அல்லாஹ்வின் ஒருமை அறிவியல்
Science of One-ness of Allah
இஸ்லாத்தின் இலட்சியம்: வாழ்வு முழுவதும்
அல்லாஹ்வை ஒருமைப்படுத்துதல்!
அல்லாஹ் மட்டுமே படைப்பினங்கள் அனைத்தின் ஒரே இரட்சகன் என ஒருமைப்படுத்துதல்!
முஹிப்புல் இஸ்லாம்
ரப்புல் ஆலமீன் :
“ரப்பிஸ் ஸமாவாத்தி வல் அர்ழி’-ஆகவே வானங்களுக்கும், பூமிக்கும் (“ரப்பி’) இரட்சகனான அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
அல்குர்ஆன்: அல் ஜாஸியா: 45:36.
வானங்கள், பூமிக்கும் இரட்சகன்: அனைத்துப் படைப்பினங்களின் இரட்சகன் -“ரப்புல் ஆலமீன்’!
படைப்பினங்கள் அனைத்தையும் இரட்சிக்கும் -ரப்புல் ஆலமீனுக்கே எல்லாப் புகழும்!
மனிதர்களின் இரட்சகன்-ரப்பின்னாஸ் (காண்க: அல்குர்ஆன்: 114:1). அந்த “ரப்புல் ஆலமீன்’-மனிதர்களைப் பிரத்யேகமாய் இரட்சித்து வருகிறான்.
மனிதர்களில் மிகப் பெரும்பான்மை அல்லாஹ்வை விடுத்து அல்லாதோரிடம் இரட்சிக்கத் தேடுகின்றனர். அதனால் அல்லாஹ் அல்லா தோரிடம் இரட்சிக்கத் தேடுதல் ´ஷிர்க்’-இறைக் கிணையாக்கும், இறை மன்னிப்பில்லா மாபாதகம்!
நபியே! நீர் கூறும்: அல்லாஹ் அல்லாத வனையா “ரப்பன்’ இரட்சகனாக நான் தேடுவேன்?
“வஹுவரப்பு குல்லி ஷைய்இன்’-அவனோ எல்லாவற்றுக்கும் இரட்சகனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 6:164)
மானுடத்தை உஷார்படுத்தும் அல்லாஹ்வின் எச்சரிக்கை! கணமும் மறந்திடலாகாது. எனி னும் மனிதர்கள் இதை மறந்து விடுவதால், திரும் பத்திரும்ப அல்லாஹ்வின் எச்சரிக்கை நினை வூட்டிக் கொண்டே இருக்கிறது.
பாவங்கள் சேர்ப்பதில் விரைவு:
இருந்தும், மனிதர்கள் பாதகமான பாவங் களைத் தேடுவதில், சம்பாதிப்பதில் பொழுதைக் கழித்துவருவதால்,
(நபியே!) நீர்க் கூறும்: அல்லாஹ் அல்லாத வனையா எனக்கு “ரப்பன்’ இரட்சகனாக நான் தேடுவேன்? “வஹுவ ரப்பு குல்லி ஷைய் இன்’ அவனோ எல்லாவற்றுக்கும் இரட்சகனாய் இருக்கின்றான்.
மேலும் ஒவ்வொரு ஆத்மாவும் அதற்குப் பாதக(பாவ)மானதேயல்லாது (வேறு எதையும்) அது சம்பாதிப்பதில்லை. அல்குர்ஆன்: 6:164
பாவங்கள், பாதகங்கள், மாபாதகங்கள் பக்கம் விரைந்து விழக்கூடியவர்களே-மக்கள். கைப்பிடி அளவு கூட நன்மை செய்யாதோரும் உலக அளவுப் பாவங்களைக் குவித்துக் கொண் டிருப்பது கண்கூடு. சுமக்க இயலா அளவு பாவச் சுமைகள்:
பாவம் செய்யும் ஒவ்வொரு ஆத்மாவும் தனக்கே கேட்டைத் தேடிக் கொள்கிறது.
ஒரு ஆத்மாவின் பாவச்சுமையை மற்றொரு ஆத்மா சுமக்காது. (அல்குர்ஆன் 6:164)
அல்லாஹ்வின் எச்சரிக்கை, அறிவுரை எத் தனை, எத்தனை, அல்லாஹ்வையும், அல் லாஹ் அருளிய அறநெறி அல்குர்ஆனையும் ஏற்றுள்ள மிகப் பெரும்பான்மைக்கே இது செவிடன் காதில் ஊதிய சங்கு எனில் மற்றவர் நிலையை என்னென்பது?
பிரதானக் கடமை:
அல்லாஹ்வை ஒரே இறைவனாக ஏற்றோர், வாழ்வு முழுவதும் அல்லாஹ்வை ஒருமைப் படுத்தக் கடமைப்பட்டுள்ளனர். எனினும், இந்தப் பிரதானக் கடமை, ஏற்றோரால் புறந் தள்ளப்பட்டுவிட்டது. நவூதுபில்லாஹ். ஏற் றோர் வாழ்வே இதை மெய்ப்பிக்கும் சான்று. விதிவிலக்கு வெகு சொர்ப்பம்.
அல்லாஹ்வை ஒருமைப்படுத்துவதில் வாழ்வு முழுவதும் அல்லாஹ்வை மட்டும் இரட்சக னாய் ஒருமைப்படுத்துதல் பிரதான அங்கம் வகிக்கிறது. பெரும்பான்மைக்கு அல்லாஹ் அல்லாதோரே-இரட்சகர்கள். இதை நிதர்சன மாய் அன்றாட வாழ்வில் சந்திக்க முடிகிறது.
வினாவாய் வீசப்படும் அல்லாஹ்வின் கடுங்கண்டனம்:
“மன்ர்ரப்புஸ்ஸமாவாத்தி வல் அர்ழ்’: வானங் களுக்கும் பூமிக்கும் இரட்சகன் யார்?’ என்று (நபியே) நீர்க் கேளும்.
Say, ‘Who is Lord of the heavens and earth?’
அதற்கு அல்லாஹ்தான்’! என்று நீரே பதில் கூறும்.
Say, ‘Allah’
உண்மை இவ்வாறிருக்க நீங்கள் அவனை யன்றி வேறு (போலி) கடவுள் (போலித் தெய்வங்) களையா, “அவ்லியா’ பாதுகாவலர் (உற்றநேசன்) களாய் எடுத்துக் கொள்கிறீர்கள்?(அல்குர்ஆன் 13:16)
அல்லாஹ் அல்லாதோரை “அவ்லியா’ பாது காவலராய், உற்ற நேசராய் எடுத்துக் கொள்வோர் மீது அல்லாஹ்வின் சீற்றம் (பாரீர்!) சீறிப் பாய்கிறது.
அல்லாஹ்வின் சீற்றம்:
அல்லாஹ் அல்லாதோரை இரட்சகர்களாய் எடுத்துக் கொள்வது “´ர்க்-இறைக்கிணையாக் கும் மாபாதகம்!
அல்லாஹ் அல்லாதோரை இரட்சகர்களாய் எடுத்துக் கொள்வது “´ர்க்’-இறைக்கிணையாக் கும் மாபாதகம் என்பதை எடுத்துக்காட்டும் போது, வானுக்கும் பூமிக்கும் எகிறிக் குதிப் போரே! உங்கள் சீறிப் பாய்தல், அல்லாஹ்வின் சீற்றமாய் உங்கள் மீதே சீறிப்பாய்வதைப் பாருங்கள்.
அனைவரும் அல்லாஹ்வுக்கு அஞ்சுக:
ஆற்றல் அற்றோர்:
இரட்சகர்களாய் எடுத்துக் கொள்ளப்படும் அல்லாஹ் அல்லாதோரின் இயலாமை எத்தகையது?
அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும், தீமையும் செய்து கொள்ள சக்தியற்றோராய் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 13:16)
Say, have you then taken besides him allies not possessing (even) for themselves any benifit or any harm?” Al-Quran-13:16
இரட்சகர்களாய் எடுத்துக் கொள்ளப்படும் அல்லாஹ் அல்லாதோர் அவர்களுக்கு, அவர் களே, அவர்களாக எந்த நன்மையும் தீமையும் செய்து கொள்ளும் ஆற்றல் அற்றோரே! அதனால்தான் அவர்கள் யாரையும், எதையும் இரட்சிக்க இயலாது.
அனைத்துப் படைப்பினங்களுக்கும் நன்மை செய்வதும், தீங்கிழைப்பதும் ஏக இறைவனாகிய அல்லாஹ்வின் தன்னிகரற்ற தனித்த ஆற்றல்! அதனால் அல்லாஹ் மட்டுமே “ரப்’-இரட்சகன்; படைப்பினங்கள் அனைத்தையும் இரட்சிக்கும் “ரப்புல்ஆலமீன்’.
இருளும் ஒளியும் சமமாகுமா?
இதையும் மீறி அல்லாஹ் அல்லாதவர்களை இரட்சகர்கள், பாதுகாவலர்கள், உற்ற நேசர் களாய் எடுத்துக் கொள்வோர், எப்படிப்பட்ட வர்கள்?
மேலும் (நபியே!) நீர் கேளும்:
குருடனும் பார்வையுடையவனும் சமமாவானா? அல்லது இருளும் ஒளியும் சமமாகுமா?
அல்குர்ஆன் : 13:16.
Say, “The blind equivalent to the seeing?
Or is darknes equivalent to light. -Al-Quraan:13:16
ஆஹா… எத்தனை அருமையான உவமை நயம்! அல்லாஹ் அருளிய உவமையல்லவா? நயம் சுரந்து கொண்டேயிருக்கும் வற்றாத ஜீவநதி:
அல்லாஹ் மாத்திரம் ஒரே இரட்சகனாய் இருக்க, அல்லாஹ்வுடன், அல்லாதோரை இணைத்தோ, அல்லது அல்லாஹ் அல்லாத இணையாளர்களை மாத்திரமோ இரட்சகர் களாய் எடுத்துக் கொள்வோர் கண்ணிருந்தும் குருடர்களே! வெளிச்சம் இருந்தும் இருளில் தத்தளிப்போரே!
கண்மூடித்தனத்தில் மூழ்கியோர் :
அல்லாஹ் அல்லாதோரை இரட்சகர்களாய் எடுத்துக் கொண்டோர் கண்மூடித்தனத்தில் மூழ்கி இருப்போர்: அறிவு விழியை மூடிக் கொண் டோர்! வழிக்கேட்டு இருளில் தத்தளிப்போர்!
அல்லாஹ்வை இரட்சகனாய் எடுத்துக் கொண் டோர் அறிவு விழியைத் திறந்து கொண்டோர்! நேர்வழி வெளிச்சத்தில் வாழ்வைச் செம்மை யாக செலுத்திக் கொண்டிருப்பவர்!
அறிவு விழி மூடச் செய்தவரும், அறிவு விழித் திறந்து கொண்டவரும் எப்படிச் சமமாக முடியும்?
நேர்வழி வெளிச்சத்தில் பீடுநடை போடுப வரும், வழிகேட்டு இருளில் தத்தளிப்பவரும் எப்படி சமமாக முடியும்?
அல்லாஹ் மட்டும் ஒரே இரட்சகன்.. எதனால்? இல்லையயனில், அல்லாஹ்வுக்கு இணையாக இவர்கள் ஏற்படுத்திக்கொண்ட (போலிக்) கடவுள்களும் அல்லாஹ் படைத் திருப்பதுபோல் எதையும் படைத்திருக்கின்ற னவா? …. (அல்குர்ஆன் : 13:16)
இல்லை, இல்லை, நிச்சயம் இல்லை. அல் லாஹ் மட்டுமே அனைத்தையும் படைத்து வரும் ஒரே படைப்பாளன். அதனால்தான் அல்லாஹ் மட்டுமே ஒரே இரட்சகன். அல்லாஹ் அல்லாதவர்கள் படைக்க முற்பட்டிருந்தால், ஒர் ஈயைக் கூடப் படைத்திருக்க முடியாது, ஏன்? விடையைக் காண்க: அல்குர்ஆன்:22:73, பலவீனமான படைப்பினங்கள் எதற்கும் படைப்பாற்றல் ஏதும் இல்லை. எந்தப் படைப் பினமும் எதையும் படைக்க முடியாது. படைத் ததும் இல்லை; இனிப் படைக்கப் போவதும் இல்லை; அப்படிப் படைத்திருந்தால் தானே ஐயம் கொள்ள முடியும்? அல்லாஹ்தான் அனைத்தின் படைப்பாளன், அணுவும் ஐயம் வேண்டாம்; குழப்பம் தேவையில்லை.
அப்படி இருந்திருந்தால், அனைத்தையும் படைத்தவன் யாரென்பதில் அவர்களுக்கு சந்தேகம் (குழப்பம்) ஏற்பட்டிருக்கலாம். (அப்படி ஏதும் நடக்கவில்லை). (அல்குர்ஆன்:13:16)
அல்லாஹ்வின் ஈடுஇணையற்ற தனித் தன்மை, அல்லாஹ்வின் படைப்பு ஆற்றல், அல்லாஹ்வை மட்டும் ஒரே இரட்சகனாய் அடையாளப்படுத்துகிறது. ஒவ்வொரு பொருளையும் படைத்தவன் அல் லாஹ்வே! “வஹுவல் வாஹித்’-தனித்தவனும் அவன் ஒருவனே! “அல் கஹ்ஹார்’-அனைத்தையும் அடக்கி ஆள்பவனுமாவான்’ (அல்லாஹ்) என்று நபியே நீர் பிரகடனப்படுத்தி விடும். (அல்குர்ஆன் : 13:16)
அல்லாஹ் தன்மையால், ஆற்றலால் படைப் புக்கள் அனைத்தையும் அடக்கி ஆளும் ஆளு மையால் தனித்தே நிற்கும் தனித்தவன்; தன்னி கரற்றவன்; ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவன். மட்டுமின்றி இறையோடு தொடர்புடையவை எதுவாய் இருப்பினும் தனித்தே நிற்கும் தனித் தன்மைதான்-இறை ஒருமை; அல்லாஹ்வின் ஒருமையின் தனித்துவம் இஃதே!
“வலம்யகுல்லஹூ குஃப்வன் அஹத்’: அவனுக்கு நிகராக எவரும், எதுவும் இல்லை.
(அல்குர்ஆன் :1 12:4)
அல்லாஹ் இதைத் திரும்பத் திரும்ப மானு டத்துக்கு நினைவூட்டுகிறான். ஆனால் மானு டம் உணர்ந்துள்ளதா? இல்லையே!
அல்லாஹ்வின் அனுக்கிரகம்:
மனிதர்கள் பெரும்பான்மை இறைக்கிணை யாக்கும் முஷ்ரிக்குகள்; இறையை நிராகரிக்கும் காஃபிர்கள். ஏற்றோர் பெரும்பாலோர் மொழிந்த தோடு சிலை வணக்கம் விட்டு அகன்றால் போதும் என்ற தவறான நம்பிக்கையைத் தவறு என்று உணரத் தவறியவர்கள். எனினும் அல் லாஹ்வின் அனுக்கிரகம் மனித சமுதாயத்தை என்றென்றும் ஆரத்தழுவிக் கொண்டிருப்ப தால், அல்லாஹ்வின் ஒருமை அதன் அருமையை அல்லாஹ் தன் அளப்பெரும் அருளால் நிலை நாட்டி வருகிறான். அல்ஹம்துலில்லாஹ்.
இது வரை எப்படியோ போகட்டும். இன்றே, இப்போதிருந்தே, நம்மில் ஒவ்வொருவரும் வாழ்வு முழுவதும், அல்லாஹ்வின் ஒருமை யைப் பிரதிபலித்து அல்லாஹ்வை ஒருமைப் படுத்துவோராய் மாறிவிட வேண்டும். இந்த ஆய்வை ஒருமுறை வாசிப்பதோடு நின்று விடா மல் ஒன்றுக்கும் பன்முறை ஆழ்ந்துச் சிந்தித்து,
படைப்பினங்கள் அனைத்தையும் எப்போதும் இரட்சிக்கும் “ரப்’-இரட்சகன் அல்லாஹ் ஒரு வனே! என அந்த ரப்புல் ஆலமீனை ஒருமைப் படுத்துக. மறவாது நினைவில் நிறுத்துக.
இனி செய்ய வேண்டியதென்ன?
இதுவரை எப்படியோ போகட்டும், இன்றே, இப்போதிருந்தே நம்மில் ஒவ்வொருவரும் வாழ்வு முழுவதும் அல்லாஹ்வின் ஒருமையைப் பிரதிப்பலித்து அல்லாஹ்வின் ஒருமையை ஏற்றோருக்கும், மானுடத்துக்கும் உணர்த்துக.
அல்லாஹ்வின் ஒருமையின் தவறான புரித லுக்கு இந்தியத் துணைக் கண்டம்-ஓர் மஹா மோசமான உதாரணம். ஏற்றோர் வாழ்வில் அல்லாஹ்வின் ஒருமையின் பெயரால் ´ர்க்-இறைக்கிணையாக்குதல், “ழளாளத்’-வழிகேடு கள் வணக்க வழிபாடுகளாய் அரங்கேறி வரு கின்றன. அல்லாஹ்வின் ஒருமையின் நுணுக் கம், நுட்பத்தை முறையாக அறிதல், சரியாக உணர்தல் அதிமுக்கியம். அப்போதுதான் வாழ்வு முழுவதும் அல்லாஹ்வின் ஒருமையைப் பிரதி பலிக்க முடியும். அதற்கான முயற்சிகளை உடன் மேற்கொள்ளுமாறு அன்பர்கள் அனை வரையும், அன்போடுக் கேட்டுக்கொள்கி றோம். உண்மை உணர்ந்தோர், உணராதோர் உணர அவசியம் உதவுக.
இன்ஷா அல்லாஹ், இந்த ஆய்வை புகைப் பட நகலாக்கி, அந்நஜாத் வாசிக்காதோருக்கு கொடுத்திடுக. வல்ல அல்லாஹ், நம் முயற்சிக்கு வெற்றி அருள்வானாக. ஆமீன்.
(இன்ஷா அல்லாஹ் மீண்டும் இரண்டாம் இயலில் சந்திப்போம்; சிந்திப்போம்; சீர் பெறுவோம்)
முக்கியப் பின்குறிப்பு:
பிரிவுகள் சார்ந்த அறிஞர்கள், அதன் பக்த கோடிகள் அல்லாஹ்வின் ஒருமையை எப்படி இறைக்கிணையாக்கும் மாபாதகமாய் மாற்றி வருகிறார்கள்? இன்ஷா அல்லாஹ் அடுத்து வரும் ஆய்வுகளில் காண்போம்.