பிரிவுகளின் உடும்புப் பிடியில் சிக்கியிருப்போரே!
ஆழ்ந்து சிந்திப்பீர்!
பிரிவுகளால் நாசமே! மோசம் போகாதீர்!
சுன்னத் ஜமாஅத் பிரிவார் அரங்கேற்றும் மெகா – மாபாதகங்கள்!
பிரிவுகள் விட்டு உடன் விலகிடுவீர்!
அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை!
உற்று நோக்குக:
முஹிப்புல் இஸ்லாம்
எவர்கள் தங்களுடைய தீனை, மார்க்க நெறியைத் துண்டு துண்டாக்கி, பல்வேறு குழுக்களாய் பிரிந்து விட்டார்களோ…அவர்களோடு நிச்சயமாக உமக்கு எவ்விதத் தொடர்புமில்லை. அவர்களுடைய விவகாரம் அல்லாஹ்வின் பொறுப்பிலேயே உள்ளது.
அவர்கள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்பதையும் அவனே அவர்களுக்கு அறிவித்துக் கொடுப்பான்? (அல்குர்ஆன்: அல்அன்ஆம்:6:159)
சண்டாளர்களின் சதி:
இஸ்லாத்தில் இருப்பதாய் முஸ்லிம்கள் நம்பிக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அந்த முஸ்லிம்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேற்றப் படவும் வேண்டும். முஸ்லிம்கள் உண்மை முஸ் லிமாய் மாறிவிடக் கூடாது. எப்போதும் போலி களாய் இருக்க வேண்டும்.
இஸ்லாத்தை வளர்ப்பதாய் மனப்பால் குடித்துக் கொண்டு இஸ்லாத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய், பகுதி பகுதியாய் எப்படி முடியுமோ, அப்படியே இஸ்லாத்தை அழிக்கும் சதிகார சண்டாள யூத, கிருத்துவ சூழ்ச்சியின் எதிரொலி தான் பிரிவுகள். முறையாகவும், சரியாகவும் இதை உணரவிடாது போலிகள் தடுக்கப் படுகிறார்கள். அஸ்தஃபிருல்லாஹ்; வநவூது பில்லாஹிமின்ஹா.
இஸ்லாத்தின் காப்பாளன் அல்லாஹ்: இஸ்லாத்தை அழிக்கும் சதியில் யூத கிருத்தவர்களுக்குத் தோல்வி. இஸ்லாத்தின் காப்பாளன் அதை அருளிய அல்லாஹ்தான். அதனால் இஸ்லாத்தை எவராலும் எந்தச் சக்தியாலும் அழித்து விட முடியாது. முன் எப்போதைக் காட்டிலும் மானுடத்தின் முழுக்கவனம் இஸ்லாத்தின் பக்கம் பதியத் துவங்கியுள்ளது தான் இதற் குப் போதுமான சான்றாகும். அல்ஹம்து லில்லாஹ்.
போலிகளை இஸ்லாத்தை விட்டு வெளியேற்றுவதில் சதிகாரர்கள் வெற்றிபெற்றுள்ளனர். பிரிவுகள் விட்டு விலகி நிற்கும் வெகு சிலர் நீங்கலாய், போலிகள் அனைவரும் 1400 ஆண்டுகளாய் பிரிவுகளில் சிக்கியுள்ளதுதான் இதை மெய்ப்பிக்கும் சான்றாகும். முற்காலம், இடைக்காலம், தற்காலம் என்று கொழுத்துக் கொண்டிருக்கும் கணக்கற்றப் பிரிவுகளும் சம காலத்தில் புதிது புதிதாய்த் தோன்றி வரும் புதுப்புதுப் பிரிவுகளும் மேலும் எமது கூற்றை ஊர்ஜிதம் செய்யும் சான்றுகளாகும்.
பிரிவுகளின் திருவிளையாடல்கள்:
இஸ்லாத்தின் ஒருங்கிணைந்த அங்கங்களைத் தனித்தனியே பிய்த்தெடுத்து பிரிவுகளாக்கி விடுவது,
*பிரிவுக்குள் போலிகளை நிரந்தரமாய்ச் சிக்க வைப்பது
*பிரிவுகளுக்குள் உட்பிரிவுகள், அவற்றிற்கு முற்றிலும் ஒன்றுக்கொன்று முரண்பாடான பிரிவுகளை மிகத் தந்திரமாய் ஏற்படுத்தி இருப்பது, அப்போதுதான் சார்ந்துள்ள பிரிவு, அல்லது பிரிவில் உள்ளோர் பிடிக்கவில்லையெனில் எளிதாக வேறொரு பிரிவுக்குத் தாவ விடுவது, தாவி விடுவது. இதுதான் போலிகளை நிரந்தரமாய்ப் பிரிவுக்குள் சிக்கவைக்கும் குள்ள நரித்தனம்!
*பிரிவுகளுக்குள் சிக்கிய போலிகளை மோத விடுவது, பிரிவுக்குப் பிரிவு அபிப்ராய பேதங்களால் முட்டி மோதிக் கொள்வதை வாடிக்கையாக்கி விடுவது,
*பிரிவுகளால் 1400 ஆண்டுகளாய் போலிகளுக்கு அழிவு, அழிவுக்குமேல் அழிவு. பிரிவு சங்கத்தோர்க்கு ஈடு செய்ய முடியாத இழப்புக்கள், இழப்புகளுக்கு மேல் இழப்புகள். குறிப்பாய் பிரிவுகள் சார்ந்தோரின் உயிர் இழப்புக்கள், நாட்டழிப்புக்கள், கடும் சேதாரங்கள்…. இத்யாதி…. இத்யாதி… இன்றளவும் போலிகள் படிப்பினைப் பெறவில்லை, போலிகள் அலைக்கழிக்கப் படுவதும், அல்லாடுவதும் தான் கண்ட பலன்.
கொழுத்துக் கொண்டிருக்கும் பிரிவுகள்:
பிரிவுகளால் இஸ்லாம் வளரவில்லை; வளர்க்கவும் முடியாது. பிரிவுகளால், பிரிவுகள்தான் கொழுத்து வருகின்றன. இஸ்லாத்தை அல்ல. பிரிவுகள் குவித்துக் கொண்டிருக்கும் அவமரியாதை இஸ்லாத்திற்கு ஏற்படும் தலைக்குனிவாக மாறி விடுகிறது; அல்லது மாற்றப்படுகிறது. பிரிவுகள் இஸ்லாத்துக்குச் செய்யும் மெகா துரோகம் இதுதான். பிரிவுகள் சார்ந்தோர் இது உணர்தல் அவசியம்; காலத்தின் கட்டாயம்.
பிரிவுகள் விட்டு உடன் வெளியேறுக:
ஆழ்ந்து சிந்தித்து பிரிவுகள் விட்டு உடன் வெளியேறி இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடவேண்டும். (காண்க: அல்குர்ஆன்: 2:208)
இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்தால்தான் இஸ்லாத்தை நிலைநாட்ட முடியும். இல்லையெனில் பிரிவுகளைக் கொழுக்கச் செய்தக் குற்றத்திலிருந்து எக்காரணத்தாலும் அல்லாஹ்விடம் தப்பிவிட முடியாது. காரணம் பிரிவுகள் ஷைத்தானின் அடிச் சுவடுகளைப் பின்பற்றுவதாகும். (பார்க்க. 2:208,209)
மார்க்கத்தின் பிரதான அங்கங்களில் ஒன்றை அல்லது சிலதை அதுவும் இல்லையெனில் இசை விற்கேற்ற அம்சங்கள் துண்டாடப்படும்போது பிரிவுகள் தோற்ற(ம்)மாகின்றன.
மார்க்கத்துண்டாடல்:
இஸ்லாத்திலிருந்து “சுன்னா’வைப் பெயர்த் தெடுத்து “சுன்னத் ஜமாஅத்’ பிரிவும் அதிலிருந்து பல்வேறு உட்பிரிவுகளும் தோன்றின.
பெயரில் “சுன்னா’, இருந்தாலும் பெரும்பாலான ´யாக்களின் வழிகேடுகள், வணக்க வழிபாடுகள் போர்வைக்குள் ´ஷிர்க்-இறைக்கிணையாக்குதல்கள், மூடச் சடங்கு சம்பிர தாய “பித்அத்’ அனாச்சாரங்கள், இஸ்லாத்திற் கெதிரான பல்வேறு வழிகேடுகள் இஸ்லாமிய முலாமில் துணிந்து “சுன்னத் ஜமாஅத்’ தினர் அரங்கேற்றி வருகின்றனர்.
மத்ஹப்கள் வழிபா(கே)டு:
“சுன்னத் ஜமாஅத்’தார்கள். இஸ்லாத்திற்கெதிரானவற்றை வழிநடத்தும் நடத்துநர்கள் தான் நான்கு “மத்ஹப்’கள். “மத்ஹப்’ சார்ந்தோருக்கு “மத்ஹப்’கள்தான் இஸ்லாமாகத் தெரிகிறது; உண்மை இஸ்லாம் புறந்தள்ளப்படுகிறது. “மத்ஹப்’ ஒவ்வொன்றும் ஒவ்வொரு பிரிவாய்த் தெரிவதில்லை. கண்மூடித்தனமான “மத்ஹப்’ வெறி “மத்ஹப்’களைப் பூஜிக்க வைக்கிறது.
பிளந்தெடுக்கும் மாபாதகம்:
மிக, மிக குறைவான நன்மைகள் தந்து, “முஸ்லிம் உம்மத்’தைப் பிளந்தெடுத்த மாபாதகம் தான் மத்ஹப்கள் செய்து வரும் திருப்பணி. (ஒப்புநோக்குக: அல்குர்ஆன்:2:219) இதனால் தான் “மத்ஹப்’களைக் கடுமையாக விமர்சிக்கும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
மத்ஹப்கள் அரங்கேற்றி வரும் மாபாதகங்கள்:
அல்குர்ஆன் நேரிடையாக கடுங்கண்டனத்துடன் எச்சரிக்கும் “´ஷிர்க்’ இறைக்கு இணையாக்கும் மாபாதகங்கள், “மத்ஹப்’கள் பெயரால் குறிப்பாக இந்தியத் துணைக் கண்ட “ஹனஃபி’, “ஷாஃபி’ மத்ஹபினரால் துணிந்து அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இது மத்ஹப் வாதிகள் அல்லாஹ்வின் ஒருமைக்கு இழைத்துக் கொண்டிருக்கும் மாபெரும் அநீதி! இதைப் பொதுமக்கள் உணர்தல் அவசியம்; காலத்தின் கட்டாயம்.
சுன்னாக்களைத் தகர்த்தெறியும் சுன்னத் ஜமாஅத்:
“சுன்னத் ஜமாஅத்’ லேபிளில் பல உண்மை சுன்னாக்கள் தகர்த்தெறியப்படுகின்றன. பித்அத்-மூடச் சடங்கு சம்பிரதாய அனாச்சாரங்கள் “சுன்னா’ என ராஜமரியாதையுடன் அரங்கேற்றப்படுகின்றன. பொதுமக்கள் கவனப்படுத்திக் கொள்ள வேண்டிய மிக முக்கிய விடயம் யாதெனில், பிரிவுகள் இஸ்லாத்திற்கு எதிரானவை. இஸ்லாத்திற்கு எதிரானவை இஸ்லாமாக சர்வ சாதாரணமாய் அரங்கேறி வருகின்றன. ஹலால் ஹராமாகிறது. ஹராம் ஹலாலாகிறது. இஸ்லாமிய மீறலுக்குப் பஞ்சமில்லை.
“மத்ஹப்’ பெயரால் ´ஷியாக்களின் வழிகேடு களும், “´ஷிர்க்’-இறைக்கிணையாக்கும் மாபாத கங்களும் வணக்க வழிபாடுகளாய் சர்வ சாதார ணமாய் அரங்கேறக் காரணம் என்ன?
“தக்லீத்’-கண்மூடித்தனமான பின்பற்றுதல்:
“தக்லீத்’தான் “மத்ஹப்’, “மத்ஹப்’தான் “தக்லீத்’ அல்குர்ஆன் நெடுகிலும் “தக்லீத்’ மீது கடுங் கண்டனக் கணைகள் தொடுக்கப்பட்டுள்ளன.
இன்று இயக்கங்களும் உள்ளடக்கம்.
1. …நபியே நீர் கேளும்!
… குருடனும் பார்வையுடையவனும் சமமா வார்களா?… அல்குர்ஆன்: 6:50, 13:16, 35:19)
2. …. அல்லது இருளும் ஒளியும் சமமாகுமா?
(அல்குர்ஆன் : 13:16, 35:20)
3. … நீங்கள் சிந்திக்க வேண்டாமா?
(அல்குர்ஆன்: 06:50)
4. நிழலும் வெயிலும் (சமமாகா)
(அல்குர்ஆன்:35:21)
5. அன்றியும் உயிருள்ளவர்களும், இறந்தவர் களும் சமமாகமாட்டார்கள்.
(அல்குர்ஆன்: 35:22)
6. குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்.
ஈமான் கொண்டு நற்செயல்கள் செய் வோரும், தீயோரும் சமமாக மாட்டார்கள்.
உங்களில் சொற்பமானவர்களே (இது கொண்டு உபதேசம்) படிப்பினை பெறுகிறீர்கள்.
(அல்குர்ஆன்: 40:58)
7. இதயங்களில் பூட்டுப் போடப்பட்டுள்ளனவா? (47:24)
பிரிவுகள் கண்மூடித்தனத்திலிருந்து உடன் விடுபடுதல் அவசியம்.
அதன் அடையாளம்தான் அல்லாஹ் அருளியதைப் பின்பற்றுவதாகும்: மானுடத்துக்கு இதை அறிவுறுத்த நபிக்கு அல்லாஹ்வின் நேரடிக் கட்டளை.
…. எனக்கு (வஹியாக) அறிவிக்கப்பட்டதைத் தவிர(வேறு எதையும்) நான் பின்பற்றவில்லை.
(நபியே!) நீர் கேளும்? குருடனும் பார்வையுடை யவனும் சமமாவார்களா? நீங்கள் சிந்திக்க வேண்டாமா? (அல்குர்ஆன்: 6:50)
அல்லாஹ் அருளிய ஆதாரங்களை உற்று நோக்குதல், அதை ஆழ்ந்து சிந்தித்து கண்மூடித்தனத்திலிருந்து உடன் விடுபடும் உபயம், மீறின் கேடு விளையும்:
நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இரட்சகனிட மிருந்து ஆதாரங்கள் வந்துள்ளன.
எவர் அவற்றை (உற்று) நோக்குகிறாரோ, அது அவருக்கே நன்மையாகும்.
எவர் (அவற்றை நோக்காது) குருடராகிவிடுகி றாரோ அது அவருக்கே கேடாகும்.
நான் உங்களைக் காப்பவன் அல்லன் என்று நபியே! நீர் எச்சரித்துவிடும். (அல்குர்ஆன்:6:104)
அல்லாஹ் அருளிய வாழ்க்கை நெறி-இஸ் லாம், அனைத்து வகைப் பிரிவுகளுக்கும் நிரந்தர முற்றுப்புள்ளியானது. அல்லாஹ் தன் அருட் கொடைகளைப் பரிபூரணமாக்கி, இஸ்லாத்தை நிறைவுக்குக் கொண்டு வந்தபோது (காண்க. அல்குர்ஆன்: 5:3)
இஸ்லாத்தின் இலட்சியமாகிய “உம்மத்தன் வாஹிதா’-ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயம் இயல்பாக உருவாகியிருந்தது. அல்ஹம்து லில்லாஹ்.
“ஹஜ்ஜத்துல் விதாவு’-விடைபெறும் ஹஜ் ஜில் நபியவர்கள் தலைமையில் அரஃபா மைதா னத்தில் குழுமியிருந்த இலட்சத்திற்கும் மேற் பட்ட அஸ்ஹாபிகள் அனைவரும் ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயத்தின் அங்கங்களாய்த் திகழ்ந் தார்கள். அனைத்துவகைப் பிரிவுகளும் முற்றாக ஒழிக்கப்பட்டிருந்தன. இஸ்லாத்தில் இம்மியும் பிரிவுகளுக்கு இடமில்லை. நபி(ஸல்) அவர்க ளும், அஸ்ஹாபிகளும் ஒன்றுபட்ட சமுதாயத் தின் வாழ்வியல் வடிவங்களாய்த் திகழ்ந்தது போல், அனைத்துவகை பிரிவுகள் விட்டும் விடு பட பிரிவுகள் சார்ந்தோரை அன்போடு அழைக் கிறோம். முயற்சிப்போம். இன்ஷா அல்லாஹ் வெற்றி நிச்சயம். அல்லாஹ் அருள் செய்வானாக. ஆமீன்.
இஸ்லாத்தோடு ஐக்கியமாவோம்! அனைத்து பிரிவுகளுக்கும் நிரந்தர மூடு விழா நடத்துவோம்!