இஸ்லாத்தில் இடைத்தரகருக்கு இடம் அணுவளவும் இல்லவே இல்லை!

in 2015 அக்டோபர்

அபூ அப்தில்லாஹ்

இறுதி இறைநூல் அல்குர்ஆன் கூறுகிறது, கவனமாகப் படியுங்கள்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன். அவர்கள் என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அப்பொழுதே அவர்கள் நேர்வழியை அடைவார்கள். (குர்ஆன் : 2:186)

இந்த குர்ஆன் வசனம் அல்லாஹ்வை மட்டுமே நம்ப வேண்டும், மனிதர்களில் யாரையுமே நம்பக் கூடாது, நேர்வழியை அல்லாஹ்விடம் மட்டுமே கேட்கவேண்டும். அவன் பதிலளித்துள்ள குர்ஆன் என்ன கூறுகிறது என்று மட்டுமே பார்க்க வேண்டும். மனிதர்களில் குறிப்பாக மதகுருமார்களின் சுய கருத்துக்களை ஏற்கக் கூடாது. இதுவே நேர்வழி என்று உறுதியாகக் கூறுகிறது.

மேலும் தெளிவு படுத்துகிறது 7:3 குர்ஆன் வசனம். அது வருமாறு : (மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு இறக்கப்பட்டதை (மட்டுமே) பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெ வரையும்) பாதுகாவலர்(களாகக்கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள்.  நீங்கள் குறைவாகவே உப தேசம் பெறுகிறீர்கள். (குர்ஆன் : 7:3)

இந்த குர்ஆன் வசனம் இறைவனால் இறக்கப் பட்டவை மட்டுமே மார்க்கம்-நேர்வழி என்று உறுதி கூறுகிறது. இறக்கப்பட்டவை ஒன்று குர்ஆன், இரண்டாவது நபியின் சுன்னாஹ் (பார்க்க : 21:45, 53:2-4) சிலர் சொல்வது போல் குர்ஆன் மட்டுமே மார்க்கமாக இருந்தால், அல்லாஹ் தெளிவாக நேரடியாக இந்த 7:3 இறைவாக்கில் இறக்கப்பட்டதை என்று சொல்லாமல் குர்ஆனையே பின்பற்றுங்கள் என்று சொல்லி இருப்பான். அப்படிச் சொல்லவில்லை. எனவே சுன்னாஹ்வை நிராகரிப்பவர்கள் குர்ஆனையும் நிராகரிப்பவர்களே. வழிகேடர்களே!

மேலும் இந்த 7:3 இறைவாக்கில் அல்லாஹ்வையன்றி வேறெவரையும் அவுலியாவாக-பாதுகாவலராக- வழிகாட்டியாக- குர்ஆனுக்கு மேல் விளக்கம் கூறுபவர்களாக நம்பிப் பின்பற்றக் கூடாது என்று தெளிவாகக் கட்டளையிடுகிறது. ஆக மதகுருமார்களுக்கு மார்க்கத்தில் அணுவளவும் அனுமதி இல்லவே இல்லை என்று இவ்வசனம் உறுதிப்படுத்துகிறது.

இந்த 2:186, 7:3 இரு குர்ஆன் வசனங்களையும் நேரடியாகப் படித்து உணர்ந்தவர்கள் எந்த ஆலிம் -மவ்லவி, மதகுரு மற்றும் சாமான்யர் என மனிதர் களில் எவரையும் இடைத்தரகராகக் கொள்ள முடி யவே முடியாது என்பதை அறிவார்கள். நேரடியாக குர்ஆன், சுன்னாஹ்வைப் பார்த்து விளங்கிச் செயல்படுகிறவர்கள் மட்டுமே குர்ஆன் 67:2 வசனம் கூறும் பரீட்சையில் வெற்றியடைந்து சுவர்க்கம் போக முடியும் என்பதை உணர முடியும்.

2:186 இறைவாக்கோடு, பிடரியிலுள்ள உயிர் நரம்பை விட நாம் அவனுக்குச் சமீபமாக இருக்கிறோம் என்று அல்லாஹ் கூறும் 50:16 இறைவாக்கை யும், நாமோ அவனுக்கு உங்கள் அனைவரையும் விட சமீபமாக இருக்கிறோம் என்று அல்லாஹ் கூறும் 56:85 இறைவாக்கையும் நேரடியாகப் படித்து உணர்கிறவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்குமிடையில் மனிதரில் எவரும் இடைத் தரகராகப் புகவே முடியாது என்பதை உறுதியாக உணர முடியும்.

இந்த 2:186, 7:3, 67:2, 50:16, 56:85 இறைவாக்குகள் இந்த அளவு தெளிவாக, நேரடியாக எச்சரிக்கும் நிலையில், இந்த இறைக் கட்டளைகளை நிராகரித்து விட்டு, இம்மவ்லவிகளைத் தங்களின் வழிகாட்டி யாக-பாதுகாவலர்களாக-அவுலியாவாக, இமாமாகக் கொண்டு அவர்கள் பின்னால் செல்பவர்களை அல்லாஹ் 18:102 இறைவாக்கில் எவ்வளவு கடுமையாக எச்சரிக்கிறான் என்பதை நீங்களே படித்துப் பாருங்கள்.

நிராகரிப்பவர்கள் என்னையன்றி என் அடியார்களைத் தம் அவுலியாவாக-பாதுகாவலர்களாக-நேர் வழிகாட்டிகளாக, இமாமாக, மதகுருவாக எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்களா? நிச்சயமாக நிராகரிப்போருக்கு நரகத்தைத் தங்குமிடமாக நாம் தயார் செய்து வைத்திருக்கிறோம். (18:102)

அல்லாஹ்வைப் புறக்கணித்துவிட்டு, அதாவது 25:30 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனைப் புறக்கணித்துவிட்டு, மவ்லவிகளான இம்மதகுருமார்களைத் தங்களின் வழிகாட்டியாகக் கொண்டு அவர்கள் பின்னால் செல்பவர்களை அல்லாஹ் காஃபிர்-நிராகரிப்பவர்கள் என்றே நேரடியாகக் கூறிக் கடுமையாக எச்சரித்துள்ளான்.

குர்ஆன் வசனங்களை நிராகரித்து, நபி(ஸல்) அவர்களின் தெளிவான நடைமுறைகளையும் புறக் கணித்து, அவர்களின் நம்பிக்கைக்குரிய மவ்லவி- மதகுருமார்களின் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் முரண்பட்டச் சுய கருத்துக்களை வேதவாக்காகக் கொண்டு செயல்படும் முஸ்லிம்களை மேலும் அல்லாஹ் மிகக் கடுமையாக எச்சரிப்பதைப் படித்துப் பாருஙகள்.

(தம்) செயல்களில் மாபெரும் நஷ்டவாளிகள் யார் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று (நபியே!) நீர் கேட்பீராக! (18:103)

யாருடைய முயற்சி இவ்வுலக வாழ்வில் பயனற்றுப் போயிருக்க, தாங்கள் மெய்யாகவே அழகான காரியங்களையே செய்வதாக எண்ணிக் கொண்டிருக்கிறார்களே அவர்கள்தான். (18:104)

அவர்கள் தங்களுடைய இறைவனின் வசனங் களையும், (மறுமையில்) அவனுடைய சந்திப்பை யும் நிராகரிக்கிறார்கள். அவர்களுடைய செயல்கள் யாவும் அழிந்து விட்டன. மறுமை நாளில் அவர்க ளுக்காக எந்த எடையையும் நாம் ஏற்படுத்த மாட்டோம். (18:105)

அதுவே அவர்களுடைய கூலி-நரகமாகும். ஏனென்றால், அவர்கள் (உண்மையை) நிராகரித்த வர்கள், என்னுடைய வசனங்களையும் என் தூதர்களையும் ஏளனமாகவே எடுத்துக் கொண்டார்கள்.
(18:106)

மேலே கண்ட குர்ஆன் வசனங்களை நிராகரித்து, மவ்லவிகளான மதகுருமார்களை நம்பி, அவர்கள் பின்னால் செல்லும் முஸ்லிம்களை அல்லாஹ் நிராகரிப்பாளர்கள்-காஃபிர்கள் என்று நேரடியாகக் கூறி அவர்களின் அமல்கள் அனைத்தும் பாழ், அவர்களின் அமல்கள் நாளை மறுமையில் நிறுக்கப்படா, அதாவது அவர்களின் அமல்களுக்கு எந்த மதிப்பும் இல்லை. அவர்களுக்குக் கூலி நரகமாகும் என்று மிகமிகக் கடுமையாக எச்சரித்திருப்பதை விளங்கா தவர்கள் யார்? மூடர்கள்தானே!

அல்லாஹ்வை மட்டுமே முழுக்க முழுக்க நம்பும் படியும், வேறு யாரையும் நம்பக் கூடாது, தனது வழி காட்டல்படி மட்டுமே 6:153 இறைவாக்கு கூறும் நேர்வழி நடக்க வேண்டும் என்று தெளிவாக நேரடியாகக் கூறி இருக்கும் நிலையில், இம்மவ்லவிகளும், அவர்களுக்குப் பின்னால் செல்லும் முஸ்லிம்களும் குர்ஆன் வசனங்களை நிராகரிக்கிறார்களா? இல்லையா? மறுமையில் அல்லாஹ்வைச் சந்திப்பதையும் நிராகரிக்கிறார்களா? இல்லையா? அதனால் அவர்களுடைய அமல்கள் அழிந்துவிட்டன. அவர்க ளுக்கு நரகமே கூலி எனக் கடுமையாக எச்சரிப்பதை உணர முடியாதவர்கள் ஆறறிவு மனித ஜன்மங்களா? ஐயறிவு மிருக ஜன்மங்களா? நீங்கள் 7:175-179, 27:14, 45:23, 47:24,25 குர்ஆன் வசனங்களைப் படித்து அறிந்தால் இறைவனுக்கு இடைத்தரகர்கள் இல்லவே இல்லை என்பதைத் திடமாக அறிய முடியும்!

ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேரடியாக குர்ஆன் சுன்னாஹ்வை பார்த்து விளங்கிச் செயல் படவேண்டும் என்று அல்லாஹ் நேரடியாக மேலே கண்ட வசனங்களில் கூறி இருக்க, உங்களால் குர் ஆனை விளங்க முடியாது, நாங்கள் விளக்கித் தான் நீங்கள் விளங்க முடியும் என்று புருடா விடும் ஆணவம் கொண்ட இந்த மவ்லவிகளின் பொய்யுரைகளை அப்படியே கண்மூடி நம்பி, நாங்கள் ஆலிம்கள் இல்லை, எங்களுக்கு அரபு தெரியாது. அதனால் குர்ஆனை விளங்க முடியாது என்று 2:186, 7:3, 50:16, 56:85. 18:102-106 குர்ஆன் வசனங்களை நிராகரித்து, இம்மதகுருமார்களை தங்களுக்கும் தங் கள் எஜமானன் அல்லாஹ்வுக்கும் இடையில் இடைத்தரகர்களாகக் கொண்டு, அம்மவ்லவிகளின் வழிகாட்டல்படி நடக்கும் பெருங்கொண்ட முஸ்லிம்கள் 18:104 கூறுவது போல் அவர்களது முயற்சி முழுக்க முழுக்க பயனற்றுப் போயிருக்கும் நிலையில் கலிமா, தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்றவற்றை இம்மவ்லவிகளின் வழிகாட்டல் படி செய்து அவற்றைப் பயனற்றதாக ஆக்கிக் கொண்டு மெய்யாக அவர்கள் அழகான அல்லாஹ் ஏற்கும் நற்கருமங்களைச் செய்வதாக மனப்பால் குடிப்பார்கள். இந்த அனைத்துக் கடமைகளையும் அல்லாஹ் கட்டளைப்படி, நபி(ஸல்) காட்டித் தந்த படி மட்டுமே செய்ய வேண்டும் என்பதை ஷைத் தான் இவர்களுக்கு மறக்கடித்து விடுகிறான்.

அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்தது மட்டுமே நேர்வழி (6:153) பெருமை பேசும் இம் மவ்லவிகள் காட்டுவது அனைத்தும் கோணல் வழி களே, வழிகேடுகளே என்பதை 33:36, 7:146 இறை வாக்குகளை நீங்களே குர்ஆனில் நேரடியாகப் படித்து அறியமுடியும். இம்மவ்லவிகளும் அவர் களை நேர்வழி காட்டுபவர்களாக நம்பி அவர்கள் பின்னால் செல்பவர்களும் பகிரங்கமான வழிகேட் டில் இருப்பதாகவே 33:36 இறைவாக்குக் கூறுகிறது. அது மட்டுமா? அவர்களின் நாளைய முடிவை அதே 33 அத்தியாயத்தின் 66,67,68 இறைவாக்குகள் படம் பிடித்துக் காட்டுகின்றன. நேரடியாகப் படித்து விளங்குங்கள்.

இவ்வுலகில் பெருங்கொண்ட முஸ்லிம்கள் (99.9%) ஆயிரத்தில் 999 பேர் பெருமை பேசும் இம் மவ்லவிகள் பின்னால் தான் செல்கிறார்கள். அதன் விளைவாக நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு இம்மவ்லவிகளைச் சபித்து ஒப்பாரி வைப்பதையே இந்த 33:66,67,68 இறைவாக்குகள் நெற் றிப் பொட்டில் அடிப்பது போல் பறைசாற்றுகின் றன. அவை மட்டுமா? இன்னும் 7:35-41, 34:31-33, 37:27-33, 38:55-64, 40:47-50, 41:29, 43:36-45 இறை வாக்குகளும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவற் றில் 34:31-33, 40:47,48 ஐந்து இறைவாக்குகளும் கூறும் பெருமையடித்தோர் சாட்சாத் மவ்லவிக ளையே குறிப்பிடுகின்றன. படிப்பினை பெறுங்கள்.

இம்மவ்லவிகளை ஆலிம்களாக மதித்து அவர்களுக்கு மரியாதை செய்பவர்களும் பெருத்த வழி கேட்டிலேயே இருக்கிறார்கள். ஒன்றில் அவர்கள் மனசார அவர்களை ஆலிம்களாக மதிக்க வேண்டும். அல்லது இம்மவ்லவிகளின் இழி நிலைகளை நன்கு அறிந்த நிலையில், அவர்களை விமர்சிப்பதால் மக்களிடம் தங்களுக்கிருக்கும் செல்வாக்கு சரிந்து விடும் என்ற அச்சத்தில் மறுமையை விட இம்மையை அதிகம் நேசிப்பவர்களே! பேரிழப்புக்குரியவர்களே!

dஅன்றாடம் படித்து விளங்க வேண்டிய குர் ஆனை அல்லாஹ்வின் கட்டளைக்கு அடிபணிந்து, தினசரி படித்து விளங்கி வருகிறவர்கள், அல்லாஹ் வுக்கு மட்டுமே வழிபட வேண்டும், அவனது வழி காட்டல்படி மட்டுமே நடக்க வேண்டும், அவனை மட்டுமே முற்றிலும் நம்ப வேண்டும். அவன் காட்டு வது மட்டுமே நேர்வழி, மனிதர்கள் காட்டுவது அனைத்தும் கோணல் வழிகளே, வழிகேடுகளே (பார்க்க : 6:153) என்று திட்டமாக, தெளிவாக, நேரடியாகப் பல இடங்களில் கூறுவதை நிச்சய மாகப் புரிய முடியும்.

இந்த நிலையில் அரபு மொழி கற்ற மேதைகள் -ஆலிம்கள் எங்களுக்கே குர்ஆன் விளங்கும், அவாம் களுக்கு குர்ஆன் தமிழ் மொழியில் படித்து விளங்க முடியாது என்று வீண் பெருமை-ஆணவம் பேசும் இந்த மவ்லவிகளுக்கு தினசரி குறைந்தபட்சம் ஐங் காலத் தொழுகைகளில் குர்ஆன் ஓதிவரும் நிலையில் மேலே கண்ட குர்ஆன் வசனங்கள் விளங்காமல், அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்குமிடையில் இடைத்தரகர்களாகப் புகத் துடிக்கிறார்கள் என் றால் அதன் பொருள் என்ன? 7:146 குர்ஆன் வசனம் சொல்வது போல் அவர்களது வீண் பெருமை-ஆண வம் காரணமாக குர்ஆன் வசனங்களை விட்டும் அல்லாஹ்வாலேயே திருப்பப்படுகிறார்கள், குர் ஆன் வசனங்களை நேரடியாக எடுத்துக்காட்டி னாலும் ஏற்கமாட்டார்கள். நேர்வழியை ஒரு போதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழியாக ஏற்பார்கள் என்று அல்லாஹ்வே கூறுகின்றானா? இல்லையா? ஆம்! கோணல் வழி களையே நேர்வழியாக மக்களுக்குக் காட்டி அவர் களை நரகில் தள்ளும் தாஃகூத்களாகவே இந்த ஆலிம்கள் இருக்கிறார்கள்.

நாங்கள் தான் ஆலிம்கள், எங்களுக்குத்தான் குர்ஆன் விளங்கும். அவாம்களுக்கு விளங்காது என்று அடிக்கடி பெருமை பேசும் இந்த மவ்லவிக ளின் இழி நிலையை-வழிகேட்டைப் பெருமை பேசு பவர்கள் பற்றி விரிவாகக் கூறும் குர்ஆன் வசனங் களை நீங்களே நேரடியாகப் படித்து விளங்குங்கள்.

2:34, 4:36, 7:36-40,146,206, 11:10, 16:22,23,49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 34:31-33, 35:10, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:1-3 மேலும் புகாரீ 4850, 4918, 6071, 6657 ஹதீஃத்கள், முஸ்லிம் 2620 இவற்றை நேரடியாகப் படித்து விளங்குங்கள்.

இத்தனை குர்ஆன் வசனங்களையும், சுன்னாஹ் வையும், நிராகரித்து நாங்கள்தான் ஆலிம்கள்-மார்க் கம் கற்றவர்கள், அவாம்கள் குர்ஆனை விளங்க முடியாது. நாங்கள் விளக்கித்தான் அவர்கள் விளங்க முடியும் என்று பெருமை பேசும் காரணம் என்ன? மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ளக் கூடாது-கொடிய ஹராம் என்றும் அதனால் ஏற்படும் சீர்கேடுகள் என்றும் மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டவர்கள், நிராகரிப்பாளர் கள், நன்றி கெட்டவர்கள், வழிகேடர்கள், பொய்யர்கள், அல்லாஹ்வின் அச்சமற்றவர்கள், இப்படிப் பலவிதமான இழி சொற்கள் கொண்டு பல நூற்றுக் கணக்கான குர்ஆன் வசனங்களில் மிகமிகக் கடுமை யாக விமர்சித்திருந்தும், பெருமை பேசும் இந்த ஆலிம்கள் உணர்வு பெறாதக் காரணம் என்ன?

ஆம்! அவர்களின் இந்த ஆலிம் என்ற பெருமை காரணமாகவே அல்லாஹ் மேற்படி குர்ஆன் வசனங் களை விட்டும் அவர்களைத் திருப்பி விடுகிறான். அவர்கள் சத்தியத்தை-நேர்வழியை ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளைத்தான் நேர்வழி யாகக் கொள்வார்கள் (7:146) மவ்லவிகளுக்கு இந்தப் பரிதாப ஆபத்தான நிலை ஏற்படக் காரணம், அவர்களின் உணவு, உடை, இருப்பிடம் அனைத்தும் மார்க் கத்தைப் பிழைப்பாக்கி அதன் மூலம் ஹராமான வழி களில் வாழ்க்கையை ஓட்டிச் செல்வதே.

ஒரே நேர்வழி மார்க்கத்தைப் பல கோணல் வழிகள் மதமாக்கி அதையே பிழைப்பாகக் கொண்டிருப்பதால், ஒரு வியாபாரி வாடிக்கையாளர்களைப் பெருக்கப் பெரிதும் விரும்புவதுபோல் இந்த மத வியாபாரிகளும் தங்கள் வாடிக்கையாளர்களைப் பெருக்குவதில் குறியாக இருக்கிறார்கள். எனவே புகாரீ (ர.அ.) 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃத்கள் கூறும் ஒவ்வொரு ஆயிரம் பேரிலும் 999 பேர் நரகத் திற்குரியவர்கள் என்ற பெருங்கொண்ட கூட்டத்தைக் கவர்ந்து இழுக்கும் கட்டாயத்தில் இம்மதகுரு மார்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் இவர்களின் கோணல்-வழிகெடு பேச்சுக்களால் கவரப்பட்டு, தாராளமாக வாரி வாரி வழங்குவார்கள்.

எனவே மேலே கண்ட குர்ஆன் வசனங்களை நிராகரித்துச் சட்ட விரோதமாகத் திருட்டுத்தனமாக அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாகப் புகுந்து, ஆலிம்கள்-மார்க்கம் கற்ற மேதைகள் எனப் பெருமை பேசுவதோடு 7:146 குர்ஆன் வசனம் சொல்வது போல் வழிகேடு களையே நேர்வழியாகப் போதிக்கும் கட்டாயத் திற்கு ஆளாகிறார்கள். ஆக அவர்களின் ஹராமான வயிற்றுப் பிழைப்பே அவர்களை ஆலிம் என பெருமை பேசவும், வழிகேடுகளை நேர்வழியாகக் காட்டி ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 நபர்களைத் தங்கள் பக்கம் ஈர்க்கும் கட்டாயத்தில் தள்ளுகிறது.

மார்க்கத்தை வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டிருக்கும் ஹராமான நிலையை தவ்பா செய்து மீண்டு ஹலாலான முறையில் உழைத்துச் சாப்பிடும் நிலைக்கு அவர்கள் உயராத வரை அவர்கள் ஒரு போதும் நேர்வழி பெற முடியாது. இதையும் 36:21 குர்ஆன் வசனம் உறுதிப்படுத்துகிறது.

உங்களிடம் ஒரு கூலி-சம்பளம் கேட்காத இவர் களைப் பின்பற்றுங்கள், இன்னும் இவர்களே நேர் வழி பெற்றவர்கள் என்று நெற்றிப் பொட்டில் அடிப் பது போல் 36:21 குர்ஆன் வசனம் கூறிக் கொண்டி ருக்க, இதை நிராகரித்துத் தங்கள் மீது விதிக்கப் பட்டக் கட்டாயக் கடமையான மார்க்கப் பணியை அதற்குரிய கூலி-சம்பளத்தை நம்மைப் படைத்த அல்லாஹ்விடம் கேட்காமல், மனிதப் படைப்புகளிடம் கையேந்தும் இம்மவ்லவிகள் நேர்வழியில் இருக்கிறார்களா? அல்லது கோணல் வழிகளில்-வழி கேட்டில் இருக்கிறார்களா? இதை 36:21 இறை வாக்கை மீண்டும் மீண்டும் படித்து நீங்களே முடிவு செய்யுங்கள். ஆம்! அவர்களின் வயிற்றுப் பிழைப்பே பெருமை பேசும் இந்த ஆலிம்களை சட்டவிரோதமாக, திருட்டுத்தனமாக நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி அல்லாஹ்வுக்கும் அவனது அடியார்களுக்கும் இடையில் இடைத் தரகர்களாகப் புக வைத்துள்ளது. அதன் மூலம் குர் ஆனுக்கு 33:36 குர்ஆன் வசனத்தை நிராகரித்து சுய விளக்கம், மேல் விளக்கம் கொடுத்து 2:159 வசனம் கூறுவது போல் அவற்றின் நேரடிக் கருத்துக்களை இருட்டடிப்புச் செய்து அவர்களும் வழிகேட்டிலாகி, அவர்களை நம்பி அவர்கள் பின்னால் செல்லும் 99.9% மக்களையும் வழிகெடுத்து நரகில் தள்ளுகிறார்கள். 16:25 வசனம் கூறுவது போல் அவர்களின் பாவச் சுமையையும் இவர்களே சுமக்க இருக்கி றார்கள்.

அல்லாஹ்வுக்கும் அடியார்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக ஆலிம்களோ, அவாம்களோ புகவே முடியாது என்பதற்கு எண்ணற்ற குர்ஆன் வசனங்களைத் தந்துள்ளோம். இந்த வசனங்கள் அனைத்திற்கு மாறாக 39:9 இறைவாக்குக் கூறும் அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? என்ற வசனம் இம்மவ்லவிகளுக்கு பெரிய ஆதாரமாகத் தெரிகிறது. இவர்கள் நடுநிலையோடு சிந்திக்க வேண்டும். 6:50, 13:16, 35:19, 40:58 இறைவாக்கு களில் குருடனும், பார்வையுடையவனும் சமமா? என்றிருப்பதைக் காட்டி இவ்வுலகில் குருடர்கள் அனைவரும் நரகவாசிகள், பார்வையுடையோர் அனைவரும் சுவர்க்கவாசிகள் எனப் பிரிக்க முடி யுமா? 59:20 இறைவாக்குக் கூறும் சுவர்க்கவாசி களும், நரகவாசிகளும் சமமா? என்பதைக் காட்டி இவ்வுலகிலேயே சுவர்க்கவாசி, நரகவாசி எனப் பிரிக்க முடியுமா? சிந்தியுங்கள்! அப்படிப் பிரிப்பது எந்தளவு பெரிய குற்றமோ அதுபோல்தான் 39:9 வசனத்தைக் காட்டி சமுதாயத்தை ஆலிம்-அவாம் எனப் பிரிப்பதும் பெருங்குற்றமாகும். மேலும் இந்த 39:9 இறைவாக்கின் இறுதிப்பகுதி குர்ஆனைக் கொண்டு படிப்பினை பெறுவோரே அறிவுடைய வர்கள்தான் என்று நேரிடையாகக் கூறுகிறது. ஆக எண்ணற்ற குர்ஆன் வசனங்களைக் கொண்டு படிப்பினை பெறாத இம்மவ்லவிகள், தூய மார்க்கத்தைக் கலப்புள்ள மதமாக்கி ஹரமான வழியில் வயிறு வளர்க்கும் மவ்லவிகள் ஆலிமா? ஜாஹிலா? சிந்தியுங்கள்!

தங்களின் ஆலிம் வர்க்கத்தை நிலைநாட்ட ஒரேயொரு குர்ஆன் வசனமும் கிடைக்காத நிலையில், அடுத்து எங்கே தாவுகிறார்கள் தெரியுமா? உலகில் காணப்படும் அத்தனை மதங்களுக்கும் மதகுருமார்கள் இருப்பது போல் முஸ்லிம்களுக்கு நாங்கள் மதகுருமார்களாக இருக்கிறோம் என்ற வாதத்தை வைக்கின்றனர். ஒவ்வொரு மதத்தினரும் அவர்க ளது மதகுருமார்களை நம்பி அவர்கள் பின்னால் செல்வது போல், முஸ்லிம்களும் மதகுருமார்களாகிய எங்களை நம்பி எங்கள் பின்னால்தான் வர வேண்டும் என வாதிடுகின்றனர்.

அப்படியானால் உலகில் காணப்படும் அத் தனை மதங்களின் மதகுருமார்களும் அவர்களை நம்பியுள்ள மக்களை நேரான வழியில்-சுவர்க்கத்திற்கே இட்டுச் செல்கிறார்கள் என இம்மவ்லவிகள் ஏற்கிறார்களா? இல்லையே! மற்ற மதகுருமார்கள் அனைவரும் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்கின்றனர் என்று கூறும் முஸ்லிம் மதகுருமார் கள் அவர்களைப் போலவே இவர்களும் குர்ஆனின் எண்ணற்ற வசனங்களை நிராகரித்து அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறு செய்வதை வசதியாக மறந்து விடுகிறார்கள். (பார்க்க : 33:66-68)

இந்த அவர்களின் வாதமும் புஸ்வாணம் ஆனபின், அடுத்து இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் வாதம் என்ன தெரியுமா? நோய்க்கு தலைசிறந்த மருத்து வரைப் பார்க்கிறோம் வழக்குக்கு சிறந்த வழக்குரைஞரைப் பார்க்கிறோம். இப்படி ஒவ்வொரு துறைக்கும் அதில் பட்டம் பெற்ற அறிஞர் மூலமே பிரச்சினைகளைத் தீர்க்கிறோம். அதுபோல் மதத் துறைக்கு அதில் பட்டங்கள் பெற்ற மவ்லவிகளையே நம்பி ஏற்கவேண்டும் என்ற வாதமே அது. மவ்லவிகள் குறிப்பிடும் அனைத்துத் துறைகளும் உலகியல் துறைகளாகும். அவற்றில் நூற்றுக்கு நூறு மனிதர்களும் ஈடுபட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. 5% அத்துறைகளில் படித்துப் பட்டம் பெற்றிருந்தாலும் போதும். எஞ்சியுள்ள 95% மக்களின் விவகாரங்களைத் தீர்த்து வைக்க முடியும். மேலும் அவர்கள் பல்வேறு பட்டங்களைப் பெற்றிருந்தாலும் அவர்களின் தகுதியையும் திறமையையும் 95% மக்கள் தங்கள் சொந்த அனுபவத்திலேயே அறிந்து அவர்களை விட்டுவிலக முடியும். தொடர்ந்து ஏமாற வழி ஒருபோதும் இல்லை. இத்துறைகளைத் தங்கள் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்ள மார்க்கத் தில் தடை ஏதும் இல்லை!

அதற்கு மாறாக மார்க்கத்தை வயிற்றுப் பிழைப் பாகக் கொள்வது ஹராம்களிலேயே மிக மிகக் கொடிய ஹராமாகும். மிகக் கடுமையான தண் டனைக்குரியது. மேலும் மார்க்கத்தை ஒவ்வொரு ஆணும் பெண்ணும் குர்ஆன், ஹதீஃதை நேரடி யாகப் படித்து அறிவது கட்டாயக் கடமை. இதை 2:186, 7:3, 18:102,106, 59:7, 62:2 இறைவாக்குகள் உறுதிப்படுத்துகின்றன. மேலும் இம்மவ்லவிகள் காட்டும் வழி நேர்வழியா? கோணல் வழியா என் பதை குர்ஆனைப் படிக்காதவர்கள் ஒருபோதும் இவ்வுலகில் அறிய முடியாது. நாளை மறுமையில் மட்டுமே அறிய முடியும். ஆயினும் அது அவர்க ளுக்கு எவ்விதப் பலனையும் தராது. நரகில் விழ நேரிடும். எனவே உலகியல் துறைகளில் படித்துப் பட்டங்கள் பெற்றவர்களை நம்பிச் செயல்படுவது போல், அசலான மறுமை வெற்றி பற்றிய மார்க்கத் துறையில் இம்மவ்லவிகளை நம்பி ஒருபோதும் செயல்பட முடியாது. அது பெருந்தவறாகும், வழி கேடாகும், நரகில் சேர்க்கும். பார்க்க (33:36,66,67, 68) எனவே மவ்லவிகளின் இந்த வாதமும் வீழ்ந்து போகிறது.

அவர்களின் இன்னொரு முரட்டுவாதம் என்ன வென்றால் முன் காலத்தல் எழுதப்பட்ட அனைத்து நூல்களையும் அவற்றிற்காக எழுதப்பட்ட உரைகளைக் கொண்டே விளங்குகிறோம். அதுபோல் குர் ஆனையும் முன்னோர்கள் எழுதிய உரைகளை-விரி வுரைகளைக் கொண்டே விளங்க முடியும். எனவே இடைத்தரகர்கள் இல்லாமல் அல்லாஹ்வை நெருங்க முடியாது என்ற வாதமாகும்.

இவர்கள் கூறும் நூல்கள் அனைத்தும் இவர் களைப் போல் 17:85 இறைவாக்குக் கூறும் மிகமிக அற்ப அறிவைக் கொண்டவர்கள் எழுதியவையே. அந்தக்கால சூழ்நிலை, அன்றிருந்த அறிவியல் முன் னேற்றம், அவர்களது ஆற்றல் அடிப்படையிலேயே அவர்கள் நூல்கள் அமைந்துள்ளன என்பதை மறுப் பதற்கில்லை. அதே சமயம் இன்றைய அறிவியல் முன்னேற்றம் காரணமாக, அந்நூல்களுக்கு மேல் விளக்கம் உரை, விரிவுரை எழுதி விளக்கும் கட்டா யம் இருப்பதை மறுக்க முடியாது.

இந்த வாதம் சர்வ வல்லமை மிக்க முக்கால மும் அறிந்த, அறிவியல் நுட்பங்கள் அனைத்தையும் தன் கைக்குள் வைத்திருக்கும் அல்லாஹ்வின் கலாமான குர்ஆனுக்கு-இறை நூலுக்குப் பொருந் துமா? ஒருக்காலும் பொருந்தாது. அல்லாஹ் 2:159ல் கூறு வது போல் மனிதர்களுக்கென்றே தெள்ளத் தெளி வாக குர்ஆனை விளக்கி இருக்கும் நிலையில், அதில் அற்பமான (17:85) அறிவையுடைய மனிதன் தனது மூக்கை நுழைத்து இறை வசனங்களுக்கு மேல் விளக்கம் கொடுப்பதாக இருந்தால் அவர்கள் அல் லாஹ்வுக்கு மேல் அல்லாஹ்வாக (நவூதுபில்லாஹ்) இருக்கவேண்டும். (பார்க்க : 2:159-162, 33:36) இந்த மவ்லவிகள் பகிரங்கமான வழிகேட்டில் இருப்பது உள்ளங்கை நெல்லிக்கனியாக புரிகிறதே. இம் மவ்லவிகளை நம்பி அவர்கள் பின்னால் செல்பவர்கள் நாளை நரகில் கிடந்து வெந்து கரியாகிக் கொண்டு அழுது பிரலாபிப்பதை ஒருவரை ஒருவர் சபிப்பதை 33:66,67,68 குர்ஆன் வசனங்கள் படம் பிடித்து காட்டுகின்றன. இந்த மவ்லவிகளின் மாய்மாலங்கள் அனைத்தும் புஸ்வானமாகிப் போனவுடன் அடுத்து இந்த மவ்லவிகள் எடுத்து வைக்கும் அண்டப் புளுகு என்ன தெரியுமா?

பார்த்தீர்களா? ஆணவம், அகங்காரம்,பெருமை பிடித்த அபூஅப்தில்லாஹ்வை. கடந்த ஆயிரம் வருடங்களாக பெரும் பெரும் மேதைகளாக, அறிஞர்களாக, குர்ஆனையும், ஹதீஃத்களையும் கரைத்துக் குடித்த, முஸ்லிம்களால் பெரிதும் போற்றப்படும், மதித்து மரியாதை செய்யப்படும் ஆலிம் பெருமக் கள் எல்லாம் அறிவிலிகளாம், இவர் என்னவோ அவர்கள் அனைவரையும் கடந்த பெரும் மேதை யாம். அரபு கிதாபுகளின் அட்டையைக் கூட பார்த் தறியாத தற்குறியின் பிதற்றலைப் பார்த்தீர்களா? என்று இந்த மவ்லவிகள் அவதூறு பரப்பித் திரிவதையும், அவர்களது பக்தர்கள் நாடு முழுவதும் அவற்றைக் கொண்டு செல்வதையுமே பார்க்கிறோம்.

2:159 இறைவாக்கை நிராகரித்து இந்த மதகுரு மார்கள் தங்களின் சுய கருத்துக்களை தஃப்சீர்- விரி வுரை என்ற பெயரில் குர்ஆனின் நேரடிக் கருத்துக்களை இருட்டடிப்புச் செய்வது போல் நாமும் எமது சொந்தக் கருத்தை கையில், மடியில் இருந்து மார்க் கத்தில் புகுத்தினால், அவர்கள் சுமத்தும் இந்தக் குற் றச்சாட்டு நியாயமாகும். நாமோ எமது சுய கருத் தைச் சொல்லாமல், இரண்டாவது கருத்துக்கு இடமே இல்லாத செயல்படுத்த வேண்டிய “”முஹ்க்கமாத்” வசனங்களை அப்படியே எடுத்து வைக்கிறோம். குர்ஆன் அத்தியாய, வசன எண்களைக் கொடுத்து ஒவ்வொரு ஆணும், பெண்ணும் நேரடியாக குர் ஆனை எடுத்துப் பார்க்கச் சொல்கிறோம். அவற்றி லுள்ளதை அப்படியே ஏற்று நடக்கச் சொல்கிறோம். அப்படியே மேலதிகமாகச் சொன்னாலும் குர்ஆன் கூறும் அதே கருத்தை வலியுறுத்திச் சொல்கிறோமேயல்லாமல் 2:159 இறைவாக்குக் கூறுவது போல் அவற்றின் நேரடிக் கருத்தை இருட்டடிப்புச் செய்வதில்லை. உள்ளதை உள்ளபடி எடுத்து வைக்கிறோம். இங்கு எமது சுய கருத்து எங்கே இருக்கிறது? எடுத்துக் காட்டுவார்களா? காட்டட்டும். அல்லது கடந்த ஆயிரம் ஆண்டுகளாக மதித்துப் போற்றும் மாமேதைகள் எல்லாம் அல்லாஹ்வை விட, அவ னது தூதரை விட அதிபுத்திசாலிகள், மாமேதைகள் (நவூதுபில்லாஹ்) எனவே அல்லாஹ் மற்றும் அவ னது தூதரின் விளக்கத்தை விட அம்மேதைகளின் மேல்விளக்கத்தையே எடுத்து நடக்க வேண்டும் என்று பகிரங்கமாகச் சொல்லட்டும். சொல்வார்களா?

அம்மேதைகளில் யாராவது மார்க்கத்தை மதமாக்கி அதைத் தங்களின் வயிற்றுப் பிழைப்பாகக் கொள்வதை விட கொடிய ஹராம் வேறில்லை என்று நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்கள் கூறுவதை மறைக்காமல் எடுத்துச் சொன்ன ஒருவரையா வது இம்மவ்லவிகள் குறிப்பிட்டுக் காட்ட முடியுமா?

குர்ஆன் முஸ்லிம்களின் வேதம் அல்ல; உலக மக்கள் அனைவருக்கும் ஏகன் இறைவனால் இறக் கியருளப்பட்ட இறுதி வாழ்க்கை நெறி இறைநூல், அதை எம்மொழியினரும் தங்கள் தங்கள் மொழிக ளில் படித்துச் சரியாக விளங்க முடியும் என்று சொன்ன ஒரேயயாரு மேதையாவது காட்டுவார்களா?

ஆக அல்லாஹ்வுக்கும் அடியாருக்குமிடையில் இடைத்தரகராக யார் புகுந்தாலும் அது கொடிய ´ர்க்கே. அல்லாஹ்வால் மன்னிக்கப்படாத பெருங் குற்றமே! 2:186, 7:3, 18:102-106, 33:36, 59:7 இந்த குர்ஆன் வசனங்களை நேரடியாகப் பெரும் ஜிஹா தாக (பார்க்க 29:69) யார் படித்து விளங்கிறார்களோ அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வுக்கும் அடியார் களுக்குமிடையில் சிலைகளைப் புகுத்துகிறவர்க ளும் ´ர்க் செய்கிறவர்களே, சமாதிகளை (கபுரு) புதுத்துகிறவர்களும் ´ஷிர்க் செய்பவர்களே, தரீக்கா வின் அடிப்படையில் பீர்களைப் புகுத்துகிறவர்க ளும் ´ர்க் செய்பவர்களே, மத்ஹபுகளின் அடிப் படையில் இமாம்களைப் புகுத்துகிறவர்களும் ´ர்க் செய்பவர்களே, அஹ்ல ஹதீஃத், முஜாஹித், இயக் கம், கழகம், ஜாமஅத், அமைப்பு என மனிதர்களில் எவரை இடைத்தரகர்களாக கொண்டாலும் ´ஷிர்க்கே , ஹதீஃதை நேரடியாக விளங்குவதை விட்டு கலீஃபாக்கள், நபிதோழர்களான ஸலஃபிகள் விளங்கியதையே நாம் ஏற்று நடக்க வேண்டும் என் பதும் அவர்களை இடைத்தரகர்களாக கொள்ளும் ´ர்க்கே. நபி(ஸல்) அவர்களுக்குப் பிறகு ரசூல், நபி என்று யாரை இடைத்தரகராகப் புகுத்தினாலும் ´ர்க்கே. இதைத்தான் அல்லாஹ் 12:106 இறைவாக்கில் உங்களில் அதிகமானோர் இணை வைக்காத நிலையில் ஈமான்-நம்பிக்கை கொள்ளவில்லை என கடிந்து கூறுகிறான்.

அல்லாஹ்வினதும், அவனது இறுதித் தூதரின தும் நேரடிப் போதனைகளை விட்டு, மனிதரில் கலீஃபாக, நபி தோழர் முதல் எவரைத் தங்களுக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் தரகர்களாகக் கொள்கி றார்களோ அவர்கள் அல்லாஹ்வுக்கு இணை-´ர்க் வைப்பவர்களே. மனிதர்களில் எவரையும் அல் லாஹ்வுக்கும் தங்களுக்கும் இடையில் தரகர்களாகக் கொள்ளாமல் நேரடியாக குர்ஆன், ஹதீஃதைப் படித்து விளங்கி நடப்பவர்களே நேர்வழி நடப்ப வர்கள். 62:2 கூறும் பரீட்சையில் வெற்றியாளர்கள்.

மேலே நாம் எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங் கள் அனைத்தும் யாருக்குப் பலன் தரும் தெரியுமா? 51:55 இறைவாக்குக் கூறுவது போல் உள்ளத்தில் ஈமான் -இறைநம்பிக்கை இருப்பவர்களுக்கு மட் டுமே பலன் தரும். 49:14 இறைவாக்குக் கூறுவது போல், உள்ளத்தில் ஈமான் நுழையாமல் உதட்டள வில் ஈமான் கொண்டவர்கள் அதாவது பெயர் தாங்கி முஸ்லிம்களுக்கு இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தும் 17:41,45-47,89, 22:72, 25:60, 39:45 இறைவாக்குகள் கூறுவது போல் வெறுப்பையே அதி கப்படுத்தும். 47:24 இறைவாக்குக் கூறுவது போல் தங்கள் உள்ளங்களுக்கு குர்ஆனை படிக்காமல் பூட் டுப் போட்டுக் கொண்டு எம்மை மிகமிக வெறுப்பு டன் நோக்குவார்கள், அவதூறு பரப்புவார்கள் என்பது அறிந்த விஷயமே

ஆலிம்கள் எனப் பெருமை பேசும் மவ்லவிகள் 7:146 இறைவாக்குக் கூறுவது போல் குர்ஆனை விட்டே அல்லாஹ்வால் திருப்பப்படுவதால் அவர் களால் நேர்வழியை அறிய முடியாது. அதற்கு மாறாக உலகியல் துறைகளில் பல பட்டங்கள் பெற்று பேரறிஞர்களாக மதிக்கப்படும் முஸ்லிம் பட்டதாரிகளுக்கு மேலே எடுத்தெழுதியுள்ள குர்ஆன் வசனங்கள் விளங்கவில்லையா? அவற்றை விளங்க முடியா மரமண்டைகளா அவர்கள்?. இல்லை! ஆனால் உண்மையை உள்ளபடி எடுத்துச் சொன்னால் மக்களிடையே தங்களுக்கிருக்கும் செல்வாக்கு சரிந்து விடும். பேசுவதற்கு மேடை கிடைக்காது. உலகியல் வசதி வாய்ப்புகள் இல்லா மல் போய் விடும் என்ற அச்சமே முதல் காரணம். மேலும் உலகியல் துறைகளில் அவர்கள் அறிஞர் களாக மதிக்கப்படுவதால் அவர்களிடமும் பெருமை ஒட்டிக் கொண்டே இருக்கும். 27:14 இறைவாக்குச் சொல்வது போல், அவர்களது உள்ளங்கள் உண்மையை ஒப்புக் கொண்டபோதும், பெருமை கொண்டவர்களாக அநியாயமாக உண்மையை மறுக்கும் நிலையில் இருக்கிறார்கள்.

தினசரி குர்ஆனை பொருள் அறிந்து படித்து வருகிறவர்கள் பெரும்பான்மையினர் அல்லாஹ்வுக்கு நன்றி கெட்டவர்கள், அல்லாஹ்வை நிராகரிப்பவர்கள், நரகத்திற்குரியவர்கள் என்பதை அறிய முடியும். குறிப்பாக 32:13, 11:118,119 இறைவாக்குகள் இந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. மேலும் புகாரீ(ர.அ) 3348, 4741, முஸ்லிம் 379 ஹதீஃத்கள் ஒவ்வொரு 1000லும் 999 பேர் நரகிற்குரியவர்கள் என்று நேரடியாகக் கூறுகின்றன. பெருங் கூட்டத் தைப் பற்றிய மயக்கம் நபிமார்களுக்கே இருந் துள்ளது. அல்லாஹ்வே அவர்களை வஹீ மூலம் திருத்தி இருக்கிறான் என்பதை 5:100, 6:116 வசனங்களை நீங்களே நேரடியாகப் படித்து விளங்கலாம்.

யார் மறுமையை விட இவ்வுலகை நேசிக்கிறார்களோ அவர்கள் நரகை நிரப்ப இருக்கும், ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேரின் விருப்பப்படி நடக்கவே முற்படுவார்கள். யார் இவ்வுலகை விட மறு மையை அதிகமாக நேசிக்கிறார்களோ அவர்களே இந்தக் கூட்டத்தைப் பார்த்து மயங்காமல், கூட்டம் சேர்ப்பதை நோக்கமாகக் கொள்ளாமல் குர்ஆனில், ஹதீஃதில் உள்ளதை உள்ளபடி எடுத்துச் சொல் வதை லட்சியமாகக் கொண்டு செயல்படுவார்கள். நீங்கள் அதில் எந்த அணி என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக!

Previous post:

Next post: