கே.எம்.எச்.
இதோ அஹ்லுஸ் சுன்னா ஏடு தனது ஆகஸ்ட் 2012 பக்கம் 56ல் தரும் ஆதாரம்:
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அல்லது நபி தோழர்களின் காலத்தில் இமாமத்(பணி) செய்வதற்கு மாத சம்பளம் தரப்படவில்லை. ஆனால் இன்று இமாமத் செய்வதற்கு மாத சம்பளமும், தராவீஹ்(?) சிறப்பு தொழுகை நடத்துவதற்கு சிறப்புக் கூலியும், பாங்கு மற்றும் இகாமத் சொல்வதற்கு மாதாந்திர சம்பளமும் வழங்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு சம்பளம் வழங்கப்படுவதால்தான் அக்காரியம் சீராக நடக்கிறது. நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத இந்த நடைமுறை பித்அத் என்று கூறி தடை செய்துவிட்டால் சீராக நடக்கும் பணி சீர் குலைந்துவிடும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இதுபோன்ற பித்அத்கள் வாஜிப் அவசியமாகும் என்பதே சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையை சார்ந்த எங்களின் கருத்தாகும். ஏனெனில் இந்த பித்அத்தின் மூலம் சமூகத்திற்கு நன்மை தானே அன்றி தீமை கிடையாது.
யாரேனுமொருவன் ஒரு பித்அத்தைக் குறித்து இது “”பித்அத்ஹஸனா”-அழகிய பித்அத் என்று கூறி னால், அவன் நபியவர்கள் கொண்டுவந்த ரிசாலத் (தூதுவத்)தில் அவர்கள் சதி செய்து விட்டார்கள் என்று எண்ணுகிறான் என்று இமாம் மாலிக்(ரஹ்) கூறியுள்ளார் (அஸ்ஸுனனு வல்முப்ததஆத்), சு.ஜ. மவ்லவிகள் மரியாதைக்குரிய நான்கு இமாம்களை மதிக்கிறார்களா? அல்லது மிதிக்கிறார்களா? நீங்களே முடிவு செய்யுங்கள்.
தடை இல்லாவிட்டாலும்! கடமையான மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவது கூடாது என்று குர்ஆனிலும், ஹதீஃதிலும் தடை இல்லாத நிலையில் நபி(ஸல்) அவர்கள் காலத்தில் அல்லது நபி தோழர்களின் காலத்தில் இமாமத்(பணி) செய்வதற்கு மாதச் சம்பளம் தரப்படாத நிலையில் இன்று இப்பணிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டாலும் அது கூடாது தான். ஆயினும் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் இக்கொள்கையை சரிகண்டு அவர்கள் கொடுக்கும் சுய விளக்கத்தை ஓரளவாவது ஏற்கலாம்.
அதற்கு மாறாக குர்ஆனிலும், ஹதீஃதிலும் தெளிவான நேரடியான தடை இருக்கும் நிலையில் இந்த சுய விளக்கத்தின் நிலை என்ன? சிந்திப்பீர். 2:159 இறைக் கட்டளை சொல்வது போல் அல்லாஹ் நேர்வழியையும், அத்தாட்சிகளையும் தெளி வாக மனிதர்களுக்காக விளக்கிய பின்னர் அந்த நேர் வழியை மறைப்பது தானே சு.ஜ.வினரின் கொள்கை. அவர்களின் முடிவையும் 2:161,162, 33:21, 33:66-68 இறைவாக்குகளை நீங்களே படித்துப் பார்த்து சு.ஜ. வினரின் வழிகேட்டையும் புரிந்து கொள்ளுங்கள்.
மேலும் சு.ஜ.வினரின் சுய விளக்கம் எந்த அளவு அபத்தமானது, வழிகேடானது என்பதையும் சிந்தித்து விளங்குங்கள். விதிக்கப்பட்டக் கடமையான மார்க்கப் பணிகளுக்குச் சம்பளம் வழங்கப்படுவதால்தான் அக்காரியங்கள் சீராக நடக்கின்றனவாம். நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத, குர் ஆனும், ஹதீஃதும் நேரடியாகத் தடை செய்யும் இந்த நடைமுறைகள் பித்அத் என்று கூறி தடை செய்துவிட்டால் சீராக நடக்கும் பணிகள் சீர் குலைந்து விடும் என்பதில் சந்தேகமில்லையாம்! ஆகா! என்னே மணியான சுய விளக்கம்.
ஆதம்(அலை) ஏமாற்றப்பட்டார்!
ஆதிபிதா ஆதம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ்வின் “”அம்மரத்தை மட்டும் நெருங்காதே!” என்ற நேரடிக்கட்டளையை விட, ஷைத்தானின் “”அம்மரத்தை நெருங்கிவிட்டால் உமக்கு மரணமே இல்லை; நித்திய அரசாங்கம் கிடைத்துவிடும்” என்ற சுய விளக்கம் அழகாகவும், சரியாகவும் தெரிந்தது போல், ஆதத்தின் சந்ததிகளில் மிகப் பெரும்பான்மையினருக்கு, “”தாஃகூத்” என்று குர்ஆன் கூறும் மனித ஷைத்தான்களாகிய இம்மவ்லவிகளின் இந்த சுய விளக்கம் அழகாகவும், சரியாகவும் தெரியத்தான் செய்யும்.
இம்மதகுருமார்களின் இச்சுயவிளக்கத்தைச் சிறிது சிந்தித்துப் பாருங்கள். கூலி கூடாது என்பது அல்லாஹ்வின், அவனது தூதரின் கட்டளை. கூலி இல்லாவிட்டால் மார்க்கப் பணிகள் சீராக நடக்காமல் சீர்குலைந்துவிடும் என்பது இவர்களின் சுய விளக்கம். அப்படியானால் கூலி இல்லாவிட்டால் மார்க்கப் பணிகள் சீர்குலைந்துவிடும் என்பதைத் தெரியாமல் அல்லாஹ்வும், அவனது தூதரும் கூலி கூடாது என்று தவறாகச் சொல்லி விட்டார்கள் என்பதுதானே இந்த தாஃகூத்களின் கருத்து. அதாவது 49:16 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ்வுக்கே இவர்கள் மார்க்கத்தைக் கற்றுக் கொடுக்கிறார்கள் என்பது தானே அதன் பொருள். 42:21 இறைவாக்குக் கூறுவது போல் அல்லாஹ் வுக்கே இணையாளர்களாகி அல்லாஹ் விதிக்காததை விதிக்கும் தாஃகூத்கள் என்பதில் சந்தேக முண்டா? நேரடியாக குர்ஆன் கூறும் கருத்துகள் அனைத்தும் இம்மவ்லவிகளின் இப்படிப்பட்ட சுய விளக்கங்களால் 2:39 இறைவாக்குக் கூறுவது போல் மறுத்து நிராகரிக்கப்படுகின்றன.
கூலிதான் சீராக நடக்க வைக்கிறதா?
மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதால் தான் அப்பணிகள் சீராக நடப்பதாகக் கதையளந்திருக்கிறார்களே அது வடிகட்டியப் பொய் என்பதை விளங்க முடியவில்லையா? முஸ்லிம்கள் அனைவரும் ஐவேளைகளும் தவறாது தொழுது வருகிறார்களா? முஸ்லிம் சமுதாயத்தில் 5% சதவிகிதத்தினராவது தொழுகையாளிகளாக இருக்கிறார்களா? சில பள்ளிகளில் கூலிக்கு மாரடிக்கும் இமாமும் முஅத்தினும் மட்டுமே தொழுது வரும் அவலமே காணப்படுகிறது. இந்த மவ்லவிகளே இஃலாசுடன் அல்லாஹ்வுக்காக தொழத் தயாரில்லை எனும் போது இவர்களால் இழிவாகப் பார்க்கப்படும் பொதுமக்கள் இஃலாசுடன் தொழ வருவதை எதிர் பார்க்க முடியுமா? அவர்களுக்கும் மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டால் பள்ளிகள் நிறைந்து வழியும்! இரு சாராரின் ஈமானின் நிலை இதுதான்!
குர்ஆன், ஹதீஃத் தொடர்புடைய இம்மவ்லவிகளுக்கே அல்லாஹ்வுக்காக இஃலாசுடன் தொழும் அளவில் ஈமான் உறுதி இல்லை என்றால், குர்ஆன், ஹதீஃதை விட்டும் இம் மவ்லவிகளால் தூரப்படுத்தப்பட்டுள்ள பொது மக்களிடம் ஈமானின் உறுதியை எதிர்பார்க்க முடியுமா? தொழ வருபவர்களில் பலர் வெறுமனே குனிந்து நிமிர்வதைத் தவிர வேறொன்றும் அறியாதிருக்கின்றனர். பலர் இஸ்லாமிய தொழுகையைத் தொழவில்லை. யூதக் கைக் கூலிகள் கற்பனை செய்த மத்ஹபு தொழுகைகளையே தொழுகின்றனர். இப்போது சிலர் கூலிக்கு மாரடிக்கும், சமுதாயத்தைப் பிளவு படுத்தும் இயக்கவாதிகளின் தொழுகைகளையே தொழுகின்றனர். அல்லாஹ் கட்டளையிட்டு நபி (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய தொழுகை முறை இவர்களில் யாரிடமும் இல்லை. சம்பளம் என்ற அற்பக் காசைப் பெறுகிறவர்கள் ஒருபோதும் நேர்வழியை மக்களுக்குக் காட்டமாட்டார்கள், கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார் கள் என்பதை 36:21, 31:6, 11:18,19, 9:9, 3:187 போன்ற இறைவாக்குகளை நீங்களே படித்து விளங்கலாம்.
குர்ஆனை நெருங்க விடாமல் தடுப்பதேன்?
இம்மவ்லவிகள் மார்க்கப் பணிக்குக் கூலி வாங்குவதால் பொதுமக்கள் குர்ஆனைப் படித்து விளங்கி விட்டால் தங்கள் பிழைப்புக்கு ஆபத்து வந்துவிடும் என அஞ்சியே பொதுமக்கள் குர்ஆனை நெருங்கவிடாமல் கடுமையாகத் தடுத்து வருகிறார் கள். குர்ஆனை ஒளூ என்ற அதிசுத்தமான நிலையிலேயே தொடவேண்டும்.
சாதாரண நிலையில் தொடவே கூடாது; கொடிய ஹராம். முஸ்லிம் அல்லாதாருக்குக் கொடுக்கவே கூடாது; கொடிய ஹராம், அரபி மொழி கற்ற மவ்லவி-ஆலிம் அல்லாதவர்களுக்கு குர்ஆன் விளங்காது. குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் படித்து விளங்க முற்படுவது “”பித்அத்-ஹராம் என்று சரடு விட்டு ஆதத்தின் சந்ததிகளை ”ஹுதன்லின்னாஸ்”-மனித வர்க்கத்திற்கே நேர்வழி காட்டுவது என்று பகரா: 2:185, இம்ரான் 3:4 இறைவாக்குகளில் நேரடியாகக் கூறி இருப்பதை 2:39 சொல்வது போல் நிராகரித்து குஃப்ரிலாகும் அளவில் குர்ஆனை விட்டுத் தடுக்கும் அளவுக்கு ஹராமான உணவு, உடை, இருப்பிடம் காரணமாக அவர்களது உள்ளங்கள் சுருங்கி இறுகிக் கற்பாறைகள் போல் ஆகிவிட்டன என்பதை 2:74, 5:13, 6:125 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
முஸ்லிம் அல்லாதவர்களையும், முஸ்லிம்களையும் வாழ்வியல் வழிகாட்டி குர்ஆனை விட்டுத் தூரப்படுத்திவிட்டு, குர்ஆனுக்கு முற்றிலும் முரண் பட்ட மத்ஹபு, தரீக்கா, மஸ்லக், இயக்கம், ஜமாஅத் என 21:92, 23:52 இறைவாக்குகளை நிராகரித்து 2:39 சொல்வது போல் குஃப்ரிலாகி முஸ்லிம் சமுதாயத் தைப் பல பிரிவுகளாகப் பிரித்து ஆதிக்கம் செலுத்தி ஆதாயம் அடைந்து வருகிறார்கள். 3:103, 105, 6:153,159, 30:32, 42:13,14 போன்ற இறைக் கட்ட ளைகளைத் துச்சமாக மதித்து முதுகுக்குப் பின்னால் 3:187 சொல்வது போல் தூக்கி எறிந்து விட்டு 2:159, 33:36 இறைக் கட்டளைகளை நிராகரித்து சுய விளக்கங்கள் மூலம் மக்களை ஏமாற்றி வஞ்சிப்பது இந்த மவ்லவிகளுக்குக் கைவந்த கலையாக இருக்கிறது.
மவ்லவிகளின் அபூஜஹீல் வாதம்!
அது மட்டுமா? குர்ஆன் மொழி பெயர்ப்புகளைப் பார்த்து மார்க்கம் விளங்க முடியாது என்ற இந்த மவ்லவிகளின் துர்போதனையை தூக்கி எறிந்துவிட்டு, நேரடியாக குர்ஆனைப் படித்து விளங்குகிறவர்கள் இந்த மவ்லவிகளின் குருட்டு ஃபத்வாக்கள் குர்ஆனுக்கு முரணாக இருப்பதைப் பார்த்து அவர்களிடம் போய் விளக்கம் கேட்டால், உடனே அவர்களை மட்டம் தட்டி நீ என்ன மவ்லவியா? ஆலிமா? உனக்கு அரபி தெரியுமா? பெரிதாக குர்ஆன், ஹதீஃதை கேட்க வந்துவிட் டாய்? என அவர்களை இழித்துரைக்க முற்படுகிறார்கள்.
இவர்களை ஆலிம்கள் என ஏற்பதா? வடிகட்டிய ஜாஹில்கள்-மடையர்கள் என ஏற்பதா? சொல்லுங்கள். உண்மையில் இந்த மவ்லவிகள் குர்ஆன், ஹதீஃ தில் உள்ளதை உள்ளபடிச் சொல்லக் கூடியவர்க ளாக இருந்தால் அல்லவா உடனடியாக ஆதாரங்களை எடுத்துக் காட்ட முடியும். இவர்கள் குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரணான இவர்களின் முன் னோர்களின் யூகங்களையும் கற்பனைகளையுமே மார்க்கமாக மக்களுக்குப் போதிக்கிறார்கள். (பார்க்க: 6:116, 148, 7:71, 10:36,60,66, 12:40, 38:27, 53:23,28) மற்றபடி இறைவனிடமிருந்து வந்த எந்த ஆதாரமும் இம்மவ்லவிகளிடம் இல்லை. அதனால் தான் தட்டுத்தடுமாறி “”நீ என்ன ஆலிமா? மவ்லவியா? உனக்கு அரபி தெரியுமா? எனப் பிதற்றுகிறார்கள். அபூ ஜஹீலைப் பின்பற்றுகிறார்கள்!
பித்அத், குஃப்ர், ´ர்க் இவற்றை அரங்கேற்ற ஒரே வழி!
இப்படிப் பெருங்கொண்ட முஸ்லிம்களை குர்ஆன், ஹதீஃதை விட்டு முற்றிலும் அப்புறப் படுத்திவிட்டு, மார்க்கத்தின் பெயரால் கத்தம், ஃபாத்தியா, மீலாது, மவ்லூது, கூடு, கொடி, கந்தூரி, இத்யாதி, இத்யாதி பித்அத், குஃப்ர், ´ஷிர்க் போன்ற அனாச்சாரங்கள், ஆர்ப்பாட்டம், போராட்டம், பந்த், சாலை மறியல், வாழ்வுரிமைப் போராட்டம், இழந்ததைப் பெற, இருப்பதைக் காக்க, இட ஒதுக்கீடு, ஒற்றைக் கோரிக்கை என குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரணான, அல்லாஹ் கொடுப் பதை யாராலும் தடுக்க முடியாது, தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது. முஸ்லிம்கள் இன்று அனுபவிப்பவை அனைத்தும் அவர்க ளின் கைகள் தேடிக் கொண்டவையே, முஸ் லிம்கள் தங்களின் நிலையை மாற்றிக் கொள்ளா தவரை அல்லாஹ் முஸ்லிம்களின் நிலையை மாற்றமாட்டான் (13:11) போன்ற எண்ணற்ற இறைவாக்குகளை நிராகரித்து, அப்பாவி மக்களை இவற்றில் ஈடுபட வைத்து நரகில் தள்ள இந்த மவ்லவிகளுக்கு எளிதாகச் சாத்தியப்படுகிறது.
அதனால்தான் நாம் மக்களுக்கு இவ்வாறு சொல்லச் சொல்கிறோம். “”நீங்கள் ஆலிம் என்ற நம்பிக்கையில் தான் உங்களிடம் வந்து எனது சந்தேகங்களைக் கேட்டேன். இப்போதுதான் எனக்குத் தெரிகிறது நீங்கள் ஆலிம் அல்ல ஜாஹில் என்று” இப்படி முகத்தில் அடித்தால் போல் தைரியமாகச் சொல்லி விட்டு “”வ இஃதாஃகா(த்)தபுஹுமுல் ஜாஹிலூன காலூ சலாமா”-மூடர்கள் அவர்களுடன் வாதிட்டால், ஸலாம் எனக் கூறி விலகிவிடுவார்கள் என்ற 25:63 குர்ஆன் வசனத்தையும் படித்துக் காட்டுங் கள், என்று கூறிவருகிறோம். எழுதி வருகிறோம்.
இந்த மவ்லவிகள் அல்லாஹ்வுக்காக இஃலா சுடன் கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிந்தால், அவர்கள் மக்களைப் பார்த்து அல்லாஹ் 2:185, 4:28, 22:78, 54:17,22,32,40 போன்ற பல இடங்களில் பொது மக்களும் விளங்கும் அளவில் குர்ஆனை மிகமிக எளிதாக்கி இருப்பதாகக் கூறுகிறான். 29:69 இறைவாக்கு உறுதி அளிப்பது போல் நீங்கள் முயன்றால் நேர்வழியை அல்லாஹ் எளிதாக்கித் தருவான் என்று உண்மையைச் சொல்ல முடியும். மக்களும் குர்ஆனில் பாடுபட்டு நேர்வழி பெறுவார்கள். அப்போதுதான் மார்க்கப் பணிகள் சீராக நடக்கும்.
7:175-179, 25:27-31, 33:66-68, 47:24-30 போன்ற இறைவாக்குகளை மீண்டும் மீண்டும் படித்து அவற்றின் பொருளை மனதில் முழுமையாகப் பதித்துக் கொண்டவர்கள்,
அல்லாஹ்வின் படைப்புகளிலேயே அதுவும் வானத்தின் கீழ் படைக்கப்பட்ட படைப்புகளிலேயே ஆகக் கேடுகெட்டவர்கள் அனைத்து மதங்களின் மதகுருமார்கள், அவர்களிலும் ஆக கேடுகெட்டவர்கள் இறுதி நெறிநூல் குர்ஆனைப் பெற்றுள்ள முஸ்லிம் மதகுருமார்கள், அவர்களிலும் ஆகக் கேடு கெட்டவர்கள் “”எங்களுக்கு இஸ்லாம் அல்லாத இயக்கம் இல்லை; ஒவ்வொரு ஆணும் பெண்ணும் சுயமாக மார்க்கத்தை விளங்கிச் செயல்படவேண்டும், நாங்கள் புரோகிதர்களான மத குருமார்களை சப்ளை செய்வதில்லை” என்று 1986ல் உறுதியாக வாக்களித்துவிட்டு 47:24-30 இறைவாக்குகள் சொல்வது போல் உலக அற்ப ஆதாயங்களில் மயங்கி தடம் புரண்டு சென்ற ததஜ புரோகிதரும் அவரின் கைத்தடிகளுமே!