இப்னு ஸதக்கத்துல்லாஹ்
பொய்(யன்) புதிதாக இதுவரை எதையும் செய்ய வில்லை; இனியும் செய்யப் போவதில்லை! 34:49
கடந்த 17.04.15 அன்று தமிழ்நாட்டு தறுதலைகள் ஜமாஅத் துணைத் தலைவர் அண்ணன் சையது இபுறாஹீம் மத்ஹபை பின்பற்றுவது இறை மறுப்பே! அவதூறுகளால் எழுச்சி பெறும் ஏகத்துவப்படை! என்ற இரு தலைப்புகளில் ஜுமுஆ உரையாற்றியிருந்தார், அதில் சில விஷயங்களை மேற் கோள்காட்டி மாற்றுக் கருத்துடைய சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அவர் வேண்டுகோளை ஏற்று சிந்தித்தேன். மனதில் சில கேள்விகள் எழுந்தன. அவற்றை இங்கே எழுதியிருக்கிறேன். முதல் தலைப்பில், சில விஷயங்களை எடுத்துக் காட்டி மத்ஹபுகள் இறைமறுப்பு என்றும் அவற்றில் இருப்பது கடைந்தெடுத்த காஃபிர்தனம் என்றும் சொல்லியிருந்தார்.
“”புதிய பாட்டிலில் பழைய கள்” என்பது போல சிற்சில மாற்றங்களைச் செய்து அவர்கள் போன பாதையிலேதான் நீங்களும் போய்க் கொண்டிருக்கிறீர்கள். ஷாஃபி ஜமாஅத்தும், ஹனபி ஜமாஅத்தும் “இறைமறுப்பு’ என்றால் “தவ்ஹீத்’ “ஜமாஅத்’ என்னவாம்? ஷாஃபி ஜமாஅத்திலும், ஹனபி ஜமாஅத்திலும் இருப்பது கடைந்தெடுத்த காஃபிர் தனம் என்றால் “தவ்ஹீத் ஜமாமஅத்தில்’ இருப்பது என்னவாம்? தவ்ஹீத் ஜமாஅத்தும் இறை மறுப்புதான்; நாங்களும் “கடைந்தெடுத்த காஃபிர்கள்தான் என்ற உண்மையை உரக்கச் சொல்லும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?
அடுத்த தலைப்புக்கு வருவோம். “அவதூறுகளால் எழுச்சி பெறும் ஏகத்துவப் படையாம்; அல்ல, அல்ல, “அவதூறுகளை நம்பி ஏமாந்த இளிச்சவாய் விளங்காப் படை’. பெரியண்ணன் பீ.ஜை அப்படித் தான் சொல்கிறார். அதிலும் இரண்டு விஷயங்களை எடுத்துக்காட்டி நாங்கள் இருப்பதுதான் நேர்வழி என்றும், சத்தியம் என்றும் உரக்கச் சொல்கிறார்.
நீங்கள் ஆரம்பித்த அதே காலகட்டத்தில் ஆரம் பிக்கப்பட்டதுதான் பீ.ஜே.பி. அவர்களும் நாலு பேரோடுதான் ஆரம்பித்தார்கள். இந்தியாவில் உள்ள எல்லாக் கட்சிகளும் அவர்களுக்கு எதிராகத் தான் பிரச்சாரம் செய்தார்கள். எதுவுமே எடுபட வில்லை. அவர்களின் வளர்ச்சியை தடுக்க முடிய வில்லை. இன்று உங்களை விட பல மடங்கு லட்சக் கணக்கான மக்களின் ஆதரவைப் பெற்று நாட்டின் ஆட்சியதிகாரத்தையே கைப்பற்றி விட்டார்கள். உங்களின் கஜானாவை விட பல மடங்கு பெரிய கஜானா அவர்களிடம் இருக்கிறது.
இங்கும், “”புதிய பாட்டிலில் பழைய கள்” என் பது போல சிற்சில மாற்றங்களை செய்து அவர்கள் போன பாதையிலே நீங்களும் போய் பெருவாரி யான மக்களின் ஆதரவைப் பெற்று விட்டீர்கள். பெரு வாரியான மக்களின் ஆதரவு இருப்பதும், பெரிய அளவில் பணம் குவிவதும்தான் நேர்வழியின் அளவு கோல், சத்தியத்தின் அளவு கோல் என்று நீங்கள் சொல்வது உண்மையானால், பீ.ஜே.பியும் எங்க ளைப் போல் நேர்வழிதான் அதில் இருப்பவர்களும் எங்களைப் போல் சத்தியவான்கள்தான் நம்பிக்கையாளர்கள் தான் என்று உரக்கச் சொல்லும் துணிச்சல் உங்களுக்கு உண்டா? அவ்வளவு துணிவெல்லாம் உங்களுக்கு கிடையாது. உங்களின் வீரமெல்லாம் உங்களிடம் சிக்கியுள்ள விளங்காத உற்சாக மடையர்களின் மண்டையை கழுவுவதோடு முடிந்து விடும்.
பெரியண்ணன் பீ.ஜே.வும் இதையேதான் சொன்னார். ஆனால், வேறு வார்த்தைகளில் அவர் பாணியில் சொன்னார். எப்படி?
பத்திரிகை ஆரம்பிச்சோம் நஜாத் என்று, தம் பேர்ல எல்லாம் எழுதி சொத்தெல்லாம் எழுதிக்கிட்டாரு அந்தாளு. ஒண்ணுமில்லாம தெருவில வந்து நிண்டோம். அவர காணோம் தெருவில் நிண்ட நாங்க நிக்கிறோம். இன்னைக்கி, அல்லாவுடைய உதவி’ இப்படி ஒருபக்கம் அவதூறு பரப்பியவர்கள் தான், மறுபக்கம் அவதூறு பரப்புவது எவ்வளவு பெரிய குற்றம் தெரியுமா? அல்லாஹ் என்ன செய்வான் தெரியுமா? அவர்களுக்கு இழிவு உண்டு, அழிவு உண்டு, மறுமையில் துடிதுடித்துக் கொண்டிருப்பார்கள் என்று பத்தரை மாற்றுத் தங்கம் போல், இந்தப் பூனையும் பால் குடிக்குமா? என்பது போல் பேசுகிறார்கள்.
உண்மையிலேயே இவர்களுக்கு, இவர்கள் பேசும் மறைவான விசயங்கள் மீது நம்பிக்கை இருந்தால் அவதூறு பரப்புவார்களா? அதிலெல்லாம் இவர்களுக்கு துளிகூட நம்பிக்கை இல்லை என் பதைத்தானே இவர்களுடைய செயலும், செயலுக்கு மாறான பேச்சும் காட்டுகிறது. இப்படி இவர்க ளுக்கே நம்பிக்கையில்லாத வியங்களைத் தான் பேசுகிறார்கள். பேசிக்கொண்டே இருக்கிறார்கள். காரணம், அந்த மறைவான விசயங்கள் மீது நம் பிக்கை கொண்டிருக்கிறார்களே அந்த மக்களை ஏய்த்து ஏமாற்றி பிழைக்கத்தான். இவர்களைப் பொறுத்தவரை, நபி(ஸல்) எச்சரித்தார்களே.
யார் மறுமைப் பயனை நாடிக் கற்க வேண்டிய கல்வியை இவ்வுலகில் பிழைப்பதற்கான தொழிற் கல்வியாக மாற்றிக் கொள்கிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகமாக்கிக் கொள்ளட்டும் என்று. அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான். இவர்களைப் பற்றி, இவர்களைப் படைத்தவன், இவர்களின் பக்கம் பெரும் கூட்டத்தை சேர்த்தவன். பெரிய அளவில் பணம் குவியச் செய்தவனாகிய அல்லாஹ் சொல்கிறான்.
மனிதரில், ஒரு சாரார் உள்ளனர். நாங்களும் அல்லாஹ்வை (இறுதி நபியை) இறுதி நாளை நம்புகிறோம் என்று சொல்கின்றனர். ஆனால், அவர்கள் நம்பிக்கையாளர்கள் இல்லை. (2:8)
(இப்படிச் சொல்லி) அவர்கள் அல்லாஹ்வையும் நம்பிக்கையாளர்களையும் ஏமாற்றப் பார்க்கின்ற னர். உண்மை என்னவென்றால் அவர்கள் தங்க ளைத் தாங்களே ஏமாற்றிக் கொள்கின்றனர். (2:9)
அவர்களுடைய இதயங்களில் (ஏமாற்றிப் பிழைக்கும்) நோயுள்ளது. அந்த நோயை அல்லாஹ் மேலும் அதிகமாக்கியிருக்கிறான். மேலும் அவர்கள் பொய் சொல்வதால் துடிதுடிக்க வைக்கும் வேதனை யும் காத்திருக்கிறது. (2:10)
பூமியில் குழப்பம் உண்டாக்காதீர்கள் என்று அவர்களிடம் சொன்னால் நாங்கள் (மூடநம்பிக் கைக்கு எதிரான) சீர்திருத்தவாதிகள் (இஸ்லாத்தை அதன் தூய வடிவில் பரப்புகிறவர்கள், சமுதாயத்தை காப்பாற்ற வந்தவர்கள்) என்று சொல்கிறார்கள். (2:11)
அப்படியில்லை, அவர்கள்தான் குழப்பவாதி கள். (பசுத்தோல் போர்த்திய புலிகள்) (2:12)
அவர்கள் (தங்கள் சுயரூபத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள். (9:56)
இவர்கள்தான் நேரான வழிக்குப் பதிலாகத் தவறான வழியை விலைக்கு வாங்கிக் கொண்டவர் கள். (2:16)
இவ்வக்கிரமக்காரர்கள் செய்வதை அல்லாஹ் கண்டு கொள்ளாமல் இருக்கிறான் என (கனவிலும் கூட) நீங்கள் எண்ண வேண்டாம். (14:42)
(இவர்களை நாம் ஏன் விட்டு வைத்திருக்கின் றோம் என்றால்) மறுமையை (நம்பவேண்டிய விதத் தில்) நம்பாதவர்களின் உள்ளங்கள் இவர்களின் கவர்ச்சியான அலங்காரமான (ஏமாற்றுப்) பேச்சின் பக்கம் சாய்ந்து அதில் அவர்கள் உள்ளம் லயித்து உற் சாகமடைந்து குதூகலிப்பதற்காகவும், மேலும் அவர் கள் சம்பாதிக்க விரும்பும் தீவினைகளை சம்பாதிப் பதற்காகவும்தான். (6:113)
மறுப்போரை (அவ்வப்போது தண்டிக்காமல்) நாம் விட்டு வைத்திருப்பதை (அல்லாஹ்) தங்க ளுக்கு செய்யும் உதவி என்னு எண்ணி அவர்கள் (மனப்பால் குடிக்க) வேண்டாம். (தண்டனையை) நாம் அவர்களுக்குத் தாமதப்படுத்தகாரணம் அவர்களுடைய பாவம் (மென்மேலும்) அதிகரிப்பதற் காகதான். (இறுதியாக) அவர்களுக்கு கேவலப்பட்ட வேதனை காத்திருக்கிறது. (3:178)
அவர்களுடைய செல்வங்களும், அவர்களு டைய மக்களும் (பெருகுவது) உங்களை ஆச்சரியப் படுத்த வேண்டாம். அல்லாஹ் (அவற்றை அவர்க ளுக்குக் கொடுத்து) அவற்றைக் கொண்டே அவர் களை இவ்வுலக வாழ்விலேயே வேதனை செய்ய நிச்சயமாக நாடுகிறான். (என்பதை விளங்கிக் கொள் ளட்டும்) மேலும், அவர்கள் மறுப்பவர்களாக இருக் கும் நிலையிலேயே அவர்களுடைய உயிர் போவ தையும் (நாடுகிறான் என்பதையும் விளங்கிக் கொள் ளட்டும்) (9:55)
இந்த மண் கோட்டைகளை நம்பித்தான் மனக் கோட்டை கட்டுகிறார்கள் விளங்காத உற்சாக மடையர்கள். ஐயோ, பாவம்! அவர்களை எண்ணி பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால், இவர்களில் ஒரு சாரார் இருக்கிறார் கள். அவர்கள் சொல்கிறார்கள். ஒரு வாதத்துக்காக நீங்கள் சொல்வதுதான் சரி என்று வைத்துக் கொண்டாலும், பொய் சொன்னதற்காக, வழிகெடுத்ததற்காக பீ.ஜே.தான் மாட்டிக் கொள்வார். நரகத்துக்குப் போவார். நாங்கள் தப்பித்துக் கொள்வோம். ஏனென்றால், நாங்கள் தொழுதிருக்கிறோம். நோன்பு வைத்திருக்கிறோம். இன்னபிற நற்செயல்களெல்லாம் செய்திருக்கிறோம். அதனால், அல்லாஹ் எங்களை விட்டுவிடுவான் என்று சொல் கிறார்கள். அதாவது ஆளுங்கட்சியை போல், ஆளுங் கட்சிகாரர்கள் செய்யும் தவறுகளை ஆளுங்கட்சி கண்டுகொள்ளாமல் இருக்குமல்லவா? அதைப் போல் அல்லாஹ்வும் இவர்களை விட்டுவிடுவான் என்று இவர்களும் மனப்பால் குடிக்கிறார்கள். இந்த மாதிரி ஆட்களுடைய அமல்கள் அழிந்து விடும். இவர்களுடைய நன்மை தீமையை நிறுக்க தராசை கொண்டு வரமாட்டேன் என்று அல்லாஹ் சொல் வதை இவர்கள் கண்டுகொள்வதில்லை. (18:102-106)
இன்னொரு சாரார் இருக்கிறார்கள். பீ.ஜே. நரகத்துக்குப் போனால் அவரோடு சேர்ந்து நாங்க ளும் நரகத்துக்குப் போகிறோம். நீ வந்து எங்களை காப்பாற்ற வேண்டாம் என்று தெனாவெட்டாகச் சொல்கிறார்கள். இவர்களின் நௌப்பு என்னவென் றால் நரகம் என்பது நம்மூர் வேலூர் ஜெயில், பாளையங்கோட்டை ஜெயில் என்று எண்ணிக் கொண்டார்கள். இந்த மாதிரி ஆட்கள் மறுமையில் நடக்கவிருப்பதை பார்க்க முடிந்தால், அல்லாஹ் தரவிருக்கும் வேதனை எப்படியிருக்கும் என்பதைப் பார்த்துக் கொள்ளட்டும் என்ற அல்லாஹ்வின் அறைகூவலை கண்டு கொள்வதில்லை. மொத்தத்தில் இவர்கள் அல்லாஹ்வையும், மறுமையையும் நம்பவேண்டிய விதத்தில் நம்ப வில்லை என்பதையே இது காட்டுகிறது.
இந்த விளங்காத உற்சாக மடையர்களைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே!) உம்மீது இறக்கப்பட்ட(குர்ஆன், ஹதீஃ)தையும், உமக்கு முன்னால் இறக்கப்பட்டதை யும் நம்புவதாக (வாதம் செய்து) சாதித்துக் கொண் டிருப்போரை நீர் பார்க்கவில்லையா? (யாரை நம்பக்கூடாது) நிராகரிக்க வேண்டும். புறக்கணிக்க வேண்டும் என்று அவர்களுக்கு கட்டளையிடப் பட்டிருக்கிறதோ அந்தப் பொய்யனையே தங்கள் (தலைவனாக) தீர்ப்புச் சொல்பவனாக ஆக்கிக் கொண்டார்கள். (4:60)
இவர்களுடைய உள்ளங்களில் (இன உணர்வு எனும்) நோயுள்ளது. அந்நோயை அல்லாஹ் மேலும் அதிகமாக்கியிருக்கிறான். (2:10)
(அத்துடன் இவர்கள்) செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின் றார்கள். இவர்கள் (குருட்டுதனமாகப் பின்பற்றும் அபாயகரமான இந்நிலையிலிருந்து) மீளவே மாட்டார்கள். (2:18)
மறுமையை (நம்பவேண்டிய விதத்தில்) நம்பாத (இ)வர்களின் உள்ளங்கள் அவர்களின் கவர்ச்சி யான அலங்காரமான (ஏமாற்றுப்) பேச்சின் பக்கம் சாய்ந்து அதில் இவர்கள் உள்ளம் லயித்து உற்சாக மடைந்து குதூகலிப்பதற்காகவும், மேலும் அவர்கள் சம்பாதிக்க விரும்பும் தீவினைகளை (இவர்களும்) சம்பாதிப்பதற்காகவும்! (நாம்தான் அவர்களை சேர்த்து வைத்திருக்கிறோம்) (6:113)
(அர்த்தத்தை விளங்காமல்) வெறும் சப்தத்தை யும், ஓசையையும் மட்டுமே கேட்கும் கால்நடை களை போன்றே (சிலதை ஏற்று சிலதை) மறுப் போரின் தன்மை உள்ளது. (இவர்கள்) செவிடர்கள், ஊமைகள், குருடர்கள். எனவே அவர்கள் விளங்க மாட்டார்கள். 2:171
(சிலதை ஏற்று சிலதை) மறுப்போர் என்னை விட்டு விட்டு என்னுடைய அடியார்களை (சமுதாயக்) காவலர்களாக எடுத்துக் கொள்கின்ற னரா? நிச்சயமாக இந்நிராகரிப்போருக்கு விருந்த ளிப்பதற்காக நரகத்தையே தயார்படுத்தி வைத்தி ருக்கிறோம். (18:102)
இவர்களிடம் சொல்லுங்கள். தம்முடைய செயல்களில் பெரும் நஷ்டத்திற்கு ஆளானவர்கள் யார் என் பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? (18:103)
அவர்கள் யாரென்றால், உலக வாழ்க்கையில் அவர்களுடைய முயற்சிகள் எல்லாம் வழிகேட்டி லேயே தான் இருந்தன. ஆனால், அவர்களோ தாம் நேர்வழியில் தான் இருக்கின்றோம் என்று எண்ணிக் கொண்டிருந்தார்களே அவர்கள்தான். (18:104)
இவர்கள்தான் தங்கள் இறைவனின்(சில) வசனங்களையும் (அதற்காக) அவனைச் சந்திக்க வேண் டும் என்பதையும் நிராகரித்துவிட்டவர்கள். அவர் களுடைய நன்மைகள் யாவும் அழிந்து விட்டன. மறுமை நாளில் அவர்களுடைய (நன்மை, தீமையை நிறுக்க) தராசை நாம் நிறுத்தமாட்டோம். (18:105)
மனிதர்களில் ஒரு சாரார் அல்லாஹ் அல்லாதவர் களை அவனுக்கு சமமாக்கி அல்லாஹ்வை விரும்பு வது போல் அவர்களை விரும்புகிறார்கள். ஆனால் நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வை மட்டும் விரும்பு வதில் உறுதியாகியிருப்பார்கள். (சிலதை ஏற்று சிலதை மறுக்கும்) அக்கிரமக்காரர்களுக்கு (மறுமை யில் நடக்கவிருப்பதை) பார்க்க முடிந்தால், (அல்லாஹ் தரவிருக்கும்) வேதனை எப்படியிருக் கும் என்பதைப் பார்த்துக் கொள்ளட்டும். எல்லா அதிகாரமும் வல்லமையும் அல்லாஹ்வுக்கு மட்டுமே, நிச்சயமாக தண்டனைக் கொடுப்பதில் அல்லாஹ் மிகவும் கடுமையானவன் (என்பதை பார்த்துக் கொள்வார்கள்) (2:165)
(இவர்களுக்கு) இத்தவறான வழியைக் காட்டிய வர்கள் (மறுமையில்) வேதனையைக் கண்டவுடன், (கோவை விவகாரத்தில் கழட்டிவிட்டது போல்) (தங்களைப்) பின்பற்றிய இவர்களைக் கைவிட்டு விடுவார்கள். அவர்களுக்கும், இவர்களுக்கும் இடையில்) இருந்த தொடர்புகள் அனைத்தும் அறுபட்டுவிடும். (2:166)
(அவர்களைப்) பின்பற்றிய இவர்களோ (உலகில் வாழ) “”நமக்கு இன்னொரு வாய்ப்புக் கிடைத்தால், அவர்கள் நம்மைக் கழட்டிவிட்டதைப் போல் நாமும் அவர்களைக் கழட்டி விடலாமே” என்று பேசிக் கொள்வார்கள். இப்படியாக அவர்கள் செய்த செயல்கள் அவர்களுக்கே வினையாக வந்து நிற்பதை அல்லாஹ் எடுத்துக்காட்டுவான். மேலும், அவர்கள் நரக நெருப்பிலிருந்து வெளியேறவே மாட்டார்கள். (2:167)
நெருப்பில் அவர்களுடைய முகங்கள் புரட்டப் படும் நாளில், “”ஐயையோ, போச்சே எல்லாம் போச்சே! நாம் அல்லாஹ்வை நம்பியிருக்கலாமே, தூதரை நம்பியிருக்கலாமே!. 33:66
(ஆளை மயக்கும் பேச்சு பேசிய பயான் சூன்யப் பேர்வழிகளான) எங்கள் தலைவர்களையும், எங்கள் பெரியவர்களையும் நம்பினோமே, இவர்கள் எங் களை இந்த கதிக்கு ஆளாக்கி விட்டார்களே. (33:67)
“”எங்கள் இறைவா! இவர்களுக்கு இருமடங்கு துடி துடிக்க வைக்கும் வேதனையை கொடுப்பாயாக, இவர் களைப் பெருஞ்சாபத்தைக் கொண்டும் சபிப்பாயாக” (என்று கதறிக் கொண்டே சொல்வார்கள்). (33:68)
(மேலும் பார்க்க : 23:52-56)
இந்த மண் மூட்டைகளை வைத்துக் கொண்டு தான் மனப்பால் குடிக்கிறார்கள் பெரியண்ணும், சிறிய அண்ணன்களும், ஐயோ, பாவம்! அவர்களை எண்ணி பரிதாபப்படுவதைத் தவிர வேறு வழி யில்லை. ஏனென்றால், மறுமையில் இவர்கள் தங்க ளுடைய பாவச் சுமையை சுமப்பதுடன், இவர்கள் வழிகெடுத்த விளங்காதவர்களின் பாவச் சுமையை யும் இவர்களே சுமப்பார்கள். (இப்படி எல்லாத்தை யும்) இவர்களே சுமப்பது ரொம்பக் கெட்ட தல்லவா? (16:25)