தொழுகை இருப்பில் விரலசைப்பது! ஷைத்தானின் செயலே!
அபூ அப்தில்லாஹ்
தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் தனது ஆட்காட்டி விரலை அசைத்துக்கொண்டு தரையில் மணலோடு மணலாக கிடக்கும் பொடிக்கற்களைக் கிளறிக் கொண்டு இருந்த ஒரு மனிதரைக் கண்ட இப்னு உமர்(ரழி) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரே இவ்வாறு பொடிக் கற்களை உமது ஆட்காட்டி விரலால் அசைத்துக் கொண்டு கிளராதீர். இது ஷைத்தானுடைய செயல் என்று கண்டித்தார். அப்போது அந்த நபர் அப்படியானால் என்ன செய்யவேண்டும் என்று கேட்டார். அதற்குப் பதிலாக,
أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، قَالَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمَعَافِرِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ، أَنَّهُ رَأَى رَجُلاً يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلاَةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ عَبْدُ اللَّهِ لاَ تُحَرِّكِ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلاَةِ فَإِنَّ ذَلِكَ مِنَ الشَّيْطَانِ وَلَكِنِ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ . قَالَ وَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الإِبْهَامَ فِي الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَصْنَعُ .
நபி(ஸல்) அவர்கள் கட்டை விரலுக்கு அடுத்துள்ள (ஆட்காட்டி விரலால்) கிப்லாவை நோக்கி இஷாரா-சமிக்கை செய்வார்கள். தமது பார்வையை அதன் பக்கம் வைப்பார்கள், என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு உமர்(ரழி), நூல் : நஸாயீ 1148
இந்த நஸாயீ 1148-வது ஹதீஃத் தெள்ளத் தெளிவாகத் திட்டமாக நேரடியாகத் தொழுகை இருப்பில் நடுவிரலை அசைப்பது (ஹரக்கத்) ஷைத்தானுடைய செயல் என்றும், கிபுலாவை நோக்கி நீட்டுவதே (இஷாரா) நபிவழி என்றும் உறுதியாகச் சொல்கிறது. ஆனால் அதற்கு மாறாக ஜாக் மத்ஹபினரும், ததஜ மத்ஹபினரும் தங்களின் ஆட்ட மத்ஹபுகளை நிலைநாட்டப் பிடிவாதமாகத் தொழுகையில் விரலை நீரிலிருந்து வெளியே எடுத்துப் போட்ட மீன் துடிப்பது போல் மிக மிக வேகமாக ஆட்டித் தங்கள் தொழுகைகளையும், பக்கத்தில் இருப்பவர்களின் தொழுகைகளையும் பாழாக்கும் ஷைத்தானின் செயலையே செய்து வருகின்றனர்.
1995-லிருந்து தொழுகை இருப்பில் விரல சைப்பது (ஹரக்கத்) ஆதாரபூர்வமான செய்தி அல்ல; அதற்கு மாறாக நஸாயி 1148-ல் காணப்படும் கிபுலாவை நோக்கி நீட்டிச் சுட்டிக் காட்டுவதே (இஷாரா) ஆதாரபூர்வமான செய்தி எனத் தெளிவாகத் தொடர்ந்து விளக்கி வருகிறோம். அதற்கு ஆதாரமாக மவ்லவிகளைப் போல் எமது சுயபுராணத்தைச் சொல்லாமல் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்கள், புகாரீ, திர்மிதி ஹதீஃத்களை மட்டுமே எடுத்துத் தருகிறோம். அவை வருமாறு.
1. உங்களிடையே ஏதாவதொரு விசயத்தில் கருத்து வேறுபாடு ஏற்படுமானால் அதனை அல்லாஹ்விடமும் அவனது தூதரிடமும் ஒப்படைத்து விடுங்கள். (அல்குர்ஆன் : 4:59)
2. எதைப் பற்றி உமக்கு(தீர்க்க) ஞானமில்லையோ, அதை (செய்ய) தொடர வேண்டாம்.
(அல்குர்ஆன் 17:36)
3. உமக்குச் சந்தேகம் தருபவற்றை நீர் விட்டு விடும்; சந்தேகமற்ற (உறுதியான) விசயங்களின் பால் நீர் சென்று விடும். (புகாரீ வியாபாரம், திர்மிதீ)
இந்த அளவு தொள்ளத் தெளிவாக குன்றிலிட்டத் தீபமாக, இரவும், பகலைப் போல் திட்டமாக குர்ஆன், ஹதீஃத் விளக்கி இருக்கும் நிலையில் ஜாக் மத்ஹபினரும், ததஜ மத்ஹபினரும் பிடிவாதமாக விரலை மிக வேகமாக ஆட்டுவதில் ஏன் குறியாக இருக்கிறார்கள்? அதுவும் அந்தச் சந்தேகத்திற்குரிய ஹதீஃதில் “”யுஹர்ரிக்குஹா யதுவூ பிஹா” என்ற அரபி வாக்கியத்தை நேரடியாக “”அசைத்தவர்களாக துஆ செய்தார்கள்” என்றே மொழி பெயர்க்க வேண்டும். வீம்பாக “”அசைத்தவர்களாக அதைக் கொண்டு அழைத்தார்கள்” என்று மொழி பெயர்க்கவும் செய்யலாம். ஆனால் நிச்சயமாக “”அழைப்பது போல் அசைத்தார்கள்” என்று மொழி பெயர்ப்பது அரபி இலக்கணம் அறியாதவர்களின் மொழி பெயர்ப்பாகும். இதை நாம் சொன்னால் அது ஏற்புடையதில்லை தான். ஆனால் இவர்களை விட அரபி மொழி இலக்கண இலக்கியம் ஆகியவற்றில் இலங்கை, எகிப்து, மதீனா என மூன்று அரபி பல்கலைக் கழகங்களில் படித்துப் பல பட்டங்கள் பெற்றதுடன், தலைவர் தாருல் ஹதீஃத், பேராசிரியர் என்ற உயர்நிலையில் மன்னர் காலித் பல்கலைக் கழகம், சவுதி அரேபியாவில், பணி புரியும் கலாநிதி யூ.எல்.ஏ.அஷ்ரஃப்,Ph.D.,Alazhar அவர்கள், “”யதுவூ பிஹா” என்ற அரபி வாக்கியத்தை தமிழக மவ்லவி ஒருவர் “”(யாரையோ) அழைப்பது போல்” என மொழி பெயர்த்துள்ளார். இது மாபெரும் தவறாகும். இது அவரின் அரபு பாஷை பற்றிய அறிவின்மையையும், ஹதீஃதின் ஏனைய ரிவாயத்துகள் பற்றிய அறிவின்மையையும் அப்பட்டமாக்குகிறது என்று நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் அம்பலப்படுத்தியுள்ளார்.
ஜாக்கினரும், ததஜவினரும் அந்த அளவு மரமண்டைகள் அல்லர். 7:146 இறைவாக்குக் கூறுவது போல், மதரஸாவில் ஓதிப் பட்டம் பெற்ற மவ்லவிகள், ஆலிம்கள் என எவ்வித உண்மையுமின்றி பெருமை அடிப்பதால், அல்லாஹ்வே அவர்களை நேர்வழியை விட்டும் கோணல் வழிகளில் திருப்பி விடுகிறான். அவர்கள் குர்ஆன், ஹதீஃதைத் தெளிவாகக் கண்டாலும் அவற்றை நம்பமாட்டார்கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதை (ஒருபோதும்) ஏற்கமாட்டார்கள். கோணல் வழியைக் கண்டாலோ அதையே (தங்களுக்குரிய வழியாய்) ஏற்பார்கள். ஏனெனில், அல்லாஹ்வின் வசனங்களை அவர்கள் பொய்ப்பித்து, அவற்றைப் புறக்கணிக்கின்றனர் என்பதே!
(அல்குர்ஆன் அல் அஃராஃப் : 7:146)
ஆம்! அவர்களின் ஆலிம்கள் என்ற ஆணவம், அகந்தை, பெருமையே அவர்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறது. அவர்களை நம்பி அவர்களின் பின்னால் செல்பவர்களும் வழிகேட்டிலே செல்கின்ற னர். விரலாட்டும் இந்த விஷயத்தில் அவர்களைக் கண்மூடி நம்பியுள்ளவர்களை எப்படி வழிகெடுத்து சமுதாயத்தில் பிளவை ஏற்படுத்தி தனித்தனிப் போட்டிப் பள்ளிகள் கட்டப் போராடிப் போட்டிப் பள்ளிகள் கட்டினார்கள், கட்டி வருகிறார்கள், என்று பாருங்கள்.
“”யுஹர்ரிக்குஹா யதுவூபிஹா” என்று இடம் பெறும் ஹதீஃத் ஏற்கத்தக்க ஹதீஃத் இல்லை என்பது ஒரு புறம் இருக்கட்டும். அதிலுள்ளதை முறையாக, சரியாகத் தமிழில் மொழி பெயர்த்துள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. தொழுகை இருப்பில் பிரதானமாக அல்லாஹ்விடம் துஆ செய்வதுதான் என்பதை அனைவரும் அறிவோம்.
அப்படியானால் “”அசைத்தவர்களாக துஆ செய்தார்கள்” என்று தான் மொழி பெயர்க்க வேண்டும். அசைப்பதற்கும் துஆவுக்கும் சம்பந்தமே இல்லை என்பதை அனைவரும் அறிவோம். இருந்தாலும் ஏற்றுக் கொள்வோம்; அல்லது வம்படியாக “”அசைத்தவர்களாக அழைத்தார்கள்” என்று மொழி பெயர்க்க முடியும். அப்படி உள்ளதை உள்ளபடி மொழி பெயர்த்தால், அவர்களின் சிந்திக்கத் துணியாத பக்த கோடிகளும் தொழுகையில் எப்படி அழைக்க முடியும்? என்று மடக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே தந்திரமாக “”அழைப்பது போல்” என்று மொழி பெயர்த்தால் அவர்களது ஆதரவாளர்களும் அதில் மயங்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அரபி வாக்கியத்தில் “”போல்” என்று சேர்ப்பதற்கு அணுவளவும் இடமே இல்லை.
ஜாக்கினரும், ததஜவினரும் ஆரம்பத்தில் (1987-1997) ஒன்றாக இருக்கும்போது சமுதாயத்தைப் பிளவு படுத்தித் தனி ஆதிக்கம் செலுத்தும் தீய நோக்கத்துடன் இந்தத் தந்திரத்தைக் கையாண்டனர். அவர்கள் நம்மோடிருந்த 1986 ஏப்ரல் முதல் 1987 ஜூன் வரை, அவர்களுக்கென்று ஒரு தனி “”ஜமாஅத் துல் உலமா சபை” அமைக்க முற்பட்டபோது அதற்கு நாம் இடமே கொடுக்கவில்லை. முக்கியமாக அதைக் காரணம் காட்டியே மவ்லவிகள் அனைவரும் 1987 ஜூலையில் நம்மை விட்டு வெளியேறித் தனி ஆக் பின்னர் ஜாக் அமைப்புக் கண்டனர். இந்த நிலையில் நாம் அவர்களின் ஜாக் மத்ஹபிலிருந்து வெளியேறியதாக அவதூறு பரப்பி வருகின்றனர். அவர்களது பக்தகோடிகளும் அதைக் கண்மூடி ஏற்றுப் பரப்பித் திரிகின்றனர். இன்னும் பாருங்கள் அவர்களின் கயவாளித்தனத்தை! அழைப்பது போல் விரலை அசைத்தால் எப்படி அசைக்க வேண்டும்? மற்றவர்கள் அப்படி அசைத்துப் பிறரை அழைப்பதைப் பார்க்கத் தானே செய்கிறோம். அப்படி அழைக்க அசைக்கும்போது மெதுவாகத்தான் அசைத்து அழைப்பதுவே முறையாகும்.
அப்படி மெதுவாக அசைத்தால் தொழுகையில் பக்கத்திலிருப்பவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி அவர்களைக் கோபம் கொள்ள வைக்காது. அதனால் இவர்கள் விரும்புவது போல் தொழுகையில் குழப்பம் விளைவித்து, நபிவழியில் தொழ முடியவில்லை எனத் தங்களின் ஆதரவாளர்களை நம்பவைத்து, உசுப்பேத்திப் போட்டிப் பள்ளிகள் கட்ட வாய்ப்பு ஏற்படாது. அவர்களின் நோக்கம் நிறை வேறாது; பொறுப்பார்களா?
அவர்களின் அசல் நோக்கமே பள்ளிகளில் குழப்பம் ஏற்படுத்திச் சமுதாயத்தைப் பிளவுபடுத்தித் தங்களுக்கென மஸ்ஜிதன்ழிரார் (பார்க்க:9:107) போட்டிப் பள்ளிகள் கட்டுவது தானே! அதற்கென்ன வழி?
பக்கத்தில் தொழுபவர்களுக்குக் கோபத்தை ஏற்படுத்தி பள்ளிகளில் குழப்பம், கலகம் விளைவித்து அதையே காரணமாகக் காட்டித் தங்களுக் கென போட்டிப் பள்ளிகள் கட்டியே தீரவேண்டும் என்றால், அவர்கள் தூக்கிப் பிடிக்கும் சந்தேகத்திற் குரிய விரலாட்டும் ஹதீஃதுக்கும் மாறாக அழைப்பது போல் அல்ல துடிப்பது போல், நீரிலிருந்து வெளியே தூக்கிப் போட்ட மீன்கள் துடிப்பது போல் அதிவேகமாக விரலை ஆட்டினால்தான் பக்கத்திலிருப்பவர்கள் கோபமாகிச் சண்டைக்கு வருவார்கள். பள்ளிகளில் குழப்பமும், கலகமும் ஏற்படும். அவர்களது நோக்கம் நிறைவேறும். மஸ்ஜிதன்ழிரார் போட்டிப் பள்ளிகள் கட்ட வழி பிறக்கும்.
எனவே அழைப்பது போல் ஆட்டினார்கள் எனச் சுயமாகக் கற்பனை செய்து கொண்டு, துடிப்பது போல் அதிவேகமாக விரலசைத்துப் பள்ளிகளில் குழப்பங்களையும், கலகங்களையும் ஏற்படுத்தித் தனித்தனிப் போட்டிப் பள்ளிகள் கட்டித் தனி ஆதிக்கம் செலுத்தி உலகியல் ஆதாயம் அடைந்து வருகிறார்கள்.
அவர்கள் அல்லாஹ்வைத் தூய மனதுடன் தொழப் பள்ளிகள் கட்டவில்லை. சுயநலத்துடன் சமுதாயத்தைப் பிளவுபடுத்தி மஸ்ஜிதன்ழிரார் போட்டிப் பள்ளிகள் கட்டி உலகியல் ஆதாயங்களையும், பேர் புகழையும் விரும்பிச் செயல்படுகிறார்கள் என்பதற்கு, ஒன்றாக இருந்தவர்கள் பிரிந்த பின்னர் தனித்தனிப் பள்ளிகள் கட்டுவதோடு இருக்கும் பள்ளிகளைக் கைப்பற்றுவதற்கு வழக்கு, வம்பு, கோர்ட், கேஸ், அடிதடி, இரவோடு இரவாகத் திருட்டுத்தனமாக ரவுடிப் பட்டாளங்களைக் கொண்டு பள்ளிகளைக் கைப்பற்றுதல் போன்ற அராஜக செயல்கள் அரங்கேறி வருவதைப் பார்க்கத்தானே செய்கிறோம். இந்த ஆக்கத்தை எழுதிக் கொண்டிருக்கும்போதே (19.04.2014) திருச்சி, பாலக்கரை தோல் கடைப் பள்ளி ததஜவினரால் முறை தவறி இரவோடு இரவாகக் கைப்பற்றப்பட்டச் செய்தி வந்தது.
ஜாக், ததஜ இயக்க மாயையில் சிக்கி, இயக்கப் போதையில் அவர்கள் பின்னால் கண்மூடிச் செல்லும் சகோதர, சகோதரிகளே நாளை நரகில் கிடந்து கரியாகிக் கொண்டு நீங்கள் பின்பற்றிய அவர்களையே சபிக்கப் போகிறீர்கள் என்பதை 33:66-68 இன்னும் பல குர்ஆன் வசனங்கள் கடுமையாக எச்சரிக்கின்றன. அவர்கள் உங்ளை நபிவழியில் தொழத் தூண்டவில்லை. ஷைத்தானு டைய வழியில்தான் தொழுகை இருப்பில் உங்கள் நடு விரலை ஆட்ட வைத்து அல்ல வேகமாக துடிக்க வைத்து நரகிற்குச் செல்ல ஷைத்தானுடைய ஏஜண்டாக இருந்து வழிகாட்டுகிறார்கள்.
“”யுஹர்ரிக்குஹா யதுவூபிஹா” என்று கூறும் சந்தேகத்திற்குரிய ஹதீஃத் எத்தனை ஹதீஃத் கிதாபுகளில் காணப்பட்டாலும், எப்படியெல்லாம் விவரித்துச் சொன்னாலும் அவை அனைத்திலும் “”ஆஸிம் பின் குலைப்” என்பவரே இடம் பெறுகிறார்”. இவர் தனித்து அறிவித்தால் அதை ஆதாரமாகக் கொள் ளக் கூடாது என்று இப்னுல் முதைனி என்ற ஹதீஃத் கலா வல்லுனர் அறிவிக்கிறார். (பார்க்க : 17:36)
மேலும் தொழுகையில் நான்கு இடங்களில் கையை உயர்த்த வேண்டும் (ரஃபஅல்யதைன்) என்ற ஆதாரபூர்வமான ஹதீஃதுக்கு முரணாகக் கையை உயர்த்தக் கூடாது என்று வரும் நிராகரிக்க வேண்டிய ஹதீஃதிலும் இதே ஆஸிம்பின் குலைபே இடம் பெறுகிறார். இச்செய்தி ஏற்கத் தக்கதல்ல. மேலும் ஆஸிம்பின் குலைபிடம் கேட்ட 14 பேரில் ஸாயிதா என்ற ஒருவர் மட்டுமே விரலாட்டுவதைக் கூறுகிறார். எஞ்சிய 13 நபர்களும் சமிக்கை (இஷாரா) செய்வதையே கூறுகின்றனர்.
இஷாராவுக்கு மேல் விளக்கமே ஹரக்கத் என்று கூறுவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடும் ஓர் அடிமுட்டாள்த்தனமாகும். டாக்டர் அஷ்ரப் Ph.D., சொல்வது போல் அரபி மொழி இலக்கணம் தெரியாத ஒரு வழிகேடனின் கூற்றாகும். ஹரக்கத் பொருள் இல்லா வெற்று அசைவாகும். இஷாரா பொருளுள்ள நீட்டலோ, அசைத்தலோ, மறுத்தலோ, எச்சரிக்கையோ, போகச் சொல்வதோ, நிற்கச் சொல்வதோ எனக் கண்டிப்பாகப் பொருள் இருந்தே தீரனும். பொருளற்ற அசைத்தலும் (ஹரக்கத்) பொருளுள்ள சமிக்கையும் (இஷாரா) ஒன்றுதான் என்று வடிகட்டின மூடன் மட்டுமே சொல்ல முடியும். 7:146 இறைவாக்குக் கூறுவது போல் மவ்லவி, ஆலிம் என்ற வீண் பெருமையே அவர்களை இந்த அளவு வடிகட்டின மூடர்களாக ஆக்குகிறது. அபூ ஜஹீலைப் போல் பெருமை பேசி தொழுகையில் விரலாட்டும் ஷைத்தானின் செயலை (நஸாயீ 1148) புறக்கணித்து, சுட்டுவிரலை கிபுலாவை நோக்கி சுட்டிக்காட்டி (இஷாரா) துஆ செய்வதே சரியான உறுதியான நபிவழியாகும்.
தொழுகையில் வேகமாக விரலாட்டுவது பெரும் தவறு, வழிகேடு, ஷைத்தானின் செயல் என நேரடி குர்ஆன், ஹதீஃத் ஆதாரத்துடன் விளக்கியும் ஜாக், ததஜ மவ்லவிகள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறீர்களா? அப்படி அவர்கள் ஆலிம் என்ற ஆணவ நிலையில் ஏற்றுக் கொண்டால் 7:146 இறைவாக்குப் பொய்யாகிவிடுமே! இது சாத்தியமா? ஒரு போதும் சாத்தியம் இல்லை. மார்க்கத்தை உலகியல் ஆதாயங்களுக்காகவும், வயிற்றுப் பிழைப்பாகவும் கொண்டுள்ள இம்மவ்லவிகள் நேர்வழியில் இல்லை என்று 36:21 இறைவாக்கும் கட்டியம் கூறுகிறதே! அது பொய்யாகுமா?
சிலை வணக்கம் கூடாது; இறைவனுக்கு இணை வைக்கும் மிகக் கொடிய செயல் என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டிருக்கும் நான்கு வேதங்களிலிருந்தே நேரடியாக எடுத்துக் காட்டினாலும் ஹிந்து மதகுருமார்கள் ஏற்பார்களா? முக்கடவுள் கொள்கை தவறு, இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல் என்பதை அவர்களே ஏற்றுக் கொண்டிருக் கும் பைபிளில் எடுத்துக் காட்டினாலும் கிறித்தவ மதகுருமார்கள் ஏற்பார்களா?
தர்கா-சமாதி வழிபாடு தவறு,இறைவனுக்கு இணை வைக்கும் கொடிய செயல் என 7:3, 18:102- 106, 33:36,66-68 நேரடி வசனங்களைப் படித்துக் காட்டினாலும் தர்கா மவ்லவிகள் ஏற்பார்களா? மத்ஹபு, தரீக்கா, இயக்க வழிபாடு கூடாது இறைவனுக்கு இணை வைக்கும் செயல் என மேற்படி குர்ஆன் வசனங்களுடன் 3:103,105, 6:153,159, 30:32, 42:13,14 வசனங்களைப் படித்துக் காட்டினாலும் மத்ஹபு, இயக்க மவ்லவிகள் ஏற்பார்களா?
தொழுகைக்குப் பின் கூட்டு துஆ, திக்ர் கூடாது, வழி கேடு என்று 7:55,205 நேரடி குர்ஆன் வசனங் களைக் காட்டினாலும் சுன்னத் ஜமாஅத்தினர் ஏற்பார்களா? ஆலிம்-அவாம், ஷிஆ-சுன்னத் ஜமாஅத், ஹனஃபி, மாலிக், ஷாஃபி, ஹன்பலி, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், ஜாக், ததஜ, இதஜ, ஸலஃபி போன்ற அனைத்துப் பிரிவுகளும் தவறு, வழிகேடு, பல குர்ஆன் வசனங்களை நிராகரித்து காஃபிர், முஷ்ரிக் ஆகும் கொடிய செயல் என மேலே எடுத்தெழுதியுள்ள அனைத்து குர்ஆன் வசனங்களையும் படித்துக்காட்டினாலும் சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பார்களா? முஹம்மது(ஸல்) இறுதி நபி; அவர்களுக்குப் பின் நபியே இல்லை என்பதற்குரிய குர்ஆன், ஹதீஃத் ஆதாரங்களைக் காட்டினாலும் காதியானிகள் ஏற்பார்களா? ஒருபோதும் ஏற்று நேர்வழிக்கு வரவே மாட்டார்கள். இப்பிரிவுகளுக்குத் தலைமை தாங்கும் மவ்லவி-ஆலிம், தலைவர்களின் வீண் பெருமை 7:146 இறைவாக்குக் கூறுவது போல் இறைவனாலேயே அவர்களின் பெருமை காரணமாக கோணல் வழிகளில் இட்டுச் செல்லப்படுகிறார்கள்.
மேலும் பெருமை பற்றிய அனைத்து குர்ஆன் வசனங்களும் அவர்களின் இழிநிலையைப் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆலிம்கள், ஆலிம்கள் என்ற பெருமை நிலையில் சத்தியத்தை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இது 7:146 இறைவாக்குக் கூறும் உண்மை! இதில் இன்னும் வேதனைக்குரிய கொடுமை என்னவென்றால் 1987 முதல் 97 வரை ஜாக் மத்ஹபில் ஐக்கியமாகி இப்போதைய ததஜ மத்ஹபு இமாமால் வார்க்கப்பட்டவர்கள். அவரது வழிகேட்டுப் போதனைகளை வேதவாக்காகக் கொண்டு அவர்களது மஹல்லா புராதனப் பள்ளிகளில் தொழுகையில் தொப்பி இல்லாமல் தொழுவது, ஆமீன் காட்டுக் கத்தாகக் கத்துவது, இருப்பில் ஆள் காட்டி விரலைத் துடிப்பது போல் மிகமிக வேகமாக ஆட்டுவது போன்ற இழி செயல்களால் குழப்பம், கலகத்தை ஏற்படுத்தி, அடிதடி, கோர்ட், கச்சேரி, வழக்கு வம்பு, இப்படிப்பட்ட இழி செயல்கள் மூலம் சுன்னத் ஜமாஅத்தினரை தங்களின் பரம எதிரிக ளாக ஆக்கிக் கொண்டனர்.
அவர்களின் பின்னால் நின்று தொழுவது ஹராம் என்ற பீ.ஜை.யின் வழிகேட்டு ஃபத்வாவை அப்படியே கண்மூடி ஏற்று வெறிகொண்டு செயல் பட்டுத் தங்களுக்காக போட்டித் தனிப் பள்ளிகள் கட்டித் தங்கள் ஆதிக்கத்தில் கொண்டு வந்தனர். நீண்ட காலமாக சு.ஜ.வினரைத் தங்களின் கடும் பகைவர்களாகக் கருதி அவர்களோடு எவ்வித உற வும், சம்பந்தமும் இல்லாமல் செயல்படுகின்றனர்.
இப்படித் தனிப் பள்ளிகள் கட்டி ஆதிக்கம் செலுத்தி வருகிறவர்கள், இப்போது பீ.ஜை.யின் கொடூர முகத்தைத் திட்டமாக அறிந்து கொண்டு அவரை முற்றிலுமாகப் புறக்கணித்துச் செயல்பட்டாலும், பிறை போன்ற விவகாரங்களில் பீ.ஜை.யை கடுமையாக எதிர்த்துப் பிரசாரம் செய்தாலும், அவர் 1987-97களில் போதித்த சுன்னத் ஜமாஅத் இமாம் பின்னால் நின்று தொழக்கூடாது; ஆமீன் மிக சத்தமாகச் சொல்ல வேண்டும், தொழுகை இருப்பில் மிக வேகமாக நடுவிரலை ஆட்ட வேண்டும், ஆகுமான அனுமதிக்கப்பட்ட மார்க்கக் காரியங்களிலும் தங்களின் பரம எதிரியாகக் கருதும் சுன்னத் ஜமாஅத் தினருடன் ஒத்துப் போகக் கூடாது எனப் பிடிவாத மாகச் செயல்படுகின்றனர். இது பெரும் தவறு என்பதை உணர்ந்தாலும் அவர்களின் கெளரவம் திருந்த இடம் கொடுப்பதில்லை.
மேலும் தனிப்பள்ளி, தனி நிர்வாகம் என்ற பெருமை காரணமாக எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து மார்க்கப் பணிக்குக் கூலி கொடுப்பதை நியாயப்படுத்துகிறார்கள். சுமார் 350 குர்ஆன் வசனங்கள் ஆலிம் எனப் பெருமை பேசும் மவ்லவிகளின் இழிநிலையை நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கூறி இருந்தும் அவை அனைத்தையும் நிராகரித்து இந்த மவ்லவிகளை முறை தவறி நல்லவர்களாக மதிக்கும் நிலையில் இருக்கிறார்கள்.
அவர்களின் தனிப்பள்ளி, தனி ஆதிக்கம், நிர்வாகம் என்ற வீண் பெருமை 7:146 இறைவாக்குக் கூறுவது போல் அவர்களை வழிகேட்டில் இட்டுச் செல்கிறது. எப்படி தர்கா, பஞ்சா போன்ற வழிகேடுகளில் சிறுவயதிலிருந்தே ஊறித் திழைத்தவர்கள் அவற்றில் வெறிகொண்டு செயல்படுவது போல் இவர்களும் 1987 முதல் 97 வரை பீ.ஜையின் வழி கேட்டுப் போதனையில் ஊறித் திழைத்ததால், அந்த வழிகேட்டுச் செயல்களை விட்டு நேர்வழிக்கு வருவதற்கு அவர்களின் பெருமை, வரட்டுக் கெளரவம் அவர்களுக்குப் பெரிதும் இடையூறாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களும் 7:146 இறைவாக்கை மீண்டும் மீண்டும் படித்து உணர்வு பெற்று நேர்வழிக்கு வர முன்வர வேண்டும். துஆ செய்கிறோம்.