இப்னு ஹத்தாது
நாளின் ஆரம்பம் ஃபஜ்ராக இருந்தால் முதலில் பகல், அடுத்து வருவது இரவு; மஃறிபாக இருந்தால் முதலில் இரவு அடுத்து வருவது பகல். இப்போது கீழ்க்காணும் குர்ஆன் வசனங்கள் பகலுக்குப் பின் இரவு என்கின்றனவா? அதற்கு மாறாக இரவுக்குப் பின் பகல் என்கின்றனவா? நீங்களே படித்து அறியுங்கள்!
1. சூரியன் சந்திரனை அடைய முடியாது; இரவு பகலை முந்த முடியாது. இவ்வாறே எல்லாம் (தத்தம்) வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றன. (36:40)
2. சூரியன் மீதும், அதன் ஒளியின் மீதும் சத்திய மாக, அதைத் தொடர்ந்து வரும் சந்திரன் மீதும் சத்தியமாக, பகல் வெளியாகும் போது, அதன் மீதும் சத்தியமாக, இரவு மூடிக் கொள்ளும் போது அதன்மீதும் சத்தியமாக! (91:1-4)
3. ….சந்திரன் மீது சத்தியமாக, பின்தொடரும் இரவின் மீது சத்தியமாக வெளிச்சமாகும் விடியற் காலையின் மீது சத்தியமாக. (74:32-34)
4. அவனே இரவைப் பகலால் மூடுகிறான். இவற் றில் சிந்திக்கும் மக்களுக்கு நிச்சயம் பல சான்றுகள் உள்ளன. (13:3)
5. அவனே இரவால் பகலை மூடுகிறான். அது விரைவாக அதை (பகலை) பின்தொடர்கிறது. (7:54)
6. நிச்சயமாக இதை(குர்ஆனை) கண்ணியமிக்க ஒரு நாளில் இறக்கினோம். கண்ணியமிக்க நாள் என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க நாள் ஆயிரம் மாதங்களை விட மிகச் சிறந்ததாகும். அதில் வானவர்களும் ஜிப்ரயீலும் தம் இரட்சகனின் கட்டளையின்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகிறார்கள். அமைதி நிலவியிருக்கும் அது(அந்நாள்) அதி காலை வரை இருக்கிறது. (97:1-5)
இங்கு நாள் என்பதை இம்மூட முல்லாக்கள் இரவு என மொழி பெயர்த்து அவர்கள் வழிகெடுவ தோடு, அவர்களை நம்பி அவர்களைத் தக்லீது செய் யும் அப்பாவி முஸ்லிம்களையும் யூதர்களின் வழி யில் பெரும் வழிகேட்டில் இட்டுச் செல்கிறார்கள். பின்னர் அது பற்றிச் தெளிவாக விளக்குவோம்.
7. தொழுகைகளையும், நடுத் தொழுகையையும் பேணுங்கள், அல்லாஹ்வின் முன்பு உள்ளச்சத்து டன் நில்லுங்கள். (2:238)
நடுத்தொழுகை அஸர் தொழுகைதான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாக, அவர்களது மனைவி மார்களும், நபிதோழர்களும் அறிவித்த பல ஹதீஃத் கள், உறுதிப்படுத்துகின்றன.
அடுத்து நாளின் ஆரம்பம் ஃபஜ்ர்தான் என்பதை உறுதிப்படுத்தும் ஹதீஃத்கள் வருமாறு :
1. உங்களில் ஒருவர் திட்டமிட்டுத் தம் மனை வியை அடிமையை அடிப்பது போல் அடிக்கி றார். பின்னர் அந்நாளின் ஒரு பகுதியான இறுதி யில்-இரவில் அவளுடன் (பாலுறவுக்காக) அவர் படுக்க நேரலாம். அப்துல்லாஹ் இப்னு ஸம்ஆ (ரழி), புகாரீ : 4942
2. நபி(ஸல்) ரமழானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக் காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப் பேன். ஸுப்ஹு தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஆயிஷா(ரழி) புகாரீ: 2033
3. …உங்களின் (நாளின்) கடைசித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) கூறினார்கள். இப்னு உமர்(ரழி) புகாரீ 998.
4. ,,,,உங்களின் கடைசி தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) கூறினார் கள். இப்னு உமர்(ரழி) புகாரீ 472.
5. ஹாஜிகள் துல்ஹஜ் பிறை 9-ல் அரஃபா மைதா னத்தில் இருந்தால் தான் அவர்களது ஹஜ் நிறை வேறும். ஹஜ்ஜுக்காக வந்தவர்கள் ஏதோ இடையூறு காரணமாக பிறை 9 பகலில் அரஃபா மைதானத்தை அடைய முடியவில்லை. ஆயி னும் மஃறிபுக்குப் பிறகானாலும் அன்றைய பஜ் ருக்குள் அரஃபா மைதானத்தை அடைந்துவிட் டால் அவர்களது ஹஜ் நிறைவேறிவிடும்.
இப்போது சிந்தியுங்கள். இந்த மூடமுல்லாக் களின் வாதப்படி பிறை 8 மாலை மஃறிபிலிருந்து துல்ஹஜ் பிறை 9 அரஃபாவுடைய நாள் ஆரம்பித்து பிறை 9 மாலை மஃறிபுடன் 24 மணி நேரம் கொண்ட அரஃபா நாள் முடிவு பெறுகிறது. இந்த மவ்லவிகளின் மூடத்தனமானக் கருத்துப்படி பிறை 9-ன் மஃறிபோடு அரஃபா தினம் முடிவுற்றது. 10-ம் நாள் அறுப்பின் தினம் ஆரம்பித்து விடுகிறதே! அப்படியானால் பிறை 9 மாலை மஃறிபுக்குப் பிறகு அரஃபா மைதானத்தை அடைபவர்களுக்கு ஹஜ் எப்படி நிறைவேறும்? சிந்தியுங்கள்!
இந்த மூட முல்லாக்கள் சொல்வது போல் நாள் மஃறிபில் அல்ல; ஃபஜ்ரில் ஆரம்பிக்கிறது என்பது உறுதியாகத் தெரியவில்லையா?
இதுவரை இங்கு நாம் எழுதி இருப்பவை 33:36 வசனத்தை நிராகரித்து பகிரங்கமான வழிகேட்டி லாகியோ, 2:159 இறைவாக்கை நிராகரித்து எமது சுயவிளக்கங்களையோ, மேல் விளக்கங்களையோ தரவே இல்லை. குர்ஆன் வசனங்களையும், ஆதார பூர்வமான ஹதீஃத்களையும் மட்டுமே எடுத்துத் தந்திருக்கிறோம். ஆனால் மார்க்கத்தை கொடும் ஹராமான வழியில் வயிற்றுப் பிழைப்பாகக் கொண் டுள்ள இந்த அறிவில்லா மவ்லவிகளுக்கு 17:41, 45-47,89. 22:72, 25:60, 39:45 குர்ஆன் வசனங்கள் கூறுவது போல், குர்ஆன், ஹதீஃத் நேரடிப் போத னைகள் எட்டிக்காயாகக் கசக்கவே செய்யும் என் பதை மறுக்க முடியுமா? ஒருபோதும் முடியாது.
இந்த அடிப்படையில் இந்த மவ்லவிகள் குர் ஆன், ஹதீஃத் நேரடிக் கருத்துக்களை மறுத்து அவர் கள் எடுத்து வைக்கும் 33:36 வசனம் கூறும் வேறு அபிப்பிராயங்கள் சுய கருத்துக்கள் வருமாறு:
நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்பது நபி(ஸல்) காலத்திலிருந்தே இருந்து வருகிறது. அது எப்படித் தவறாகும்? நபி(ஸல்) அவர் காலத்திலேயே அரபு நாட்டில் ஏன் கஃபத்துல்லாஹ்விலேயே சிலை வணக்கம் இருந்தது. அது எப்படித் தவறாகும் என்று காவி மதகுருமார்கள் கேட்பதற்கும், இந்த முஸ்லிம் மதகுருமார்கள் கேட்பதற்கும் வேறுபாடு உண்டா? இரு சாராரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே!
நபி(ஸல்) காலமென்ன, அதற்கும் 1000 வருடங் களுக்கு முன்பிருந்தே கி.மு. 383லிருந்தே யூதர் களிடம் நாள் மஃறிபிலிருந்து ஆரம்பிக்கிறது என்ற மூட நம்பிக்கை காலம் காலமாக இருந்து வரத்தான் செய்கிறது. இன்றும் அவர்களின் மதச் சடங்குகளில் இருக்கத்தான் செய்கிறது. பார்க்க அவர்களின் வலை தளங்கள்.
நபி(ஸல்) அவர்கள் இந்த மூட நம்பிக்கையை ஏற்று ஆதரித்தார்களா? அதற்கு இந்த மவ்லவிகளி டம் ஆதாரம் உண்டா? ஒரேயயாரு ஆதாரத்தையா வது காட்டமுடியுமா? அதற்கு மாறாக எப்படித் தினசரி சூரிய ஓட்டத்தைக் கண்ணால் பார்த்து ஐங்கால தொழுகைகளின் நேரத்தை அறிந்து தொழுது வந்தார்களோ, அதேபோல் சந்திரனின் ஓட்டத்தையும் தினசரி பார்த்து சந்திர மாதத்தின் தேதிகளை அறிந்து வந்தார்கள். அப்படித் தினசரி பார்த்து வரும்போது மாதத்தின் கடைசி நாளுக்கு (சங்கமம்) முதல்நாள் குர்ஆன் 36:39 இறைவாக்குக் கூறும் கண்ணுக்குத் தெரியும் இறுதிப் பிறையை (உர்ஜூனில் கதீம்) சூரிய உதயத்திற்கு முன் கிழக் கில் பார்த்து வந்ததுதான் இந்த 36:39 இறைவாக்கின் மூலம் உறுதியாகிறது. அடுத்த நாள் பிறை மறைக்கப் படும் நாள் (கும்ம) என்றும் அடுத்த நாள் புதிய மாதத்தின் முதல் நாள் என்று முடிவு செய்ததற்குரிய ஆதாரங்களே கிடைக்கின்றன.
நம் நாட்டிலுள்ள ஹிந்து மக்கள் கூட சந்திரன் மறைக்கப்படும் (கும்ம) நாளை அமாவாசை என்றும், அதற்கு அடுத்த நாளை பிரதமை அதாவது மாதத்தின் முதல் நாள் என்றும் நடைமுறைப்படுத்தி வருகிறார்கள். முஸ்லிம் மூட மவ்லவிகள் மட்டுமே பிரதமை என்பதைப் பாட்டிமை என திரித்து வளைத்துக் கூறி (பார்க்க : 2:159, 33:36) மாதத்தின் 3-ம் நாளை 1-ம் நாள் எனக் கூறி முஸ்லிம்களை வழி கேட்டில் இட்டுச் செல்கின்றனர். சந்திர மாதத்தைக் கணக்கிடுவதில் ஹிந்துக்களும், ஹிந்து மதகுருமார் களும் மிகச் சரியாக இருக்கின்றனர்.
முஸ்லிம் மதகுருமார்களான மவ்லவிகளும், அவர்களை தக்லீது செய்யும் முஸ்லிம்களும், யூதர் களை தக்லீது செய்து கி.மு. 383-லிருந்து கடை பிடித்து வரும் மாதத்தின் 3-ம் நாளை முதல் நாளாகக் கொள்ளும் மிகப் பெரும் வழிகேட்டில் இருக்கிறார்கள். இந்த மவ்லவிகளின் வழிகேட்டின் உச்ச நிலையை அவர்களின் குருட்டுக் கணிப்பின் படி மாதத்தின் நடுப்பகுதியில் இடம்பெறும் சந்திர கிரகணம் பிறை 12-ல் இடம் பெறும் அவலமும், மாதத்தின் இறுதியில் இடம் பெறும் சூரியகிரகணம் பிறை 27 அல்லது 28-ல் இடம் பெறும் அவலமும் சுய சிந்தனையாளர்களுக்கு எடுத்துக் காட்டுகிறது.
இந்த வழிகேடு காலையில் உதித்து மாலையில் மறையும் இரண்டாம் பிறையைக் கண்ணால் பார்த்து விட்டு பிறை பிறந்துவிட்டது. நாள் ஆரம் பித்து விட்டது; நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்ற மூட நம்பிக்கையில் பிறந்ததே. பிறை மேற்கில் பிறந்து கிழக்கில் மறைகிறது என்று ஆணவத்துடன் கூறும் வடிகட்டின மூடர்களுக்கு நேர்வழி எங்கே தெரியப்போகிறது? சூரியனும், சந்திரனும் கிழக்கே உதித்து மேற்கே மறைகின்றன. ஒவ்வொன்றும் உதித்து மறைய சுமார் 12 மணி நேரம் எடுக்கும் என்ற உண்மையும் இந்த மூட முல்லாக்களுக்குத் தெரியவில்லை. அதனால்தான் மாலையில் மறையும் பிறையைப் பார்த்து விட்டுப் பிறை பிறந்துவிட்டது; நாள் ஆரம்பித்துவிட்டது என்று மூடத்தனமாகப் பிதற்றுகிறார்கள். (பார்க்க : 7:146)
அடுத்து நாள் மஃறிபில்தான் துவங்குகிறது என்ற மூட நம்பிக்கையை நிலைநாட்ட இந்த மூட முல் லாக்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்கள் சில பலவீன மான ஹதீஃத்கள் மட்டுமே; மற்றபடி குர்ஆன் அல்ல, ஹதீஃத் அல்ல, அஃதரும் அல்ல, அஃதர் என்று சொல்லக்கூட தகுதியற்ற தாபியீன்களின் அறிவிப்பு கள். இந்த இடத்தில் பொய்யன் பீ.ஜையின் வழி கேட்டின் ஆழத்தை மக்கள் மன்றத்தில் வைத்துத் தான் ஆக வேண்டும்.
பொருள் கைக்குக் கிடைத்து ஒரு வருடம் நிறைவு பெற்றால் தான் ஜகாத் கடமை. மேலும் வருடா வருடம் அப்பொருளுக்கு ஜகாத் கடமை என்று நபி(ஸல்) பிரசாரப்பணியை ஆரம்பித்த 40வது வயதிலிருந்து மரணித்த 63 வயது வரை நபி(ஸல்) கூடவே இருந்து அவர்களின் அன்றாட அலுவல்களை பார்த்த, ஜகாத்தை எப்படி வசூலித் தார்கள் என்று வருடாவருடம் கண்கூடாகப் பார்த்த உமர் (ரழி), அலீ(ரழி) சொல்வது மார்க்க ஆதாரம் இல்லையாம். அவர்கள் நபி(ஸல்) சொல் லாததைச் சொல்கிறார்களாம். அதற்கு மாறாக கலீஃபா அல்ல, நபி தோழர் அல்ல, ஒரு தாபியீ நபி(ஸல்) காலத்தில் நடந்த ஒரு சம்பவமாக இரு கிராமவாசிகள் வந்து “”நேற்று இரவு நாங்கள் பிறை பார்த்தோம்” என்று சொன்ன குர்ஆனுக்கும், ஆதாரபூர்வமான ஹதீஃத்களுக்கும் முரணான செய்தி, உமர்(ரழி), அலீ(ரழி) இருவரையும், பொய் யர்களாக்கும் பொய்யன் பீ.ஜை.க்குப் பெரிய ஆதாரமாம். இதிலிருந்தே அவர் மாபெரும் வழி கேட்டின் உச்சியில் இருப்பதை அவரை தக்லீது செய்யாமல் சுயமாகச் சிந்திப்பவர்கள் எளிதாக விளங்க முடியும். ஆக இந்த மவ்லவிகள் யூத மதக் கலாச்சாரத்தை ஜானுக்கு ஜான், முழத்திற்கு முழம் பின்பற்றி நாள் மஃறிபில் ஆரம்பிக்கிறது என்று சொல்கிறார்களே அல்லாமல், குர்ஆன், ஹதீஃத் ஆதாரப்படியல்ல.
கேவலம், தங்களின் பெரும் பொய்யான வாதத்தை நிலைநாட்ட 2:159, 33:36 வசனங்களைக் கண்டுகொள்ளாமல் அவற்றை நிராகரித்து குஃப்ரி லாகி 97:1-3 மூன்று வசனங்களில் இடம் பெறும் லைலத் என்ற பதத்திற்கு நாள் என்று மொழி பெயர்க் காமல் இரவு என்று வம்படியாக மொழி பெயர்த்து அவர்களும் வழிகெடுவதோடு, அவர்களை தக்லீது செய்யும் மக்களையும் வழிகெடுக்கிறார்கள்.
அல் யவ்ம வல் லைலத் என்று கூறும்போது பகல், இரவு என்று பொருள்படும். யவ்ம் என்று தனித்து எழுதப்பட்டால் அது நாளைக் குறிப்பது போல், லைலத் என்று தனித்து எழுதப்பட்டால் அது பெரும்பாலும் நாளையே குறிக்கிறது. இதற்கு குர்ஆன் 3:41 இடம்பெறும் ஃதலாஃதத்த அய்யாம்- மூன்று நாட்கள் என்று நாளைக் குறிக்கும் அதே வியம் 19:10ல் ஃதலாஃதலயாலின்-மூன்று நாட் கள் என்று குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது உறுதிப்படுத்துகிறது.
மேலும் 2:51 இறைவாக்கிலுள்ள அர்பயீன லைலத்-நாற்பது நாட்கள் என்ற நாட்களையே குறிக்கிறது. அது நாற்பது இரவுகளாக இருந்தால் மூஸா(அலை) பகலில் மலை அடிவாரத்தில் இருந்த தன் சமூகத்தோடு இருந்திருக்க முடியும். அவரது சமூகம் காளைக் கன்றைக் கடவுளாக வணங்கும் ´ர்க்கான நிலை ஏற்பட்டிருக்க முடியாது. இதே போல் 97:1-3 இறைவாக்குகளிலுள்ள லைலத் பதம் நாளைக் குறிக்கிறதே அல்லாமல் இந்த மூட முல் லாக்கள் பிடிவாதம் பிடிப்பது போல் இரவை அல்லவே அல்ல.
சாதாரண, நடுத்தர அறிவையுடையவனும் 97:1-3ல் இருக்கும் மூன்று லைலத் பதங்களும் நாளைக் குறிக்கிறது என்பதை மிக எளிதாக விளங்க முடியும். லைலத்துல் கத்ர் இரவாக இருந்தால் அது மஃறிபிலிருந்து சூரிய உதயம் வரை 12 மணி நேரம் இருக்க வேண்டும் ஃபஜ்ருடன் அது முடிய முடி யாது. அதாவது இரவு 10¾ மணி நேரத்துடன் முடி யவே முடியாது. இவர்களின் வாதப்படி லைலத்துல் கத்ர் 10¾ மணி நேரம் மட்டுமே இருந்தால் உலகின் எஞ்சியுள்ள 13¼ மணி நேரத்திலுள்ள மக்களுக்கு லைலத்துல் கத்ர் என்ற பாக்கியம் இல்லையா? அவர் கள் இரவை அடையும்போது அவர்களுக்கும் லைலத்துல் கத்ரின் பாக்கியம் கிடைக்கவே செய்யும் என்பது இந்த மூட முல்லாக்களின் பதில் என்றால் 10¾ +13¼ =24 ஆக அது ஒருநாள் என்பதைக் கூட அறிய முடியாத மக்கு மண்டூகங்களா ஆலிம் என்று பெருமை பேசும் மவ்லவிகள்.
இந்த மூட முல்லாக்கள் 97:1-3 மூன்று இடங் களில் வரும் லைலத்துல் கத்ர்-இரவை அல்ல நாளையே குறிக்கிறது என்ற உண்மையை ஒப்புக் கொண்டால் நாள் ஃபஜ்ரில் ஆரம்பித்து ஃபஜ்ரில் முடிகிறது; மஃறிபில் ஆரம்பித்து மஃறிபில் முடிகிறது என்ற யூதர்களின் நடைமுறை பெரும் தவறு வழி கேடு என்பதை எளிதாக உணர முடியும். ஆனால் இந்த மவ்லவிகளின் வீண் பெருமையும், ஆணவம், அகங்காரம் காரணமாக அல்லாஹ்வே அவர்களை குர்ஆனை விட்டும் திருப்பிவிடுகிறான். குர்ஆன் வசனங்களை நேரடியாகக் காட்டினாலும் ஏற்க மாட்டார்கள். கோணல் வழிகளையே நேர்வழி யாக மக்களுக்குப் போதிப்பார்கள். அநியாயமாக வும், பெருமை கொண்டவர்களாகவும் நேர்வழியை மறுக்கிறார்கள் என்பதை நீங்களே 7:146, 27:14, 4:44 குர்ஆன் வசனங்களைப் படித்து நேர்வழியை அறிந்து கொள்ளுங்கள்.
பொய்யன் பீ.ஜை. வீம்பாக, சாப்பிடுவது என் றால் வாயால் மட்டுமே என்பது போல் பார்ப்பது என்றால் கண்ணால் மட்டுமே என்று மூடத்தனமா கப் பிதற்றுவது போல், நாம் லைலத் என்றால் நாள் மட்டும்தான் என்று பிதற்றவில்லை. சில இடங்களில் இரவு என்ற பொருளும் உண்டு. 2:187ல் வரும் லைலத் இரவையே குறிக்கிறது என்று ஆரம்பத்தி லிருந்தே கூறி வருகிறோம்.
சகோதர சகோதரிகளே, இந்த மூட முல்லாக் களை தக்லீது செய்வதை விட்டு தெளபா செய்து நீங்களே இந்த கட்டுரையிலுள்ள குர்ஆன் வசனங் களை நேரடியாகப் படித்துப் பார்த்து அதன்படி நடந்து வெற்றி பெற முன் வாருங்கள். அல்லாஹ் அருள்புரிவானாக.