நல்லூர் செல்வன்
பூமியில் (எல்லோருக்கும் பொதுவாக) ஏற் படுகின்ற அல்லது உங்களுக்கு (மட்டும் தனிப் பட்ட முறையில்) இறங்குகின்ற எந்த (இன்ப) துன்பமானாலும் அதனை நாம் ஏற்படுத்து வதற்கு முன்பு அது (எப்போது எங்கே, எப்படி ஏற்படும். எப்போது எங்கே, எப்படி முடியும் என்பது) குறித்து விதி ஏட்டில் எழுதி வைக்கா மல் இல்லை. அப்படிச் செய்வது அல்லாஹ் விற்கு (கஷ்டமான காரியம் இல்லை) மிகவும் எளிதானதாகும். 57:22
கார் குண்டு வெடிப்பு, பைக் குண்டு வெடிப்பு, பள்ளிவாசலில் குண்டு வெடிப்பு இஸ்லாமிய தீவிரவாதிகள் வெறிச்செயல் என்று செய்தி வருவது தொடர்கதையாகி விட்டது. இல்லை, இல்லை. இவர்கள் முஸ்லிம்கள் இல்லை, முஸ்லிம்கள் பெயரில் எதிரிகள் செய்கி றார்கள் என்று மற்றொரு குரல் ஒலிப்பதும் தொடர் கதையாகி விட்டது.
இரண்டுமே நடக்கிறது என்பதைத்தான் வெளியாகும் செய்திகள் காட்டுகின்றன. ஒரு வாதத்துக்காக எதிரிகள்தான் செய்கிறார்கள் என்று வைத்துக் கொண்டாலும் கூட, முஸ்லிம் களின் பெயரைக் கெடுப்பதையும், இஸ்லாத் தின் பெயரைக் கெடுப்பதையும், இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுப்பதையும் தங்களின் முழு நேரத் தொழிலாகச் செய்து கொண்டிருக்கும் அவர்களுக்கு இப்படியயாரு அருமையான வழி இருப்பதைக் கற்றுக் கொடுத்தது இவர்கள் தானே. அதாவது, முதலில் இஸ்லாமிய சாயம் பூசி, முஸ்லிம் சாயம் பூசி தீவிரவாத, பயங்கர வாத செயல்களை அரங்கேற்றியது முஸ்லிம் களிலுள்ள கிறுக்கன்கள்தானே, இதை யாரால் மறுக்க முடியும்.
சரி, இவர்களெல்லாம் யார்? துப்பாக்கி ஏந்திய கைகளோடு, வெடிகுண்டு பூட்டப் பட்ட இடுப்போடு, ஏவுகணை தாங்கிய முது கோடு வானத்திலிருந்து இறங்கியவர்களா? அல்லது பூமியை கிழித்துக் கொண்டு கிளம்பிய வர்களா? இல்லவே இல்லை; இவர்களெல்லாம் நேற்று வரை உரிமை, எருமை என்று காட்டுக் கத்தல் கத்திக் கொண்டு போராட்டம், பேரணி, மாநாடு என்று போனவர்கள்தான். அவர்களி டம் இருந்த அந்த பொறுமையற்ற போக்கு, சகிப்புத்தன்மையற்ற போக்குதான் அவர்களை தீவிரவாதிகளாக, பயங்கரவாதிகளாக பரிணாம வளர்ச்சியடையச் செய்திருக்கிறது.
இதற்குக் காரணம் என்ன? மார்க்கம் தெரி யாது, தெரிந்து கொள்வதற்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் காட்டிய வழியை கடைபிடிக்காமல் மக்களின் மனம் விரும்பிய வாறு மார்க்கம் சொல்லி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்த விரும்பியவர்களைத் தலைவர்களாக்கி கொண்டது தான் காரணம் என்றால் அது மிகையில்லை.
நான் ஒரு முஸ்லிம் என்று காட்டிக் கொள் ளவே முடியாமல் இருந்த நிலையை மாற்றி முஸ்லிமாக தலை நிமிர்ந்து வாழ்வதற்கு உள்ள அமைப்பில் உங்களை விட்டு செல்கிறேன். எனவே ஒரு நாடு, அதில் இருப்பது முஸ்லிம் ஆட்சியோ முஸ்லிமல்லாதோர் ஆட்சியோ அங்கே அதிகபட்சமாக நீங்கள் என்ன எதிர் பார்க்க வேண்டுமென்றால் நீங்கள் முஸ்லிம் களாக வாழ்வதற்கு அனுமதி இருக்கிறதா என்று தான் பார்க்க வேண்டும். அனுமதி இருந்தால் அப்படியே வாழ்ந்து விட்டு போங்கள். மேலதிக மாக அவர்கள் என்ன தருகிறார்களோ அதை மட்டும் பெற்றுக் கொள்ளுங்கள். உங்களு டைய உரிமை மறுக்கப்பட்டால் அதை அல்லாஹ்விடம் கேளுங்கள். மேற்கொண்டு அதைத் தா, இதைத் தா, ஆலையைத் தா, ஓலையைத் தா, உரிமையைத் தா என்றெல்லாம் கேட்காதீர்கள். அங்கே எந்த வம்பும் செய்யாதீர் கள், நீங்கள் முஸ்லிம்களாக வாழ முற்பட்டால் மரணம் வரை கஷ்டமும் நஷ்டமும், துன்பங் களும் தொல்லைகளும் தான் உங்களைத் தொடரும். உங்களுக்கு ஏற்படும் பிரச்சனை களைக் கஷ்ட நஷ்டங்களை நான் காட்டிய வழி யில் சரி செய்து கொள்ளுங்கள். தப்பும், தவறு மாக எதையாவது செய்து முஸ்லிம் என்று காட் டிக் கொள்ளவே முடியாத நிலையை உண் டாக்கி விடாதீர்கள் என்ற கருத்தை, உபதேசத் தைத்தான் குர்ஆன், ஹதீஃதின் சாரமாக பெற முடிகிறது, ஆனால்,
உலகில் என்ன நடக்கிறது? தங்களை முஸ் லிம்கள் என்று சொல்லிக் கொள்வோர் என்ன செய்கிறார்கள்? இந்தியா போன்ற நாடுகளில் உள்ள முஸ்லிம்களின் நிலை என்னவென்றால், எல்லா உரிமைகளும் பெற்ற நிம்மதியான வாழ்க்கையைக் கேட்கிறார்கள். எல்லா உரிமை களும் பெற்ற அரபு நாடுகளில் உள்ள முஸ்லிம் கள் நிலை என்னவென்றால், உல்லாசமான வாழ்க்கை வாழ்வதற்கான வருமானம் கேட்கி றார்கள். அல்லது தங்களுடைய வருமானத் துக்குள் எல்லாவிதமான உல்லாசத்தையும் அனு பவிக்கும் அமைப்பை கேட்கிறார்கள். எல்லா உரிமைகளும் உல்லாசமான வாழ்க்கையும் பெற்ற வளைகுடா முஸ்லிம்களை எடுத்துக் கொள்வோம். அவர்கள் நிலை என்னவென் றால், நாங்கள் எந்த வேலையும் செய்ய மாட் டோம். அங்குள்ள மன்னர்களுக்கு இருப்பது போன்ற ராஜபோகம் கேட்கிறார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், இவர்கள் பூமி யில் சொர்க்கம் கேட்கிறார்கள் அவ்வளவு தான். இது நடக்கிற கதையா? ஆட்சியாளர்களால் இதைத் தரமுடியுமா? இவர்கள் எதிர் பார்த்தது கிடைக்கவில்லை கிடைக்காது என்று தெரிந்த தும் ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு அல்லாஹு அக்பர் இஸ்லாமிய ஆட்சி, ஜிஹாத் என்று கிளம்பி விடுகிறார்கள். அல்லாஹ் சொல்கிறான்.
உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட் டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்க ளுக்கு வராமலேயே நீங்கள் எளிதாக சுவர்க்கம் சென்று விடலாமென்று நினைக்கிறீர்களா? நம்பிக்கை கொண்ட அவர்களும் (பொறுமை யின் சிகரமான) தூதரும், உதவி எப்போது வரும்? என்று அல்லாஹ்விடம் கையேந்தும் அளவுக்குக் கஷ்டங்களையும், நஷ்டங்களை யும், துன்பங்களையும், தொல்லைகளையும் கொடுத்து ஆட்டி வைக்கப்பட்டார்கள். (2:214)
பயம், பசி மேலும் பொருள்கள், உயிர்கள், விளைச்சல் ஆகியவற்றில் இழப்பை உண் டாக்கி நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப் போம். (அச்சோதனைகளின் போது ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர் களுக்கு(தான் சொர்க்கம் என்று) நபியே நீங்கள் நற்செய்தி கூறும். (2:155)
(சோதனைக்குள்ளாகும்) அவர்கள் தங்க ளுக்கு எப்படிப்பட்ட துன்பம் ஏற்பட்டாலும் (நிதானமிழக்க மாட்டார்கள், அந்த துன்பங் களை பெரிதாக நினைக்க மாட்டார்கள்; அந்த துன்பங்களை இறக்கிய அல்லாஹ்வையே பெரி தாக நினைப்பார்கள்) நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்காகவே இருக்கின்றோம். நிச்சய மாக நாம் அவனிடமே திரும்புவோம் என்று (அவனை நினைவு) கூறுவார்கள். (2:156)
இவர்கள் மீதுதான் அவர்களுடைய இறை வனின் அன்பும் அருளும் ஏற்படுகின்றன. மேலும், இவர்கள்தான் நேர்வழியை அடைந் தவர்கள். (2:157)
மேற்காணும் வசனங்களைப் படித்து விளங் கியிருந்தால் இவர்கள் இப்படியயல்லாம் செய் திருக்கமாட்டார்கள். மக்களின் மனம் விரும்பிய வாறு மார்க்கம் சொன்னவர்களைத் தலைவர் களாக்கி கொண்டதன் விளைவுதான் இது.
அடுத்ததாக, இன்னொரு விதமான கிறுக் கன்களும் இந்த சமுதாயத்தில் இருப்பது தெரி கிறது. தீமைகள் பெருகுவதைப் பெருகியிருப் பதை இந்த கிறுக்கன்களால் ஜீரணிக்க முடிய வில்லை. சகித்துக் கொள்ள முடியவில்லை. உடனே, ஆயுதத்தை தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள். தீமை செய்வோரை கொன்று குவித்து விடுகிறார்கள்.
(நபியே!) தீயவை அதிகமாக இருப்பது உம்மை ஆச்சரியப்படுத்திய போதிலும், தீயதும், நல்லதும் சமமாகாது; எனவே, அறிவாளிகளே, அல்லாஹ்வுக்குப் பயபக்தியுடன் (வரம்பு மீறா மல்) நடந்து கொள்ளுங்கள். அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள் என்று நீர் கூறுவீராக. 5:100
மேற்காணும் வசனத்தைப் படித்து விளங்கி யிருந்தால் இவர்கள் இப்படியயல்லாம் செய் திருக்கமாட்டார்கள். இதுவும் மக்களின் மனம் விரும்பியவாறு மார்க்கம் சொன்னவர்களைத் தலைவரகளாக்கி கொண்டதன் விளைவுதான்.
இதுபோன்ற கிறுக்குத்தனங்களிலிருந்து நம்மையயல்லாம் காத்த அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும். மேலும், நாம் ஒவ்வொரு சமூகத் திற்கும் தூதரை அனுப்பி, அல்லாஹவுக்கு மட் டுமே அடிபணியுங்கள். ஆதிக்க மனப்பான்மை கொண்டவர்களுக்கு அடி பணியாதீர்கள் என்று எச்சரித்தோம். 16:36.
மேலும், கூறுங்கள், அல்லாஹ்விடத்தில் மோசமான கதியுடையோரைப் பற்றி நான் உங் களுக்கு அறிவிக்கட்டுமா? யாரையயல்லாம் அல்லாஹ் சபித்தானோ, யார் மீதெல்லாம் கோபம் கொண்டானோ, மேலும் யாரையயல் லாம் குரங்களுகளாகவும், பன்றிகளாகவும் மாற்றினானோ மேலும் யாரெல்லாம் ஆதிக்க சக்திகளுக்கு அடிபணிந்தார்களோ அவர்கள் தான். அவர்கள் ரொம்பவும் தரங்கெட்டவர் கள். மேலும், அவர்கள் நேர்வழியிலிருந்து வெகு தூரம் விலகிச் சென்றவர்கள் ஆவர். 5:60.