பெருவெள்ளம் கற்றுத் தரும் பாடம்…
அபூ அப்துல் ரஹீம்
சென்ற நவம்பர் இறுதியிலும், டிசம்பர் ஆரம்பத் திலும் பெருவெள்ளம் தமிழகத்தைப் புரட்டிப் போட்டுவிட்டது. ஏழைகளிலிருந்து, நடுத்தர வர்க் கத்திலிருந்து, பெரும் பெரும் செல்வந்தர்களி லிருந்து, ஜாதி, மதம், இனம், மொழி, இன்ன பிற எவ் வித வேற்றுமையும் இல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலுள்ள, மனித குலத்தினர் நரக வேதனை போல், பெரு வெள்ளம் அளித்த வேதனையை அனுபவித்தனர். அவர்களின் பரிதாப நிலைகளை ஊடகங்கள் மூலம் அறிந்த தமிழகத்தின் பிற மாவட்ட, மாநில மக்கள் மட்டுமல்ல, பிற நாடு களிலிருந்தும் வெள்ள நிவாரணப் பொருட்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன.
இதைவிடப் பெரும் தியாகத்திற்குரிய பெரும் சேவை என்ன தெரியுமா? ஒவ்வொரு மக்கள் வசிக் கும் பகுதியும் ஒரு சிறு தீவுபோல் கழுத்தளவு வெள்ளம் சூழ்ந்த நிலையில், அந்த வெள்ளத்தை பொருட்படுத்தாமல், உயிரைப் பணயம் வைத்து அதில் நீந்திச் சென்று, வெள்ளத்தால் சூழப்பட்டுப் பரிதவித்துக் கொண்டிருந்த ஆண், பெண், குழந்தைகள், உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி, தீண்டத்தகாதவர் என எவ்விதப் பாகுபாடும் காட்டாமல், அவர்களின் உணவு, நீர், உடை, மருத்துவம் என அனைத்துத் தேவைகளையும் பம்பரம் போல் சுழன்று பெரும் சேவையாற்றியவர்களின் தொண்டு மிகமிகப் பாராட்டுக்குரியது. இதில் முன்னணியில் சேவை யாற்றியவர்கள் முஸ்லிம் வாலிபர்களே.
முஸ்லிம் அல்லாதவர்கள் மூக்கில் விரலை வைத்து வியந்ததோடு, முஸ்லிம் வாலிபர்களை வியந்து பாராட்டவும் செய்தனர். ஆம்! தூய இஸ்லாமிய மார்க்கம் முஸ்லிம்களுக்குக் கற்றுத் தரும் பாடம் இது. மனித குலத்தினர் அனைவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள். அனைவரும் சம மானவர்கள். மதம், ஜாதி, இனம், நாடு, மொழி, பிரதேசம் என எந்த அடிப்படையிலும் மக்களைப் பிரிக்கக் கூடாது, வேறுபடுத்தக் கூடாது என மனித குலத்திற்கே சொந்தமான இறைவனின் இறுதி வாழ்க்கை நெறிநூல் குர்ஆன் தெளிவாக அறிவிக்கிறது.
வெள்ளம் போன்ற ஆபத்தான சூழ்நிலைகளி லும் இழி ஜாதியினராக, தாழ்த்தப்பட்டவராக ஹிந்து சமூகம் கருதுபவர்களைத் தொட்டால் தீட்டு, பிணத்தைத் தொட்டால் தீட்டு, தன் மலத் தைக் கையால் தொட்டுக் கழுவலாம், ஆனால் பிறர் மலத்தைத் தொடுவது என்ன கீழ் ஜாதியினரைத் தொடுவதே பெருந்தீட்டு போன்ற மனுநீதிச் சட்டங்கள் இஸ்லாத்தில் இல்லவே இல்லை. இந்த அடிப்படையில்தான் முஸ்லிம் வாலிபர்கள் எவ் விதச் சலனமோ, தயக்கமோ இல்லாமல் பேரிடரில் சிக்கிய மக்களுக்குத் தங்களால் ஆன உதவிகளை கழுத்தளவு நீரிலும், தங்களை முங்கச் செய்யும் நீரில் நீந்தியும் உயிரைப் பணயம் வைத்து செயலாற்றி னார்கள் செய்தார்கள். அதனால் உயிர் இழந்த வரும் உண்டு!
பிற மக்களால், குறிப்பாக ஜாதிகளால் பிரிக்கப் பட்ட ஹிந்து மக்களால் இப்பெரும் சேவைகளை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. வியப்புடன் பார்த்தார்கள். அவர்களில் நடுநிலையாளர்கள் வெகுவாகப் பாராட்டவும் செய்தார்கள். உலகள வில் இந்த முஸ்லிம் வாலிபர்களுக்குப் பேரும், புகழும், பெருத்தப் பாராட்டுகளும் கிடைத்தது என்னவோ உண்மை. ஆனால் ஏகனான இறைவ னின் பொருத்தம் கிடைக்குமா? எப்படிப்பட்ட உன்னதமான சேவைகளைச் செய்தாலும் இறைவ னின் பொருத்தத்தை மட்டுமே நாடிச் செய்ய வேண் டும். பேர், புகழை ஒருபோதும் நாடக்கூடாது. அப் படி பேர் புகழை நாடிச் செய்தால் நாளை அடைவது நரகமே என்று 17:18 குர்ஆன் வசனம் திட்டமாகக் கூறுகிறது. படித்துப் பாருங்கள். (மேலும் பார்க்க : 2:200)
இன்னும் முஸ்லிம் (ர.அ) 3865, (அ) 3527, நஸாயீ (அ) 3086, திர்மிதி(அ) 2304, அஹமது(அ) 7928 ஹதீஃத்கள் என்ன கூறுகின்றன. நாளை மறுமையில் விசாரணை ஆரம்பிக்கப்பட்டவுடன் ஹீத், ஆலிம், வள்ளல் ஆகிய மூன்று மிகமிக உயர்பணி செய்த தரப்பிலிருந்தும் உலகியல் பேர், புகழ், பதவிகளுக்கு ஆசைப்பட்டு அவர்கள் சேவை செய்ததால் மறுமையில் அவர்களுக்கு எவ்வித பாக்கியமும் இல்லை என்று கூறி தலைகுப்புற இழுக்கப்பட்டு நரகில் எறி யப்படுவதாக மிக விரிவாக அந்த ஹதீஃத் கள் கூறி மிகக் கடுமையாக எச்சரிப்பதை படித்து விளங்கி படிப்பினை பெற அன்புடன் வேண்டு கிறோம்.
வெள்ள தினங்களில் நீங்கள் செய்த சேவைகள் அரும்பெரும் சேவைகளாக இருந்தாலும் ஹீத், ஆலிம், வள்ளல் செய்த பெரும் சேவையோடு ஒப் பிட்டால் உங்களின் சேவையின் நிலை உங்களுக்கே தெரியும். இந்த நிலையில் 7:71, 12:40, 53:23 இறை வாக்குகள் கூறுவது போல், எப்படி சிலைகளுக்கு அவர்களாகக் கற்பனை செய்து சுயமாகப் பெயரிட் டுக் கொண்டு சிலை வழிபாடுகள் செய்து வருகிறார் களோ அதுபோல் இவர்கள் இயக்கங்களுக்கு இவர் களாகக் கற்பனை செய்து சுயமாகப் பெயரிட்டுக் கொண்டு இயக்க வழிபாடுகளைச் செய்து வருகின் றனர். நாம் கூறுவதை மறுத்தால் அவர்களின் இயக் கங்களின் பெயர்களை குர்ஆனிலோ, ஹதீஃதிலோ காட்டட்டுமே பார்க்கலாம். குர்ஆன், ஹதீஃதில் இல்லாதது ஒருபோதும் மார்க்கமாகாது என்று 2:159, 4:159, 33:36 குர்ஆன் வசனங்கள் கூறுவது அவர்களின் கண்களுக்குத் தெரிவதில்லை. மேலும் 2:208, 3:102,103,105, 6:153,159, 12:108, 21:92,93, 23:52-56, 30:32, 42:13,15 போன்ற எண்ணற்ற குர் ஆன் வசனங்களைப் புறக்கணித்து நிராகரித்துவிட்டு மார்க்கத்தின் பெயரால் அவர்கள் கற்பனை செய்து பெயரிட்ட இயக்கங்களைத் தூக்கிப் பிடிப்பவர்கள் நாளை நரகம் புகும் ஹீத், ஆலிம், வள்ளல்களின் நிலையில் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடி யுமா? சுயமாகச் சிந்தித்து விளங்க முன்வாருங்கள்!
22:78ல் அல்லாஹ் நமக்கு “”முஸ்லிமீன்” எனப் பெயரிட்டுள்ளான். நபிமார்கள் செய்த உயர் பணி யையே நாம் செய்தாலும் நம்மை முஸ்லிம்களில் உள்ளவன்-மினல் முஸ்லிமீன் என்றே அழைக்கக் கட்டளையிட்டுள்ளான்(41:33) நபிமார்கள் அனை வரும் தங்களை முஸ்லிம்களில் உள்ளவர்-மினல் முஸ்லி மீன் என்றே அறிமுகப்படுத்தியுள்ளனர். அல் லாஹ் குர்ஆனில் பல இடங்களில் “”யா அய்யுஹல்ல தீன ஆமனூ” “”ஓ ஈமான் கொண்டவர்களே” என நேரடியாக அழைத்து அரிய உபதேசங்களைச் செய் துள்ளான். இந்த நிலையில் “”முஸ்லிமீன்” என்று அழைக்க அனுமதித்துள்ளானே அல்லாமல், தங் களை முஃமின்கள் என்று அழைத்துக் கொள்ள அனு மதி தரவில்லை. இந்த உண்மையை புகாரீ(ர.அ) 1478வது ஹதீஃதில் அல்லாஹ்வின் தூதரே மீண்டும் மீண்டும் எச்சரித்துத் திருத்தியதைப் பார்க்கலாம்.
இந்த ஹதீஃதில் ஒரு நபிதோழர் இன்னொரு நபி தோழரைச் சுட்டிக் காட்டி “முஃமின்’ என்று கூறிய போது நபி(ஸல்) அவர்கள் “முஸ்லிம்’ என்று சொல் என எச்சரிக்கிறார்கள். இவ்வாறு அவர் “”முஃமின்” என்று மூன்று முறை சொல்லியும் நபி(ஸல்) அவர்கள் முஸ்லிம் என்று மீண்டும் மீண்டும் கூறி எச்சரிக்கி றார்கள். குர்ஆனில் எண்ணற்ற இடங்களில் காணப் படும் “”முஃமின்” என்ற பெயரில் அழைப்பதை மறுத்து “முஸ்லிம்’ என்று மட்டுமே அழைக்கக் கட்டளையிட்டிருப்பது குன்றிலிட்டத் தீபமாக விளங்குகிறது. இந்த நிலையில் இந்த இயக்கத்தினர் குர்ஆனிலோ, ஹதீஃதிலோ இல்லாத பெயர்களைச் சுயமாகக் கற்பனை செய்து இட்டுக் கொண்டு, அப்பெயர்களைத் தூக்கிப் பிடிக்கிறார்களே, வாய் கிழியக் கூறித் திரிகிறார்களே நாளை இவர்களது நிலை என்னவாகும்? சிந்தித்து விளங்க முன்வாருங்கள்.
இவ்வளவு தெளிவாக இஸ்லாமிய மார்க்கம் திட்டமாக விளக்கியிருக்கும் நிலையில், முஸ்லிம் களில் உள்ளவர்கள்-ஜமாஅத்துல் முஸ்லிமீன்(41:33) என்று சொல்வதைப் புறக்கணித்துவிட்டு TNTJ, INTJ, MMK, SDPI என அவரவர்கள் இஷ்டத்திற்கு சட்டையில் பதிய வைத்துக் கொண்டு முஸ்லிம் வாலிபர்கள் பல பிரிவினராகத் தொண்டு செய்தனர். அதைக் கண்ணால் பார்த்த ஊடகங்கள் “”தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சுழன்று சுழன்று தொண்டு செய்தனர்” என்று செய்தி வெளியிட்டதில் என்ன தவறு? நீங்களே உங்களை முஸ்லிமீன்-முஸ்லிமீன் எனக் காட்டிக் கொள்ள முன்வராதபோது அவர்கள் முஸ்லிம் இயக்கங்கள் தொண்டு செய்தன என அறிவிப்பு செய்யாததில் என்ன குற்றம் இருக்கிறது. உண்மையில் உங்களின் உள்ளூர எண்ணம் ஊடகங் கள் உங்கள் இயக்கங்களின் பெயரைச் சொல்லி விளம்பரப்படுத்தவில்லையே என்ற ஆதங்கமே அன்றி முஸ்லிம் ஜமாஅத் என்று விளம்பரப்படுத்த வில்லையே என்பதல்ல!
1986லிருந்து முஸ்லிம்களுக்கு இஸ்லாம் அல்லாத இயக்கமே இல்லை என்று உறுதியாகச் சொல்லி வருகிறோம். ஏன்? பீ.ஜை. அந்நஜாத் ஆசிரி யராக இருந்தபோது அவரே அதன் மூன்றாவது இதழான ஜூன் இதழ் பக்கம் 3ல் எங்களுக்கு இஸ்லாம் அல்லாத இயக்கமே இல்லை என்று பகிரங் கமாக எழுதியவர்தானே. அவர்தான் 1987க்குப் பிறகு புற்றீசல்போல் எண்ணற்ற இயக்கங்கள் கற்பனை செய்யப்பட்டு வழிகேட்டில் செல்ல வழி வகுத்துக் கொடுத்தார், பச்சை கொடி காட்டினார், தலைமை தாங்கினார், தலைமை தாங்கி வருகிறார்.
“”பொதுவாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என்று சொல்லாமல் TNTJ, INTJ, MMK, SDPI என இவர்களின் இயக்கப் பெயர்களைச் சொல்லி ஊட கங்கள் செய்தி வெளியிட்டிருந்தால் இந்த இயக்கப் பிரிவினர் பெரிதும் மகிழ்ந்திருப்பர். இந்த உண்மையை 23:53, 30:32 இறைவாக்குகள் அம்பலப்படுத்துகின்றன. அப்போது முஸ்லிம்கள் என்று சொல்லாததை பெரும் குற்றச் செயலாகச் சொல்ல மாட்டார்கள். தங்களின் இயக்கப் பெயர்கள் சொல்லப்படாததுதான் அவர்களின் குற்றச்சாட்டுக்குக் காரணம். அவர்களின் இந்த மகிழ்ச்சி நிலையை மேலே கண்ட இரு வசனங்கள் உறுதிப்படுத்த வில்லையா? சிந்தியுங்கள்.
இந்த லட்சணத்தில் ஜமாஅத்துல் முஸ்லிமீன் J.M என்ற சட்டையுடன் தொண்டு செய்ய யாருமே வரவில்லை என்ற குற்றச்சாட்டு வேறு. பொய்யன் பீ.ஜை. சொல்லித் திரிவது போல் மக்களின் உள்ளங் களில் புரையோடச் செய்திருப்பது போல், அவர் களைப் போல் நாமும் ஜமாஅத்துல் முஸ்லிமீனை அரசில் பதிவு செய்து உரிமை கொண்டாடினால், பேர், புகழுக்காக நாமும் மூ.னி. எனப் பதித்து சட்டை அணிந்து கொண்டு கோதாவில் இறக்கி இருக்கலாம். ஆனால் ஜமாஅத்தல் முஸ்லிமீன் அல்லாஹ் பெய ரிட்டு நபி(ஸல்) அவர்கள் நடைமுறைப்படுத்திய உலகளாவிய ஜமாஅத். நாம் அதன் ஆயுட்கால அமீர் அல்ல. அல்லாஹ் நாடி இந்த காலக்கட்டத்தில் இந்தப் பிரிவினர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே ஜமாஅத்தாக ஜமாஅத்துல் முஸ்லிமீன் என செயல்பட முன்வந்தாலும் அதற்கு அமீராக நாம் இருக்கப்போவதில்லை. அதற்கு எமக்குத் தகுதி இல்லை. சந்திரக் கணக்குப்படி நாம் 76 வயதில் இருக்கிறோம். இன்றைய ஆட்சித் துறையில் கூட 65 வயதுக்கு மேற்பட்டவர்களை அதிகாரத்தில் அமர்த்துவது இல்லை. நபி(ஸல்) அவர்களிலிருந்து நான்கு கலீஃபாக்கள் வரை 65 வயதுக்குள் மரணம் எய்தி விட்டார்கள். நாம் எந்த நிலையிலும் தலைமைப் பொறுப்பை ஏற்கமாட்டோம். இது உறுதி.
அப்படித் தலைமைப் பதவியில் ஆசை இருந்தால், அரசில் அப்பெயரை பதிவு செய்து உரிமை கொண்டாடுவதுடன், அவர்களைப் போல் குர்ஆனுக்கும், ஹதீஃதுக்கும் முரண்பட்டச் செயல்களை மார்க்கமாகி நரகத்தை நிரப்ப இருக்கும் 99.9% பெருங்கூட்டத்தில் நாமும் ஒரு பெருங் கூட்டத்தை நம் பின்னால் அணிவகுக்கச் செய்திருக்கலாம். எல்லாம் வல்ல அல்லாஹ் அந்தப் பெரும் வழிகேட்டிலிருந்து எம்மை அவன் அருளால் பாதுகாத்தான். இதுவரைப் பாதுகாத்து வருகிறான். இனிமேலும் பாதுகாப்பான். அல்ஹம்துலில்லாஹ்.
அப்படி ஒரு வழிகெட்ட இயக்கத்தை அமைத் திருந்தால் ததஜவினரைப் போல் மூ.னி. என பெயர் பதித்து சேவை செய்திருக்கலாம். அப்படிச் செய்ய வில்லை என்பதால் “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்ற அல்லாஹ்வின் ஜமாஅத் (ஹிஸ்புல்லாஹ்) பேர், புகழை விரும்பாமல் அதாவது பேர், புகழ் அனைத் தும் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தம் என்ற அடிப் படையில் எவ்வித அடையாளமுமின்றி சேவை செய்யத்தான் செய்தனர். நிவாரண நிதியாக தங்கள் சக்திக்கும் மீறிய நிலையில் கொடுக்கத்தான் செய் தார்கள் என்பதை அல்லாஹ் அறிந்தவனாக இருக்கி றான். அதற்குரிய பலனை அல்லாஹ் அளிக்கப் போதுமானவன்.
இப்படி சுய கற்பனையில் பெயரிட்டு அதை அரசில் பதிவு செய்தால்தான் மக்களுத்துத் தொண் டாற்ற முடியும் என்று சுயவிளக்கம் கொடுத்து 6:112 இறைவாக்குக் கூறுவது போல் அலங்காரமான வார்த்தைகளைக் கொண்டு மக்களை மதிமயக்கிக் கூட்டத்தைச் சேர்த்து கடந்த 28 வருடங்களில் என்ன சாதித்து விட்டார்கள்? மக்கள் பிரச்சினை களில் ஒன்றே ஒன்றையாவது உறுப்படியாகச் சாதித் திருக்கிறார்களா? பாபரி மஸ்ஜித் இடிபடுவதைத் தடுக்க முடிந்ததா? இடிக்கப்பட்டதை மீண்டும் பெற்று கட்ட முடிந்ததா? வாழ்வுரிமை மாநாடு நடத்தி முஸ்லிம்களின் வாழ்வுரிமையைப் பெற்றுத் தர முடிந்ததா? இழந்ததை மீட்போம், இருப்பதைக் காப்போம், என வாயளவில் கூறி மாநாடு நடத்தி இழந்த ஒன்றையாவது மீட்டுத் தர முடிந்ததா? 1987லிலிருந்து இன்று 2016 வரை குர்ஆன், ஹதீஃதுக்கு முற்றிலும் முரண்பட்ட இயக்கங் களைக் கொண்டு என்ன சாதித்தார்கள்? ஆம்! அவர் கள் சாதித்ததெல்லாம், 49:14 இறைவாக்குக் கூறுவது போல், உள்ளத்தில் ஈமான்-இறைநம்பிக்கை நுழை யாமல், இனவெறிக்கு அடிமைப்பட்டுச் செயல்படும் பெருங்கொண்ட முஸ்லிம்களை மயக்கி இப்படி பல மாநாடுகளின் பேரால் பெருந்தொகை வசூலித்துத் தங்களை வளப்படுத்திக் கொள்ள முடிந் தது. வசூலில் கமின் கொடுத்து உறுப்பினர்களைக் கூட்ட முடிந்தது. பேர், புகழ், பட்டம், பதவி இவற்றை எளிதாகப் பெற முடிந்தது. இவைதான் இயக்கங்களின் மூலம் பெற்ற சாதனைகள்.
பயனற்ற வீண் பாராட்டையும், புகழையும் எதிர்நோக்கிச் சேவை செய்யும் இழி நிலைக்கு இன்றைய முஸ்லிம் வாலிபர்களும், யுவதிகளும் அடிமைப்பட்டுக் கிடக்கும் பெரும் சாதனையைத் தான் கடந்த 28 வருடங்களில் பொய்யன் பீ.ஜை. சாதித்துள்ளார்.
இவை அல்லாமல் தமிழ்நாடு தறுதலை ஜமாஅத் (ததஜ) என்று ஒரு கூட்டத்தைச் சேர்க்க முடிந்திருக்கிறது. நாம் இவர்களைத் தறுதலைகள் என்று கூறு வதை பல சகோதரர்களால் ஜீரணிக்க முடிவதில்லை. திருடனை திருடன் என்றும், பொய்யனை பொய் யன் என்றும், மக்களுக்கு அடையாளம் காட்டினால் தான் மக்கள் அவனது பெருந்தீங்கிலிருந்து பாது காப்புப் பெறமுடியும். குர்ஆனைப் பொருள் அறிந்து அன்றாடம் படித்து வருகிறவர்கள் மட் டுமே, மக்களை நேர்வழியிலிருந்து கோணல் வழி களில் இட்டுச் செல்லும் கயவர்களை எப்படி எல் லாம் அல்லாஹ் கடினமான வார்த்தைகளில் திட்டி யும், அவர்களைச் சபித்தும் கூறியுள்ளான் என்பதை அறிய முடியும். குர்ஆனை நேரடியாகப் படித்து விளங்காமல், வழிகெடுக்கும் பெருமையடிக்கும் (பார்க்க : 7:146) மவ்லவிகளுக்குப் பின்னால் செல்கி றவர்கள் குர்ஆன் கூறுவதை அறிய வாய்ப்பில்லை தான்.
இப்போது பாருங்கள்! அவர்கள் தறுதலைகள் இல்லை என்றால் அவர்களது அண்ணன் சொல்லும் அப்பட்டமான பொய்களையும், கடைந்தெடுத்த அவதூறுகளையும் அறிந்த நிலையில் மக்களிடம் பரப்பித் திரிவார்களா? நாம் 1987லிலிருந்து பீ.ஜையை பரம அயோக்கியன், பெரும் பொய்யன், அவதூறு மன்னன் என்று தொடர்ந்து பகிரங்கமாகக் கூறிக் கொண்டிருக்கிறோம். இக்குற்றச்சாட்டுக் களைச் சுமத்தி அவருக்கே நேரடியாகக் கடிதமும் எழுதினோம். நேரடியாக வந்து தான் அந்தக் குற்றச் சாட்டுக்குரியவர் அல்ல என்று நிரூபிக்க தொடர்ந்து அழைத்துக் கொண்டிருக்கிறோம். அவரோ பின்னங் கால் பிடரியில் அடிபட தொடர்ந்து ஓடிக் கொண்டி ருக்கிறார். அவரோடு விவாதம் செய்து நாம் பிரபல் யம் ஆகப் பார்க்கிறோம் என்று அண்டப் புளுகைக் கூறித் திரிகிறார். அந்நஜாத்தைக் கொண்டே பீ.ஜை. உலகிற்கே அறிமுகம். தனது தாயை நானே பெற் றெடுத்தேன் என்று சொன்னால் அவன் எப்படிப் பட்டப் பொய்யனும், முட்டாளும், அயோக்கியனு மாவானோ அதேபோல், அந்நஜாத்தைக் கொண்டு உலகிற்கு அறிமுகமாகியவர், தன்னைக் கொண்டு அந்நஜாத் பிரபல்யமாகப் பார்க்கிறது என்று சொல்பவர் பெரும் பொய்யனும், முட்டாளும், அயோக்கியனுமாவார் இல்லையா?
1987லிலிருந்து இன்று வரை கடந்த 28 ஆண்டு களில் அவர் இயக்கங்களின் பெயரால் எத்தனை அவதாரம் (?) எடுத்துள்ளார். இந்த நிலையில் மக்கள் கூட்டம் அவரை நஜாத்காரன் என்றும் அவரது பக்த கோடிகளை நஜாத் கூட்டம் என்றே சொல்கிறார் கள். ததஜ பள்ளிகளை நஜாத் பள்ளி என்றே அழைக் கின்றனர். இந்த நிலையில் அவருடன் வாதிட்டு அந்நஜாத் பிரபல்யம் அடையப் பார்க்கிறது என்றால் அவரை விட மூடர் இருக்க முடியுமா? ததஜவினரை நஜாத் கூட்டம், நஜாத் பள்ளி எனப் பெரும்பான்மை முஸ்லிம்கள் அழைப்பதால், அவர் களின் அராஜகச் செயல்களுக்கு நாமும் துணை போவதாக நினைக்கிறார்கள். அதனால் அந்நஜாத் திற்கும் கெட்ட பெயர் ஏற்படுகிறது.
இந்த அடிப்படை சாதாரண அறிவும் இல்லாத வர்கள், அல்லது அறிவில்லாதது போல் நடிப்பவர் கள் தறுதலைகளா? இல்லையா? இன்னும் அவர்கள் தறுதலைகள்தான் என்பதற்கு மேலும் ஆதாரம் தருகிறோம் பாருங்கள். அல்குர்ஆன்39:17,18 இறை வாக்குகளைப் படித்துப் பாருங்கள். மற்றவர்களின் பேச்சை, எழுத்தைக் கேட்க விடாமல் தடுப்பவர்கள் தாஃகூத் என்ற மனித ஷைத்தான்கள். அந்த தாஃகூத் களின் பேச்சைக் கேட்டு மற்றவர்களின் பேச்சைக் கேட்காமலும், எழுத்தைப் பார்க்காமல் இருப்பவர் கள் அந்த தாஃகூத்தை வணங்கி இறைவனுக்கு இணை(´ஷிர்க்) வைக்கிறார்கள்.
அப்படி அந்த தாஃகூத்தை வணங்குவதை விட் டும் தவ்பா செய்து மீண்டு, யார் பேசினாலும் கேட்டு, யார் எழுதினாலும் படித்து அவற்றில் குர்ஆன், ஹதீஃதுக்கு உட்பட்டதை (அழகானதை) பின்பற்றுவார்கள். எடுத்து நடப்பார்கள். அவர்களே நேர்வழி பெற்றவர்கள். அறிவாளிகள், அல்லாஹ் வின் நன்மாராயம் பெற்றவர்கள். இந்த அரிய நற்குணங்கள் ததஜவினரிடம் இருக்கிறதா? இல்லையே!
அது மட்டுமா? அவர்கள் பிறர் பேச்சைக் கேட் பதில்லை, எழுத்தைப் படிப்பதில்லை, குர்ஆன், ஹதீஃதை மட்டுமே சுமந்து வரும் பிரசுரங்களை பிற மக்களுக்குக் கொடுப்பதைத் தடுப்பதோடு அவற்றை பறித்து கிழித்து எறிகிறவர்கள் எப்படிப் பட்டப் பாதகர்களாக இருப்பார்கள். நபி(ஸல்) அவர்களின் காலத்து குறைஷ் காஃபிர்களை விட தரம் தாழ்ந்து செல்கிறார்களா? இல்லையா? இவர் களை தறுதலைகள் என்று மக்களுக்கு அடையாளம் காட்டுவதில் தவறுண்டா? சொல்லுங்கள். இயக்கங் களால் ஏற்படும் எண்ணற்றக் கேடுகளைப் பார்த் தும் அவற்றை நியாயப்படுத்துவோர் பெரும் வழி கேட்டில் இருப்பதை மறுக்க முடியுமா?
மேலும் இந்த ததஜ இயக்கத்தினர் குர்ஆன், ஹதீஃதைப் பின்பற்றுவதில்லை. பெரும்பாலும் மாற்றார்களின் கலாச்சாரத்தை, குறிப்பாக சாக்கடை அரசியலில் முங்கிக் குளிப்பவர்களின் நடைமுறைகளையே பின்பற்றி வழிகெட்டுச் செல்கின்றனர்.
எனவே இயக்க வழிபாட்டை விட்டு விடுபடுங் கள். இயக்கங்களின் பெயரால் துண்டு துண்டாகச் சிதறித் தனித்தனியாக நிவாரணப் பணிகளில் ஈடு பட்டும், மற்றவர்கள் அந்த சிதறிய சேவைகளைக் கண்டே மூக்கில் விரல் வைத்தார்கள் என்றால், பெரும் பாராட்டைத் தெரிவிக்கிறார்கள் என்றால். இந்தச் சிதறிய இயக்கங்கள் எல்லாம் ஓரணியில் ஒன்று திரண்டு, அல்லாஹ் பெயரிட்டு (22:78) எப்பணி செய்தாலும் முஸ்லிம்களில் உள்ளவன் (41:33) என்று அல்லாஹ் கட்டளையிடுவதற்கு அடி பணிந்து நபி(ஸல்) நடைமுறைப்படுத்திக் காட்டிய “”ஜமாஅத்துல் முஸ்லிமீன்” என்று முஸ்லிம்களுக் குரிய ஒரே ஜமாஅத்தில் (வேறு ஜமாஅத்தே இல்லை) உங்களுக்குள் ஒருவரை அமீராகத் தேர்ந்தெடுத்து செயல்பட முன்வாருங்கள். உங்களின் வெள்ள நிவாரண அரும்பணியைப் பார்த்து அசந்தவர்கள் எல்லாம் மேலும் ஆச்சரியப்பட்டு இஸ்லாத்தின் சிறப்பை விளங்கி அவர்களில் அல்லாஹ் நாடுபவர் கள் இஸ்லாத்தில் நுழையும் வாய்ப்பும் பிரகாச மாகும். 3:139, 24:55 இறைவாக்குகளை மீண்டும் மீண்டும் படித்து அறிவு பெறுங்கள்.