மர்யம்பீ, குண்டூர், செல்: 7762004447
1. சொர்க்கங்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள்:
1. ஜன்னத்துல் மஃவா அல்குர்ஆன்= 53:15
2. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் = 18: 107, 23: 11
(சுவனச்சோலை).
சொர்க்கத்தின் வாசல்கள் :
1. ஸலா, 2. ஜிஹாத், 3. ஸதகா, 4.ரய்யான் ஆதாரம் : ஸஹீஹுல், புகாரி :1897
3. சொர்க்கவாதிகளுக்கு வழங்கப்படும் பானங்களின் பெயர்கள்:
1. கற்பூர பானம் = 76 : 5
2. இஞ்ஜி பானம் = 76:17
3. ஸல்ஸபீல் = 76:18
4. மயக்கமும், கலக்கமும் தராத மதுபானம் = 56:18,19
4. சொர்க்கவாசிகளுக்கு அணிவிக்கப்படும் பட்டாடைகளின் பெயர்கள் :
1. ஸிந்தூஸ் = 18:31, 44:53, 76:21
2. இஸ்தப்ரக் = 18:31, 44:53,76:21.
5. மனிதன் சோதனைக் குள்ளாக்கப்படா மல் எளிதாக சொர்க்கம் செல்ல முடியாது என அல்லாஹ் எச்சரிக்கையின் வசனம் :
= 2:214
6. ஸித்ரதுல் முன்தஹா என்ற இடத்திற்கு அருகே ஜன்னத்துல் மஃவா என்ற சொர்க்கம் இருக்கிறது. = 53:13,14,15.
7. ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற சொர்க் கத்திற்கு செல்ல என்ன செய்ய வேண்டும்.
1. உள்ளச்சத்துடன் தொழ வேண்டும்.
2.வீணானவற்றை புறக்கணிக்க வேண்டும்.
3. ஜகாத்தை முறைப்படி நிறைவேற்ற வேண்டும்.
4. தங்களது வெட்கஸ்தலங்களை பாதுகாக்க வேண்டும்.
5. ஹலாலான தங்களது மனைவியிடம் அல்லது தங்களது வலக்கரம் சொந்தமாக்கி கொண்டவர்களிடம் மட்டுமே உறவு கொள்ள வேண்டும். இவைகளுக்குப் பிறகு, எவர் நாடுகிறாரோ அவர் வரம்பு மீறியவர் ஆவார்.
6. அமானிதங்களையும், வாக்குறுதிகளை யும் பேண வேண்டும்.
7. தொழுகைகளை பேணித் தொழ வேண்டும். = 23:2 – 11.
8. உங்கள் மனைவியுடன் சொர்க்கம் செல்ல என்ன செய்ய வேண்டும் குர் ஆன் வசனங்களை விசுவாசித்து அல்லாஹ்வின் கட்டளைக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். = 43:69,70.
1. நரகங்களின் பெயர்கள் மற்றும் விபரங்கள்:
1. ஹூதமா=104:4,5, 2. ஸகர்=54:48, 74:26, 27,42, 3. ஜஹீம்=69:31, 4. ஹாவியா=104:9
2. நரக வாசிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் & தங்கும் இடம்
1. கொதிக்கும் பானம் – 6:70, 10:4, 37:67, 38:57, 78:24.
2. சீழ்(ஸலம்)= 14:16,17- 38: 57, 69: 36, 78:25,
3. ஸக்கும் மரம் = 37:62, 44:43 &44 56:52,
4. முள் மரம் = 88:6
3. ஸக்கும் மரத்தின் பாளை ஷைத்தானின் தலைகள் போல் இருக்கும். 37:65
3. நரகவாசிகளை வானவர்கள் இரும்பு சம்மட்டியால் அடிப்பார்கள். 22:21
4. நரகவாசிகளின் ஆடைகள், நெருப்பினால் ஆன ஆடை 22:21 நெருப்பினால் ஆன விரிப்பு மற்றும் போர்வை : 7:41.
5. நரகத்திற்கு எத்தனை வாசல்கள் : ஏழு 15:44.
6. நரகவாசிகளை வானவர்கள் 70 முழம் கொண்ட சங்கிலியால் கட்டுவார்கள். 69:32.
7. நரகத்தின் எரிபொருட்கள் : மனிதர்களும், கற்களும். 2:24.
8. நரகத்தின் பொறுப்பு தாரியான வானவர் பெயர் : மாலிக் 43:77.
9. பெருமை கொள்வோர் நரகம் செல்வார்கள் என அல்லாஹ் எச்சிரிக்கும் வசனங்கள்: 16:29, 39:72, 40:75,76-46:20.
10. ஸகர் என்ற நரகத்திற்கு 19 வானவர்கள் காவல் புரிவார்கள்: 74:27,30.
11. மனிதர்களை கொண்டும், ஜின்களை கொண்டும் நரகத்தை நிரப்புவேன் என அல்லாஹ் அறிவிக்கும் வசனம் : 32:13.
12. ஸகர் என்ற நரகத்தில் நுழைபவர்கள்: 1. தொழாதவர்கள் 2. ஏழைகளுக்கு உணவளிக்காதவர்கள், 3. ஈமான் கொள்ளாதவர்களிடம் வீனானவற்றில் ஈடுபடுபவர், 4.நியாயத் தீர்ப்புகளை நம்பாதவர்கள். 74:42,44
13. ஹாவியா நரகத்தின் தன்மை: கடுமையான சூடேற்றப்பட்ட நெருப்பு 101:9,10,11
14. ஹூதமா நரகத்தின் தன்மை : மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு உடலில் பட்டவுடன் நேராகச் சென்று இதயத்தை தாக்கும். 104:4,5,6,7
சொர்க்கம் நரகம் பற்றிய விபரங்களை அறிந்து வாசகர்கள் நன்மையின் பக்கம் தங்களை தயார் செய்து கொள்ளுமாறு வேண்டுகிறேம்.