாம்களே நீங்கள் சொல்லுங்கள், பிறை பார்ப்பது பிறை
செய்தியை அறிவது என்ற நமது முறை சரிதானா? கேரளாவில் பிறை பார்த்தால் தமிழ்
நட்டுக்குப் பொருந்தாது, குமரியில் பிறை கண்டால் சென்னைக்குப் பொருந்தாது என்றெல்லாம் கூறி மக்களை தடுமாற்றத்தில் விட்டு விடுகிறீர்களே? இது ஹதீஸ் மட்டும்
போதும் என்பதைப் போல் இருக்கிறதே. குர்ஆன் கூறும் பிறைகளின் கணக்கை ஏற்க வேண்டாமா?
அல்குர்ஆன் 10:5, 55:5, 2:189, 6:96, 13:2, 21:33, 36:38,39,40, 9:36 இந்த
வசனங்களிலெல்லாம் அல்லாஹ் பிறைகளைப் பற்றி பேசுகிறானே? இவையயல்லாம் நாம் எடுக்க
வேண்டாமா? பெரும்பாலானோர் பின்பற்றுவதால் இது சரியென்று கூறமுடியுமா?
பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால், அவர்கள் உம்மை
அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். வெறும் யூகங்களைத்தான் அவர்கள்
பின்பற்றுகிறார்கள், இன்னும், அவர்கள் அனுமானம் செய்பவர்களே தவிர வேறில்லை.
(அல்குர்ஆன் 6:116)
இதற்கு உங்களின் பதில் என்ன? நீங்கள் கூறும் பிறை வியங்கள் குர்ஆன், ஹதீஸிற்கு
முரண்பாடு இல்லாத பட்சத்தில் நீங்கள் மக்களுக்கு தெளிவுபடுத்தத் தயாரா? அப்படியானால் ஒரு பொது மேடைக்கு வாருங்கள், விவாதம் பண்ணுங்கள், நல்ல தீர்ப்பை மக்களுக்குக்
கொடுங்கள், மக்களை சங்கடப்படுத்தாதீர்கள்; அவர்களை விட்டு விடுங்கள், அவர்கள் குர்
ஆனைப் படித்து நேர்வழிப் பெறுவார்கள்.
TNTJ சகோதரர்களே, தலைவர்களே, நிர்வாகிகளே, மாவட்டத்திற்கு மாவட்டம் பிறை
பார்க்க வேண்டும் என்று சொல்லும் நீங்கள் மூன்றாவது பிறைதான் முதல் பிறை என்று மக்களுக்கு சொல்லுவதன் மூலம் மக்களும் அதை நம்பி உங்களை பின்பற்றி வருகிறார்கள். இது
சரிதானா?
அன்பார்ந்த சகோதர சகோதரிகளே, சுயமாக சிந்திக்க வேண்டாமா? மேற்கில் முதல்
பிறை பிறக்குமா? இன்று பார்க்கும் பிறை இன்றைய பிறையா? நாளைய பிறையா? முதல் பிறை
மூன்று நாள் தோன்றுமா? பிறை பார்த்து நோன்பு வையுங்கள் என்ற ஹதீஸில் பிறை என்ற அரபி
பதம் உள்ளதா? என்றும் மேக மூட்டம் என்ற அரபி பதம் உள்ளதா என்றும் ஹிஜ்ரி
கமிட்டியினர் கேட்கிறார்கள். எல்லா விஷயத்திற்கும் விவாதத்திற்கு அழைக்கும் நீங்கள்
ஹிஜ்ரி கமிட்டியுடன் எழுத்து மூலமாக இணைய தள விவாதத்திற்கு தயாரா? உங்கள்
எல்லோருக்கும் தெரியும், பிறை ஒன்றுதான், ரமழான் ஒன்றில் தான் நோன்பு நோற்க வேண்டும்,
ஷவ்வால் ஒன்றில்தான் பெருநாள் கொண்டாட வேண்டுமென்று தெரிந்திருந்தும், மூன்றாவது
நாளில் நோன்பு நோற்று மூன்றாவது நாளில் பெருநாள் கொண்டாடி வருகிறீர்கள்.
மேற்கூறிய நான்கு சாராரையும் கூறி பயனில்லை. மக்களுக்கு சரியான தெளிவில்லை, குர்ஆனை
திறந்து பார்க்க எந்த மக்களும் தயாராக இல்லை. யார் எதைச் சொன்னாலும் தலையை ஆட்டி
நான்கு பெருநாள் கொண்டாட மக்கள் தயார். இனியாவது தலை நிமிர்ந்து நிற்போம்.
முஸ்லிம்களே, குர்ஆனை நெருங்குவோம், நேர்வழி கிடைக்கும். இனியும் இந்த நிலை தொடர
வேண்டாம். அழைப்போம் நமது தலைவர்களையும், இமாம்களையம், நமது அமீர்களையும், ஒன்று
கூட்டுவோம், ஒரே மேடையில். குர்ஆனையும், ஹதீஸையும் வைத்து விவாதம் பண்ணச் சொல்லுவோம்.
அப்பொழுது தெரியும், யார் எதை மறைத்தார்கள் என்று, நம்மை ஏமாற்றிய கூட்டம் எது
என்று.
அல்லாஹ் எந்தவொரு சமுதாயத்தையும், அவர்களுக்கு அவன் நேர்வழிகாட்டிய பின் அவர்கள்
தவிர்த்துக் கொள்ள வேண்டியவை களை அவர்களுக்கு தெளிவுபடுத்தும்வரை வழி கெடுப்பவனாக
இல்லை. நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருள்களையும் அறிந்தவன்.
(அல்குர்ஆன் 9:115)
ஹிஜ்ரி கமிட்டி ஆஃப் இந்தியா என்ற கூட்டு முயற்சி காலண்டர் வெளியீட்டாளர்களே, உங்கள்
கூற்றில் நீங்கள் உண்மையை நிரூபிக்க குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தைக் கொண்டு ஒரு பொது
மேடையில் விவாதிக்க இன்ஷா அல்லாஹ் தயாரா? மக்களை தெளிவுபடுத்த நீங்கள் தயாரா?
அப்படியாயின் உடனே தயாராகுங்கள். ஒரு நாளைக் குறிப்போம். அன்றைய தினம் பொது
மேடையில் விவாதம் செய்யலாம். நிச்சயமாக அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக!
இறைவனின் தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் (கருத்து) வேறுபாடு
கொண்டு பிரிந்து விட்டார்களோ, அவர்களைப் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்.
அத்தகையோருக்கு கடுமையான வேதனை யுண்டு (அல்குர்ஆன் 3:105)
ஆரம்பத்தில் மனிதர்கள் ஒரே கூட்டத்தின ராகவே இருந்தனர். பிறகு (நன்மை செய்வோருக்கு)
நன்மாராயம் கூறுவோராகவும் (தீமை செய்வோருக்கு) அச்சமூட்டி எச்சரிப்போராக வும்
அல்லாஹ் நபிமார்களை அனுப்பி வைத்தான். அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும் கருத்து
வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய நெறிநூலையும் இறக்கி
வைத்தான். எனினும் அ(ந்நெறிநூல்)தைக் கொடுக்கப்பட்டவர்களே அவர்களிடம் தெளிவான
ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும்
உண் மையிலிருந்து எதில் அவர்கள் மாறுபட்டிருந்தார்களோ, அதன் பக்கம் தன் அருளினால்
அல்லாஹ் நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழிகாட்டினான். இவ்வாறே அல்லாஹ் தான் நாடியோரை
நேர்வழியில் செலுத்துகின்றான்.
(அல்குர்ஆன் 2:213)
நம்பிக்கையாளர்களே! தீயவன் எவனும் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் அதைத்
தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள். (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு
சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம். பின்னர் நீங்கள் செய்த வைப் பற்றி
நீங்களே கைசேதப்படுபவர் களாக (கவலைப் படுபவர்களாக) ஆவீர்கள்.
(அல்குர்ஆன் 49:6)
எவருடைய மனதையும் நோகடிக்க வேண் டும் என்பது நம்முடைய எண்ணம் அல்ல. சத்தியம் வெளிவர
வேண்டும். பிளவுபட்டு கிடக்கும் நமது சமுதாயத்தை குர்ஆனைக் கொண்டு ஒன்றிணைக்க
வேண்டும் என்பதே இந்த வெளியீட்டின் நோக்கம்