பஷீர் அஹமது
1. நாம் ஒவ்வொருவரும் மார்க்க கல்வியை கற்று ஆலிமாக மாற வேண்டும்.
2. சம்பளம், கூலி வாங்காமல் மார்க்க பணி செய்ய வேண்டும்.
3. நமக்கு தெரிந்த மொழியிலாவது அன்றாடம் அல்குர்ஆனை வாசிக்க வேண்டும்.
4. எந்த இயக்கத்திலும், சங்கத்திலும் சேராமல், எந்த மஹல்லாவில் வசிக்கி றோமோ அந்த மஹல்லாவையே தமது ஜமாஅத்தாக ஏற்க வேண்டும்.
5. கலிமா சொன்ன எல்லா முஸ்லிம்களையும் சக முஸ்லிம் சகோதர, சகோதரிகளாக கருத வேண்டும். மார்க்கத்தை பிழையாக விளங்கி, பிழையாக பின்பற்றும் எந்த முஸ்லிம்களையும் காஃபிர் என்று சொல்லவே கூடாது. இவர்களிடம் அல்குர்ஆன் 62:2 பிரகாரம் உபதேசத்தை மட்டுமே செய்ய வேண்டும்.
6. அல்குர்ஆனையும், நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலையும் (சுன்னத்) மட்டுமே மார்க்கமாக ஏற்று வாழவேண்டும். “”ஆலிம் உலமாக்கள்” என்ற பெயரில் யாராவது சொந்த வியாக்கியானம் (Own Interpretation) கொடுத்தால் அதனை ஏற்க கூடாது.
7. அல்குர்ஆனுக்கு அல்குர்ஆனே விளக்கம் தரும் என்ற நம்பிக்கையுடன் தினம் தினம் குர்ஆன் ஓதவேண்டும். (அதாவது படிக்க வேண்டும்) அந்த அல்குர்ஆனுக்கு நபி (ஸல்) வாழ்வியல் முழு விளக்கவுரையாக உள்ளதை உணர்ந்து ஏற்க வேண்டும்.
8. மேலே உள்ள பாயின்ட் 6,7 பிரகாரம் மார்க்கத்தை தனி மனிதன் அறிய முயலும் போது அதற்கு தடையாக உள்ள விசயங்கள் ஒவ்வொன்றாக கலைய வேண்டும். (Remove the Obstacles from the Islamic learning path என்று சொல்வார்கள்) தனி மனிதன் அல்குர்ஆனை தினம் தினம் நெருங்கிக் கொண்டே இருக்கவேண்டும். அதற்கு தடையாக எந்த “மார்க்க அறிஞர்’ இருந்தாலும் அவரை தயவு தாட்சன்ய மில்லாமல் அடையாளம் காட்ட வேண்டும். அந்த “”மார்க்க அறிஞர்” எனும் தனி மனிதரை அல்ல! அவர்களின் மார்க்க புரிதலை!
9. மேலே 8 பாயின்ட்களை கடந்த 30 வருடத்திற்கு மேலாக அந்நஜாத் பத்திரி கையில் அபூ அப்தில்லாஹ் அவர்கள் தொடர்ந்து எழுதியும், பேசியும், போராடியும் வந்தார். அவருடைய தமிழ் எழுத்துக்களில் தேன் தடவி கொடுத்தது இல்லை. கத்தி முனை போல எழுதி வந்தார் என்பது கசப்பான உண்மையா கும். அவர் சொன்ன அணுகுமுறை பலரா லும் ஜீரனிக்க முடியாது. ஆனால் அவரின் கருத்துக்களை யாரும் தப்பு என்று சொன்னதில்லை. இன்ஷா அல்லாஹ். இனி வரும் அந்நஜாத் இதழ்களில் அபூ அப்தில்லாஹ் அவர்களின் பழைய கட்டுரைகளை எளிய தமிழில் எல்லா முஸ்லிம்களையும் சென்றடைய முயற்சி செய்வோம்.
நான் சொல்லுவதை எல்லாம் கண்மூடி பின்பற்ற வேண்டாம்; சொல்லுவது குர்ஆனிலும், சுன்னாவிலும் இருக்கிறதா என பார்த்து பின்பற்றவும் என்று அவர் கூறியதற்கிணங்க –
அவரது மரணம் நமக்கு சொல்லும் செய்தி இதை விட வேறு என்னவாக இருக்க முடியும்?