M.T.M முஜீபுதீன், இலங்கை
பிப்ரவரி 2015 தொடர்ச்சி……
அல்லாஹ்வின் படைப்பான மலக்குகள் (வானவர்கள்) மீது நம்பிக்கை :
வானங்கள், பூமி, மற்றும் மனிதன், அறிந்த, அறிந்துகொள்ள முடியாத சகலவற்றையும் படைத்துப் பரிபாலிப்பவன் ஏக இறைவன் ஆவான். இவை பற்றிய பல செய்திகளை இறைநெறி நூல்கள் மூலமாக மனிதன் அறிந்தே வைத்துள்ளான். எனினும் முன்னைய இறைநெறி நூல்களில் மனிதனின் தப்பும் தவறுமான கருத்துகள் நுழைந்து வழக்கிழந்த வேதங்களாக்கப்பட்டதால் அல்லாஹ் முழுமை பெற்ற இறுதி இறை நெறியாக அல்குர்ஆனை இறக்கி வைத்ததாக நாம் முன்னமே அவதானித்தோம். இன்றைக்கு இரண்டாயிரம் முதல் நாலாயிரம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் கால மக்களின் வாழ்க்கை பற்றிய செய்திகளை நாம் அக்காலத்தில் அமைக்கப்பட்டக் கட்டிடக் கலை, கவிதைகள், சிதைந்த சித்திரம், சிலைகள், நூல்கள், கற்பனைக் கதைகள், சுவடுகள் போன்றவற்றின் மூலம் பெறப்பட்ட சரியான அல்லது தப்பும் தவறுமான தகவல்களிலிருந்து வரலாறுகளை அறிந்துள்ளோம். பல கவிதைகள், கதைகள், நூல்கள் மூலம் அறிந்த, யூகித்த, கற்பனை செய்த மிகைப்படுத்தப்பட்ட செய்திகளாக அவை அமைந்திருப்பதைக் காண லாம். உதாரணமாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலுள்ள ஆதம் அணை (இராமர் அணை) என அழைக்கப்படும் அணை இராமர் என்ற அரசனால் அமைக்கப்பட்டது என்பது சிலரின் நம்பிக்கை. ஆனால் விஞ்ஞானிகள் இது மனிதனால் அமைக்கப்பட்ட அணையல்ல என நிரூபிக்கின்றனர். இதனை இறை நம்பிக்கையற்ற விஞ்ஞானிகள் இயற்கையின் பரிசு என்கின்றனர். ஆனால் இறை நம்பிக்கையுள்ள மக்கள் தம்மிடம் வைத்துள்ள இறைநெறி நூல்கள் அல்லது சிதை வடைந்த வேதங்களின் அடிப்படையில் இறைவனின் படைப்பு என்கின்றனர். அதாவது மனித முயற்சியினால் அமைக்கப்படாத வானங்கள், பூமி, கடல், ஆறுகள், மலை, குடா, போன்ற எல்லா இயற் கைப்படைப்புகளும் அரபியில் அல்லாஹ்வினால் அல்லது தமிழில் ஏக இறைவனால் படைக்கப்பட்டவை என நம்பிக்கை கொள்கின்றனர்.
அதேபோல் இறுதி இறைநெறி நூலான அல்குர் ஆன் மனித கைபடாத, மனித கருத்துகள் உள் நுழையாது இருப்பதால் அல்குர்ஆனை அல்லாஹ்வின் அருட்கொடை எனக் கூறுகிறோம். ஆனால் பல தெய்வங்களை வணங்கி வழிபடுபவர்கள் கண்டதையெல்லாம் இறைவனாக நம்புகின்றனர். இதனால் அவர்கள் இராமர் கட்டிய அணை எனக் குறிப்பிடுகின்றனர். இது சாத்தியமாகுமா என முஸ்லிம்களும், விஞ்ஞானிகளும் கேட்கின்றனர். அதுபோல் மலக்குகள், அல்லது வானவர்கள் என்ற படைப்பினத்தை அல்லாஹ் படைத்திருக்கிறான் என அல் குர்ஆன் மூலமும், முன்னைய சிதைவடைந்த வேதங்கள் மூலமும் அறிய முடிகின்றது. ஆனால் இந்த உண்மை விஞ்ஞானிகளின் ஆய்வுக்கு இன்னும் எட்டவில்லை.
அத்துடன் சிதைவடைந்த வேதங்களை வைத்துள்ளோர் வானவர்கள் இருப்பதாக நம்புகின்றனர். ஆனால் அவர்களின் வானவர்கள் பற்றிய நம்பிக்கையில் பல தவறுகள் காணப்படுகின்றன. அவர்களில் சிலர் வானவர்களை அல்லாஹ்வின் மனைவியாகக் கற்பனை செய்துள்ளனர். ஆதிவேதச் சிதைவுகளில், அவர்கள் மனிதர்களுடன் தவறாக வாழ்க்கை நடத்தி விடிவெள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கிறார்கள் எனக் கற்பனைக் கதை அமைத்து நம்புகின்றனர். சிலர் அவர்களை மனிதக் குரங்குகளாகவும் சிலையமைத்துள்ளனர். ஆகவே இறுதி இறைநெறி நூல் மூலமாக அல்லாஹ் மலக்குகள் என்றால் யார் என விளக்கி இருக்கின்றான். அவதானியுங்கள்.
அல்லாஹ் ஆதம்(அலை) அவர்களை மண்ணில் இருந்து படைத்தது போல், ஜின் இனத்தை நெருப்பின் கொழுந்திலிருந்து படைத்தது போல் (அல்குர் ஆன் : 55:14-15) அரபு மொழியில் மலக்குகள் என அழைக்கப்படும் வானவர்களை அல்லாஹ், ஒளியினால் படைத்ததாகக் குறிப்பிடுகின்றான். வானவர்கள் ஆண்,பெண் என்ற பாகுபாடு அற்றவர்கள், இறைவனின் உத்தரவுகளைச் செய்து முடிப்பதும், இறைவனை வணங்குவதும், துதிப்பதுமே இவர்களின் பணியாகும். இவர்களுக்கு ஊண், உறக்கம், உறவு, திருமணம், ஆசாபாசம், சந்ததி போன்றன கிடையாது. அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து செயற்படுவதே வானவர்களின் செயற்பாடாகும். இவர்களைப் பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடு கின்றது. அவதானியுங்கள்.
முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத் தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும். அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (வானவர்கள் காவல்) இருக்கின்றனர். அல்லாஹ் அவர்களை ஏவிய எதிலும் அவர்கள் மாறு செய்யமாட்டார்கள். தாங்கள் ஏவப்பட்ட படியே அவர்கள் செய்து வருவார்கள். (அல்குர்ஆன் : 66:6)
வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவை யும், ஜீவராசிகளும், மலக்குகளும் அல்லாஹ்வுக்கே ஸுஜூது செய்து (சிரம் பணிந்து) வணங்குகின்றன. அவர்கள் (ஆணவங்கொண்டு) பெருமையடைவ தில்லை. அவர்கள் தங்களுக்கு மேலாக இருக்கும் (சர்வ வல்லமையுடைய) தங்கள் இறைவனைப் பயப்படுகின்றார்கள். இன்னும் தாங்கள் ஏவப்பட்டதை (அப்படியே) செய்கிறார்கள். (அல்குர்ஆன் : 16:49,50)
அல்லாஹ் அல்குர்ஆனில் ஜிப்ரீல் என்ற வானவர் பற்றி பின்வருமாறு விளக்குகிறான் அவதானியுங்கள்.
நிச்சயமாக (குர்ஆன்) மிகவும் கண்ணியமிக்க ஒரு தூதுவர் (ஜிப்ரீல் மூலம் வந்த) சொல்லாகும். (அவர்) சக்தி மிக்கவர், அர்ஷிக்குடையவனிடம் பெரும் பதவியுடையவர், (வானவர்களின்) தலைவர் அன்றியும் நம்பிக்கைக்குரியவர்.
(அல்குர்ஆன் : 82:19-21)
இதன்படி வானவர்களின் தலைவர் ஜிப்ரீல் என்ற வானவராவார். இவர் இறைவனிடமிருந்து இறைத்தூதர்களுக்கு செய்திகளைக் கொண்டு வந்தவானவர் ஆவார். இவரைப் போல் இன்னும் மீக்காயீல், மலக்குள் மவ்த் சார்ந்தவானவர்களும், இன்னும் பல தொழிற்பாடுகள் சார்ந்த பல வகை சார்ந்த வானவர்களையும் அல்லாஹ் படைத்துள் ளான். இவர்களின் உண்மையான எண்ணிக்கை யாது என அவர்களைப் படைத்த அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும். இவர்கள் அல்லாஹ்வின் நாட்டப்படியும், கட்டளைப்படியும் இயங்கக் கூடிய சக்தியுடையவர்கள், அவர்கள் மனிதர்களைப் போன்றவர்கள் அல்லர். ஆனால், அவர்கள் நாய், பன்றியின் உருவம் தவிர்த்த பல வடிவங்களைப் பெற்று அல்லாஹ்வின் கட்டளைக்கமைய பூமிக்கு இறங்கி வரக்கூடியவர்கள். அன்று அரேபியாவில் வாழ்ந்த யூத, கிறித்தவ வேதக்காரர்களும் வானவர்கள் பற்றி தமது வேதத் தொகுப்புகளிலிருந்து அறிந்திருந்தார்கள். இதனால் அரேபியாவில் வாழ்ந்த மக்கள் வானவர்கள் பற்றிய பல கேள்விகளை நபி(ஸல்) அவர்களிடம் கேட்டனர். அல்குர்ஆன் மூலம் அல்லாஹ் வானவர்களின் செய்திகளை விபரிப்பதை அவதானியுங்கள்.
அவன் மலக்குகளிடம் வஹீ (இறைச் செய்தி) யைக் கொடுத்துத் தான் நாடியவர் மீது (அனுப்பி வைத்து) நிச்சயமாக (அடிபணிவதற்குரிய) நாயன், என்னைத் தவிர வேறு யாருமில்லை. ஆகையால் நீங்கள் எனக்கே அஞ்சுங்கள் என (மக்களுக்கு) எச்சரிக்கை செய்யுங்கள் என்ற கட்டளையுடன் (மலக்குகளை) இறக்கி வைத்தான். (அல்குர்ஆன் : 16:2)
அல்லாஹ் ஒவ்வொரு இறைத் தூதரிடமும் மலக்குகளை இறைச் செய்தியுடன் இறக்கி வைத்த தாக கூறுகின்றான். அத்துடன் அல்லாஹ் இறைச் செய்தி கொண்டு வரும் வானவர்களின் அமைப்பை பின்வருமாறு விபரிக்கின்றான். அவதானியுங்கள்.
அல்ஹம்துலில்லாஹ், எல்லாப் புகழும் அல் லாஹ்வுக்கே; வானங்களையும், பூமியையும் படைத்தவன் இரண்டிரண்டும், மும்மூன்றும், நன்னான்கும் இறக்கை உள்ளவர்களாக மலக்குகளைத் தன் தூதை எடுத்துச் செல்வோராக ஆக்கினான். தான் நாடியதைப் படைப்பிலே மிகுதப்படுத்துவான். நிச்சய மாக அல்லாஹ் அனைத்துப் பொருட்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் : 35:1)
அன்று மதகுருமார்களில் சிலர் தமது வயிற்றுப் பிழைப்புக்காக, அல்லாஹ் வானவர்களை தமது மனைவிகளாக ஆக்கிக் கொண்டதாக அவதூறுகளைக் கூறி வந்தனர். அவர்களுக்கு அல்லாஹ் பின் வருமாறு பதில் கொடுக்கிறான்.
(முஷ்ரிக்குகளே!) உங்கள் இறைவன் உங்களுக்கு ஆண் மக்களை கொடுத்துவிட்டு தனக்கு மட்டும் மலக்குகளிலிருந்து பெண் மக்களை எடுத்துக் கொண்டானா? நிச்சயமாக நீங்கள் மிகப் பெரும் பொய்க் கூற்றையே கூறுகிறீர்கள். (அல்குர்ஆன் 17:40)
அன்று அறியாமையில் வாழ்ந்த மக்கள், பூமியில் மனிதர்களாக வாழ்ந்த இறைத் தூதர்களையும், வானவர்களையும் தாம் வணங்கும் கடவுள்களாக ஏற்படுத்தி வணங்கினர். இவ்வாறு அல்லாஹ்வுக்கு இணை, துணைகளை ஏற்படுத்தும் செயற்பாடுகள் பெரும் பாவமான செயற்பாடுகள் என அல்குர்ஆன் மூலம் நபி(ஸல்) அவர்கள் போதித்தார்கள்.
ஒரு மனிதருக்கு அல்லாஹ் இறைநெறி நூலை (வேதத்தை)யும், ஞானத்தையும், நபி பட்டத்தையும் கொடுக்க, பின்னர் அவர் அல்லாஹ்வை விட்டு எனக்கு அடியார்களாகி விடுங்கள் என்று (பிற) மனிதர்களிடம் கூற இயலாது. ஆனால் அவர் (பிற மனிதர்களிடம்) நீங்கள் வேதத்தைக் கற்றுக் கொடுத்துக் கொண்டும், அ(வ்வேதத்)தை நீங்கள் ஓதிக் கொண்டும் இருப்பதனால் ரப்பானீ (இறைவனை வணங்கி அவனையே சார்ந்திருப்போர்)களாகி விடுங்கள் (என்று தான் சொல்லுவார்)
மேலும் அவர் மலக்குகளையும், நபிமார்களையும் (வணக்கத்திற்குரிய இரட்சகர்களாக) ரப்புகளாக எடுத்துக் கொள்ளுங்கள் என்றும் உங்களுக்குக் கட்டளையிடமாட்டார். நீங்கள் முஸ்லிம் களாக (அல்லாஹ்விடமே முற்றிலும் சரணடைந்த வர்கள்) ஆகிவிட்ட பின்னர் (நீங்கள் அவனை) நிராகரிப்போராகி விடுங்கள் என்று அவர் உங்களுக்குக் கட்டளையிடுவாரா? (அல்குர்ஆன் : 3:79,80)
இவ்வாறு அல்லாஹ்வை விடுத்து வானவர்களை வணங்குவது பெரும் பாவமாகும். அத்துடன் அல்லாஹ் மறுமையில் வானவர்களிடம் இவர்கள் தானா உங்களை வணங்கிக் கொண்டிருந்தவர்கள் எனக் கேட்கும் போது, வானவர்கள் கொடுக்கும் பதிலை அல்லாஹ் அல்குர்ஆனில் வெளிப்படுத்து வதை அவதானியுங்கள்.
(மலக்குகளை வணங்கி வந்த) அவர்கள் அனை வரையும் ஒன்று கூட்டும் அந்நாளில், அவன் மலக்குகளிடம் இவர்கள் தானா உங்களை வணங்கிக் கொண்டு இருந்தவர்கள் என்று (அல்லாஹ்) கேட்பான். (இதற்கு மலக்குகள்) நீ மிகத் தூய்மையான வன்; நீயே எங்கள் பாதுகாவலன், இவர்கள் அல்லர். எனினும் இவர்கள் ஜின்களை வணங்கிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோர் அவர் (ஜின்)கள் மேல் நம்பிக்கை கொண்டிருந்தார்கள் என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் : 34:80-81)
அந்த நிராகரிப்போர் மலக்குகளை வணங்கு வதாக எண்ணிச் செயற்பட்டாலும், அவ்வாறு செய்வதற்கு கட்டளையிட்டவர்கள் ஜின்களே ஆகும். ஆகவே, அவர்கள் ஜின்களையே வணங்கினார்கள். அத்துடன் அன்று அரேபியாவில் நபி(ஸல்) அவர்கள் மக்களை அல்லாஹ்வை மட்டுமே வணங்கும்படி அழைத்தபோது அவர்கள் மறுத்தனர். ஆதாரமாக ஒரு மலக்கைத் துணைக்கு அழைத்து வரும்படியும், அல்லது அல்லாஹ் ஒரு மலக்கை நபியாக அனுப்பக் கூடாதா என வேண்டினர். அதற்கு அல்லாஹ் அல் குர்ஆனில் ஸுரத்துல் அன்ஆம் மூலம் பதில் அளிப்பதை அவதானியுங்கள்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே உரியது. அவனே வானங்களையும், பூமியையும் படைத்தான். இருள்களையும், ஒளியையும் அவனே உண்டாக்கி னான்; அப்படி இருந்தும் நிராகரிப்பவர்கள் தம் இறைவனுக்கு(ப் பிற பொருட்களைச்) சமமாக்கு கின்றனர். அவன் தான், உங்களைக் களிமண்ணிலிருந்து படைத்துப் பின்னர் (உங்களுக்கு ஒரு குறிப் பிட்ட) தவணையையும் ஏற்படுத்தியுள்ளான்; இன்னும், (உங்களை கேள்வி கணக்கிற்கு எழுப்புவதற் காகக்) குறிக்கப்பட்ட தவணையும் அவனிடமே உள்ளது; அப்படியிருந்தும் நீங்கள் சந்தேகிக்கிறீர்கள்.
இன்னும் வானங்களிலும் பூமியிலும் அவனே (ஏக நாயனாகிய) அல்லாஹ், உங்கள் இரகசியத்தை யும், உங்கள் பரகசியத்தையும் அவன் அறிவான். இன்னும் நீங்கள் (நன்மையோ, தீமையோ) சம்பா திப்பதை எல்லாம் அவன் அறிவான். (அவ்வாறு) இருந் தும்) தங்கள் இறைவனுடைய திருவசனங்களிலிருந்து எந்த வசனம் அவர்களிடம் வந்தபோதிலும் அதை அவர்கள் புறக்கணிக்கவே செய்கின்றனர்.
எனவே, சத்திய(இறைநெறி)ம் அவர்களிடம் வந்திருக்கும்போதும் அதனைப் பொய்ப்பிக்கின்றனர். ஆனால் எந்த விசயங்களைப் (பொய்யயன்று) பரிகசித்துக் கொண்டிருக்கிறார்களோ, அவை அவர்களுக்கு வந்தே தீரும். அவர்களுக்கு முன்னர் நாம் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கி றோம் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? பூமி யில் நாம் உங்களுக்கு செய்து தராத வசதிகளையயல் லாம் அவர்களுக்குச் செய்து கொடுத்திருந்தோம்; அவர்கள் மீது நாம் வானம் தாரை தாரையாக மழை பெய்யுமாறு செய்து, அவர்களுக்குக் கீழே ஆறுகள் செழித்தோடும்படிச் செய்தோம். பிறகு அவர்களின் பாவங்களின் காரணத்தால் அவர்களை அழித்து விட்டோம்; அவர்களுக்குப் பின் வேறு தலைமுறை களை உண்டாக்கினோம்.
காகிதத்தில் (எழுதப்பட்ட) ஒரு இறைநெறி நூலையே நாம் உம் மீது இறக்கி வைத்து, அதனை அவர்கள் தமது கைகளால் தொட்டுப் பார்த்த போதி லும், இது பகிரங்கமான சூனியத்தைத் தவிர வேறில்லை என்று அந்நிராகரிப்போர் நிச்சயமாகச் சொல்வார்கள். (இவர் உண்மையான தூதர் என்று சாட்சி கூற) இவர் மீது ஒரு மலக்கு இறக்கப்பட வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர்; (அவ் வாறு) நாம் ஒரு மலக்கை இறக்கி வைப்போமா னால் (அவர்களுடைய) காரியம் முடிக்கப்பட்டிருக் கும்; பிறகு அவர்களுக்குச் சிறிதும் அவகாசம் கொடுக்கப்படமாட்டாது.
நம் தூதரை ஒரு மலக்காகவே அனுப்புவதாயினும் (அவர்கள் மலக்கைக் காணும் சக்தி இல்லாதவர்கள் ஆதலால்) அவரையும் நாம் மனித உருவத்திலேயே ஆக்கி (அனுப்பி) இருப்போம். (அப்போதும்) அந்த இடத்தில் அவர்கள் (இப்போது) குழம்பிக் கொள்வது போல் (அப்போதும்) நாம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்போம். (நபியே! உமக்கு முன்னர் வந்த தூதர்களும் நிச்சயமாக (இவ்வாறே) பரிகசிக்கப்பட்டனர்; முடிவில் அவர்கள் எதைப் பரிகசித்துக் கொண்டிருந்தனரோ அதுவே பரிகசித்தவர்களை வந்து சூழந்துகொண்டது. (அல்குர்ஆன் : 6:1-10)
அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்தை நிராகரித்து, அல்லாஹ்வுக்கு இணை வைத்து வாழும் மக்களின் உயிர்களை அவர்களுக்கு நியமிக்கப்பட்ட மலக்குகள் கைப்பற்றுவார்கள். அவ்வாறு கைப்பற்றும் முறையை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடுகின்றது.
அல்லாஹ்வின் மீது பொய்யைக் கற்பனை செய் பவன், அல்லது வஹீயின் மூலம் தனக்கு ஒன்றுமே அறிவிக்கப்படாமலிருக்க, எனக்கு வஹீ வந்தது என்று கூறுபவன் அல்லது அல்லாஹ் இறக்கி வைத்த இ(நெறிநூல்)தைப் போல் நானும் இறக்கி வைப்பேன் என்று கூறுபவன் ஆகிய இவர்களைவிட பெரிய அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? இந்த அநியாயக்காரர்கள் மரண வேதனையில் இருக்கும்போது நீங்கள் அவர்களைப் பார்த்தால், மலக்குகள் தம் கைகளை நீட்டி (இவர்களிடம்) உங்களுடைய உயிர்களை வெளியேற்றுங்கள். இன் றைய தினம் நீங்கள் இழிவுதரும் வேதனையைக் கூலியாகக் கொடுக்கப்படுவீர்கள். ஏனெனில் நீங்கள் உண்மையல்லாததை அல்லாஹ்வின் மீது கூறிக் கொண்டிருந்தீர்கள்; இன்னும், அவனுடைய வச னங்களை (நம்பாது நிராகரித்துப்) பெருமையடித்துக் கொண்டிருந்தீர்கள் (என்று கூறுவதை நீர் காண்பீர்) (அல்குர்ஆன் : 6:93)
அத்துடன், அல்லாஹ்வின் மார்க்கத்தினை நிரா கரித்தவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும் முறையை அல்குர்ஆன் பின்வருமாறு குறிப்பிடு கின்றது. அவதானிக்கவும்.
மலக்குகள் நிராகரிப்போரின் உயிர்களைக் கைப்பற்றும் போது நீங்கள் பார்ப்பீர்களானால், மலக்குகள் அவர்களுடைய முகங்களிலும், முதுகு களிலும் அடித்துக் கூறுவர்கள். எரிக்கும் நரக வேத னையைச் சுவையுங்கள் என்று. இதற்குக் காரணம், உங்கள் கைகள் முன்னமேயே செய்தனுப்பிய பாவச் செயல்களேயாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களுக்கு ஒரு சிறிதும் அநியாயம் செய்யமாட் டான். (அல்குர்ஆன் : 8:50,51)
இதேபோல் ஈமான் கொண்ட விசுவாசிகளின் உயிர்களை மலக்குகள் கைப்பற்றும்போது பின்வரு மாறு நடந்து கொள்வதாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
(குஃப்ரை விட்டும்) தூயவர்களாக இருக்கும் நிலையில் மலக்குகள் எவர்களுடைய உயிர்களைக் கைப்பற்றுகிறார்களோ அவர்களிடம் அஸ்ஸலா முன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தி உண்டாவ தாக) நீங்கள் செய்துகொண்டிருந்த (நற்) கருமங் களுக்காக சுவனபதியில் நுழையுங்கள் என்று அம் மலக்குகள் சொல்வார்கள். (அல்குர்ஆன் : 16:32)
அல்லாஹ்வின் மீது உறுதியான நம்பிக்கை வைத்து, தூதர்(ஸல்) அவர்கள் காட்டிய வழியில் நடந்தவர்களுக்கு சுவர்க்கம் கிட்டும். அவர்கள் அதில் எப்போதும் நிலைத்து இருப்பார்கள். அல்லாஹ் இது பற்றி அல்குர்ஆனில் கூறுவதைப் பாருங்கள்.
நிச்சயமாக எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ் தான் என்று கூறி, (அதன் மீது) உறுதியாக நிலைத்து நின்றார்களோ, நிச்சயமாக அவர்கள் பால் மலக்குகள் வந்து, நீங்கள் பயப்படாதீர்கள்; கவலை யும் பட வேண்டாம். உங்ளுக்கு வாக்களிக்கப்பட்ட சுவர்க்கத்தைக் கொண்டு மகிழ்ச்சி பெறுங்கள். (எனக் கூறியவாறு) இறங்குவார்கள்.
(அல்குர்ஆன் : 41:30)
மலக்குகள் பற்றி அல்குர்ஆனுக்கு முன் இறக்கப் பட்ட இறைநெறி நூல்களிலும் தகவல்கள் இடம் பெற்றிருந்தன. எனினும் அந்த மலக்குகள் பற்றிய செய்திகளில், மனிதனின் கற்பனைகளும் நுழைந்து சிதைவுகள் ஏற்பட்டிருந்தன. இதனால் மலக்குக ளின் பெயரால் மனிதன் இணைவைக்கும் நிலை ஏற்பட்டது. மலக்குகள் பற்றிய நம்பிக்கை இன்று உள்ள விஞ்ஞான கருவிகளுக்கு புலப்படாத மறை வான செய்திகள் ஆகும். தற்போது மலக்குகள் பற்றிய சரியான செய்திகளை அல்குர்ஆனின் ஒளியி லிருந்தே மனிதன் அறிய முடியும். சில மலக்குகளின் வலிமையைப் பற்றி அல்குர்ஆன் விளக்குவதை அவதானியுங்கள்.
இன்னும், மலக்குகள் அதன் கடைக் கோடியிலி ருப்பார்கள். அன்றியும், அந்நாளில்(மறுமையில்) உம் முடைய இறைவனின் அர்ஷை, (வானவர்) எட்டுப் பேர் தம் மேல் சுமந்திருப்பார்கள். (அல்குர் ஆன் 69:17)
இவ்வாறான வலிமையுடைய மலக்குகளையும் அல்லாஹ் படைத்துள்ளான். இவ்வாறான பல செயற்பாடுகளை ஆற்றுகின்ற மலக்குகளை அல் லாஹ் படைத்திருப்பதாக அல்குர்ஆன் மூலமும் நபி (ஸல்) அவர்களின் ஹதீஃத்கள் மூலமும் நாம் அறிந்து வைத்துள்ளோம். இவ்வாறு மறைவாகவுள்ள மலக்குகள் மீது நம்பிக்கை கொள்வது ஒவ்வொரு முஸ்லிம் மீதும் கடமையாகும். மறுப்பது நிராகரிப்பாகும். மலக்குகளைப் பற்றி மேலதிகமான அறி வைப் பெற்றுக் கொள்வதற்கு அல்குர்ஆனையும், இறுதி நபி(ஸல்) அவர்களின் ஸஹீஹான நபி மொழிகளையும் அவதானித்து ஈமானையும் அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அத்துடன் 2500 ஆண்டுகளுக்கு முன்னுள்ள திருக்குறளிலும் மறுமை பற்றியும் தேவர்கள் பற்றியும் செய்திகள் காணப்படுகின்றன. அவதானியுங்கள்.
“”புகழ் இன்றால் புத்தேள் நாட்டு உய்யாதல்
என் மன்று இகழ்வார் பின் சென்று நிலை.”
திருக்குறள் -966
பொருள் : வானத்தை விட்டு இகழ்வார் பின் சென்று பணிந்து நிற்கும் நிலை, ஒருவனுக்கு இம்மையில் புகழினைக் கொடுக்காது. மறுமையில் தேவர் உலகத் திற்குக் கொண்டு போய்ச் சேர்க்காது. ஆயின் இகழ்வார் பின் செல்வதால் வேறு என்ன பயன் உண்டு? என்று கேட்கின்றது. அவதானியுங்கள்.