இப்னு ஸதக்கத்துல்லாஹ்
யார் இவ்வுலக வாழ்க்கையால் மயக்கப்பட்டு, தங்கள் இயக்கத்தை விளையாட்டாகவோ, வேடிக்கையாகவோ (அல்லது அரசியலாகவோ) ஆக்கிக் கொண்டார்களோ அவர்களை (அவர்கள் போக்கில்) விட்டுவிடுங்கள். எனினும், ஒவ்வொரு ஆத்மாவும் தன் (தீய) செயல்களின் காரணமாக (மறுமையில்) ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் என்ற உண்மையை நீங்கள் (அவர்களுக்கு) ஞாபகப் படுத்துங்கள். (6:70)
(நபியே!) உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்டதையும் நம்புவதாக(வும் குர்ஆன், ஹதீஃதை பின்பற்றுவதாகவும்) சாதித்துக் கொண்டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? (யாரை நம்பக்கூடாது) நிராகரிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப்பட்டிருக்கிறதோ அந்தப் பொய்யனையே (தலைவனாக) தீர்ப்புக் கூறுபவனாக ஆக்கிக் கொண்டார்கள். அந்த பொய்யனோ அவர்களை அழிவுக் கிடங்கில் தள்ளிவிடவே விரும்புகிறான். (4:60)
அல்லாஹ்வின் அருளை (இஸ்லாத்தை) நிராகரிப்பாக(சாக்கடை அரசியலாக) மாற்றி, (இதுதான் இஸ்லாம் என்று சொல்லி) தங்கள் சமுதாயத்தவரை அழிவுக் கிடங்கில் இறக்கி விட்டவர்களை நீங்கள் பார்க்கவில்லையா? அவர்கள் நரகத்தைத்தான் வந்தடைவார்கள். (14:28,29)
அவர்கள் அல்லாஹ்வுடைய பாதை(யான இஸ்லாத்தை நிலைநாட்டுவதி)லிருந்து (மக்களைத்) திருப்பி விடுவதற்காக (போராட்டத்தையும் இட ஒதுக் கீட்டையும்) அவனுக்கு இணையாக்குகின்றனர் (சிறிது காலம்) சுகம் அனுபவித்துக் கொள்ளுங்கள்! “”உங்க ளின் சேருமிடம் நரகமே” எனக் கூறும். (14:30)
மறுமையில் இவர்கள் தங்களுடைய பாவச் சுமையை சுமப்பதுடன், இவர்கள் வழிகெடுத்த விளங்காதவர்களின் பாவச் சுமையையும் இவர்களே சுமப்பார்கள். (இப்படி எல்லாத்தையும்) இவர்களே சுமப்பது ரொம்பக் கெட்டதல்லவா? (16:25)
முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு என்பது தான் இன்றைய முக்கிய விவாதப் பொருளாகியிருக்கிறது. அவரும் (முதல்வர்) போகிற இடமெல்லாம் அதையே தான் பேசுகிறார். இவரும் (கருணாநிதி) அதையே தான் பேசுவார் என்று தாங்கள் கிளப்பிவிட்ட மாயையைப் பற்றிப் பேசிப் புளகாங்கிதம் அடைகிறார்கள் TNTJகாரர்கள். உண்மைதான், நிலைமை அப்படித்தான் இருக்கிறது. விஷயம் என்ன வென்றால் இந்த இட ஒதுக்கீட்டால் சமுதாயம் பாதுகாப்பு பெறுமா? முன்னேற்றம் அடையுமா? இது பற்றி, இந்த மாயை யைக் கிளப்பிவிட்ட PJயே என்ன சொல்கிறார், என்பதைத்தான் நாம் இங்கே பார்க்கப் போகிறோம்.
எல்லோரும் (இன) உணர்வைத்தான் தூண்டுவார்கள். தவ்ஹீத் ஜமாஅத் மட்டும்தான் அறிவைத் தூண்டி வளர்ந்த இயக்கம். எதைச் சொல்லிவிட்டு வந்தோமோ அதை நாமே மீறினால் எப்படி? தவ்ஹீத் ஜமாஅத் மட்டும் தான், சொன்னதில் நாங்கள் எதை மீறினோம் என்று சொல்ல முடியாது. வெளிப்படையாக ஒரு விஷயத்தை சொல்லி விட்டோமேயானால் அதிலேயேதான் நாங்கள் நின்று கொண்டிருப்போம். மீறுவோம், எப்போது? குர்ஆன், ஹதீஃத் அடிப்படையில் ஒரு விஷயம் ஆதாரத்தோடு சுட்டிக்காட்டப்பட்டால் ஓப்பனாக வெட்கத்தை விட்டு இதை நாங்கள் தவறாக விளங்கி இருந்தோம். இன்றிலிருந்து இதை திருத்திக் கொள்கிறோம் என்று அறிவித்து விடுவோம். இப்படி இருக்க வேண்டும்.
MNP பற்றி பேசிய போது PJ சொன்னது.
இந்தச் சவடால் சக்கரவர்த்தியிடம் உள்ள எத்தனையோ குர்ஆன், ஹதீஃதுக்கு முரணான போக்குகளை ஆதாரத்தோடு சுட்டிக்காட்டிய போது திருத்திக் கொள்ளவேயில்லை. ஆனால், சவடால் விடுவதில் எந்தக் குறையும் வைக்க மாட்டார். இந்த இட ஒதுக்கீடு கோஷத்தை கிளப்பிய போது, அதை நியாயப்படுத்துவதற்காக, ஒரு வாதத்தை முன் வைத்தார். அது,
பாராளுமன்றத்தில், சட்டசபைகளில், ராணுவத்தில், போலீஸில், இன்னும் ஏனைய அரசுத்துறைகளில் முஸ்லிம்கள் இருக்க வேண்டிய அளவு இருந்திருந்தால், கலவரங்கள் நடந்திருக்குமா? முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருப்பார்களா? பள்ளிவாசல் இடிக்கப்பட்டிருக்குமா? எனவே, இட ஒதுக்கீடு பெறுவது கொண்டு நாம் ஆட்சியதிகாரத்திலும், அரசுத் துறைகளிலும் நம்முடைய விகிதாச்சார அளவில் இடம் பெற்றால் தான் சமுதாயத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். முஸ்லிம் சமுதாயம் பாதுகாப்புப் பெறும் என்று பேசினார்.
தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் படும் அவலங்களையும், இழப்புகளையும் சுட்டிக் காட்டி, இட ஒதுக்கீடுதான் பாதுகாப்புப் பெற்றுத் தரும் என்பது உண்மையானால் சுதந்திரம் வாங்கிய காலத்திலிருந்தே கணிசமான அளவு இட ஒதுக்கீடு பெற்று வரும் அவர்களை அது ஏன் பாதுகாக்கவில்லை என்று நாம் கேட்டோம். அவர் அதற்கு பதிலளிக்கவுமில்லை. திருத்திக் கொள்ளவுமில்லை. சுமார் 15 வருடம் இப்படியே ஓடியது.
2010-ல் மூன் டிவிகாரர்கள் இவரையும், பீ.ஜே.பி.யின் தமிழிசை சவுந்தர்ராஜனையும் அமர வைத்து நெஞ்சுக்கு நீதி என்ற உரையாடல் நிகழ்ச்சியை நடத்தினார்கள். அந்த உரையாடல் பின் வருமாறு.
பீ.ஜே. : அரசியல் அதிகாரத்தில் முஸ்லிம் ரிசர்வேசன் என்ற அடிப்படையில்தான் நாங்கள் இட ஒதுக்கீடு கேட்கிறோம். தலித் மக்களுக்காக ரிசர்வ் தொகுதி வைத்திருக்கிறார்களல்லவா? அந்த தொகுதியில் தலித் மக்கள் மட்டும்தான் போட்டியிடுவார்கள். எந்தக் கட்சியாக இருந்தாலும், முஸ்லிம்களே ஒரு வேட்பாளரை நிற்க வைத்தாலும் தலித்தை தான் நிற்க வைக்க முடியும். அதே போல் முஸ்லிம் ரிசர்வேசன் என்று ஐந்தோ, பத்தோ எங்கள் சதவீதத்துக்கு தக்கவாறு ஐம்பதோ ஒதுக்கிவிட்டால் எந்தக் கட்சி நிற்க வைத்தாலும் முஸ்லிம்களைத் தான் நிறுத்துவார்கள். யார் தோற்றாலும், ஜெயித்தாலும் அங்கே ஒரு முஸ்லிம் வந்து விடுவார்.
மூன் டிவி இடை மறித்து: நீங்கள் சொல்லக் கூடிய அந்த முஸ்லிம் திமுக காரராகவோ, அண்ணா திமுக காரராகவோ இருக்கலாம் அல்லவா?
பீ.ஜே. : ஆமாம், யாராகவும் இருக்கலாம்.
மூன் டிவி : அப்படி பார்த்தால், அந்த முஸ்லிம் அவர்களுடைய கட்சி மேலிடத்துக்குதானே கட்டுப்படுவார்.
பீ.ஜே. : ஆமாம், ஆமாம்.
மூன் டிவி : பிறகு எப்படி அவர் முஸ்லிம் சமுதாயத் துக்கு நன்மை செய்வார்?
பீ.ஜே. : செய்ய முடியாது.
மூன் டிவி & தமிழிசை : அவர், திமுக காரராக இருந்தால், கலைஞர் சொல்வதைத்தான் கேட்பார், அண்ணா திமுக காரராக இருந்தால் ஜெயலலிதா சொல்வதைத்தான் கேட்பார். அவர்கள் இஸ்லாமியர் களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தாலும் அதற்குத் தானே ஆதரவு கொடுப்பார்கள்.
பீ.ஜே. : பேச முடியாது. அதில் எந்த சந்தேகமும் கிடையாது.
மூன் டிவி & தமிழிசை : அப்படியானால், அந்த ரிசர்வ் தொகுதியும் பயனில்லாமல் போகும் அல்லவா?
பீ.ஜே. : இல்லை, இல்லை பயனில்லாமல் போகாது, இப்போது நாங்கள் சொல்வது என்னவென்றால், நாங்களே தேர்தலில் போட்டியிட்டு நான்கு இடம் வாங்கினாலும், நாங்களும் கூட்டணியை அனு சரித்துதான் பேசுவோம். எங்களால் வேறு கருத்து சொல்ல முடியாது.
தமிழிசை : அது தெரியுது, அந்த இட ஒதுக்கீட்டால் என்ன பயன் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.
பீ.ஜே. : முஸ்லிம்களுக்கு பங்கு இருக்கிறது என்பது தான் ஒரு திருப்தியை தவிர அவர்களால் எதுவும் செய்ய முடியாது.
தமிழிசை : அந்த பங்குதான் ஏற்கெனவே நம் நாட்டில் இருக்கிறதே!
கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாளுக் குத்தான் என்றொரு பழமொழி உண்டு. அல்லாஹ் வின் அருளால் இந்த கெட்டிக்காரனின் பொய்யை யும், புரட்டையும் மூன் டிவிகாரர்கள் அம்பலமாக்கி விட்டார்கள், இந்த சம்பவத்துக்குப் பிறகு கதை, வசனத்தை மாற்றி விட்டார்.
இட ஒதுக்கீடு ஒன்று தான் பாதுகாப்புக்கு உத்திர வாதம் என்று சொல்லிக் கொண்டிருந்தவர் நாமெல்லாம் அரபு நாட்டுக்கு போய் கஷ்டப்படக் காரணம் இட ஒதுக்கீடு இல்லாததால்தான், இட ஒதுக்கீடு இருந்தால் நாமெல்லாம் அரபு நாட்டுக்கு போக வேண்டியதிருக்காது. போனில் குடும்பம் நடத்த வேண்டியதிருக்காது. வெயிலிலும், பனியிலும் புழுதியிலும் ஒட்டகம் மேய்க்க வேண்டியதிருக்காது. ஆடு மேய்க்க வேண்டியதிருக்காது. தெரு கூட்டவேண்டியதிருக்காது, கார் துடைக்க வேண்டியதிருக்காது, சச்சாரும் இதைத்தான் சொல்கிறார். மிஸ்ராவும் இதைத்தான் சொல்கிறார் என்று மாற்றிப் பேசி இட ஒதுக்கீடு கோஷத்தை நியாயப்படுத்த ஆரம்பித்து விட்டார். சரி, இப்போது சொல்கிறாரே இந்த வாதமாவது சரியா? இது பற்றி அவரே என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.
தமிழ்நாட்டில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவீதம் இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டிருக்கிறது. ஒரு நூறு பேரை வேலைக்கு எடுத்தால் அதில் நான்கு பேர் முஸ்லிம் இருக்க வேண்டும். சமீபத்தில் பயிற்சி மருத்துவர் வேலைக்கு 1347 பேரை எடுத்தார்கள். இட ஒதுக்கீடு சட்டப்படி பார்த்தால், அதில் ஒரு ஐம்பது பேர் முஸ்லிம்கள் இருக்க வேண்டும். ஆனால், ஒரு முஸ்லிம் கூட இல்லை. லெப்பைகுடி காட்டில் பீ.ஜே.
3.5ஐ கொடுத்தார்களல்லவா? நடைமுறையில் 3.5 வரவில்லை. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் பத்திரிகையில் கொடுக்கப்படும் விளம்பரங்களில் முஸ்லிமுக்கு 1 சதவிகிதம் தான் கொடுக்கிறார்கள். மோசடி நடக்கிறது. முஸ்லிம் இட ஒதுக்கீடு என்பது ஏட்டில்தான் இருக்கிறது. நடைமுறையில் இல்லை. ஆவடியில் பீ.ஜே.
3.5-ல் ஒரு அயோக்கியத்தனம் நடந்து கொண்டி ருக்கிறது. என்னவென்றால் ஒரு 25 பேரை வேலைக்கு எடுத்தால் 3.5ன்படி ஒன்று வருமா? வராது. 3/4 தான் வரும். 50 பேரை எடுத்தால் இரண்டு வருமா? வராது, ஒண்ணேமுக்கால்தான் வரும்.
ஒண்ணேமுக்காலுக்கு எப்படி தலையை வெட்டியா கொடுக்க முடியும். இப்போது நிலையை என்னவென்றால் 50 பேரை எடுத்தாலும் 1 தான் தருகிறார்கள். நேற்று சென்னை யுனிவர்சிடியில் 95 பேரை வேலைக்கு எடுக்கிறார்கள். 95 பேருக்கு 3 முஸ்லிமாவது வரவேண்டுமல்லவா? ஒரு முஸ்லிம் கூட இல்லை. ஆக இட ஒதுக்கீடு என்பது பொய்யாகவும், பித்தலாட்டமாகவும் இருப்பதை பார்க்கிறோம். 2014, ஜனவரி, சென்னையில் பீ.ஜே.
இப்படியாக, கூட்டம் சேர்வதற்கு முன் இட ஒதுக்கீடுதான் காப்பாற்றும் என்று பேசுகிறார். கூட்டம் சேர்ந்த பின் இட ஒதுக்கீடு காப்பாற்றாது என்று பேசுகிறார். பிறகு இட ஒதுக்கீடுதான் வாழவைக்கும் என்று பேசுகிறார். பிறகு, இட ஒதுக்கீடு என்பது பொய், பித்தலாட்டம் என்று பேசுகிறார். இப்படி, நாம் சொன்னதை நாமே மீறுகிறோமே, மாற்றி மாற்றிப் பேசித் திரிகிறோமே, இவர்களுக்கு விளங்கி விட்டால் நம் கதி என்னவாகும் என்ற கவலையே அவருக்கு கிடையாது. காரணம் என்ன? அதையும் அவரே சொல்கிறார் கேளுங்கள்.
உலகிலேயே, கூறு கெட்டவர்கள் அதிகமாக வாழும் நாடு நம் நாடுதான். அப்படி நான் சொல்லவில்லை. முன்னாள் சுப்ரீம் கோர்ட் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுதான் சொன்னார். 90% கூறு கெட்டவர்கள் வாழும் நாடு என்று சொன்னார். 90% சிந்தனையற்றவர்கள் வாழ்கிறார்கள் என்று சொன்னார். எப்படியென்றால்,
ஒரு விஷயத்துக்காக கூட்டம் சேர்ந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். ஒரு ஐம்பது பேர் சேர்ந்து விட்டால் போதும், என்ன? ஏது? என்றெல்லாம் கேட்க மாட்டான் ஐம்பது நூறாகி விடும். பிறகு ஐநூறாகி விடும், பிறகு ஆயிரமாகி விடும்.
சாய்ந்தால் சாயிர பக்கம் சாயிர செம்மறி ஆடுகளா!! என்று அந்தக் காலத்துல ஒரு பாட்டு பாடி வைத்தான். ஒரு ஆட்டு மந்தை போய்க் கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். முன்னால் போகும் ஆட்டின் குறுக்கே ஒரு குச்சியை நீட்டினால் அந்த ஆடு அந்த குச்சியை தாண்டும், பிறகு, நீங்கள் குச்சியை எடுத்து விடலாம். பின்னால் வரும் எல்லா ஆடுகளும் அந்த இடத்துக்கு வந்ததும் தாண்டும். தாண்ட தேவையில்லாத ஆடுகளும் தாண்டும், இவர்களெல்லாம் செம்மறியாட்டுக் கூட்டம்.
ஜட்ஜ் சொன்னது சரிதான், 90 சதவீதம் முட்டாள் பயல்கள்தான், மூளைக்கும் இவர்களுக்கும் சம்பந்தமே கிடையாது. டெல்லி மாணவி சம்பவம் பற்றி பேசும்போது பீ.ஜே.
என்ன சொல்லி நம்மை அழைத்தார்கள். என்ன சொல்லி நாம் (அவர்கள் பின்னால்) போனோம். (இப்போது என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் என்று யாருமே சிந்திப்பதில்லை) இது ஒரு முக்கிய மான விஷயம். மனிதனிடம் உள்ள நோய் என்ன வென்றால், சும்மா (இயக்கம்) ஆரம்பித்தால் இளைஞர்கள் வரமாட்டார்கள். (இன) உணர்ச்சியை தூண்டினால்தான் (வருவார்கள்) வளரமுடியும். (அதனால்தான்) எல்லாரும் (இன) உணர்வைத் தூண்டுவார்கள். எதையாவது பேசும்போது பரபரப்பு உண்டாகும் விதமாக பேசுவார்கள். உதாரணம், பா.ம.க. அவர்கள் எப்படி ஆரம்பித்தார்கள். அவர்கள் வன்னியர் சங்கமாக இருந்தபோது (இட ஒதுக்கீடு போராட்டம் என்ற பெயரில்) மரத்தை வெட்டி ரோட்டை மறித்தர்கள். சென்னையும், தமிழ்நாடும் தனித்தனியாகி விட்டது. வன்னிய மாவட்டத்தை தாண்டி ஒரு பஸ் கூட போகாது. அப்படி ஆயிரக்கணக்கான பஸ்களையும், கார்களையும் மறித்து கொழுத்தினார்கள். இதைப் பார்க்கும் அவன் என்ன நினைக்கிறான், சரியான (பயங்கரமான), வீரமான ஆட்கள்டா! (சேர்ந்தால் இவங்க கட்சியிலே தாண்டா சேரணும்) என்று தமிழ்நாடே கிளம்புகிறதல்லவா? MNP பற்றி பேசியபோது PJ சொன்னது:
அந்த மாதிரி ஆட்கள் நம் சமுதாயத்திலும் இருக்கின்றனர். இளம் வயதானது உணர்வை தூண்டிவிட்டால் சிந்திக்காது. நாம் கத்துவதாலேயோ கூட்டம் போடுவதாலேயோ ஏதாவது பிரயோஜனம் உண்டா? என்றெல்லாம் யோசிக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட விளங்காத மக்களை பிடிப்பதற்காகத் தான் ஒவ்வொருவரும் எதையாவது சொல்லிக்கொண்டு கிளம்புகிறார்கள், கிலாபத்தும், ஜிஹாதும்.
நம்முடன் இருப்பவர்களில் 95% பேர் விளங்காதவர்கள். பீ.ஜே.
வாழ்க தவ்ஹீத் !! வெல்க ஏகத்துவம் !!!