MTM. முஜீபுதீன், இலங்கை
ஆகஸ்ட் 2012 தொடர்ச்சி …
சாதி வேறுபாடு :
அவர்களை வேறுபட்ட தொழில் செய்தல் வேண்டும் எனப் பிரித்து உழைக்கும் ஒரு மக்கள் பிரிவினரை பிராமணரின் அடிமைகளாக 5000 வருடங்கள் பின்வரும் சுலோகத்தைக் காட்டி வைத்துள்ளீர்களே! திராவிடர்களே! அபின் உண்ட மயக்கத்தில் இருக்காது அவதானியுங்கள்.
சூத்திரர்களின் உடமைகளை பிராமணர்கள் பறிக்கலாம். ஏனெனில், அவர்கள் சூத்திரர்களின் எஜமானர்கள். (மனுதர்மம் : 8:47)
சூத்திரர்கள் பிராமணர்களுக்கு அடிமைகளாக படைக்கப்பட்டிருக்கின்றனர். (8:413)
இவ்வாறு இந்தியாவில் மக்களை வேறுபடுத்தி செய்யும் தொழில்களை வேறுபடுத்தி வைத்ததின் விளைவு பின்வருவன ஆகும்.
1. நாட்டு மக்களிடையே வருமான ஏற்றத் தாழ்வுகள் அதிகரிப்பு.
2. ஹரிஜனங்கள், பூர்வீக குடிகளில் கல்வி அறிவு குறைவு.
3. இதனால் தொழில் வாய்ப்புகளில் பின்னடைவு.
4. கல்வி அறிவு குறைந்ததினால் பிராமணரிலும் கூடியளவில் ஹரிஜனங்களில் தீமைகளும், குற்றச் செயல்களும் அதிகரிக்க சாதியினால் நிந்திக்கப்படல்.
5. கூடியளவில் போதைப் பொருள் பாவனையும், மூடப் பழக்கங்களும் அதிகம்.
6. வறுமையும், கீழ் உழைப்பும் தொடர்ந்து காணப்படல்.
7. ஆளும் வர்க்கத்திற்கும், செல்வந்தரின் மது போதைகளுக்கும் அடிமையாகும் சமுதாயம்.
8. அரசின் சலுகைகளை எப்போதும் நாடியிருப் பினும் முன்னேற்றம் காண முடியாது இருப்ப தற்கான போலியான மத சடங்குகளும் சம்பிரதாயங்களும்.
9. குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகளும், குழப்பமும் அதிகரித்துக் காணப்படல்.
இவை யாவற்றுக்கும் மூல காரணம் மதத்தின் பேரால் காணப்படும் சாதிப் பாகுபாடுகளும், தொழில் பாகுபாடுகளும் ஆகும். எல்லா இறைத் தூதர்களின் போதனைகளின்படி சகல மக்களும் ஆதம், ஹவ்வா தம்பதியரின் சந்ததிகளே. ஆகவே கருப்பன், வெள்ளையன் என்ற வேறுபாடு இறை நெறி நூல்களின்படி இல்லை. இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட எந்த நல்ல தொழில்களைச் செய்ய எந்த மனிதனுக்கும் அனுமதி உண்டு. கல்வி கற்பது சகல ஆண், பெண் ஆகிய இரு பாலாருக்கும் அத்தியாவசியக் கடமையாகும். வட்டி, சூது, களவு, சுரண்டல், விபசாரம், போதைப் பொருள் விற்பனை, ஏமாற்று வியாபாரங்கள் போன்ற மனித சமுதாயத்திற்கு தீங்கு தரவல்லது என ஏக இறைவன் தடுத்த தொழில்களே செய்யக் கூடாதவை ஆகும்.
இந்த வேதங்களைக் கைவசம் வைத்துள்ள அறிவு நிறைந்த மக்களே! அவதானியுங்கள். உங் கள் கையிலுள்ள ஆதிவேதங்களில் மனித தீய கலப்படச் செய்திகள் உள் நுழைந்துள்ளன. இதனால் இறைவன் இறைநெறி நூல்களைத் தொடர்ந்து இறக்கினான். தற்போது பாதுகாக் கப்பட்ட ஒரே இறுதி இறைநெறிநூல் அல்குர் ஆன் மட்டுமே. ஆகவே அல்குர்ஆனை அவதானித்து நேர்வழியின் பக்கம் வாருங்கள். பின்வரும் வசனத்தை அவதானியுங்கள்.
முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமுதாயத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம் (அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்த பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம். இன்னும், உங்களில் ஒருவருக் கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள். (இன்னும்) உங்களில் ஒருவரை யயாருவர்(தீய) பட்டப் பெயர்களால் அழைக்காதீர்கள். ஈமான் கொண்ட பின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும். எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக் காரர்கள் ஆவார்கள்.
முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங் களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும்; (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும், உங்களில் சிலர் சிலரைப் பற்றிப் புறம் பேசவேண் டாம், உங்களில் எவராவது தம்முடைய இறந்த சகோதரனின் மாமிசத்தைப் புசிக்க விரும்புவாரா? (இல்லை!) அதனை நீங்கள் வெறுப்பீர்கள். இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள், நிச்சயமாக பாவத்திலிருந்து மீள்வதை அல்லாஹ் ஏற்றுக் கொள்பவன் மிக்க கிருபை செய்பவன்.
மனிதர்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்தே படைத்தோம். நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் பொருட்டு; பின்னர், உங்களைக் கிளைகளாக வும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம் (ஆகவே) உங்களில் எவர் மிகவும் பயபக்தியுடையவராக இருக்கின்றாரோ, அவர் தாம் அல்லாஹ்விடத் தில், நிச்சயமாக மிகக் கண்ணியமானவர். நிச்ச யமாக அல்லாஹ் நன்கறிபவன், (யாவற்றையும் சூழ்ந்து) தெரிந்தவன். (அல்குர்ஆன் : 49:11-13)
மனிதன் ஓர் ஆண், பெண்ணிலிருந்து பெருக்க மடைந்தவன் ஆவான். அவனுடைய உயர்வும் தாழ்வும் அவனுடைய நிறம், பிறப்பு, கோத்திரங் களில் அடங்காது. இவை அவன் வாழும் இயற் கைத் தன்மைக்கமைய அல்லாஹ் வேறுபடுத்தி யுள்ளான். ஒருவனின் உயர்வு தாழ்வு அவனிட முள்ள இறையச்சத்திலேயே தங்கியிருக்கும். எல்லா உயிர்களையும் படைத்த இறைவனே நன்கு அறிந்தவன். அல்லாஹ்வின் அருளால் மக்கா வெற்றி கொள்ளப்பட்டபோது முஹம்மது நபி (ஸல்) அவர்கள் ஆற்றிய உரையை உற்று அவதானியுங்கள்.
உங்களிடமிருந்து அறியாமைக் காலத்தின் குறைகளையும், அதன் வீண் பெருமைகளையும் போக்கிவிட்ட இறைவனைத் துதித்து நன்றி செலுத்துகின்றேன்.
மக்களே! எல்லா மனிதர்களும் இரண்டே பிரிவினராக பிரிகின்றார்கள். ஒருவர் நல்லவர், இறையச்சம் உள்ளவர். அவரே இறைவனின் பார்வையில் கண்ணியம் மிக்கவர். மற்றொ ருவன் தீயவன், துர்பாக்கியவான். அவன் அல்லாஹ்வின் பார்வையில் இழிவுக்குரியவன். அனைவரும் ஆதமின் மக்களே ஆவார். அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை மண்ணிலிருந்து படைத் தான். (நூல்:பைஹகீ, திர்மிதி)
1453 ஆண்டுகளுக்கு முன் மதத்தின் பெயரால் மனிதன் இன்னொரு மனிதனால் குறைந்த சாதி யாக மதிக்கப்பட்டு மிருகத்திலும் சிறுமைப் படுத்தப்பட்டான். இஸ்லாம் இதனை முற்றாக தடை செய்தது. இந்திய மக்களே! நீங்கள் சுய கெளரவத்துடன் வாழ நேர்வழி காட்டும் இறுதி இறைநெறிநூல் அல்குர்ஆன் மட்டுமே. இந்தி யாவில் உள்ள திராவிடரும், ஆரியரும் நூஹ் (அலை) அவர்களின் வழித்தோன்றலாக வந்தவர் களாக நம்பப்படுகிறது. நூஹ்(அலை) அவர்களை உறுதிப்படுத்தும் சமுதாயமாக முஹம்மது நபி (ஸல்) அவர்களின் சமுதாயம் இருப்பதாக அல் குர்ஆன் குறிப்பிடுகின்றது. அவதானியுங்கள்.
(இன்ஷா அல்லாஹ் தொடரும்)