அதிரை முஜீப்
யானையின் பலத்தை பாகன் அறியாவிட்டால் அது யானையின் தவறல்ல என்ற அடைமொழியு டன் உலக மக்கள் தொகையில் 14 மில்லியன் யூதர்கள் உள்ளனர். அதில் ஏழு மில்லியன் அமெரிக்காவிலும், ஐந்து மில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், இரண்டு மில்லியன் ஐரோப்பாவிலும் ஒரு லட்சம் பேர் ஆப்பிரிக்கா விலும் உள்ளனர்.
உலக மக்கள் தொகையில் 1.5 பில்லியன் முஸ்லிம்கள் உள்ளனர். அதில் ஒரு பில்லியன் ஆசியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளிலும், நானூறு மில்லியன் ஆப்பிரிக்காவிலும், 44 மில்லியன் ஐரோப்பாவிலும், ஆறு மில்லியன் அமெரிக்கா விலும் உள்ளனர்.
உலகில் வாழும் ஒவ்வொரு ஐந்து மனிதர்களில் ஒருவர் முஸ்லிம்.
ஒரு ஹிந்துவுக்குச் சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்.
ஒரு புத்தனுக்குச் சமமாக உலகில் இரண்டு முஸ்லிம்கள்.
ஒரு யூதருக்குச் சமமாக உலகில் 107 முஸ்லிம்கள்.
முஸ்லிம்களே, மக்கள் தொகையில் அதிகமாக இருந்தும் ஏன் நீங்கள் மற்றவர்களைப் பார்த்து பயப் படுகிறீர்கள்? ஏன் கல்வியறிவில் பின் தங்கியுள்ளீர் கள், அல்லது உங்களை விட ஏன் யூதர்கள் சக்தி மிகுந்தவர்களாக இருக்கின்றனர். யூதர்களின் மேல் உள்ள வெறுப்பினால் யூதர்களின் பொருட்களை வாங்காதே, என்ற கோசத்தை மட்டும் முன்வைத்த நாம் இவர்களின் இந்த அசூர வளர்ச்சிக்கு வித்திட்ட அடிப்படை விசயங்களையும் அவர்களின் கட்டமைப்புகளையும் ஆராய மறந்தே விட்டோம், விடுகின்றோம்.
யூதர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் கல்வி, வேலை வாய்ப்பு தொழில் ஆகியவற்றில் சிறந்து விளங்கு வதற்கு காரணம் என்ன?
முஸ்லிம்களை விட அறிவு ஜீவிகளாக தங்களை அவர்கள் வளர்த்துக் கொள்ளக் காரணம் என்ன?
காரணம் ஒன்றே ஒன்றுதான். அதுதான் அவர்கள் கல்வியை முழுமையாக கற்பதால், அது மட்டுமல்ல, மேலும் அவர்களுக்கு சூழ்ச்சியே தாரக மந்திரமாக இருந்தாலும் முஸ்லிம்களைப் போன்று அவர்களுக்கிடையே பகிரங்கமாக மோதிச் சண்டை யிட்டுக் கொள்வது கிடையாது.
கிறிஸ்தவர்களுக்குள் ஆயிரம் பிளவுகள், பிரிவு கள். ஒரு வேதத்தையே பல பிரிவுகளாக்கிக் கொண்ட வர்கள். ஆனால் குறிக்கோள்கள் ஒன்றாகவே உள்ளது. கல்வி நிலையங்களை தங்களின் பிடியில் வைத்திருப்பதினால் அவர்கள் மற்ற எல்லோரையும் விட முன்னேறிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால்….
ஒரே நெறிநூலைக் கொண்ட இஸ்லாத்தில் ஜாதிகள், பிரிவுகள் கிடையாது. ஆனால் தமிழ் நாட்டிற்குள் மட்டுமே நூற்றுக்கணக்கான ஜமாத் கள், இயக்கங்கள், பிரிவுகள் மற்றும் பிரிவினைவாதி கள். ஓர் இயக்கத்தை எதிர்த்து மற்ற இயக்கங்கள் தினம் ஒரு போராட்டம், கல்வியில் அறிவை வளர்க்க வேண்டிய ஒரு சமுதாயம் வழக்கு நீதிமன்றம் என்றும் அடித்துக் கொண்டும், போராட் டம் நடத்திக் கொண்டும் தங்களின் வாழ்வாதாரங் களை வீனடித்துக் கொண்டும் இருப்பதேன்.
தமிழ்நாட்டில் எத்தனையோ பெரிய இயக்கங் கள் செயல்பாட்டில் இருந்தாலும் ஏதாவது ஒரு இயக்கம் இதுவரை பேர் சொல்லும்படி ஒரு மருத்துவம், பொறியியல், மற்றும் உயரிய படிப்பை கொண்ட கல்வி நிலையத்தை தொடங்கி நடத்திய துண்டா?
ஆனால்…
தி.க.வின் கி.வீரமணி தொடங்கி, சங்காரச் சாரியார் வரை வல்லம் மற்றும் பல இடங்களில் கல்வி நிலையஙகள் அணி வகுத்து நிற்கின்றன. எந்த முஸ்லிம் இயக்கமாவது அதைக் கண்டாவது சிந்தித்தோமா?
அமெரிக்காவில் மட்டும் 5758 பல்கலைக் கழகங்கள் உள்ளன.
இந்தியாவில் மட்டும் 8407 பல்கலைக் கழகங்கள் உள்ளன.
உலகில் உள்ள 57 முஸ்லிம் நாடுகளில் மொத்த மாக 500 பல்கலைக் கழகங்கள் மட்டுமே உள்ளன.
ஆனால்….
உலக தரத்தில் உலகின் தலைசிறந்த பல்கலைக் கழகங்கள், ஒன்றுகூட இஸ்லாமிய நாடுகளில் இல்லை, இருப்பதையும் தரம் உயர்த்தப்படாததால் இவற்றை மற்ற பல்கலைக்கழகங்கள் முந்திவிட்டன.
உலகில் 90% கிறிஸ்தவர்கள் கல்வியறிவை பெற்றுள்ளனர்.
ஆனால்….
முஸ்லிம்களின் கல்வியறிவு 40% மட்டுமே.
கிறிஸ்தவர்களை அதிகமாக கொண்டுள்ள 15 நாடுகள், 100% கல்வியறிவை பெற்றுள்ளனர்.
கிறிஸ்தவர்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 98% பூர்த்தி செய்துள்ளன.
ஆனால்…
முஸ்லிம்களை கொண்டுள்ள நாடுகள் அடிப்படை கல்வியை 50% மட்டுமே பூர்த்தி செய்துள்ளன.
40% கிறிஸ்தவர்கள் பல்கலைக் கழகங்கள் வரை செல்கின்றனர.
ஆனால்….
முஸ்லிம்கள் 2% பேர்தான் பல்கலைக்கழகங்கள் வரை செல்கின்றனர்.
அமெரிக்காவில் ஒரு மில்லியன் கிறிஸ்தவர் களுக்கு 5000 பேர் அறிவியல் ஆய்வாளர்களாக உள்ளனர்.
ஆனால்…
முஸ்லிம்கள் அதிகமாக இருக்கும் நாடுகளிலி ருந்து ஒரு மில்லியன் முஸ்லிம்களுக்கு 230 அறிவியல் ஆய்வாளர்கள் மட்டுமே உள்ளனர்.
உலகத்தில் உள்ள ஒரு மில்லியன் கிறிஸ்தவர் களில் 1000 பேர்கள் தொழில்நுட்ப வல்லுநராக உள்ளனர்.
ஆனால்…
ஒட்டுமொத்த அரபுலகத்தில் ஒரு மில்லியன் முஸ்லிம்களில் வெறும் 50 பேர்கள் மட்டுமே தொழில்நுட்ப வல்லுனராக உள்ளனர்.
கிறிஸ்தவர்கள் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டு பிடிப்புகளுக்கு மொத்த வருவாயில் ஒதுக்கும் தொகை 5% ஆகும்.
ஆனால்…
இஸ்லாமிய நாடுகள் இதற்கு வெறும் 0.2% சதவிகிதத்தையே ஒதுக்குகின்றனர்.
கடந்த 105 வருடங்களில் 14 மில்லியன் யூதர் களில், இதுவரை 180 பேர்கள் நோபல் பரிசைப் பெற்றுள்ளனர்.
ஆனால்…
1.5 பில்லியன் மக்கள் தொகையினைக் கொண்ட முஸ்லிம்களில், இதுவரை வெறும் 3 மூன்று முஸ்லிம் கள் மட்டுமே இந்த நோபல் பரிசை வென்றுள்ளனர். அதுவும் அறிவியல் துறைகளிலல்ல.
மேற்கண்ட அனைத்ப் புள்ளி விவரங்களும் முஸ்லிம்களின் நிலையை சத்தமிட்டு சொல்லிக் கொண்டு இருக்கும் அதே வேளை அதைக் காது கொடுத்துக் கேட்கக்கூட இவர்களுக்கு நேரம் இல்லை, மனம் இல்லை, அக்கறை இல்லை.
யூதர்களின் கண்டுபிடிப்புகள் உலகை மாற்றியதில் சில :
Micro Processing Chip – Stanley Mezor (Jewish)
Nuclear Chain Reactor – Leo Sziland (Jewish)
Optical Fiber Cable – Peter Schultz (Jewish)
Traffic Lights – Charles Adler (Jewish)
Stainless Steel – Benno Strauss (Jewish)
Sound Movies – Isador Kisee (Jewish)
Telephone Microphone – Emile Berliner (Jewish)
Video Tape Recorder – Charles Ginsburg (Jewish)
R>ìïáV_ å¦Ý>©Ã|D EÅÍ> Ø>Va_ W®kªºï^ :
Polo – Ralph Lauren (Jewish)
Coca Cola – Jewish
Levi’s Jeans – Levi Strauss (Jewish)
Sawbuck’s – Howard Schultz (Jewish)
Google – Sergey Brin (Jewish)
Dell Computers – Michael Dell (Jewish)
Oracle – Larry Ellison (Jewish)
DKNY – Donna Karan (Jewish)
Baskin & Robbins – Irv Robbins (Jewish)
Dunkin Donuts – Bill Rosenberg (Jewish)
céïÝç> *½BV JéD g⽩Ãç¦ÂzD R> *½BVÂï^ :
Wolf Blitzer – CNN (Jewish)
Barbara Walters – ABC News (Jewish)
Eugene Meyer – Washington Post (Jewish)
Henry Grunwald – Time Magazine (Jewish)
Katherine Graham – Washington Post (Jewish)
Joseph Lelyeld – New York Times (Jewish)
எனவே முதலில் நீங்கள் கற்றுக்கொள்ள ஆரம்பி யுங்கள், உங்களின் குழந்தைகளை, சந்ததியினரை கற்றவர்களாக மாற்ற முயலுங்கள். கல்வியை எப் போதும் முன்னெடுத்து செல்லுங்கள், முன்னேற்றக் கல்வி கற்பதில் எந்த விதத்திலும் சமரசம் செய்து கொள்ளாதீர்கள், நீங்கள் முயலவில்லை எனில், இனி உங்களின் குழந்தைகள் அவர்களாகவே முயலமாட்டார்கள்.
எனவே முஸ்லிம்களே ஒன்றுபடுங்கள், கல்வி யறிவை பெருக்குங்கள், பெறுங்கள், உலகில் தலை சிறந்து விளங்குங்கள், இது ஒட்டுமொத்த உலக முஸ்லிம்களுக்காக சொல்லப்பட்ட விசயமாக இருந் தாலும், தமிழக முஸ்லிம்களே நீங்களும் விழிப் புணர்வுடன் இருங்கள், ஏனெனில் நீங்களும் உலக முஸ்லிம்களில் அடங்குவீர்கள்.
இதற்குள்ள ஒரே வழி, வேறு வழியே இல்லை; அது குர்ஆன், ஹதீஃதைப் பின்பற்றிப் படித்து அவற்றின் வழிகாட்டல்படி நடப்பதேயாகும்.