அல்லாஹ் தெளிவுபடுத்தி விட்டான்!
அளவிலா அருளும் ஈடிலா கருணையும் நிறைந்த சர்வ வல்லமை மிக்க இறைவனாகிய அல்லாஹ், படைப்புக்களிலேயே மிகச் சிறந்த படைப்பான மனித வர்க்கத்திற்கு நேர்வழி காட்டியாக தனது இறுதி வழி காட்டி நூல் அல்குர்ஆனை இறக்கியருளியதோடு அதிலுள்ள குறிப்பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங்களைத் தெள்ளத் தெளிவாக உள்ளங்கை நெல்லிக்கனியாக விளக்கியும் விட்டான்.
மனிதனின் வணக்க வழிபாடுகளை, செயல்பாடுகளை, மார்க்க வரையறைகளை, ஷரீஅத் சட்டங்களை தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக் கனியாக’ “முஹ்க்கமாத்’ வசனங்களில் தெளிவுபடுத்தி விட்டான். இதற்கு எண்ணற்ற அல்குர்ஆன் வசனங்கள் சான்றாகத் திகழ்கின்றன. அவற்றை வரிசையாகப் பார்ப்போம்:
அல்குர்ஆன் வசனங்கள் பாரீர்!
“”…. நீங்கள் நேர்வழி பெறும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக்குகிறான்”. அல்குர்ஆன்: 3:103
“இது மனிதர்களுக்குத் தெளிவான விளக்கமாகவும், பயபக்தியுடையோருக்கு நேர்வழிகாட்டியாகவும், நற்போதனையாகவும் இருக்கிறது”. அல்குர்ஆன்: 3:138
“”…….இவற்றை அல்லாஹ் புரிந்து கொள்ளக்கூடிய மக்களுக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்”. அல்குர்ஆன் 2:230
“”அல்லாஹ் (தன்னுடைய சட்டங்களை) உங்களுக்குத் தெளிவாக விளக்கவும். உங்களுக்கு முன்னிருந்த (நல்ல)வர்கள் சென்ற (நேரான) வழிகளில் உங்களைச் செலுத்தவும், உங்களுக்கு பாவமன்னிப்பு அருளவுமே விரும்புகிறான்…” அல்குர்ஆன் : 4:26
“”…. நீங்கள் வழிதவறாமல் இருப்பதற்காகவே அல்லாஹ் உங்களுக்கு (இவ்விதிகளை) விளக்கி வைக்கிறான்….” அல்குர்ஆன் : 4:176
“”மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங் களுக்கு (உறுதியான) ஆதாரம் வந்துவிட்டது; தெளிவான பேரொளியையும் உங்களிடம் இறக்கி வைத்துள்ளோம்”. அல்குர்ஆன் : 4:174
“”…நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள (வழிகாட்டி) நூல் உங்களிடம் வந்திருக்கிறது”. அல்குர்ஆன் : 5:15
“”… நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை உங்களுக்கு இவ்வாறு விளக்குகிறான்”. அல்குர்ஆன் : 5:89
“”எந்த ஒரு சமுதாயத்திற்கும் அல்லாஹ் நேர்வழி காட்டிய பின் அவர்கள் தவிர்த்து கொள்ள வேண்டி யவைகளை அவர்களுக்கு தெளிவுபடுத்தும் வரை அவர்களை அவன் வழிகெடுப்பவனாக இல்லை”
அல்குர்ஆன் : 9:115
“”…மனிதர்களே! உங்கள் இறைவனிடமிருந்து உங்க ளுக்கு நிச்சயமாக ஒரு நல்லுபதேசம் வந்துள்ளது. (உங் கள்) இதயங்களிலுள்ள நோய்களுக்கு அரு மருந்தும் (வந்திருக்கிறது) மேலும் (அது) முஃமின்களுக்கு நேர் வழிகாட்டியாகவும், நல்லருளாகவும் உள்ளது”.
அல்குர்ஆன் : 10:57
“”…இவை தெளிவான (இவ்வழி காட்டி) நூலின் வசனங்களாகும்”. அல்குர்ஆன் : 12:1
“”…இவை (இவ்வழிகாட்டி) நூலாகிய குர்ஆனின் தெளிவான வசனங்களாகும்”. அல்குர்ஆன்15:1
“”இதற்காக நீர் அவர்களிடத்தில் எந்தக் கூலியும் கேட்பதில்லை; இது அகிலத்தார் அனைவருக்கும் நினை வூட்டும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை”.
அல்குர்ஆன் : 12:104
“”….அல்லாஹ்(தன்) வசனங்களை உங்களுக்கு நன்கு விவரிக்கிறான்….” அல்குர்ஆன் : 24:18
“”இன்னும் நிச்சயமாக, உங்களுக்குத் தெளிவாக்கும் வசனங்களையும், உங்களுக்கு முன் சென்று போனவர் களின் உதாரணத்தையும், பயபக்தியுடையோருக்கு நல்லுபதேசத்தையும் நாம் இறக்கி வைத்திருக்கிறோம்”. அல்குர்ஆன்24:34
“”ஆனால், அது (அல்குர்ஆன்) அகிலத்தார் அனைவருக் குமே நல்லுபதேசமேயன்றி வேறில்லை”
அல்குர்ஆன் 68:97
“”நிச்சயமாக நாம் தெளிவுபடுத்தும் வசனங்களையே இறக்கியிருக்கிறோம்’ அல்குர்ஆன் 24:46
“”…இவ்வாறு, அல்லாஹ் தன் வசனங்களை உங்களுக்கு விவரிக்கிறான்….” அல்குர்ஆன் 24:58,59,61
“”…இவை தெளிவான (வழிகாட்டி) நூலின் வசனங் களாகும்”. அல்குர்ஆன் : 26:2
“”…இவை தெளிவான (வழிகாட்டி) நூலான குர்ஆனின் வசனங்களாகும்”. அல்குர்ஆன்:27:1
“”…இவை தெளிவான (வழிகாட்டி) நூலின் வசனங் களாகும்”. அல்குர்ஆன் : 28:2
“”…இது நல்லுபதேசமும் தெளிவான குர்ஆனுமே தவிர வேறில்லை”. அல்குர்ஆன் : 36:69
“”…இது அகிலங்களுக்கெல்லாம் நல்லுபதேசமேயன்றி வேறில்லை”. அல்குர்ஆன் : 38:87
“”…விளக்கமான இவ்(வழிகாட்டி) நூலின்மீது சத்திய மாக” அல்குர்ஆன் : 43:2
“”…தெளிவான இவ்(வழிகாட்டி) நூலின்மீது சத்திய மாக”. அல்குர்ஆன் : 44:2
“”…அவர்கள் (அறிந்து) நல்லுபதேசம் பெறுவதற்காக, “இதை உம்முடைய மொழியில் எளிதாக்கினோம்”. அல்குர்ஆன் : 44:58
“”…நிச்சயமாக இந்த குர்ஆனை (சிந்தித்து) நன்கு விளங்கிக் கொள்ளும் பொருட்டே எளிதாக்கி வைத் திருக்கிறோம்…”. அல்குர்ஆன் :54:17,22,32,40
“”…அது (குர்ஆன்) அகிலத்தார் அனைவருக்குமே நல்லு பதேசமேயன்றி வேறில்லை”. அல்குர்ஆன் : 68:52
“”…நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக நாம் இவ் வசனங்களை உங்களுக்குத் தெளிவாக விவரிக்கிறோம்”. அல்குர்ஆன் : 57:17
“”…இது, அகிலத்தாருக்கெல்லாம் உபதேசமாகும்”. அல்குர்ஆன் : 81:27
“”…நிச்சயமாக இதில் சிந்தித்துணரும் மக்களுக்கு ஓர் அத்தாட்சி இருக்கிறது”. அல்குர்ஆன் :16:69
செயல்முறையில் விளக்கம்!
இவ்வளவு தெள்ளத் தெளிவாக “உள்ளங்கை நெல்லிக்கனியாக’ மனிதனைப் படைத்த இறைவன் அவனது இறுதி வழிகாட்டல் நூலில் நேர்வழியை-சத்தியப் பாதையை அனைத்துலக மக்களுக்கும் விளக்கிய பின்னர், அவனது இறுதித் தூதரை அவற்றை நடைமுறையில் செயல்படுத்திக் காட்ட அனுப்பி வைத்துள்ளான். நூல் வடிவில் இருப்பதை மனித செயல் வடிவிலும் தனது கண்காணிப்பில் செய்து காட் டச் செய்து விட்டான் ஏகன் இறைவன். அதையும் அல்குர்ஆனில் அல்லாஹ் தவறாது குறிப்பிட்டு உறுதி செய்துள்ளான். அவை வருமாறு:
“”…எனவே(நபியே!) உம்முடைய இறைவனின் தீர்ப் புக்காகப் பொறுத்திருப்பீராக; நிச்சயமாக நீர் நம் கண் காணிப்பில் இருக்கின்றீர்…” அல்குர்ஆன் : 52:48
“”…மனிதர்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு தெளிவு படுத்துவதற்காகவும் அவர்கள் சிந்திப்பதற் காகவும் உமக்கு இவ்(வழிகாட்டி) நூலை நாம் அருளினோம்”. அல்குர்ஆன் :16:44
(நபியே!) அன்றியும், அவர்கள் எதில் தர்க்கித்துக் கொண்டிருக்கிறார்களோ அதை நீர் தெளிவாக்குவதற் காகவே உம்மீது இவ்(வழிகாட்டி) நூலை இறக்கி னோம்; இன்னும் விசுவாசம் கொண்டுள்ள மக்களுக்கு (இது) நேரான வழியாகவும், அருளாகவும் இருக்கிறது.
அல்குர்ஆன் : 16:64
இறையறிவிப்புகளைக் கொண்ட நூலை உடைய வர்களே! மெய்யாகவே உங்களிடம் நம்முடைய தூதர் வந்திருக்கிறார்; (இறை வழிகாட்டி) நூலிலிருந்து நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பவற்றில் பல வியங் களை அவர் உங்களுக்கு விளக்கிக் காட்டுவார். இன் னும் (இப்பொழுது தேவையில்லாத) அநேகத்தை விட்டு விடுவார். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும் தெளிவுமுள்ள (அல்குர்ஆன் எனும் வழிகாட்டி) நூல் உங்களிடம் வந்திருக்கிறது.
அல்குர்ஆன் : 5:15
“”…இப்பொழுது உங்களுக்கு (மார்க்கத்தை) தெளிவாக எடுத்துக்கூற நம் தூதர் உங்களிடம் வந்துள்ளார்; எனவே நன்மாராயம் கூறுபவரும், அச்சமூட்டி, எச்சரிப்பவரும் உங்களிடம் நிச்சயமாக வந்துவிட் டார்…”. அல்குர்ஆன் : 5:19
“”…ஒவ்வொரு தூதரையும் அவருடைய சமூகத் தாருக்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக அவர்களு டைய மொழியிலேயே (போதிக்கும்படி) நாம் அனுப்பி வைத்தோம். அல்குர்ஆன்:14:4
“”…(நபியே!) நாம் இதை (வழிகாட்டி நூலை) உம் முடைய மொழியில்(அருளி) எளிதாக்கியதெல்லாம், இதைக்கொண்டு பயபக்தியுடையவர்களுக்கு நன் மாராயங் கூறவும், முரண்டாக வாதம் செய்யும் மக்க ளுக்கு இதைக் கொண்டு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்குமேயாகும்” அல்குர்ஆன் : 19:97
மேலதிக ஆதாரங்களை நீங்களே பாருங்கள்!
மேலும் இறுதி வழிகாட்டி நூலான அல்குர்ஆனின் நடைமுறைக்குத் தேவையான குறிப்பாக ஒரே பொருளையுடைய இரண்டாவது பொருளே எடுக்க முடியாத “முஹ்க்கமாத்’ வசனங்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவாக இறைவனாலும் அவனது இறுதித் தூதராலும் தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டு விட்டன என்பதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களே சான்று கூறிக் கொண்டிருக்கின்றன அல்குர்ஆனின் பக்கங்களைத் திருப்பத் திருப்ப இந்த வசனங்களைப் பல இடங்களில் பார்க்கலாம். அத்தியாயம், வசன எண் இவற்றைத் தந்துள்ளோம். சிரமம் பாராது அல்குர் ஆனை நீங்களே திறந்து பார்க்கவும்.
2:66,87,92,99,118,159,160,185,187,209,211, 213,219,221,242,253,266, 3:86,97,105,118,183, 184, 5:75,92,110, 6:55,57,105,157, 7:73,85,105, 9:115, 11:17,28,63, 88,96, 14:45, 16:103, 20:133, 22:5, 29:35, 35:40, 47:14, 65:11
இன்னும் இவை போல் எண்ணற்ற வசனங்களில் நேர்வழியை அல்குர்ஆனில் தெள்ளத் தெளிவாக விளக்கி இருப்பதாக அல்லாஹ் கூறுகிறான்.
மக்களுக்கு விளக்குவது அல்லாஹ்வின் பொறுப்பு!
அல்குர்ஆன் வசனங்களை அனைத்து மக்களுக்கும் விளக்குவது தனது கடமை-பொறுப்பு என்று அறிவித்த தோடு, தனது இறுதித் தூதரை அனுப்பி அந்த நேர் வழியை செயல் வடிவிலும் செய்து காட்டச் செய்து விட்டான்.
இதற்குப் பின்னரும் அல்குர்ஆன் வசனங்களுக்கு விளக்கம் கூறும் பேர்வழிகள் எனக் கூறிக் கொண்டு சுய விளக்கங்களையும், கற்பனைகளையும் அள்ளிவிடும் இந்தப் புரோகித மவ்லவிகள் எங்கிருந்து அதற்குரிய அதிகாரத்தைப் பெற்றார்கள்? அல்லாஹ் கூறியுள்ள தும், நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளதும் மக்களுக்கு விளங்காது; எனவே அவற்றை நாங்கள் மக்களுக்கு விளக்குகிறோம் என்றால் அதன் பொருள் என்ன?
அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஆற்றல் இல்லையா?
அல்லாஹ்வுக்கும், அவனது இறுதித் தூதருக்கும் மக்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் இல்லை; அந்த ஆற்றல் புரோகித மவ்லவிகளாகிய எங்களுக்கே உண்டு என்று சொல்லாமல் சொல்கிறார்களா?
மார்க்கத்தை மக்களுக்கு விளங்கச் செய்வதில் அல்லாஹ்வை விட அவனது இறுதித் தூதரை விட நாங்களே அதிக ஆற்றல் பெற்றவர்கள் எனக் கூறப் போகிறார்களா? என்ன? இறைவன் படைத்த மனிதர் களில் ஒருவர் ஒரு வியம் பற்றி இரண்டாவதொரு மனிதருக்கு விளக்கம் கொடுக்கிறார். அதை அந்த இரண்டாவது மனிதர் விளங்கவில்லை. அதனால் மூன்றாவதொரு மனிதர் அந்த இரண்டாவது மனித ருக்கு அதை மேலும் விளக்கிச் சொல்கிறார். இப் போதுதான் இரண்டாவது மனிதருக்குப் புரிந்தது. அப்படியானால் அந்த முதல் மனிதரை விட மூன்றாவது மனிதர்தான் விளக்குவதில் ஆற்றல்மிக்கவர் என்பதை யாரால் மறுக்க முடியும்.
இதுபோல மனிதனைப் படைத்த இறைவன் நேர் வழியை மனிதர்களுக்காக அல்குர்ஆனில் விளக்கி இருக்கிறான். அதை மனிதர்களால் விளங்க முடிய வில்லை. அதனால் மனிதர்களிலேயேயுள்ள புரோகித மவ்லவிகள் அல்குர்ஆனின் நேர்வழியை அறிவிக்கும் “முஹ்க்கமாத்’ வசனங்களை மேலும் விளக்குகிறார்கள். அதையே மற்ற மனிதர்களால் விளங்க முடியும் என்றால், இங்கே ஆற்றல் மிக்கவர் யார்? அல்லாஹ்வா? அல்லது இந்த புரோகித மவ்லவிகளா? சிந்தித்துப் பாருங்கள்.
அல்குர்ஆன் உங்களுக்கு விளங்காது; நாங்கள் விளக்குகிறோம் என்று கூறும் இந்தப் புரோகித மவ்லவிகள் அல்லாஹ்வை விட தங்களுக்கு விளக்கும் ஆற்றல் இருக்கிறது என்று ஆணவம்-பெருமையுடன் சொல்லாமல் சொல்கிறார்களா? இல்லையா?
நபி(ஸல்) அவர்களின் விளக்கங்களான ஹதீஃத் களை உங்களால் புரிந்து கொள்ள முடியாது. நாங்கள் அவற்றை விளக்கிறோம் என்று கூறும் புரோகித மவ்லவிகள் நபி(ஸல்) அவர்களை விட எங்களுக்கே மனிதர்களுக்கு மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் இருக்கிறது என்று பெருமையுடன் சொல்லாமல் சொல் கிறார்களா? இல்லையா? அவர்களின் இந்த அகம்பாவ எண்ணம் அவர்களை எங்கே கொண்டு சேர்க்கும்? சிந்தியுங்கள். இந்தப் புரோகித மவ்லவிகள் பற்றி அல்லாஹ் நேரடியாகவே கூறுகிறான் கேளுங்கள்!
தீர்ப்பு மறுமையில் என்று இல்லாவிட்டால்!
“”அல்லாஹ் அனுமதிக்காததை மார்க்கமாக்கி வைக்கக்கூடிய இணையாளர்கள் (புரோகித மவ்லவி கள்) அவர்களுக்கு இருக்கின்றனரா? மேலும் (மறுமை யில் விசாரணைக்குப் பிறகு தக்க கூலி கொடுக்கப்படும் என்னும் இறைவனின்) தீர்ப்புப் பற்றிய வாக்கு இல்லா திருப்பின் (இதுவரை) அவர்களுக்கிடையில் தீர்ப்பளிக் கப்பட்டிருக்கும்…” அல்குர்ஆன் :42:21
தீர்ப்பை மறுமைக்கென்று அல்லாஹ் ஒத்தி வைத்திருக்காவிட்டால், அல்லாஹ்வை விட அவனது தூதரை விட எங்களுக்கே மார்க்கத்தை விளக்கும் ஆற்றல் உண்டு என்று அகம்பாவமாக எண்ணித் திரியும் இந்தப் புரோகித மவ்லவிகள் இவ்வுலகிலேயே இப் போதே கடுமையானத் தண்டனைக்கு ஆளாகி இருப் பார்கள். ஆனால் மறுமைக்காக விட்டு வைக்கப்பட்டி ருக்கிறார்கள். தங்கள் தவறை உணர்ந்து பாவ மன்னிப்பு கேட்டு மீண்டால் தப்பினார்கள். இல்லை என்றால் அதோ கதிதான்! நரகத்தை விட்டு மீளவே முடியாது. (பார்க்க : 33:66-68)
மேல் விளக்கம் கொடுப்பவர்கள் மறைப்பவர்களே!
அல்லாஹ்வின் விளக்கத்திற்கு மேல் விளக்கம் கொடுப்பவர்கள் அந்த வசனங்களை மறைப்பதாகவே அல்லாஹ் குற்றம் சாட்டுகிறான். இதோ படித்துச் சிந்தித்து விளங்குங்கள்:
“”நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் (இறுதி நேர்வழி காட்டி) நூலில் மனிதர்களுக்காகவே விளக்கிய பின்ன ரும் யார் மறைக்கிறார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும், அவர்களைச் சபிப்ப (தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள்”.
அல்குர்ஆன் : 2:159
“”எவர்கள் பாவமன்னிப்புத்தேடி (தங்களைத்) திருத்திக் கொண்டு (தாங்கள் மறைத்தவற்றை) தெளிவு படுத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர (மற்றவர்கள் சாபத்திற்குரியவர்கள்) அவர்களை நான் மன்னித்து விடுகிறேன். நான் மன்னிப்பவனாகவும் கிருபையுடையோனாகவும் இருக்கின்றேன்”.
அல்குர்ஆன் : 2:160
“”யார்(இந்த உண்மைகளை) நிராகரிக்கிறார் களோ; இன்னும் நிராகரிப்பவர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ் வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனை வருடையவும் சாபம் உண்டாகும்” அல்குர்ஆன் : 2:161
“”அவர்கள் அச்சாபத்திலேயே என்றென்றும் இருப் பார்கள். அவர்களுடைய வேதனை இலேசாகப்பட மாட்டாது; மேலும் அவர்களுக்கு அவகாசமும் கொடுக்கப்படமாட்டாது”. அல்குர்ஆன் : 2:162
குர்ஆன், ஹதீஃத் உங்களுக்கு விளங்காது; அரபு மொழி படித்த மவ்லவிகளாகிய எங்களுக்கே விளங்கும்; நாங்கள் கொடுப்பதுதான் விளக்கம் எனக் கூறும் புரோகிதர்கள் நேர்வழியை-சத்தியத்தை மறைக்கிறார் கள். அவர்கள் அல்லாஹ்வினதும், மலக்குகளதும், மனிதர்களதும் சாபத்திற்குரியவர்கள்; தாங்கள் மறைத் ததை ஒப்புக்கொண்டு மன்னிப் பெறாமல் அதே நிலை யில் மரணிப்பவர்கள் மீளா நரகை அடைய நேரிடும். அதிலிருந்து விடுதலையே இல்லை என்பதையே இந்த 2:159, 160,161,162 இறை வசனங்கள் “உள்ளங்கை நெல்லிக்கனியாக’ உணர்த்துகின்றன.
ஆக அல்குர்ஆன் வசனங்களுக்கு குறிப்பாக அதி லுள்ள மனிதர்கள் எடுத்து நடக்க வேண்டிய பின்பற்ற வேண்டிய ஒரே கருத்துள்ள இரண்டாவது கருத்தே பெற முடியாத “முஹ்க்கமாத்’ வசனங்களுக்கு மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என்பதையே இந்த இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன.
புரோகிதர்களின் போலி ஆதாரங்கள்!
சில குர்ஆன் வசனங்களை ஓதிக்காட்டி, மார்க்கத்தில் விளக்கம் கூறும் அதிகாரம் மவ்லவிகளாகிய எங்களுக்கே இருக்கிறது என்று புரோகிதர்கள் வாதிடுவார்கள். அந்த இறைவாக்குகள் வருமாறு :
“”…உங்களில் விசுவாசம் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான்…” அல்குர்ஆன் : 58:11
“”…அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இந்த குர்ஆனை கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள்தான்.”
அல்குர்ஆன் : 39:9
“”…குருடனும், பார்வையுடையவனும் சமமாக மாட்டார்கள்” (அவ்வாறே) இருளும், ஒளியும் (சமமாகா)” அல்குர்ஆன் : 35:19,20
இந்த குர்ஆன் வசனங்கள் எதிலும் இந்தப் புரோகித மவ்லவிகளுக்கு மார்க்கத்தில் அதிகாரம் இருப்பதாகக் கூறவில்லை. அதற்கு மாறாக விசுவாசம் கொண்ட அனைத்து முஸ்லிம்களும் கல்வி ஞானம் பெற உற்சாகப்படுத்தப்பட்டுள்ளது. அதைக் கொண்டு அல்லாஹ்விடம் உயர்ந்த பதவிகளை அடைய முடியும் என உணர்த்தப்பட்டுள்ளது; முறையாக தங்கள் அறிவைப் பயன்படுத்துகிறவர்களே அல்குர்ஆனின் உண்மையான உபதேசத்தை உணர முடியும் என்பதும் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமல்ல 58:11ல் குறிப்பிடப்பட்டுள்ள கல்வி ஞானம் குர்ஆன், ஹதீஃத் கல்வி ஞானம் மட்டுமே. இந்த 58:11 வசனம் இறங்கும் போது இருந்தவை அல்குர்ஆன் மற்றும் நபியின் நடைமுறைகள் மட் டுமே. பின்னால் உருவான மத்ஹபு, தரீக்கா, பிக்ஹ் மற்றும் இயக்கங்கள் அடிப்படையிலான கல்வி ஞானம் அன்றிருக்கவில்லை. எனவே இந்த 58:11 வசனம் இத்தகைய கல்வி ஞானத்தை ஒருபோதும் கூறி இருக்க முடியாது.
மாற்று மதப் புரோகிதர்களை காப்பி அடிப்பவர்கள்!
மேலும் இன்று தங்களை ஆலிம்கள்-உலமா பெரு மக்கள் -மார்க்கத்தைக் கற்றவர்கள் எனப் பீற்றிக் கொள்ளும் அனைவரும் ஹிந்து மதப் புரோகிதர்கள் போல், பெளத்த மதப் புரோகிதர்கள் போல், யூத மதப் புரோகிதர்கள் போல், கிறிஸ்தவ மதப் புரோகிதர்கள் போல் புரோகிதக் கல்வி கற்றவர்களே அல்லாமல், குர்ஆன், ஹதீஃத் கல்வி கற்றவர்கள் அல்லர். அதனால் தான் மற்ற மதப் புரோகிதர்களைப் போல் முன்னோர் கள், முதாதையர்களின் வழி கேட்டு செயல்பாடுகளை எல்லாம் மார்க்கமாக நியாயப்படுத்தி வருகின்றனர்.
அய்யாமுல் ஜாஹிலிய்யா காலத்து தாருந் நத்வா மதப் புரோகிதர்கள் எப்படித் தங்களின் முன்னோர் கள் மூதாதையர்களின் வழிகேட் டுப் போதனைகளை பக்தி சிரத்தையுடன் மார்க்கமாகக் கூறி மக்களை மதி மயக்கினார்களோ அதே போல்தான், இன்றைய முஸ்லிம் மதப் புரோகிதர்களும் முன்னோர்கள் முதாதையர்களின் வழிகேட்டு போதனைகளையே பக்தி சிரத்தையுடன் மார்க்கமாகப் போதித்து மக்களை மதி மயக்கி வழிகெடுத்து வருகின்றனர்.
முன்னோர்கள், மூதாதையர்களின் அடிச் சுவட் டைப் பின்பற்றிச் செல்வது வழிகேடு என்று கூறும் அல்குர்ஆன் 2:170, 5:104, 7:28,70,71, 10:78, 11:62,87, 109, 12:40, 14:10, 21:53,54, 26:74,76, 31:21, 34:43, 37:69, 43:22,23, 53:23 போன்ற இறைவாக்குகளை எல் லாம் முதுகுக்குப் பின்னால் தூக்கி எறிந்து விட்டு, வழி கேட்டில் சென்ற முன்னோர்கள் மூதாதையர்களின் நடைமுறைகளை, நேர்வழி சென்ற நல்லவர் களின் பெயரால் எடுத்து போதிக்கின்றனர், நடக்கின்றனர். பெருங்கொண்ட மக்களை வழிகெடுக்கின்றனர்.
எப்படிக் கிறிஸ்தவர்கள் யேசு என்ற ஈஸா (அலை) அவர்கள் சொல்லாத வியங்களை அவர்கள் சொன் னதாக அவர்களுக்குப் பின்னால் வந்த மதப் புரோகிதர் கள் கற்பனையாக சரடு விட்டதை அப்படியே குருட்டுத்தனமாக நம்பிப் பின்பற்றுகின்றனரோ அதே போல், இமாம்களான அபூஹனீஃபா, மாலிக், ஷாஃபியீ, ஹன்பல்(ரஹ்-ம்) போன்றோர் சொல்லாத வியங்களை அவர்கள் சொன்னதாக அவர்களுக்குப் பின்னால் வந்த மதப் புரோகதர்கள் கற்பனையாக மத்ஹபு, தரீக்கா, பிக்ஹ், இயக்கம் ஆகிய பெயர்களால் சரடு விட்டதை அப்படியே குருட்டுத்தனமாக நம்பிப் பின்பற்றும் பரிதாப நிலையிலேயே இன்றைய முஸ்லிம்களில் மிகப் பெரும்பான்மையினர் இருக்கின் றனர். முன்னைய மதங்களின் மதப் புரோகிதர்களுக் கும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றிய மக்களுக்கும் நாளை மறுமையில் எப்படிப்பட்ட தண்டனை காத்திருக்கிறதோ, அதே தண்டனை தான் முஸ்லிம் மதப் புரோகிதர்களுக்கும், அவர்களைக் கண்மூடிப் பின்பற்றும் முஸ்லிம்களுக்கும் காத்திருக்கிறது.
(பார்க்க:அல்குர்ஆன் 33:66,67,68
புறக்கணிப்பீர் புரோகிதர்களை!
மவ்லவிகள்-ஆலிம்கள்! அரபி கற்றவர்கள்- மார்க் கத்தைச் சொல்லும் அதிகாரம் பெற்றவர்கள் என்று பீற்றிக்கொள்ளும் முஸ்லிம் மதப் புரோகிதர்களைப் புறந்தள்ளி விட்டு அல்குர் ஆன் 7:3 மற்றும் 18:102-106, 33:36, 59:7 இறைக் கட்டளைகள்படி நேரடியாக குர் ஆன் வசனங்களையும், ஆதாரப்பூர்வமான ஹதீஃத் களையும் சுயமாகச் சிந்தனையுடன் படித்துப் புரிந்து கொண்டு அதன்படி செயல்படுகிறவர்கள் மட்டுமே நாளை மறுமையில் நரக வேதனையிலிருந்து தப்ப முடியும். அவர்கள் மிகமிகச் சொற்பமே!
திரித்துக் கூறும் இன்னொரு வசனம்!
இந்த முஸ்லிம் மதப் புரோகிதர்களால் திரித்துக் கூறப்படும் இன்னொரு குர்ஆன் வசனம் வருமாறு :
“”…நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவ னுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம்கள் (அறிஞர்கள்) தாம்…” அல்குர்ஆன் : 35:28
இந்த இறைவாக்கை ஓதிக்காட்டி மவ்லவிகள்-ஆலிம்களாகிய நாங்கள்தான் அல்லாஹ்வை முறைப் படி அஞ்சுபவர்கள். எனவே மார்க்கத்தை எடுத்துச் சொல்லும் அதிகாரம் எங்களுக்கே உண்டு என வாதிடு வர். இங்கும் அவர்கள் பொய்யே உரைக்கின்றனர். இந்த இறைவாக்கு மவ்லவிகள்-ஆலிம்கள் அதனால் அல்லாஹ்வை முறைப்படி அஞ்சுவார்கள் எனச் சொல்லவில்லை. அதற்கு மாறாக இறைவனின் கட்ட ளைகளையும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறை களையும் நேரடியாகப் படித்துச் சிந்தித்து விளங்கி அறிந்து அதன்மூலம் அல்லாஹ்வை அஞ்சி நடப்பவர் களே ஆலிம்கள்-அறிஞர்கள் என்றே இந்த வசனம் கூறுகிறது. குர்ஆன், ஹதீஃதை நேரடியாகக் கற்றுக் கொள்ளாமல் புரோகிதக் கல்வியைக் கற்ற இவர்கள் எப்படி ஆலிம்களாக -அறிஞர்களாக ஆக முடியும்.
அரபி மொழி கற்றதால்தான் தாங்கள் மவ்லவிகள்-ஆலிம்கள் என்ற அவர்களின் கூற்றும், மிகத் தவறாகும். அரபி மொழி கற்றிருப்பதால் ஆலிம்களாக ஆகமுடி யும் என்றால் நபி(ஸல்)அவர்கள் காலத்து “தாருந் நத்வா’ அறிஞர்களும் அவர்களின் தலைவன் அபுல் ஹிக்கமும் படே படே ஆலிம்களாக-அல்லாமாக் களாக கருதப்பட்டிருக்க வேண்டும். நபி(ஸல்) அவர்கள், அவர்களை ஜாஹில்களாகவும், அவர்களின் தலைவனை அபூ ஜஹீலாகவும் மக்களுக்கு அடை யாளம் காட்டினார்கள்.
முஸ்லிம் அல்லாத அரபி மொழி பண்டிதர்கள்:
இன்று இந்த மவ்லவிகள் பயன்படுத்தும் அரபி மொழி அகராதி(முன்ஜித்) மற்றும் ஹதீஃத்களின் அட்டவணை இவற்றைத் தயார் படுத்திக் கொடுத்தவர் கள் பெரும் ஆலிம்களாக- அல்லாமாக்களாக இருக்க வேண்டும். ஆனால் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாத காஃபிர்கள்- நிராகரிப்பாளர்கள் என்பதே உண்மையாகும்.
அரபி மொழி ஆற்றலில் மேலே குறிப்பிடப்பட்ட வர்களின் கால் தூசு கூட பெறாத இந்த புரோகித மவ்லவிகள் தங்களை ஆலிம்கள்- மார்க்க அறிஞர்கள் என்று பீற்றிக் கொள்வது தான் வேடிக்கையிலும் வேடிக்கை. இன்றும் கூட அரபி மொழியை தாய் மொழியாகக் கொண்டவர்களும் அரபி மொழி இலக் கண இலக்கியங்களில் மிகமிகத் திறமை வாய்ந்தவர் களும், புலமை மிக்கவர்களும் யூதர்களிலும், கிறிஸ்த வர்களிலும் காணப்படுகிறார்கள். எனவே அரபி மொழி கொண்டு இந்த புரோகித மவ்லவிகள் பெருமை பேசுவது வெறும் தலைக்கனமாகும்.
அரபி மொழியில் பாண்டித்தியமும், புலமையும் பெற்றிருந்த “தாருந் நத்வா’ ஆலிம்களும், அதன் தலைவன் அபுல் ஹிக்கமும், ஜாஹில்களாக, அபூ ஜஹீலாக மக்களுக்கு அடையாளம் கட்டப்பட்ட அதே வேளை, எழுதப் படிக்கத் தெரியாத, தங்கள் பெயரைக் கூட எந்த மொழியிலும் எழுதவோ, தங்கள் பெயர் எழுதப்பட்டதை படிக்கவோ தெரியாத பிலால், கப்பாப்(ரழி-ம்) போன்றவர்கள் பெரும் மேதைகளாக-அறிஞர்களாக ஆலிம்களாக-அல்லா மாக்களாக முஸ்லிம் உலகம் இன்றும் ஏற்றிப் போற்று கின்றது என்பதை இந்தப் புரோகித மவ்லவிகளாலும் மறுக்க முடியாது. என்னே மவ்லவிகளின் அறியாமை?
அரபி மொழியைக் கற்றுக் கொள்வதாலோ இதர மொழிகளைக் கற்றுக் கொள்வதாலோ ஒருவன் குர்ஆன் கூறும் ஆலிமாக ஆகிவிட முடியாது. எந்த மொழியும் எழுதப் படிக்கத் தெரியாத நிலையிலும் அல்குர்ஆனில் அல்லாஹ் கூறியுள்ளவற்றையும், நபி(ஸல்) அவர்களின் நடைமுறைகளையும் பிறர் சொல்ல தங்கள் காதால் கேட்டு தங்கள் உள்ளத்தில் பதித்துக் கொண்டு அதன்படி செயல்படுகிறவர்களே உண்மையான ஆலிம்கள்-உலமாக்கள்-அல்லாமாக் கள் ஆவார்கள். இதையே “”வத்தக்குல்லாஹ வயு அல்லிமுக்குமுல்லாஹ்” -அல்லாஹ்வை அஞ்சி ஆதரவு வைத்து செயல்படுகிறவர்களுக்கு அல்லாஹ் கற்றுக் கொடுக்கிறான் (2:282) என்ற இறைவாக்கு உறுதிப் படுத்துகிறது.
திரித்துக் கூறும் இன்னொரு வசனம்!
இன்னொரு குர்ஆன் வசனத்தைத் திரித்து, ஓதிக்காட்டி மவ்லவி-ஆலிம்களாகிய எங்களுக்கு மார்க்கத்தில் அதிகாரம் உண்டு என வாதிடுவார்கள் இந்தப் புரோகித மவ்லவிகள். அவர்கள் திரித்துக் கூறும் வசனம் வருமாறு:
“”நீங்கள் அறியாதவர்களாக இருந்தால் அறிந்தவர் களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்”; இப்படி 16:43, 21:7 ஆகிய இரண்டு இடங்களில் காணப்படும் குர்ஆன் வசனங்களை திரித்துக் கூறி, “”நாங்கள்தான் மார்க்கம் கற்றவர்கள் -அறிந்தவர்கள்; எனவே எங்களி டம் கேட்டே மார்க்கத்தை அறிந்து கொள்ள வேண்டும்” என வாதிடுவார்கள்.
அந்த இரண்டு இடங்களில் காணப்படும் வசனத்தை அப்படியே எடுத்து எழுதியுள்ளோம். சிந்தனையுடன் பார்வையிடுங்கள்:
(நபியே!) இன்னும் உமக்கு முன்னர் வஹீ கொடுத்து நாம் அவர்களிடம் அனுப்பி வைத்த தூதர்கள் எல்லோரும் ஆடவரே தவிர வேறல்லர்; ஆகவே (அவர்களை நோக்கி) “”நீங்கள் (இதனை) அறிந்து கொள்ளாமல் இருந்தால், (வழிகாட்டி நூலான) திக்ரை உடையவர்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள்” (என்று கூறுவீராக).
அல்குர்ஆன் 16:43, 21:7
இந்தப் புரோகித மவ்லவிகள் மொழி பெயர்ப்பது போல் அறிந்தவர்களிடம்-ஆலிம்களிடம் கேட்டறிந்து கொள்ளுங்கள் என்று அரபி மொழியில் இருப்பதாக இருந்தால் “அஹ்லல் இல்மி’ என்றே இருக்க வேண்டும். அப்படி இல்லை. அதற்கு மாறாக “அஹ்லல் திக்ரீ’ என்றிருப்பதை ஃதிக்ரை உடையவர்கள் என்றே மொழி பெயர்க்க வேண்டும். இந்த இடத்தில் “ஃதிக்ர்’ என்ற பதம் இறைவனால் வஹீ மூலம் அறிவிக்கப் பட்ட செய்திகளையே குறிக் கிறது. அல்குர்ஆனை 3:58 வசனம் “ஃதிக்ர்’ என்றும் கூறுகிறது.
நபிமார்கள் ஆண்களே என்பதை புரோகிதர்கள் சொல்ல முடியுமா?
16:43, 21:7 இரண்டு வசனங்களும் இதுவரை அனுப்பப்பட்ட நபிமார்கள் ஆண்களே என்ற தகவலையே தருகின்றன. இந்தச் செய்தி எந்தப் பெரிய அல்லாமாவின் யூகத்திலோ, கற்பனையிலோ, விளக்கத் திலோ ஒருபோதும் வர முடியாது. இறை அறிவிப்பால் மட்டுமே அறிந்து கொள்ள முடியும்.
இந்த இரண்டு வசனங்களைக் கொண்டு முஸ்லிம்கள் பெறும் படிப்பினை என்னவென்றால், மார்க்க வியத்தில் ஒரு சந்தேகம் எழுந்தால், அது பற்றி அறியாதிருந்தால் அல்குர்ஆனில் நன்கு பரிச்சயமுள்ள ஒருவரிடம், அது விஷயமாக அல்குர்ஆனில் எந்த இடத்தில் கூறப்பட்டுள்ளது என்றே கேட்க வேண்டும். அவரும் அல்குர்ஆனை திறந்து பக்கங்களைப் புரட்டி அது விஷயமாகக் கூறப்பட்டுள்ள வசனத்தை எடுத்துக் கொடுக்க வேண்டும். அத்துடன் அவர் வேலை முடிந்தது. இப்போது தெரியாதிருந்தவர் அந்த வசனத்தை படித்துச் சிந்தித்துத் தெரிந்து கொள்ள வேண்டும்; அல்லது அது வியமாக ஆதாரப்பூர்வமான ஹதீஃத் இருந்தால் அதை எடுத்துக் கொடுக்க வேண்டும்.
ஆக இந்த இரண்டு வசனங்களும், தெரியாத மக்களுக்கு அல்குர்ஆனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொடுப்பதே உண்மை அறிஞர்களின் கடமை என்ப தையே உணர்த்துகிறது. மற்றபடி தங்களின் சொந்த யூகங்களையும், விளக்கங்களையும், கற்பனை களையும் மார்க்கமாக எடுத்துச் சொல்வது பெரும் வழிகேடு; மக்களை நரகில் கொண்டு சேர்க்கும் செயல் என்பதை விளங்கி அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்களே உண்மையான அறிஞர்கள் ஆவார்கள். இந்த அறிஞர்கள் தங்களின் பிழைப்புக்காக மார்க்கத்தை விற்க மாட்டார்கள். முன்னோர், முதாதையர்களின் பெயரால், பிக்ஹின் பெயரால் மக்களை வழிகெடுக்க மாட்டார்கள்.
(பார்க்க : 2:41,79, 3:78,187, 33:36,66-68)
புரோகிதர்கள் குர்ஆன் கூறும் ஆலிம்கள் அல்லர்!
மேலும் இன்றைய புரோகித மவ்லவிகளிடம் முன் னோர்கள் மூதாதையர்களின் கற்பனை கட்டுக் கதை களான “பிக்ஹ்’ ஞானம் இருக்கிறதே அல்லாமல், குர்ஆன், ஹதீஃத் ஞானம் அவர்களிடம் இல்லவே இல்லை. எனவே அவர்கள் குர்ஆன் கூறும் ஆலிம் களாக ஒருபோதும் ஆக முடியாது.
ஆக அல்குர்ஆனின் செயல்பாட்டுக்குரிய குறிப் பான ஒரே பொருளைத் தரும் “முஹ்க்கமாத்’ வசனங் கள் அவற்றை இறக்கியருளிய அந்த ஏகன் இறைவ னாலேயே தெள்ளத் தெளிவாக விளக்கப்பட்டு விட் டன. அவற்றிற்கு நபி(ஸல்) அவர்களும் அல்லாஹ்வின் கட்ட ளைப்படி (16:44,64) செயல் வடிவில் விளக்கம் தந்து விட்டார்கள். இதற்குப் பிறகு எந்த அல்லாமா வின் மேல் விளக்கமும் தேவையே இல்லை என்பது நிரூபணமாகி விட்டது. அப்படி மேல் விளக்கம் கொடுக்கும் அதிகாரம் பெற்றவர்கள் மனிதர்களில் எந்த மவ்லவிக்கும்-ஆலிமுக்கும்-அல்லாமாவுக்கும் இல்லவே இல்லை என்பதும் நிரூபணமாகி விட்டது.
விசாரணை அல்லாஹ்விடமே!
ஒரு முஸ்லிம் தூய்மையான எண்ணத்துடனும் மறுமை பயத்துடனும் அல்குர்ஆனிலுள்ள ஒரு வசனத் தைச் சுய சிந்தனையுடனும், தன்னம்பிக்கையுடனும் படித்து விளங்குகிறார். தான் சுயமாக விளங்கியபடி செயல்படுகிறார் என்று வைத்துக் கொள்வோம். நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் தான் அவர் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறார்.
நாளை மறுமையில் அல்லாஹ் அவரிடம் இதை ஏன் இப்படிச் செய்தாய்? என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம். உடனே அவர் “யா அல்லாஹ்! நான் உன்மீது பூரண நம்பிக்கை கொண்டு நீ அருளிய அல்குர்ஆன் நீ வாக்களித்துள்ளபடி எனக்கு தெளிவாக விளங்கும் என்ற உறுதியான நம்பிக்கையில்-உனது இறதி வழகாட்டி நூலை-மொழி பெயர்ப்பை தன்னம் பிக்கையுடனும், சுய சிந்தனையுடனும் படித்துப் பார்த்து நான் விளங்கியபடி செயல்பட்டேன் என்று பதில் அளிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அது வியமாக அடுத்த கேள்விக்கு அங்கு இடமுண்டா? நிச்சயமாக இல்லவே இல்லை.
அவர் அதில் சரியாகச் செய்திருந்தால் இரண்டு கூலியும், தவறாகச் செய்திருந்தால் அவரது முயற்சிக்கு ஒரு கூலியும் நிச்சயம் கிடைக்கும். அதற்கு மாறாக இந்தப் புரோகித மவ்லவிகளின் சுயநலப் பேச்சில் நம்பிக்கை வைத்து இறைவனின் இறுதி வழிகாட்டி நூல் -அல்குர்ஆன் தனக்கு விளங்காது என்ற அவ நம்பிக்கையில், இந்தப் புரோகித மவ்லவிகளின் விளக்கப்படி செயல்பட்டார் என்று வைத்துக் கொள்வோம்.
நாளை மறுமையில் அல்லாஹ்வின் தர்பாரில் விசாரணையின்போது “”யா அல்லாஹ்! நீ அல்குர் ஆனை அரபியில் இறக்கி விட்டாய்! எனக்கு அரபி மொழி தெரியாது. எனவே மொழி பெயர்ப்புகளைப் பார்த்து விளங்கும் தைரியம் எனக்கில்லை. எனவே நான் மார்க்கம் நன்கு தெரிந்தவர் என்று பெரிதும நம்பிக்கை வைத்திருந்த இந்த மவ்லவியை நம்பி அவரது விளக்கப்படிச் செயல்பட்டேன்” என்று கூறுகிறார் என்று வைத்துக் கொள்வோம்.
உடனடியாக அடுத்த கேள்வி என்ன வரும்? “”அந்த மவ்லவியை நம்பிப் பின்பற்றும்படி அல்குர்ஆனில்-மொழி பெயர்ப்பில் நான் எங்கே சொல்லி இருக்கி றேன் காட்டு” என்ற கேள்வி வருமா? இல்லையா? அப்போது இந்த நபர் திரு திரு என விழிக்கும் நிலை ஏற்படுமா? இல்லையா? இன்னும் எனக்கும் உனக்கும் இடையில் எந்தத் தரகர்களையும் வைத்துக் கொள்ளக் கூடாது, எவரையும் பாதுகாவலராக எடுத்துப் பின் பற்றக்கூடாது. என் புறத்திலிருந்து இறக்கப்பட்டதை மட்டுமே பின்பற்ற வேண்டும் என்று அல்குர்ஆனில் 7:3ல் நான் கட்டளையிட்டிருக்கிறேனா? இல்லையா? மொழி பெயர்ப்பைப் பார்த்து நீ அறிந்து கொள்ள வில்லையா? என் நேரடிக் கட்டளையை ஏன் புறக் கணித்தாய்? என்று அல்லாஹ் கேட்பான். இந்த மவ்லவிகளுக்குப் பின்னால் சென்றவர்கள் என்ன பதில் கூற முடியும்? திரு திருவென பயத்தால் விழிப்பது தவிர வேறு வழி காணமாட்டார்கள்.
மவ்லவிகள் பின்னால் செல்பவர்களின் நாளைய நிலை!
அல்லாஹ்வின் கட்டளைகளைப் புறக்கணித்து மவ்லவிகள் பின்னால் சென்றதால் நரகில் தூக்கி எறியப் படுவார்கள். நரக வேதனை தாங்க இயலாது கதறுவார் கள். அதையும் அல்லாஹ் அல்குர்ஆன் 3:66,67,68ல் விவரிக்கிறான் கேளுங்கள்!
“”நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப் படும் அந்நாளில், “ஆ கை சேதமே! அல்லாஹ்வுக்கு நாங்கள் வழிபட்டிருக்க வேண்டும்; இத்தூதருக்கும் நாங்கள் வழிப்பட்டிருக்க வேண்டுமே” என்று கதறு வார்கள்.
“”எங்கள் இறைவா! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியவர்களுக்கும் வழிப் பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்” என்றும் கதறுவார்கள்.
“”எங்கள் இறைவா! அவர்களுக்கு இரு மடங்கு வேதனையைத் தருவாயாக! அவர்களைப் பெரும் சாபத்தைக் கொண்டு சபிப்பாயாக”.
(அல்குர்ஆன்: 33:66,67,68)
33:67 வசனத்தில் அரபி பதம் “”சாதத்தனா, குப்ரா அனா” என்று வந்துள்ளது. ஒரே பொருள் உள்ள இரண் டாவது பொருளுக்கு இடமே இல்லாத “முஹ்க்கமாத்’ வசனங்களுக்கு இரண்டாவது பொருள் கொடுத்து முஸ்லிம்களை வழிகெடுக்கும் ஆலிம்கள், மவ்லவிகள், அல்லாமாக்கள் அனைவரும் இந்த இரண்டு பதத்திற் குள்ளும் அடங்கி விடுவார்கள். முன் சென்ற நல்லவர் களின் பெயரால் பொய்யை இட்டுக் கட்டியவர்களும், வழிகேட்டில் சென்ற முன்னோர்கள் மூதாதையர்கள் பெயரால் பக்தி வெறியூட்டி வழிகெடுத்த மவ்லவி புரோகிதர்களும் இதில் அடங்குவர்.
இந்த 33:66,67,68 மூன்று வசனங்களும் அல்லாஹ் வின் வழிகாட்டலான அல்குர்ஆனையும், அந்த குர் ஆனுக்கு செயல்முறை விளக்கம் கொடுத்த நபி(ஸல்) அவர்களின் செயல்பாடுகளையும் தவிர மூன்றாவதாக பின்பற்றுவதற்கு, எடுத்து நடப்பதற்கு யாருடைய விளக்கத்திற்கும் அணுவளவும் அனுமதியே இல்லை என்பதைக் குன்றிலிட்ட தீபம் போல், “உள்ளங்கை நெல்லிக்கனி’ போல் விளக்குகின்றன. இந்த நிலையில் இந்த புரோகித மவ்லவிகளை நம்பி இவர்கள் பின் னால் செல்பவர்கள் நாளை மறுமையில் வெற்றி பெற முடியுமா? என்பதை நிதானமாக சிந்தித்து விளங்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
மேலும் பார்க்க : 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45)
ஹதீஃதில் மறைத்தல்!
ஆக இப்படி அல்குர்ஆனின் எந்த வசனமும் இவர்களின் புரோகிதத் தொழிலுக்கு ஆதரவு தராத நிலையில், ஒரு ஆதாரமற்ற ஹதீஃதின் பாதியைச் சொல்லி மார்க்கத்தை மக்களுக்குப் போதிக்கும் அதி காரம் பெற்றவர்கள் நாங்கள்தான் என்று சொல்லி இந்தப் புரோகித மவ்லவிகள் மக்களை ஏமாற்றுவார் கள். அந்த ஆதாரமற்ற ஹதீஃதின் முதல் பகுதி வருமாறு :
“”ஆலிம்-உலமாக்கள் நபிமார்களின் வாரிசுகளா வர்” என்பதை எடுத்துக்கூறி “”ஆகவே நபிமார்கள் செய்த பிரச்சார பணியை நாங்களே செய்யும் தகுதி பெற்ற வர்கள்” என வாதிடுவார்கள்.
இங்கும் அவர்கள் பொய்யே உரைக்கின்றனர். நபி மார்கள் மார்க்கப்பணியை கூலிக்காகச் செய்ய வில்லை. கூலியை அல்லாஹ்விடம் எதிர்பார்த்தே செய்தனர். அத்தனை நபிமார்களும் நாங்கள் கூலிக் காக மார்க்கப் பிரச்சாரம் செய்யவில்லை. எங்களுக் குரிய கூலி அல்லாஹ்விடமே இருக்கிறது என்று பகிரங் கமாகக் கூறியது அல்குர்ஆனில் பல இடங்களில் காணப்படுகிறது. (பார்க்க : அல்குர்ஆன் : 6:90, 10:72, 11:29,51, 25:57, 26:109,127,164,180, 34:47, 38:86, 42:12) அல்குர்ஆன் 36:21 வசனம் கூலி வாங்காமல் மார்க்கப் பிரச்சாரம் செய்கிறவர்கள் மட்டுமே, நேர் வழியில் இருப்பதாக அப்பட்டமாக அறிவிக்கிறது.
இன்று சமுதாயத்தில் காணப்படும் அத்தனை வழி கேட்டுக்கும் மூலகாரணம் இந்தப் புரோகித மவ்லவி கள் மார்க்கப் பிரச்சாரத்தை, பணிகளை கூலிக்காக செய்வதேயாகும். அவர்கள் பெரிய ஆதாரமாக எடுத் துத்தரும் இந்த ஹதீஃதின் இரண்டாவது பகுதி “”நபி மார்கள் தீனாருக்கோ, திர்கத்திற்கோ வாரிசாக மாட் டார்கள்” என நெற்றிப் பொட்டில் அடிப்பது போல் கடுமையாக எச்சரித்திருந்தும், இந்த குர்ஆன் வசனங் களையும், ஹதீஃத்களையும் புறக்கணித்துவிட்டு கூலிக்கு மார்க்கப் பிரச்சாரம் செய்கிற வர்கள் எந்த அளவு கல் நெஞ்சம் படைத்தவர்களாக இருக்க முடி யும் என்பதை சுயமாகச் சிந்திப்பவர்கள் விளங்க முடி யும். (பார்க்க : 2:74, 5:13, 6:43,125, 57:16)
சுய சிந்தனையற்ற முஸ்லிம்களை இவர்கள் எந்த அளவு மூளைச்சலவை செய்து வைத்திருக்கிறார்கள் என்றால், மார்க்கப் பிரச்சாரப் பணிக்கு கூலி கொடுப்பது கூடாது-ஹராம் என்று குர்ஆன் கூறுவதைக் கூறினால், “”அப்படியானால் அவர்களும், அவர்களது மனைவி மக்களும் மண்ணையா திண்பார்கள்” என்று குருட்டுக் கேள்வி கேட்கும் நிலையிலேயே இவர்கள் இருக்கிறார்கள். மார்க்கப் பணியை கூலி வாங்காமல் அதற்குரிய கூலியை படைத்த அல்லாஹ்விடம் எதிர் பார்த்து மார்க்கப் பணி புரிந்த நபிமார்களும், அவர் களது மனைவி மக்களும் மண்ணையா தின்று உயிர் வாழ்ந்தார்கள் என இந்த மரமண்டைகள் சிந்திப்பதில்லை. அந்த அளவு முஸ்லிம் பொது மக்களை இந்தப் புரோகித மவ்லவிகள் மூளைச் சலவைச் செய்து அவர்களை சிந்தனையற்ற மடையர்களாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். இதுவே அவர்களின் பிளஸ் பாயிண்ட்.
நபிமார்கள் மட்டுமல்ல, அவர்களைப் பின்பற்றிய லட்சக்கணக்கான நபிதோழர்கள் அனைவரும் மார்க்கப் பணியை கூலி வாங்காமல் தானே செய்தார்கள். அவர்களும் அவர்களது மனைவி மக்களும் மண்ணையா தின்று உயிர் வாழ்ந்தார்கள் என்று இவர்கள் சிந்திப்பதில்லை. அவர்களைத் தொடர்ந்து பல லட்சக் கணக்கான தாபியீன்கள், தபவு தாபியீன்கள் மார்க்கப் பணியை கூலி வாங்காமல் அல்லாஹ்விடம் மட்டுமே கூலியை எதிர்பார்த்துச் செய்தார்கள். அவர்களும் அவர்களது மனைவி மக்களும் மண்ணையா தின்று உயிர் வாழ்ந்தார்கள் என்று இந்த மரமண்டைகள் சிந்திப்பதில்லை ஏன்? மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களான அபூ ஹனீஃபா, மாலிக், ஷாஃபியீ, ஹன்பல்(ரஹ்-ம்) போன்ற மேதைகள் எல்லாம் மார்க் கப் பணியை கூலி வாங்காமல், அதற்குரிய கூலியை நாளை மறுமையில், அல்லாஹ்விடம் எதிர்பார்த்துத் தானே செய்தார்கள். அவர்களும் அவர்களது மனைவி மக்களும் மண்ணையா தின்று ஜீவித்தார்கள் என்று இன்றைய முஸ்லிம்கள் சிந்திப்பதில்லை. அந்த அளவு இந்தப் புரோகித மவ்லவிகளிடம் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். நாளை மறுமையில் அல்லாஹ் 33:66,67,68ல் கூறுவது போல் நரகில் கிடந்து வேகும் போதுதான் புத்தி வந்து பிரலாபிக்கப் போகிறார்கள்.
மலம் வாரி ஆகுமான வழியில் உழைத்துச் சாப்பிடும் தாழ்த்தப்பட்டவனாக முஸ்லிம் அல்லாதவர்களால் இழித்துப் பேசப்படும் மனிதர்களைவிட மார்க்கத்தை மதமாக்கி அதைப் பிழைப்பாக்கி ஆகாத வழியில் (ஹராம்) வயிறு வளர்க்கும் இந்தப் புரோகிதர்கள் உயர்ந்தவர்கள் அல்லர். ஆகக் கேடுகெட்டவர்களே!
புரோகிதர்கள் இமாம்களை பின்பற்றிவில்லை!
இந்தப் புரோகித மவ்லவிகள் மரியாதைக்குரிய அந்த நான்கு இமாம்களைப் பின்பற்றி அவர்கள் வகுத்தளித்த சட்டப்படி நடப்பதாகக் கூறுவது சுத்தப் பித்த லாட்டமாகும். கிறிஸ்துவ பாதிரிமார்கள் யேசு-ஈஸா (அலை) அவர்களின் போதனைப்படி நடப்பதாகக் கதை அளப்பதற்கும் இவர்களின் கதையளப்பிற்கும் வேறுபாடு சிறிதும் இல்லை.
உண்மையிலே இந்தப் புரோகித மவ்லவிகள் அந்த மரியாதைக்குரிய இமாம்களைப் பின்பற்றுவதாக இருந்தால் அவர்கள் கூலி வாங்காமல் மார்க்கப் பணி புரிந்தது போல் இவர்களும் புரிய வேண்டுமே! அவர்கள் சொந்தமாக தொழில் வியாபாரம் செய்து உழைத்துப் பெற்றுத் தாங்களும், தங்கள் குடும்பமும் செலவிட்டது போக எஞ்சியதை தாராளமாக மற்றவர்களுக்குக் கொடுத்து உதவியது போல், இவர்களும் ஹலாலான முறையில் உழைத்துப் பொருள் ஈட்ட முன்வர வேண்டுமே. மற்றவர்களுக்குக் கொடுக்க முன்வரவேண்டும். கையேந்தக் கூடாது.
அவர்கள் அதிகமான நேரத்தை மார்க்கத்திற்காகச் செலவிட்டு சட்ட திட்டங்களை உருவாக்கினார்கள் என்று இவர்களே சர்ட்டிபிகேட் கொடுக்கிறார்கள். அப்படி இருந்தும் அவர்கள் உழைத்து உலகைத் தேடி னார்கள். அப்படியானால் அவர்களை விட மிகமிகக் குறைந்த நேரத்தையே மார்க்கப் பணிக்காக ஒதுக்கி யுள்ள இவர்களால் ஏன் உழைத்து உலகைத் தேட முடியவில்லை? தொண்டை தொழிலாக்கி மார்க்கத் தைப் பிழைப்பாக்கி வயிறு வளர்ப்பதன் மூலம் முஸ்லிம்களை வழிகேட்டில் ஏன் இட்டுச் செல்கிறார்கள்?
இமாம்களின் போதனை!
அந்த இமாம்கள் தங்களை தக்லீது செய்யக் கூடாது. குர்ஆன், ஹதீஃதையே பின்பற்ற வேண்டும் என்று போதித்துள்ளார்கள். அதற்கு மாறாக அவர் களைத் தக்லீது செய்வதாகச் சொல்லி அவர்கள் பெயரால் நான்கு மத்ஹபுகளை அமைத்துள்ளார்கள். அவர்கள் சொல்லாததை எல்லாம் அவர்கள் சொன்ன தாகப் பொய்யாக, இட்டுக்கட்டி அவர்கள் பெயரால் “பிக்ஹ்’ சட்டம் அமைத்துள்ளார்கள். அவர்கள் சொன் னதாக இவர்கள் சொல்லும் எந்தச் சட்டத்திற்கும் ஆதாரப்பூர்வமான அறிவிப்புத் தொடரை இவர்களால் காட்ட முடியாது. காரணம் அந்த மரியாதைக் குரிய நான்கு இமாம்களும் மார்க்கத்தைப் பிழைப் பாக்கவில்லை. அதற்கு மாறாக மார்க்கத்தைப் பிழைப் பாக்கித் தொண்டை தொழிலாக்கி தங்களின் தொப்பையை நிறைத்துக் கொள்ள வழிகண்ட புரோகிதர்களே அந்த இமாம்கள் சொல்லாததை எல்லாம் அவர்கள் சொன்னதாக இட்டுக் கட்டினார்கள்.
குர்ஆன், ஹதீஃதைக் கொண்டு ஏமாற்ற வழி இல்லாததால் இந்த தந்திரம்!
அல்குர்ஆன் உடனுக்குடன் பதிந்து பாதுகாக்கப் பட்டு விட்டதால், முன்னைய மதப் புரோகிதர்களைப் போல் அல்குர்ஆனில் இவர்களின் கைவரிசையைக் காட்ட முடியவில்லை. நபி(ஸல்) அவர்களின் பெய ரால் பொய்யான ஹதீஃத்களை இட்டுக்கட்டி மார்க் கத்தை மதமாக்கிப் பிழைப்பு நடத்த முற்பட்டார்கள். ஹிஜ்ரி 400க்குள் அப்படிப்பட்ட ஹதீஃத்களும் அறிவிப்பாளர் வரிசையுடன் தரம் பிரிக்கப்பட்டு ஆதாரப்பூர்வமான ஹதீஃத்கள் நிலை நாட்டப்பட்டு விட்டன; எனவே நபி(ஸல்) அவர்களின் பெயராலும் பொய் சொல்லி மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் வாசலும் அடைபட்டு விட்டது. நான்கு கலீஃபாக்கள் பெயராலோ, பிரபல நபிதோழர்கள் பெயராலோ மத் ஹபுகள் அமைத்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கவும் வழி இல்லாமல் போய் விட்டது. காரணம் ஹதீஃத் கலையில் “அஸ்மாவுர் ரிஜால்’ என்ற அறிவிப்பாளர் வரிசையில் நான்கு கலீஃபாக்கள் மற்றும் பிரபல நபி தோழர்களும் கூறிய ஆதாரப்பூர்வமான செய்திகளும் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்று விட்டதால், அவர்களின் பெயராலும் மத்ஹபுகள் அமைத்து மக்களை மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி இல்லாமல் போய் விட்டது.
இறுதியாக இந்தப் புரோகிதர்கள் மக்களை ஏமாற்றக் கண்டு பிடித்த வழியே அந்த மரியாதைக் குரிய நான்கு இமாம்களின் பெயரால் மத்ஹபுகள் அமைத்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் திட்ட மாகும். எனவே இந்தப் புரோகித மவ்லவிகள் அந்த மரியாதைக்குரிய நான்கு இமாம்களைப் பின்பற்ற வில்லை. அந்த இமாம்களின் பெயரால் மத்ஹபுகளை அமைத்த இவர்களின் மூதாதையர்களான புரோகிதர் களைப் பின்பற்றுகிறார்கள் என்பதே உண்மையாகும்.
ஆக புரோகித முல்லாக்களுக்கு முஸ்லிம் மக்களி டையே அதிகாரம் செலுத்த அனுமதியோ, தெளிந்த குர்ஆன், ஹதீஃத் ஞானமோ இல்லை. முன்னோர்கள், மூதாதையர்களின் கட்டுக் கதைகளைக் கொண்டு மக்களை ஏமாற்றி வயிறு வளர்ப்பதோடு, ஷைத்தானின் நேரடி ஏஜண்டாகச் செயல்பட்டு, மக்களின் விசுவாசத்திலும் பொருளிலும் பெரும் நஷ்டம் விளைவித்து அவர்களை நரகில் தள்ளுபவர்களே இப்புரோகித முல்லாக்களான மவ்லவிகள் என்பதே உண்மையாகும்.
இதற்கு மேலும் அற்புதமாக விளக்கினாலும் இந்த மவ்லவிகள், வீண் பெருமை காரணமாக ஒரு போதும் நேர்வழிக்கு வரமாட்டார்கள். இதை நாம் சொல்லவில்லை. அல்லாஹ் அல்குர்ஆன் 7:146 இறைவாக்கில் திட்டமாகத் தெளிவாக, நேரடியாகக் கூறுகிறான் படித்துப் பார்க்கவும். விளக்கம் பெறவும்