MTM. முஜீபுதீன், இலங்கை
மார்ச் 2017 தொடர்ச்சி……
இவ்வாறு அங்கு வாழ்ந்த நிராகரிப்பாளர்க ளுக்கு நபி(ஸல்) அவர்கள் மூலம் அல்லாஹ் படித்துக் காட்டினான். அல்லாஹ்வின் சத்திய மார்க்கத்துடன் அசத்திய மார்க்கங்களைக் கலப்பது பெரும் பாவமாகும். சிலர் “”லா இலாஹ இல்லல்லாஹ்” என்று சொல்வார்கள். ஆனால் பல வழிகளிலும் அல்லாஹ் வுக்கு இணை துணைகளை ஏற்படுத்திக் கொள்கின்றனர். இவை பெரும் பாவமான செயற்பாடுகளாகும். பின்வரும் ஹதீஃதை அவதானியுங்கள்.
யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்தவராக மரணிக்கின்றாரோ அவர் நிச்சயமாக நரகத்தில் நுழைவார் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படியாயின் யார் அல்லாஹ்வுக்கு எதையும் இணை துணை வைக்காமல் மரணிக்கிறாரோ அவர் நிச்சயமாகச் சொர்க்கத்தில் நுழைவார் என நான் கூறுகிறேன். (புகாரி : 1238)
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
உங்களில் இறப்பின் நெருக்கத்தில் இருப்போருக்கு லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனில்லை என்னும் கலிமா) வை நினைவுபடுத்துங்கள். (முஸ்லிம்: 1672)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
இறை நம்பிக்கை என்பது எழுபதுக்கும் அதிக மான அல்லது அறுபதுக்கும் அதிகமான கிளைகள் கொண்டதாகும். அவற்றில் உயர்ந்தது அல்லாஹ் வைத் தவிர வேறு இறைவனே இல்லை என்று கூறுவ தாகும். அவற்றில் தாழ்ந்தது, தொல்லை தரும் பொருளைப் பாதையிலிருந்து அகற்றுவதாகும். நாணமும் இறை நம்பிக்கையின் ஒரு கிளைதான். (முஸ்லிம் : 58)
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் :
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை எனவும் முஹம்மது(ஸல்) அவர்கள் அவனுடைய அடிமையும் தூதரும் ஆவார்கள் எனவும் உறுதி கூறு கின்ற எந்த அடியாருக்கும் அல்லாஹ் நரகத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை. (முஸ்லிம்:53)
ஆகவே, ஒவ்வொரு மனிதனும் தான் படைக்கப் பட்ட நோக்கம், அல்லாஹ்வுக்கு எத்தகைய இணை களும் ஏற்படுத்தாது வணங்குவதற்கும், பின்வரும் ஹதீஃதை அவதானித்து கிறித்தவர்களே உண்மை யின் பக்கம் முழுமையாக நுழைந்து விடுங்கள். அவதானியுங்கள்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணையாளன் யாரு மில்லை. முஹம்மது(ஆகிய நான்) அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதரும் ஆவேன் (இறைத் தூதர்) ஈசா(அலை) அவர்கள் அல்லாஹ்வின் அடி மையும் அவனுடைய அடிமையின் புதல்வரும் ஆவார். அல்லாஹ் மரியமை நோக்கிச் சொன்ன (ஆகுக எனும்) ஒரு வார்த்தை(யில் பிறந்தவர்) அவனிடமிருந்து (ஊதப்பட்ட) ஓர் உயிர்; சொர்க்கம் உண்மை நரகம் உண்மை என்றெல்லாம் யார் உறுதிமொழி கூறுகிறாரோ அவரைச் சொர்க் கத்தின் எட்டு வாசல்களில் தான் நாடிய வாசல் வழி யாக நுழைவிப்பான். (முஸ்லிம்: 46)
நபி(ஸல்) அவர்களுக்கு முன் வாழ்ந்த சமுதாயங் களில், அக்காலத்தில் வாழ்ந்த இறைத் தூதர்களை விசுவாசம் கொண்டவர்களும் வாழ்ந்தனர். ஆகவே, அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என விசுவாசித்து, முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ் வின் இறைத் தூதர் எனவும் நம்பிக்கை கொள்வது இஸ்லாத்தின் அடிப்படையைச் சார்ந்ததாகும்.
தொழுகையை நிலை நிறுத்துதல் :
அல்லாஹ்வின் கட்டளைப்படி, இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் காட்டிய அடிப்படையில் நின்று, குனிந்து, சிரம் பணிந்து, அல்லாஹ்வை வழிபடும் கடமையாக்கப்பட்ட ஓர் வணக்க வழிபாடு “”அஸ்ஸலாத்” எனப்படும் தொழுகையா கும். இதற்குப் பிரார்த்தனை, அருள், முன்னோக்குதல், அமைதி என பல பொருள்கள் உண்டு, தொழுகைகளில் அல்லாஹ்வினால் கடமையாக்கப்பட்ட ஐங்காலத் தொழுகை பிரதானமாகும். இதனை ஒவ்வொரு இறை விசுவாசியும் மேற்கொள் வது கடமையாகும். இதனை இறை விசுவாசிகள் தனது பருவ வயதை அடைந்ததிலிருந்து மேற்கொள்ளல் வேண்டும். இதனை எந்த முஸ்லிமும் தவிர்த்து வாழ முடியாது. ஏழு வயதில் தொழும்படி பெற்றோர் பிள்ளைகளுக்கு பணிக்க வேண்டும். பத்து வயதில் பெற்றோர் பிள்ளைகளைத் தொழுகையை வலியுறுத்திக் கண்டிக்கவும் முடியும்.
நிச்சயமாக குறிப்பிட்ட நேரங்களில் தொழு கையை நிறைவேற்றுவது முஃமின்களுக்கு விதியாக் கப்பெற்றுள்ளது. (அல்குர்ஆன் : 4:103)
அல்லாஹ்வைக் குறித்த நேரத்தில் தொழுவது அவசியமாகும். அவதானியுங்கள்:
புண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ் வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகள் மீதும், நெறிநூலின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல் (தன்) பொருளை இறை வன் மேலுள்ள நேசத்தின் காரணமாக, பந்துக்களுக் கும், அநாதைகளுக்கும், மிஸ்கின்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், (அடிமைகள், கடனாளிகள்) போன்றோரின் மீட்புக் காகவும் செலவு செய்தல்; இன்னும் தொழுகையை நிலைநிறுத்தி முறையாக ஜகாத் கொடுத்து வருதல் (இவையே புண்ணியமாகும்) இன்னும் தாம் வாக்களித்தால் தம் வாக்குறுதிகளை நிறைவேற்று வோரும் (வறுமை, இழப்பு போன்ற) துன்பத்திலும், (நோய் நொடிகள் போன்றவற்றின்) கஷ்டத்திலும், யுத்த சமயத்திலும், உறுதியுடனும், பொறுமையுட னும் இருப்போரும் தான் நன்னெறியாளர்கள்; இன்னும் அவர்கள் தான் முத்தக்கீன்கள் (புயபக்தி யுடையவர்கள்) (அல்குர்ஆன் : 2:177)
முஸ்லிம்கள் அதற்குரிய நேரத்தில் தொழுவது அவசியமாகும். நிராகரிப்போரிலிருந்து இறை விசு வாசிகளை வேறுபடுத்திக் காட்டும் பிரதான வணக் கம் தொழுகையாகும். ஒரு மனிதன் தன்னைத் தூய்மை செய்து கொண்டபின் தொழுவது அவசிய மாகும். ஆபத்தான யுத்த நிலையிலும் முஸ்லிம்கள் தொழுதல் வேண்டும். அவதானிக்குக. (அல்குர்ஆன் : 4:101-103)
தொழுகையை நிலைநிறுத்துவோருக்கு மகத்தான கூலி இருப்பதாக அல்லாஹ் அறிவிக்கின்றான், அவதானியுங்கள்:
எனினும், (நபியே!) அவர்களில் கல்வியில் உறுதி யுடையோரும், நம்பிக்கை கொண்டோரும், உமக்கு அருளப்பட்ட(இந்நெறிநூல்)தின் மீதும், உமக்கு முன்னர் அருளப்பட்ட (நெறிநூல்கள்) மீதும் ஈமான் கொள்கிறார்கள். இன்னும் தொழு கையை நிலைநிறுத்துவோராகவும், ஜக்காத் முறை யாகக் கொடுப்போராகவும் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் ஈமான் கொண்டோராக (இவர்கள்) இருக்கிறார்கள். அத்தகையோருக்கு நாம் மகத்தான நற்கூலியைக் கொடுப்போம். (அல்குர்ஆன்:4:162)
அன்று மக்காவில் இறை நிராகரிப்பாளர்களின் தொழுகை கஅபாவில் சீட்டி அடிப்பதாகக் காணப்பட்டது. அத்துடன் அங்கு இறை விசுவாசிகள் தொழுவதை அவர்கள் தடுப்போராகவும் இருந்த னர். அவதானிக்குக அவர்களைப் பற்றி அல்லாஹ் கூறுவதை : அல்லாஹ் அவர்களை வேதனை செய் யாமலிருக்க (வேறு காரணம்) என்ன இருக்கிறது? அவர்கள் (கஃபாவின்) காரியஸ்தர்களாக அல்லாத நிலையில் அந்த சங்கையான பள்ளிக்கு (மக்கள் செல்வதைத்) தடுக்கின்றனர். அதன் காரியஸ்தர்கள் பயபக்தியுடையவர்களேயன்றி (வேறெவரும்) இருக்க முடியாது. எனினும் அவர்களில் பெரும்பா லோர் (இதனை) அறிய மாட்டார்கள்.
அப்பள்ளியில் அவர்களுடைய தொழுகையயல் லாம் சீட்டியடிப்பதும், கை தட்டுவதுமே தவிர வேறில்லை. (ஆகவே மறுமையில் அவர்களுக்குக் கூறப்படும்) நீங்கள் நிராகரித்ததன் காரணமாக இப் போது வேதனையைச் சுவையுங்கள் (என்று)
அல்குர்ஆன் : 8:35,36)
அல்லாஹ் என்றும் அழியாத வியாபாரம் எது எனக் கூறுவதை அவதானியுங்கள்:
நிச்சயமாக எவர்கள் அல்லாஹ்வின் நெறிநூலை படிக்கிறார்களோ, தொழுகையை முறையாக கடை பிடித்து ஒழுகுகிறார்களோ, நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து இரகசியமாகவும், வெளிப் படையாகவும் (அல்லாஹ்வின் பாதையில்) செலவு செய்கிறார்களோ, (ஆகிய இவர்கள்) என்றும் அழியாத ஒரு வியாபாரத்தையே ஆதரவு வைக்கி றார்கள். (அல்குர்ஆன்: 35:29)
சுவர்க்கவாசிகள் குற்றவாளிகளைக் குறித்து உங் களை ஸகர் (நரகத்தில்) நுழைய வைத்தது எது? என்று கேட்கும்போது அவர்கள் கொடுக்கும் பதி லில் முதலாவதாக அமைவது தொழுபவர்களில் நின்றும், நாங்கள் இருக்கவில்லை என்பதாகும். பார்க்கவும் (அல்குர்ஆன் : 74:42,43)
சிலர் மற்றவர்களுக்கு காண்பிப்பதற்காகத் தொழுவார்கள், இதுவும் இணைவைப்பில் சேர்ந்த தாகவும், அத்துடன் அவர்கள் தமது தொழுகையில் பாராமுகமாக இருப்பார்கள். அவர்களே மறு மையை பொய்ப்பிக்கிறார்கள். அவர்களைப் பற்றி அல்லாஹ் இப்படி விபரிக்கிறான். அவதானியுஙகள்.
இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக் குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பாராமுகமாக(வும், அசிரந்தை யாக)வும் இருப்பார்கள். அவர்கள் பிறருக்குக் காண் பிக்(கவே தான் தொழு)கிறார்கள். மேலும், அற்ப மான (புழங்கும்) பொருட்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள். அல்குர்ஆன்: 107:4-7)
ஆகவே அல்லாஹ்வை மட்டும் தனித்து வணங்கி வழிபடுவது ஒவ்வொரு இறை விசுவாசியின் கடமை யாகும். அல்லாஹ்வை மட்டுமல்லாது பல தெய்வ கொள்கைகளை உருவாக்கி வணங்கி வழிபடுவது பெரும் பாவமாகும். அன்று மதீனாவில் உண்மை யாக ஈமான் கொள்ளாது சில நயவஞ்சகர்கள் விசு வாசிகளை ஏமாற்றுவதற்காக தொழுது வந்தனர். அவர்களின் பண்புகளைக் கொண்டு அவர்களை அல்லாஹ் இனம் காட்டுவதை அவதானியுங்கள்.
நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை வஞ்சிக்க நினைக்கினறனர். ஆனால் அவன் அவர் களை வஞ்சித்து விடுவான்; தொழுகைக்கு அவர்கள் தயாராகும்போது சோம்பலுடையோராகவே நிற் கிறார்கள். மனிதர்களுக்குத் (தங்களையும் தொழு கையாளியாக) காண்பிப்பதற்காக (நிற்கின்றார்கள்) இன்னும், மிகச் சொற்ப அளவேயன்றி அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூறுவதில்லை.
இந்த முனாஃபிக்குகள் முஃமின்களின் பக்கமு மில்லை, காஃபிர்களின் பக்கமும் இல்லை; இரு பிரிவினருக்கிடையே தத்தளித்துக் கொண்டிருக்கின் றார்கள். அல்லாஹ் எவரை வழி தவறச் செய்து விட்டானோ, அவருக்கு (நபியே!) யாதொரு வழி யையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் : 4:142,143)
ஆகவே, ஒரு மனிதன் அல்லாஹ்வுக்காகவே தொழுகை போன்ற எல்லா வணக்க வழிபாடுகளை யும் செய்தல் வேண்டும். மனிதன் அல்லாஹ்வை வணங்குவதனால் இறைவனுக்கு ஒன்றும் கூடி விடப் போவதில்லை. மனிதர்களே இம்மையிலும் மறுமையிலும் பல நன்மைகளை அடைந்து கொள்ள முடிகிறது.
தொழுகையினால் கிடைக்கும் சில பயன்கள் :
முஸ்லிம்களை தொழுகையின் மூலம் அடை யாளம் கண்டுகொள்ள முடியும், அவதானியுங்கள்:
ஆயினும் அவர்கள் தவ்பா செய்து (மனந்திருந்தி தம் தவறுகளிலிருந்து விலகி) தொழுகையைக கடைப்பிடித்து, ஜக்காத்தையும் (முறையாகக்) கொடுத்து வருவார்களானால், அவர்கள் உங்களுக்கு மார்க்கச் சகோதரர்களே; நாம் அறிவுள்ள சமூகத்தினருக்கு (நம்) வசனங்களை விளக்கு கிறோம். (அல்குர்ஆன் : 9:11)
அல்லாஹ்வைத் தொழுது நற்கருமங்கள் செய்து வருபவர்களுக்கு அவனைப் படைத்து பரிபாலித்துக் காக்கும் இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது, அவதானியுங்கள்.
யார் ஈமான் கொண்டு, நற்கருமங்களைச் செய்து, தொழுகையை நியமமாகக் கடைப் பிடித்து, ஜக்காத்தும் கொடுத்து வருகிறார்களோ, நிச்சயமாக அவர்களுக்கு அவர்களின் இறைவனிடத்தில் நற்கூலி இருக்கிறது. அவர்களுக்கு அச்சமுமில்லை அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் : 2:277)
அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் வாங்கிய உறுதிமொழியை அவதானியுங்கள்:
நிச்சயமாக அல்லாஹ் இஸ்ராயீலின் சந்ததியினர் இடத்தில் உறுதிமொழி வாங்கினான். மேலும் அவர் களிலிருந்து பன்னிரண்டு தலைவர்களை அனுப்பி யுள்ளோம். இன்னும் (உறுதி மொழி வாங்கியபோது) அல்லாஹ் கூறினான். நிச்சயமாக நான் உங்களுட னேயே இருக்கின்றேன். நீங்கள் தொழுகையை நிலைநிறுத்தி, ஜக்காத்தும் கொடுத்து, என் தூதர் களை விசுவாசித்து, அவர்களுக்கு உதவியும் புரிந்து, அல்லாஹ்வுக்காக அழகிய கடனும் கொடுப்பீர்களா னால் நிச்சயமாக நான் உங்கள் பாவங்களை மன் னித்து சதா நீரருவிகள் தாழாலே ஓடிக் கொண்டிருக்கும் சவனபதிகளில் உங்களை நுழைய வைப் பேன்; எனவே இதற்குப் பின்னரும், உங்களில் எவரேனும் (இம்மார்க்கத்தை) நிராகரிப்பின் நிச்சயமாக அவர் நேரான வழியிலிருந்து தவறிவிட் டார். (அல்குர்ஆன் : 5:12)
மேல் குறிப்பிடும் நல்லறங்கள் மேற்ககொள் ளின் அல்லாஹ் அவர்களக்கு சுவர்க்கத்தை வழங்கு வதாக வாக்களித்துள்ளான். அல்குர்ஆன்: 9:71,72 வசனங்களும் இதனையே குறிப்பிடுகின்றன.
எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கிறார்களோ அவர்கள், (ஆக) இத்தகையோர் தாம் சுவனங்களில் கண்ணியப்படுத்தப்பட்டவர் களாக இருப்பார்கள். (அல்குர்ஆன்: 70:34,35)
மனிதர்கள் அல்லாஹ்வைத் தொழுதல் வேண் டும். இத்தொழுகை மனிதர்களை மானக்கேடான தீய செயல்களிலிருந்து தடுப்பதாக அல்லாஹ் கூறு கிறான். அவதானியுங்கள்.
(நபியே!) இந்நெறிநூலிலிருந்து உமக்கு அறிவிக் கப்பட்டதை நீர் எடுத்தோதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநிறுத்துவீராக. நிச்சயமாக அல் லாஹ்வின் திக்ரு(தியானம்) மிகவும் பெரிதா(ன சக்தி யா)கும். அன்றியும் அல்லாஹ் நீங்கள் செய்கிற வற்றை நன்கறிகிறான். (அல்குர்ஆன்: 29:45)
ஆகவே, தொழுகை மனிதர்களை மானக் கேடானவற்றையும், தீமைகளை விட்டும் தடுக்கின் றது. முந்தைய சமுதாயதங்களுக்கும் தொழுகை கடமையாக்கப்பட்டிருந்தது.
தொழுகை இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களுக்கும், அவருடைய சமுதாயத்தின ராகிய எமக்கு மட்டும் கடமையாக்கப்பட்ட ஓர் வணக்க வழிபாடு அல்ல. இது முந்தைய இறைத் தூதர்களுக்கும், அவர்களின் சமுதாயத்தினருக்கும் கடமையாக்கப்பட்ட ஒரு கடமையாகும். அத்துடன் முன்னைய சமுதாயங்களுககும் தொழுகை, ஜக்காத், நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் கடமையாக்கப்பட்டே இருந்தன. ஆனால் முந்தைய சமுதாயத்தினருக்கு பின் வந்த சமுதாயத்தினர் அதில் இணை வைத்தலையும், மெளட்டீக சடங்கு சம்பிரதாயங்களையும் தமது யூகங்களுக்கும் விருப்பங்களுக்கும் ஏற்ப கலந்து குழப்பி விட்டனர். இப்ராஹீம்(அலை) அவர்களின் பிரார்த்தனையின் ஒரு பகுதியை அவதானியுங்கள். அல்குர்ஆன் அதனை ஞாபகப்படுத்துவதைப் பாருங்கள்.
எங்கள் இறைவனே, நிச்சயமாக நான் என் சந்ததியரிலிருந்தும், சங்கையான உன் வீட்டின் (கஃபாவின்) அருகே, விவசாயமில்லாத (இப்) பள்ளத்தாக் கில், எங்கள் இறைவனே! தொழுகையை அவர்கள் நிலைநிறுத்தாட்டுவதற்காக குடியேற்றி இருக்கிறேன். எனவே மக்களின் ஒரு தொகையினரின் இத யங்களை அவர்கள் பால் சாய்ந்திடச் செய்வாயாக! இன்னும் அவர்கள் நன்றி செலுத்தும் பொருட்டு கனிவர்க்கங்களிலிருந்து அவர்களுக்கு நீ ஆகாரமும் அளிப்பாயாக! (அல்குர்ஆன் : 14:37)