ஐயமும்! தெளிவும்!!

in 2013 பிப்ரவரி,ஐயமும்! தெளிவும்!!


ஐயம்:
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுவ தற்கு முன் பயான் செய்வதற்கு இமாம் இல்லாத போது குர்ஆனுடைய ஒரு சூராவை ஓதிவிட்டு தொழுகையை நடத்தினால் அத்தொழுகை ஜும்ஆவாக நிறைவேறுமா? இஸ்மாயீல், தமாம்.

தெளிவு: குத்பாவுக்குப் பகரமாக குர்ஆனில் ஒரு சூராவை ஓதினால் அதுவே போதுமானது என்பதில் என்ன சந்தேகம்? நபி(ஸல்) அவர்கள் தமது ஜும்ஆவின் குத்பாவில் குர்ஆனுடைய சூராவை ஓதியிருப்பதாக பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.
நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு ஜும்ஆவிலும் மிம்பர் மீது மக்களுக்குப் பிரச்சாரம் செய்யும்போது “காஃப் வல்குர்ஆனில் மஜீத்’ எனும் சூராவை ஓதுவார்கள் (அதன் காரணமாகவே) நபி(ஸல்) அவர்களின் நாவின் மூலம் கேட்டே அதை நான் பாடமாக்கிவிட்டேன்.
(உம்மு ஹிஷாம் பின்த் ஹாரிஸதப்னி நுஃமான்(ரழி)
முஸ்லிம், நஸயீ, அஹ்மத், அபூதாவூத்)

ஆகவே குர்ஆனுடைய ஒரு சூராவை ஓதுவதன் மூலம் குத்பா நிறைவுபடுவதோடு ஜும்ஆ தொழுகையும் பரிபூரணமாக நிறை வேறிவிடும்.

ஐயம்: “அகீக்கா’ கொடுக்கப்படும் இறைச்சியை வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடுவது கூடுமா? ஆண் குழந்தைக்கு இரண்டு கிடாயும், பெண் குழந்தைக்கு ஒன்றும் கொடுக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகிறதே அது சரியா?
M.O.K அப்துஷ்­கூர், மேலப்பாளையம்.

தெளிவு: நபி(ஸல்) அவர்கள் (தமது பேரர்களான) ஹஸன், ஹுஸைன்(ரழி) இருவருக்காக நபருக்கு ஒரு செம்மறிக் கிடாய் வீதம் அகீக்கா கொடுத்தார்கள். (இப்னு அப்பாஸ் (ரழி) அபூதாவூத்)

வசதியிருப்பின் ஆண் குழந்தைக்கு இரண்டு கொடுப்பது சிறந்தது. இல்லையேல் ஆண் குழந்தைகளுக்காக ஒரு கிடாய் கொடுத்தாலும் போதும் என்பதை மேற்காணும் ஹதீஸ் தெளிவு படுத்துகிறது. அகீக்காவின் இறைச்சியை வீட்டில் அனைவரும் தாராளமாகச் சாப்பிடலாம்.

ஐயம்: ஒரு முஸ்லிம் தனது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவருடைய மனைவியை (இரண்டாம் தாரமாக தனது தந்தை முடித்த பெண்ணை) மகனாகிய இவர் மணம் முடித்துள்ளார். குழந்தைகளும் உள்ளன. இஸ்லாத்தின் அடிப் படையில் இவருக்கு என்ன தண்டனை? விபரமாக விளக்கம் தேவை?
மஹ்பூப் பாஷா, தஞ்சை.

தெளிவு: நபி(ஸல்) அவர்களின் வருகைக்கு முன் அரபு நாட்டில் இவ்விதமான வழக்கம் இருந்து வந்தது. ஒருவன் எத்தனை மனைவிகள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். அவனது மரணத்திற்குப் பிறகு அவனுடைய ஆண் மக்கள் தன்னைப் பெற்ற தாயைத் தவிர தனது சிற்றன்னைகளை தாரமாக ஆக்கிக் கொள்வார்கள். இது அவர்களிடையே சாதார ணமானதொரு வழக்கமாகவே கருதப்பட்டு வந்தது.

இதுபோன்ற மோசமான பழக்கங்கள் அரபு நாட்டில் அக்கால மக்களிடத்தில் இருந்து வந்தமையால் தான் அக்காலத்தை “அய்யாமுல் ஜாஹிலிய்யா’ மடமையின் காலம் என்று இன்றும் சரித்திரம் கூறிக் கொண்டிருக்கிறது. இன்று முஸ்லிம் அல்லாதவர்களும் கூட இத்தகைய மோசமான பழக்கத்தையுடையவராக யில்லை. தாங்கள் கேட்டு எழுதியிருப்பது போல் ஒரு முஸ்லிம் செய்திருப்பது மிகவும் வருந்தத்தக்க விஷயமாகும். நபி(ஸல்) அவர் களின் வருகைக்குப் பின் அரபு நாட்டிலிருந்த அத்தீய பழக்கத்தை அல்குர்ஆன் அடியோடு அகற்றிவிட்டது.

அல்குர்ஆனின் ஆணை பாரீர்!
முன்னால் நடந்து போனதைத் தவிர(இனி மேல்) நீங்கள் உங்களுடைய தந்தையர் மணம் முடித்த பெண்களிலிருந்து எவரையும் விவாகம் செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக இது மானக்கேடானதும், வெறுக்கக்கூடியதும், தீமையான வழியுமாகும். (4:22)

அல்லாஹ்வால் தெளிவாக விலக்கப்பட்ட ஒன்றைச் செய்த இவருக்கு கொடிய தண்டனை யான “ஹத்து’ அடியைக் கொடுக்க வேண்டும். ஷரீஅத் சட்டத்தை அமுல்படுத்த முடியாத இந் நாட்டில் கொலை செய்தவனுக்கு தண்டனை கொடுப்பதைக் கூட தவறு எனக் கூறப்படும் இன்றைய நிலையில் இத்தகையவனுக்கு நம்மால் என்ன தண்டனை கொடுக்க முடியும்? எனவே அல்லாஹ்வின் சட்டத்தைச் துச்சமாகக் கருதி இந்த அக்கிரமத்தில் இறங்கிய இக்கயவ னுக்கு திட்டமாக கடுமையான நரக தண்டனை காத்திருக்கிறது. அல்லாஹ் மன்னித்தாலன்றி அதிலிருந்து அவனால் தப்ப இயலாது.

ஐயம்: ஒளூவுக்குப் பிறகு சிறுநீர் கசிந்து விட்டதோ என்று மனதில் ஏற்படும் தடுமாற்ற நிலையை நீக்கிக் கொள்வதற்காக மர்ம ஸ்தானத்தின் மீது தண்ணீரைத் தெளித்துக் கொள்ள வேண்டும் என்பதாக ஹதீஸ்களில் காணப்படுகிறதே அதன்படி நேரடியாகவா? அல்லது ஆடையின் மேற்பாகத்திலா?

னி.நு.லு. அப்து ஷுகூர், மேலப்பாளையம்.
தெளிவு: தாங்கள் கூறும் ஹதீஸ் சுஃப்யான் வாயிலாக அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. அதில் மர்மஸ்தானத்தின் மீது தண்ணீர் தெளிப் பதாகயிருந்தாலும் அது நேரடியாக அல்ல. அதன் மேற்பாகத்திலுள்ள ஆடையின் மீதுதான் என்பதை அது போன்ற வேறு அறிவிப்புகளின் வாயிலாக அறிகிறோம்.

ஐயம்: ஒரே பாத்திரத்தில் கணவனும் மனைவி யும் ஒளூ செய்கிறார்கள், மனைவி மாதவிடாய் உள்ளவர், கணவரோ தொழுகைக்காக ஒளூ செய்கிறார் இருவருடைய ஒளூ கூடுமா?
னி.நு.லு. அப்துஷ்­கூர், மேலப்பாளையம்.

தெளிவு: ஒருமுறை அப்தில்லாஹ் பின் ஜைத் (ரழி) அவர்களிடம் ஒருவர் நபி(ஸல்) அவர் களின் ஒளூவின் விபரத்தைப் பற்றிக் கேட்ட போது, அவர்கள் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் கொண்டுவரச் செய்து அதைத் தமது கையில் ஊற்றி மும்முறை கழுவிக் கொண்ட பிறகு தமது கையைப் பாத்திரத்தில் விட்டு தண்ணீரை அள்ளி மீதமுள்ள உறுப்புகளைச் சுத்தம் செய்தார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
(அம்ரு பின் யஹ்யா(ரழி) புகாரீ)

ஒளூ செய்வதற்கு முன்னால் இருவரும் தமது கைகளைக் கழுவிக் கொண்டு பாத்திரத் தில் ஒரே நேரத்தில் இருவரும் கைகளை விட்டு அள்ளி ஒளூ செய்வார்களானால் ஒளூ கூடி விடும். மாதவிடாய் உள்ளவள் தனது கைகளை கழுவி விட்டு கையைப் பாத்திரத்தில் விடுவ தால் ஒளூ செய்யும் தண்ணீர் அசுத்தமாகி விடாது. ஒளூ செய்யும் தண்ணீர் அசுத்தமாகா மல் இருப்பதற்கு கைகள் கழுவப்பட வேண்டும் என்பது மாதவிடாய் உள்ளவருக்கும் மற்றவருக் கும் உள்ள பொதுச் சட்டமாகும். ஆனால் மாத விடாய் பெண்கள் எதற்காக ஒளூ செய்து கொள்ள வேண்டும்? அப்படி அவர்கள் ஒளூ செய்து கொண்டுதான் ஒரு காரியம் செய்ய வேண்டும் என்பதாக ஹதீஸ்களில் அறவே கூறப்படவில்லை என்பது தெளிவு.
ஐயம்: நபி(ஸல்) அவர்களின் அந்தஸ்தை திண்ணைத் தோழர்கள் அடைந்து விட்டார்கள் என்பது சரியா? டீ.யு. ஜலீல், நெய்வேலி-2.
தெளிவு : இது ஒரு தவறான எண்ணமாகும். திண்ணைத் தோழர்கள் சிறப்புக்குரியவர்தான். ஆயினும் நபி(ஸல்) அவர்களின் அந்தஸ்தையோ ஒருபோதும் அடைய முடியாது. பொதுவாக நபி; தோழர்களைப் பற்றி எல்லை மீறிய எண்ணங்; களை முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு சாரார் திட்டமிட்டுப் பரப்பி வருகின்றனர். குர்ஆன், ஹதீஸுடன் நேரடித் தொடர்பு கொள்ளும் சாதாரண ஒரு பாமரனும் இதை எளிதில் புரிய முடியும்.

ஐயம்: நபி(ஸல்) அவர்களை கனவில் காண ஏதேனும் தனிப்பட்ட முறையில் துஆ உண்டா? யு.முஜாஹிதீன், சவுதி,

தெளிவு : அப்படி தனிப்பட்ட எந்த ஒரு துஆ வையும் நபி(ஸல்) அவர்கள் தமது உம்மத்திற் குக் கற்றுத் தரவில்லை. பின்னால் வந்தவர்கள் கற்பனையாக கூறுவதை துஆ என்று ஒரு முஸ்லிம் சொல்ல முடியாது.

ஐயம் : மார்க்க அறிஞர்களை மவ்லானா, அல்லாமா என்று அழைக்கலாமா? அல்லது எப்படி அழைக்க வேண்டும்? யு.முஜாஹிதீன், சவுதி

தெளிவு : நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தந்த நடைமுறையில் மார்க்க அறிஞர்களைத் தனிப் பட்ட முறையில் வேறுபடுத்தி விஷேசமாக எப் பெயரையும் சூட்டி அழைத்ததற்கு துளி கூட சான்று இல்லை. நபி;தோழர்கள் அப்படியொரு தனிப்பிரிவை ஏற்படுத்திக் கொண்டதில்லை. இதுவும் பின்னால் வந்தவர்கள் ஏற்படுத்திக் கொண்டதே. மவ்லவி, மவ்லானா, ஹஜ்ரத் போன்ற பதங்களின் பொருளை உற்று நோக்கும் போது இந்த உண்மை தெளிவாக விளங்கும். அவர்களும் முஸ்லிம் சமுதாயத்திலுள்ளவர்கள் – சகோதரர்கள் என்று கருதி நமது மூத்த சகோதரர்கள் எப்படி அழைப்போமோ அப்படி அழைப்பதே சமுதாயம் வழிகெடாமல் இருப்பதற்குரிய வழியாகும்.

ஐயம் : “ஸதகா” என்கிற தர்மத்தை ஏழை யாகிய காஃபிர்களுக்கும் கொடுக்கலாமா? அனுமதி உண்டா? யு.முஜாஹிதீன், சவுதி,

தெளிவு : தான தர்மங்களை முஸ்லிம், காஃபிர் என்று பார்க்காமல் ஏழைகளுக்கு, தேவைப்பட்ட வர்களுக்கு வழங்குவதில் தடை ஏதும் இல்லை. தாராளமாகக் கொடுக்கலாம்.

ஐயம்: நான்கு இமாம்களால் உருவாக்கப்பட்டதா மத்ஹபுகள்? அல்லது பின்னால் வந்தவர்களால் உருவாக்கப்பட்டதா? தெளிவு தாருங்கள். கீழக்கரை முஹம்மத் மதார், அபுதாபி.

தெளிவு : நான்கு இமாம்களின் காலகட்டம் ஹி;.80லிருந்து ஹி.241 வரையாகும். மத்ஹபு கள் பின்னால் வந்தவர்களால் உருவாக்கப் பட்டன. அது ஹி.400க்கு பிறகாகும். எனவே இந்த மத்ஹபுகளில் தோற்றத்திற்கும் இமாம் களுக்கும் அணுவில் முனை அளவும் சம்பந்த மில்லை. அந்த நான்கு இமாம்களின் உபதே சங்களை உற்று நோக்கினால் குர்ஆன், ஹதீஸ் போதனைப்படி நடப்பதையே அவர்கள் வலியு றுத்தினர் என்பது விளங்கும். நாங்கள் எங்கி ருந்து சட்டத்தை எடுத்தோம் என்பதற்குரிய (குர் ஆன், ஹதீஸ்) ஆதாரங்களைப் பார்க்காமல் எங்கள் சட்டங்களை எடுத்து நடப்பது கூடாது என்றே அந்த இமாம்கள் கூறியுள்ளனர். கிறிஸ்த வர்கள், ஈஸா(அலை) அவர்களின் பெயரைச் சொல்லி தவறாக திரியேகத்துவத்தை உண் டாக்கி மக்களை ஏமாற்றுவது போல், இந்த மவ்லவி; முகல்லிதுகள் இமாம்களின் பெய ரால் தவறாக மத்ஹபுகளை உண்டாக்கி மக் களை ஏமாற்றி வருகின்றனர். ஷைத்தானும் அவர்களுக்குத் துணையாக இருக்கிறான்.

ஐயம்: இமாம் புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸாயீ, தாரகுத்னீ போன்றவர்கள் இமாம்கள் (ஹனபி, ஷாஃபி, ஹன்பலி, மாலிக்கி) நால்வ ருக்கும் முன்னால் உள்ளவர்களா? பின்னால் தோன்றியவர்களா? கீழக்கரை முஹம்மத்மதார், அபுதாபி.

தெளிவு: நீங்கள் குறிப்பிட்டிருக்கும் இமாம்கள் அனைவரும் மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களுக்கும் பின்னால் தோன்றியவர்களே. அவர்களின் பிறப்பு, இறப்பு வருடங்களை கீழே தருகிறோம். அதிலிருந்து நீங்கள் தெளிவாகப் புரிந்துக் கொள்ளலாம்.
1. இமாம் அபூஹனிபா(ரஹ்) ஹி.80-150
2. இமாம் மாலி(ரஹ்) ஹி.93-179
3. இமாம் ஷாபி(ரஹ்) ஹி.150-204
4. அஹமது இப்னு ஹம்பல்(ரஹ்) ஹி.164-241
5. இமாம் புகாரி(ரஹ்) ஹி.194-256
6. இமாம் முஸ்லிம்(ரஹ்) ஹி.204-261
7. இமாம் அபூதாவூத்(ரஹ்) ஹி.202-271
8. இமாம் திர்மிதி(ரஹ்) ஹி.209-279
9. இமாம் நஸாயீ(ரஹ்) ஹி.215-303
10.இமாம்இப்னுமாஜ்ஜா(ரஹ்) ஹி.209-279
11.இமாம் அபூயூசுப்;(ரஹ்) .. ஹி.113-182
12.இமாம் பைஹகி;(ரஹ்) ஹி.384-458
13.இமாம் தாருகுத்னீ;(ரஹ்) ஹி. -385

ஐயம்: தந்தையின்றிப் பிறந்ததால் ஈஸா (அலை) அவர்களை ‘இப்னுமர்யம்” என்று கூறு வதாக எழுதியுள்ளீர்கள்.
பாத்திமா(ரழி) அவர்களுக்கும், அலீ(ரழி) அவர்களுக்கும் பிறந்தவர்களே ஹஸன்(ரழி, ஹ{ஸைன்(ரழி) ஆவர். அவர்களிலிருந்து அவர் களின் சந்ததிகள் வழி வழியாக வருகிறார்கள். பாத்திமா(ரழி) அவர்களுக்கும், அலீ(ரழி) அவர் களுக்கும் ஏற்பட்ட சந்ததிகளை அலீ(ரழி) சந்ததிகள் என்று கூறாமல் பாத்திமாவின் சந்ததி கள் என்று கூறப்படுகிறதே! அந்த அடிப்படை யில்தான் மஹ்தி(அலை) அவர்கள் பாத்திமா (ரழி) அவர்களின் சந்ததியிலிருந்தும் தோன்று வார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக ஹதீஸ் கூறுகிறது.
அப்படியானால் பாத்திமா(ரழி) அவர்களின் சந்ததிகள் என்பதால் அவர்களுக்கு மட்டும் ஆண் துணையின்றி பிறந்தவர்களிலிருந்து வரக் கூடிய சந்ததிகளா? ஏன் அலீ(ரழி) சந்ததிகள் என்று கூறாமல் பாத்திமா(ரழி)யின் சந்ததிகள் (பனூ பாத்திமா) என்று கூறப்பட்டுள்ளது? விளக் கம் தருக. அபூ பாத்திமா, உடன்குடி.

தெளிவு: நாம் எழுதிள்ளதைத் தவறாகப் புரிந்துக் கொண்டு கேள்வி கேட்டுள்ளீர்கள். மேலும் உங்களின் கேள்வியின் பிற்பகுதி தெளி வாகவும் இல்லை. பொதுவாக எந்த ஒரு நபரும் இன்னார்தான் என்று திட்டமிட்டு அடையாளம் காட்டப்படுவதற்;காக இன்னாருடைய மகன் இன் னார் என்று அவரது தந்தையின் பெயருடன் இணைத்துச் சொல்லப்படும். தாயின் பெயருடன் இணைத்துச் சொல்லும் பழக்கம் இல்லை. நீங் கள் குறிப்பிட்டுள்ள பாத்திமா(ரழி) அவர்களின் மகன்களான ஹஸன்(ரழி), ஹ{ஸைன்(ரழி) இரு வரும் ஹஸன் இப்னு அலீ(ரழி) ஹ{ஸைன் இப்னு அலீ(ரழி) என்றுதான் ஏடுகளில் பதியப் பட்டுள்ளதே அல்லாமல் ஹஸன் இப்னு பாத்திமா(ரழி), ஹ{ஸைன் இப்னு பாத்திமா (ரழி) என்று பதியப்படவில்லை என்பதை விளங் கவும். நாம் குறிப்பிட்டிருப்பது இன்னாரின் மகன் இன்னார் என்று குறிப்பாகச் சொல்வது பற்றி நீங் களோ சந்ததிகளைப் பற்றிய விபரத்தை இதனு டன் போட்டுக் குழப்பி இருக்கிறீர்கள். பாத்திமா (ரழி) அவர்களின் சந்ததியிலிருந்து (பனூ பாத்திமா) மஹ்தி(அலை) அவர்கள் வருவார்கள் என்பதால் அவர்கள் தகப்பனின்றிப் பிறப்பார்கள் என்பது பொருள் அல்ல. நீங்கள் தவறாகப் புரிந்து வைத்துள்ளீர்கள். பாத்திமா(ரழி) அவர்களின் சந்ததியில் வந்தாலும் அவர்கள் அவர்களு டைய தகப்பானாரைக் கொண்டே குறிப்பிட்டுச் சொல்லப்படுவார்கள்.

ஆனால் ஈஸா(அலை) அவர்கள் தந்தை யின்றியே பிறந்தார்கள். எனவேதான் தாயின் பெயரைக் கொண்டு குறிப்பிட்டுச் சொல்லப் படுகிறார்கள். பின்னால் (இப்னு மர்யம் என்றில்லாமல்) ஈஸா(அலை) அவர்கள் வருவார்கள் என்று மட்டும் முன்னறிவிப்புகளில் சொல்லப்பட்டிருந் தாலாவது அவர்களின் சாயலில் வேறொருவர் வருவார் என்று பொருள் கொள்ள இடம் இருக்கிறது. இப்னு மர்யம் வருவார்கள் என்று தெளிவாக முன்னறிவிப்புகள் செல்வதால் அதே தந்தையின்றிப் பிறந்த குறிப்பிட்ட இப்னு மர்யம் அல்லாத, வழமையான முறைப்படி தந்தைக்குப் பிறக்கும் எவரையும் இப்னு மர்யம் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுச் சொல்லியிருக்கமாட்டார் கள் என்றே தெளிவுபடுத்தி இருந்தோம். குறிப் பாகத் திட்டப்படுத்தி இன்னாருடைய மகன் இன் னார் என்று ஒருவரை அடையாளம் காட்டுவதற்;; கும், பொதுவாக இன்னாருடைய சந்ததிகள் என்று குறிப்பிடுவதற்கு உள்ள வேறுபாட்டை நீங்கள் விளங்கி இருந்தால் இப்படியொரு கேள்வியை எழுதியிருக்க மாட்டீர்கள். அலீ(ரழி) அவர்களின் சந்ததி என்று குறிப்பிடாமல், பனூ பாத்திமா என்று கூறப்பட்டதன் நோக்கம் இறுதி நபிக்கு ஆண் சந்ததிகள் இல்லாததாலும், மகள் பாத்திமாவுக்குப் பிறந்த குழந்தைகளிலிருந்தே சந்ததிகள்.

Previous post:

Next post: