நிகாருன் நிஷா சித்தீகிய்யா, கோவை.
அருள்மிகு மாதமான ரமழான் ஒட்டுமொத்த மனித குலம் நேர்வழி பெறுவதற்கான பொக்கிஷமான வாழ்வியல் நெறிமுறைகளை உள்ளடக்கிய உன்னத வேதமான திருமறை திருக்குர்ஆன் இறங்கிய மாதமாகும்.
வேதாகமங்களும், தவ்ராத், இன்ஜில், ஜபூர் ஆகிய வேதங்களும், அந்தந்த நபிமார்களுக்கு ஒரே தடவையில் மொத்தமாக அருளப்பெற்றன. ஆனால் குர்ஆன் லவ்ஹுல் மஹ்ஃபூல் என்ற மூல ஏட்டிலிருந்து முதல் வானத்திலிருக்கும் பைத்துல் இஜ்ஜா (மதிப்புமிக்க இல்லம்) என்ற இறை இல்லத்திற்கு மொத்தமாக அருளைப் பெற்றது ரமழான் மாதத்தில்தான். அதிலும் குறிப்பாக ஆயிரம் மதங்களை விட சிறந்த லைலத்துல் கத்ர் என்ற இரவில்தான் (நாள்) என்பது நாமறிந்த வியமாகும்.
ரமழான் மாதம் எத்தகையதென்றால் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான வழிகாட்டி யாகவும், தெளிவான சான்றுகளைக் கொண்டதாக வும், (நன்மை, தீமைகளைப்) பிரித்தறிவிப்பதுமான அல்குர்ஆன் இறக்கியருளப் பெற்றது. (அல்குர்ஆன் : 2:185)
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணிய மிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் (நாளில்) இறக்கி னோம். மேலும் கண்ணியமிக்க இரவு (நாள்) என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணிய மிக்க (அந்த) இரவு (நாள்) ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். (அல்குர்ஆன் : 97:1-3)
பிறகு அடுத்தடுத்த நிகழ்வுகளைப் பொறுத்து சிறிது சிறிதாக அல்லாஹ்வின் தூதருக்கு அருளப் பட்டன. திருகுர்ஆன் பல்வேறான சிறப்புகளை யும் சவால்களையும் உள்ளடக்கி உள்ளது. தொடாத, பேசாத துறைகள் இல்லை. நாள்தோறும் கோடிக்கணக்கானோர் ஓதக்கூடிய நெறிநூல்.
உலகத்தின் சரித்திர போக்கையே மாற்றிய பெரும்பங்கு குர்ஆனுக்கு உண்டு. கல்வியறிவில் லாத, காட்டுமிராண்டித்தனமான, தான்தோன்றித் தனமாக, மூட பழக்க வழக்கங்களையும் சடங்கு சம்பிரதாயங்களையும் வாழ்வில் கடைபிடித்து ஒழுக்கமில்லாமல், அமைதியை இழந்து வாழ்ந்த அரபுலக மக்களை உயர்ந்த அந்தஸ்திலும், ஆட்சி பீடத்திலும் அமர்த்திய பெருமை திருகுர்ஆனுக்கு உண்டு. இப்படி எத்தனையோ சிறப்புகளை பட்டிய லிட்டுக் கொண்டேச் செல்லலாம். அதில் சில சம்பவங்கள்.
மிகுந்த புத்தி சாதுரியமும், பேச்சாற்றலும், கவி வளமும் மிக்கவரான துபைல் இப்ன் அம்ர் அத்துவைஸி(ரழி) அவர்கள் மக்கா வந்தபோது குறைஷித் தலைவர்களின் பேச்சால் நபி(ஸல்) அவர் களது பேச்சு எதையும் கேட்டுவிடக்கூடாது என்று தன் காதில் பஞ்சை வைத்தவராக இருந்தார். அந்த நிலை மாறி நபி(ஸல்) அவர்களின் ஓதுதலை செவியுற்று அதனால் ஈர்க்கப்பட்டு இஸ்லாத்தில் இணைந்தார் என்பதை வரலாறு மூலம் அறியலாம்.
நபி(ஸல்) அவர்களின் கதையை முடித்துவிட வேண்டும் என்ற ஆவேசத்தில் புறப்பட்ட உமர் (ரழி) அவர்கள், கப்பாப்(ரழி) அவர்கள் உமர்(ரழி) அவர்களின் சகோதரிக்கும், சகோதரியின் கணவருக்கும் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்த திருமறை வசனத்தால் தாக்கம் ஏற்பட்டு சூரா தாஹாவின் 1 முதல் 14 வரையுள்ள வசனங்களை ஓதி முடித்து விட்டு இஸ்லாத்தில் இணைந்த வரலாறு முக்கியத்துவம் வாய்ந்தது.
இணை வைப்பவர்களும் சிரம் பணிந்தல் :
ரமழான் மாதத்தின் ஓர் இரவில் நபி(ஸல்) அவர் கள் புனித பள்ளிக்குச் சென்றார்கள். அங்கு குறை´ களும் அவர்களது தலைவர்களும் கொண்ட பெருங் கூட்டம் ஒன்று குழுமியிருந்தது. திடீரென அவர்களுக்கு முன் நபி(ஸல்) அவர்கள் தோன்றி அத்தி யாயம் அந்நஜ்மை ஓதினார்கள். நிராகரிப்பவர்கள் இதற்கு முன் குர்ஆன் வசனங்களைக் கேட்ட தில்லை. அதற்கு காரணம் குர்ஆனை நீங்கள் கேட்காதீர்கள் அது ஓதப்படும் போது வீண் செயல்களில் ஈடுபடுங்கள் என்று அவர்களில் ஒருவர் மற்றவருக்கு கூறி வந்ததுதான். நிராகரிப்பவர்களின் இக்கூற்றை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
நீங்கள் இந்த குர்ஆனை செவியேற்காதீர்கள். (அது ஓதப்படும் போது) அதில் (குழப்பம் செய்து) கூச்சலிடுங்கள், நீங்கள் அதனால் மிகைத்து விடுவீர்கள் என்றும் காஃபிர்கள் (தங்களைச் சார்ந்தோரி டம்) கூறினர். (அல்குர்ஆன் : 41:26)
ஆக திருகுர்ஆனின் சத்திய ஈர்ப்பு பெருமை கொண்ட நிராகரிப்பவர்களின் உள்ளங்களில் உள்ள பிடிவாதத்தைக் கூட தவிடுபொடியாக்கியது என்றால் மிகையாகாது. இத்தகைய மேன்மை பொருந்திய திருமறையுடன் ஏனைய மாதங்களில் தொடர்பு இல்லாதவர்கள் கூட தொடர்பு வைக்கும் ஒரு மாதம் உண்டென்றால் அதுதான் ரமழான். இத்தகைய இந்த மாதத்தில் மட்டுமல்ல ஏனைய காலக்கட்டத்தில் கூட திருமறையுடன் நம் தொடர்பு எப்படி இருக்கவேண்டும். குர்ஆனில் நாம் எதை ஓதினாலும் ஓதுகின்ற ஒவ்வொரு எழுத் திற்கும் பத்து நன்மைகள் இருக்கிறது என்பதுடன் அந்த நன்மைகளை பெறுவதற்காக மட்டும் நம் ஓதல் இருந்துவிடாமல் குர்ஆனை நாம் அணுக வேண்டிய விதத்தில் அணுக வேண்டும்.
குர்ஆனுடன் நம் தொடர்பு :
இப்னு அப்பாஸ் கூறினார்கள் :
எவன் அல்லாஹ்வின் திருமறையை பின்பற்று கின்றானோ அவன் இம்மையிலும் வழி கெடமாட் டான். மறுமையிலும் நஷ்டமடைய மாட்டான். பின்னர், இப்னு அப்பாஸ்(ரழி) அவர்கள் எவன் எனது நேர்வழியை பின்பற்றுவானோ அவன் வழி தவறவும், நஷ்டமடையவும் மாட்டான். (20:123) எனும் திருமறை வசனத்தை ஓதினார்கள்.
(மனிதர்களே!) உங்கள் இறைவனிடமிருந்து, உங்களுக்கு இறக்கப்பட்டதைப் பின்பற்றுங்கள். அவனையன்றி (வேறெவரையும்) பாதுகாவலர் (களாக்கி கொண்டு அவர்)களை பின்பற்றாதீர்கள். நீங்கள் சொற்பமாகவே நல்லுணர்வு பெறுகிறீர்கள். (அல்குர்ஆன் : 7:3)
திருமறையை ஓதுவதுடன் நிறுத்திவிடாமல் செயல்படுத்துவதிலும், பின்பற்றுவதிலும் நாம் கவனம் செலுத்தவேண்டும்.
குர்ஆனிய போதனைகளை தன் வாழ்வில் கடைப்பிடித்தவர்களை அல்லாஹ் தன் அந்தஸ்தால் உயர்த்தியே உள்ளான். உத்தம சஹாபாக்கள் தன் வாழ்வில் அனைத்து நிலையிலும் திருமறை வசனத்தை தன் செயல்பாட்டில் கொண்டு வந்ததி னால் தான். இன்றளவும் ரழியல்லாஹு அன்ஹும் அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக என்ற பிரார்த்தனைக்கு சொந்தக்காரர்களாக மாறி இருக்கிறார்கள்.
நிச்சயமாக அல்லாஹ் இந்த குர்ஆனைக் கொண்டு எத்தனையோ கூட்டத்தாரின் அந்தஸ்தை உயர்த்துகின்றான். இந்தக் குர்ஆனைக் கொண்டு (அதனை உதாசீனப்படுத்தும்) எத்தனையோ எத்தனையோ கூட்டத்தாரைத் தாழ்த்துகின்றான் என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (ஆதாரம்:முஸ்லிம்)
இஸ்லாமிய சமுதாயத்தில் அனைவராலும் அறியப்பட்ட ஒரு பெயர் அபூஹுரைரா என்பதாகும். எந்த ஒரு குத்பாவையோ, பயானையோ எடுத் துக் கொண்டாலும் அதில் நபி(ஸல்) அவர்கள் கூறிய தாக அபூஹுரைரா(ரழி) அறிவிக்கிறார் என்ற சொற்றொடரை கேட்கலாம். அந்த அளவிற்கு அதிகமான ஹதீஃத்களை அறிவித்த மேதையாக அவர்கள் திகழ்கிறார் என்றால் அதற்கு காரணம் திருமறையின் ஒரு வசனம்தான்.
இதைக் குறித்து அபூஹுரைரா(ரழி) அவர்கள் கூறுகிறார்கள். இறை நெறிநூலில் ஒரு வசனம் மாத்திரம் இல்லாமல் இருந்திருக்குமாயின் நான் யாருக்கும் எதையும் அறிவித்திருக்கமாட்டேன் அது (2:159)வது வசனமாகும் என்று சுட்டிக்காட்டினார்கள்.
நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர்வழியையும் அதனை நாம் நெறிநூலில் மனிதர் களுக்காக விளக்கிய பின்னரும் யார் மறைக்கின் றார்களோ, நிச்சயமாக அவர்களை அல்லாஹ் சபிக் கிறான். மேலும் அவர்களைச் சபிப்ப(தற்கு உரிமை உடைய)வர்களும் சபிக்கிறார்கள். (அல்குர்ஆன்: 2:159)
கல்வி அறிவை மறைக்கின்றவரை அல்லாஹ் வும், வானவர்களும், மக்கள் யாவரும் சபிக்கிறார்கள் என்ற வசனம் அவர் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தியதன் விளைவாக அதிகமான ஹதீஃத் களை அறிவிக்க வைத்துள்ளது.
உமர்(ரழி) அவர்களின் நிலையை மாற்றிய திரு மறை வசனம் : நபி(ஸல்) அவர்கள் மரணித்துவிட் டார்கள் என்ற செய்தியை உமர்(ரழி) அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வாறு சொல்ப வர்களை குறித்து உமர்(ரழி) அவர்கள் சில நயவஞ்ச கர்கள் நபி(ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்று நினைக்கின்றனர். நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் மரணிக்கவில்லை என தன்னைக் கட்டுப் படுத்த முடியாமல் கூறினார்.
அவ்வாறு யார் சொன்னது சொல்பவர்களின் தலையை நான் எடுப்பேன் எனவும் குரலில் கடுமை வெளிப்பட்டது. இத்தகைய நிலைப்பாட்டிலிருந்த உமர்(ரழி) அவர்களை அந்த சந்தர்ப்பத்தில் அபூபக்கர்(ரழி) ஒரு வசனத்தை ஓதிய அடுத்த கனமே தன்னை மாற்றிக்கொண்ட வரலாற்றை நாம் அறியலாம்.
அபூபக்கர்(ரழி) அவர்கள் மக்களை நோக்கி எனதருமை மக்களே! எனது உரையை செவிமடுத் துக் கேளுங்கள் உங்களில் யார் முஹம்மதை வணங்கினீர்களோ அவர் ஏனைய மனிதர்களை போலவே இறந்து போகக் கூடியவராக இருக்கின் றார். ஆனால் உங்களில் யார் முஹம்மதினுடைய இறைவனை வணங்கினீர்களோ அந்த இறைவன் தான் என்றென்றும் உயிர்வாழக் கூடியவன் மற்றும் என்றென்றும் நிலைத்திருப்பவன் என்று கூறியதுடன் பின்வரும் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்.
முஹம்மது(ஸல்) (இறைவனின்) தூதரே அன்றி (வேறு) அல்லர். அவருக்கு முன்னரும் (அல்லாஹ் வின்) தூதர்கள் பலர் (காலம்) சென்றுவிட்டார்கள். அவர் இறந்துவிட்டால் அல்லது கொல்லப்பட்டால், நீங்கள் உங்கள் குதிகால்களின் மேல் (புறங்காட்டித்) திரும்பி விடுவீர்களா? அப்படி எவரேனும் தம் குதிகால்கள் மேல் (புறங்காட்டி) திரும்பி விடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது. அன்றியும், அல்லாஹ் நன்றி யுடையோருக்கு அதிசீக்கிரத்தில் நற்கூலியை வழங்குவான். (அல்குர்ஆன் : 3:144)
உமர்(ரழி) கூறுகிறார் :
இறைவன் மீது சத்தியமாக! அபூபக்கர்(ரழி) அவர்கள் ஓதிக்காட்டிய அந்த வசனத்தை செவி யேற்ற பின்பு எனது உணர்வுகள் என்னை விட்டு அகன்றுவிட்டது எனது பாதங்கள் நிலை கொள்ளவில்லை. இறைத்தூதர்(ரஸல்) அவர்கள் மரணமடைந்துவிட்டார்களே என்பதை அறிந்தவுடன் நினைவற்ற நிலையில் நான் கீழே விழுந்து விட்டேன் என்று கூறினார்கள்.
ஆவேசத்தால், கோபத்தால் தன்னை கட்டுப் படுத்த முடியாத நிலையில் இருந்த உமர்(ரழி) அவர்களின் நிலைçமை கட்டுக்குள் கொண்டு வந்தது ஒரு திருமறை வசனம்தான்.
அபூபக்கர்(ரழி) அவர்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படுத்திய வசனம் :
தன் அருமை மகளான ஆயிஷா(ரழி) அவர்கள் மீது அவதூறு பரப்பப்பட்டபோது அதில் பங்கெடுத் தவரான மிஸ்தஹ் என்பவருக்கு இதற்கு முன்னால் தான் செய்து வந்த உதவியை அவருக்கு தரப்போவதில்லை என அபூபக்கர் (ரழி) மிஸ்தஹுக்கு எந்தப் பயன் தரும் உதவியும் இனி ஒருபோதும் செய்யமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். அப்போது அல்லாஹ்.
இன்னும், உங்களில் (இறைவனின்) கொடை அருளப் பெற்றவர்களும், தக்க வசதி உடையவர் களும், உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், (தம்மிடங்களை விட்டு) அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கும் (எதுவும்) கொடுக்க முடியாது என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்கள் தவறு செய்திருப்பின்) அதை மன்னித்து (அதைப்) பொருட்படுத்தாமல் இருக்கவும், அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்ப மாட்டீர்களா? மேலும் அல்லாஹ் (பிழை பொறுப்பவன்) மிக மன்னிப்பவன், அன்பு மிக்கவன். (அல்குர்ஆன் : 24:22)
இந்த வசனத்தில் (உலுல் : பழ்ல்-செல்வம் படைத்தோர்) என்று அபூபக்கர்(ரழி) அவர் களையே அல்லாஹ் குறிப்பிட்டான். மஸாகீன் (ஏழைகள்) என்று மிஸ்தஹ் அவர்களைக் குறிப்பிட் டான். இதையடுத்து அபூபக்கர்(ரழி) அவர்கள் ஆம்! அல்லாஹ்வின் மீது ஆணையாக எங்கள் இறைவா எங்களை நீ மன்னிப்பதையே நாங்கள் விரும்பு கிறோம் என்று கூறி தாம் முன்பு செய்து வந்தது போலவே (மிஸ்தஹுக்குப் பொருள் உதவி) செய்து வரத் தொடங்கினார்கள். (ஆதாரம்: புகாரி: 4757)
உத்தம சஹாபாக்களின் வாழ்வின் அனைத்து நிலைப்பாடுகளிலும் திருமறை வசனங்கள் தாக்கத்தை ஏற்படுத்தியது போன்று நம் வாழ்விலும் சிறந்த மாற்றம் ஏற்பட வேண்டுமெனில் ஓதுவது டன் நிறுத்திவிடாமல் வாழ்வில் ஏற்று செயல்படு வதுடன் திருமறை வசனங்களை பேணிப் பாது காக்க வேண்டும். இல்லையயனில் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும்.
ஜியாது இப்னு லுபைது(ரழி) சொல்கிறார்கள். நபி(ஸல்) அவர்கள் ஏதோ ஒன்றைச் சொல்லிவிட்டு அதுதான் கல்வி அகற்றப்படும்போது நடக்கும் என்றார்கள். நான் அல்லாஹ்வின் தூதரே கல்வி எப்படி அகற்றப்படும்? நாங்கள்தான் குர்ஆனை ஓதிக் கொண்டிருக்கிறோமே எங்கள் குழந்தைகளுக்கும் அதைக் கற்றுக் கொடுக்கிறோமே. இப்படி ஒவ் வொரு தலைமுறையும் தங்கள் குழந்தைகளுக்கு மறுமை நாள் வரை கற்றுக் கொடுப்பார்களே… பிறகு எப்படி கல்வி அகற்றப்படும்? என்று கேட் டேன். அவர்கள் சொன்னார்கள் ஜியாதே உன் தாய் உன்னை இழக்கட்டும். மதீனாவில் உள்ள மனிதர் களில் மார்க்க விளக்கம் கொண்ட ஒருவராக உன்னை நாள் கருதிக் கொண்டிருந்தேன். யூதர் களும், கிறித்தவர்களும் தவ்றாத்தையும் இன்ஜீலை யும் ஓதி வருவதை நீ பார்க்கவில்லையா? ஆனாலும் அவர்கள் அதிலுள்ள எதையும் தங்களுக்குள் செயல் படுத்துவதில்லை. நூல்கள் : சுனன் இன்னு மாஜா 4048
குர்ஆன்படி செயல்படாத காலகட்டத்தில்தான் உலக அழிவு நாள் ஏற்பட இருக்கிறது என நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கை நாம் செயல்பாடு இல்லாத காலகட்டத்தை நெருங்கிவிட்டோம் என்பதை உணர்த்துகிறது. பிறருக்கு காட்டுவதற்காக அல்லது வயிற்றுப் பிழைப்பிற்காக அல்லது குற்றமிழைப் பதற்காக குர்ஆனை ஓதுவது பாவமாகும்.
அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார் கள். உங்களிடைய ஒரு கூட்டத்தினர் கிளம்புவார் கள்; அவர்களது தொழுகையுடன் உங்கள் தொழு கையையும், அவர்களது நோன்புடன் உங்களுடைய நோன்பையும் அவர்களின் நற்செயல்களுடன் உங்களின் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற் செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள்; (அந்த அளவிற்கு அவர்களது வழிபாடு கலை கட்டி யிருக்கும்) மேலும் அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள் ஆனால் அது அவர்களின் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலை துளைக்கின்ற) அம்பு (உடலின் மறுபுறம்) வெளிப்பட்டு சென்று விடுவதைப் போல மார்க்கத்திலிருந்து அவர்கள் வெளி யேறிவிடுவார்கள்.
அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெளி வந்ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா? என்று அம்பின் முனையைப் பார்ப்பார் அதில் (அடை யாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு, அம்பின (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் இறகைப் பார்ப்பார். அதிலும் (அடையா ளம்) ஏதுவும் காணமாட்டார். அம்பின் (முனை) நானப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா?) என்று சந்தேகம் கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தச் சுவடும் இராது) அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ(ரழி) நூல் : புகாரீ : 5058
இன்று நம்மில் பெரும்பாலானோரின் நிலை பாடு இப்படித்தான் உள்ளது. பிறருக்கு காட்டுவதற் காக ஓதுவது செயல்பாடு இல்லாத நிலையைத்தான் காண நேரிடுகிறது. உலக அழிவு நாள் நெருக்கத்தில் அறிஞர்கள் (உலமா) இறந்து போய் உங்கள் காரீகள் (குர்ஆன் ஓதுவதில் மட்டும் திறமையானவர்) அதிக மானவர்கள் என நபி(ஸல்) அவர்களின் ஹதீஃதின் மூலம் இப்னு மஸ்வூது(ரழி) அவர்களின் கூற்றாகத் தான் நம் நிலைபாடு உள்ளது.
குர்ஆனை ஓதாத, செயல்படாத மூஃமினை விட குர்ஆனை ஓதுகின்ற, செயல்படுகின்ற மூஃமி னுடைய அந்தஸ்து தான் மகத்தானது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும். மேலும் அல்லாஹ் கூறுகிறான். எவன் என்னு டைய உபதேசத்தைப் புறக்கணிக்கிறானோ, நிச்சயமாக அவனுக்கு நெருக்கடியான வாழ்க் கையே இருக்கும். மேலும், நாம் அவனை கியாம நாளில் குருடனாகவே எழுப்புவோம் என்று கூறினான்.
(அப்போது அவன்) என் இறைவனே! நான் பார்வையுடையவனாக இருந்தேனே! என்னை ஏன் குருடனாக எழுப்பினாய்? என்று கூறுவான். (அதற்கு இறைவன்) இவ்விதம்தான் இருக்கும். நம் முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன, அவற்றை நீ மறந்துவிட்டாய், அவ்வாறே இன்றைய தினம் நீயும் மறக்கப்பட்டு விட்டாய் என்று கூறுவான். (அல்குர்ஆன் : 20:124-126)
ஏடுகளைச் சுமக்கும் கழுதைகளைப் போன்று நமது நிலைபாடு இல்லாமல் இருக்க வேண்டுமா னால் இம்மையிலும், மறுமையிலும் ஈடேற்றம் பெறவும் இறைவன் நம்மை மறந்து நெருக்கடியான வாழ்க்கைக்கு ஆளாகாமல் இருக்க வேண்டுமானால் குர்ஆனிய வசனங்களை முறையாக கையாள வேண்டும்; அதற்கு வல்ல ரஹ்மான் நம் அனைவருக் கும் நல்லருள் புரிவானாக!
நன்றி : அல்ஜன்னத்
குறிப்பு : ஜாக் நிறுவனர், தற்போதைய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீண்டும் மீண்டும் படித்து உள்வாங்கி உமர்(ரழி), அபூபக்கர்(ரழி) போல் 2:186, 7:3, 18:102-106, 33:36, 66-68, 59:7 மற்றும் பிரிவுகள் பற்றிய அனைத்து வசனங்கள் (3:103,105, 6:153,159, 12:108, 30:32, 42:13,14) கூறுவது போல் அவர்கள் நடக்கிறார்களா? அல்லது 61:23 வசனம் கூறுவது போல் அல்லாஹ் கடுமையாக வெறுக்கும் செயலான தங் களை மறந்து ஊருக்கு உபதேசம் செய்கிறார் களா என்பதை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறோம். சமுதாய ஒற்றுமையைக் கட்டிக்காக்க, அதற்காக அயராது பாடுபட முன்வருமாறு அன்புடன் வேண்டுகிறோம். – ஆசிரியர்.