அபூ ஃபாத்திமா
அபூசயீத் அல்குத்ரீ(ரழி) அவர்கள் கூறியதாவது:
உங்களுக்கு முன்னிருந்த(யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதிலும் புகுவீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதரே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபி(ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள். புகாரீ : 3456
மேலும் பார்க்க : புகாரீ: 7319, 7320, முஸ்லிம் : 5184.
இன்னும், நான் இறக்கிய(நெறிநூலை)தை நம்புங்கள்; இது உங்களிடம் உள்ள (நெறி நூல்)தை மெய்ப்பிக்கின்றது. நீங்கள் அதை மறுப்பவர் களில் முதன்மையானவர்களாக வேண்டாம்; மேலும், என் வசனங்களைச் சொற்ப விலைக்கு விற்றுவிடாதீர்கள்; இன்னும், எனக்கே நீங்கள் அஞ்சுவீர்களாக! (2:41)
நீங்கள் அறிந்துகொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள். (2:42)
நீங்கள் நெறிநூலை ஓதிக்கொண்டே உங்களை நீங்கள் மறந்துவிட்டு, மனிதர்களை நன்மை செய்யுமாறு ஏவுகிறீர்களா? நீங்கள் புரிந்து கொள்ள வேண்டாமா? (2:44)
நீங்கள் நெறிநூலில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே, உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி கிடையாது; மறுமை நாளிலோ, அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்வதை அல்லாஹ் கவனிக்கா மல் இல்லை. (2:85)
மறுமைக்குப் பகரமாக இவ்வுலக வாழ்க் கையை விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள் இவர்கள் தாம். ஆகவே, இவர்களுக்கு (ஒரு சிறிதளவும்) வேதனை இலேசாக்கப்படமாட்டாது. இவர்கள் உதவியும் செய்யப்படமாட்டார்கள். (2:86)
எவர் நெறிநூலில் அருளியவற்றை மறைத்து அதற்குப் பகரமாக சொற்பத் தொகை பெற்றுக்
கொள்கிறார்களோ, நிச்சயமாக அவர்கள் தங்கள் வயிறுகளில் நெருப்பைத் தவிர வேறெதனையும் உட்கொள்ளவில்லை; மறுமை நாளில் அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பரிசுத்தமாக்கவும் மாட்டான்; அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை யுண்டு. (2:174)
அவர்கள் தாம் நேர்வழிக்குப் பதிலாக வழிகேட்டையும், மன்னிப்பிற்கு பதிலாக வேதனையையும் விலைக்கு வாங்கிக் கொண்டவர்கள்; இவர்களை நரக நெருப்பை சகித்துக் கொள்ளச் செய்தது எது? (2:175)
இதற்குக் காகரணம் நிச்சயமாக அல்லாஹ் இந்நெறிநூலை உண்மையுடன் இறக்கியுள் ளான்; இன்னும், இந்நெறிநூலிலே நிச்சயமாக கருத்து வேறுபாடு கொண்டவர்கள் (சத்தியத்தை விட்டும்) தூரமான பிளவிலேயே இருக் கின்றன. (2:176)
(நபியே!) நெறிநூலிலிருந்து ஒரு பாகம் கொடுக்கப்பட்டோரை நீர் கவனிக்கவில்லையா? அவர்கள் வழிகேட்டை விலைக்கு வாங்கிக் கொள்கின்றனர். நீங்கள் வழிகெட்டு விடவேண்டும் என்றும் அவர்கள் விரும்பு கிறார்கள். (4:44)
இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் நிதானமாகப் பொறுமையாகச் சுய சிந்தனை யுடனும், குர்ஆன் பாமரனுக்கும் தெள்ளத் தெளிவாக விளங்கும் முறையிலேயே அல்லாஹ்வால் இறக்கியருளப்பட்டுள்ளது என்ற உறுதி யான நம்பிக்கையுடன் படிப்பவர்களுக்கு ஒட்டுமொத்த ஆணவம் பேசும் மவ்லவிகள் யூத மத கலாச்சாரங்களையே பின்பர்றுகின்றனர் என்பது உறுதியாகத் தெரியும்.
1450 வருடங்களுக்கு முன்னர் இறைவனின் இறுதித் தூதர் அவர்கள் செய்த முன் அறிவிப்பு இப்போது நூற்றுக்கு நூறு அப்படியே நிறை வேறி வருவதையும் உறுதியாகப் பார்க்க முடி கிறது. அதிலும் 3456வது புகாரீ ஹதீஃதில் “”எந் தளவுக்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்கள் அதி லும் புகுவீர்கள்” என்று நபி(ஸல்) அவர்கள் குறிப்பிட்டுக் கூறி எச்சரிப்பது, இம்மவ்லவிகளும் அவர்களது பக்தகோடிகளும் நூற்றுக்கு நூறு குர்ஆன், ஹதீஃதைப் புறக்கணித்து மாற்று மதக்கலாச்சாரங்களையே பின்பற்றுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தவில்லையா? மற்ற மதங்களின் மதகுருமார்களைப் போல் இம் மவ்லவிகளும் எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி வீண் பெருமை பேசுகின்றனர். எண்ணற்ற குர்ஆன் வசனங்களை நிராகரித்துக் கொடிய ஹராமான வழிகளில் ஒரு ஜான் வயிற்றை நிரப்புகின்றனர்.
மற்ற மதங்களின் மதகுருமார்களைப் போல் எண்ணற்ற குர்ஆன் வசனங்கள் நிராகரித்து நேரடி குர்ஆன் வசனங்களையும், ஹதீஃத்களை யும் நிராகரித்து விட்டு பெரியார்கள், நாதாக்கள், அகாபிரீன்கள், சாதாத்துகள், இமாம்கள், அவுலி யாக்கள், ஸலஃபுஸ்ஸாலிஹீன்கள் பேரால் இவர்களின் புரோகித முன்னோர்கள் கட்டி விட்ட கட்டுக்கதைகளையே மார்க்க ஆதாரமாகத் தந்து அவற்றையே உடும்புப் பிடியாகப் பிடித்து விதண்டாவாதம் செய்கின்றனர் இம் மவ்லவிகள்.
9:34 இறைவாக்குக் கூறுவது போல், எப்படி யூத, கிறித்தவ மதகுருமார்கள் மக்களின் செல் வங்களை தவறான முறையில் சுருட்டுகிறார் களோ அதேபோல் முஸ்லிம் மதகுருமார் களான மவ்லவிகள் மக்களின் செல்வங்களை ஹராமான வழிகளில் சாப்பிடுகின்றனர். இப்படி இந்த மவ்லவிகள் குர்ஆனின் நூற்றுக் கணக் கான வசனங்களை நிராகரித்து குஃப்ரிலாகி பெரும் பாவிகளாகவே திகழ்கின்றனர்.
மாபெரும் வழிகேட்டில் குஃப்ரில் மூழ்கு வதற்கு ஒரே காரணம் மற்ற மதங்களின் மதகுரு மார்கள் கடவுள் பெயரைச் சொல்லி மக்களை ஏமாற்றி வஞ்சித்து அவர்களின் செல்வங்களை அபகரிப்பது போல் இம்மவ்லவிகளும் மனம் போன போக்கில் ஹலாலை ஹராமாக்குவது, ஹராமை ஹலாலாக்குவதில் விற்பன்னர்களாக இருக்கிறார்கள். இந்த உண்மை 5:87, 10:59, 16:116 வசனங்கள் உறுதிப்படுத்துகின்றன.
நாங்கள்தான் மார்க்கத்தைக் கரைத்துக் குடித்த மேதைகள் என வீண் பெருமை பேசும் இம்மவ்லவிகளும் அவர்களது பக்தகோடிகளும் நாளை நரகை நிரப்ப இருக்கிறார்கள் என்பதைக் கீழ்க்கண்ட குர்ஆன் வசனங்களை நீங் களே நேரடியாகப் படித்து அறியுங்கள்.
“”2:34, 4:36, 7:36-40,146,206, 11:10, 16:22,23, 49, 17:37, 21:19, 25:63, 28:83, 31:7,18, 32:15, 35:10, 39:49,72, 40:35,47,48,56,60, 45:37, 49:13, 57:23, 59:23, 74:13, 34:31-33, புகாரீ, 4850, 4918, 6071, 6657, முஸ்லிம் : 2620.
மேலும் மார்க்கத்தை மதமாக்கி அதையே வயிற்றுப் பிழைப்பாகக் கொண்டு, அதற்காகவே, பெருமை பேசும் இம்மவ்லவிகளின் இழி நிலையை கீழ்க்கண்ட வசனங்களைப் படித்தால் நிச்சயம் அறிவார்கள். 2:159-162, 3:77, 4:27, 5:48, 6:15, 7:175-179, 11:18,19, 18:57, 45:23
ஆக மவ்லவிகளும், அவர்களது பக்தகோடி களும் இறைவனுக்கு இணை(´ர்க்) வைக்கும் நிலையிலேயே இருக்கின்றன. இதை நாம் கூற வில்லை. குர்ஆன் 12:106 இறைவாக்கே கூறுகிறது; நீங்கள் படித்துப் பாருங்கள். மேலும் ஒட்டுமொத்த இம்மவ்லவிகளும் குர்ஆனை முற்றிலும் புறக்கணித்து ஒதுக்கிவிட்டு, மாற்று மதக் கலாச்சாரங்களையே நேர்வழியாகப் போதித்து, பெருங்கொண்ட மக்களை நரகை நோக்கி இட்டுச் செல்கிறார்கள். இதையும் குர்ஆனே உறுதிப்படுத்துகிறது.
என்னுடைய இறைவா! நிச்சயமாக என் சமூகத்தார் இந்த குர்ஆனை முற்றிலும் புறக்கணிக்கப்பட்டதாக ஆக்கிவிட்டார்கள் என்று (நம்) தூதர் கூறுவார். (25:30)
ஆக இந்த குர்ஆன் வசனங்கள் அனைத்தையும் பொறுமையாகப் படித்து அறிகிறவர்கள் நிச்சயமாக ஒட்டுமொத்த மவ்லவிகளும் குர் ஆனைப் பின்பற்றவில்லை. 25:30 வசனம் கூறுவது போல் குர்ஆனை நிராகரித்துவிட்டு மற்ற மதங்களின் மதகுருமார்களைப் பின்பற்றி மாற்று மதக் கலாச்சாரங்களை வழிபாடாக்கி மக்களை நரகை நோக்கி இட்டுச் செல்கிறார்கள் என்பது திட்டமாகப் புரியும்.
பைஹக்கீ சுஃபுல் ஈமான் பாடத்தில் அலீ (ரழி) அறிவித்துக் காணப்படுவதில் இம்மவ்லவிகள் வானத்தின் கீழிலிருக்கும் அனைத்துப் படைப்புகளிலும் ஆகக் கேடுகெட்டப் படைப்பு, கழுதை, நாய் பன்றி போன்ற படைப்புகளை விட கேடுகெட்ட படைப்பு (7:179) என்பதை அறிய முடியும்.
ஆனால் அவர்களுக்குரிய ஒரே சாதக நிலை (புகாரீ(ர.அ.) 3348, 4741, முஸ்லிம் 379, ஹதீஃத் கூறுவது போல் நாளை நரகை நிரப்பக்கூடிய ஒவ்வொரு ஆயிரத்திலும் 999 பேர் இம்மவ்லவி கள் பின்னால் அணி வகுப்பதே. கண்மூடிச் செல்வதேயாகும். அன்பார்ந்த முஸ்லிம் சகோதர, சகோதரிகளே நீங்கள் அந்த 999 பேருடன் சேர்ந்து நரகம் புக விரும்புகிறீர்களா? சுவர்க்கம் புகும் ஒரேயொரு நபராக இருக்க விருமபுகிறீர்களா? மவ்லவிகள் பின்னால் செல்லாமல் சுவர்க்கம் புக விரும்புகிறீர்களா? என்னையும் நம்பாமல், எந்த மவ்லவியையும் நம்பாமல் அல்லாஹ்வை மட்டும் நம்பி, குர்ஆனை பற்றிப் பிடித்து அதன் வழிகாட்டல் படி நடக்க முன் வாருங்கள்.