சதீஸ்குமார், மதுரை, 7094516303
பெருமை அடிக்கும் மக்களை இறைவன் கண்டிக்கிறான். இதை நபி(ஸல்) அவர்களும் கண்டிக்கிறார்கள். இஸ்லாம் கூறும் பண்பு உண்மை, நிதானம், தூய்மை, நம்பிக்கை, வணிகம் போன்ற இவை யாவும் நற்பண்பு அனைத்துமே ஒருவனை எல்லா வகையிலும் பண்படுத்தக்கூடியவை.
இறைவன் கூறுகிறான்:
என்னை அழையுங்கள் உங்களுக்கு பதில ளிக்கிறேன். எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான். அல்குர்ஆன் : 40:60
உங்கள் இறைவன் ஒரே இறைவனே; மறு மையை நம்பாதோரின் உள்ளங்கள் (இதை) மறுக்கின்றன. அவர்கள் பெருமையடிப்பவர் கள். அல்குர்ஆன்:16:22-23
இறைவன் மீது பொய்யை இட்டுக்கட்டி யோரின் முகங்களை கருத்ததாக மறுமையில் நாளில் காண்பீர். ஆணவம் கொண்டோருக்கு நரகத்தில் தங்குமிடம் இல்லையா?
அல்குர்ஆன் : 39:60
நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள் என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப் பார்கள்; பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. அல்குர்ஆன் : 39:72
(ஏக இறைவனை) மறுத்தோர் நரகத்தின் முன்னே கொண்டு செல்லப்படும் நாளில், உங் கள் உலக வாழ்க்கையில் உங்கள் நன்மைகளை நீங்களே அழித்துவிட்டீர்கள். அதிலேயே இன் பம் கண்டீர்கள். நியாயமின்றி பூமியில் நீங்கள் பெருமையடித்துக் கொண்டிருந்ததாலும் நீங்கள் குற்றம் புரிந்து கொண்டிருந்ததாலும் இன்று இழிவு தரும் வேதனையைப் பரிசாக வழங்கப்படுகின்றீர்கள் (என்று கூறப்படும்)
அல்குர்ஆன் : 46:20
பெருமை கூடாது. அல்குர்ஆன் பார்க்க :
4:174, 6:93, 7:146, 40:75, 45:37, 59:23, 74:3, 17:37, 24:11, 31:18, 39:42
பணவசதியால் பெருமையில்லை :
2:247, 15:88, 20:131, 23:55, 10:43, 11:10
பெருமையடித்தல் பாவத்தில் தள்ளும் : 2:206
ஆள் பலத்தால் பெருமையில்லை : 18:34, 9:25
பெருமையடிப்போருக்கு நரகம் :
22:9, 40:75,76, 46:20
பெருமை ஷைத்தானின் குணம் :
7:12,13, 15:31, 38:74, 2:34
பெருமையடிப்போர் நேர்வழி பெறமாட்டார்கள்: 28:39, 40:35, 41:15, 63:5
உண்மையின்றி பூமியில் பெருமையடிப் பவர்களை என் வசனங்களை விட்டும் திருப்பி விடுவேன். அவர்கள் வசனங்கள் அனைத்தை யும் கண்டபோதிலும் அவற்றை நம்பமாட்டார் கள். அவர்கள் நேர்வழியைக் கண்டால் அதனை ஏற்கமாட்டார்கள். கோணல் வழிகளைக் கண் டால் அவற்றையே நேர்வழியாக எடுத்துக் கொள்வார்கள். அது (ஏனெனில்) அவர்கள் நம் வசனங்களைப் பொய்யாக்கினார்கள். இன் னும் அவற்றை விட்டும் அலட்சியமானவர்க ளாக இருந்தார்கள் என்று காரணத்தினா லாகும். (7:1476)
பெருமையடிக்காதவர்க்கே சொர்க்கம் : 28:83
இறைவனின் இறுதித் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். சிறிது அளவேனும் தன் உள்ளத் தில் பெருமை கொண்ட ஒருவர் சுவர்க்கம் நுழையமாட்டார் என்று நபி(ஸல்) கூறினார் கள். அப்போது ஒருவர் ஒரு மனிதர் ஆடை அழகாகவும் தன் செருப்பு அழகாகவும் இருந் திட விரும்புகிறார்; இது(பெருமையாகுமா) என்று கேட்டார். நிச்சயமாக இறைவன் அழகா னவன், அவன் அழகையே விரும்புகிறான், பெருமை கொள்வது சத்தியத்தை நிராகரிப்ப தும் பிற மக்களைக் கேவலமாக எண்ணுவது மாகும். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) நூல் : முஸ்லிம் :91
மேலும் ஹதீஸ்களை பார்க்க :
புகாரி : 5790, 5788, 4918, முஸ்லிம் : 2021, 2853, 2620, 2088, 107, 2087, 2847
ஆகவே பெருமை அடிப்பதை விட்டு நன்மை பக்கம் அதிகம் கவனம் செலுத்துவோம். ஆக குர்ஆனையும் நபி மொழியையும் நேரடி யாகப் படித்து அதன் பொருள் உணர்ந்து படித்து ஆலிம் எனப் பெருமையடிக்கும் மெளலவிகள் உடும்பு பிடியிலிருந்து விடுபடுவோமாக.