அபூ அப்தில்லாஹ்
சுரியன், சந்திரன், பூமி மூன்று கோள்களும் நேர்கோட்டிற்கு வந்து சங்கமம் (Conjunction) ஆன நொடியுடன் செல்லும் மாதம் முடிந்து வரும் மாதம் ஆரம்பித்து விடுகிறது. சங்கமம் (Conjunction) ஆனவுடன் புதிய மாதம் பிறந்து விட்டது என்பதில் எங்களுக்குச் சந்தேகமே இல்லை. ஆயினும் முதல் பிறை எங்கள் கண்ணுக்குத் தெரியாததால் (Non visible) அது நாளே இல்லாத சூன்ய நாள். இரண்டாம் பிறையும் கண்ணுக்குத் தெரியாததால் அதுவும் நாளே இல்லாத சூன்ய நாள். இரண்டாம் நாள் காலையில் பிறந்து மாலையில் மறையும் பிறையே எங்கள் கண்ணுக்குத் தெரிகிறது.
எனவே அதுவே முதல் பிறை(?). எனவே நாள் மாலையில் ஆரம்பித்து மாலையில் முடிகிறது என்ற மூடக் கொள்கையில் உறுதியாக இருக்கும் பீ.ஜையும், ததஜவினரும் அதைப் பகிரங்கமாகப் பிரகடனப்படுத்துவதுடன், சங்கமத்திற்கு அடுத்த நாளே முதல் நாள் என்பதில் தெளிவாக இருக்கும் ஹிஜ்ரி கமிட்டியினரை விவாதத்திற்கு வா, விவாதத் திற்கு வா என மீண்டும் மீண்டும் வம்பாக கூவி, கூவி அழைத்துக் கொண்டிருக்கின்றனர் ததஜ நிறுவனத் தலைவர் மற்றும் ததஜவினர். ததஜ காயல்பட்டினக் கிளை சமீபத்தில் அப்படியொரு விவாத அழைப்பைக் காயல்பட்டினம் ஹிஜ்ரி கமிட்டியினருக்கு விட்டிருந்தனர்; அவ்வழைப்பு நம் பார்வைக்கு வந்தது. நாமோ கடந்த 15 ஆண்டுகளாக ததஜ தானைத் தலைவர் பீ.ஜையை இப்பிறை விசயத்தில் விவாதம் செய்து ஒன்றுபடுவோம் என்று மீண்டும் மீண்டும் அழைத்துக் கொண்டிருக்கிறோம்.
எம்மோடு விவாதம் செய்யப் பயந்து ஓடுகிறவர், மற்ற மவ்லவி அல்லாத ஜாக்கிர் நாயக், ஏர்வாடி சிராஜுத்தீன், காயலபட்டினம் ஹிஜ்ரி கமிட்டியினர் போன்றோரை எல்லாம் விவாதத்திற்கு வா, வா என தொடர்ந்து கூவி, கூவி அழைப்பதன் மர்மம் என்ன? ஆம்! அவரது முடக்கு வாதங்கள் குர்ஆன், சுன்னாவுக்கு முன்னால் நிற்காது என்பதை அவர் தெள்ளத் தெளிவாக அறிந்து வைத்திருக்கிறார். அவரது உண்மை நிலையை அவரது கண்மூடி பக்தர்களில் ஒரு சிலராவது உணர்ந்து கொள்ளட்டும் என்ற நன்நம்பிக்கையில் பீ.ஜைக்குப் பகிரங்க அழைப்பு என முதலாவது, இரண்டாவது என இரண்டு பிரசுரங்களை பல பகுதிகளிலும் வெளியிட்டு வருகிறோம். அடுத்தடுத்து மூன்றாவது, நான்காவது பகிரங்க அழைப்பு என பிரசுரங்கள் வெளியிட இருக்கிறோம். இன்ஷா அல்லாஹ்.
இந்த நிலையில் காயல்பட்டினத்தில் எமது பிரசுரங்களை அவர்களது ததஜ பள்ளிக்கு வெளியில் பொதுப்பாதையில் நின்று கொடுத்துக் கொண்டிருந்த இருவரைப் பிடித்து அவர்களது ததஜ பள்ளிக்கு உள்ளே கொண்டு போய் வைத்து துன்புறுத்தியிருக்கிறார்கள். எழுதக் கூசும் வார்த்தைகளைக் கொண்டுத் திட்டி இருக்கிறார்கள். அவர்களைச் சித்திரவதைச் செய்திருக்கிறார்கள். எனக்குப் போன் பண்ணி பேசியதாகவும் “”நான் அப்பிரசுரத்திற்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று சொன்னதாகவும் ஆகாசப் பொய்யை காயல்பட்டினம் ஹிஜ்ரி கமிட்டியார் மீது பழி சுமத்திக் குற்றப்படுத்தும் கெட்ட நோக்கத்துடன் அங்கு பரப்பியிருக்கிறார்கள். பல ஊர்களில் பிரசுரமாகவும், ஈமெயில், வலைதளம், யு.டியூப், ஃபேஸ்புக் எனச் சில சகோதரர்கள் லட்சக் கணக்கான மக்கள் பார்க்கும் வகையில் பரப்பி இருக்கும் அப்பிரசுரங்களுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை என்று நான் கூற முடியுமா? என்ற அற்ப அறிவும் குறுமதி படைத்த அவர்களுக்கு இல்லை என்பதுதான் வேதனை.
மேலும் ஹிஜ்ரி கமிட்டியினர் சிலர் மீது அவர்கள் சட்டம் ஒழுங்குக்குக் கேடு விளைவிப்பதாக அங்குள்ள காவல நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். ததஜவினரே சட்டம் ஒழுங்குக்குக் குந்தகம் விளைவித்துக் கொண்டு 4:112 இறைவாக்குக் கூறுவது போல் அப்பழியை காயல்பட்டினம் ஹிஜ்ரி கமிட்டியினர் மீது போட்டுள்ளனர். இதனால் ததஜவினரின் தறுதலைத்தனத்தை விளக்கி அவர்கள் மீது e-mail மூலமாகவும், பதிவுத் தபாலிலும் காயல்பட்டினம் கட்டுப்படும் ஆறுமுக நேரி காவல் நிலையத்திற்குப் புகார் அனுப்பியுள்ளேன். சத்தியமே ஜெயிக்கும் என்று அல்லாஹ் கூறுவது (பார்க்க: 17:81) தமிழ்நாடு தறுதலை ஜமாஅத்தினருக்கு என்று உறைக்கப் போகிறதோ? அல்லாஹ்வே அறிந்தவன்.