பஷீர், புதுக்கோட்டை
பார்வை :
சமீபத்திய டெல்லி பாலியல் வன்முறைச் சம்பவம் தொடர்பான போராட்டமும், அதற்கு முன் நடந்த ஊழல் எதிர்ப்பு போராட்டங்களும் நமது நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. டெல்லியில் நடந்த ஒரு பாலியல் பலாத்காரம் சர்வதேச அளவில் இந்தியாவிற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிக்கைகள், எழுத்தாளர்கள், சமூக ஆர்வலர்கள்… இப்படி பல தரப்பினரும் கருத்துகளை பதிவு செய்து தம் உணர்வுகளை வெளிப்படுத்துகிறார்கள். RSS பிரமுகர்கள், பெண்ணியவாதிகள் என்று பலரும் மரண தண்டனை கோரி கொடி பிடிக்கின்றார்கள். மதுரை ஆதீனம் என்பவர், அனைத்து இந்திய பெண்களும் புர்கா அணிந்தால் நல்லது என்கிறார். மீடியாவில் இந்தச் செய்தி அதிகம் எதிரொலிப்பதால் இச் சூழலை ஆளும் அரசியல் வர்க்கம் நன்கு பயன்படுத்தி வேறு பல செய்திகளை மக்கள் மறக்க முயற்சிகள் ஒருபுறம் செய்கிறார்கள். மீடியாக்கள் வேறு மாதிரி வியாபாரம் செய்கிறார்கள். அதாவது தினம் தினம் பாலியல் பலாத்காரச் செய்திகளை வெளியிட்டு பத்திரிகை வியாபாரத்தைத் தக்க வைக்க முயற்சிகள் ஒருபுறம் செய்கிறார்கள்.
பார்வை: 2
பெண்கள் தனியாக போவதால் பிரச்சினை வருகிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள். அதுவும் பிறரை கவரும் வகையில் பெண்கள் ஆடை அணிவதால்தான் இந்த மாதிரி பாலியல் பலாத்காரம் நிகழ்வதாகப் பலர் சொல்கிறார்கள். இன்னொரு புறம் சிலர் இப்படி எழுதுகிறார்கள்….
டெல்லிச் சம்பவத்தைக் கண்டித்து நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றுக் கொண் டிருக்கும்போது, அருந்ததி ராய் என்ற ஒரு சமூக ஆர்வலர், பி.பி.சி.க்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார். இந்தப் போராட்டம் நடுத்தர வர்க்கத்தின் போராட்டம் என்றும், இது அடித்தட்டு மக்களுக்குப் பயனளிக்காது என்றும், இது போன்ற வன்முறைகள் வட கிழக்கு மாநிலங் கள் மற்றும் ஜம்மு காஷ்மீரில் ராணுவத்தாலும் காவல் துறையினராலும் நிகழ்த்தப்படுகிறது என்றும் கூறியிருக்கிறார். அவர் கூறும் மற்றக் காரணங்கள் நியாயமானதாகப் பட்டாலும், இந்த டெல்லி சம்பவத்திற்கு மட்டும் எதற்கு இந்தளவு கூப்பாடு…? என்று கூறியதும் டெல்லி சம்பவத்தைத் தொடர்ந்த பார்வைகளும் விமர்சனங்களும் பல்வேறு விவாதங்களை எழுப்பின…
பார்வை: 3
ஓர் இணைய தளத்தில் இந்தச் செய்தி வந்துள்ளது.. சில எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் உருக்கமாக பேசினார்கள்.. கண்ணீர் விட்டு அழுதார்கள். ஆவேசமாகக் குற்றவாளிகளைத் தூக்கிலிட வேண்டும் என்று சில அரசியல் வாதிகள் கர்ஜித்தார்கள். இவர்கள் எல்லாம் நாடாளுமன்றத்திற்கு வரக் கதவுகளைத் திறந்து விட்ட அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்வளவு போலித்தனமானவர்கள் என்பதை 2009 நாடாளுமன்றத் தேர்தல் உறுப்பினர்க ளின் தகுதிகள் நமக்கு வெளிச்சமிட்டுக் காட்டுவதைப் பார்க்கத் தவறியதுடன், இருட்டை வெளிச்சம் என்று பார்த்துக் கொண்டி ருக்கிறோம்.
மன்மோகன்சிங்கின் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் மீது கடுமையான ஊழல் குற்றச் சாட்டுகள் இருக்கின்றன. தேசிய தேர்தல் கண் காணிப்பு (National Election watch) புள்ளி விவரங்களின்படி, பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் 6 பேர் அரசியல் கட்சிகளால் தங்கள் உறுப்பினராக தேர்தல் களத்தில் நிறுத்தப்பட்டார்கள். கடந்து ஐந்து வருடங்களில் மட்டும் பாலியல் வன்புணர்வு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 27 பேருக்கு அரசியல் கட்சிகள் சீட் கொடுத்திருப்பதும் உண்மை. 260 உறுப்பினர்கள் மீது பெண்கள் சம்பந்தப்பட்ட வன்கொடுமை, கேலி கிண்டல் இத்யாதி குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. இக்குற்றச்சாட்டுகள் அனைத்தும் உறுப்பினர் களே தங்கள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிட்டு பதிவு செய்திருக்கும் தனிச் சிறப்பு வாய்ந்தத் தகுதிகள்! இந்தத் தகுதிகளைக் கொண்ட உறுப்பினர்கள் இருக்கும் நாடாளு மன்றம் நம் பாதுகாப்புக்கான சட்டங்களை நிறைவேற்றுவதும், நம் பாதுகாப்புக்கான சட்டங்களை நிறைவேற்றுவதும், நம்மைப் பாதுகாப்பதாக உறுதி அளிப்பதும் கேலிக் கூத்து. சட்டம், ஒழுங்கு அற்ற தேசத்தில் போராட்டங்கள் களை கட்டுகின்றன!
மேற்கண்ட 3 பார்வைகள் ஒரு சாம்பிளுக்கு இங்கே குறிப்பிட்டுள்ளோம்… இது போன்ற பல பார்வைகளை நீங்கள் படித்திருப்பீர்கள்.
பாலியல் குற்றங்களாகட்டும், அல்லது வேறு திருட்டு, கொலை, மோசடி, கடத்தல் போன்ற எண்ணற்றக் குற்றங்களாகட்டும்… தினம் தினம் நமது நாட்டில் நடந்து கொண்டே இருக்கிறது. எண்ணற்றப் பலர் பாதிக்கப்பட்டுக் கொண்டே உள்ளனர். தப்புச் செய்தவர்கள் மீண்டும் மீண்டும் செய்யும் நிலையைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். அதை விடப் பெரும் கொடுமை இப்படி தப்பு செய்து பொருளீட்டி வாழும் நபர்களைச் சமுதாயத்தில் பெரிய மனிதர் என்று கெளரவம் வேறு நடக்கிறது. இப்படிப்பட்ட தப்புக்களை, அநியாயங்களை கதைகளை ஆக்கி, நாடகமாக சினிமாப் படமாக எடுத்து எல்லா மக்களையும் பார்க்க வைத்து ஒரு பக்கம் கோடி கோடியாகச் சம்பா திக்கின்றார்கள். இதற்கு அரசாங்கம், ஆட்சி யாளர்கள், மீடியாக்கள், எல்லாம் துணை போகிறார்கள். தெருக் கோடியில் ஒரு வீட்டில் சிறிதாகத் தீப் பிடித்தால் நமக்கென்ன என்று நாம் சும்மா இருக்கிறோம்.
ஆனால் அத் தீப் பரவி, நம் வீட்டை அடையும் போதுதான் அதன் வலியை உணர்வோம். அதே போல்தான் சமூகத்தில் தீமைகள் நடக்கும்போது கண்டும் காணாமல் நாம் இருந்தால் அதன் பலனை பின்னாளில் அனுபவிக்கும் நிலை ஏற்படலாம். இதையெல்லாம் ஏற்கனவே உணர்ந்துள்ள தமிழ் நாட்டு முஸ்லிம் அமைப்பு கள், தங்களின் அமைப்புக்களை கட்டிக் காக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எல்லா அயோக்கிய அரசியல் வாதிகளிடமும் கொஞ் சிக் குலாவுகிறார்கள். கேட்டால் நமக்கு சட்ட சபையிலும், பாராளுமன்றத்திலும் சில சீட்டு கள் இருந்தால் சமுதாயத்துக்காகப் போராட முடியும் என்று கூறித் தங்கள் கட்சிகாரர்களைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறார்கள்.
நம் பார்வை எப்படி இருக்க வேண்டும்?
மறுமையில் நம்மை இறைவன் கேள்வி கேட்பான். அந்த (மஹஷர் மைதானத்தில்) இறைவனின் கோர்ட்டில் நாம் தண்டிக்கப் பட்டால் நாம் அதோ கதி! என்று எவன் தன் மனதில் நினைக்கிறானோ அவன் தான் இந்த உலகில் நேர்மையான மனிதனாக வாழ்வான். நான் அண்டை வீட்டுக்காரனுக்கு எனது வாகனத்தை நிறுத்தி இடைஞ்சல் கொடுத்தால் கூட நாளை மறுமையில் தண்டனை உண்டு என பயந்தால் தான், இந்த உலகில் வாழும் போது ஒவ்வொரு குடும்பமும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாகத் திகழ முடியும். தெருவில் செல்கிற பெண்ணாக இருக்கட்டும், பஸ்ஸில் செல்லும் பெண்ணாக இருக்கட்டும், எந்தப் பெண்ணாவது அரை குறை ஆடை அணிந்தால் தனது பார்வையைத் தாழ்த்திக் கொள்ள குர்ஆன் கட்டளை இடுகிறது (24:30). யார் மறுமையை நம்புகிறானோ அவன் அப்படித் தான் நடந்து கொள்வான். ஆனால் அவள் கவர்ச்சியாக இருந்ததால் நான் தப்பு செய்யும் நிலை ஏற்பட்டது என்று சொல்வது இறை அச்சம் இல்லாதவன், மறுமையை நம்பாதவனின் வியாக்கியானமாகும்.
செய்யும் வேலையாகட்டும், குடும்பத் தினரை நடத்தும் விதமாக இருக்கட்டும், பிற இன மக்களோடுப் பழகுவதாக இருக்கட்டும். எந்தச் சூழலிலும் நபி(ஸல்) காட்டிய வாழ்வி யலின் பிரகாரம் யார் மறுமையை நம்புகிறார் களோ அவர்களின் பார்வையும், பேச்சும், செயலும் உயர்ந்த நிலையில் இருக்கும். இந்த மறுமை நம்பிக்கை தான் தனி மனிதனை மட்டு மல்ல, குடும்பத்தை மட்டுமல்ல, முழு சமுதா யத்தையும் ஒழுக்கமுள்ள நேர்மையான, கண் ணியமான சமுதாயமாக மாற்றும்.
இதைத்தான் இஸ்லாம் போதிக்கின்றது. இப் பணியைத் தான் நபி(ஸல்) அவர்கள் நம்மிடம் விட்டு சென்றுள்ளார்கள்.
அல்குர்ஆன் நமது பார்வையையும், செயலையும் எப்படி அமைக்க சொல்கிறது?
நிராகரிப்போருக்கு(காஃபிர்களுக்கு) இவ்வுலக வாழ்க்கை அழகாக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் ஈமான் (நம்பிக்கை) கொண்டோரை ஏளனம் செய்கிறார்கள். ஆனால் பய பக்தியுடையோர் மறுமையில் அவர்களை விட உயர்ந்த நிலையில் இருப்பார்கள். இன்னும் அல்லாஹ் தான் நாடுவோருக்குக் கணக்கின்றிக் கொடுப்பான். (2:212)
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை; ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்; (தன்) பொருளை இறைவன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக்கும், அநாதைகளுக்கும் மிஸ்கீன்(ஏழை)களுக் கும், வழிப் போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன் றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்; இன் னும் தொழுகையை ஒழுங்காகக் கடைப் பிடித்து முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்). இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறை வேற்றுவோரும்; (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுடனும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தாம் முத்தகீன்கள் (பயபக்தியுடையவர்கள்). (2:177)
(நபியே!) முஃமின்களான ஆடவர்களுக்கு நீர் கூறுவீராக; அவர்கள் தங்கள் பார்வைக ளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக் காத்துக் கொள்ள வேண்டும்; அது அவர்களுக்கு மிகப் பரிசுத்தமானதாகும்; நிச்சயமாக அல்லாஹ் அவர்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (24:30)
இன்னும்; முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக; அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் அழக லங்காரத்தை அதினின்று (ஆள் அடையாளத் திற்கு) தெரியக் கூடியதைத் தவிர(வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது; இன்னும் தங்கள் முந்தானைகளால் அவர்கள் தங்கள் மார்பு களை மறைத்துக் கொள்ள வேண்டும்; மேலும், (முஃமினான பெண்கள்) தம் கணவர்கள், அல்லது தம் தந்தையர்கள், அல்லது தம் கணவர் களின் தந்தையர்கள் அல்லது தம் புதல்வர்கள் அல்லது தம் கணவர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரர்கள் அல்லது தம் சகோதரர்களின் புதல்வர்கள், அல்லது தம் சகோதரரிகளின் புதல்வர்கள், அல்லது தங்கள் பெண்கள், அல்லது தம் வலக்கரங்கள் சொந்த மாக்கிக் கொண்டவர்கள், அல்லது ஆடவர் களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர் களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களு டைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது; மேலும், தாங்கள் மறைத்து வைக்கும் அழகலங்காரத்திலிருந்து வெளிப்படுமாறு தங்கள் கால்களை (பூமியில்) தட்டி நடக்க வேண்டாம்; மேலும், முஃமின்களே (இதில் உங் களிடம் ஏதேனும் தவறு நேரிட்டிருப்பின்) நீங்கள் தவ்பா செய்து (பிழை பொறுக்கத் தேடி) நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு, நீங்கள் அனை வரும் அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (24:31)
(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர் களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பாராமுகமாக்கமாட்டா; இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள். (24:37)
இறை நம்பிக்கையாளர்களே! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள், அவனு டைய அடிச்சுவடுகளைப் பின்பற்றுபவனுக்கு ஷைத்தான் மானக்கேடானவற்றையும், வெறுக் கத்தக்கவற்றையுமே ஏவுகிறான்… (24:21)
பல இன சமுதாயங்கள் வாழும் இத்தேசத்தில் நாம் நடுநிலைச் சமுதாயமாக வாழ முயற்சிப் போமாக. நமது நேர்மையின் காரணமாக மாற்று மத மக்களே நம்மை “முன் உதாரண முள்ள சமுதாயமாக’ தேர்ந்தெடுக்கும் சூழலை இறைவன் வழங்க துஆ செய்வோமாக.