விமர்சனம் : ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரணஅடி! என்ற தலைப்பில் வெளிவந்துள்ள ததஜவினரின் கட்டுரையில் யானைப் படையினரை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில் லையா? (105:1 ) இன்னும் இது போன்ற 17:99, 2:243, 89:6,7 ஆகிய வசனங்களில் இரண்டு ஆப்ஜெக்ட் (Object) வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள் தான் கொடுக்க வேண்டும். ஆனால் பிறை பார்த்தல் பற்றிய ஹதீஃத்களில் பிறை என்ற ஒரு ஆப்ஜெக்ட் மட்டுமே வந்துள்ளதால் இது கண்ணால் காண்பதை மட்டுமே குறிக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. இது பற்றி விளக்கவும். எஸ்.முஹம்மது ஸலீம், ஈரோடு.
விளக்கம் : குர்ஆன், ஹதீஃத், இஜ்மா, கியாஸ் ஆகிய நான்கும் மார்க்க ஆதாரங்கள் என்று கூறும் சு.ஜவினர் இப்படிச் சொல்லியிருந்தாலாவது ஓரளவு நியாயம் இருக்கிறது. அவர்கள் கூட இப்படிப்பட்ட ஓர் அறிவீனமான வாதத்தை வைப்பதாகத் தெரியவில்லை. குர்ஆன், ஹதீஃத் இரண்டு மட்டுமே மார்க்கம் என வாய் கிழிய முழக்கமிடும் ததஜவினர், இப்படியொரு அதிநவீன பித்அத்தான விளக்கத்தைக் கொடுத்திருக்கும் ததஜவினர் சு.ஜவினரை விடக் கேடுகெட்ட நிலைக்குச் சென்றுவிட்டார்கள் என்பதையே உறுதிப்படுத்துகிறது.
இல்லை! நாங்கள் குர்ஆன், ஹதீஃத் இரண்டைக் கொண்டு மட்டுமே செயல்படுகிறோம் என்று அவர்கள் கூறினால், அதற்குரிய ஆதாரபூர்வமான ஹதீஃதைக் காட்டுவது அவர்களின் கட்டாயக் கடமையாகும். இல்லை என்றால் அவர்கள் தான் மூளை வரண்ட நிலையில் இருக்கிறார்கள் என்பது நிரூபணமாகிறது. அது மட்டுமல்ல; குர்ஆன், ஹதீஃதை மட்டுமே பின்பற்றுகிறோம் என்பதிலும் அண்டப் புளுகர்களாக இருக்கிறார்கள் என்பதும் நிரூபணமாகிறது. அவர்களது கொள்கைதான் வரட்டுக் கொள்கை என்பதும் நிரூபணமாகிறது. மார்க்கத்தைப் பிழைப்பாகக் கொண்ட மவ்லவிகள் நேர்வழியில் இல்லை என்று 36:21 இறைவாக்குக் கூறுவதும், அவர்கள் தாங்கள் செய்யும் குற்றச் செயல்களை எளிதாக மற்றவர்கள்மீது சுமத்துவார்கள் என்று 4:112 இறை வாக்குக் கூறுவதும் பொய்யாகுமா? ஒருபோதும் பொய்யாகாது. அது நூற்றுக்கு நூறு உண்மை என்பதை ததஜ மத்ஹபு இமாம் நிரூபித்துக் கொண்டிருக்கிறார்.
சேமித்து வைக்கப்பட்டப் பொருள் ஒரு வருடம் செல வழியாமல் இருந்தால்தான் ஜகாத் கடமையாகிறது. அப்பொருள் செலவழியாமல் தொடர்ந்து சேமித்து வைக்கப் பட்டிருந்தால் அதன்மீது ஜகாத் வருடா வருடம் கடமை என்று அறிவிக்கும் கலீஃபாக்களான உமர்(ரழி) அலீ(ரழி) சொல்வது ஹதீஃத் அல்ல; அவற்றை ஏற்க முடியாது, ஜகாத் ஒரு பொருளுக்கு ஒரு முறை கொடுத்தால் போதும். அப்பொருள் சுத்தமாகிவிட்டது என்று, 9:103 இறைவாக்கு ஜகாத் கொடுப்பவர்களை உள்ளும் புறமும் தூய்மைப்படுத்துகிறது என்று நேரடியாகச்சொல்வதை நிராகரித்துப் பிதற்றும் ததஜ மத்ஹப் இமாம், நவீன கணக்கீடு 100% சரி, ஆயினும் நபி(ஸல்) அவர்கள் தலைப் பிறையைப் புறக்கண்ணால் பார்த்தே தீர்மானிக்கக் கட்டளையிட்டிருக்கிறார்கள் என்று அண்டப் புளுகை, ஆகாசப் பொய்யைக் கூறி வருவதால், அதை நிலைநாட்ட ஒரு தாபி யீயை(ரழி) என்று போட்டு நபி தோழராக ஆக்குவதோடு, அவரது பலவீனமான செய்தியை ஆதாரபூர்வமான ஹதீஃத் எனத் தூக்கிப் பிடிப்பதுடன், இப்படியயாரு அறிவீனமான விளக்கத்தைத் தருகிறார். அதை அப்படியே வாந்தி எடுக்கிறார்கள் கூலிக்கு மாரடிக்கும் அவரது பணியாளர்கள். மற்றபடி பிறைகளைப் பார்த்தல் பற்றி வரும் ஹதீஃத் களில் வரும் அரபி பதங்கள் பொதுவாக கண்ணால், கல்பால், தகவலால், ஆய்வால், கணக்கீட்டால் பார்ப்பதைக் குறிக்குமே அல்லாமல் கண்ணால் மட்டுமே பார்ப்பது என்பது ததஜ மத்ஹபு இமாமின் மூளை வரண்ட கொள்கையாகும். இது குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரண்பட்ட வரட்டுக் கொள்கையாகும்.
கணக்கீட்டின்படி 50 வருடங்கள், 100 வருடங்கள் கழித்து நிகழும் சூரிய, சந்திர கிரகணங்களை மிக மிகச் சரியாகச் சொல்ல முடியும். இன்ன தேதியில் இத்தனை மணிக்கு, நிமிடத்திற்கு, வினாடிக்கு பிறை இருக்கும் என கணக்கீட்டின்படி சொல்லப்பட்டால், நிச்சயம் அந்த இடத்தில் பிறை இருக்கும் என ததஜ மத்ஹபு இமாம் உறுதியாகச் சொல்லிவிட்டு, ஆனால் இரண்டாம் பிறை கிழக்கில் காலையில் உதித்து மாலையில் மேற்கே மறைவதைக் கண்ணால் பார்த்துவிட்டு, பிறை பிறந்து விட்டது, நாள் ஆரம்பித்துவிட்டது எனக் கூறி அடுத்து வரும் 3-ம் நாளை 1-ம் நாளாகச் சொல்லும் ததஜ மத்ஹபு இமாம் எந்த அளவு மூளை வரண்டவராக இருப்பார் என்பதை சுய சிந்தனையாளர்கள் நிச்சயம் உணர முடியும். அவரே உத்திரவாதம் கொடுப்பது போல் அவரைக் கண்மூடிப் பின்பற்றும் முகல்லிதுகள் மட்டுமே அவரது இம்மூடக் கொள்கையை வேதவாக்காகக் கொண்டு அதை அப்படியே பரப்பித் திரிவார்கள். ஆக ஒரு ஆப்ஜெக்ட், இரண்டு ஆப்ஜெக்ட் என்பதெல்லாம் அவர்களின் மூளை வரண்ட பிதற்றலேயன்றி, குர்ஆன், ஹதீஃத், அரபி அகராதி கூறும் உண்மை நிலை அல்ல.
—————————————
விமர்சனம் : நீங்கள் உங்கள் அச்சகத்தில் ஆபாச புத்தகம் அச்சடித்துத் தந்ததாகவும், அப்படி ஆபாச புத்தகம் அச்சடிப்பது ஹராமல்ல என்று ஃபத்வா கொடுத்ததாகவும் ததஜ துணைத் தலைவர் சையத் இப்றாஹீம் தொலைபேசியில் என்னிடம் தெரிவித்துள்ளார். அப்படி நீங்கள் ஃபத்வா கொடுக்கும்போது எடுத்த வீடியோ ஆதாரம் உள்ளது என்றும் கூறுகிறார் உண்மை என்ன? விளக்கவும். முஸ்தபா, ஈரோடு.
விளக்கம் : குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முற்றிலும் முரணான ஃபத்வாக்களை எடுத்தேன், கவிழ்த்தேன் என வாரி இறைப்பது ததஜ மத்ஹபு இமாமினதும், கொடிய ஹரமானா வழியில் கூலிக்கு மாரடிக்கும் அவரது கைத்தடிகளான பணியாளர்களுக்கும் கைவந்த கலை. எம்மைப் பொறுத்தமட்டில் சம்பந்தப்பட்ட குர்ஆன் வசனம், ஆதாரபூர்வமான ஹதீஃத் இவற்றை எடுத்துக் காட்டி மட்டுமே சொல்வோம். புரோகித முல்லாக்கள் போல் ஃபத்வா கொடுக்கும் பழக்கம் எம்மிடம் இல்லை.
கொஞ்சம் நிதானமாகச் சிந்தியுங்கள். அவர் சொல்வது போல் அப்படி ஒரு ஃபத்வா நாம் கொடுத்து அதன் வீடியோ பதிவு அவர்களிடம் இருந்தால் அவர்கள் என்ன செய்திருப்பார்கள் தெரியுமா? ஆயிரக்கணக்கான CD பதிவுகள் எடுத்து அவர்களது பக்தகோடிகளிடம் பரப்பி, லட்சக்கணக்கில் பணம் பண்ணுவதோடு, எமது பெயரையும் நாறடித்திருப்பார்கள். விட்டு வைப்பார்களா? சிந்தியுங்கள். அவர்கள் சொல்வது ஜமுக்காளத்தில் வடித்தெடுத்த பொய்யாகும். இப்பவும் ஒன்றும் கெட்டுப் போக வில்லை. நீங்கள் குறிப்பிடும் பணியாளரை தொலை பேசியில் கூப்பிட்டு அதன் ஒரு காப்பியை உங்களுக்கு அனுப்பச் சொல்லுங்கள். அவர்களின் வண்டவாளங்கள் தண்டவாளத்தில் ஏறும்.
1987லிருந்து ததஜ மத்ஹபு இமாம் எம்மீது சுமத்தி வரும் அமானித மோசடி, பிறருக்குரியதை அபகரித்தல், நஜாத் சந்தா பணத்தைச் சுருட்டியது, செக்ஸ் புத்தகம் அச்சடித்தக் கொடுத்தது போன்ற குற்றச்சாட்டுகளை நேரில் வந்து உரிய சாட்சிகள், ஆதாரங்கள் கொண்டு நிரூபிக்காமல், அவதூறாகப் பரப்பித் திரிவது கடைந்தெடுத்த அயோக்கியர்களின் செயலாக மட்டுமே இருக்க முடியும். முற்றிலும் ஹராமான உணவு, உடை, உறைவிடம் காரணமாக அவர்களது உள்ளங்கள் கற்பாறைகளை விடக் கடினமாகிவிட்டன. எனவே குர்ஆன் 107:4-6, 104:1-9 வசனங்களைப் படித்து விளங்கும் தகுதி அவர்களுக்கு இல்லை.
குர்ஆனில் ஹராமாக்கப்பட்டவை அனைத்தும் ஒருசில இறைவாக்குகளில் மட்டுமே கூறப்பட்டுள்ளன. அதற்கு மாறாக மார்க்கப் பணியைக் கூலிக்கு-சம்பளத் திற்கு செய்யவே கூடாது என்று 13 இறைவாக்குகளும், மார்க்கப் பணியை சம்பளத்திற்குச் செய்கிறவன் ஒரு போதும் நேர்வழியில் இருக்க முடியாது என்று 36:21 இறைவாக்கும், மார்க்கப் பணியை சம்பளத்திற்குச் செய்வதால் எப்படிப்பட்டப் பெரும் வழிகேடுகளை நேர்வழி யாகக் காட்டும் கட்டாயம் ஏற்படுகிறது? எப்படிப்பட்ட அநியாயம், அக்கிரமம், அட்டூழியங்கள், பொய்கள், அவதூறுகள் போன்ற நரகில் சேர்க்கும் செயல்களைத் துணிந்து செய்ய நெரிடுகிறது என்பதை இருநூறுக்கும் மேலான வசனங்கள் படம் பிடித்துக்காட்டுகின்றன.
மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டுள்ளவற்றில் மார்க்கப் பணிக்குக் கூலி என்பதைத் தவிர இதர ஹராம்கள் அனைத்தையும் ஒருவன் அனுபவிக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அவனை விட எண்ணற்ற மடங்கு கொடிய ஹராமையே மார்க்கப் பணிக்குச் சம்பளம் வாங்கிச் சாப்பிடுகிறவர்கள் செய்கிறார்கள். நாளை மறுமையில் இதே நிலையில் மரணித்தால் இறைவனது மன்னிப்பை இவர்கள் பெறவே முடியாது என்பதை குர்ஆன் முழுவதையும் முறையாகப் படித்து விளங்குகிறவர்கள் அறிய முடியும்.
இவர்கள் மக்களுக்கு ஒருபோதும் நேர்வழியைக் காட்ட முடியாது. கோணல் வழிகளையே நேர்வழியாகக் காட்டுவார்கள். அதாவது பட்டப்பகலில் சூரியனின் முழுமையான வெளிச்சத்தில் வெள்ளை நிறப் பசு மாட்டைப் பார்க்க முடியாத குருட்டுப்பயல், அமாவாசை கரும் இருட்டில் கருப்பு நிற எருமை மாட்டைப் பார்த்தேன் என்று சொல்வதை நம்புபவன் எப்படிப்பட்ட மூடனாக இருப்பான்? சம்பளத்திற்கு மாரடிக்கும் இம்மவ்லவிகளின் குருட்டு ஃபத்வாக்களை வேதவாக்காகக் கொண்டு செயல்படுகிறவன் எப்படிப்பட்ட வழிகேட்டில் இருக்கிறான் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்த மவ்லவகளின் இழிநிலையை 2:159-162, 4:27, 5:48, 6:157, 45:23, 47:25, 7:175-179, 18:57, இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. இந்த மவ்லவிகளுக்குப் பின்னால் கண்மூடிச் செல்கிறவர்கள் நாளை மறுமை யில் நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு ஒப்பாரி வைப்பதை, ஒருவரை ஒருவர் திட்டுவதை 7:35-41, 33:66-68, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:19, 43:36-45 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன.
இன்று மனித குலம் இந்த அளவு வழிகேடுகளிலும், அனைத்துவிதமான ஒழுக்கக் கேடுகளிலும், 4 கால் மிருகங்களை விட கேடுகெட்ட நிலையில் இரண்டு கால் மிருகமாக வாழ்வதற்கும், இன்னும் அனைத்துவகை சீரழிவுகளுக்கும், மார்க்கத்தைப் வயிற்றுப் பிழைப் பாகக் கொண்ட மதகுருமார்களே, அதிலும் குறிப்பாக முஸ் லிம் மதகுருமார்களே முழுக்க முழுக்க காரண கர்த்தாக் களாக இருக்கிறார்கள். அவர்களிலும் குர்ஆன், ஹதீஃத் மட்டுமே மார்க்க ஆதாரம் என்று வாயளவில் பிதற்றிக் கொண்டு செயல்பாடுகளில் முன் சென்றவர்களையும் விஞ்சும் அளவில் தனது சுய கருத்துக்களையும், சுய புராணங்களையும் புகுத்தும் நவீன ததஜ மத்ஹபின் இமாமே என்பதையும் விளங்கி அவரது சூன்ய, வசீகர (6:112) உடும்புப் பிடியிலிருந்து விடுபட்டு குர்ஆன், ஹதீஃதை நேரடியாகப் பற்றிப் பிடிப்பவர்களே வெற்றி யடைய முடியும். அவர் பின்னால் கண்மூடிச் சென்றால் நரகமே கூலி என்பது குர்ஆனின் எச்சரிக்கை!