MTM முஜீபுதீன், இலங்கை
ஜூன் 2017 தொடர்ச்சி….
இப்ராஹீம்(அலை) அவர்களும் அவர்களின் சந்ததியில் வந்த இறைத் தூதர்களும் தமது சமுதாயத் தினருக்குத் தொழுகையைக் கடமையாக்கி இருந்தனர். மேலும் அவதானியுங்கள் மரியமின் மகன் ஈசா (அலை) அவரகள் குழந்தையாக இருந்த நிலையில் தமது சமுதாயத்தினரிடம் கதைத்தச் செய்தியை :
நிச்சயமாக நான் அல்லாஹ்வுடைய அடிமை யாக இருக்கிறேன். அவன் எனக்கு நெறிநூலைக் கொடுத்திருக்கிறான்; இன்னும் என்னை நபியாக ஆக்கியிருக்கிறான்.
இன்னும், நான் எங்கிருந்தாலும், அவன் என்னை முபாரக்கானவனாக (நற்பாக்கியமுடையவனாக) ஆக்கியிருக்கிறான். மேலும், நான் உயிருடன் இருக்கும் காலமெல்லாம் தொழுகையையும், ஜக்காத்தையும் (நிறைவேற்ற) எனக்கு வசியத் செய்து (கட்டளையிட்டு இருக்கிறான். (அல்குர்ஆன்:19:30,31)
ஈசா(அலை) அவர்களிடம் தொழுகையை நிலை நிறுத்தும்படிக் கட்டளையிட்ட அல்லாஹ் மூஸா (அலை) அவர்களிடம் தொழுகையைப் பற்றி கூறுவதை அவதானியுங்கள்.
இன்னும், நான் உம்மை (என் தூதராக)த் தேர்ந் தெடுத்தேன்; ஆதலால் வஹீயின் வாயிலாக (உமக்கு) அறிவிக்கப்படுவதற்கு நீர் செவியேற்பீராக.
நிச்சயமாக நான் தான் அல்லாஹ்! என்னைத் தவிர வேறு நாயன் இல்லை. ஆகவே என்னையே நீர் அடிபணியும், என்னைத் தியானிக்கும் பொருட்டு தொழுகையை நிலை நிறுத்துவீராக.
ஒவ்வோர் ஆத்மாவும் தாம் செய்வதற்கு தக்கபடி பிரதிபலன்கள் அளிக்கப்படும் பொருட்டு (நியாயத் தீர்ப்புக்குரிய) வேளை நிச்சயமாக வர இருக்கிறது. ஆயினும் அதை மறைத்து வைக்க நாடுகிறேன்.
ஆகவே, அதனை நம்பாது, தன்(மன) இச்சை யைப் பின்பற்றுபவன் திடனாக அதை விட்டும் உம்மைத் திருப்பி விட வேண்டாம். அவ்வாறாயின் நீர் அழிந்து போவீர். (அல்குர்ஆன்: 20:13-16)
அன்று 1438 ஆண்டுகளுக்கு முன் அல்லாஹ் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலம் யூத கிறித்தவ சமுதாயங்களிடம் இதனைப் படித்துக் காட்ட வைத்தான். அதன் மூலம் மக்கள் சிலைகளை வணங்குவதை தவிர்த்து வாழ வழிகாட்டினான். ஆகவே முந்தைய சமுதாயங்களுக்கு அனுப்பப் பட்ட இறைத் தூதர்களுக்கு, அல்லாஹ்வை மட்டுமே தனித்தவனாக வழிபட வழிகாட்டப்பட்டது. முந்தைய சமுதாயங்களுக்கும் தொழுகை கடமை யாக்கப்பட்டிருந்தது.
கஅபாவை நோக்கி முஸ்லிம்கள் தொழுவது அல்லாஹ்வின் கட்டளை:
அத்துடன் உலகில் நிர்மாணிக்கப்பட்ட மிகப் பழமையான இறை இல்லம் மக்காவிலுள்ள கஅபா ஆகும். ஆதம்(அலை) அவர்கள் ஆரம்பத்தில் அதை நிர்மாணித்து அதில் நின்று அல்லாஹ்வை வணங்கிய தாகவும், பின் இப்ராஹீம்(அலை), இஸ்மாயீல் (அலை) அவர்களினால் புனர் நிர்மாணம் செய்யப் பட்டதாகவும், ஹதீஃத்கள் அறிவிக்கின்றன. இடைக்காலத்தில் ஜெருஸலேத்திலுள்ள புனிதப் பள்ளிவாசல் தொழுகைக்குரிய திசையாக இருந்தது. இதனை “”தூய்மை இல்லம்” அதாவது “”அல்மஸ்ஜி துல் அக்ஸா” (கோடியிலுள்ள பள்ளி வாசல்) என்றும் இதை அழைப்பர். வேதக்காரர்கள் இதனை “”ஹைக்கல்” என்று அழைப்பர். இறுதி நபியின் காலத்தில் மீண்டும் மக்காவிலுள்ள முதல் பள்ளிவாசலே முஸ்லிம்களின் தொழுகைக்குரிய திசையாக அமையும் என வேதக்காரர்கள் அவர்களின் இறைநெறி நூல்கள் மூலமாக அறிந்தே வைத்திருந்தனர். முஹம்மது(ஸல்) அவர்களும், இறை விசுவாசி களும் ஆரம்பத்தில் 18 மாதங்களாக பைத்துல் முகத் தஸ் நோக்கியே அல்லாஹ்வைத் தொழுது வந்தனர். அதன் பின்பே அல்லாஹ் முஸ்லிம்களுக்கு கஅபாவை நோக்கி தொழும்படி கட்டளையிட் டான். இந்த உண்மைகளை அறியாத சில சிலைகளை வணங்குபவர்கள் முஸ்லிம்கள் திசையை வணங்குவதாக அறியாமல் கூறுகின்றனர். இப் போது முஸ்லிம்கள் உலகில் எங்கு வாழ்ந்தாலும் கஅபாவின் திசையை நோக்கியே தொழுகின்றனர். இது அல்லாஹ் பணித்த கட்டளையாகும். கஅபா வின் பக்கம் அறியப்படாத சந்தர்ப்பங்களில் அனுமானித்து தொழுது கொள்வதற்கும் அனுமதி உண்டு. குற்றமில்லை, அல்லாஹ் அல்குர்ஆனில் கூறுவதை அவதானியுங்கள்.
கிழக்கும், மேற்கும், அல்லாஹ்வுக்கே சொந்தம்; நீங்கள் எந்தப் பக்கம் திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் இருக்கிறது. நிச்சயமாக அல்லாஹ் விசாலமானவன் எல்லாம் அறிந்தவன். (அல்குர்ஆன் : 2:115)
முஸ்லிம்கள் கஅபாவை முன்னோக்கியே தொழுகின்றனர். அதனால் அவர்கள் திசையை நோக்கித் தொழுகிறார்கள் எனக் கூறமுடியாது. கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே சொந்தமான தாகும். நாம் எந்தப் பக்கம் திரும்பினாலும் எல்லாப் பக்கங்களிலும் அவன் பார்த்துக் கொண்டிருக்கி றான். அவன் எல்லாவற்றையும் அறிந்தவனாகவே இருக்கிறான். கஅபாவை நோக்கித் தொழும்படி அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகிறான். அவதானியுங்கள்.
(நபியே!) நாம் உம் முகம் அடிக்கடி வானத்தை நோக்கக் காண்கிறோம். எனவே நீர் விரும்பும் கிப்லாவின் பக்கம் உம்மைத் திடமாக திருப்பி விடு கிறோம். ஆகவே நீர் இப்போது (மக்காவின்) மஸ்ஜி துல் ஹராம் பக்கம் உம் முகத்தைத் திருப்பிக் கொள்ளும். (முஸ்லிம்களே!) இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அதன் (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங் கள். நிச்சயமாக எவர்கள் நெறிநூல் கொடுக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்கள், இது அவர்களுடைய இறைவனிடமிருந்து வந்த உண்மை என்பதை நிச்சயமாக அறிவார்கள்; அல்லாஹ் அவர்கள் செய்வது பற்றிப் பாராமுகமாக இல்லை.
நெறிநூல் கொடுக்கப்பட்டவர்களிடம் நீர் எல்லாவிதமான அத்தாட்சிகளையும் கொண்டு வந்த போதிலும் அவர்கள் உம் கிப்லாவைப் பின் பற்ற மாட்டார்கள்; நீரும் அவர்களுடைய கிப்லா வைப் பின்பற்றுபவர் அல்லர். எனவே (இதைப் பற்றிய) ஞானம் உமக்குக் கிடைத்தபின் நீர் அவர்களுடைய விருப்பங்களைப் பின்பற்றி நடப்பீராயின், நிச்சயமாக நீர் அநியாயக்காரர்களில் ஒருவராக இருப்பீர்.
எவர்களுக்கு நாம் நெறிநூல்களைக் கொடுத்தோமோ அவர்கள் தம் (சொந்த) மக்களை அறிவதைப் போல் (இந்த உண்மையை) அறிவாரகள். ஆனால் அவர்களில் ஒரு பிரிவினர், நிச்சயமாக அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.
(கிப்லாவைப் பற்றிய) இவ்வுண்மை உம் இறை வனிடமிருந்து வந்ததாகும். ஆகவே அதனைச் சந்தேகிப்போரில் ஒருவராக நீர் ஆகிவிட வேண்டாம். ஒவ்வொரு கூட்டத்தவருக்கும், தொழுகைக் கான ஒரு திசை உண்டு. அவர்கள் அதன் பக்கம் திரும்புபவர்களாக உள்ளனர். நற்செயல்களின்பால் நீங்கள் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் எங்கு திரும்பினாலும் அல்லாஹ் உங்கள் யாவரையும் ஒன்று சேர்ப்பான். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்கள் மீதும் பேராற்றல் மிக்கவனாக இருக்கிறான்.
ஆகவே நபியே! நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் தொழுகையின் போது, உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை. அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பாரா முகமாக இல்லை.
ஆகவே (நபிய!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் (தொழுகையின் போது) உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாசலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள். எனவே, அவர்களுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள்; இன்னும், என்னுடைய நிஃமத்களை (அருள் கொடைகளை) உங்கள் மீது முழுமையாக்கி வைப்பதற்கும், நீங்கள் நேர்வழியினைப் பெறுவதற் கும் (பிறருக்கு அஞ்சாது, எனக்கே அஞ்சுங்கள்)
இதேபோன்று, நாம் உங்களிடையே உங்களிலிருந்தே ஒரு தூதரை, நம் வசனங்களை உங்களுக்கு எடுத்துப் படித்துக் காட்டவும் உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும் உங்களுக்கு நெறிநூலையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பதற்காகவும் இன்னும் உங்களுக்குத் தெரியாமல் இருந்தவற்றை, உங்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காகவும அனுப்பி யுள்ளோம். ஆகவே, நீங்கள் என்னை நினைவு கூறுங் கள். நானும் உங்களை நினைவு கூர்வேன், இன்னும், நீங்கள் எனக்கு நன்றி செலுத்துங்கள், எனக்கு மாறு செய்யாதீர்கள். (அல்குர்ஆன் : 2:144-152)
அன்று நபி(ஸல்) அவர்களும், நபிதோழர்களும் அல்லாஹ்வின் கட்டளைப்படி தமது தொழுகைக் குரிய திசையை கஅபாவை நோக்கித் திருப்பினார் கள். அப்போது நெறிநூல் கொடுக்கப்பட்டவர் களில் ஒரு பகுதியினர் ஏளனம் செய்தனர். அவர் களுக்கு அல்லாஹ் வஹீ மூலமாக கொடுத்த பதில் இதுவாகும்.
ஏக இறைவனை ஒருமைப் படுத்தும் முஸ்லிம் களின் தொழுகை :
ஒவ்வொரு காலங்களில் வாழ்ந்த இறைத் தூதர்களுக்கும் அவர்களுடைய சமுதாயத்தினர்களுக்கும் அல்லாஹ் தொழுகையைக் கடமையாக்கி இருந்தான். அவர்கள் அக்கட்டளையை ஏற்று அல்லாஹ் அவர்களுக்கு விதியாக்கிய தொழுகையை உரிய முறையில் செயற்படுத்தி வந்தனர். ஆனால் அவர் களுக்குப் பின் வந்த சமுதாயத்தினர் அவர்களின் தொழுகையில் பல மாற்றங்களைச் செய்தனர். பல தெய்வ சடங்கு சம்பிரதாயங்களை அதில் உட்புகுத் தினர். இதனால் அவர்களின் தொழுகைகள் கூச்சலும், விளையாட்டாகவும் இருந்தது.
இறுதி இறைத் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஆரம்பத்தில் இரு ரக்காத்துகளாக தொழுகையைக் கடமையாக்கி இருந்தான். பின் அல்லாஹ் ஐங்காலத் தொழுகையை சகல முஸ்லிம் களுக்கும் கடமையாக்கினான். அவதாணிக்க புகாரி : 349, 350ம்
ஹதீஃத்களை, மேலதிகமாக விரும்பிய வர்கள் கட்டாயப்படுத்தாத தொழுகைகளையும் தொழ முடியும். ஐங்காலத் தொழுகை ஏழு வயதை அடைந்ததிலிருந்து முஸ்லிம்கள் தொழுவது கடமை யாகும். இத்தொழுகையை தூக்கம், மறதி தவிர்த்த மற்ற காரணங்களினால் விட முடியாது. ஆனால் பெண்கள் தமது மாதவிடாய் காலங்களில் தொழு வதற்கு அனுமதியில்லை. தூய்மையான பின்பே தொழுதல் வேண்டும். அவர்கள் விடுபட்ட தொழுகைகளைக் கழா செய்யவேண்டியதில்லை. நபி தோழர்களுக்கு ஒரு நேரத் தொழுகையை விடு வது தமது பிள்ளைகள், சொத்து சுகங்களை முழுமை யாக இழப்பதை விட கடினமானதாக இருந்தது. அல்லாஹ்வின் மீதுள்ள அச்சம், மறுமை மீதுள்ள நம்பிக்கை அவர்களை தொழுகையை உறுதியாக செய்வதற்கு அடிப்படையாக அமைந்தது. நின்று தொழ முடியுமானவர்கள் நின்றும், முடியாதவர்கள் தமது இயலுமைக்கேற்ப தொழுகையை நிறை வேற்ற வேண்டும். சில தேவை வசதிகளைப் பொறுத்து ஸுபஹ் தொழுகை தவிர்த்த லுஹர், அஸர் தொழுகைகளையும், மஃரிப், இஷை தொழு கைகளையும் அதற்குரிய நேரங்களில் சேர்த்துத் தொழுவதற்கும் சில சந்தர்ப்பங்களில் நபி வழியில் அனுமதி உண்டு. அத்துடன் யுத்த அபாயங்கள், அச்சம் சார்ந்த நேரங்களில் பாதுகாப்புடனான யுத்த காலத் தொழுகையைக் கூட்டாகத் தொழும் போது, சுருக்கித் தொழுகை நடத்தும் நபிவழி தொழுகை முறைகளும் உண்டு.
பயணம் என்பது ஓர் இரவும், பகலும் ஆகும். ஒருவர் ஓர் இரவும், பகலும் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள், தமது ஊரை விட்டுப் பயணிக்கும் எண்ணத்துடன் பயணம் செய்வதுண்டு. அவ்வாறு பயயணிக்கும் எண்ணத்துடன் ஊர் எல்லையை விட்டு வெளிச் சென்றவர்கள் நான்கு ரகாஅத்து களைக் கொண்ட தொழுகைகளை, இரண்டு ரஅக் காத்துகளாக சுருக்கித் தொழுவதற்கு நபி வழியில் அனுமதி உண்டு. அத்துடன் பயணத்தில் லுஹர், அஸர் தொழுகையையும அல்லது மஃரிப், இஷா தொழுகையையும் சேர்த்தும், சுருக்கியும் தொழு வதற்கும் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்களின் வழிமுறையில் அனுமதி உண்டு.
ஒரு முஸ்லிம் தொழுகைக்குரிய நேரங்களை அறிந்திருப்பது அவசியமாகும். ஐங்காலத் தொழுகை நேரங்கள் வருமாறு :
1. சுபஹ் தொழுகை நேரம் அதிகாலையில் கிழக்கில் வானில் வெள்ளைக் கோடு உதயத்துடன் (துலூஉல் ஃபஜ்ர்) ஃபஜ்ர் உதயத்திலிருந்து சூரியன் உதயமாகும் வரை ஸுபுஹ் தொழுகை நேரமாகும். இதன் ரஅக்காத்துகள் இரண்டாகும்.
2. ழுஹர் தொழுகை நேரம், சூரியன் பகல் உச்சியிலிருந்து சாய்ந்ததிலிருந்து ஒரு பொருளின் நிழல் பொருள் போன்ற அளவுக்கு சமமாகும் அளவு வரை, ழுஹர் நான்கு ரஅக்கத்துகளாகும்,
3. அஸர் தொழுகை நேரம், லுஹர் முடிவிலி ருந்து சூரியன் மஞ்சள் நிறத்தை அடையமுன் பாகும். அஸர் நான்கு ரஅக்காத்துகளாகும்.
4. மஹ்ரிப் தொழுகை நேரம், சூரியன் மறைந்த திலிருந்து செம்மேகம் மறைகின்ற வரையிலாகும். மஹ்ரிப் மூன்று ரஅக்காத்துகளாகும்.
5. இஷா தொழுகை நேரம், செம்மேகம் மறைந் தது முதல் பாதி இரவு வரையில் இஷா தொழுவர். (புகாரி : 572) இது நான்கு ரஅக்காத்துகள் ஆகும்.
சூரியன் உதயமாகிக் கொண்டுள்ள நேரமும், சூரியன் மறைந்து கொண்டிருக்கும் நேரமும் ஓர் இறைவனுக்கு இணை துணைகளைக் கற்பித்து வழி படுபவர்கள் வணங்கும் நேரம் ஆகும். இந்நேரத்தில் முஸ்லிம்கள் தொழுகைகளை ஆரம்பிக்க மாட்டார் கள். அன்று முஸ்லிம்கள் சூரியனின் ஒளிக் கீற்று வானத்தில் ஏற்படுத்தும் நிற மாற்றங்களை அவதானித்தும், சூரிய உதயம், மறைவுகளை அவதானித் தும் தொழுகைக்குரிய நேரங்களைக் கணித்து வந்த னர். அப்போது நேரக் கணிப்பீட்டில் சில சந்தர்ப்பத் தில் தவறுகள் இடம் பெற்றன. நபி(ஸல்) அவர்களும் அன்று சூரியனை அவதானித்து தொழுகைக்குரிய நேரத்தைக் கணிப்பிட்டு வந்தனர். ஆனால் அல்லாஹ்வின் அருளால் இன்று கணக்கு அளவீட்டுக் கருவிகள் மூலம் மிக சரியாகவும் இலகுவான முறையிலும் தொழுகை நேரத்தைக் கணக்கிட முடிகின்றது.
தொழுகைக்குள் நுழைய முன் ஒருவர் குளிப்புக் கடமையானவர்கள் குளித்துக் கொள்ள வேண்டும். மாதவிலக்கு உடைய பெண்கள் அதிலிருந்து தூய்மையடைந்து கொண்ட பின்பே தொழுதல் வேண்டும். தொழுகைக்கு முன் சுத்தமான நீரினால் உளூ செய்து தூய்மைப்படுத்திக் கொள்வது அவசியமாகும். நீர் இல்லாத சந்தர்ப்பத்தில் தூய உலர்ந்த மண்ணினால் தயமம் செய்து கொள்ள அனு மதி உண்டு. நீரைப் பயன்படுத்த முடியாதவர்களும் தயமம் செய்து கொள்ள முடியும். மலம், ஜலம், (சிறு நீர் கழித்தல்), பின் துவாரத்திலிருந்து காற்று வெளி யேறுதல் மற்றும் சில விஷயங்களினால் உளூ முறிந்துவிடும். உளூ தொழுகை பற்றிய விபரங்களை அறிவதற்கு அல்குர்ஆனையும் நபி(ஸல்) அவர் களின் ஹதீஃத்கள் அடங்கிய தொழுகை, உளூ சம்பந்தமான பாடங்களை அவதானியுங்கள். புகாரி ஹதீஃத் இலக்கம் 135 முதல் 1394 வரையுள்ள ஹதீஃத்களையும், முஸ்லிம் 381 முதல் 1779 வரையுள்ள ஹதீஃத்களையும், பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை இனங்கண்டு அவற்றைத் தவிர்த்து ஆதாரமான ஸஹீஹான நபி(ஸல்) அவர் களின் ஹதீஃத்களை ஆதாரமாக விளக்கம் தெரிந்தவர்களின் விளக்கங்களையும் அவதானித்து தொழுகை பற்றி அறிந்து கொள்ளுங்கள்.
தற்போது இறுதி இறைத்தூதர் அவர்களின் வழி காட்டல், நடைமுறை பேணப்படாத எல்லா வணக்க வழிபாடுகளும், தொழுகைகளும் பல தெய்வ வணக்க வழிபாட்டுக்கே வழிகாட்டும். அல் லாஹ்வின் மார்க்கமான இஸ்லாம் மட்டுமே ஓர் இறைவனை வணங்குவதற்கு வழிகாட்டுகிறது.
அப்துல்லாஹ் பின் மஸ்வூது(ரழி) கூறியதாவது:
அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமான செயல் எது? என்று நபி(ஸல்) அவர்களிடம் நான் கேட்ட போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் தொழு வதாகும் என்று பதில் கூறினார்கள். அதற்கு அடுத்து எது? என்றேன். பெற்றோருக்கு நன்மை செய்தல் என்றார்கள். அதற்து அடுத்து எது? என்றேன் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிதல் என்றனர். (புகாரி : 527)
ஐவேளைத் தொழுகைகள் மனிதன் அறியாது செய்கின்ற பாவங்களுக்குப் பரிகாரமாக அமைகின் றது. உங்களில் ஒருவரது வாசலில் ஆறு ஒன்று ஓடிக் கொண்டு இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை குளிக்கின்றார். அவரது மேனியிலுள்ள அழுக்குகளில் எதுவும் எஞ்சியிருக்குமா எனக் கூறுங்கள் என்று தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவரின் அழுக்குகளில் சிறிதளவும் எஞ்சி யிராது என்று நபி தோழர்கள் கூறினர். இது ஐவேளைத் தொழுகைகளின் உவமையாகும். இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை அகற்றுகிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி : 528)