நடந்து முடிந்த திருச்சி மேற்கு தொகுதிச் சட்டசபை இடைத்தேர்தல், மற்றும் மாநகர,
நகர, பேரூ ராட்சி, சிற்றூராட்சி, பஞ்சாயத் தேர்தல் இவை அனைத்திலும் இடம் பெற்ற
நடுநிலை மனிதர்களால் ஜீரணிக்க முடியாத மிருகச் செயல்களையும், அவற்றால் ஏற்பட்ட
சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளையும், தமிழ் நாட்டுக்கு ஏற்பட்ட பெரும் பொருளாதார வீண்
செலவுகளையும் கண்முன் கொண்டு வந்து சிந்தித்துப் பாருங்கள்.
சுமார் 60 வருடங்களுக்கு முன்னர் 1950களில் நடைபெற்ற தேர்தல்களில் இப்படிப்பட்ட
அவலங்கள் இடம் பெற்றதாக வரலாறு கூறுகிறதா? இத்தனை பேர் நான், நீ என்று போட்டி
போட்டுக் கொண்டு வேட்பாளர்களாக நின்றார்களா? இல்லையே! காரணம் என்ன? ஆம்! அன்றைய
வேட்பாளர்கள் மக்களுக்கு உண்மையிலேயே தொண்டு செய்ய வேண்டும் என்ற தூய நோக்கத்துடன்
களத்தில் இறங்கினார்கள். மக்கள் சொத்தைக் கொள்ளை அடிக்க வேண்டும் என அவர்கள்
கனவிலும் நினைக்கவில்லை. விதி விலக்காக ஓரிரு சுயநலமிகள் இருந்திருக்கலாம்.
ஆனால் இன்று? மக்கள் பணத்தை முறை கேடான வழிகளில் வாரிச் சுருட்டும் தீய
எண்ணத்துடனேயே தேர்தல் களத்தில் குதிக்கிறார்கள். அன்று பெரும்பாலும் மனிதநேய
மிக்கவர்கள், தொண்டுள்ளம் கொண்டவர்கள் வேட்பாளர்களாக நின்ற நிலை மாறி இன்று
கிரிமினல்கள், மோச டிப் பேர்வழிகள், ரவுடிகள், தாதாக்கள், கள்ளச் சாராய வியாபாரிகள்,
விபச்சார விடுதி நடத்துபவர்கள், சின்னத் திரை, வெள்ளித்திரை கூத்தாடிகள்,
விபச்சாரிகள், குடிகாரர்கள், அபின், கஞ்சா யஹராய்ன் என போதைப் பொருள் கடத்தி முறை
கேடான வழிகளில் பணத்தைக் குவித்தவர்கள், இப்படி மனிதப் பண்பாடில்லாத இறுதி வாழ்க்கை
வழிகாட்டும் நெறிநூல் குர்ஆன் 7:179 கூறும் மிருகங்களை விடக் கேடு கெட்டவர்களே
பெரும்பாலும் வேட்பாளர்களாக களத்தில் குதிக்கிறார்கள். தப்பித் தவறி ஒரு சில
நல்லவர்கள் நின்றாலும் பல்லாயிரக் கணக்கில் செலவிட்டு வாக்குகளை விலைக்கு வாங்கும்
வசதி இல்லாத காரணத்தால் அவர்கள் தேர்வு செய்யப்படுவதில்லை.
வேட்பாளர்கள் நிலை இதுவென்றால் வாக்களிக்கும் பொது மக்களின் நிலையும்,
வேட்பாளர்களுக்காக வாக்குச் சேகரிப்பில் ஈடுபடும் பணியாளர்களின் நிலையும் மிகமிகக்
கேவலமாக இருக்கிறது. நாய்க்கு எலும்பை விட்டெறிவது போல் வேட்பாளர்கள் விட்டெறியும்
அற்பக் காசுக்காக தங்களின் விலை மதிப்பே இல்லாத பொன்னான வாக்குகளை விற்கும் பரிதாப
நிலையிலேயே வாக்களர் பொது ஜனம் இருக்கிறார்கள்.
கோடிகோடியாக கொள்ளை அடித்துக் குவித்துள்ளப் பணத்திலிருந்து ஒரு சிறு பகுதியை
விட்டெறிந்து பொதுமக்களின் வாக்குகளை விலைக்கு வாங்கி விடமுடியும் என்ற அசட்டுத்
துணிச்சலால்தான் மேலே நாம் அடையாளம் காட்டியுள்ள கேடு கெட்ட வேட்பாளர்கள் களத்தில்
குதிக்கிறார்கள். தங்களின் நிலையையும், தங்களுக்கிருக்கும் வாக்குச் சீட்டின்
மகிமையையும் உணர முடியாத பேதமை நிறைந்த பெருங்கொண்ட மக்களுக்கு வாக்குரிமை
கொடுப்பதால் அதை முறையாகப் பயன்படுத்துவார்களா? அல்லது முறைதவறி பயன்படுத்துவார்களா?
சொல்லுங்கள். வாக்காளர்களுக்குப் பணம் மட்டுமல்ல; மது பாட்டல்களும்
கொடுக்கப்பட்டுள்ளன என்பதை அறியும்போது, இந்த மக்கள் எந்த அளவு சீர்கெட்ட நிலையில்
இருக்கிறார்கள் என்பதை அறிவு ஜீவிகள் உணர முடியாமல் இருக்கிறார்களா?
வேட்பாளர்களுக்காக தேர்தல் பணிபுரிகிறவர்கள் பெரும்பாலும் போதையில் இருந்ததையே
பார்க்க முடிந்தது. இப்படி குடிகார வேட்பாளர்கள், குடிகார தேர்தல் பணியாளர்கள்,
குடிகார வாக்காளர்கள் என்ற நிலை வளர்ந்து வரும் நிலையில் தேர்தலில் வெற்றி பெற்று
ஆட்சியில் அமர்பவர்களின் தராதரம் எப்படி இருக்கும்? அவர்கள் மக்களுக்கு நல்லாட்சி
கொடுப்பார்கள் என எதிர்பார்க்க முடியமா? 1972வரை குடி, போதை என்றால் என்ன? என்று
தெரியாதிருந்த தமிழக இளைஞர், இளைஞர்களை மடாக் குடிகாரர்களாக்கிய பெத்த பெருமை
1969க்குப் பிறகு மாறி, மாறி ஆட்சி கட்டிலில் ஏறிய திமுக, அதிமுக தலைவர்களையே சேரும்.
இன்று தமிழ்நாடு குடிகார நாடு ஆகிவிட்டது. போதையில் தமிழ்நாடு தள்ளாடுகிறது.
ஆம்! இன்றைய ஆட்சியில் அமர்பவர்கள் மக்கள் பணத்தைத் தவறான வழிகளில் கொள்ளை அடிக்கும்
குறிக்கோளுடன்தான் ஆட்சியைப் பிடிக்கிறார்கள். அவர்களிடம் மக்கள் நலனைவிட தங்களின்
சுயநலம் தான் மிகமிகப் பெரிதாகத் தெரிகிறது. ஆட்சி இழந்தவர்கள் எப்படிப்பட்ட நல்ல
திட்டங்களை வகுத்துப் பல்லாயிரம் கோடி செலவிட்டு நிறை வேற்றியிருந்தாலும், அல்லது
அத்திட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும், புதிதாக ஆட்சிக்கு வருபவர்கள் அவற்றை
முடக்கி பல்லாயிரம் கோடி மக்கள் பணம் வீணாவதற்கே வழிவகுப்பார்கள். இதில் ஆட்சியில்
அமரும் எந்தக் கட்சியும் விதிவிலக்குப் பெறுவதாக இல்லை.
தொடர்ந்து 1967ல் இருந்து 44 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்து வரும் திராவிடக்
கட்சி கள், பகுத்தறிவு பேசிய பெரியாரின் பிரதான சீடர்கள், பகுத்தறிவுவாதிகள் என
பெருமை பேசுபவர்களே எப்படிப்பட்ட முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள். எப்படி எல்லாம்
மக்கள் சொத்தைத் தவ றான வழிகளில் குவித்திருக்கிறார்கள். மக்களுக்குப் பலன் தரும்
நல்ல திட்டங்களை மாறி மாறி பாழ டித்து முடக்கி பல லட்சம் கோடி மக்கள் பணத்தை
வீணடித்திருக்கிறார்கள் என்பதை உலக மக்கள் நிதர்சனமாகக் கண்டு வருகிறார்கள். இந்த
நிலை நீடிக்குமானால் தமிழ்நாடு இடுகாடாக ஆகுமே அல்லாமல் தரணியில் தலைசிறந்த நாடாக
ஆகும் வாய்ப்புக் குதிரைக் கொம்பே.
மக்கள் நலனுக்காகச் சட்டம் வகுக்கும் சிற்றூராட்சி, பேரூராட்சி, நகர, மாநகர ஆட்சிகள்,
சட்ட சபைகள், பாராளமன்றம் ஆகிய அனைத்துச் சபை களிலும் என்ன நடக்கிறது? கூச்சல்,
குழப்பம், அடி தடி என மேற்படி சபைகளின் பொன்னான நேரங கள் வீணடிக்கப்பட்டு,
பல்லாயிரம் கோடி மக்கள் பணம் பாழாக்கப்படுகின்றது. இந்த லட்சணத்தில் சம்பளம், படி
என இவர்களுக்கு வாரி இறைக்கப்படும் பணம் பல இலட்சங்கள்.
வாக்காளர்கள், ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள் அனைவரும் சீர்கெட்டு சீரழியும்
நிலையில், மீடியாக்களோ அதைவிட கேடுகெட்ட நிலையிலேயே இருக்கின்றன. காசுக்காக
எப்படிப்பட்ட அநாச்சாரங்கள், மூட நம்பிக்கைகள், ஒழுக்கக் கேடு கள் இவற்றைத்
தொடர்ந்து ஒலி, ஒளி பரப்பி வரு கின்றன அனைத்து ஊடகச் சேனல்களும் என்பதை அறிவு
ஜீவிகள் சிந்திக்க வேண்டும். இதுபற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியும் இப்போதைய
பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க் கண்டேய கட்ஜு பிட்டு பிட்டு வைத்துள்ளார்.
அவரது முழு பேட்டி விபரங்களை நவம்பர் 11-17.2011 மக்கள் உரிமை வார இதழ், சமரசம்
16-30 நவம்பர் 2011 மாதம் இருமுறை இதழ், மற்றும் சில இதழ்களிலும் பார்வையிடலாம்.
இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம், ஆட்சியாளர்கள், அரசு அதிகாரிகள், நீதித்துறை, காவல்
துறை, ஊடகத்துறை என ஒட்டமொத்த அனைத்துத் துறையினரும் இவ்வுலகே மாயம் என்பதை மறந்து
இவ்வுலகே சதம்-நிரந்தரம் இதில் அனுப விப்பதே உண்மையான அனுபவிப்பு என மூடத்தன மாக
நம்பி, அந்த நோக்கத்தோடு பணத்தைக் கோடி கோடியாகக் குவிப்பதையே தங்களின் லட்சிய மாகக்
கொண்டு அதற்கேற்றவாறு செயல்படுவதே யாகும். பெரும்பான்மை மக்களைத் தங்கள் கட்டுப்
பாட்டில் கொண்டு வந்தால் எதையும் சாதிக்கலாம் என்ற நம்பிக்கையில் செயலாற்றுகின்றனர்.
பெரும்பான்மை மக்களின் விருப்பங்களே நிறைவேற்றப்பட வேண்டும் என்றுதானே ஜன நாயகமும்
கூறுகின்றது. ஆனால் அதற்கு மாறாக மனிதனைப் படைத்துப் பரிபாலிக்கும் இணை, துணை தேவை
எதுவும் இல்லாத ஏகனான இறைவன், தனது இறுதித் தூதரை எப்படி எச்சரிக்கிறான் என்று
பாருங்கள்.
“”பூமியில் உள்ளவர்களில் பெரும்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை
இறைவனின் நேர்வழியை விட்டு வழிகெடுத்து விடுவார்கள்; (ஆதாரமற்ற) வெறும் யூகங்களையே
அவர்கள் பின் பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனைகளிலேயே மூழ்கிக்
கிடக்கிறார்கள்”. (அல்குர்ஆன் அல்அன்ஆம் 6:116)
இறுதித் தூதரும் மனிதர் என்ற நிலையில் பெரும்பான்மை மக்கள் என்ற அடிப்படையில் ஒரு
மயக்கம் இருந்ததை, ஏகனான இறைவன் எப்படிக் கண்டித்து நேர்வழிப்படுத்துகிறான் என்பதைச்
சிந்தியுங்கள்.
ஆம்! பெரும்பான்மை மக்களின் விருப்பம்; அதுவே ஜனநாயகம் என்றால் அது வழிகேடாகவும்,
வெறும் யூகங்கள், பொய்யான கற்பனைகள் நிறைந் ததாகவுமே இருக்கும் என்பதை எல்லாம் வல்ல
ஏகனான இறைவன் 1450 ஆண்டுகளுக்கு முன்னரே தனது இறுதித் தூதரை எச்சரிப்பது கொண்டு
உலகுக்கு உணர்த்தியுள்ளான்.
ஆம்! ஜனநாயகம் என்றால் அது சாபக்கேடே அல்லாமல் மக்களை உய்விக்கும் ஒன்றல்ல, அற்பமான
விந்துவிலிருந்து படைக்கப்பட்டு அனைத்து விதமான பலகீனங்களையும் கொண்ட, பேராசை கொண்ட
வரம்பு மீறி நடக்கும் மனிதன் மக்களை ஆளச் சட்டம் வகுப்பது, கொலைகாரன் கையிலும்,
திருடன் கையிலும் தீர்ப்பளிக்கும் அதிகாரத்தைக் கொடுப்பதற்கு ஒப்பாகும்.
ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள் சிறுபான்மைச் செல்வந்தர்களுக்
குச் சாதகமாகவும் பெரும்பான்மை ஏழை நடுத்தர மக்களுக்குப் பெரும் பாதகமாகவும்,
அதிகார போதையில் புத்தி பேதலித்துத் தள்ளாடிய நிலையில் சட்டங்கள் இயற்றுவதே ஜனநாயக சாபக் கேட்டை உணர்த்தப் போதுமானதாகும்.
என்று அறிவுஜீவிகள் மனிதர்கள் இயற்றும் சட்டங்களைப் புறக்கணித்து, அகிலங்களையும்
படைத்து நிர்வகித்து வரும் ஏகனான இறைவன் இன்று கலப்படமாகி வேதங்கள் என
மதகுருமார்களால் சொல்லப்படும் நெறிநூல்களின் வரிசையில் இறுதியாக அளித்துள்ள
மதகுருமார்களால் கலப் படமாகாமல் இறைவனால் பாதுகாக்கப்பட்ட மனித வாழ்க்கை வழிகாட்டி
இறுதி நெறிநூல் குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதிலுள்ள சட்டங்களின் படி மக்களை
வழிநடத்த முன்வருகிறார்களோ அப்போதுதான் இந்த உலகமும், உலக மக்களும் உய்ய
வழிபிறக்கும். இதையே குர்ஆன் அல்மாயிதா 5:44,45,46,47,48 வசனங்கள்
உறுதிப்படுத்துகின்றன; பார்த்துப் படிப்பினை பெறுங்கள்!