குழப்பம் விளவிப்பவர்கள் யார்?

in 2013 ஜூலை,புரோகிதம்,பொதுவானவை


அபூ அப்தில்லாஹ்

அல்லாஹ் கூறுகிறான்:
“”…. அல்லாஹ் அருளியதிலிருந்து உண்ணுங்கள்; பருகுங்கள், பூமியில் குழப்பவாதிகளாய்த் திரியாதீர்கள்”. (2:60)

“”…. ஏனெனில், குழப்பம் உண்டாக்குவது கொலையிலும் கொடியது….” (2:191)
குழப்பம் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் உரிய தென ஆகும் வரை அவர்களுடன் போராடுங்கள்…  (2:193)

“”குழப்பம் செய்வது கொலையிலும் கொடியது..”  (2:217)

“”… குழப்பம் செய்வதற்கு அவர்கள் அழைக்கப் பட்டால் அதிலும் தலைகீழாக விழுந்து விடுவார் கள்…” (4:91)

“”…. குழப்பம் நீங்கி, மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியதாகும் வரை அவர்களுடன் போராடுங்கள்…”
(8:39)

“”(குர்ஆன் வசனங்களை) நிராகரிப்பவர்கள் சிலருக்குச் சிலர் நண்பர்களாய் இருக்கிறார்கள். நீங்கள் இதை (நேர்வழியை தெளிவுபடுத்துவதை) செய்யாவிட்டால், பூமியில் குழப்பமும், பெருங் கலகமும் ஏற்படும்” (8:73)

“”… உங்களுக்கிடையே குழப்பத்தை உண்டாக்கு வதற்காக கோள் மூட்டியும் இருப்பார்கள்….” (9:47)

“”இதற்கு முன்னரும் அவர்கள் குழப்பத்தை விரும்பினார்கள்; உம்முடைய காரியங்களையும் புரட்டினார்கள்; இறுதியில் உண்மை தெளிவாகி அவர்கள் வெறுத்த நிலையில், அல்லாஹ்வின் காரியம் (வெற்றி பெற்று) வெளிப்படையானது” (9:48)

“”ஷைத்தான் போட்ட குழப்பம், தங்களின் இதயங்களில் நோய் இருப்பவர்களுக்கும், தங்களின் இதயங்கள் கடினமாய் இருப்பவர்களுக்கும் ஒரு சோதனையாக்குவதற்கே….” (22:53)

“”….பூமியில் குழப்பம் செய்யாதே; அல்லாஹ் குழப்பம் செய்பவர்களை நேசிப்பதில்லை” (என்று காரூனிடம் அவனுடைய கூட்டத்தார் கூறினர்)  (28:77)

மேலே எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள், இறைவனால் இறக்கியருளப்பட்ட நேர்வழிச் செய்திகளுக்குச் சுய விளக்கம் கொடுத்து மக்களைப் பல கோணல் வழிகளில் இட்டுச் சென்ற அந்தந்தக் காலத்து மதகுருமார்கள் குழப்பம் விளைவித்த தையே குறிக்கிறது என்பதைத் திட்டமாக அறிய முடியும்.

“”குழப்பம் நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் உரியதென ஆகும் வரை, அவர்களுடன் போராடுங்கள்” என்ற 2:193, 8:39 இறைவாக்குகள் இதை உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் இம்மதகுருமார்கள் மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திக் கொண்டு அப்பழியை நபிமார்கள் மீதும், அவர்களைப் பின் பற்றியவர்கள் மீதும் போட்டார்கள் என்பதை 4:112 இறைவாக்கு உறுதிப்படுத்துகிறது. மேலும் அவர்கள் பல கோணல் வழிகளில் சென்று கொண்டு தாங்கள்தான் நேர்வழியில் இருப்பதாகப் பிதற்றினார்கள் என்பதை 3:187,188 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. அவை வருமாறு:

“”நெறிநூல் கொடுக்கப்பட்டவர்களிடம், “”மக்களுக்கு அதைத் தெளிவாக்க வேண்டும், அதை மறைக்கலாகாது’ என அல்லாஹ் உறுதிமொழி வாங்கிய போது, அவர்கள் அதைத் தங்களின் முதுகுகளின் பின்னால் எறிந்து, அற்ப விலையை வாங்கினார்கள். அவர்கள் விலைக்கு வாங்கியது மிகவும் கெட்டதாகும்.” (3:187)

“”தாங்கள் செய்ததைப் பற்றி மகிழ்ந்து, தாங்கள் செய்யாததன் மூலம் புகழப்பட வேண்டும் என விரும்புவோர் தண்டனையிலிருந்து தப்பியவர்கள் என (தூதரே) ஒருபோதும் எண்ணாதீர். அவர்களுக்கு நோவினை மிக்கத் தண்டனை உள்ளது. (3:188)

3456, 7319, 7320 புகாரீ(ர.அ.) ஹதீஃத்கள் சொல்வது போல், இன்றைய மவ்லவிகள் யூத, கிறித்தவர்களை ஜாணுக்கு ஜாண், முழத்திற்கு முழம் பின்பற்றி முஸ்லிம்களை பெரும் வழிகேட்டில் இழுத்துச் செல்கிறார்கள். அவர்கள் ஓர் உடும்பின் பொந்தில் போய் நுழைந்தால், இவர்களும் அப்பொந்தில் நுழையும் அளவில் பெருங்கொண்ட முஸ்லிம்களை வழிகேட்டில் இழுத்துச் செல்கிறார்கள். எப்படி எனப் பாருங்கள்.

3:187 இறைவாக்குக் கூறுவது போல் யூத, கிறித்தவர்கள் எப்படி அல்லாஹ் அருளிய நெறிநூல் கருத்துக்களை மறைத்து அற்பக் கிரயங்களைப் பெற்றார்களோ அதே போல் மவ்லவிகளும் குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை மறைத்து சுய விளக்கம் கூறி அதன் மூலம் அற்பக் கிரயங்களைத் தொழவைக்க, பிரசாரம் செய்ய சம்பளமாகப் பெறுகிறார்கள். மேலும்,

3:189 இறைவாக்குக் கூறுவது போல், நேர்வழியைக் கோணல் வழிகளாக்கி உலகியல் ஆதாயங்களை அடைவதோடு, இம்மவ்லவிகள் நேர்வழியில் இருப்பதாக மகிழ்வதோடு, குர்ஆனை 3:103 இறைக் கட்டளைப்படிப் பற்றிப் பிடித்து அதன் நேரடிப் போதனைகள்படி நடப்பவர்கள் வழிகேட்டில் செல்வதாகவும், அவர்களே இறை இல்லங்களில், ஒற்றுமையாக இருக்கும் மஹல்லாக்களில் குழப்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவதூறு பரப்புகிறார்கள். 4:112 இறைவாக்குக் கூறுவது போல் இம்மவ்லவிகள் வழிகேட்டில் இருந்து கொண்டு அப்பழியை குர்ஆனைப் பற்றிப் பிடித்து நடப்பவர்கள் மீது சுமத்துகிறார்கள்.

சில பள்ளிகளில் இமாம்களை விட பள்ளிகளின் நிர்வாகிகளில் பரேல்வி அகீதாவான சமாதிச் சடங்குகளை ஆதரிக்கும் ஓரிருவர் சுன்னத் ஜமாஅத் வெறி கொண்டு, நேர்வழி நடப்பவர்கள் குழப்பம் விளைவிப்பதாக எழுத்து மூலமும் அவதூறு பரப்புகின்றனர். இக்கொடிய செயல் இன்று நேற்றல்ல, என்று இம் மதகுருமார்கள் திருட்டுத்தனமாக சமூகங்களில் நுழைந்தார்களோ அன்றிலிருந்து அரங்கேறி வரும் அவலமாகும். இதையே 36:21 இறைவாக்கு உறுதிப் படுத்துகிறது. ஒவ்வொரு இறைத் தூதரும் வந்து இறைவன் புறத்திலிருந்து அருளப்பட்ட நேர் வழியை மக்களுக்கு எடுத்துச் சொல்லும் போதும், அக்காலத்தில் அந்தந்த சமூகங்களிடையே திருட்டுத்தனமாகப் புகுந்து நேர்வழியைக் கோணல் வழிகளாக்கி, மார்க்கத்தை மதமாக்கி வயிறு வளர்த்து வந்த மதகுருமார்கள் அத்தூதர்களின் நேர்வழிப் போதனையைக் கடுமையாக எதிர்த்து ஒற்றுமையாக இருக்கும் சமுதாய மக்களிடையே மஹல்லாக்களில் பள்ளிகளில் குழப்பத்தை(ஃபித்னா, ஃபசாத்) ஏற்படுத்திப் பிளவுபடுத்துவதாகப் பெரும் பழியைச் சுமத்தினார்கள். இப்போதும் சுமத்து கிறார்கள்.

அப்படி ஒரு சந்தர்ப்பத்தில் நேர்வழி நடக்கும் ஒரு மனிதர் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து “”என் சமூகத்தவரே உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இத்தூதர்களையே பின்பற்றுங்கள். இவர்களே நேர்வழியில் இருப்பவர்கள்” என்று அச்சமூகத்திற்கு எச்சரித்ததையே சூறாயாசீன்: 36:20,21 இறைவாக்குகள் நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் எச்சரிக்கின்றன. ஆனால் இம்மவ்லவிகளின் உள்ளங்கள் கூலி என்ற ஹராமின் மூலம் கற்பாறைகள் போல் இறுகி இருப்பதால் (பார்க்க : 2:74, 6:43,125, 57:16) அவர்கள் குர்ஆன் வசனங்களைக் கொண்டு படிப்பினைப் பெறமாட்டார்கள். அதனால்தான் 3:103 இறைவாக்கு, அல்லாஹ்வின் கயிறான குர்ஆனை (பிஹப்லில்லாஹ்) குறிப்பிடுவதை “”ஒற்றுமை எனும் கயிறு” என திரித்து வளைத்து மறைத்து மக்களை ஏமாற்றி வஞ்சிக்கிறார்கள்.

இந்த மவ்லவிகள் 3:103 இறைவாக்கு, நெறிநூல் குர்ஆனைக் குறிப்பிடுவதை ஒற்றுமை எனும் கயிறு என்று திரித்துக் குறிப்பிடுவதில் அவர்களின் சுய நலமும், நயவஞ்சகத் தன்மையும் வெளிப்படுகிறது. பெருங்கொண்ட மக்களைக் கொண்டு நரகத்தை நிரப்பும் அல்லாஹ்வின் வாக்கு முந்திவிட்டதாலும், அது கண்டிப்பாக நிறைவேறியே தீரும் என்பதாலும் (பார்க்க : 32:13, 11:118,119) பெருங்கொண்ட மக்கள் 49:14 இறைவாக்குக் கூறுவது போல் ஈமான்- இறை நம்பிக்கை உள்ளத்தில் நுழையாமல் பெயர் தாங்கி முஸ்லிம்களாக இருப்பதாலும், 12:106 இறை வாக்குக் கூறுவது போல் பெருங்கொண்ட மக்கள் அல்லாஹ்வுக்கு இணை வைத்தவர்களாகவும், 9:31 இறைவாக்குக் கூறுவது போல் இந்த மவ்லவிகளை தங்களின் “”ரப்பாக” எடுத்துக் கொண்டவர்களாக இருப்பதாலும், ஒவ்வொரு ஊரிலும், மஹல்லாவிலும் கோணல் வழிகளில் செல்லும் அப்படிப்பட்ட முஸ்லிம்களே ஒற்றுமையாகப் பெருங் கூட்டமாக இருக்கிறார்கள்.

குர்ஆன், ஹதீஃத் கூறும் நேர்வழியை சத்தியத்தைச் சொல்லும் முஸ்லிம்கள் விரல் விட்டு எண்ணும் அளவில் ஒரு சிலரே இருக்கின்றனர். எனவே மஹல்லாக்களில் ஒற்றுமையாக இருக்கும் முஸ்லிம்களிடையே குழப்பத்தை ஏற்படுத்திப் பிளவை உண்டுபண்ணுவதாக அவர்களால் எளிதாக அவதூறு பரப்ப முடிகிறது. அந்த அடிப்படையில் 3:103 இறைவாக்கு அல்லாஹ்வின் கயிறான (பிஹப்லில்லாஹ்) குர்ஆனைக் குறிப்பிடுவதை ஒற்றுமை எனும் கயிறு எனத் திரித்துக் கூறுகிறார்கள் இம்மவ்லவிகள்.

மவ்லவிகள்தான் அல்லாஹ்வின் கயிறு என்றிருப்பதை ஒற்றுமை எனும் கயிறு என்று திரித்துக் கூறுகிறார்கள் என்றால் அவர்களை ரப்பாகக் கொண்டு கண்மூடிப் பின்பற்றும் மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள், இன்னபிற உலகியல் பட்டங்கள் பல பெற்ற அறிஞர்களும் ஒற்றுமை எனும் கயிறு என்றே சொல்கிறார்கள், எழுதுகிறார்கள். தமிழகத்தில் மிகவும் பிரபலமான ஒரு எழுத்தாளரும் மருத்துவரும் கூட பிஹப்லில்லாஹ் என்று 3:103 இறைவாக்குக் கூறுவதை ஒற்றுமை எனும் கயிறு என்றே தனது கட்டுரைகளில் எழுதி வருகிறார், பேசி வருகிறார் என்றால் மற்றவர்களைப் பற்றிச் சொல்லவா வேண்டும்.

இந்த இடத்தில் பக்தி என்றால் புத்தி முட்டிப் போகிறது. சிந்திக்க முடியாமல் புத்தி பேதலித்து விடுகிறது என்று ஈ.வே.ரா. சொன்னதே எமது ஞாபகத்திற்கு வருகிறது. ஆம்! மதகுருமார்களைக் கண்மூடிப் பின்பற்றும் அனைத்து மதங்களைப் பின் பற்றும் ஒட்டுமொத்த மக்களின் நிலை இதுதான். செம்மறி ஆட்டு மந்தைக் கூட்டம்தான். இந்த உண்மையை 2:243, 6:116, 7:187. 9:69, 11:17, 12:21, 38, 40, 68, 103, 13:1, 16:38, 17:89, 18:54, 25:50, 30:6, 30, 34:28, 34:36, 40:57,59,61, 45:26 இந்த இறைவாக் குகள் அனைத்தையும் பொறுமையாக, நிதானமாக, நடுநிலையுடன், சுய சிந்தனையுடன் படித்து அறிகிறவர்கள் ஒப்புக்கொள்ளவே செய்வார்கள். ஆனால் அவர்கள் ஒருசிலராக மட்டுமே இருப்பார்கள். பெருங்கூட்டம் நிராகரிக்கவே செய்யும்.

பல்லாயிரக்கணக்கான நபிமார்களில் அல்லாஹ் அல்குர்ஆனில் சில நபிமார்களின் வரலாற்றையே கூறியுள்ளான். குர்ஆனில் கூறப்பட்டுள்ள அந்த வரலாறுகளை கவனமாகப் படித்துப் பாருங்கள். அந்தந்தக் காலத்து மதகுருமார்கள் அந்தந்த நபிமார்களை மிகக் கடுமையாக எதிர்த்ததையும் பெருங் கொண்ட மக்கள் குறிப்பாகச் செல்வந்தர்கள் அம் மதகுருமார்கள் பின்னால் அணிவகுத்ததையுமே பார்க்க முடிகிறது. 7:59-64,87, 10:71-74, 11:25-48, 21:76,77, 23:23-29, 25:37, 26:105-120, 29:14,15, 37:75-79, 51:46. 53:52, 54:9-15, 66:10, 71:1-28 போன்ற இறைவாக்குகளில் நபி நூஹ்(அலை) அவர்களின் சமூகம் பற்றியும்,

2:258, 6:74, 9:114, 19:41-50, 21:51-70, 26:69-82, 29:16-22, 37:83-98, 60:4 போன்ற இறைவாக்குகளில் நபி இப்றாஹீம்(அலை) அவர்களின் சமூகம் பற்றியும், 5:20-26, 7:103-154, 10:75-92, 11:96-99,110, 14:5-8, 17:101-103, 23:45-49, 25:35,36, 26:10-67, 40:23-27, 43:46-56, 51:38-40, 61:5, 79:15-26, போன்ற இறைவாக்குகளில் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகம் பற்றியும்,

2:87. 3:54,56,63, 4:156-159, 171, 5:17,72,75, 110-120, 9:30-34, 43:57-59, 61-65, 61:6 போன்ற இறை வாக்குகளில் நபி ஈஸா(அலை) அவர்களின் சமூகம் பற்றியும், இன்னும் இவைபோல் மற்ற நபிமார்களின் சமூகங்கள் பற்றியும் பல இடங்களில் குர்ஆன் கூறுவதை நேரடியாகப் படித்து விளங்குகிறவர்கள் ஒவ்வொரு காலத்திலும் ஷைத்தானின் நேரடி ஏஜண்டுகளாகச் செயல்படும், வரம்புமீறி ஷைத்தான் போல் செயல்படும் தாஃகூத்களான இம்மதகுருமார்கள் பின்னால் அக்கக்காலத்து பெருங்கொண்ட மக்கள் வழிகேட்டில் ஒற்றுமையாக அணிவகுத்துச் சென்றதை அறிய முடியும்.

பெருங்கொண்ட மக்கள் ஒற்றுமையாக இம்மவ்லவிகளின் பின்னால் சென்றாலும் அல்லாஹ் அவர்களை ஒரு சமூகமாகக் குறிப்பிடவில்லை. 6:153 இறைவாக்குக் கூறும் ஒரே நேர்வழியை (இதர வழிகள் எதுவொன்றும் நேர்வழி இல்லவே இல்லை) பின்பற்றியவர்கள், அவர்கள் ஒருவராக இருந்தா லும், ஓரிருவராக இருந்தாலும், வெகுசிலராக இருந் தாலும் அவர்களையே வல்ல அல்லாஹ் சமூகமாக அங்கீகரிக்கிறான்.

அன்று இப்றாஹீம்(அலை) தனியொரு மனிதராக இறைவனிடமிருந்து பெற்ற நேர்வழியைப் போதித்தார். கோணல் வழிகளில் இருந்த அவரது தந்தை, உற்றார்கள், உறவினர்கள், மன்னன் நம்ரூது அவனது குடிமக்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஒற்றுமையாக இப்றாஹீம்(அலை) அவர்ளை மிகக் கடுமையாக எதிர்த்தார்கள். இப்றாஹீம்(அலை) அவர்கள் நேர்வழி நடக்கும் தனி நபராக இருந்தும் அவர் களையே “”உம்மத்தன் கானித்தன்” (16:120) என்று அல்லாஹ் சிறப்பித்துச் சொல்கிறான்.

அதே போல் சில நபிமார்கள் தன்னந் தனியாகவும், சிலர் ஓரிருவருடனும், சிலர் சிலருடனும் சுவர்க்கம் செல்வார்கள் என்று புகாரீ (ர.அ.) 5705, 5752 ஹதீஃத்கள் கூறுகின்றன. இறைவனுடைய பார்வையில் அவர்களே சமூகமாக அங்கீகரிக்கப் படுகிறார்கள். மதகுருமார்களான மவ்லவிகள் பின்னால் ஒன்றுபட்டு ஒற்றுமையாகச் செல்லும் பெருங் கொண்ட மக்கள் கோணல் வழிகளில் நரகை நோக்கி நடைபோடுவதால் (பார்க்க 32:13, 11:118, 119) அவர்களை சமூகமாக அல்லாஹ் அங்கீகரிப்பதே இல்லை.

இது ஒன்றும் ஆச்சரியமான விசயமல்ல. பல லட்சங்கள் செலவில் கடலிலிருந்து வெளியே எடுத்துக் குவிக்கப்படும் கோடிக்கணக்கான சிப்பிகளைப் பெரும் பொருள் செலவில் ஒன்று ஒன்றாக உடைத்துப் பார்க்கும் போது பெரும்பாலான சிப்பிகளில் முத்து இருப்பதில்லை. வெற்றுச் சிப்பி களாகவே இருக்கும். அவை பெரும் அம்பாரமாகக் குவிக்கப்படும். முத்துள்ள ஒரு சில சிப்பிகள் மட் டுமே தனியாக எடுத்து வைக்கப்படும். அந்த ஒரு சில முத்துள்ள சிப்பிகளுக்கு, அம்பாரமாகக் குவிக் கப்பட்டுள்ள வெத்துச் சிப்பிகள் ஈடாகுமா? லட்சக் கணக்கில் செலவிடப்பட்டது ஒரு சில முத்துள்ள சிப்பிகளுக்காகவே; வெற்றுச் சிப்பிகளுக்காக அல்ல. வெற்றுச் சிப்பிகள் நெருப்பில் எரிக்கப்படுவதையும் பார்க்கத்தானே செய்கிறோம்.

இதுபோலவே யாருடைய உள்ளத்தில் முத்தான ஈமான் இருக்கிறதோ அவர்கள் 2:208 குர்ஆனின் கட்டளைப்படி தீனுல் இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுவார்கள். ஷைத்தானின் ஏஜண்டுகளான-தாஃகூத்களான மவ்லவிகளின் அடிச்சுவடுகளைப் பின்பற்ற மாட்டார்கள். 7:3, 53:2,3, 33:21, 36, 66-68, 59:7 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து நேரடியாக குர்ஆன் வசனங்களை, ஆதாரபூர்வமான ஹதீஃத்களைப் படித்து விளங்கி அதன்படி நடப்பார்கள். 2:186, 50:16, 56:85 இறைக் கட்டளைக்குக் கட்டுப்படுத்த தங்களுக்கும் இறைவனுக்குமிடையில் எந்த இடைத்தரகரையும், புரோகிதரையும், மவ்லவியையும் புகுத்தமாட்டார்கள். 39:17,18 இறைக் கட்டளைகளுக்கு முற்றிலும் அடிபணிந்து 9:31 இறைவாக்குக் கூறுவது போல் தாஃகூத்களான இந்த மவ்லவிகளை ரப்பாகக் கொண்டு அவர்களை வணங்க மாட்டார்கள்.

ஒரு குறிப்பிட்ட மத்ஹபுக்குப் பின்னால், இமாமுக்குப் பின்னால், தரீக்காவுக்குப் பின்னால், ஷைகுக்குப் பின்னால், இயக்கத்திற்குப் பின்னால், மவ்லவிகளுக்குப் பின்னால், அண்ணனுக்குப் பின்னால், மனிதர்களில் எவர் பின்னாலும் கண் மூடிச் செல்லாமல், யார் எழுதியிருந்தாலும் அதைப் பார்த்து, எவரது பேச்சாக இருந்தாலும் அதைக் கேட்டு அவற்றில் அழகானதை, குர்ஆன், ஹதீஃத்க ளுக்கு உட்பட்டிருப்பதை மட்டும் எடுத்து நடப்பார்கள்; இவர்களே நேர்வழி நடப்பவர்கள், அறிவாளிகள், அல்லாஹ்வின் நன்மாராயம் பெற்றவர்கள் என்று குர்ஆன் 39:17,18 இறைவாக்குகள் கூறுவதை அப்படியே ஏற்று நடப்பார்கள். 2:186 இறைக் கட்டளைக்கு முரணாக மனிதர்களில் எவர் பின்னாலும் கண்மூடிச் சென்றால் (தக்லீது) அது அவர்களை நரகில் கொண்டு சேர்க்கும் என்பதை விளங்கி நடப்பார்கள். (பார்க்க : 33:66-68)

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இறைச்செய்தியைப் பெற்று மக்களுக்கு அறிவித்த இறைத்தூதர்களும், அவர்களைப் பின்பற்றியவர்களுமே சமுதாயத்தைப் பிளவுபடுத்தி, குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்துவதாக மக்களிடையே ஆதிக்கம் செலுத்திய மதகுருமார்கள் அவதூறு பரப்பினார்கள். இதோ பாருங்கள்:

“”மூஸாவைக் கொல்ல என்னை விட்டு விடுங்கள்! இன்னும், அவர் தம் இரட்சகனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்களின் மார்க்கத்தை மாற்றி விடுவார். அல்லது இப்பூமியில் குழப்பத்தை ஏற்படுத்துவார் என அஞ்சுகிறேன்” என ஃபிர்அவ்ன் கூறினான். (40:26)

அதற்கு மாறாக ஃபிர்அவ்னே குழப்பம் செய்ப வனாக இருந்தான் என்று 10:91குர்ஆன் வசனம் கூறுகிறது.

ஃபிர்அவ்னுடைய அகராதியில் சிலைகள் வணக்கம் என்ற கோணல் வழிதான் நேர்வழி மார்க்கமாகவும், மூஸா(அலை) அவர்கள் அல்லாஹ்விடமிருந்து வஹி மூலம் பெற்ற நேர்வழிச் செய்திகள் கோணல் வழியாகவும் தெரிந்தது போல், இந்த மவ்லவிகளிடம் அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள முன்னோர்கள், மூதாதையர்கள், இமாம்கள், அவுலியாக்கள் பேரால், சொல்லப்படும் கற்பனைகள், கட்டுக் கதைகள் நேர்வழியாகத் தெரிகிறது. நவீன இமாம் தவ்ஹீத்(?) மவ்லவியின் சுய புராணங்கள் நேர்வழியாகத் தெரிகிறது. அதற்கு மாறாக குர்ஆன் வசனங்களின், ஆதாரபூர்வமான ஹதீஃத்களின் நேரடிக் கருத்துகள் இவர்களுக்குக் கோணல் வழிகளாகத் தெரிகின்றன. அதனால்தான் குர்ஆன், ஹதீஃத் போதனைகளை உள்ளது உள்ளபடி எடுத்துச் சொல்பவர்கள் இறை இல்லங்களில், மஹல்லாக்களில் குழப்பம் விளைவிப்பதாக, கலகம் செய்வதாக எளிதாக அவதூறு பரப்ப முடிகிறது.

இறைத்தூதர்கள் அனைவருமே இந்த மதகுருமார்களிடம் படாத பாடுபட்டார்கள். பொய்யன், பைத்தியக்காரன், மனநோயாளி, குழப்பம் செய்ப வன், கலகம் விளைவிப்பவன், ஒற்றுமையாக இருக்கும் மக்களைப் பிளவுபடுத்துகிறவன் இத்யாதி, இத்யாதி, சுடு சொற்களை இறைத்தூதர்கள் மீது வாரி இறைத்தார்கள். அள்ளிக் கொட்டினார்கள். இதையே குர்ஆன் 36:30 இறைவாக்கு நெத்தியடியாகக் கூறுகிறது. அது வருமாறு.

அந்தோ! அடியார்களின் மீது கைசேதமே. அவர் களிடம் எந்தத் தூதர் வந்தாலும், அவரை அவர்கள் பரிகாசம் செய்யாமல் இருந்ததில்லை. (36:30)

இறுதி நெறிநூல் அல்குர்ஆனைத் தன்னம்பிக்கையோடு, சுய சிந்தனையோடு, முயற்சி எடுத்துப் படித்து வருபவர்கள், 26:69 இறைவாக்கில் அல்லாஹ் வாக்களித்துள்ளது போல், அனைத்து இறைத் தூதர்களும் இந்த மதகுருமார்கள் மற்றும் அவர்களது கண்மூடி பக்தர்களால், எள்ளி நகையாடப் பட்டிருக்கிறார்கள், பரிகாசம் செய்யப் பட்டிருக்கிறார்கள், குழப்பம் செய்வதாகவும், கலகம் விளை விப்பதாகவும் குற்றப்படுத்தப்பட்டிருக்கிறார்கள், ஒற்றுமையாக(?) இருக்கும் சமுதாயத்தைப் பிளவு படுத்துவதாக அபாண்டப் பழி சுமத்தப் பட்டிருக்கி றார்கள் என்பதை நேரடியாக விளங்கிக் கொள்வார் கள். ஆக இம்மதகுருமார்கள் செய்து வரும் அட்டூழி யம், அராஜகங்கள் அனைத்தையும் 4:112 இறை வாக்குக் கூறுவது போல் இறைத் தூதர்கள் மீதும், அவர்களது தூய நற்போதனைகளை ஏற்று நேர்வழி நடந்த, நடக்கும் மக்கள் மீது சுமத்துகிறார்கள்.

குர்ஆன் வசனங்களை நிராகரித்து, குஃப்ரிலாகி சமுதாயத்தில் பிளவையும் பெருங் குழப்பத்தையும் ஏற்படுத்துகிறவர்கள் மதகுருமார்களான மவ்லவிகளும் அவர்களின் கண்மூடிப் பக்தர்களுமே என்பதைப் பட்டியலிடுகிறோம் பார்த்துப் படிப்பினைப் பெறுங்கள். ஆலிம்கள், அல்லாமாக்கள், மவ்லானாக்கள், மவ்லவிகள் என பெருமை பேசும் இந்த மதகுருமார்கள் ஏற்படுத்தியுள்ள பெருங் குழப்பம், பெருங்கலகம் (ஃபித்னா-ஃபஸாத்) 2:213, 10:19, 21:92, 23:52 போன்ற இறைவாக்குகள் தெள்ளத் தெளிவாக நேரடியாக இந்தச் சமுதாயம் வேற்றுமையோ, பிளவோ இல்லாத ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத்-சமுதாயம் என்று கூறி இருக்க, இந்த இறைவாக்குகள் அனைத்தையும் நிராகரித்துச் சமு தாயத்தை ஆலிம்-அவாம் எனக் கூறுபோட்ட தாகும்.

3:110, 9:71, 103:1-3 போன்ற இறைவாக்குகளும், “”என்னைப் பற்றி ஒரேயொரு செய்தி உங்களுக்குத் தெரிந்தாலும் அதை மற்றவர்களிடமும் சேர்த்து விடுங்கள்” என்ற நபி(ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டலும், ஒவ்வொரு ஆணும், பெண்ணும் மார்க்கப் பிரசாரம் செய்ய வேண்டும் என நேரடியாகக் கட்டளையிட்டுக் கொண்டிருக்க, இந்த இறை வாக்குகளையும், நபியின் கட்டளையையும் 3:187 இறைவாக்குக் கூறுவது போல் முதுகுகளின் பின்னால் எறிந்து, அற்பக் கிரயமாகச் சம்பளம் பெற்று மார்க்கப் பணி புரிகிறார்கள் இந்த மவ்லவிகள்.

இந்த அற்பமான சம்பளத்திற்காகப் பெருங் கொண்ட மக்களை குர்ஆன், ஹதீஃதை விட்டுத் தூரப்படுத்தி, அவர்களை அவாம்களாக்கி அதாவது மார்க்கம் அறியா மூடர்களாக்கித் தங்களைக் கண் மூடிப் பின்பற்றச் செய்துள்ளனர் (முகல்லிதுகள்) இந்த மவ்லவிகள். 100 சதவிகித முஸ்லிம்களும், ஆண்களும், பெண்களும் மார்க்கத்தை விளங்கிச் செயல்படுவதற்கு மாறாக 5 சதவிகிதமே தேறாத இந்த மவ்லவிகள், 95 சதவிகித முஸ்லிம்களை மார்க்கத்தின் பெயரால் ஏமாற்றி வஞ்சித்து வயிறு வளர்க்கும், ஒரு பெரும் வழிகேடான நரகில் புகச் செய்யும் ஹராமான செயலை, இந்த மவ்லவிகள் துணிந்து அரங்கேற்றி வருகின்றனர். ஒன்றுபட்ட ஒரே முஸ்லிம் சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனப் பிளவுபடுத்தி பெருங் குழப்பத்தையும், பெருங் கலகங்களையும் (ஃபித்னா ஃபஸாத்) இந்த மவ்லவிகளே ஏற்படுத்தி வருகின்றனர் என்பது குன்றி லிட்டத் தீபமாக விளங்கவில்லையா?

ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனப் பிளவுபடுத்தி உலகியல் ஆதாயங்களை அடைந்தாலும், அந்த ஆலிம் வர்க்கத்திற்கு ஒரேயொரு தலைமைதானே இருக்க முடியும். பொறுக்குமா உலகியல் ஆதாங்களைக் குறிக்கோளாகக் கொண்ட இம்மவ்லவிகளுக்கு? தனித் தனித் தலைமைக்கு ஆசைபட்டு சமுதாயத்தை மேலும், மேலும் கூறுபோட ஆரம்பித்தார்கள். ஒரே ஜமாஅத்தாக ஒன்றுபட்டிருந்தால் ஒரே ஒரு தலைமைதானே இருக்க முடியும். உலகியல் ஆதாயங்களைக் குறியாகக் கொண்டிருப்பவர்கள் இதை ஏற்க முடியுமா? தனித்தனித் தலைமைக்கு வழி என்ன? சமுதாயத்தை மேலும் பிளவுபடுத்தினால் மட்டுமே அது சாத்தியமாகும். எனவே அவர்களுக்குள் போட்டி பொறாமை ஏற்பட்டுத்தானே ஆக வேண்டும். ஆம்! மார்க்கம் தெள்ளத் தெளிவாக இருக்க, குர்ஆன், ஹதீஃத் நேரடியாகச் சொல்லும் கருத்துக்களையும் திரித்து வளைத்து, மறைத்து, சுய விளக்கம் கொடுத்து எண்ணற்ற பிரிவுகளைக் கற்பன செய்துள்ளனர். இதை குர்ஆன் 2:90, 213, 3:19, 10:90, 42:14, 45:17 வசனங்களை நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள் அறிய முடியும்.

இப்படி குர்ஆன், ஹதீஃத் ஆதாரமில்லாது சுய விளக்கம் கொடுப்பது பகிரங்கமான வழிகேடு; நரகில் சேர்க்கும் என்று நேரடியாகக் கூறும் 33:36, 10:36, 22:8, 6:68, 40:4,35, 4:140 இறைவாக்குகள் இந்த மவ்லவிகளை உணர்வு பெறச் செய்யாது. அற்பமான உலகியல் ஆசை குர்ஆன், ஹதீஃத் ஞானமிருந்தும் அவர்களை ஷைத்தான் பின்னால் செல்ல வைக்கிறது. இந்த உண்மையையும் குர்ஆன் 7:175-179, 47:21-30 இறைவாக்குகள் உறுதிப் படுத்துகின்றன.

இந்த மவ்லவிகளின் போட்டி பொறாமையே ஆலிம்-அவாம் பிளவுக்குப் பிறகு ஷிஆ-சுன்னத் வல் ஜமாஅத் என பிளவுபட வைத்தது. மீண்டும் இவர்களின் பதவி ஆசை ஷிஆ ஜமாஅத்திலும் பல பிரிவுகளைத் தோற்றுவித்தது. சுன்னத் ஜமாஅத்திலும் ஹனஃபி, ஷாஃபி, மாலிக்கி, ஹன்பலி பிரிவுகளை கற்பனைச் செய்தார்கள்.

21:92, 23:52 இறைவாக்குகள் வேற்றுமையோ, பிளவோ இல்லாத ஒன்றுபட்ட ஒரே ஜமாஅத் என்று கூறுவதோ, குர்ஆன் முஹ்க்கமாத் வசனங்களுக்கு 33:36 இறைக்கட்டளைப்படி வேறு சுய விளக்கம் கொடுக்காமல், 3:103 இறைவாக்குக் கட்டளையிடுவது போல் அல்லாஹ்வின் கயிறான அல்குர்ஆனைப் பற்றிப் பிடித்து ஒரே ஜமாஅத்தாக இருக்க வேண்டும்; பிரியவே கூடாது என்ற அல் லாஹ்வின் நேரடிக் கட்டளையோ மவ்லவிகளின் உள்ளத்தைத் தொடாது. உலகியல் ஆதாயங்களையும், பெருமை பாராட்டுவதையும் அசல் குறிக் கோளாகக் கொண்ட இந்த மதகுருமார்களான மவ்லவிகள் 3:187 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆன் போதனைகளை முதுகுக்குப் பின்னால் போட்டுவிட்டு, உலகியல் ஆதாயங்களை அடைவது கொண்டு 23:53-56 இறைவாக்குகள் கூறுவது போல் மகிழ்வும் பெருமையும் கொள்கிறார்கள்.

3:103,105, 6:153, 159, 30:32, 42:13,14, 21:93, 23:52-56 போன்ற எண்ணற்ற இறைவாக்குகள் மார்க்கத்தில் பிரிவுகளுக்கு, பிளவுகளுக்கு எந்த வகையிலும் அனுமதி இல்லை, அது மகாமகா வழிகேடு என்று உள்ளங்கை நெல்லிக்கனியாக, குன்றிலிட்ட தீபமாக உரத்துச் சொல்லிக் கொண்டிருப்பதை 2:39 இறைவாக்குக் கூறுவது போல் நிராகரித்து குஃப்ரி லாகி மத்ஹபு, தரீக்கா, மஸ்லக், இயக்கப் பிரிவுகள் இவற்றை நியாயப்படுத்தும் இம்மவ்லவிகள் எம்மாப் பெரிய மாபாவிகள் என்பதை உள்ளத்தில் ஈமான் நிறைவாகக் கொண்டு 3:103 இறைக் கட்டளைப்படி குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடிப் போதனைகள்படி நடப்பவர்களே உணர முடியும். இம்மவ்லவிகள் பின்னால் கண்மூடிச் செல்லும் முகல்லிதுகள் ஒருபோதும் உணர்ந்து நேர் வழி பெறவே மாட்டார்கள்.

ஆக சமுதாயத்தில் பிளவுகள், பிரிவுகளைக் கற்பனை செய்து நடை முறைப்படுத்துகிறவர்களே, குழப்பங்களையும், கலகங்களையும் விளைவிப்பவர்கள் என்பதில் சந்தேகமுண்டா? ஆனால் அப்பழியை குர்ஆனைப் பற்றிப் பிடித்து அதன் நேரடிப் போதனைப்படி நடப்பவர்கள் மீது வாரி இறைக்கிறார்கள் இம் மவ்லவிகளும் அவர்களது கண்மூடிப் பக்தர்களும். இன்னும் பாருங்கள் இம்மவ்லவிகளின் தரங்கெட்டப் புத்தியை. அல்லாஹ் 2:114, 72:18 இறைவாக்குகளில் பள்ளிகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்று நேரடியாக நெத்தியடியாகச் சொல்லியிருக்க, அல்லாஹ்வின் இந்த எச்சரிக்கையை துச்சமாகத் தூக்கி எறிந்து விட்டு, இது சுன்னத் ஜமாஅத்திற்குக் கட்டுப்பட்டப் பள்ளி, ஹனஃபி பள்ளி, ஷாஃபி பள்ளி, ஹன்பலி பள்ளி, மாலிக்கி பள்ளி, முஜாஹித் பள்ளி, அஹ்லஹதீஸ் பள்ளி, ஜாக் பள்ளி, தமுமுக பள்ளி, ததஜ பள்ளி, இதஜ பள்ளி, இத்யாதி இத்யாதி பல பிரிவுகளின் பள்ளிகள் எனச் சொந்தம் கொண்டாடுகிறவர்கள் எப்படிப்பட்ட மாபாவிகளாக இருப்பார்கள்? எப்படிப்பட்டக் குழப்பவாதிகள் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். ஒரு மனிதனுக்குச் சொந்தமான ஒரு சொத்தைப் பிரிதொருவன் சொந்தங் கொண்டாடுவது, திருட்டுத்தனமாகப் பொய்ப் பத்திரங்கள் மூலம் அபகரிப்பது எப்படிப்பட்டக் கொடூர குற்றம் என்பதை அறியாதவன் வடிகட்டிய மூடனாக மட்டுமே இருக்க முடியும். இந்த நிலையில் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான, வேறு எவருமே உரிமை கொண்டாட முடியாத பள்ளிகளை இப்படிக் கூறு போட்டுப் பிரித்துச் சொந்தம் கொண்டாடுவது எவ்வளவு பெரிய குற்றச் செயல், மாபாதகச் செயல் என்பதை விளங்க முடியாதவர்களா இந்த மவ்லவிகள்.

இப்படிப்பட்ட அவர்களின் பள்ளிகளில் அவர்களின் மத்ஹபு, தரீக்கா, மஸ்லக், இயக்கக் கொள்கை சார்ந்தவர்களே, அவர்களின் வழிகெட்ட கொள்கைகள் அடிப்படையில் தொழவைக்க, உரையாற்ற அனுமதிக்கப்படுவார்கள். மனிதக் கருத்துக்களைப் புகுத்தாமல், குர்ஆன், ஹதீஃதில் உள்ளது உள்ளபடி உரையாற்ற அவர்களின் பள்ளிகளில் அனுமதி இல்லை. அல்லாஹ்வின் பள்ளிகளில் அல்லாஹ்வின் பெயர் துதிக்கப்படுவதை, அவனது நேரடிக் கட்ட ளைகளை குர்ஆனில் இருந்தே எடுத்துக் காட்டி உரையாற்றுவதைத் தடுக்கும் இம்மவ்லவிகள் 2:114 இறைவாக்குக் கூறுவது போல் பெரும் அக்கிரமக்காரர்களா? இல்லையா? பெரும் குழப்பவாதிகளா? இல்லையா? உண்மையில் இறையச்சம் அவர்களுக்கிருந்தால், இக்கொடிய செயலைச் செய்யத் துணிவார்களா? இப்படிப்பட்டவர்களுக்கு இம்மையில் இழிவும், மறுமையில் கடும் வேதனையும், தண்ட னையும் உண்டு என 2:114 இறைவாக்குக் கூறுவது இந்த மவ்லவிகளுக்கு உறைக்கவில்லையா? அந்தளவு அவர்களின் உள்ளங்கள் கற்பாறைகளாக இறுகிவிட்டனவா? அந்தோ பரிதாபம்! இந்த மவ்லவிகளே சமுதாயத்தில் பெரும் குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்திக் கொண்டு 4:112 இறைவாக்குக் கூறுவது போல், அப்பழியை குர் ஆனைப் பற்றிப் பிடித்து அதன் போதனைப்படி நடப்பவர்கள் மீது அவதூறாகப் பரப்புவதை விடப் பெருங்குழப்பம் வேறு இருக்க முடியுமா?

மேலும் இந்த மவ்லவிகள் பள்ளிவாயிலிலேயே தொழுகையின் போது ஏற்படுத்தும் குழப்பங்களைப் பாருங்கள்.
1400 ஆண்டுகளுக்கு முன்னர் அரேபியா ஒரு பாலைவனம். காற்றுக் கடுமையாக மணலை அள்ளி வீசும். அங்குள்ள மக்கள் மதம், கொள்கை வேறுபாடு எதுவுமின்றி தமது உடலைக் குறிப்பாகத் தலையை அம்மணலிலிருந்துக் காப்பாற்றிக் கொள்ளத் தொப்பித் தலைப்பாகை அணிவது வழக்கம். அந்த அடிப்படையிலேயே முஸ்லிம்களும் அன்று தொப்பித் தலைப்பாகை அணிந்தனர். மற்றபடி மார்க்கத்தில் தொப்பித் தலைப்பாகைக்கு எவ்வித முக்கியத்துவமும் இல்லை. அதேபோல் அன்றிருந்த மக்களில் நாத்திக, யூத கிறித்தவ, குறைஷ் காஃபிர்கள், முஸ்லிம்கள் பெரும்பாலோர் தாடியும் வளர்த்தனர். இஸ்லாமிய மார்க்கத்தில் “”எனது எஜமானன் தாடியை விடும்படியும், மீசையைக் கத்தரிக்கும் படியும் கட்டளை யிட்டுள்ளான்” என்று நபி(ஸல்) அவர்கள் அறிவித்துள்ளபடி தாடி வலியுறுத்தப்பட்ட சுன்னத்தாகும்.

ஆனால் இன்றைய மவ்லவிகளின், தொழவைக்கும் இமாம்களின் நிலை என்ன? பெரும்பாலும் கசகசா தாடியுடன் காணப்படுகின்றனர். பள்ளி நிர்வாகிகள் மழுங்கச் சிரைத்துப் பெண்களைப் போல் காட்சியளிக்கின்றனர். வலியுறுத்தப்பட்ட சுன்னத்தான தாடியில் அக்கறை காட்டாத இம் மவ்லவிகள், தொழுகையில் மட்டும் தொப்பிப் போடுவதை கடமை போல் வலியுறுத்துகின்றனர். வெளியில் தலை திறந்த நிலையில் திரிபவர்க ளைத் தொழுகையில் தொப்பி அணியும்படி நிர்ப் பந்திக்கின்றனர். அதற்காகப் பள்ளிகளில் ரெடி மேடாக ஓலைத் தொப்பிகளை அடுக்கி வைத்து ஒருவருடைய தலையில் இருக்கும் பேன், பொடுகு, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் மற்றவர்களின் தலைக்குப் பரவ வழி வகை செய்துள்ளனர். தூய்மையான எண்ணத்துடன் பள்ளிக்குத் தொழ வந்தவர்களை, நடிகனைப் போல் ஓலைத் தொப்பி அணிந்து நடிக்க வைக்கின்றனர். வெளியில் திறந்தத் தலையுடன் திரியும் ஒரு முஸ்லிம், வெளியில் தொப்பி அணிய வெட்கப்படும் ஒரு முஸ்லிம், தொழுகையில் மட்டும் தொப்பி அணிவது வேடமிட்டு நடிப்பதற்கு ஒப்பாகும் என்று கூறி ஒருவர் அந்த ஓலைத் தொப்பியை அணிய மறுத்தால், அங்கு அந்த இமாமும் அவரது பக்தர்களும் பெரும் குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்தி தொழுகையையே பாழ்படுத்தி விடுவார்கள். மேலும்,

இமாம் சப்தமிட்டு சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் ஆமீன் கூறும் போது, பின்பற்றித் தொழுபவர்களும் ஆமீன் கூறவேண்டும் என்பதை புகாரீ (ர.அ.) 780, 781, 782 ஹதீஃத்கள் அறிவிக்கின்றன. அப்படி ஆமீன் கூறும்போது அது மலக்குகள் ஆமீன் கூறுவதோடு ஒத்துவிட்டால் அவர்கள் முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும் என்று அபூஹுரை(ரழி) கூறும் ஹதீஃத் மேலும் மூன்று அறிவிப்பாளர் தொடரில் வந்துள்ளது.  (புகாரீ (ர.அ.)782)

இந்தத் தெளிவான நேரடியான ஹதீஃதை ஒரு ஹனஃபி பள்ளியில் தொழுகையாளிகள் அனைவரும் ஏகோபித்துச் செயல்படுத்தினால் அது இறை இல்லத்தில், ஒற்றுமையாக உள்ள மஹல்லாவில் குழப்பம் விளைவிப்பதாக ஹனஃபிகள் கூறுகின்றனர். அதே சமயம் 7:55,205 குர்ஆன் வசனங்களின் நேரடிக் கருத்துக்களை நிராகரித்து, இமாம் ஸலாம் கொடுத்தவுடன், இமாம் சப்தமிட்டு துஆ என்ற பெயரில் பித்அத்தான பத்துஆ செய்யும் போது, 2-ம், 3-ம், 4-ம் ரகாஅத்துகளில் வந்து சேர்ந்தவர்கள் எழுந்து தங்களின் எஞ்சியுள்ள தொழுகையை தொழுது கொண்டிருக்கும் போது, அவர்களின் தொழுகைக்கு இடையூறாக குர்ஆனே ஓதக் கூடாது என்று மார்க்கம் சொல்லும் நிலையில், தொழுது முடித்த ஹனஃபிகள் சப்தமாக ஆமீன், ஆமீன், ஆமீன் என்று கோரசாகச் சொல்லி, தொழுபவர்களின் தொழுகையை பாழ்படுத்தி குழப்பம் விளைவிப்பது ஹனஃபிகளுக்குக் குழப்பம் விளைவிப்பதாகத் தெரியவில்லை.

ஷபே மிஃறாஜ், ஷபே பராஅத், 27-ம் இரவே லைலத்துல் கத்ர் என இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களைக் காட்டி நரகில் சேர்க்கும் பித்அத்தான அமல்களை நல்லமல்களாக மக்களை நம்பவைத்து, செயல்படுத்தி ஐங்கால கட்டாயக் கடமையான தொழுகைகளைத் தொழாத முஸ்லிம்களைக் கூட்டிக்கும் மாளம் அடிப்பதை மத்ஹபு மவ்லவிகள் பெருமையாகக் கொள்கின்றனர். இவைபோல் இன்னும் மத்ஹபினரின், தரீக்காவினரின் குர்ஆன், ஹதீஃதுக்கு முரண்பட்டச் செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம். இவர்களின் அகராதியில் அல்லாஹ் சொல்வதைவிட, அவனது இறுதித் தூதர் நடைமுறைப்படுத்திக் காட்டியதை விட, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இமாம்கள், மவ்லவிகள், ஷைகுகள் சொல்வதே வேதவாக்காக(?)த் தெரிகிறது. இவர்களின் மறுமை முடிவு பற்றிக் கூறும் 33:36, 66-68 இறைவாக்குகளை அவர்கள் ஏற்கமாட்டார்கள். இந்த இறைவாக்குகள் முஸ்லிம்களுக்கு உரியவை அல்ல. காஃபிர்கள் சம்பந்தப்பட்டவை என்று அவர்கள் கண்மூடிப் பின்பற்றும் மவ்லவிகள் சொல்வதே அவர்களுக்கு வேதவாக்காக(?)த் தெரிகிறது. மற்றபடி இந்த 33:36, 66-68, இறைவாக்குகள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பின்பற்றுவதையே குறிப்பிடுகின்றன. முஸ்லிம்கள் நம்பிப் பின்பற்றும் முன்னோர்களான சாதாத்துகளையும் அகாபிரீன்களையுமே நேரடியாகச் சொல்கின்றன. மற்றபடி காஃபிர்கள் பின்பற்றும் சிலைக ளையோ மாற்று மதங்களின் மதகுருமார்களையோ அல்லவே அல்ல என்று விளங்கும் சாதாரண நடுத்தர அறிவும் இந்த மவ்லவிகளுக்கும் முகல்லிது முஸ்லிம்களுக்கும் இல்லை என்பதுதான் வேதனையான விசயம்.

மத்ஹபினரின், தரீக்காவினரின் (முகல்லிதுகள்) நிலை இதுவென்றால், முஜாஹித், அஹ்ல ஹதீஃத், ஸலஃபி போன்ற மஸ்லக்கினர், பின்னால் வந்த கலஃபிகளைத்தான் பின்பற்றக் கூடாது; முன்னால் சென்ற ஸலஃபிகளைப் பின்பற்றலாம் எனக் கூறி 7:3, 33:36, 59:7 இறைவாக்குகளை நிராகரித்து விட்டு, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள மவ்லவிகள் கூறுவதை வேதவாக்காக(?)க் கொண்டு தக்லீது செய்யும் முகல்லிதுகளாகவே இருக்கின்றனர். 1987க்குப் பிறகு கற்பனை செய்யப்பட்ட ஆக், ஜாக், தமுமுக, அ.த.ஜ, ததஜ, இதஜ இன்ன பிற தவ்ஹீத்வாதிகள் எனப் பிதற்றும் இயக்கவாதிகளும் அவர்கள் பிதற்றுவது போல் குர்ஆன், ஹதீஃத் நேரடியாகக் கூறும் கட்டளைப்படி நடப்பதில்லை. அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள தற்கால மவ்லவிகள் 33:36 இறைக் கட்டளையை நிராகரித்துச் சொல்லும் சுய விளக்கங்களை வேதவாக்காக(?) எடுத்து நடக்கின்றனர். இவர்களும் கண்மூடிப் பின்பற்றும் முகல்லிதுகளே.
இல்லை என்றால் குர்ஆன் 21:92,93, 23:52-56, 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 ஆக இத்தனை இறைவாக்குகள் நேரடியாகக் கூறும் பிரிவுகள் கூடாது என்பதை நிராகரித்து, அதாவது 2:39 இறைவாக்குக் கூறுவது போல் குஃப்ரிலாகி புதிய மத்ஹபுகளைத் தோற்றுவித்த நவீன இமாம்களான(?) இக் கால மவ்லவிகளைச் சுய சிந்தனை இன்றிப் பின்பற்றுவார்களா? பழங்காலப் பள்ளிகளில் வேண்டுமென்றே பலவீனமான ஹதீஃதைக் காட்டி விரலை வேகமாக ஆட்டி, பிடிவாதமாகக் குழப்பத்தை ஏற்படுத்திப் பக்கத்திலேயே சமுதாயத்தை பிளவு படுத்தும் தீய நோக்கத்துடன் மஸ்ஜிதுன்ழிரார் போட்டிப் பள்ளி கட்ட இந் நவீன மத்ஹபினரான மவ்லவிகளுக்குத் துணை போவார்களா? இவர்கள் பழங்காலப் பள்ளிகளில் பலவீன ஹதீஃத்களைச் செயல்படுத்திப் பெருங் குழப்பத்தை உண்டாக்குகிறார்கள் என்பதை மறுக்க முடியுமா? ஒருபோதும் முடியாது.

21:92, 23:52 இறைக் கட்டளைகள் சொல்வது போல் வேற்றுமையே இல்லாத ஒன்றுபட்ட ஒரே சமுதாயத்தில் தங்களின் போட்டி பொறாமை காரணமாகப் பிளவு, பிரிவுகளைத் தோற்றுவித் துள்ள மத்ஹப், தரீக்கா, மஸ்லக், இயக்கப் பிரிவினருக்கு அல்லாஹ் நேரடியாகச் சொல்வதை விட, அவனது இறுதித் தூதர் நேரடியாக நடைமுறைப் படுத்திக் காட்டியதை விட, அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள இமாம்கள், மவ்லவிகள், ஷைகுகள், அண்ணன்கள் சொல்வதே வேதவாக்கு(?). இவர்களே சமுதாயத்தில் பெருங் குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்தும் பெரும் பாவிகள். அவர்கள் ஏற்படுத்தும் குழப்பங்களையும், கலகங்களையும், இந்த முன்னோர்கள், பின்னோர்கள், மவ்லவிகள், ஷைகுகள், அண்ணன்கள் அனைவரையும் நிராகரித்து குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடித்துச் செயல்படுகிறவர்கள் மீது 4:112 இறைவாக்குக் கூறுவது போல் பழி சுமத்தி மேலும் பாவங்களை அள்ளிக் கட்டுகிறார்கள்.

யார் கோணல் வழிகளில் சென்று குழப்பங்களையும், கலகங்களையும் விளைவிக்கிறார்கள்? யார் நேர்வழி நடந்து 8:73 இறைவாக்குக் கூறுவது போல் பூமியில் குழப்பமும், பெருங்கலகமும் ஏற்படாமல் தடுக்கிறார்கள் என்பதை அறிந்து கொள்ள ஓர் எளிய வழி இதோ:

இடைத்தரகர்களான மவ்லவிகளை நம்பாமல் நேரடியாக குர்ஆனைப் படித்து உணர்கிறவர்கள் ஓர் உண்மையை அறிந்து கொள்ள முடியும். அந்த உண்மை அந்தந்தத் காலத்து மதகுருமார்கள் அவர்களது காலத்து இறைத் தூதரின் பேச்சை கேட்காதீர்கள் என்று மக்களைத் தடுத்த ஆதாரமே காணப்படுகிறது. எந்த இறைத் தூதரும் அவர் காலத்து மதகுருமார்களுடன் பழகாதீர்கள், அவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள் என்று சொன்னதாக கடுகளவும் ஆதாரம் இல்லை.

இப்றாஹீம்(அலை) தனது தந்தை மற்றும் உறவினர்களுடன், மன்னன் நம்ரூதுடன் பழகுவதைத் தடுத்த ஆதாரமில்லை.
மூசா(அலை) ஃபிர்அவ்னுடனும் அவனது பக்தர்களுடனும் பழகுவதைத் தடுத்த ஆதாரமில்லை.
ஈசா(அலை) தமது சீடர்களை யூத மதகுருமார்களுடன் பழகுவதைத் தடுத்த ஆதாரமில்லை.
இறுதி இறைத்தூதர் அவர்களை மிகக் கடுமையாக எதிர்த்த அபூ ஜஹீலுடனோ, அபூலஹபு டனோ, இதர குறைஷ் காஃபிர்களுடனோ பழகாதீர்கள், அவர்களது பேச்சைக் கேட்காதீர்கள் என்று தடுத்ததாக ஆதாரமில்லை.

அதற்கு மாறாக அந்தந்தக் காலத்து மதகுருமார்கள் அந்தந்தக் காலத்து இறைத் தூதரின் பேச்சைக் கேட்காதீர்கள் என்று தடுத்த ஆதாரமே கிடைக்கிறது. இறுதித் தூதரின் பேச்சை கேட்காதீர்கள், குர்ஆனை கேட்காதீர்கள். குர்ஆன் ஓதப்படும் போது காதில் பஞ்சை வைத்துக் கொண்டுக் கூச்சலிடுங்கள். குர்ஆனை மற்றவர்கள் கேட்க விடாமல் தடுங்கள் என்று அபூஜஹீல், அபூலஹப் மற்றும் குறைஷ் காஃபிர்கள் கூறியதாகவே குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்கள் கிடைக்கின்றன. காரணம் என்ன?

இறையருளிய நேர்வழியைப் போதித்த இறைத் தூதர்களின் உள்ளங்களில் களங்கமில்லை. மடியில் கனமில்லை; நேர்வழியைத்தான் போதிக்கிறோம் என்ற உறுதியும் நம்பிக்கையும் இருந்தது. எனவே தங்களின் எதிரிகள் யாருடனும் மக்கள் பழகுவதைத் தடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குற்றமுள்ள நெஞ்சுதானே குறுகுறுக்கும். மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயமிருக்கும். இறைத் தூதர்கள் இவற்றை விட்டும் தூய்மையானவர்கள். அதனால் மக்களைத் தங்களின் எதிரிகளான மதகுரு மார்களுடன் பழகுவதைத் தடுக்கும் கட்டாயம் இல்லை. ஏன்? அவர்களே தங்கள் எதிரிகளுடன் அழகிய முறையில் பழகினார்கள். அவர்களின் நல்லது கெட்டதுகளில் கலந்து கொண்டார்கள்.

இறுதித் தூதர் எந்த அளவு அன்பாக, பண்பாக குறைஷ் காஃபிர்களுடன் பழகி இருந்தால், அவர்கள் தங்களின் அமானிதப் பொருள்களை இறுதித் தூதரிடம் கொடுத்துப் பாதுகாத்துத் தரும்படி கேட்டிருப்பார்கள். ஹிஜ்ரத்துடைய நாளில் அந்த அமானிதங்களை உரியவர்களிடம் சேர்ப்பித்து விட்டு மதீனா வரும்படி, இறுதித் தூதர் தமது மரு மகன் அலீ(ரழி) அவர்களைப் பணித்தது வரலாறு கூறும் உண்மை.

அதற்கு மாறாக நேர்வழியை களங்கப்படுத்தி கோணல்வழிகளை மக்களுக்குப் போதித்து வயிறு வளர்த்த மதகுருமார்களே இறைத்தூதர்கள் போதித்த நேர்வழியை மக்கள் கேட்கவிடாமல் தடுத்த ஆதாரங்களை குர்ஆனில் பார்க்க முடிகிறது. இம்மதகுருமார்களே சமூகங்களில் பெரும் குழப்பத்தையும், கலகங்களையும் விளைவித்ததாக குர்ஆன் கூறுகிறது. அதே வரிசையில்தான் இறுதிச் சமூகமான இந்த உம்மத்திலும் இம்மவ்லவிகள் திருட்டுத்தனமாக நுழைந்து கொண்டு முஸ்லிம்களை குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் 33:36 இறைவாக்குக்கு முரணாகச் சுய விளக்கம் கொடுத்து எண்ணற்றக் கோணல் வழிகளில் இட்டுச் சென்று நரகை நிரப்பி ஷைத்தானின் சபதத்தை நிறைவேற்றத் துணை போகிறார்கள்.

குர்ஆன் 2:146, 6:20 இறைவாக்குகள் கூறுவது போல் நேர்வழி-சத்தியம் இதுதான் என்று தெளிவாக தெரிந்த நிலையில், அதுவும் அவர்கள் தங்கள் பெற்ற பிள்ளைகளை அறிவது போல் அறிந்த நிலையில் சத்தியத்தை மறுத்து வழிகேட்டை மக்களுக்குப் போதிப்பதால், அவர்களின் நெஞ்சங்கள் குறு குறுக்கின்றன, மடியில் கனம் இருப்பதால் நேர்வழியைப் போதிப்பவர்களைப் பற்றிய பயம் இருக்கிறது. அதனால் அந்த நேர்வழிப் போதனைகளை மக்கள் கேட்கவிடாமல் தடுக்கிறார்கள். சத்தியத்தைப் போதிப்பவர்கள் பற்றி பொய்யன், பைத்தியக்காரன், மன நோயாளி, அமானித மோசடிக்காரன், செக்ஸ் புக் அச்சடித்துக் கொடுக்கிறான் என்றெல்லாம் அப்பட்டமான அவதூறுகளைப் பரப்பி பெருங் குழப்பங்களையும், கலகங்களையும் ஏற்படுத்தி சமுதாயத்தை மேலும் மேலும் பிளவு படுத்துகிறார்கள். சுமார் 50க்கும் மேற்பட்ட இறைவாக்குகளை நிராகரித்து மார்க்கத்தை மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதால் 36:21 இறைவாக்குக் கூறுவது போல் அவர்கள் நேர்வழியில் இருக்கிற வாய்ப்பு அறவே இல்லை. 3:187,188, 4:112 இறை வாக்குகள் எச்சரிப்பது இந்த மதகுருமார்களான மவ்லவிகள் பற்றியது தான். அவர்கள் வாழ்வாதாரத்தைத் தக்க வைக்க முஸ்லிம் சமுதாயத்தில் குழப்பத்தையும், கலகத்தையும் ஏற்படுத்துவதோடு, அதை நேர்வழி நடப்பவர்கள் மீது சுமத்தும் கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

இந்த உண்மையை நீங்கள் இன்னும் உறுதிபட விளங்க மேலும் ஓர் ஆதாரம் இதோ:
நவீன ததஜ மத்ஹபின் இமாம்(?) 1986 ஏப்ரலிலிருந்து, ஜூன் 1987 வரை அந்நஜாத் ஆசிரியராக இருந்தபோது, அவர் நேர்வழியை-சத்தியத்தைப் போதிப்பதாக அவரது மனசாட்சி கூறியதால், அந்த 15 மாதங்கள் அவர் அந்நஜாத்தில் எழுதிய கட்டுரைகளை மீண்டும் படித்துப் பாருங்கள். அவற்றில் “”இஸ்லாம் அல்லாத இயக்கம் எங்களுக்கு இல்லை”. “”புரோகிதர்களுக்கு இஸ்லாத்தில் இடமே இல்லை”, “”புரோகிதர்களை நாங்கள் சப்ளை செய்வதில்லை”, “”இஸ்லாத்தில் ஆலிம்-அவாம் வேறுபாடு இல்லை”, “”யாருடைய எழுத்தாக இருந்தாலும், யாருடைய பேச்சாக இருந்தாலும் பார்த்து, காது கொடுத்துக் கேட்டு அவற்றில் குர்ஆன் ஹதீஃதுக்கு ஒத்தக் கருத்துக்களை எடுத்து நடக்க வேண்டும்” “”எந்த விசயமாக இருந்தாலும் குர்ஆன், ஹதீஃதில் பாருங்கள், அவற்றில் இருந்தால் எடுத்துக் கொள்ளுங்கள். இல்லை என்றால் தூக்கி எறியுங்கள்” என்று எழுதியவர்தான், பேசியவர்தான். இதோ பாருங்கள்.
அந்நஜாத் ஜூலை 1986 பக்கம் : 57

கேள்வி : நஜாத் படிக்காதீர்கள் என்று சில ஆலிம்கள் பேசி வருகின்றனர்; நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?
பதுருன்முனீரா, பொன்மலை, திருச்சி.
பீ.ஜை. பதில் : அவர்கள் சத்தியத்தின்பால் இருந்தால் “”நஜாத் படியுங்கள் அதில் கூறப்படுபவைகளுக்கு நாங்கள் விளக்கம் தருகிறோம்” என்று தான் அவர்கள் கூற வேண்டும். அவர்களிடம் குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் அறவே கிடையாது என்ற கராணத்திற்காகவும், மக்கள் விழித்துக் கொள்ளக் கூடாது என்பதற் காகவும் அப்படிச் சொல்கிறார்கள்.

“”நஜாத்தையும் படியுங்கள்! அதற்கு முரண்பட்ட பத்திரிகைகளையும் படியுங்கள்; இரண்டையும் ஒப்பிட்டு உண்மையை உணர்ந்து கொள்ளுங்கள்! என்று நாங்கள் சொல்கிறோம்.

1986, 87களில் இப்படிச் சொன்னவரின், எழுதியவரின் இன்றைய நிலை என்ன? இன்று என்ன சொல்கிறார்? இன்று அவர் நேர்வழியில் இல்லை என்று அவரது மனசாட்சியே கூறுகின்றது. எனவே அந்நஜாத்தைத் தொட்டுக் கூட பார்க்காதீர்கள். தப்பித் தவறியும் அபூ அப்தில்லாஹ் பேச்சைக் கேட்காதீர்கள். அவர் நடத்தும் கூட்டங்களில் கலந்து கொண்டால் எங்கள் ததஜவிலிருந்து நீக்கி விடுவோம் எனத் தமது பக்தர்களை எச்சரிக்கிறார். 1986ல் நேர்வழியில்-சத்தியத்தில் இருந்தபோது அவர் கூறியதையும் எழுதியதையும் மீண்டும் படித்துப் பாருங்கள்.

நாங்கள் எங்கு கூட்டம் போட்டாலும் உடனே அவரது கைத்தடிகளைக் கொண்டு பக்கத்திலேயே போட்டிக் கூட்டம் போட்டு அவரது பக்தர்கள் எங்கள் கூட்டத்திற்கு வராமல் தடுக்கிறார்.

ஆம்! இன்று ததஜ நவீன இமாமிடம்(?) குர்ஆன், ஹதீஃத் ஆதாரம் அறவே கிடையாது என்ற காரணத்திற்காகவும், அவரது பக்தர்கள் விழித்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவுமே அவரது பக்தர்கள் அந்நஜாத்தைப் படிக்க விடாமலும், அபூ அப்தில்லாஹ் பேச்சை கேட்க விடாமலும் தடுக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக் கனியாக விளங்குகிறதா இல்லையா?

இது மட்டுமா? வழிகேட்டில் மத்ஹபுவாதிகளையும், தரீக்காவாதிகளையும், இதர இயக்கவாதிகளையும் மிஞ்சிவிட்டார் இந்த நவீன ததஜ இமாம்(?). மற்றவர்கள் 7:3, 33:36, 59:7, 2:186, 50:16, 56:85 இறைவாக்குகளை நிராகரித்து அல்லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் இடைத்தரகர்களைப் புகுத்தி அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறார்கள். ததஜ இமாமோ(?) அதற்கும் ஒருபடி மேலே போய், தனது ததஜ ஜமாஅத்(?) மட்டுமே நேர்வழி நடக்கும் ஜமாஅத், மார்க்கப் பிரசாரத்திற்கு எங்கள் ததஜ பள்ளிகளையும் (மஸ்ஜிதுன்ழிரார்) எங்கள் ததஜ மேடைகளையும் மட்டும்தான் பயன்படுத்துவோம். எங்கள் மேடைகளில் மற்றவர்களை ஏற்றவும் மாட்டோம்; மற்றவர்களின் மேடைகளில் நாங்கள் ஏறவும் மாட்டோம் என்று பகிரங்கமாக அறிவிப்பவர் ததஜ நவீன மத்ஹப் இமாம்(?) மட்டுமே. அவரது துர்போதனைகளை மனதில் பதிய வைத்துக்கொண்டு, அவரிடமிருந்து வெளியேறியவர்களின், வெளியேற்றப்பட்டவர்களின் நிலையும் இதுவே. அவர்களது உள்ளங்கள் அவர்கள் கோணல் வழியில் இருப்பதை உறுதிப்படுத்துவதால் இந்த பரிதாப நிலை.

மற்றபடி எவரது உள்ளத்தில் குர்ஆன், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி ஏற்று நேர்வழி இதுதான் என்ற உறுதியான ஈமான் இருக்கிறதோ, அந்த நம்பிக்கையில் நடப்பவர்கள் எவரது மேடையில் ஏறியும் சத்தியத்தைச் சொல்லவே துணிவார்கள். எவரையும் தம் மேடையில் பேச அனுமதித்து அதற்குரிய குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்தைக் கேட்பார்கள். எவரது அழைப்பையும் நிராகரிக்கமாட்டார்கள். எங்கள் மேடைகளில் மட்டுமே ஏறுவோம், ஒத்தக் கருத்துடையவர்களோடு மட்டுமே இணைவோம். மாறுபட்ட கருத்துடையவர்களை மதிக்கமாட்டோம். அவர்களைப் புறக்கணிப்போம் என்று குர்ஆன், ஹதீஃத் போதனைக்கு முரணாக ஒரு போதும் செயல்பட மாட்டார்கள். குறிப்பிட்ட சில இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழமாட்டோம், சூன்யத்தை நம்பும் சாதாரண இமாம்கள் என்ன? மஸ்ஜிதுல் ஹரம் இமாமும் ´ஷிர்க் செய்கிறார். அவர் பின்னாலும் தொழுவது ஹராம் என 42:21, 49:16 இறைவாக்குகளை நிராகரித்து, அல்லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாகி (நவூதுபில்லாஹ்) குஃப்ர், ´ஷிர்க் ஃபத்வா கொடுக்கமாட்டார்கள். 4:49, 53:32 இறைவாக்குகளை 2:39 இறைவாக்குக் கூறுவது போல் நிராகரித்து குஃப்ரிலாகி தாங்கள் மட்டுமே நேர்வழியில் இருப்பதாக ஒருபோதும் பீற்றமாட்டார்கள்.

வழிகேட்டிலாகிக் கோணல் வழிகளில் சென்று நாளை நரகை நிரப்ப இருப்பவர்களுக்கு மட்டுமே இப்படிப்பட்ட அசாத்தியத் துணிச்சல் ஏற்படும். இப்படிப்பட்ட மவ்லவிகளே துணிந்து முஸ்லிம் சமூகத்தில் பெரும் பிளவுகளையும், குழப்பங்களையும், கலகங்களையும் விளைவித்துக் கொண்டு 4:112 இறைவாக்குக் கூறுவது போல் அப்பெரும் பழியை குர்ஆன், ஹதீஃதைப் பற்றிப் பிடித்து நடப்பவர்கள் மீது சுமத்தி அவதூறு பரப்புவார்கள். அப்படிப்பட்ட மவ்லவிகளின் வசீகர உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு குர்ஆனையும், ஹதீஃதையும் பற்றிப் பிடிப்பவர்களே 3:103 இறைவாக்குக் கூறுவது போல் வெற்றியாளர்கள். அல்லாஹ் அருள்புரிவானாக!

Previous post:

Next post: