MTM. முஜீபுதீன், இலங்கை
செப்டம்பர் 2014 தொடர்ச்சி……
அல்லாஹ்வின் மீது முழுமையாக நம்பிக்கை கொள்ளல் :
அல்லாஹ்வின் மீது நம்பிக்கையுடைய ஒவ் வொரு இறை விசுவாசியும் தமது எல்லாத் தேவைக்கும் அல்லாஹ்வின் மீதே பூரண நம்பிக்கை வைத்தல் வேண்டும். மனிதர்கள் தமது எல்லாத் தேவைகளுக்காக அல்லாஹ்வை விடுத்து, எந்த இறந்த அல்லது உயிருடன் உள்ள கற்பனைத் தெய்வங்களிடமும் பிரார்த்திப்பது கூடாது. அவ்வாறு மனிதர்கள், வானவர்களிடமோ அல்லது ஷைத்தான் ஜின்களிடமோ அல்லது இறைத் தூதர்களிடமோ அல்லது இறந்து போன நல் அடியார்களிடமோ அல்லது கற்பனை தெய்வங்களிடமோ பிரார்த்திப்பது பெரும் பாவமாகும்.
இவ்வாறு பிரார்த்திப்பதற்குப் பிரதான காரணம் அல்லாஹ்வுக்குரிய பண்புகள் தவறாக மற்றவற்றிற்கும் இருப்பதாக நம்புவதாகும். இந்த நம்பிக்கை மனிதனின் ஈமானை இல்லாது செய்து விடக் கூடிய தாகும். இதனால் எல்லா மனிதர்களும் இறைவனுக்கு இருக்கவேண்டிய பண்புகளையும், இறைவனுக்கு இருக்கக் கூடாத பண்புகளையும் அறிந்திருப்பது அவசியமாகும். அல்லாஹ்வைப் பற்றிய அறிவு இல்லாததின் காரணமாகவே பல தெய்வங்களை மனிதர்கள் வணங்குகிறார்கள். அந்த போலி தெய்வங்களை வணங்கி வந்த அந்த அரேபியாவில் வாழ்ந்த மக்களிடம் அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் ஓதிக்காட்டுமாறு நபி(ஸல்) அவர்களிடம் பணிக்கிறான். அவ்வாறான வசனங்களை அவதானியுங்கள்.
இறைவன் ஒருவனே !
“”எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருப்பதெல்லாம் உங்கள் நாயன் ஒரே நாயன்தான் என்பது தான். ஆகவே நீங்கள் அவனுக்கு வழிபட்டு நடப்பீர்களா? (என்று நபியே!) நீர் கேட்பீராக! ஆனால், அவர்கள் புறக்கணித்து விடுவார்களாயின் நான் உங்கள் (எல்லோருக்கும்) சமமாக அறிவித்து விட்டேன். இன்னும் உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட (வேத னையான)து சமீபத்திலிருக்கிறதா? அல்லது தூரத்தில் இருக்கிறதா? என்பதை நான் அறியமாட்டேன்” என்று (நபியே) நீர் சொல்லி விடுவீராக!. (அல்குர் ஆன் 21:108,109) 360 சிலைகளைத் தெய்வங்களாக வைத்து வணங்கி வந்த அரேபியாவில் நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ் ஒருவனே என ஓதிக்காட்டினார்கள். இன்னும் ஒரு சந்தர்ப்பத்தில் அல்குர்ஆனிலிருந்து நபி(ஸல்) அவர்கள் பின்வருமாறு ஓதிக் காட்டினார்கள்.
(நபியே!) நீர் சொல்வீராக. நிச்சயமாக நான் உங்களைப் போன்ற ஒரு மனிதனே! நிச்சயமாக உங்களுடைய நாயன் ஒரே நாயன் தான் என்று எனக்கு வஹீ அறிவிக்கப்பட்டிருக்கின்றது. எவன் தன்னு டைய இறைவனைச் சந்திக்கலாம் என ஆதரவு வைக்கிறானோ அவன்(ஸாலிகான) நல்ல செயல்களைச் செய்து, தன் இறைவனை வணங்குவதில் வேறெவரையும் இணையாக்காதும் இருப்பானாக.
(அல்குர்ஆன் : 18:110)
மனிதன் அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வணங்கி வழிபடக்கூடிய நாயன் வேறு யாரும் இல்லை என்பதே உண்மையாகும். ஆனால் இந்தியாவிலுள்ள மக்கள் பல தெய்வங்களைச் சிலை செய்து வணங்குகிறார்கள். ஆனால் அவர்கள் கைவசம் வைத்துள்ள பழைமையான வேதத் தொகுப்புகளில் பல இடங்களில் இறைவன் ஒருவனே! எனக் குறிக்கப்பட்டுள்ளதைக் காண முடிகின்றது. அவதானியுங்கள்.
வணக்கத்திற்குரியவன் இறைவன் ஒருவனே! (ரிக்வேதம் : 6:45:16)
இந்திய வேதத் தொகுப்புகள் மேலும் விபரிப் பதை அவதானியுங்கள்.
யா அசம்பூதி(இயற்கை)யை வணங்குகின்றார்களோ அவர்கள் அறியாமையில் இருக்கிறார்கள்.
(அதர்வன வேதம் : 40:9)
அவர்களின் வேதத் தொகுப்புகள் சூரியன், சந்திரன், மரம், மிருகங்கள் போன்ற இறைவன் படைத்த இயற்கையை வணங்குபவர்கள் அறியாமையில் இருப்பதாக கூறுகின்றன. ஆனால் இந்தியாவில் வாழும் அதிகமான மக்கள் தமது மூதாதைகளைத் தழுவி பல தெய்வங்களைக் கற்பனை செய்து தெய்வச் சிலைகளாக தமது கைகளினாலே வடிவ மைத்து வணங்குகிறார்கள். ஆனால் அவர்களுடைய வேதத் தொகுப்புகள் இந்தப் பூமியில் தமக்கு வழங்கப்பட்ட ஐம்புலன்களைக் கொண்டு இறைவனைப் பார்க்க முடியாது எனக் குறிப்பிடுகின்றன. அவதானியுங்கள்.
இறைவன் தன்னை வெளிப்படுத்திக் கொள்வ தில்லை. (அதர்வன வேதம் : 32:3)
அந்த ஆதிபகவானின் வடிவத்தை தேவர்களும் உணர்வதில்லை. அசுரர்களும் உணர்ந்தவர்கள் அல்ல. (பகவத் கீதை : 10:14)
இதே போல் கிறித்தவர்கள், யூதர்கள் வழிபடும் நூல்களிலும் இதே விஷயங்கள் இருந்ததை ஏற்கனவே பார்த்தோம். இவ்வாறிருக்க அவர்கள் எப்படி பல தெய்வங்களை வழிபடலாம். அல்லாஹ் பல தெய்வங்களை வழிபடுபவர்களிடம் என்ன கூறுகிறான் என்று பாருங்கள்.
இன்னும், அல்லாஹ் கூறுகிறான் : இரண்டு தெய்வங்களை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக (வணக்கத்திற்குரிய) அவன் ஒரே நாயன் தான்! என்னையே நீங்கள் அஞ்சுங்கள்.
(அல்குர்ஆன்: 16:51)
அல்லாஹ் ஒருவனே, அவன் அன்றி வேறு இறைவன் இல்லை. இதுவே நேர்வழியாகும். ஆகவே அல்லாஹ் ஒருவனையே வணங்கி வழிபடுதல் வேண்டும்.
அல்லாஹ் தனித்தவன்
(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே, அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் எவரையும் பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எதுவும் இல்லை. (அல்குர்ஆன் : 112:1:4)
ஆதி பிதா ஆதம்(அலை) அவர்கள் முதல் இறுதி நபி(ஸல்) அவர்கள் வரை அல்லாஹ் ஒருவன் என்றே போதனை செய்தார்கள். பல தெய்வங்கள் இருப்ப தாக நம்புவது பெரும் பாவமாகும்.
அல்லாஹ்வுக்கு சந்ததியில்லை
அவன் எவரையும் பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. (அல்குர்ஆன் : 112:3)
மேலும் இறைவனுடைய மகிமை நிச்சயமாக மிக்க மேலானது; அவன் (எவரையும் தன்) மனைவியாகவோ, மகனாகவோ எடுத்துக் கொள்ளவில்லை.
ஆனால் நம்மில் மூடராகிவிட்ட (சிலர்) அல்லாஹ்வின் மீது தகாத வார்த்தைகளைச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் : 72:3,4)
அல்லாஹ்வுக்கு மனைவி மக்கள் இருப்பதாக கற்பனை செய்வது மிகப் பெரும் பாவமாகும். சில நாடுகளில் மனிதர்களின் கைகளினால் ஏற்படுத்தப் பட்டுள்ள ஆண் பெண் சிலைகளுக்கு தெய்வத் திருமணங்களும் மனிதர்களினால் நடத்தி வைக்கப்படுகின்றன. இந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதனால் மனிதர்களின் தேவைகளும், பிரார்த்தனைகளும் நிறைவேறுவதாக நம்புகின்றனர். அவ்வாறான மடமையான நம்பிக்கைகளையும், சடங்கு களையும் இஸ்லாம் கடுமையாகக் கண்டிக்கிறது.
அல்லாஹ்வே ஆதியும் அந்தமும் ஆவான்.
வானங்களுடையவும், பூமியுடையவும் ஆட்சி அவனுக்கே உடையது. அவனே உயிர்ப்பிக்கிறான் மரிக்கும்படியும் செய்கின்றான். மேலும் அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் பேராற்ற லுடையவன்.
யாவற்றுக்கும் முந்தியவனும் அவனே பிந்திய வனும் அவனே பகிரங்கமானவனும் அவனே அந்தரங்கமானவனும் அவனே; மேலும் அவன் அனைத்துப் பொருட்களையும் நன்கறிந்தவன்.
(அல்குர்ஆன் : 57:2,3)
ஆதியும் அந்தமும் அந்த ஏக அல்லாஹ்வாக இருக்கிறான். அப்படி இருக்க ஏன் அந்த ஏக அல்லாஹ்வை விடுத்து வேறு கடவுள்களை வணங்குகிறீர்கள். அறிவுமிக்க மனிதர்களே சிந்தியுங்கள்.
அல்லாஹ்வே யாவற்றையும் படைத்தவன் ஆவான்.
வானம் பூமியிலுள்ள சகலவற்றையும் படைத் துப் பரிபாளிப்பவன் ஏகன் இறைவன் ஆவான். அவனுக்கு ஒன்றைப் படைப்பதற்கு எந்தத் துணையும் தேவையில்லை. அல்லாஹ் அல்குர்ஆன் மூலமாக இதனைப் பின்வருமாறு வெளிப்படுத்து கின்றான்.
அ(வ்விறை)வன் எத்தகையவன் என்றால் அவனே உலகத்திலுள்ள அனைத்தையும் உங்களுக் காகப் படைத்தான்; பின் அவன் வானத்தின் பக்கம் முற்பட்டான்; அவற்றை ஏழு வானங்களாக ஒழுங்காக்கினான். அன்றியும் அவனே ஒவ்வொரு பொருளையும் நன்கறிபவனாக இருக்கிறான்.
அல்குர்ஆன் : 2:29)
மேலும், அல்லாஹ் ஒன்றைப் படைப்பதில் எந்த சிரமத்துக்கும் உட்படமாட்டான். அல்லாஹ் அதனைப் பின்வருமாறு விளக்குகிறான். அவதானியுங்கள்.
(அல்லாஹ்) வானங்களையும், பூமியையும் முன் மாதிரியின்றி (இல்லாமையிலிருந்து) தானே உண் டாக்கினான்; அவன் ஒன்றை உண்டாக்க விதித்து, அதனிடம் “”குன்” (ஆகுக) என்று கூறினால், உடனே அது ஆகிவிடுகிறது. (அல்குர்ஆன் : 2:117)
மக்கள் அறியாமையினால் அல்லாஹ்வுடன், வேறு படைப்புகளையும் தெய்வமாக நம்பிக்கை கொண்டு நமது தேவைகளுக்காக பிரார்த்தித்து வணங்குகிறார்கள். இவர்கள் வணங்கும் போலிப் படைப்புளுக்கு ஒரு ஈயைக்கூட உற்பத்தி செய்ய முடியுமா? அவர்கள் வணங்கும் படைப்புகள் பலவீனமானவை என்பதை இறைவனுக்கு இணை வைக்கும் மனிதர்கள் சிந்திக்கக் கூடாதா? அல்லாஹ் அல்குர்ஆன் மூலம் பின்வருமாறு வினவுகிறான். அவதானியுங்கள்.
மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது. எனவே செவி தாழ்த்திக் கேளுங்கள். நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் பிரார்த்திக்கின்றீர்களோ, அவர்களெல்லாம் ஒன்று சேர்ந்தாலும் ஓர் ஈயைக் கூடப் படைக்க முடியாது. இன்னும், அவர்களிடமிருந்து ஒரு பொருளை எடுத்துக் கொண்டு போனால் அவர்களால் அதனை அந்த ஈயிடமிருந்து திரும்பக் கைப்பற்றவும் முடியாது தேடுவோனும், தேடப்படுவோனும் பலஹீனர்களே. (அல்குர்ஆன் : 22:73)
இன்று விஞ்ஞானம் எல்லா உயிரினங்களும் ஆரம்பத்தில் நீரிலிருந்து படைக்கப்பட்டதாக கண்டுபிடித்துள்ளது. அதனை அல்குர்ஆன் பின் வருமாறு குறிப்பிடுகின்றது.
மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான். அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு. அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு. அவற்றில் நான்கு கால்களைக் கொண்டு நடப்பவையும் உண்டு. தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கிறான்.
(அல்குர்ஆன் : 24:45)
ஷைத்தானின் தூண்டுதலினால் மனிதன் சிலை செய்து வணங்கி வரும் போலியான கடவுள்களுக்கு உலகில் எந்த ஆற்றலும் இல்லை. மனிதன் மடமை யாகக் கற்பனை செய்து கொண்ட தெய்வங்கள் எல்லாம் அழியக் கூடியவை ஆகும். இவற்றிற்குத் தம்மையே பாதுகாத்துக் கொள்ளக்கூடிய சக்தி இல்லை. ஆகவே எல்லாவற்றையும் படைத்துப் பாதுகாக்கும் அல்லாஹ்வை விடுத்து போலி தெய்வங்களை வணங்குவது பாவமும் மடமையு மாகும். அவ்வாறு வணங்குபவர்கள் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனைக்கு உட்படுவர். அல்லாஹ்வே எல்லா மனிதர்களையும் இணை வைத்தல் என்ற பாவத்திலிருந்து பாதுகாக்க வேண்டும்.
அல்லாஹ் என்றும் நிலையானவன்
போலிக் கடவுள்களை வணங்கும் அறிவுமிக்க மக்களே! சிந்தியுங்கள்! அல்லாஹ் இறுதி இறைநெறி நூலான அல்குர்ஆன் மூலம் ஏக இறைவனுக்கு இருக்க வேண்டிய பண்புகளை விபரிக்கின்றான். அன்று இறைத்தூதர்கள் அப்பண்புகளை முன் வைத்தபோது அவர்களைத் துன்புறுத்தியது போல் துன்பம் விளைவிக்காதீர்கள். எமது பெரியோர் களை அவமதித்ததாக எம்மை அடிக்காதீர்கள்; கொலை செய்யப் பாமரர்களைத் தூண்டிவிடாதீர்கள்; வீண் பழி சுமத்தாதீர்கள். அல்லாஹ் கூறும் பண்புகள் போலி தெய்வங்களாக நீங்கள் வணங்கும் இறந்து போன மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும், போலிச் சிலைகளுக்கும் இருக்கின்றதா என சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மனச்சாட்சியைத் தொட்டுக் கேளுங்கள். அல்லாஹ்வின் பண்புகள் உங்கள் சிலை தெய்வங்களிடம் இருக்கின்றதா என அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவதை அவதானியுங்கள்.
அல்லாஹ், அவனைத் தவிர (வணக்கத்திற்குரிய) நாயன் வேறு இல்லை; அவன் என்றென்றும் ஜீவித் திருப்பவன் என்றென்றும் நிலைத்திருப்பவன் அவனை அரிதுயிலோ, உறக்கமோ பீடிக்கா, வானங்களில் உள்ளவையும், பூமியிலுள்ளவையும் அவனுக்கே உரியன; அவன் அனுமதியின்றி அவனிடம் யார் பரிந்துரை செய்ய முடியும்? (படைப்பினங் களுக்கு) முன்னருள்ளவற்றையும், அவற்றுக்குப் பின்னருள்ளவற்றையும் அவன் நன்கறிவான். அவன் ஞானத்திலிருந்து எதனையும், அவன் நாட்டமின்றி, எவரும் அறிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரியாசனம்(குர்ஸிய்யு) வானங்களிலும், பூமியிலும் பரந்து நிற்கிறது அவ்விரண்டையும் காப்பது அவனுக்குச் சிரமத்தை உண்டாக்கவில்லை. அவன் மிக உயர்ந்தவன் மகிமை மிக்கவன்.
(அல்குர்ஆன் : 2:255)
அல்லாஹ்வுக்கு இவ்வாறான பல பண்புகளும், திருநாமங்களும் காணப்படுகின்றன. அவனுடைய பண்புகளுக்கு நிகராக எதுவும் இல்லை. அன்று இறைத் தூதர்கள் அல்லாஹ்வின் பெயர்களை ஓதிக் காட்டினார்கள். ஆனால் அவர்கள் இறந்த அல்லது உயர்த்தப்பட்ட பின் வாழ்ந்த அந்த இறைத்தூதர் களை நேசிப்பவர்கள் என தங்களைத் தாங்களே அழைத்துக் கொண்ட சில ஷைத்தானின் தோழர்கள் வாழ்ந்தார்கள். அவர்கள் அல்லாஹ்வுடைய நாமங்களுக்குப் பல கற்பனையான வடிவங்களைக் கொடுத்து பல வடிவில் சிலைகளை உருவமைத்து வணங்கி வருகின்றனர். அவர்கள் இறைவனின் பல பெயர்களுக்கமைய, ஒவ்வொரு பெயருக்கும் தனித் தனி சிலைகளை கற்பனை செய்து அமைத்து, ஏக இறைவனைப் பல தெய்வங்களாக மாற்றிவிட்ட துடன், இறைத்தூதர்களையம், நல்ல மனிதர்களை யும் கடவுள்களாக மாற்றிவிட்டனர். இதனால் உலகிலுள்ள பல செய்வ வழிபாட்டுக்காரர்களுக்குக் கண்டதெல்லாம் தெய்வங்களாக மாறின. இந்த தெய்வங்களை வணங்கி சோர்வடைந்த மக்கள் அல்லது பல தெய்வ வழிபாட்டில் குறைகளைக் கண்ட மக்கள் தமது பெற்றோரை, அல்லது தமது சிந்தனைகளையே கடவுளாக்கிக் கொண்டனர். இதனால் கடவுள் இல்லை என்ற வாதமும் சமூகத் தில் உருவானது. அவையாவும் அல்லாஹ்வுக்கு இணைவைக்கும் பாவங்களாகும். இத்தகைய பாவங்களிருந்து மக்களைப் பாதுகாக்கவே, அல்லாஹ் இறுதி இறைத் தூதராக முஹம்மது நபி (ஸல்) அவர்களையும், இறுதி இறை வாழ்க்கை நெறியாக அல்குர்ஆனையும் அருளினான். சிந்திப்போர் இல்லையா? அல்குர்ஆனை அவதானியுங்கள். நேர்வழி பெறுங்கள்.
அல்லாஹ் எல்லா உயிர்களினதும் பாதுகாவலன் ஆவான்
அல்லாஹ் எல்லா உயிரினங்களையும் படைத் துப் பாதுகாப்பவன் ஆவான். அவனையன்றி உண்மையான பாதுகாவலன் வேறு இல்லை. ஆகவே, நீங்கள் மறைவான உங்கள் பாதுகாவலர்களாக வெறும் சிலைகளையும், இறந்து விட்ட மனிதர்களையும், ஜின்களையும், வானவர்களையும், வேறு கற்பனைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம். இப் பலவீனமான நம்பிக்கையாளர்களினால் உங்களுக்குப் பாதுகாப்பு வழங்க முடியாது. ஆகவே, அல்லாஹ்வை அன்றி உண்மையான பாதுகாவலன் வேறு இல்லை. அல்லாஹ் கூறுவதை அவதானியுங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! காஃபிர்களுக்கு நீங்கள் வழிப்பட்டு நடந்தால், அவர்கள் உங்களைக் குதிகால்கள் மீது திருப்பி விடுவார்கள். அப்போது நீங்கள் நஷ்டமடைந்தவர்களாக (நம்பிக்கையினின் றும்) திரும்பி விடுவீர்கள். (இவர்களல்ல) அல்லாஹ் தான் உங்களை இரட்சித்துப் பரிபாலிப்பவன். இன்னும் அவனே உதவியாளர்கள் அனைவரிலும் மிகவும் நல்லவன். (அல்குர்ஆன் : 3:149,150)
உலக மக்களில் அனேகமானவர்கள் ஏக இறை வனுக்கு இணை கற்பிக்கும் அடிப்படையில், இறந்து போன பெரியோர்களிடமும், கற்சிலைகள், தீய மந்திரங்களை உச்சரிப்பவர்களிடமும் பாதுகாப்பு வேண்டிப் பிரார்த்திக்கிறார்கள். இது மிகப் பெரும் பாவமாகும், மடமையாகும். ஒவ்வொரு கால கட்டத்திலும் இறைவனால் அனுப்பப்பட்ட இறைத் தூதர்களும், இம்மையிலும், மறுமையிலும் நம்மைப் பாதுகாப்பவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்றே கூறினார்கள். ஆகவே, எப்போதும் அல்லாஹ்விடம் மட்டுமே எமது தேவைகளுக்காகப் பிரார்த்திக்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர மற்ற சகல போலிக் கடவுள்க ளுக்கும் பலவீனங்கள் நிறையக் காணப்படுகின்றன. ஆனால் அல்லாஹ்விடம் எந்தப் பலவீனங்களும் இல்லை. அதாவது அல்லாஹ்வுக்கு மற்ற அல்லாஹ் வின் படைப்புகளைப் போல தூக்கம், மறதி, சோர்வு, பசி, தாகம், மரணம், உதவியாளர்கள், மனைவி, மகன், பெண்கள், வீண் விளையாட்டுக்கள் போன்ற எந்தப் பலவீனங்களும், குறைபாடு களும், தேவைகளும் இல்லை. அல்லாஹ்வின் வார்த்தைகளை அவதானியுங்கள்.
அன்றியும், (தனக்குச்) சந்ததியை எடுத்துக் கொள்ளாதவனும், (தன்) ஆட்சியில் தனக்குக் கூட்டாளி எவரும் இல்லாதவனும், எந்தவித பலஹீனத்தைக் கொண்டும் எந்த உதவியாளனும் (தேவை) இல்லாமலும் இருக்கின்றானே அந்த நாயனுக்கே புகழ் அனைத்தும் என்று (நபியே!) நீர் கூறுவீராக; இன்னும் (அவனை) எப்போதும் பெருமைப்படுத்த வேண்டிய முறையில் பெருமைப் படுத்துவீராக. (அல்குர்ஆன் : 17:111)
அன்று ஷைத்தானிய வழிகாட்டலுடைய மக்கள் அல்லாஹ்வுக்குத் தாம் விரும்பியபடி பல வடிவங்களைக் கொடுத்து வழிபட்டனர். அல்லாஹ் வுடைய தனித்துவமான அழகிய பெயர்களுக்கு அல்லாஹ்வின் பண்புகளுக்கு மாற்றமாக கற்பனை வடிவங்களைக் கொடுத்து வணங்கி வழிபட்டனர். இவை யாவும் அல்லாஹ் காலத்திற்குக் காலம் மக்களுக்கு வழிகாட்ட அனுப்பிய இறைத் தூதர் களின் போதனைகளுக்கு முற்றிலும் மாற்ற மானவையாகும். அல்லாஹ்வுக்குப் பல பெயர்கள் உண்டு. அல்குர்ஆனில் குறிப்பிடுவதை அவதானி யுங்கள்.
அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன. அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள். அவனுடைய திருநாமங்களைத் தவறாகப் பயன்படுத்திக் கொள்வோர்களை (புறக் கணித்து) விட்டுவிடுங்கள். அவர்களுடைய செயல் களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார் கள். (அல்குர்ஆன் : 7:180)
அல்லாஹ்வின் திருநாமங்கள் மூலம் அல்லாஹ் வின் வல்லமைகள், பண்புகள் யாது என அறிந்து கொள்ள முடியும். அல்லாஹ்வின் அழகிய திரு நாமங்களைப் பயன்படுத்திப் பிரார்த்திக்கும்படி அல்லாஹ் எமக்குக் கட்டளையிட்டுள்ளான்.
நீங்கள்(அவனை) அல்லாஹ் என்று அழையுங்கள் அல்லது அர்ரஹ்மான் என்றழையுங்கள். எப்பெயரைக் கொண்டு அவனை நீங்கள் அழைத்தா லும், அவனுக்கு(ப் பல) அழகிய திருநாமங்கள் இருக் கின்றன என்று (நபியே!) நீர் கூறுவீராக! இன்னும் உம்முடைய தொழுகையில் அதிக சப்தமிட்டும் ஓதாதீர். மிக மெதுவாகவும் ஓதாதீர். மேலும், இவ் விரண்டுக்கும் இடையில் ஒரு மத்தியமான வழியைக் கடைப்பிடிப்பீராக. அல்குர்ஆன் : 18:118)
அல்லாஹ்வுடைய அழகிய திருநாமங்கள் சில வற்றையும் பண்புகளையும் அவதானிப்போம்.
1. அல்லாஹ்வுக்கு ரப்பு (இரட்சகன் : அதிபதி, பரிபாலிப்பவன்) (விஷ்ணு சமஸ்கிர்தம்)
அன்று அரேபியாவில் அறியாமையில் இருந்த மக்கள் அல்லாஹ்வுக்குப் பதிலாக பல இறைத் தூதர் களையும், நல்லடியார்களையும் அவர்கள் இறந்த பின் சிலைகளாக வடித்துக் கடவுள்களாக எடுத்துக் கொண்டார்கள். இந்தியா போன்ற நாடுகளில் அல்லாஹ்வின் திருநாமங்களின் கருப்பொருளை அவதானித்து கற்பனையாக சிலைகளை அமைத்து இரட்சகனின்(விஷ்ணு) சிலை என வணங்குகின்றனர். அவை யாவும் பெரும் பாவமான செயற்பாடு களாகும். அன்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் அந்த பல தெய்வ வணக்கக்காரர்களிடம் அல்குர் ஆன் வசனங்களை ஓதிக்காட்டியதை அவதானி யுங்கள்.
(நபியே! அவர்களிடம்) வானங்களுக்கும், பூமிக்கும் இரட்சகன் யார்? என்று நீர் கேளும், அவன் அல்லாஹ்தான் என்று நீரே கூறும். (அவ்வாறிருக்க) நீங்கள் அவனையன்றி (வேறு தெய்வங்களை) இரட்சகனாக எடுத்துக் கொள்கிறீர்களா? அவர்கள் தங்களுக்கே யாதொரு நன்மையும் தீமையும் செய்து கொள்ளச் சக்தியற்றவர்களாய் இருக்கின்றனர். மேலும் கூறும் : குருடனும், பார்வை உடையவனும் சமமானவர்களா? அல்லது இருள்களும், ஒளியும் சமமாகுமா? அல்லது அவர்கள் இணையாக்கிக் கொண்டிருக்கும் (தெய்வங்கள்) அல்லாஹ் படைத் திருப்பதைப் போல் எதையும் படைத்திருக்கின்றனவா? (அப்படியிருந்தால் இது யார்) படைப்பு என்று அவர்களுக்குக் குழப்பம் ஏற்பட்டிருக்கலாம்! (அவ்வாறில்லையே! எனவே, நபியே! நீர் உறுதி யாகக்) கூறும். அல்லாஹ்வே எல்லாப் பொருட்களையும் படைக்கின்றவன்; அவன் ஒருவனே (அனைத்தையும்) அடக்கி ஆள்பவன் என்று. (அல்குர்ஆன் : 13:16)
(இன்ஷா அல்லாஹ் தொடரும்…)