– மண்டபம் M. அப்துல்காதிர்
கடந்த 31 ஆண்டுகள் பல இன்னல்கள் இடையூறு கள், பொருளாதார நெருக்கடிகள் அனைத்தையும் கடந்து சத்தியத்தை எடுத்துரைத்து மார்க்கப் பணி யில் வெளி வந்ததுதான் அந்நஜாத் எனும் இலட்சிய மாத இதழ். இஸ்லாத்தில் அணுவின் முனை அளவும் புரோகிதத்திற்கு அனுமதி இல்லை. புரோகிதம் ஒழிய வேண்டும். மனித நேயம் வளர வேண்டும் என்ற உறுதியான கோட்பாடுடன் துவங்கப்பட்ட இந்த இதழ்….
திசை மாறாத கொள்கை குன்றாகவே கடைசி மூச்சு வரை இருந்து மறைந்து விட்டார் அபூ அப்தில்லாஹ்.
ஒவ்வொருவரது உள்ளங்களிலும், அந்நஜாத் குடி புகுந்தது எனலாம். அவரது எழுத்துக்கள், பேச்சுக்கள், எவருக்கும் சத்தியத்தை போதிப்பதில் வளைந்து கொடுக்காத செயல்பாடுகள் தான் அபூ அப்தில்லாஹ்வின் சிறப்பு!
அவர் மறைந்தாலும் அவரது எண்ணங்களை, எழுத்துக்களை சத்தியபாதையில் சுமந்து செல்ல இதோ நாங்கள் இருக் கிறோம் என்று வாசகர்களும், எழுத்தாளர்களும், ஆசிரியர் பணி குழுவும், அவரது மைந்தர்கள் மூவரும், பணியை தொடங்கி விட்டனர்.
ஆம்! அதுதான் அவருக்கு நாம் செய்யும் கடமையாகும்.
அவரது உள்ளத்தில் நிறைந்துள்ள எண்ணங்கள் சத்தியத்தை போதிப்பதே! அது அனைத்தும் நேர் வழி காட்டக் கூடியதே! அது நிறைவேற வேண்டும் என்பதுவே அவரது உறுதியான ஆவல்; அதனை தொடர்ந்திடவே இன்ஷா அல்லாஹ் உறுதி எடுப்போம்.
வாசகர்களும், எழுத்தாளர்களும், தங்கள் ஆக்கங்களையும், ஊக்கங்களையும், தொடர்ந்து அளித்து, மேலும் பலரது கரங்களில் அந்நஜாத் தவழ்ந்து, உள்ளங்களில் மலர்ந்து நிறைந்திட உறுதி எடுப்போம்.
சத்தியத்தை மலர வைப்போம்! இன்ஷா அல்லாஹ். வல்ல இறைவனிடம் ஆசிரியர் அபூ அப்தில்லாஹ்வின் மஃபிரத்துக்கு துஆச் செய்வோம்.