சமுதாய மயம்!
விமர்சனக்குழு, அந்நஜாத்
ஏகன் அல்லாஹ்வின் அளப்பெரும் அருளால், சிறு, பெரும் வியங்கள் என்ற பாகுபாடின்றி, எல்லாவற்றிலும் இஸ்லாத்தை அடைவதை இலட்சி யமாக்கி,
இஸ்லாத்தை இஸ்லாமாய்க் காட்டும் இஸ்லா மிய இலட்சிய இதழாய் ஏகன் அல்லாஹ், ஏப்ரல் 1986 முதல் அந்நஜாத்தை மலரச் செய்துள்ளான். அல்ஹம்துலில்லாஹ்.
ஏகன் அல்லாஹ்வின் நல்லருளால், அதுவரை தமிழ் முஸ்லிம்கள் கவனத்துக்குக் கொணரப்படாத பல மார்க்கக் கருத்துக்களையும் அவைகளுக்குரிய சரியான மார்க்கத் தீர்வையும் “அந்நஜாத்’ தகுந்த ஆதாரங்களுடன் வெளியிட்டு வருகிறது. அந்நஜாத் வெளிவர உறுதுணையாக இருந்த பல முன்னணியா ளர்கள் தடுத்தும் பல சர்ச்சைக்குரிய கருத்துக்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் இடம் பெற்று வருவதும் குறிக்கத்தக்கது. கோடிட்டு கொள்க.
பி.இசட்(பி.ஜைனுல் ஆபிதீன்) நிறுவிய புதியTNTJ மத்ஹப் பிரிவுக்கு முன் பல்வேறு அமைப்புக் களையும், இயக்கங்களையும் நிறுவியும் நிர்வகித்தும் வந்தவர். அவருக்கு வளைந்து கொடுப்போர்க்கு விசுவாசம் காட்டுவார். வாசகர்கள் கேள்விக் கணை களைத் தொடுக்கும்போது அவர்களைக் கொடும் பாவிகளாய்ச் சித்தரிப்பதிலும், சித்திரவதைச் செய்வதிலும் PரZக்கு நிகர் PZட்டே. அதற்குப் பலியானோர் பலர். “பளிச்’ உதாரணம்: ஹாமித் பாக்ரி, மன்பஈ (காயல்பட்டினம்)
1986 ஏப்ரல், நஜாத் முதல் இதழில் ஆசிரியராகப் பொறுப்பேற்று, அதிலிருந்து PZ வெளியேறும் வரை, வெளி வந்துள்ள இதழ்களிலும், அதற்குப் பின் வெளிவந்த, வெளிவரும் இதழ்களிலும்…
1. தர்கா, 2.ஃபாத்திஹா, 3.தரீக்கா, 4. மவ்லீத், 5.மத்ஹப்…
….இத்யாதி……இத்யாதி……..பட்டியலிட முடியாத மார்க்க மேதைகள், அதுவரை முஸ்லிம் உலகிற்கு இனங்காட்டாத….
´ஷிர்க், குஃப்ர், பித்அத்… போன்றவைகளைத் துணிந்து துகிலுரித்துக் காட்டுவதில் அந்நஜாத் சர்வ தேச அளவில் முன்னணி வகித்து வருகிறது. இதை மற்றெல்லோரைக் காட்டிலும் நன்கறிவார். உண்மை உணர்ந்திருந்தாலும் அவருக்கு உறுதுணை யாக இருந்தோர், தொடர்ந்து உறுதுணையாக இருப்போரும் நன்கறிவர். சுயலாபத்திற்காக அவர் கள் அதை இருட்டடிப்புச் செய்தும் வருகின்றனர். சுய விளம்பரத்துக்காக அந்நஜாத் மீது பொய்யாய்ப் புனையப்பட்ட இல்லாத குற்றச்சாட்டுகளை வாரி வாரி இறைத்தும் வருகின்றனர். உண்மையும், யதார்த்தமும் இதுதான். மயக்கு மொழிகளில், மயக்கும் எழுத்துக்களில் மயங்கி சுயத்தையும், சுய சிந்தனையையும் இழந்த பலர் பெருமளவில் கூட்டம் கூட்டமாய்…
PZன் புதியTNTJ மத்ஹப் பிரிவில் இணைந்து வருகின்றனர். இவர்களும், இவர்கள் போன்றோ ரும் உண்மை அறிய வாய்ப்பில்லை. உண்மை அறிய விரும்பினாலும் தடுக்கப்படுகின்றனர். மீறி கால தாமதமாய் உணர்ந்த மிகச் சிலர், நமக்கேன் வீண் வம்பு என ஒதுங்கி விடுகின்றனர்.
முழு உலகையும் சோற்றுக்குள் மறைக்கும் தந்திரம், மந்திரம் கற்றவர்கள் வலையில் அப்பாவி பக்தகோடிகள் இன்னும் விடுபட முடியாமல் சிக் குண்டு கிடக்கின்றனர். அத்தகையோருக்கு இன்றள வும் உண்மையை அறிவு விழியால் காணும் வாய்ப் பும் கிட்டவில்லை. அவர்களுக்குக் குறிப்பாகவும், மற்றவர்களுக்குப் பொதுவாகவும், அனைவரும் உண்மை அறியும் உயர் நோக்குடன்,
ஏகன் அல்லாஹ்வின் பொருத்தம் நாடி, PZன் புதியTNTJ மத்ஹப் பிரிவின் மார்க்க மோசடிகளை உடனுக்குடன் அந்நஜாத் விமர்சித்து வருவது கூர்ந்து நோக்கத்தக்கது.
1986 ஏப்ரல், PZ அந்நஜாத்தில் ஆசிரியராக பொறுப்பேற்றப் பின்னர்தான், தமிழ் முஸ்லிம்கள் வாழும் நாடு, நகரம் பட்டித் தொட்டிகள் என்று கடல்கடந்த நாடுகளிலும் பிரபல்யமானார். அவர் இன்றடைந்துள்ள பெயர், புகழ், பட்டம், பதவி வசதிக்கும் அந்நஜாத்தில் ஆசிரியராய் அறிமுக மானது தான் முழுமுதல் முக்கிய காரணம்.
இதை அறியாத PZன் புதியTNTJ மத்ஹப் பிரிவின் கண்மூடிப் பக்தகோடிகளின் முக்கிய கவனத்துக்குக் குறிப்பாகவும், பொதுவாய் முஸ்லிம் பொதுமக்கள் கவனத்துக்கு கொண்டு வருவது அந் நஜாத்தின் தார்மீக கடமை. அதை அந்நஜாத்தும் செம்மையாகச் செய்து வருகிறது. அதற்காக PZன் புதியTNTJ மத்ஹப் பிரிவினர் கொந்தளிப்பதும், ஆர்ப்பரிப்பதும் அர்த்தமற்றது.
அன்றும், இன்றும் இனி என்றும் PZன் புதியTNTJ மத்ஹப் பிரிவின் மார்க்க மோசடிகளுக்கு அந்நஜாத் இன்றளவும் உறுதுணையாக இல்லை. இன்ஷா அல்லாஹ், இனியும் இருக்காது. அந்நஜாத் தின் உறுதியான உத்திரவாதம் இது.
வெளியிட்டதைத் திரும்பத் திரும்ப வெளியிடுதல்:
பொய் புனைந்துரைகள், உண்மை போல், வெற்று வார்த்தை வீச்சாய் அந்நஜாத் மீது அள்ளி வீசப்பட்டு வருகின்றது. அதை திரும்பத் திரும்ப, PZன் புதியTNTJ மத்ஹப் பிரிவினர் வசைகளாய்ப் பாடி வருகின்றனர்.
PZன் புதியTNTJ மத்ஹப் பிரிவினர் அல்லாத மற்ற பழைய, புதிய பிரிவார்களும் அதுபோல் அல்லது வேறு விதமாய்க் கேட்டதைத் திரும்பத் திரும்பக் கேட்டு, திரும்ப திரும்ப வசைபாடி அந்நஜாத்தை அசிங்கப்படுத்தி வருகின்றனர். அனைத்தையும் அந்நஜாத் எதிர்கொண்டு வருகிறது.
வெறும் வெட்டிப் பேச்சுகளுக்கும், பொய்க் கற்பனைக் குற்றச்சாட்டுகளுக்கும், வீண் வம்புக்கு இழுக்கும் கீழ்த்தரமான விமர்சனங்களுக்கும் அந் நஜாத் விளக்கம் கொடுக்க வேண்டுமா? என பல நெருக்கமான அன்பர்கள் வினவி வருகின்றனர். அவர்கள் அன்பையும், அக்கறையையும் அந்நஜாத் மதிக்கிறது. அதே நேரத்தில் எய்தப்படுபவை எது வாயினும் உடனுக்குடன் பிடுங்கி எறியப்பட வேண்டும். இல்லையயனில், அந்நஜாத்தின் தூய மார்க்கப்பணி புரையோடிய புண்ணாகிவிடும்.
வீசப்படும் விமர்சனங்கள் எத்துணை விங் களைக் கக்கினாலும், அவை அத்துணைக்கும், பொறுப்புணர்வோடு உடனுக்குடன் அந்நஜாத் விளக்கமளித்து வருகிறது. யார் எப்படி வம்புக்கு இழுத்தாலும் குடுமிப்பிடி சண்டைக்குக் கூப்பிட் டாலும்…
சொன்ன உண்மைகளை திரும்பத் திரும்பச் சொல்லும் குர்ஆனின் பாணியைப் பின்பற்றி எழுதியவைகளை மீண்டும், மீண்டும் அந்நஜாத் மறு பதிப்புகளாய் வெளியிட்டு வருகிறது.
“கூறியது கூறல்’ குற்றம் என்பது மனிதர்கள் கண்ட (இலக்கணம்) வழிகேடு. கூறியவைகளைத் திரும்பத் திரும்ப நினைவூட்டல் குர்ஆனின் அறிவுறுத் தல், நேர்வழி. அதுவே அந்நஜாத்தின் பாணி.
இயல்பாக குர்ஆனின் பாணி, அந்நஜாத்தின் பாணியாக அமைந்துவிட்டது. அல்ஹம்துலில்லாஹ். குர்ஆனின் பாணியை அப்படியே அந்நஜாத் அடி பிசகாமல் பின்பற்றி வருகிறது. எதன் மீதும், எவர் மீதும் இம்மியும் அந்நஜாத்துக்குத் தனிப்பட்ட விரோத குரோதங்கள் இல்லை. தனிப்பட்ட முறை யில் தாக்குதல் நடத்தும் அவசியமும் அந்நஜாத்துக்கு இல்லை.
சமுதாயமாகுதல் :
மனிதர்கள் சமுதாயம் ஆவது எப்போது?
1. நன்மை செய்யப் பணித்தல்!
2. தீமையைத் தடுத்தல்!
முதலாவது எளிதானது, இரண்டாவது கடின மானது, இரண்டிலும் ஒரு சேர ஈடுபடும் மனிதர் தான் “உம்மா’ சமுதாயமாகிறார். இது மனிதக் கண்டு பிடிப்பில்லை, ஏகன் அல்லாஹ்வின் அருளுரை.
மேலும் (மக்களை) நன்மையின் பக்கம் அழைப் பவர்களாகவும், நல்லதை கொண்டு ஏவுபவர்களாக வும், தீயதிலிருந்து தடுப்பவர்களாகவும், உங்களில் உள்ளோர் ஒரு “உம்மா’ சமுதாயத்தவராய்த் திகழட்டும். இன்னும் அந்த சமுதாயத்தவரே வெற்றியாளர்களாவர். குர்ஆன் : 3:104
ஏகன் அல்லாஹ்வின் ஆணை இது. இதில் சமரசம் எதற்கும் இடமில்லை. கூடுதல் குறைவின்றி வளைத்தல், நெளித்தல், திரித்தலின்றி மார்க்க உண்மைகளை உள்ளது உள்ளபடி மறைக்காமல் மக்களிடம் எடுத்துக் காட்டுதல் மகத்தான சேவை!
மார்க்க மோசடி தொட்டால் ஒட்டிக் கொள் ளும் தொற்று வியாதி, தொற்று வியாதி எளிதாக குணப்படுத்த முடியாதது, மாபெரும் தீமை. துவக் கத்தில் இம்மார்க்க மோசடிகள் அவ்வளவாக கண்டு கொள்ளப்படவில்லை. போகப் போக.., காலம் செல்ல செல்ல…. இன்று வெட்ட முடியாத காடாய் இம்மார்க்க மோசடிகள் மண்டிக் கிடக்கின்றன. மார்க்கமறிய விழைவோர், மார்க்க மோசடிகளை உண்மை மார்க்கமாய் நம்புமளவு எனில் மார்க்க மறியா பாமரர் நிலை என்ன? எல்லாப் பாதிப்புக் களும் பாமரர் தலையில்தானே இடியாய் விழுகிறது.
எல்லாப் பிரிவுகளிலும்…
ஸ முட்டி மோதிக் கொள்வது யார்?
ஸ வார்த்தைகளால் குரைத்தும், கடித்தும் கொள்வது யார்?
ஸ உறவுகளைத் துண்டித்திருப்பது யார்?
ஸ உயிரால், உடலால், பொருளால் பெருமளவில் இழப்புக்களைச் சந்தித்து வருவது யார்?
ஸ பிரிவுகள் அனைத்தையும் சார்ந்த அப்பாவி மக்கள் தான்.
இதற்கெல்லாம் காரணம் என்ன?
பிரிவுகள்… பிரிவுகள்….பிரிவுகளே…!
பிரிவுகள்… பிரிவுகள் விளைவித்து வரும் மேற் சொன்ன கேடுகள்… சிலமாதிரித் துளிகள்… மற்றக் கேடுகள், பெருகும் மஹா மஹா சமுத்திரங்கள். அவை சொல்லில், எழுத்தில் மட்டுப்படுத்தக் கூடிய தாய் இல்லை.
ஒவ்வொரு பிரிவின் கேடுகளும் சில நேரங்களில் ஒத்தும், மற்ற பல நேரங்களில் மாறுபட்டு நிற்பதும் கூர்ந்து நோக்கினால் மட்டும் அறிய முடியும். மேலோட்டமாய்க் காணக் கிடைப்பதில்லை. எல் லாப் பிரிவுகளின் கேடுகளையும், ஒரு சேர இனம் காட்டும் விமர்சனத் திறனாய்வு நூல் எதுவும் இன்ற ளவும் எமது பார்வையில் படவில்லை. அது போன்ற நூல்களைக் கண்ணுறும் அன்பர்கள், அதை உடன் அந்நஜாத்துக்கு அனுப்பித் தருமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.
மனிதர்கள் சமுதாயமாக என்ன செய்ய வேண் டும்? ஏகன் அல்லாஹ் அதற்கான விளக்கமாய் பிறப் பித்துள்ள ஆணை இதோ : மக்களை
1. நன்மையின் பக்கம் அழைத்தல்
2. நல்லது செய்யப் பணித்தல்
3. தீயதிலிருந்து தடுத்தல்.
இம்மூன்று நல்லறங்களும் ஒருசேர நிகழ வேண் டும், இம்மூன்று நல்லறங்களிலும் ஒரு சேர ஈடுபடும் மனிதர் நல்லறம் செய்தவர், சமுதாயமானவர், மற்ற மனிதர்கள் சமுதாய மயமாக உறுதுணையாக இருப்பவர்.
மாறு செய்வோர், இறைக் கட்டளை 3:104ஐ விட்டுப் பிரிந்து நிற்பவர், இறைக்கட்டளையை விட்டுப் பிரிந்த பிரிவினைவாதி, பிரிவுவாதி, சமு தாய மயமாவதிலிருந்து தன்னைத் தடுத்துக் கொண் டவர். பிரிவுகளிலும், அணிகளிலும், குழுக்களிலும் சிக்கி இஸ்லாமியர் ஐக்கியத்தைச் சீர்குலைத்தவர், ஏகன் அல்லாஹ்வின் எச்சரிக்கையுரை :
தம்மிடம் தெளிவான இறையருளுரைச் சான்று கள் வந்த பிறகும், கருத்து மாறுபாடு கொண்டு பிரிந்தவர்களைப்போன்று, நீங்களும் பிரிந்து விடா தீர்கள், அத்தகையோர்க்கு பெரும் வேதனை உண்டு. அல்குர்ஆன் : 3:105
இஸ்லாமிய ஐக்கியம் ஓர் மகத்தான நல்லறம். அதற்கு முட்டுக்கட்டையான பிரிவுகள், அணிகள், குழுக்கள், மாபெரும் தீமை, இவர்களை அடை யாளம் காட்டுவது கட்டாயக் கடமை! நல்லறம், இவ்விரு நல்லறங்களிலும் அந்நஜாத் ஒருசேர ஈடுபட்டுள்ளது. தொடர்ந்து அந்நஜாத் வாசிப்போர் நன்கறிவர். வாசிக்காதோர் அறியவாய்ப்பில்லை. அறிக, அறிவுறுத்துக, அதனால்தான், பிரிவுகளை யும், அணிகளையும் குழுக்களையும் விமர்சிப்பதில் இருந்து அந்நஜாத்தால் விடுபட முடியவில்லை.
PZன் புதியTNTJ மத்ஹப் பிரிவையும் கூடுதல் கடுமையுடன் விமர்சிப்பதிலிருந்தும் அந்நஜாத்தால் விலகிக் கொள்ள முடியவில்லை. பிரிவுகள் கேடுகளி லிருந்து மக்களை முற்றாக விடுவிக்கும் வரை இவ் விமர்சனங்களும் நில்லாமல் நிழலாய்ப் பின் தொடரும்.
இஸ்லாத்தை அதன் தூய வடிவில் நிலைநாட்டு தல், அந்நஜாத்தின் மாறாத மகத்தான இலட்சியம் அதற்கு முட்டுக்கட்டையாக இருப்பது பிரிவுகள், அணிகள், குழுக்கள். அவை முன்னணியிலும், பின் னணியிலும் இயங்குபவர்கள், அவர்களை இனங் காட்டி விமர்சிப்பதும் மார்க்க ரீதியில் தவறான தன்று, மார்க்கத்துக்கு உட்பட்டதே!
அறிக, அறிவுறுத்திடுக,
உணர்க, உணர்ந்திடுக.
ஏகன் அல்லாஹ் அருள் செய்வானாக, ஆமீன்.
நிச்சயமாக, இதுவே என்னுடைய நேரான வழி யாகும். ஆகவே, இதனையே பின்பற்றுங்கள்; இதர வழிகளை நீங்கள் பின்பற்றவேண்டாம்; அவை உங் களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும். நீங்கள் (நேர்வழியைப் பின்பற்றி, இறைவனை) அஞ்சுவதற்காக இதனை அவன் உங்களுக்கு ஏவுகிறான். (6:153)
நிச்சயமாக எவர்கள் தங்களுடைய மார்க்கத்தை (தம் விருப்பப்படி பலவாறாகப்) பிரித்து, பல பிரிவி னர்களாகிவிட்டனரோ, அவர்களின் எந்தக் காரியத் திலும் (நபியே!) உமக்கு சம்பந்தமில்லை; அவர்களு டைய வியமெல்லாம் அல்லாஹ்விடமே உள்ளது. அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி (முடி வில்) அவன் அவர்களுக்கு அறிவிப்பான். (6:159)
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி, பல பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ (அவர்களில் ஆகிவிட வேண்டாம்; அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடம் இருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள். (30:32)
அவர்கள், தங்களிடம் ஞானம் இறைநெறி வந்த பின்னர், தங்களுக்கிடையேயுள்ள பொறாமையின் காரணமாகவே அன்றி, அவர்கள் பிரிந்து போக வில்லை; (அவர்கள் பற்றிய தீர்ப்பு) ஒரு குறிப்பிட்ட தவணையில் என்று உம்முடைய இறைவனின் வாக்கு முன்னரே ஏற்பட்டிருக்காவிடில், அவர்களி டையே (இதற்குள்) நிச்சயமாக தீர்ப்பளிக்கப்பட்டி ருக்கும்; அன்றியும், அவர்களுக்குப் பின்னர் யார் இறைநெறிக்கு வாரிசாக்கப்பட்டார்களோ நிச்சய மாக அவர்களும் இதில் பெரும் சந்தேகத்தில் இருக்கின்றனர். (42:14)