தொடர்ச்சி…
அன்று கணினி கணக்கு இல்லாததால் பிறை பார்க்கும் கட்டாயம் இருந்தது; இன்று அந்தக்
கட்டாயம் இல்லை!
14. பிறையைப் பற்றியும் சூரியனைப் பற்றியும் திருகுர்ஆன் வசனங்களின் எண்களைக் கூறி
நீங்களும் குறித்துக் கொண்டு போய் தமிழ் விரி வுரையை எடுத்துப் பாருங்கள். இவை அனைத்
தும் விஞ்ஞானத்தை எடுத்துக் கூறுகிறது என்று நான் கூறியதாகக் கூறி நீங்கள்
அளித்துள்ள பதிலில் அதைத்தான் நாமும் கூறுகின்றோம். சர்வதேச பிறை என்ற தலைப்
பிறைக்கும் இந்த வசனங்களுக்கும் என்ன சம்பந்தம்? எந்தவித சம்பந்தமுமில்லையே! இந்த
வசனங்களின் கருத்துக்கு யாரும் மறு கருத்துக் கூற முடியாது. இதில் யாருக்கும்
கருத்து வேறுபாடும் இல்லை. இவர் கூறிய வசனங்கள் எதுவும் சர்வதேச பிறை அல்லது
தலைப்பிறையைப் பற்றி கூறவில்லை. மாறி மாறி வரும் அவைகளின் நிலைகளைப் பற் றியே
கூறுகின்றன என்று உங்களின் கற்ப னையை நாம் சொன்னதாகத் திரித்து எழுதி மக்களை
நீங்கள் ஏமாற்றி இருக்கிறீர்கள். நாம் கூறியது இதுதான்:
நாம் குறிப்பிட்ட வசனங்கள் விஞ்ஞானத்தை எடுத்துக் கூறுகின்றன என்றோ சர்வதேச பிறை
பற்றியோ தலைப்பிறை பற்றியோ கூறுகின்றன என்றோ கூறவில்லை. தலைப்பிறையைக் கண்ணால்
பார்த்து மட்டுமே மாதத்தைத் தீர்மானிக்க வேண்டும் என்று மவ்லவிகளாகிய நீங்கள் அனை
வரும் ஏகோபித்து ஒட்டுமொத்தமாகக் கோரஸ் பாடுகிறீர்களே. சந்திரனின் ஓட்டம் மனிதக்
கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்றதா? அதற்கு மாறாக அல்லாஹ்வின் முழுக்
கட்டுப்பாட்டில், துல்லிய கணக்கின் அடிப்படையில் சுழல்கின்றதா? மனிதக் கண்கள் அதில்
பட்டாலும் படாவிட்டாலும் அது ஒரு வினாடி கூட நிற்காமல் சதா சுழன்று
கொண்டிருக்கின்றது என்பதைக் குறிப்பிட்ட வசனங்களைப் படித்துப் பார்த்து விளங்கிக்
கொள்ளுங்கள் என்றே சொன்னோம். குர்ஆன் மொழி பெயர்ப்பைப் பார்க்கச் சொன்னோமே அல்லாமல்
நீங்கள் எழுதியுள்ளது போல விரிவுரையைப் பார்க்கச் சொல்லவில்லை.
நீங்களோ இந்த வசனங்களின் கருத்துக்கு யாரும் மறு கருத்து கூற முடியாது. இதில்
யாருக்கும் கருத்து வேறுபாடும் இல்லை என்று எழுதிவிட்டு, சந்திரனின் ஓட்டம் மனிதக்
கண்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறது. மனிதக் கண் பட்டால்தான் ஓடும்; கண் படாதவரை
நிற்கும், சந்திரனின் ரீமோட் கண்ட்ரோல் மனிதக் கண்கள். எனவே கண்ணில் படுவதே முதல்
பிறை எனக் கூறி உங்களுக்கு நீங்களே முரண்படுகிறீர்கள்.
15. அல்லாஹ் தஆலா குர்ஆனில் தலைப்பிறையைப் பற்றி என்ன கூறுகின்றான்? என்று பார்ப்போம் என்று எழுதி உங்கள் அரபி புலமையை(?) காட்டி குர்ஆனிலே யஸ்அலுனக அனில் ஹிலால்
என்று ஒருமையில் கூறாது யஸ் அலுனக அனில் அஹில்லா என்று பன்மையாக கூறுவதின் மூலம்
உலகம் முழுவதும் ஒரே நாளில் தலைப் பிறை வராது என்பதை வல்ல நாயன் அல்லாஹு தஆலா நமக்கு
தெளிவாக்கி விட்டான் என்று பிதற்றியுள்ளீர்கள்.
முன்னர் ததஜ தலைமை இமாம்(?) 2:185 வசனத்தில் “”எவர் (ரமழான்) அம்மாதத்தை அடைகிறாரோ”
என்று ஒரே நேரத்தில் அல்ல ஒரு நாளின் 24 மணி நேரத்திற்குள் அடைவதைக் கூறும்
வசனத்தில் 2 நாள், 3 நாள் அடையலாம் என சுய விளக்கம் கூறி அவரது பக்தர்களை
வழிகெடுத்தாரோ அதேபோல் அஹில்லாவுக்கு தலைப்பிறை இரண்டு நாள், மூன்று நாள் வரலாம் என
சுய விளக்கம் கொடுத்து உங்களை நம்பியுள்ளவர்களை வழி கெடுக்கிறீர்கள்.
2:189 குர்ஆன் வசனம் என்ன கூறுகிறது பாருங்கள். பிறைகள் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறும்: “”அவை மக்களுக்குக் காலம் காட்டுபவையாகவும், ஹஜ்ஜை அறிவிப்பவையாகவும் உள்ளன….. (2:189)
உங்களது கூற்றுப்படி அஹில்லா-பிறைகள் அனைத்தும் தலைப்பிறையையே குறிக்கின்றன என்றால்
அவை எப்படி காலம் முழுக்கக் காட்டும்? எப்படி துல்ஹஜ் பிறை 8லிருந்து பிறை 13 வரை
இடம் பெறும் ஹஜ்ஜை அறிவிக்கும்? மவ்லவிகளாகிய நீங்கள் இப்படித்தான் குர்ஆன்
வசனங்களின் அர்த்தங்களை அனர்த்தமாக்கி 7:55 குர்ஆன் வசனத்திற்கு முரணாக
சப்தமிட்டுச் செய்யும் கூட்டு துஆவை செயல்படுத்துகிறீர்கள் 7:205 இறைவாக்குக்கு முர
ணாக தரீக்காக்களில் சப்தமிட்டு கூட்டுத் திக்ரை நடைமுறைப்படுத்துகிறீர்கள். 7:3,
2:186, 50:16 இறைவாக்குகளுக்கு முரணாக அல்லாஹ்வுக்கும் அவனது அடியானுக்கும் இடையில்
இடைத்தரகர் களாக-புரோகிதர்களாகப் புகுகிறீர்கள், 3:103,105, 6:153,159, 30:32,
42:13,14 குர்ஆன் வசனங்களுக்கு முரணாகச் சமுதாயத்தை மத்ஹபுகள், தரீக்காக்கள்,
மஸ்லாக்கள், இயக்கங்கள் போன்ற எண்ணற்ற பிரிவுகளாகப் பிரித்து சமுதாயத்தை சின்னாப்
பின்னப்படுத்தி நாயிலும் கேடான ஒரு நிலையை உருவாக்கி இருக்கிறீர்கள். இதற்கெல்லாம்
ஒரு அடிப்படைக் காரணம் சமுதாயத்தை 21:92, 23:52 குர் ஆன் வசனங்களுக்கு முரணாக
ஆலிம்-அவாம் எனப் பிளவுபடுத்தி, மற்ற அனைத்து மதங்களிலுமுள்ளது போல் 5 சதவீதமும்
தேறாத மதகுருமார் களாகிய நீங்கள் 95 சதவிகித மக்களை நீங்கள் இழுத்த இழுவைக்கெல்லாம்
ஆட வைக்கிறீர்கள்.
இதற்கெல்லாம் இன்னொரு அடிப்படைக் கார ணம் சுமார் 50 குர்ஆன் வசனங்களுக்கும் மேலாக
கடமையான மார்க்கப் பணியை வயிற்றுப் பிழைப்பாக ஆக்கக் கூடாது, அப்படி வயிற்றுப்
பிழைப்பாக ஆக்குகிறவர்கள் நேர்வழியில் இருக்க மாட்டார்கள் என்று 36:21 இறைவாக்கும்,
அப்படி மார்க்கப் பணியை பிழைப்பாகக் கொள்வதால் ஏற்படும் பாதகங்கள் அனைத்தையும்
விலாவாரியாகச் சொல்லும் சுமார் 50க்கும் மேற்பட்ட குர்ஆன் வசனங்களையும் நிராகரித்து
குர்ஆன் மூலம் ஹராமாக்கப்பட்ட ஹராம்கள் அனைத்தையும் விட மெகா மெகா ஹராமான முறையில்
2:174 இறைவாக்கு சொல்வது போல் மதகுருமார்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறு
எதையும் உட்கொள்ளவில்லை. நாளை மறுமையில் இந்த மதகுருமார்களோடு அல்லாஹ் பேசவும்
மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்த வும் மாட்டான். அவர்களுக்கு துன்புறுத்தும்
வேதனையுண்டு என மிகக் கடுமையாக எச்சரித்திருந்தும், ஹராமான உணவின் காரணமாக,
18:57-ல் இறை வன் கடுமையாக எச்சரிக்கும் நிலைக்கு ஆளாகி இருக்கிறீர்கள்; அது வருமாறு.
எவன் தன் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு அறிவுரைக்கப்பட்டும் அவற்றைப் புறக்கணித்து
தன்னிரு கரங்களும் செய்த குற்றங்களை மறந்து விடுகிறானோ அவனை விடப் பெரிய
அக்கிமக்காரன் எவன் இருக்கிறான்? நிச்சயமாக நாம் அவர்களுடைய இரு தயங்களின்மீது
இவற்றை விளங் கிக் கொள்ளா தவாறு திரைகளையும், அவர்க ளுடைய செவிகளில் செவிட்டுத்
தன்மையையும் ஏற்படுத்தி இருக்கிறோம். ஆதலால் நீர் அவர்களை நேர்வழியின் பால்
அழைத்தாலும் அவர்கள் ஒரு போதும் நேர்வழியடையமாட் டார்கள்.
(அல்கஃபு 18:57)
(மேலும் : பார்க்க 47:25, 7:175-179, 2:159-162, 6:157, 45:23, 4:27, 5:48)
பிறை சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் ஒரேயயாரு ஹதீஸிலாவது கண்ணால் பார்த்து என்றோ மேக
மூட்டம் என்றோ இல்லாத நிலையில் நீங்கள் வலிய கண்ணால் பார்த்து என்றும் மேகமூட்டம்
என்றும் உங்கள் சுய கருத்துக்களைப் புகுத்தி அர்த்தத்தை அநர்த்தமாக்கி பிறை
துல்லிய கணக்கின்படி அல்லாஹ்வின் முழுக்கட்டுப்பாட்டிலிருக்கிறது என்று பல குர்ஆன்
வசனங்கள் இருந்தும் அவை அனைத்தையும் நிராக ரித்துப் புறக்கணித்து அற்ப
கிரயத்தை-சம்பளத்தை குறிக்கோ ளாகக் கொண்டிருக்கும் மதகுருமார்களாகிய நீங்கள் நாளை
மறுமையில் தப்ப முடியுமா? (பார்க்க: 9:9,34, 11:19, 31:6, 2:41,79, 3:188, 5:62,
6:21, 11:18)
நபி(ஸல்) “”லாநக்துபு வலா நஹ்ஸுபு” என்று சொல்வது போல் அன்று துல்லிய கணக்கு முறையை
அல்லாஹ் வெளிப்படுத்தாத நிலையில் சூரியனைப் பார்த்து நேரத்தையும், பிறையைப் பார்த்து
மாதத்தையும் தீர்மானிக்கும் கட்டாயம் இருந்தது. அன்றைய நிலையில் அதில் தவறு ஏற்பட
வாய்ப்பும் இருந்தது என்பதை புகாரீ(ர.அ.)1959 ஹதீஸில் நோன்பு துறந்த பின் சூரியன்
மறையாமல் தெரிந்தது என்ற அறிவிப்பு உறுதிப்படுத்துகிறது. எனவே அன்று க்குடைய நாள்
இருக்கவே செய்தது. ஆனால் இன்று நூற்றுக்கு நூறு மிகமிகத் திட்டமாகத் துல்லியமாக
அறியும் அரிய வாய்ப்பை அல்லாஹ் கொடுத்திருப்பதால் அக்கணக் கீட்டைப் பயன்படுத்த
குர்ஆனிலோ, ஹதீஸிலோ அணுவத்தனையும் தடை இல்லை என்பதை உங்க ளின் ஆலிம் என்ற
அகந்தை-தற்பெருமை ஒருபோதும் ஒப்புக்கொள்ள விடாது.
16. தலைப்பிறை என்றால் எதற்குக் கூறப்படும் என்பதை குர்ஆன் ஹதீது மூலம் என்று கூறி
ஜனவரி 2000-ல் இவர் எழுதிய ஆதாரத்தைப் பார்ப்போமா? என்று எழுதி அதில் முக்கியமாக,
“”தலைப்பிறை என்றால் பிறை முழுமை யாக மறைக்கப்பட்டு அதாவது அமாவாசை ஏற்பட்டு
அதிலிருந்து விடுபட்டு வெள்ளைப் பிறைக் கீற்று தெரிய ஆரம்பித்துவிட்டால் தலைப்பிறை
பிறந்து விட்டது என்பதை குர்ஆன், ஹதீது மூலம் அறிந்து கொண்டோம்.
“”மார்க்கத்தில் பிறை பிறந்ததை அறிந்து நோன்பை ஆரம்பிக்க இரண்டு வழிமுறைகள்
ஷரிஅத்தில்
உண்டு என்பதை அவர்களும் ஒப்புக் கொண்டுள்ளனர். ஒன்று பிறையை கண்களால் நேரடியாகப்
பார்த்து அறிந்து கொள்வது. இன்னொன்று பிறை கண்ட தகவல் ஆதாரபூர்வமாக கிடைப்பதை
ஏற்றுக் கொள்வது.
நபி(ஸல்) காலத்தில் அந்தந்த ஊரில் பிறை பார்த்து நோன்பு வைத்ததால் வெவ்வேறு
நாட்களில் தான் நோன்பை ஆரம்பித்தார்கள் என்பது உண்மை தான் என்று ஜனவரி 2000-ல்
அந்நஜாத்தில் எழுதியதைக் காட்டி நீங்கள்,
உலகத்தில் வெவ்வேறு நாட்களில் நோன்பு இன்னும் பெருநாள் கொண்டாடியதை நபி(ஸல்) அவர்களே
தடுக்கவில்லை. அனுமதித்தார்கள் என்பதை இவர் தெளிவாக ஒப்புக்கொண்டுவிட்டு பிறகு
அதற்கு மாற்றமாக “காலத்திற்கு தக்க மாறலாம்’ என்று கூறுகின்றாரே! இது நபி(ஸல்)
அவர்களை அவ மதித்ததாக ஆகாதா? மாற்றும் உரிமை இவருக்கு எங்கிருந்து கிடைத்தது? என்று
கேட்டிருக்கிறீர்கள்.
எமது பதில்: நாம் முன்னரே விளக்கியது போல் நாம் சூஃபிஸம், மத்ஹபு, தப்லீக் இப்படி
ஒவ்வொன்றாக விளங்கி அவற்றிலிருந்து விடுபட்டோம். 2000-ல் தத்தம் பகுதி
தனித்தனிப்பிறை என்ற நிலையிலிருந்து தகவல் அடிப்படையில் உலகம் முழுக்க ஒரு பிறை
என்ற நிலைக்கே முன்னேறி இருந்தோம். கணினி கணக்கீட்டின் மூலம் பல ஆண்டுகளின் பிறைக்
கணக்கை முன்கூட்டியே கணக்கிட முடியும் என்ற நிலைக்கு அப்போது உயரவில்லை.
இந்த நிலையில் 1997 நவம்பர் அல்ஜன்னத் இதழில் அப்போதைய அதன் ஆசிரியர் இப்போதைய ததஜ
இமாம்(?) பல அமர்வுகள், பல அறிஞர்கள் தொடர்ந்து ஆய்வு செய்து ஒப்புக்கொண்டு
அறிவித்த உலகம் முழுக்க ஒரே பிறை அதாவது சர்வதேச பிறை என்று அறிவித்ததற்கு மாறாக
அல்மூபீன் நவ. டிச.99 இதழில் சர்வதேச பிறையை மறுத்து தத்தம் பகுதிப் பிறை என பல்ட்டி
அடித்து எழுதி இருந்ததற்கு மறுப்பாக சர்வதேச பிறையை நிலைநாட்டி எழுதப்பட்டதே
அந்நஜாத் 2000 ஜனவரி இதழில் இடம் பெற்றவை. அப்போது பிறை பற்றிய கணினி கணக்கீட்டைப்
பற்றி உறுதியான தெளிவு நமக்கு இருக்கவில்லை என்பது உண்மைதான்.
அறியாமையிலும், வழிகேட்டிலும் இருந்த ஒருவன் அதிலிருந்து கரையேறி நேர்வழிக்கு
வருவது தவறில்லை. அந்நஜாத்தின் ஆரம்ப காலங்களில் 1986களில் நாமும் தத்தம் பகுதி பிறை
தலைப்பிறை என்ற நம்பிக்கையில் தான் இருந்தோம். அதிலிருந்து கரையேறி சர்வதேச பிறை
என்ற நிலைக்கு உயர்ந்தது 1995-1996களில்தான். இதுபற்றி 1996 பிப்ரவரி இதழ் பக்கம்
6-ல் பிறை பற்றிய அறிவிப்பும் பக்கம் 7-ல் பிறை பற்றிய அறிவிப்பின் விளக்கம் என்றும்
தெளிவு படுத்தியுள்ளோம். தகவல் அடிப்படையில் சர்வதேச தலைப்பிறை என்பதில் உறுதியாக
இருந்தோம். அந்த அடிப்படையில்தான் ததஜ இமாம்(?) 97 நவம்பரில் ஒப்புக்கொண்ட சர்வதேச
தலைப்பிறை என்ற நிலையிலிருந்து பல்டி அடித்து கீழிறங்கி 47:25 சொல்வது போல்
புறங்காட்டிச் சென்று மீண்டும் தத்தம் பகுதி பிறை என்று தாழ்ந்த நிலைக்குச் சென்றதை
விமர்சித்துத்தான் ஜனவரி 2000-ல் எழுதப்பட்டது.
கோணல் வழிவிட்டு நேர்வழிக்கு வருவது வரவேற்கத் தக்கதே. அல்லாஹ் அதை மிகவும்
விரும்புகிறான். அதற்கு மாறாக நேர்வழிக்கு வந்த பின்னர் கோணல் வழிக்குச் செல்வதுதான்
மிகமிகக் கண்டிக்கத் தக்கது. இது “”முர்த்தத்” என்ற நிலைக்குத் தள்ளிவிடும். இதை
குர்ஆன் முஹம்மது 47:25 வசனம் தெளிவாகக் கூறுகிறது.
நிச்சயமாக, எவர்கள் நேர்வழி இன்ன தென்று அவர்களுக்குத் தெளிவான பின், புறங்காட்டிச்
செல்கிறார்களோ, (அவ்வாறு போவதை) ஷைத்தான் அழகாக்கி, (அவர்களுடைய தவ றான
எண்ணங்களையும்) அவர்களுக்குப் பெருக்கிவிட்டான் (47:75).
எனவே தகவல் அடிப்டையில் சர்வதேச பிறையை ஒப்புக்கொண்ட பின்னர் முதுகைத் திருப்பிக்
கொண்டு மீண்டும் தத்தம் பகுதி பிறைக்குக் கீழிறங்கி அல்மூபீனில் எழுதப்பட்டவைக்கு
மறுப் பாகத்தான் அந்நஜாத் 2000 ஜனவரியில் எழுதினோம். அன்று கணினி கணக்கீட்டு முறையை
முழுமையாக அறியாதிருந்ததால் சில குறைபாடுகள் அதில் இருப்பதை நாம் மறுக்கவில்லை.
அன்று அப்படி எழுதிவிட்டோமே! அதை எப்படி மறுப்பது என்று அவற்றிற்கு சப்பைக் கட்டு
கட்ட முற்பட்டால் நாமும் 47:25 குறிப்பிடும் பட்டியலில் சேரும் துர்பாக்கிய நிலை
ஏற்பட்டுவிடும். அல்லாஹ் அந்த நிலையை விட்டு நம்மைக் காப்பானாக. ஆயினும் உலகளாவிய
அளவில் ஒரு நாள் 24 மணி நேரத்திற்குள் ஜுமுஆ தொழுவதைப் போல் நோன்பு ஆரம்பிப்பதும்,
பெருநாளில் தொழுவதும் இடம்பெற வேண்டும் என்பதில் 2000-லும் மாற்றுக் கருத்து இல்லை.
2011லும் மாற்றுக் கருத்து இல்லை.
17. ஒரு மாதம் 29 வந்தால் மறு மாதம் 30 என்று கூறாமல், மாதம் என்பது 29 நாட்கள்
அல்லது 30 நாட்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் கூற்று கணித்து நிர்ணயம் செய்யக் கூடாது
என்ற தெளிவைத் தரவில்லையா? என்று கேட்டிருக்கிறீர்கள்.
எமது பதில்: நபி(ஸல்)
அவர்களின் காலத்திற்கு முன்னரே இருந்த ஹிந்துக்களின் பஞ்சாங்கம், யூதர்களின்
பஞ்சாங்கப்படி கணித் துக் கூறுவதை நாம் ஒரு போதும் சரி காண வில்லை என்று பலமுறை
எழுதிவிட்டோம். உங்கள் அறிவில் உறைக்காதது ஆச்சரிய மில்லை.
கணினி கணக்கீட்டின்படி எந்த மாதம் 30-ல் முடிகிறதோ அதை 30 என்றும், 29-ல் முடிகிறதை
29 என்றும் உறுதியாக சொல்ல முடிகிறதே அல்லாமல் தோராயமாகச் சொல்லப்படுவதில்லை. அன்று
போல் இன்று 29-ல் முடியுமா? 30-ல் முடியுமா? என்ற சந்தேகமோ, சச்சரவோ, கருத்து
வேறுபாடோ ஏற்பட வழியே இல்லை. திட்டமாகக் கூற முடிகிறது. கணக்கீடு சரியாக
இருக்கப்போய்த்தான் பல வருடங்களுக்குப் பின்னர் இடம் பெறும் சூரிய, சந்திர
கிரகணங்களை இப்போதே சொல்லி அவை நூற்றுக்கு நூறு சரியாக நடைபெறுவதை உலக மக்கள்
அனைவரும் பார்க்கிறார்கள்.
18. உலகத்தில் வெவ்வேறு நாட்களில் நோன்பு இன்னும் பெருநாள் கொண்டாடியதை நபி (ஸல்)
அவர்களே தடுக்கவில்லை, அனுமதித் தார்கள் என்பதை இவர்கள் தெளிவாக ஒப்புக் கொண்டு
விட்டு, பிறகு அதற்கு மாற்றமாக “காலத்திற்கு தக்க மாறலாம்’ என்று கூறுகின் றாரே? இது
நபி(ஸல்) அவர்களை அவமதித்த தாக ஆகாதா? மாற்றும் உரிமை இவருக்கு எங்கிருந்து
கிடைத்தது? என்று கேட்டிருக்கிறீர்கள்.
நமது விளக்கம்: நாம் கூறியுள்ளதைத் திரித்து எழுதி உங்கள் முகல்லிதுகளை ஏமாற்ற
முற்பட்டிருக்கிறீர்கள். நபி(ஸல்) இருந்த மதீனாவில் வெவ்வேறு நாட்களில் நோன்பு
இன்னும் பெருநாள் கொண்டாடியதை நபி(ஸல்) தடுக்காதிருந்தார்களா? நபி(ஸல்) அவர்கள்மீது
எவ்வளவு பெரிய பழியைச் சுமத்துகிறீர்கள்? ஒரே ஊரில் வெவ்வேறு நாட்களில் நோன்பு
இன்னும் பெருநாள் கொண்டாடக்கூடாது. சமுதாயம் பிளவுபடக்கூடாது என்ற உறுதியான நம்
பிக்கையில் தானே மாதம் 29 நாட்கள், 30 நாட்கள் எனச் சச்சரவிட்டுப் பிளவுபடாதீர்கள்.
பார்த்து முடிவு செய்யுங்கள் என்றார்கள். அல்லது மதீனாவில் இருந்து கொண்டு இன்றுபோல்
மக்காவில் நடப்பதை தொலைக்காட்சி மூலம் பார்த்தும் வேறு நாளில் கொண்டாடுவதைத்
தடுக்காமல் இருந்தார்களா? சொல்லுங்கள். அறிவோடு பேச முற்படுங்கள். அறிவீனமாகப் பேசி
அறிவிலி பட்டம் வாங்காதீர்கள். பக்கத்து பக்கத்து ஊர்களில் என்ன நடக்கிறது என்பதை
இன்று அறிவது போல் அன்று அறியும் வசதி இருந்ததா? இல்லையே? இந்த நிலையில் பக்கத்து
ஊரில் என்ன நடக்கிறது என்று தெரியாம லேயே எப்படித் தடுக்க முடியும் என்ற அற்ப
அறிவும் உங்களிடம் இல்லையா? அன்று அவரவர்கள் ஊர் களில் நடப்பது அவர்கள் மட்டுமே
அறிந்த வியம். இன்றோ ஒரு குக்கிராமத்தில் நடப்பது உலகம் முழு வதும் அறியும் நிலை.
வேறுபாடு தெரிகிறதா? தெரிய வில்லையா? எதார்த்தத்தில் நபி(ஸல்) அவர்களை அவமதிப்பது
நீங்களா? நாமா?
19. அன்றைய காலத்தில் மதினாவிலிருந்தவர் கள் மக்காவில் என்றைக்கு அரபா என அறிந்து
கொண்டு நோன்பு இருக்கவில்லை. தாங்களா கவே பிறை பாத்தே தீர்மானித்தார்கள் என்பது
உண்மைதான் என்று ஜனவரி 2000-ல் அந் நஜாத்தில் எழுதியதை எடுத்துக்காட்டி, 9 நாட் கள்
இடைவெளியில் மக்காவிலிருந்து எத்த னையோ நபர்கள் மதீனா வந்து இருப்பார்களே.
அவர்களிடம் கேட்டு அல்லது செய்தி அறிய ஒரு நபரை மக்காவிற்கு அனுப்பி விபரம்
தெரிந்திருக் கலாமே? அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் செய்ய வில்லையே. இதற்கு என்ன பதில்?
என்று கேட்டிருக்கிறீர்கள்.
எமது விளக்கம் : இவ்வுலக வாழ்க்கை பரீட்சை வாழ்க்கை என அல்லாஹ் 67:2, 5:48, 6:165,
11:72 போன்ற குர்ஆன் வசனங்களில் கூறி இருப்பதோடு, 22:78, 4:28, 5:6 வசனங்களில்
மார்க்கத்தில் எவ் வித சிரமமில்லை என்று கூறியிருப்பதோடு, 2:233, 286, 6:152, 23:62
போன்ற இறைவாக்குகளில் எந்த ஆத்மாவையும் சக்திக்கு மீறி சோதிப்பதில்லை என்றும் கூறி
இருக்க பெரும் சிரமப்பட்டு மக்காவிலிருந்து யார் வந்தார்கள் என்று தேடுவதையோ,
சிரமப்பட்டு மதினா விலிருந்து மக்கா போய் வருவதையோ அல்லாஹ் விதித்திருப்பானா?
சொல்லுங்கள். அரஃபா தினத்தை அறிய 9 நாள்கள் அவகாசம் இருக்கிறது. நோன்பு ஆரம்பிக்க
ஒரு நாள் கூட அவகாசமில்லையே? அதற்கு என்ன செய்திருக்க முடியும் சொல்லுங்கள்.
மேலும் சந்திரனின் ஓட்டத்தைத் துல்லியமாகக் கணக்கிட்டு பல வருடங்களின் ரமழான்
ஆரம்பிப்ப தையும், பெருநாள் தினங்களையும் இன்றே முன் கூட்டியே அறிந்து எவ்வித
சிரமும் இல்லாமல் எளி தாகச் செயல்பட அல்லாஹ் வசதி ஏற்படுத்தித் தந்தி ருந்தும்
அல்லாஹ்வின் இந்த அருளைப் புறக் கணித்துவிட்டு, என்று நோன்பு ஆரம்பம், என்று
பெருநாள் என்று இறுதி நாள் வரை மக்களைப் பரிதவிக்கவிட்டு சிரமப்படுத்துவது அல்லாஹ்
கட்டளையிட்டதா? நபி வழியா? சொல்லுங்கள்.(பார்க்க 22:78)
சவுதியில் குர்ஆன் ஹதீஸுக்கு முரண்பட்ட சில அம்சங்கள் காணப்பட்டாலும், மற்ற முஸ்லிம்
நாடுகளைவிட அதிகமாக
ஷரீஅத் சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதை யாராலும் மறுக்க முடியாது.
எனவே இந்த பிறை விஷயத்தில் அவர்களது முடிவை ஹஜ் கிரிகைகளுக்கு உலக முஸ்லிம்கள் ஏற்று
நடப்பது போல் ரமழான் பிறை விஷயத்திலும் அவர் களது முடிவை ஏற்று நடப்பதில் தவ்ஹீத்
மவ்லவிகள் என்ன குற்றத்தைக் கண்டார்கள் என்று 2000-ல் நாம் எழுதி இருப்பதை எழுதி
சவூதி பிறையை கண்ணை மூடி பின்பற்ற வேண்டும் என்று எழுதி விட்டு தற்போது கணித்து
முடிவு செய்வதுதான் சரி என்கிறாரே ஏன் தடுமாற்றம்? சவூதியை பின்பற்ற குர்ஆன் ஹதீஸ்
ஆதாரம் உண்டா? ஊருக்கு உபதேசமா? என்று கேட்டிருக்கிறீர்கள். அத்துடன்,
20. பிறையைப் பார்த்து தீர்மானிப்பதாக இருந்தாலும் கணித்துத் தீர்மானிப்பதாக
இருந்தாலும் வெளியிலிருந்து கிடைக்கும் செய்தியைக் கொண்டு தீர்மானிப்பதாக இருந்
தாலும் அப்படி முடிவு செய்யும் உரிமை உங்க ளுக்கு உண்டு. வீண் சண்டை சச்சரவை தவிர்த்
துக் கொள்ளுங்கள் என்றே (நீங்கள் நோன்பு என்று முடிவு செய்யும் நாளில் தான் நோன்பு
என் ஹதீஸின் மூலம்) விளங்க முடிகிறது என்று அன்று 2000-ல் எழுதியதைச் சுட்டிக்
காட்டி நீங்கள் எழுதி இருப்பதாவது:
இதன்மூலம் நபி(ஸல்) இந்த சமுதாயத்தில் நோன்பு பெருநாளை அறிய மூன்று வழிகள் கூறி
யிருக்க இவர் முதலில் சவூதியை பின்பற்றினார். பிறகு பார்க்காது கணித்து முடிவு
செய்ய வேண்டும் என்றும் தற்பொழுது சச்சரவை தீர்க்க விஞ்ஞான அடிப்படையில்
கணிக்கப்பட்ட கணக்கை ஏற்க வேண் டும் என்றும், இதற்கு மாறு செய்பவர்கள் 33:66. 67.68
வசனத்தின் பிரகாரம் காஃபிர்கள், நரகவாதி கள் என்று கூறினாரே? 2000 ஜனவரி அந்நஜாத்
ஆசிரியருக்கும் இவரின் இந்த கூற்றுப் பொருந் தும்தானே என்று கேள்வி
எழுப்பியுள்ளீர்கள்.
மேலும் பிறை சச்சரவை தீர்க்க 3 வழிகளை நபி(ஸல்) அவர்கள் தெளிவாக கூறியிருக்கிறார்கள்
என்று 2000 ஜனவரியில் ஒப்புக் கொண்டவர், தற்பொழுது அதற்கு மாறாக தான் ஒரு புதுவழியை
கூறி இதற்கு மாற்றம் செய்பவர்களை காஃபிர்கள் நரகவாதிகள் என்று கூறினால், நபி(ஸல்)
அவர்க ளின் தெளிவான சொல்லுக்கு யார் மாற்றம் செய்து வழிகேட்டில் உள்ளார் என்பதை நாம்
புரிந்து கொள் ளலாம் என்று எழுதியுள்ளீர்கள்.
எமது விளக்கம்:
முதலில் அப்பட்டமான ஒரு பொய்யைக் கூறி உங்கள் முகல்லிதுகளுக்கு
கொம்பு சீவி விட்டுள்ளீர்கள். எந்த இடத்திலும் அல்லாஹ்வின் கட்டளைக்கும் நபி(ஸல்)
அவர்களின் நடைமுறைக் கும் யார் மாறாக நடக்கிறார்களோ அவர்கள் காஃபிர் கள், நரகவாதிகள்
என்று 33:66, 67,68 வசனங்கள் கூறுவதை கூறி இருப்போமே அல்லாமல், நாம் சொல்லுவதற்கு
மாறு செய்கிறவர்கள் 33:66,67, 68படி காஃபிர்கள், நரகவாதிகள் என்று ஒருபோதும் சொல்ல
மாட்டோம். இது நீங்கள் எம்மீது சொல்லும் அப்பட்டமான அவதூறாகும்; அல்லது நாம் சொல்லி
யிருப்பதைத் தவறாகப் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
அடுத்து இஸ்லாத்தில் பிரிவுகள் இல்லை; முஸ் லிம்களை எந்த நிலையிலும் பிளவுபடுத்தக்
கூடாது; அப்படி பிளவு படுத்துவது 21:92, 23:52, 3:103,105, 6:153, 159, 30:32,
42:13,14 போன்ற எண்ணற்ற குர்ஆன் வசனங்களுக்கு முற்றிலும் முரணான மிகமிகக் கொடூரமான
செயல் என்பதை நாம் திட்ட மாகத் தெளிவாக எப்போது அறிந்து கொண்டோமோ அதன் பின்னரே
1983லிருந்து எமது இந்த பிரச்சார பணியை ஆரம்பித்தோம். பிளவுகளை ஏற்படுத்தும்
ஆலிம்-அவாம் வேறுபாடு, மத்ஹபுகள், தரீக்காக்கள், மஸ்லக்கள், இயக்கங்கள் இவை
அனைத்தையும் கடு மையாக விமர்சிக்க ஆரம்பித்தோம். இவற்றைத் தூக் கிப் பிடிக்கும்
கூலிக்கு மாரடிக்கும் புரோகித வர்க்கத்தை மிகமிகக் கடுமையாக விமர்சித்து அவர்களை
மக்க ளுக்கு அடை யாளம் காட்ட முற்பட்டோம். காரணம் இப்புரோகிதர்களின் பிடியிலிருந்து
மக்கள் விடுபடாத வரை மக்கள் வெற்றி பெற முடியாது என்பதை, குர்ஆன் கூறும் முன்னைய
நபிமார்களுக்குப் பின்னர் அச்சமுதாயங்களில் திருட்டுத்தனமாகப் புகுந்து மக் களை
வழிகெடுத்து நரகில் தள்ளும் மதகுருமார்களின் வரலாறுகளைப் படித்துப் பார்த்த பின்னரே
திட்டமாக அறிந்து கொண்டோம்.
சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க குர்ஆன், ஹதீஸ் கூறும் நேரடிக் கருத்துக்களை
அப்படியே எடுத்து வைக்கிறோம். அதற்கு மாறாக சமுதாயத்தைப் பிளவுபடுத்தி அதன் மூலம்
ஆதாயம் அடைவதையே குறிக்கோளாகக் கொண்ட மார்க்கம் அனுமதியாத ஷைத்தானின் ஏஜண்டுகளான
மதகுருமார்களையே மிக வன்மையாகச் சாடுகிறோம்.
மார்க்க மேதைகள் என்று சொல்லிக் கொண்டு இவர்கள் கொடுக்கும் மேல் விளக்கங்கள்
(Explanations) விரிவுரைகள்
(Interpretations) குர்ஆன், ஹதீஸ் கூறும் அதே கருத்தை
வலியுறுத்துவதாக இருந்தால் ஏற்க லாம். குர்ஆன், ஹதீஸ் நேரடிக் கருத்துக்களை திரித்து
வளைத்து மறைப்பதாக இருந்தால் அது 2:159, 160, 161,162 இறைக் கட்டளைகள்படி கொடிய
ஹராம் என்றே கூறுகிறோம். அல்லாஹ்வுடைய தூதர் சொன் னதை மறைத்து வேறு விளக்கம்
கொடுப்பதாக இருந் தால் இவர்கள் அல்லாஹ்வுடைய தூதரின் அந்தஸ் துக்கு மேல்
அந்தஸ்துடையவர்களாக இருக்க வேண் டும். அல்லாஹ் சொல்லியுள்ளதை மறைத்து மேல் விளக்கம்
இவர்கள் கொடுப்பதாக இருந்தால் இம்மத குருமார்கள் அல்லாஹ்வை விட உயர்ந்த அந்தஸ்து
டையவர்களாக இருக்க வேண்டும். (நவூது பில்லாஹ்) இந்த நிலை 42:21, 49:16 இறைக் கட்டளை
கள்படி கொடிய ஹராம்-குற்றம் என்றே கூறுகிறோம். குர்ஆனிலும், ஹதீஸிலும் இப்படி
தங்களின் சுய கருத்துக்களைப் புகுத்தியே சமுதாயத்தை எண்ணற்றப் பிரிவுகளாகப்
பிரித்து சமுதாயத்தை சீரழிய வைத் திருக்கிறார்கள்.
அன்றும் இன்றும்!
நபி தோழர்களுடைய காலத்தில் அவர்களின் அழகிய நடைமுறைகளால் ஈர்க்கப்பட்டே மக்கள் சாரை
சரையாக இஸ்லாத்தைத் தழுவினர். அதற்கு நேர்மாறாக இன்றைக்கு இந்த முஸ்லிம் மதகுருமார்களின், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் முஸ்லிம்களின் கேடுகெட்டப் பழக்க
வழக்கங்களைப் பார்த்தே இஸ்லாத்தைத் தழுவ விரும்புகிறவர்களும் வெருண்டோடுகிறார்கள்.
ஆக இந்த மதகுருமார்களின் குர்ஆன், ஹதீ ஸுக்கு முரணான சுய விளக்கங்கள் மாற்றாரை இஸ்
லாத்தைத் தழுவ விடாமல் வெருண்டோடச் செய்வது டன், ஓரளவு சிந்திப்பவர்களை
நாத்திகத்தில் சிக்கவும் வைக்கின்றன. முஸ்லிம்களையும் எண்ணற்றப் பிரிவுகளில் சிக்க
வைத்துள்ளன. பல இறைவாக்கு கள் கூறும் சமுதாய ஒற்றுமையையே ஒரே மாறா இலட்சியமாகக்
கொண்டு நாம் செயல்படுவதால், அதற்கு இடையூறாக இருக்கும் மார்க்கத்தை வயிற் றுப்
பிழைப்பாகக் கொண்டுள்ள மவ்லவிகளை மிக மிகக் கடுமையாகச் சாடுகிறோம். சமுதாய ஒற்றுமை
யைக் கருத்தில் கொண்டு குர்ஆன், ஹதீஸ் நேரடிப் போதனைகளுக்கு முரணில்லாதவற்றில் நடை
முறையிருப்பவற்றை ஆதரிக்கிறோம்; சரி காண்கிறோம்.
அந்த அடிப்படையில் 2000-ல் தத்தம் பகுதிப் பிறையிலிருந்து தகவல் பிறை என்ற
அடிப்படையில் படி ஏறியிருந்ததால், அதற்கமைய எமது கருத்துக்கள் இருந்தன என்பதை
ஒப்புக் கொள்கிறோம். அன்று நாம் எடுத்தெழுதிய “”நீங்கள் முடிவு செய்யும் நாளில் தான்
நோன்பு; நீங்கள் முடிவு செய்யும் நாளில்தான் பெருநாள்” என்று காணப்படும் ஹதீஸ்
கடுமையான ஆய்வுக்குப்பிறகு ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல என்று கூற நாம் வெட்கப்படமாட்டோம்.
17:36 இறைக்கட்டளைப்படி உறுதியாகத் தெரியாத நிலையில் ஒன்றை எடுத்து நடக்க முடி யாது.
புகாரீ, வியாபாரம் பாடத்தில் “”சந்தேகமானதை விட்டு சந்தேகமற்றதின்பால் சென்றுவிடு”
என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸ் இருக்கிறது. இந்த அடிப்படையில் அந்நஜாத்தில்
சரியான ஹதீஸ் என்று செயல்படுத்தச் சொன்ன சில ஹதீஸ்களை மீள் ஆய்வுக்குப் பிறகு
பலகீனமானது என்று எழுதி யிருக்கிறோம். உதாரணமாக முன்னர் தொழுகை இருப்பில்
விரலாட்டும் ஹதீஸ்களை சரிகண்டு எழுதிய பின்னர் உங்கள் மத்ஹபு, தரீக்கா
மதரஸாவிலிருந்து வந்த விரலாட்டும் ஹதீஸ்கள் பற்றிய விமர்சனங் களை நடுநிலையோடு ஆய்வு
செய்து ஏற்கத்தக்க ஹதீஸ்கள் அல்ல என்று தெளிவுபடுத்தி இருக்கிறோம். புரோகித
மவ்லவிகள் சொல்லி நாம் கேட்பதா? என்று இறுமாப்புக் கொள்ளவில்லை. மனிதர்களில் யாராக
இருந்தாலும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதை மீண்டும் மீண்டும்
சொல்கிறோம்.
அதனால்தான் எம்மையோ அந்நஜாத்தையோ ஒருபோதும் தக்லீது செய்யக்கூடாது என்று வன்மை யாகக்
கண்டித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறோம். நாம் இதுவரை அந்நஜாத்தில் எழுதி வருவது தவறு;
குர்ஆன் ஹதீஸுக்கு முரணானது என்று மனிதர் களில் யாருடைய சுயவிளக்கமோ (சிமுஸ்ரீயிழிஐழிமிஷ்லிஐவி)
விரிவுரையோ (தஃப்ஸீர்-ணூஐமிerஸ்ரீreமிழிமிஷ்லிஐ) இன்றி நேரடி குர்ஆன் வசனத்தையோ,
ஆதாரபூர்வமான ஹதீ ஸையோ தந்துவிட்டால் உடனடியாக அதை ஏற்று எம்மைத் திருத்திக்
கொள்ளவும், அல்லாஹ்விடம் மன்னிப்புக்கேட்டு மீளவும் தயாராக இருக்கி றோம். இது நமது
எஜமானனான அல்லாஹ்வின் மீது ஆணை.
மேலும் அன்று 2000-லும் எந்த முடிவை எடுத்தாலும் முஸ்லிம்கள் அனைவரும் ஒன்றுபட்டு
அந்த முடிவின்படி செயல்படுங்கள் என்றே வலி யுறுத்தி இருக்கிறோமே அல்லாமல் மூன்று
பிரிவு களாகப் பிரிந்து செயல்பட மார்க்கம் அனுமதிக்கிறது என்று நாம் கூறவில்லை.
அன்று நபி(ஸல்) அவர் களது காலத்தில் வெவ்வேறு ஊர்களில்தான் வெவ் வேறு நாட்களில்
நோன்பும், பெருநாளும் இடம் பெற்றன. ஆனால் கைசேதம் இன்றோ ஒரே ஊரில் மட்டுமல்ல ஒரே
குடும்பத்தில் கூட 3 நாள் நோன்பு ஆரம்பம், 3 நாள் பெருநாள் என அவிழ்த்து விட்ட
நெல்லிக்காய் மூட்டையிலிருந்து சிதறும் நெல்லிக் காய்களாக ஆகிக் கொண்டிருக்கிறார்கள்
முஸ்லிம்கள்!
சிதறியுள்ள இந்த சமுதாயத்தை மீண்டும் இறைக்கட்டளைப்படி ஒன்று சேர்க்க தத்தம் பகுதி
பிறை வழிவகுக்குமா? அன்றைய இரவின் தகவல் பிறை வழி வகுக்குமா? அல்லது முன்னரே
கணக்கிட்டு நாட்களல்ல, மாதங்கள் அல்ல, வருடங்களுக்கு முன்னரே தெரிய வரும் தலைப்பிறை
வழி வகுக் குமா? சொல்லுங்கள். சமுதாய ஒற்றுமையைக் குறிக் கோளாகக் கொண்டவர்களுக்கு
கணக்கீட்டின்படி யுள்ள பிறையை ஏற்பதில் ஒருபோதும் தயக்கம் இருக் காது. சமுதாயத்தை
எண்ணற்றப் பிரிவுகளாக்கி அற்ப உலக ஆதாயம் அடையும், அல்லாஹ்வுக்காகச் செய்யவேண்டிய
மார்க்கப் பணியை காசுக்காகச் செய் யும் மவ்லவிகளான மதகுருமார்களுக்குக் கணக்
கீட்டின்படியுள்ள பிறை எட்டிக்காயாகக் கசக்கும் என்பதில் ஐயமுண்டா? சொல்லுங்கள்.
தத்தம் பகுதிப் பிறையில் குறைபாடுகள் சிரமங் கள் இருப்பது போல் 2000-ல் நாம் சொன்ன
தகவல் பிறையிலும் குறைபாடுகளும், சிரமங்களும் இருக் கத்தான் செய்கின்றன. அதையே
குறிப்பிட்டுள்ளீர் கள். அதனால்தான் எவ்வித குறைபாடோ, சிரமங் களோ இல்லாத,
முன்கூட்டியே அறிய முடிந்த கணக் கின்படியுள்ள பிறையை வலியுறுத்துகிறோம். இது
குர்ஆனுக்கோ, ஹதீஸுக்கோ முரணான செயல் அல்ல என்பதையும் தெளிவுபடுத்தி வருகிறோம்.
21. எளிமையான யாருக்குமே சிரமமேயில்லாத வழிமுறைகளைக் கூறிய நம்
ஷரிஅத்தின் சட்டத்தை,
தன் தவறான ஆய்வின் மூலம் அல்லாஹ்வும் அவனுடைய ரசூல்(ஸல்) அவர்க ளும் கூறாததை தன்
மனோ இச்சைக்கு அடி பணிந்து துணிந்து கூறி தானும் நேர்வழி தவறி மக்களையும் வழி தவறச்
செய்து, மக்கள் நல் அமல் புரிவதற்கு சிரமத்தையும் ஏற்படுத்தத் தான் முயல்கின்றாரோ
என்று எண்ணத் தோன் றுகின்றது என்று நீங்கள் எழுதியுள்ளீர்கள்.
எமது விளக்கம்:
உண்மை என்ன? திருடன் மற்றவர்களைத் திருடன் என்று சொல்வதுபோல் இருக்கிறது உங்கள்
கூற்று. 5:3, 33:36 இறைவாக்குகளும், வார்த்தையில் சிறந்தது அல்லாஹ்வின் நெறி நூல்,
நடைமுறையில் சிறந்தது நபி(ஸல்) அவர்களின் நடைமுறை; புதியவை அனைத்தும் வழிகேடுகள்;
வழிகேடுகள் அனைத்தும் நரகில் கொண்டு சேர்க்கும்” என்று உங்களைப் போன் றவர்கள்
அடிக்கடி சொல்லும் பிரபல்யமான ஹதீஸும், நபி(ஸல்) அவர்கள் இறுதி சமயத் தில்
வலியுறுத்திய “”உங்களை நான் வெள்ளை வெளேர் என்ற நிலையில் விட்டுச் செல்கிறேன். அதன்
இரவும் பகலைப் போன்றது. அழிந்து நாசமாகப் போகிறவனைத் தவிர வேறு யாரும் இதில்
வழிகெட்டுச் செல்லமாட்டான்” என்ற பிர பல்யமான ஹதீஸும் என்ன கூறுகின்றன?
நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின் வஹீ மூலம் பெற்ற மார்க்கத்தில் அணுவளவல்ல;
அணுவின் முனை அளவும் கூட்டவோ குறைக்கவோ முடியாது என்பதை உறுதியாக அறிவிக்க வில்லையா?
இந்த நிலையில், நபி(ஸல்) மரணித்து சுமார் 400 ஆண்டுகளுக்குப் பிறகு மார்க்கத்திற்கு
உட்பட்ட நிலையில் சு.ஜவாகிய நீங்கள் இஜ்மா, கியாஸ் என்றும் ததஜவினர் லாஜிக், பாலிஸி
என்றும் மார்க்கம் அல்லாத ஆலிம்-அவாம் வேறுபாடு, மத்ஹபுகள், தரீக்காக்கள், மஸ்லக்கள்,
இயக்கங்கள் போன்ற பித்அத்தான பெயர்களால் மார்க்கத்தில் உங்களின் கற்பனைகளைப்
புகுத்துவது, மதகுருமார்களாகிய உங்களின் ஆய்வின் மூலம், எளிமையான ஆலிம்-அவாம் என்ற
வேறுபாடு இல்லாமல் அனைவருக்குமே சிரமமே இல்லாத வழிமுறைகளைக் கொண்ட இஸ்லாமிய
ஷரீஅத்தின்
சட்டத்தை, நம்
ஷரீ அத்தின் சட்டம் என கற்பனை செய்து, உங்களதும், உங்களது ஆபாக்களதும்
மனோ இச்சைக்கு அடி பணிந்து துணிந்து அல்லாஹ்வும் அவனது ரசூல் (ஸல்) அவர்களும்
கூறாததைக் கூறி நீங்களும் வழி தவறி மக்களையும் வழிதவறச் செய்து, மக்கள் உரிய நாளில்
உரிய நல்லமல்களைச் செய்வதைத் தடுத்து, ரமழான் 3-ம் பிறையை முதல் பிறையாகக் கொண்டு
கடமையான 2 நோன்புகளை இழக்கச் செய்தும், நோன்பு பிடிக்க ஹராமான
ஷவ்வால் முதல் நாளில்
நோன்பு நோற்க வைத்தும் இவ்வுலகில் சிரமத்தையும், மனக்குழப்பத்தையும் ஏற்படுத்துவதோடு
மறுமையில் அவர்களை நரகில் தள்ளும் கொடிய செயலை செய்வது யார்? சொல்லுங்கள். நீங்களா?
நாமா?
மதகுருமார்களாகிய உங்கள் ஆபாக்களான யூதக் கைக்கூலிகள் குர்ஆனுக்கும் ஹதீஸுக்கும்
முற்றிலும் முரணாக ஹிஜ்ரி 400க்கு பிறகு கற்பனை செய்தவற்றை-மார்க்கமல்லாதவற்றை
மார்க்கமாக்கி அதை நம்
ஷரிஅத் சட்டம் எனக் கூறிக்கொண்டு அல்லாஹ் 4:112-ல் சொல்வது
போல் அந்தப் பழியை எம்மீது சுமத்துகிறீர்களே இது இறையச்சமுடையவர்களின் செயலா?
சொல்லுங்கள்.
நாம், வஹீ மூலம் பெற்ற மார்க்கத்திற்கு உட்பட்ட
ஷரீஅத் சட்டத்தில் அணுவளவல்ல அணுவின்
முனை அளவும் மாற்றம் செய்யக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதையே கடந்த 29
வருடங்களாக மக் கள் மன்றத்தில் எடுத்து வைக்கிறோம். ஆனால் 22:27-ல் அல்லாஹ் கூறும்
ஒட்டகத்தில் செல்வது ஹஜ் கடமைக்கு உட்பட்டதல்ல, அன்று சூரிய ஓட்டத்தைப் பார்த்து
நேரம் அறிந்தது தொழுகை கடமைக்கு உட்பட்டதல்ல, தூரத்துச் செய்தியை ஆள் நேரில் வந்து
சொன்னது மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என்பது போல் அன்று பிறையைப் பார்த்து மாதம்
பிறப்பதை அறிந்தது மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல எனத் தெள்ளத் தெளிவாகக் கூறிக்
கொண்டிருக்கிறோம்.
ஆனால் மதகுருமார்களாகிய உங்கள் ஆபாக்கள் நிலை எப்படி இருந்தது தெரியுமா? முதன் முதலாக ஒட்டகத்திற்குப் பதிலாக புதிதாகக் கண்டு பிடித்த வாகனத்தில் ஹஜ்ஜுக்குப் போவதை
மறுத்தார்கள். அவர்கள் மாறவில்லை. காலமே அவர்களை மாற்றி யது. முதன் முதலாக கடிகாரம்
கண்டு பிடிக்கப்பட்டு அதன் மூலம் நேரம் அறிந்து தொழ ஆரம்பித்த போதும் இப்படித்தான்
சூரியனைப் பார்ப்பது இபாதத்-வணக்கம் என ஓலமிட்டார்கள். அவர்கள் மாறவில்லை. காலமே
அவர்களை மாற்றியது.
இப்படி ஒவ்வொரு நவீன கண்டுபிடிப்பும் பயன்பாட்டுக்கு வரும்போதும், நபி(ஸல்) அவர்களது
காலத்தில் இருந்த நடைமுறையே மார்க்கம்-இபாதத்-வணக்கம் அதை மாற்றுவது குர்ஆன்,
ஹதீஸுக்கு மாற்றம் என உங்களின் ஆபாக்கள் ஒப்பாரி வைக்கத்தான் செய்தார்கள். அவர்கள்
மாறவில்லை. காலம்தான் அவர்களை மாற்றியது. இன்று இந்த பிறை பற்றி இவ்வளவு தெளிவாக
விளக்கியும், பிறை பார்ப்பது மார்க்கம் அல்ல; மாதம் பிறப்பதை அறிவது தான் மார்க்கம்.
அன்று பிறை பார்த்தது மாதம் பிறப்பதை அறிய ஒரு கருவி-சாதனமே அல்லாது அது
மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல என 3-ம் வகுப்பு மாணவன் விளங்குவது போல் விளக்கினாலும்,
அதை ஏற்கும் மனப்பக்குவம் மார்க்கம் கற்ற மேதைகள் என தற்பெருமை பேசும் உங்களைப்
போன்றோருக்கு ஒரு போதும் வராது. ஆயினும் காலம் உங்களை நிச்சயம் மாற்றும். நீங்களோ
அல்லது உங்களது வாரிசுகளோ இன்று பள்ளிகளில் தொழுகை நேர அட்டவணை என்று தகவல் பலகை
மாட்டியுள்ளதுபோல், நோன்பு கால அட்டவணை என்றும் தகவல் பலகை மாட்டத்தான் போகிறீர்கள்.
நபியுடைய காலத்தில் நபியுடைய பள்ளியில் இப்படி தொழுகை நேர அட்டவணை எனும் தகவல்பலகை
மாட்டப்படவில்லை என்பது உங்க ளுக்குத் தெரியுமா? இப்போது நீங்கள் அப்படி மாட்டியுள்ளது உங்களது
ஷரிஅத் சட்டப்படி குர்ஆன், ஹதீ ஸுக்கு முரண்தானே? பித்அத்தானே?
என்ன சொல்கிறீர்கள்?
ஒவ்வொரு நவீன கண்டுபிடிப்பின் போதும் நீங்கள் ஏன் இப்படி பயந்து ஆர்ப்பரிக்கிறீர்கள்?
குர் ஆன், ஹதீஸுக்கு முரண் என ஒப்பாரி வைக்கிறீர்கள் தெரியுமா? ஆம்! 2:146, 6:20
வசனங்களில் அல்லாஹ் சொல்வது போல் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட
மதகுருமார்கள் நேர்வழி, சத்தியம் இதுதான் என்பது அவர்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது
போல் நன்கு அறிவார்கள்.
எஜமானன் அல்லாஹ்வின் எண்ணற்றக் கட்டளைகளுக்கு முரணாக மக்களை ஏமாற்றி வயிறு
வளர்த்துக் கொண்டிருப்பதும் அவர்கள் நன்கு அறிந்த விஷயம் தான்.
அல்லாஹ்வின் கலாமான குர்ஆனில் விபரித் துள்ளபடிதான் அண்டசராசரங்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அல்லாஹ்வின் ஃபிஅல்-செய லில் கட்டுப்பட்டவை. எனவே அல்லாஹ்வின் கலா
மான சொல்லும் ஃபிஅலான செயல்களும் ஒரு போதும் முரண்படா. எனவே நவீன அறிவியல் கண்டு
பிடிப்புகள் தங்களின் தில்லுமுல்லுகளை, திருகு தாளங்களை அம்பலப் படுத்திவிடுமோ,
தங்களின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிவிடுமோ என்ற அச்சம் காரணமாகத்தான் ஒவ்வொரு
புதிய கண்டுபிடிப்பும் போதும் பயத்தால் அலறுகிறார்கள்.
ஆக மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மதகுருமார்கள் குர்ஆன், ஹதீஸ் சொல்லும்
மார்க்கத்தை குர்ஆன் ஹதீஸுக்கு முரணாக மார்க்கம் அல்லாததாக ஆக்கியும், குர்ஆன்,
ஹதீஸ் சொல்லாத மார்க்கம் அல்லாதவற்றை மார்க்கம் ஆக்கியும் இஜ்மா, கியாஸ், லாஜிக்,
பாலிஸியின் பெயரால் மத் ஹபுகள், தரீக்காக்கள், சூஃபிசம், மஸ்லக்கள், இயக் கங்கள்
போன்ற பித்அத்களால் மேலும் பலபல பித் அத்களைக் கற்பனை செய்து படு ஜோராக வயிறு
வளர்த்து வருகிறார்கள். இவர்களின் இந்த வழிகேட்டுச் செயல்களை எண்ணற்ற குர்ஆன்
வசனங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. ஆனால் மார்க்கம் கற்ற மேதைகள் என்று அபூ
ஜஹீலுக்கும் தாருந் நத்வா ஆலிம்கள் என பிதற்றிய ஜாஹில்களுக்கும் இருந்த அதே
ஆணவம்-தற்பெருமை இவர்களுக்கும் இருப்பதால் அன்று அவர்கள் அரபி மொழியில் தேர்ச்சி
பெற்றிருந்தும் குர்ஆனை விளங்க முடியாதது போல், இன்றும் இவர்களும் அரபி மொழி
ஓரளவாவது கற்றிருந்தும் குர்ஆனை விளங்கும் பாக்கியம் பெற மாட்டார்கள். அந்த
அடிப்படையில் தான் நீங்கள் மனோ இச்சைக்கு அடிபணிந்து குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக
நடந்து கொண்டு நாம் மனோ இச்சைக்கு அடிபணிந்து குர்ஆன், ஹதீஸுக்கு முரணாக நடப்ப தாகச்
சொல்கி றீர்கள். திருடன் மற்றவர்களைத் திருடன் என்று சொல்வது போல். (பார்க்க 4:112)
22. ஹஜ்ஜிற்கு சென்ற தனது கணவன் இறந்து போன செய்தியை போன் மூலம் உறுதியாகத் தெரிந்து
கொண்ட பின்னரும் “”இத்தா” இருக்க மறுத்து, தனது கணவர் கூடச் சென்றவர்கள் திரும்பி
வந்து நேரில் சொன்னதின் பின்னரே அக் காலத்தில் நடைபெற்றது போல் “”இத்தா” இருப் பேன்
என்று அடம் பிடிப்பது போலாகும். பாவ மாகும் என்று 2000-ல் நாம் எழுதியுள்ளதை
விமர்சித்து எமக்கு குர்ஆன், ஹதீஸ் சட்டம் தெரியவில்லை என மவ்லவி என்ற தற்பெரு மையை
வெளிப்படுத்தியுள்ளீர்கள்.
எமது விளக்கம்:
ஒருவன் பட்டுக்கோட்டைக்கு வழி கேட்டு மற்றவன் கொட்டப் பாக்குக்கு
விலை சொன்ன கதையாக இருக்கிறது உங்களின் ஆணவ விளக்கம்; வெளியூரில் கணவன் இறந்துவிட்ட
செய்தி உடன் தெரி யாமல் காலம் கடந்து தெரியவந்தால், மனைவி எப்படி “”இத்தா”
கடைபிடிப்பது என்ற கேள்வி இங்கு இல்லை.
கணவன் இறந்த செய்தி சுடச்சுட உடன் கிடைக்கிறது. ஆனால் தகவல் நவீன கருவியான தொலை
பேசி மூலம் கிடைத்துள்ளது. அந்தச் செய்தியை ஏற்காமல் அப்பெண் அன்றுபோல் ஆள் நேரில்
வந்து மரணச் செய்தியைச் சொல்ல வேண்டும் என்று அடம் பிடித்தால் அதை மவ்லவிகளாகிய
நீங்கள், அதுதான் நபியின் சுன்னத்து-ஆள் நேரில் வந்து தான் சொல்ல வேண்டும்
என்பீர்களா? அல்லது அன்று தொலைத் தொடர்பு வசதி இல்லாததால் ஆள் நேரில் வரும் கட்டாயம்
இருந்தது. ஆனால் இன்று தொலைத் தொடர்பு வசதி இருப்பதால், இறப்புச் செய்தியை உறுதி
செய்து கொண்டு மனைவி இத்தா இருக்க வேண்டும் என்பீர்களா? என்பது தான் எமது கேள்வி.
தும்பை விட்டு வாலைப் பிடிக்கும் உங்களின் அறிவீனத்தை எப்படி விளக்குவது?
அதைவிட அறிவீனமான ஒரு விளக்கத்தை தந்துள்ளீர்கள். அதாவது இத்தா விஷயம் தகவல் அறிந்து
செயல்படுவது. பிறை விஷயம் கண்ணால் பார்த்து செயல்படுவது. அதனால் இது மக்களை
ஏமாற்றும் தவறான உதாரணம் என்று பிதற்றி இருப்பதே நீங்கள் மக்களை ஏமாற்றும் செயலாகும்.
எப்படி என்று பாருங்கள்.
இத்தா இருப்பது மார்க்கம். அதற்குரிய இறப்புச் செய்தி வரும் முறை மார்க்கத்திற்கு
உட்பட்டதல்ல. செய்தி அன்று ஆள் மூலமும் வந்தது. இன்று தொலைத் தொடர்பு மூலமும்
வருகிறது. அதைப் போல் ரமழான் மாதம் பிறப்பதை அறிந்து நோன்பு நோற்பது மார்க்கம்.
ரமழான் மாதம் பிறப்பதை அறியத்தரும் கருவி மார்க்கத்திற்கு உட்பட்டதல்ல. அன்று
பிறையைப் பார்த்து மாதம் பிறப்பதை அறிந் தார்கள். இன்று கணினி கணக்கீட்டின் மூலம்
மாதம் பிறப்பதை அறிகிறோம். எது மார்க்கம்? எது மார்க்கம் இல்லை எனத் தெரியாமல்
பிதற்றி உங்களின் அறி வீனத்தை வெளிப்படுத்தாதீர்கள்.
23. முஸ்லிம்களாகிய நமக்கு நாட்காட்டியாக பிறை பார்ப்பதையே குர்ஆனும் நபிமொழி ஹதீ
தும் கூறுகிறது. சூரியனை மற்றவர்கள் நாட் காட்டியாக எடுத்து செயல்படுகிறார்கள்.
சூரிய னில் எப்படி மாற்றம் வராதோ அதைப் போல் அவர்களின் பண்டிகையும் மாறாது. உதார
ணமாக ஜனவரி மாதத்தை 29ல் முடித்து அடுத்த நாள் பிப்ரவரி முதல் தேதி என்றாலும் எந்தக்
குழப்பமும் ஏற்படப் போவதில்லை.
கிறித்துவர்கள் தங்கள் பண்டிகையின் தேதியை நிர்ணயித்துவிட்டார்கள். அதனால் அதில்
மாற்றம் ஏற்படாது.
பிறையில் வளரும், தேயும், மறையும் ஆக மூன்று நிலை உள்ளது. மேலே கூறிய ஜனவரி
உதாரணத்தைப் போல் நம் இஸ்லாமிய காலண்டரில் மாற்றம் செய்ய இயலாது. அவ் வாறு
மாற்றினால் பிறை காட்டிக்கொடுத்து விடும். இதனால் நிச்சயமாக 1, 2 நாட்கள் வித்தி
யாசம் ஏற்படுவது என்பது இறைவன் விதித்த நியதி. உலகம் முழுவதும் ஒரே நாளில் நோன்பு,
பெருநாள் வரவேண்டுமானால் நாமும் அவர்க ளின் சூரிய கணக்கிற்கு மாறவேண்டும். இது
குர்ஆன் ஹதீதிற்கு மாற்றம் என்று எழுதி உங்க ளின் அறியாமையை வெளிப்படுத்தி இருக்கிறீர்கள்.
பிறை பார்ப்பதையே குர்ஆனும் நபி மொழியையும் கூறுகின்றது என்று ஒரு பகிரங்கமான பொய்யைக் கூறியுள்ளீர்கள். அல்லது பிறை பார்ப்பதைச் சொல்லும் குர்ஆன் வசனத்தை எடுத்துக்
காட்டுங்கள். குர்ஆனில் 2:185 வசனத்தில் “”உங்களில் எவர் அம்மாதத்தில்
நுழைகிறாரோ(ஷஹித) அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றிருக்கிறதே அல்லாமல்
எவர் அம்மாதத்தின் பிறையைப் பார்க்கிறாரோ அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்று
இல்லவே இல்லை. குர்ஆனில் இல்லாத ஒன்றை இருப்பதாகக் கூறும் நீங்கள் எப்படிப்பட்ட
அநியாயக் காரர்-பொய்யர் என்பதைச் சுயமாகச் சிந்திக்கும் மக் கள் அறிவார்கள்.
உங்களைப் போன்ற மதகுருமார் கள் பின்னால் ஆட்டு மந்தைகள் போல் கண்மூடிச் செல்லும்
பெருங் கூட்டம் மட்டுமே உணர மாட்டார்கள்.
மாதம் பிறப்பதை அறிய அன்று பிறை பார்ப் பதைத் தவிர வேறு வழி இல்லாத நிலையில் மாதம்
29-ல் முடிகிறது இல்லை 30-ல் முடிகிறது என்ற சர்ச்சையையும், 2-ம் பிறை இல்லை, 3-ம்
பிறை என்ற சர்ச்சையையும் தீர்த்து சமுதாய ஒற்றுமை காக்க பிறை பார்க்கச்
சொல்லப்பட்டதே அன்றி பிறை பார்ப்பது இபதத்தோ-வணக்கமோ அல்ல. ஹதீஸிலும் மாதம்
பிறப்பதை அறிய ஏவப்பட்டுள்ளதே அல் லாமல் பிறை பார்ப்பதை வணக்கமாக ஏவப்பட வில்லை.
இதிலும் நீங்கள் பொய்யரே. குர்ஆன், ஹதீ ஸில் இல்லாததை இருப்பதாகச் சொல்லும் அநியாயக்
காரரே. (பார்க்க. 6:21,157, 7:37, 10:17, 11:18, 16:105, 39:32, 51:10,77:15 )
சூரியனை நாள்காட்டியாக உலகில் எவருமே எடுக்கவில்லை-நாம் வசிக்கும் பூமியின்
சுழற்சியை வைத்து நாளும், பூமி சூரியனைச் சுற்றி வருவதை வைத்து வருடமும்
கணக்கிடப்படுகிறது. இதிலும் உங்கள் அறியாமையே வெளிப்படுகிறது. மேலும்
சூரியக்கணக்கில் மாற்றம் இல்லை, ஆனால் சந்திரக் கணக்கில் மாற்றம் இருக்கிறது
என்பதும் உங்களின் அறியாமையே. சூரியக் கணக்கில் நான்கு வருடங் களுக்கு ஒருமுறை ஒரு
நாளைக் கூட்ட வேண்டிய நிலையும் சுமார் 100 வருடங்களுக்கு ஒரு முறை ஒரு நாளைக்
குறைக்க வேண்டிய நிலையும் உண்டு. ஆனால் சந்திரக் கணக்கில் ஆயிரம் வருடங்களா னாலும்
ஒரு நாளைக் கூட்ட வேண்டுமென்றோ? ஒரு நாளைக் குறைக்க வேண்டுமென்றோ, வரவே வராது. அந்த
அளவு துல்லியமாகச் சந்திரனின் சுழற்சி இருக்கிறது.
மதகுருமார்களாகிய உங்களின் 3-ம் பிறையே முதல் பிறை என்ற மூடக்கொள்கையையே பிறை
காட்டிக் கொடுக்கிறது. அதாவது மாத்தின் இறுதி நாளில் அதாவது 29-ம் அல்லது 30-ம்
நாளில் இடம் பெறும் அமாவாசை அல்லது சூரிய கிரகணம் உங்களின் மூடக் கொள்கைப்படி 27லோ
28லோ இடம்பெறும். சந்திர சுழற்சியின் நடுப்பகுதியில் வர வேண்டிய பெளர்ணமி-பூரணச்
சந்திரன் பிறை 12ல் வரும் அவலத்தைப் பார்க்க முடிகிறது. சூரியக் கணக்கிலுள்ள
குறைபாட்டை சந்திரக் கணக்கில் புகுத்தி உங்களது சொத்தை வாதத்தை நிலைநாட்ட முற்படுவது
அறியாமையின் உச்சக் கட்டம்.
24. இந்த விஞ்ஞான முதிர்ச்சியின் உச்சக்கட் டத்திலும் முஸ்லிம்களுக்கு மத்தியில்
ஊருக்கு ஊர் நோன்பு, பெருநாள் கொண்டாடுகின்றனர் என்று மற்றவர்கள் நம்மை பார்த்து
ஏளனம் நையாண்டி செய்கிறார்கள் என்று கற்பனை யாக கூறினார் என்று எழுதி இருக்கிறீர்கள்.
ஊருக்கு ஊர் பெருநாள் கொண்டாடித்தான் ஆக வேண்டும். வேறு வேறு நாட்களில் கொண்டாடுவதே
நையாண்டிக்குரியது. துலுக்கனுக்கு 3-ம் பிறையே முதல் பிறை என்று ஹிந்துக்கள்
நையாண்டி செய்வது பலர் அறிந்த உண்மை. நாம் கற்பனை செய்யவில்லை. நீங்கள் உங்களின்
தவறான வாதங்களை நிலைநாட்ட கற்பனைகளை அவிழ்த்து விடுகிறீர்கள். மற்றவர்கள் ஏளனம்
செய்கிறார்கள் என்றால், “”எந்த எந்த காலகட்டத்தில்
ஷரீஅத்தின் சட்டத்தில் மாற்றம்
செய்ய வேண்டும்” என்று ஒவ்வொருவரும் ஆளுக்கொரு பட்டியல் போட ஆரம்பித்தால் அது எங்கு
போய் முடியும்? என்று கேட்டிருக்கிறீர்கள். மதகுருமார்களாகிய உங்களின் சுயநலக்
கற்பனைகளைப் புகுத்தாமல், குர்ஆனிலும், ஹதீஸிலும் உள்ளதை மட்டும் உள்ளபடிச்
செயல்படுத்தினால் உலகம் அழியும் வரை
ஷரீஅத் சட்டத்தில் எந்த மாற்றமும் செய்ய
வேண்டியதே இல்லை.
மதகுருமார்களாகிய நீங்கள் உங்களின் இவ் வுலக ஆதாயங்களைக் குறியாகக் கொண்டு
ஷரீஅத்தில் இஜ்மா, கியாஸின் பெயரால் மாற்றங்கள் ஏற்படுத்தியுள்ளதால், 21:92, 23:52-ல்
அல்லாஹ் கூறும் வேற்றுமை இல்லா ஒரே சமுதாயம் என்று கூறியுள்ளதை நிராகரித்து-2:39
இறைக்கட்டளைப்படி குஃப்ரிலாகி நீங்கள் எழுதி இருப்பது போல் ஆளுக்கொரு பட்டியல்
போட்டு ஒரே சமுதாயத்தை எண்ணற்ற பிரிவுகளிலாக்கி எங்கு போய் முடியுமோ என்ற ஆபத்தான
நிலையை உண்டாக்கி இருக்கிறீர்கள். இந்தக் குற்றச்சாட்டு மதகுருமார்களாகிய உங்களுக்கே 100க்கு 100 பொருந்திப் போவதைப் பார்த்தீர்களா?
2000-ல் நாம் கணக்கீட்டு முறையை சரியாக ஆய்வு செய்யாத நிலையில், நாள் ஆரம்பிப்பது
பற்றி கடந்த 1000 வருடங்களாக நடைமுறையில் இருந்து வருவதை ஏற்று எழுதி இருந்தது உண்மை
தான். நாம் முன்னர் சொன்னது போல் சரியான, நேரடியான குர்ஆன், ஹதீஸ் ஆதாரம் கிடைக்காத
வரை நடை முறையில் இருப்பதை மறுக்கும் துணிச்சல் நமக்கு ஏற்பட்டதில்லை. உரிய ஆதாரம்
கிடைத்து விட்டால் உலகமே எதிர்த்தாலும் அந்த உண்மையைச் சொல்ல அஞ்சியதே இல்லை. நாம்
நம்மைப் படைத்த நமது எஜமானனான அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே அஞ்சுகிறோம்.
அறியாத நிலையில் அல்லது நிர்பந்த நிலை யில் தவறு செய்வதற்கும், நன்கு அறிந்த
நிலையில் தவறு செய்வதற்குமுள்ள வேறுபாட்டை அறியாத நிலையில், அல்லது அறியாதது போல்
நடித்து உங்களின் தவறான குர்ஆன், ஹதீஸுக்கு முரண் பட்ட கொள்கையை நிலைநாட்ட பெரிதும்
முயற்சி செய்துள்ளீர்கள். 2:146, 6:20, 7:175-179, 47:25 குர்ஆன் வசனங்களை மீண்டும்
மீண்டும் படித்து விளங்கி தொளபா செய்து மீள முற்படுங்கள். ஆனால் மார்க்கத்தைப்
பிழைப்பாகக் கொண்ட நிலையிலும், ஆலிம்-அவாம் வேறுபாட்டை உண்டாக்கி ஆணவம்-தற்பெருமை
கொள்ளும் நிலையிலும் தெளபா செய் யும் வாய்ப்புக் கிடைக்கவே கிடைக்காது என்பதை
நபி(ஸல்) அவர்களது காலத்து ஐ.உ.ச. தாருந்நத்வா ஆலிம்களாகிய ஜாஹில்கள், அதன் தலைவன்
அபுல் ஹிக்கமாகிய அபூஜஹீல் ஆகியவர்களின் வழிகெட்ட நிலையிலிருந்து விளங்குங்கள்,
படிப்பினையாகக் கொள்ளுங்கள்.
மவ்லவிகள் வழி தவறக் காரணம்!
மறுமையை மறந்து அற்ப இவ்வுலக ஆதாயங்களையே குறியாகக் கொண்ட மவ்லவிகளான மதகுருமார்களாகிய உங்களுக்கு இவ்வுலகில் இருக்கும் உங்களுக்குச் சாதகமான
(Pluspoint) என்ன தெரியுமா? அல்குர்ஆன் 2:243, 6:116, 7:187, 11:7, 12:21, 38,40,68,103, 13:1,
16:38, 17:89, 18:54, 25:50, 30:6, 30, 34:28,35,36, 37:71, 40:57,59,61,82, 45:26
5:59, 43:78, 2:100, 3:110, 5:37,103, 6:111, 7:17, 102, 131, 8:34, 9:8, 10:36,
55,60, 12:106, 16:75,83, 101, 21:24, 23:70, 25:44, 26:8, 26:67, 103, 121, 139,
158, 174, 190, 223, 27:61, 73, 28:13,57, 29:63, 30:42 31:25, 34:41, 36:7,
39:29,49, 41:4, 44:39, 49:4, 52:47 ஆகிய இத்தனை வசனங்களில் பெரும்பான்மையினர் நம்பிக்கை கொள்ளமாட்டார்கள். நன்றி செலுத்தமாட்டார்கள். நேர்வழிக்கு வரமாட்டார்கள்.
கற்பனைகளிலும், யூகங்களிலும் மூழ்கி இருப்பார்கள், வழிகேட்டையே விரும்புவார்கள்
என்று பெரும்பாலான மக்களின் இழிநிலையை அல்லாஹ் எடுத்துச் சொல்கிறான். அப்படிப்பட்ட
பெரும்பான்மை மக்களைக் கொண்டு நரகத்தை நிரப்புவேன் என்றும் 32:13, 11:118,119
போன்ற இறைவாக்குகளில் கூறி உறுதிப்படுத்தி இருக்கிறான்.
அதற்கு நேர்மாறாக மிகமிகச் சொற்பமானவர்களே சத்தியத்தை உணர்ந்து நேர்வழி பெறுவார்கள்
என்றும் 2:83,88,246,249, 4:46,83,142,155, 5:13, 7:3,10, 11:116, 17:62, 23:78,
27:62, 32:9, 40:58, 48:15, 67:23, 69:41, 42 ஆகிய பல இடங்களில் கூறியுள்ளான்.
இப்போது நிதானமாக நடுநிலையோடு சிந்தியுங்கள். வியாபாரத்தில் அதிக லாபம் அடைவதைக்
குறிக்கோளாக் கொண்ட ஒரு வியாபாரி அதிகமான வாடிக்கையாளர்களைக் கவர் வது என்பதிலேயே
குறியாக இருப்பான். உலகியல் வியாபாரங்களில் அதிக வாடிக்கையாளர்களைக் கவர
அனுமதிக்கப்பட்ட வழிகளும் உண்டு. அனுமதிக்கப்படாத வழிகளும் உண்டு.
இப்போது மார்க்கத்தைத் தொழிலாக- வயிற்றுப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகளாகிய நீங்கள்
ஆதாயத்தைக் கருதி அதிகமான மக்களைக் கவரும் நிர்பந்தத்தில் இருக்கிறீர்கள். ஆனால்
அதிகமான மக்கள் நரகிற்கு இட்டுச் செல்லும் ஷைத்தான் அழகாகக் காட்டும் வழிகேடுகளையே
அதிகமாக விரும்பி அதிலேயே மூழ்கி இருப்பார்கள். இப்போது நீங்கள் அந்த அதிகமான மக்களை
கவர்ந்து உங்கள் பக்கம் இழுப்பதாக இருந்தால் அவர்கள் விரும்பி நேசிக்கும்
வழிகேடுகளையே நேர்வழியாகக் காட்டும் கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.
காரணம் நேர்வழியை குர்ஆன், ஹதீஸ் போதனையை திரிக்காமல் வளைக்காமல் உள்ளது உள்ளபடிச்
சொன்னால் மக்களில் பெருங்கூட்டம் அதனால் கவரப்பட்டு உங்கள் பின்னால் அணி வகுக்க
மாட்டார்கள். 2:159,161,162 கூறுவது போல் நேர்வழியைக் கோணல் வழிகளாக்கி அதிலேயே
உறுதியாக நின்றால்தான் பெருங்கொண்ட மக்கள் உங்கள் பின்னால் அணி திரள்வார்கள்.
நீங்கள் எதிர் பார்க்கும் உலகியல் ஆதாயங்கள் பெருவாரியாகக் கிடைக்கும். குர்ஆன்
வசனங்களுக்கு மேல் விளக்கம் (சிமுஸ்ரீயிழிஐழிமிஷ்லிஐ) விரிவுரை
(Interpretation) எனக் கூறி அவற்றின் அர்த்தங்களை அநர்த்தமாக்கும் இரகசியம் புரிகிறதா? சிந்தியுங்கள்.
மார்க்கத்தை மாக்கம் அல்லாததாக்கி மார்க்கம் அல்லாததை மார்க்கமாக்கி இஜ்மா, கியாஸ்.
லாஜிக் பாலிசி என கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டும் மவ்லவிகளாகி உங்கள்
பின்னால் தான் உலகம் அழியும் வரை மக்களில் பெருங் கூட்டம் இருப்பார்கள். உங்களுடைய
புரோகிதத் தொழில் ஜாம் ஜாம் எனப் படுஜோராக நடக்கும் என்பதில் ஐய மில்லை. ஆனால்
மறுமையிலோ உங்களின் நிலை? சிந்தியுங்கள். நாளை விசாரணையின் ஆரம்பத்திலேயே தலை
குப்புற நரகில் எறியப்படுபவர்களில் மவ்லவிகளும் ஒரு சாரார் என்பதை நினைவில்
வையுங்கள்.
கோடிக் கணக்கான சிப்பிகளில் சில முத்துக்களே தேறுவது போல் மிகச் சொற்பமானவர்களே
மவ்லவிகளாகிய உங்கள் வசீகர, சூன்ய பேச்சிலிருந்து தப்புவார்கள்.
நபிமார்கள் தங்கள்மீது விதிக்கப்பட்ட மார்க்கப் பணிக்கு மக்களிடம் கூலி கேட்கக்
கூடாது; எதிர் பார்க்கக் கூடாது. அல்லாஹ்வின் பொருத்தம் நாடி மறுமை யில் தங்கள்
பணிக்குரிய கூலியை எதிர்பார்த்து மட் டுமே செய்யவேண்டும் எனப் பல இடங்களில் அல்லாஹ்
மிகக் கடுமையக, பகிரங்கமாகப் பிரகடனப் படுத்தும்படி சொல்லியுள்ள இரகசியம் புரிகிறதா?
மக்களிடம் கூலி-சம்பளத்தை எதிர்பார்ப்பவர்கள் எப்ப டிப்பட்டக் குற்றச் செயல்களில்
ஈடுபடுவார்கள் என்பதை 2:41, 42,44,75, 79, 109, 146,159, 160,161,162, 174,188,
3:78,187,188, 4:44,46, 5:13, 41, 62,63, 6:20, 21,25,26, 9:9,10,34, 11:18,19,
31:6 ஆகிய இந்த குர்ஆன் வசனங்களை நடுநிலையுடன் நிதான மாகப் படித்து விளங்குங்கள்.
இந்த வசனங்கள் எல்லாம் முன் சென்றவர்கள் பற்றியவை நமக்கல்ல என்று உங்கள் ஆபாக்களான
மதகுருமார்கள் எழுதி வைத்துள்ளதை நம்பி ஏமாறா தீர்கள். அல்லாஹ், தவறு குற்றம் என்று
சொல்வதை யார் செய்தாலும் தவறுதான். லூத் (அலை) அவர்க ளின் சமுதாயம்தான் ஓரினப்
புணர்ச்சியில் ஈடுபட்ட தாக அல்லாஹ் கண்டிக்கிறான். அது அந்தச் சமுதா யத்திற்குத்தான்
தடை; எங்களுக்கில்லை என்று பகிரங் கமாகச் சொல்லும் ஒரு மவ்லவியையாவது உங்க ளால்
காட்ட முடியுமா?
36:21ல் கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிகிறவர்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பதாக
கூறி இருப்பதை சிந்தித்து விளங்குங்கள். கடந்த 29 வருட முயற்சியின் பலனாக சில
மவ்லவிகள் சுயமாக தொழில் செய்து பொருளீட்ட முன்வந்திருக்கிறார்கள். இது
வரவேற்கத்தக்க ஒரு முன்னேற்றமே. ஆயினும் அவர்களிடமும் மவ்லவி-ஆலிம் என்ற ஆணவம்-தற்
பெருமையும், மவ்லவி அல்லாதவர்களை அவாம் என இழிவாக எண்ணும் நிலையும் இருக்கவே
செய்கிறது. இந்தத் தற்பெருமையும் அவர்களை குர்ஆனில் உள் ளதை உள்ளபடி விளங்கத்
தடையாகவே இருக்கும். இந்த தற்பெருமை சத்தியத்தை உண்மை என்று அறிந்த பின்னரும்
மறுக்கத் தூண்டும். அணுவத் தனை பெருமையுடையவனும் சுவர்க்கம் நுழைய முடியாது. அது
உண்மையை மறுப்பதும், மற்றவர் களை இழிவாக எண்ணுவதும் ஆகும் என்ற நபி (ஸல்) அவர்களின்
எச்சரிக்கையை அப்படிப்பட்ட வர்கள் கவனத்தில் கொள்வார்களாக.
சூரியனும் சந்திரனும் கணக்கீட்டின் படியே சுழல்கின்றன என அல்லாஹ் பல வசனங்களில் கூறி
இருக்க 2:85-ல் கண்டிப்பதையும் பொருட் படுத் தாமல் சூரியக் கணக்கை ஏற்றும் சந்திரக்
கணக்கை மறுப்பதும் மட்டுமின்றி, தொழுகையைப் போல் பிறையை ஒப்பிடுவது முட்டாள்த்தனம்
என்று கூறி அல்லாஹ்வையே முட்டாளாக்கும் (நவூதுபில்லாஹ்) நீங்கள் யார் என்பதை
குர்ஆனை நேரடியாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயம் அறிவார்கள்.
ஹிஜ்ரி காலண்டரில் சில சில்லறைக் குறைபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. மனித தயாரிப்பு என்ற நிலையில் சிற்சில குறைகள் இருப்பது இயற்கையே. ஆயினும் ஒவ்வொரு
மாதத்திற்கும் கொடுக்கப்பட்டுள்ள நாட்களிலோ, சங்கமம் நடக்கும் நாள், இடங்களிலோ,
சூரிய சந்திர கிரகணங்கள் இடம் பெறும் தேதிகளிலோ எவ்விதத் தவறும் இல்லை. ரமழான்
ஆரம்பம், முடிவு, பெருநாள் தினம், அரஃபா தினம், ஹஜ் பெருநாள் தினம் இவற் றில்
எவ்விதக் குறையும் இல்லை என்பதே முக்கியம் கவனிக்க வேண்டியது. ஹிஜ்ரி காலண்டரிலும்
ஏக குழப்பம் என்று நீங்கள் குறிப்பிட்டிருப்பது இப்படிப் பட்ட அறிவீனமான
கருத்துக்களாக இருக்குமே அல்லாது ஏற்கத்தக்க குர்ஆன், ஹதீஸ் கூறும் அறிவார்த்தமான
எந்தத் தெளிவும் உங்களிடம் இருக்க முடியாது என்பதை இக்கடிதமே உறுதிப்படுத்துகிறது.
11.04.2008 உங்களின் 18 பக்கக் கடிதத்திற்கு நாம் பதில் கொடுக்க இதுவரை
முற்படவில்லை. அதற்கு ஒரு காரணம் நீங்கள் எனக்கு நேரடியாகக் கடிதம் எழுதவில்லை.
மக்களைக் குழப்பும் நோக்கில்IIM-க்கு கடிதம் எழுதியிருக்கிறீர்கள். அதைத் தமிழ்
பேசும் மக்களிடையே பரப்பி இருக்கிறீர்கள். இந்தக் கடிதத்திற்கு நான் பதில் தர வில்லை
என்றும் செய்தி பரப்பி வருகிறீர்கள். இதற்கு முற்றுப் புள்ளி வைக்கவே இந்த
விளக்கங்கள்.
முடிவுரை : உண்மை எங்கிருந்து வந்தாலும் நம் மனோ இச்சைக்கு இடமளிக்காது அதை ஏற்று
நடக்கும் ஆரோக்கியமான மனநிலை நமக்கு வர வேண்டும். மன முரண்டிற்கு மருந்தில்லை. எத்தி
வைப்பது எங்களின் கடமை. நேர்வழி எல்லாம் வல்ல நாயன் அல்லாஹுதலாவிடமே உள்ளது. அல்லாஹ்வே அனைத்தையும் அறிந்தவன். 29:69 இறைக் கட்டளைப்படி முயற்சி செய்வது நமது கடமை.
முயற்சிப்பவர்களுக்கு அவனது வழியை எளிதாக்கித் தருவதாக அல்லாஹ் வாக்க ளித்துள்ளான்.
அவன் வாக்கு மாறுபவன் அல்ல. (3:9,194, 13:31, 39:20)