அவமானங்கள், அச்சங்கள், துயரங்கள்! ஆனாலும் ஆறுதல்கள்!
“”ஜார்க்கண்டிலுள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” ஊட்டச் சத்து குறைபாட்டால் சமீபத்தில் 52 குழந்தைகள் இறந்த செய்தி, நமக்கு மிகப் பெரிய துக்கத்தைத் தருகிறது.
உலக அளவில், “”பசி குறியீடு” “”(குளோபல் ஹங்கர் இண்டெக்ஸ்)” 2016ன் புள்ளி விவரப்படி இந்திய மக்கள் தொகையில் 15 சதவீதத்தினர் உணவு அல்லது ஊட்டச்சத்துப் பற்றாக் குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஊட்டச் சத்து குறைபாடு ஒரு தேசிய அவமானம் என்கிறார் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.
ஊட்டச்சத்துள்ள உணவைத் தேடி நாம் அலைய வேண்டியதில்லை. அந்தந்தப் பருவங்களில், நம் சுற்றப்புறத்திலேயே எளிதாகக் கிடைக்கும் உணவு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், கீரைகளிலி ருந்து பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நடப்ப தென்ன? கெடுதி விளைவிக்கும் அந்நிய நாட்டு உணவு பொருட்கள் நம் நாட்டில் இறக்குமதி செய் யப்பட்டு, விவசாயிகளின் நியாயமான தேவைகள் புறக்கணிக்கப் பட்டதால் ஊட்டச்சத்துள்ள தாவர உணவுகளின் உற்பத்தி குறைந்து வருகிறது. மொத் தத்தில் நம் நாட்டின் தாவரங்கள் அழிந்து வருவதற் கான சூழல் ஏற்பட்டு வருகிறது. ஊட்டச்சத்து குறைபாடு ஒரு தேசிய அவமானம் என்றால் இது அதனினும் பெருத்த அவமானம் அல்லவா?
அடுத்த கொடுமை : “”புளு வேல் சேலஞ்” (நீலத் திமிங்கல சவால்) என்ற பெயரில் ஆன்லைனில் இரவு நேரங்களில் விளையாடப்படும் இந்த விளையாட்டு, மனத்தத்துவம் (PSYCHOLOGY) படித்த ரஷ்ய இளைஞன் ஒருவனால் அறிமுகப் படுத்தப்பட்ட விளையாட்டு. 50 படிநிலைகளைக் கொண்ட இந்த விளையாட்டில், விளையாடும் இளைஞருக்கு சவால் என்ற பெயரில் நடு நிசியில் பேய் படம் பார். ஆளில்லாத இடத்தில் தன்னந் தனியே நடந்து செல், திமிங்கலத்தின் உருவத்தை கையில் கீறி வரைந்து கொள் என படிபடியாகக் கட்டளைகள் வந்து கொண்டே இருக்கும். மன நிலை பாதிக்கும் நிலைக்கு கொண்டு வந்து, இறுதி யாக தற்கொலை செய்து கொள்ள கட்டளை வரும். நூற்றுக்கணக்கான இளைஞர்கள் ரஷ்யாவிலும், சீனாவிலும் தற்கொலை செய்து கொண்ட நிலை யில், அங்கே தடை செய்யப்பட்ட இந்த விளை யாட்டு, இந்தியாவில் புகுந்து, கேரளா, புதுச்சேரி (அஸ்ஸாம் மாணவன்), மதுரை, திருச்சி என சில ஊர்களில் சில மாணவர்களை தற்கொலை செய்து கொள்ளச் செய்தது அடுத்து யார் என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்தி இருக்கிறது இந்த விளையாட்டு.
இந்த உயிர் பறிக்கும் ஆபத்தான விளையாட்டு குறித்து பொதுமக்களுக்கு விளக்கங்கள் கொடுத்துக் கொண்டும், பிறருக்கு இந்த விளையாட்டை பகிர்ந் தால், குறுஞ் செய்திகளை அனுப்பினால், அவை பிறரை தற்கொலைக்கு தூண்டப்படுவதால் தண்ட னைக்குரிய குற்றம் என எச்சரித்துக் கொண்டும், பெற்றோர்களுக்கு ஆக்கப்பூர்வமான அறிவுரைகள் வழங்கியும், விளையாடுபவர்களைப் பற்றி காவல் நிலையங்களில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தியும், பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் கண்டு உள வியல் ரீதியான சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ மனைகளுக்கு ஆவோசனைகள் வழங்கியும் வரும் காவல்துறை பொறுப்பாளர்களை பாராட்டாமல் இருக்க முடியாது.
குறிப்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறை துணை ஆணையர் செந்தில் குமார், டிஜிபி ராஜேந்திரன், சென்னை மாநகர காவல் துறை ஆணையர் விஸ்வநாதன் ஆகியோரின் நடவடிக்கை கள் ஆறுதல் தருகிறது.
பைக் ரேஸ் போன்ற ஆன்லைன் விளையாட் டுக்களை டி.வியிலோ ஸ்மார்ட் போன்களிலோ கவனியுங்கள், பைக் ரேசில் பைக்கின் வடிவம், பின் சீட்டின் உயரமான அமைப்பு, ஓட்டுபவர் சற்று முன்னே குனிந்து கொண்டு, தமது இரு கால்களை சற்று தூக்கலாக பின்னால் வைத்துக் கொள்ளும்படி யான தோற்றம் தரும் அமைப்பு, முதுகுக்குப் பின் னால் ஸ்டைலாக மாட்டியிருக்கும் பேக் (யபுறூ) இவையயல்லாம் ஒன்று சேர்ந்து, பைக்கை அதி வேகமாக ஓட்டவைக்கும் மனநிலையை இளைஞர்களிடம் தூண்டிவிட்டு, அவர்களை விபத்துக்குள்ளாக்க வேண்டும் என்ற திட்டத் தில் இவைகளை உருவாக்கி இருப்போர்களோ என சந்தேகிக்க வைக்கிறது. ஏனென்றால், இதை அறிமுகப்படுத்திய அந்நிய நாட்டினர் இந்த விளையாட்டுக்களை அவர்களது நாட்டில் வெளியிடுவதில்லை.
மேற்சொன்ன அமைப்பில் பைக் ஓட்டும் இளைஞர்கள், ஜன நெருக்கடியான பகுதிகளில் கூட வேகமாக ஓட்டிச் செல்வதை சர்வசாதார ணமாக பார்க்க முடிகிறது. அவர்கள் ஹைவே ரோடுகளில் இன்னும், இன்னும் என அதிவேக மாக செல்வதைப் பார்த்தால், மயிர் கூச்செரியும். சென்ற வாரம் மைலாப்பூரில் நடைபெற்ற பைக்ரேசில் 2 பேர் மரணித்ததைத் தொடர்ந்து, பைக் ரேசில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தெரி வித்துள்ளது மகிழ்வைத் தருகிறது.
இதுபோலவே, குழந்தைகளை பழிவாங்க சைகாலஜிகளாக, சில விளையாட்டுக்களை இடம் பெறச் செய்து, பிஞ்சு உள்ளங்களில் விபரீத எண்ணங்கள் உருவாகும்படி செய்கின் றனர். எதிர்கால சந்ததியரை அழிப்பதற்கான சதியோ இது என சந்தேகம் கொள்ளச் செய் கிறது இந்தச் செயல்.
அடுத்து : காஷ்மீரில் அனந்தநாக் மாவட்டத் தில் தீவிரவாத தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்த அப்துல் ரUத் என்ற உதவி சப் இன்ஸ்பெக்டர் உடலுக்கு போலீஸார் மரியாதை செலுத்தியபோது, அப்துல் ரUத்தின் மகள் ஜோரா, தனது தந்தையை இழந்த சோகத் தில் அழுதது, பார்ப்பவர்கள் உள்ளத்தை உருக வைத்தது. இது சமூக வலைதளங்களில் வெளி யாகி பலரது அனுதாபத்தை பெற்றுள்ளது.
கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பதிவில், “”இந்தியாவின் மகள் ஜோரா! நான் உன்னை தாலாட்டுப் பாடி உறங்க வைக்க முடியாது. ஆனால் உன் கனவு களை நீ வாழ நிச்சயம் உதவுவேன். வாழ்நாள் முழுதும் உன் கல்விக்காக நான் உதவி அளித்து ஆதரவளிப்பேன்; உன் கண்களிலிருந்து கண் ணீரை பூமியில் சிந்த விடாதே, பூமித்தாய் கூட அதன் வலியின் சுமையைத் தாங்க மாட்டாள். உயிர்த்தியாகம் செய்த உன் தந்தை அப்துல் ரUத்துக்கு என் வீர வணக்கங்கள்” என்று கூறி தமது எண்ணங்களை பதிவிட்டுள்ளார்.
மத பேதம் பாராமல் அச்சிறுமியின் வலியை தன் இதயத்தில் சுமந்து கொண்டு ஒரு தந்தை யாக உதவ முன்வந்த, நமது சகோதரர் கவுதம் கம்பீரின் செயல் நமக்கு ஆறுதல் அளிக்கிற தல்லவா?
அடுத்த சோகம் : மியான்மரில் புத்த மதத்தினருக்கும், ரோஹிங்கியா முஸ்லிம்களுக் கும் இடையே கலவரம், ரோஹிங்கியா முஸ் லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு ராக்கைன் மாகான பகுதிகளில் பல்வேறு கிரா மங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. உலகிலேயே அதிகம் வதைக்கப்ப்ட்டவர்கள் சன்னி பிரி வைச் சேர்ந்த ரோஹிங்கியா முஸ்லிம்கள் தான்.
“”ரோஹிங்கியாக்கள் மியான்மர் சமூகத்தின் ஆதிகுடிமக்கள் அல்ல பிற்காலத்தில் குடியேறிய வர்கள்” என்று கூறி அவர்களை வலுக்கட்டாய மாக வெளியேற்ற அவர்கள் மீது தாக்குதலை நடத்துகிறது மியான்மர் ராணுவ அரசு. ராணு வத்தினரால் அடிமைகளாக நடத்தப்படுகின்ற னர். கலாச்சார அந்தஸ்து மறுக்கப்பட்டன. குடி மக்களாவதற்கான உரிமைகளை இழந்தனர். குடியுரிமைக்காகக் கோரிக்கை வைக்கும் உரிமை கூடத் தரப்படவில்லை. ரோஹிங்கி யாக்களின் வாழ்க்கை மிகவும் பரிதாபகரமாகி விட்டது. அவர்கள் மியான்மருக்குத் திரும்பி னால் உயிர் பிழைத்திருப்பதே நிச்சயம் இல்லை. அப்படியே உயிரோடு இருக்க முடிந் தாலும் வதைபடாமல் வாழ முடியாது.
இது இன அழிப்புக்கான பாடப் புத்தகத்தி லுள்ள எடுத்துக்காட்டு போல் உள்ளது என்று ஜ.நா. மனித உரிமை ஆணையம் கூறுகிறது. இவர்கள் படும் வேதனையைக் கண்டும் காணாமல் மெளனம் சாதிக்கிறார் அமைதிக் காக நோபல் பரிசு பெற்ற மியான்மரின் ஆங்சான் சூச்சி.
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியான்மரில் நடக்கும் வன்முறைகள் குறித்து ஐ.நா.சபை, உலக தலைவர்கள் பலரும் ஆங் சான் சூச்சியி டம் கேள்வி எழுப்பி வந்தனர். இதற்கான பதிலை ஐ.நா.பொதுச் சபை கூட்டத்தில் ஆங் சான் சூச்சி தெரிவிப்பார் என்று எதிர்பார்க்கப் பட்ட நிலையில், அவரோ ஐ.நா. பொது சபை கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பி டத்தக்கது. ரோஹிங்கியாக்களுக்காக ஆதர வாக போப்பாண்டவர் பிரான்சிஸ் விடுத்த வேண்டுகோள் எடுபடவில்லை.
கொடூரத் தாக்குதல்களால் நாட்டை விட்டு வெளியேறி வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள் ளனர். இந்தியாவுக்கும் வந்துள்ளனர். இது போன்ற சந்தர்ப்பங்களில் நம் நாட்டில் ஏற்கனவே நடந்த சம்பவங்களில் இந்தியஅரசு செய்தது என்ன? வீடு வாசல் இல்லாத நிலையில் நம் நாட்டினர் பலர் இருக்கையில், பர்மாவிலி ருந்துவந்த அகதிகளை அனுமதித்து அவர் களுக்கு வீடு வாசல் கொடுத்தது முந்தைய அரசு. வங்கிக் கடன் கொடுத்து அவர்கள் வாழ வழி செய்தது. இலங்கையிலிருந்து வந்த அகதி களுக்கும் அடைக்கலம் தந்தது. வந்தவர்களுக் கெல்லாம் வாழ வழி செய்தது முந்தைய அரசு.
இந்தியா என்றால் ஜனநாயக நாடு, மதசார் பற்ற நாடு, அண்டை நாடுகளிலிருந்து வரும் அகதிகளுக்கு அடைக்கலம் தந்து வாழவைக்கும் நாடு, இன்னும் இதுபோன்ற பற்பல நற்செயல் களில் பிற நாட்டினரை விட இந்தியர்கள் முன் மாதிரிக்கு உரியவர்கள் என்ற உலக அரங்கின் புகழாரத்தால் நமக்கு நாமே பெருமை கொண் டிருக்கிறோம். ஆம்! முந்தைய ஆட்சி காலத்தில் ஜவஹர்லால் நேரு திபெத்துக்கு ஆதரவு தெரி வித்தார். தலாய் லாமா இங்கே வந்து தங்குவதற் குத் துணிச்சலாக அனுமதித்தார். அமெரிக்கா வின் மிரட்டலுக்கு பயப்படாமல் கிழக்கு பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் வந்த அகதிகளுக்குப் புகழிடம் அளித்தார் இந்திரா காந்தி. அவர்கள் எல்லைகளைத் திறந்து வைத் தார்கள். பாதிக்கப்பட்ட மக்களை அரவணைத் தார்கள். ஆனால், இன்று நடப்பதென்ன?
உயர்வாக மதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நாட்டில் சில நாட்களாக நம்மைச் சுற்றி நடந்து கொண்டிருக்கும் சம்பவங்கள் இந்த எண்ணத்தை சிதறடித்துக் கொண்டிருக்கின்றன என்பதுதான் இப்போதைய நிதர்சனமான உண்மை. இந்த அரசின் செயல்பாடுகள் இந்தியாவை மதசார்பு நாடாக மாற்றி விடுமோ என்ற அச்சம் மக்களிடம் எழுந்து விட்டது.
ரோஹிங்கியா முஸ்லிம்களை இந்தியாவுக் குள் அனுமதிக்க முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தஞ்சமடைந் துள்ள சுமார் 40,000 ரோஹிங்கியா முஸ்லிம் அகதிகளை நாடு கடத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக செப்டம்பர் 4 அன்று ஒரு வழக்கு வந்தது. இதில் பதில் அளித்த மத்திய அரசு, “‘மியான்மர் அடக்கு முறையிலிருந்து தப்பி இந்தியா வந்துள்ள 40,000 ரோஹிங்கியா முஸ்லிம்கள் அந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட மாட்டார்கள் என்ற உத்தரவாதத்தை கொடுக்க முடியாது” எனக் கூறியது. மியான்மரிலிருந்து இந்தியாவை நோக்கி வரும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் அடையாளம் காணப்பட்டு நாடு கடத்தப்பட வேண்டியவர்கள் என்று மத்திய அரசு அறிவித் திருக்கிறது. அகதிகளை ஏற்க முடியாது என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டை மறு பரிசீலனை செய்யுமாறு நீதிமன்றம் மீண்டும் கோரியுள்ளது. தேசிய மனித உரிமைகள் ஆணயமும் இந்தியாவின் செயலுக்கு விளக்கம் கோரியுள்ளது.
அடுத்த சோகம்: கர்நாடக மாநிலம் குல்பர்கா மாவட்டத்தில் ஜவார்கி அருகே சன்னூர் குக்கிராமம் உள்ளது. சாதி இந்துக்கள் பெரும் பான்மையாக வசிக்கும் இந்த ஊரில் 30 தலித் குடும்பங்களும் வாழ்கின்றன. தலித் மக்களின் குடி நீர் கிணற்றில் விம் கலந்துள்ளனர். இந்த பாதுகாப்பற்ற சூழல் சிறுபான்மையினரின் உள்ளங்களில் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிற தல்லவா? அச்சம் தீரும் வகையில், அரசிடமி ருந்து என்ன ஆறுதல் கிடைத்தது?
அடுத்தடுத்து: கொலைகள், மாட்டிறைச்சி பிரச்சனையால் முஸ்லிம்கள், தலித்கள் கொல் லப்பட்டு வருகின்றனர். இந்துத்துவா அமைப் பினரை விமர்சித்ததால், ரோஹித் வெமூலா சாம்பலாக்கப்பட்டார். எழுத்தாளர்களான நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, எம்.எம்.கல்புர்கி சுட்டுக் கொல்லப்பட்டனர்.
அடுத்த அதிர்ச்சி கொலை : கன்னட எழுத்தா ளரும், பத்திரிக்கையாளருமான 55 வயதான பி.கவுரி லங்கேஷ் சுட்டு கொல்லப்பட்டார். டைம்ஸ் ஆப் இந்தியா, சண்டே இதழ்களில் பணியாற்றியவர். கர்நாடகத்தில் லங்கேஷ் பத்திரிகையின் ஆசிரியர். இளம் பத்திரிக்கை யாளர்களுக்கு அவர் முன்னோடியாக இருந்தார். கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி நக்சலைட் மறுவாழ்வுத் திட்டத்தை உருவாக்கினார். இதனால் மேற்குத் தொடர்ச்சி மலையில் இப்போது தோட்டங்கள் வெடிக்கும் சத்தம் நின்று, மக்கள் நிம்மதியாக வாழ்கிறார்கள்.
முற்போக்கு சிந்தனையாளர், இந்து மதத்தின் மனுதர்மத்தையும், ஏற்றத்தாழ்வையும் உரு வாக்கிய சாதி அமைப்பையும், பெண்ணை அடிமையாக்கிய சடங்குகளையும் வீரியத் தோடு எதிர்த்தார். எச்சில் இலை மீது தலித்து கள் உருளும் சடங்கு, அந்தரத்தில் முதுகில் அலகு குத்திக்கொண்டு தொங்குவது, நிர்வாண பூஜை, நரபலி போன்று கர்நாடகக் கோயில் களில் தொடரும் மூடப் பழக்க வழக்கங்களை ஒழிக்கச் சட்டம் இயற்ற வேண்டும் என்று கவுரி லங்கேஷ் எழுதி வந்தார். இதற்காக முதல்வர் சீத்தாராமையாவை அடிக்கடி சந்தித்து வலி யுறுத்திக் கொண்டே இருந்தார்.
மத்தியில் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கவுரி லங்கேஷ் இன்னும் வேகத்தோடு இந்துத் துவத்தை எதிர்த்தார். இதனால் ஏராளமான கொலை மிரட்டல்களுக்கும் பாலியல் பலாத் கார மிரட்டல்களுக்கும் ஆளானார். காந்தி யைப் போல, கல்புர்கியைப் போல என்னைக் கொன்றாலும், எனது பணியை நிறுத்த மாட் டேன். “”நாளை நடக்கக் கூடியது இன்றே நடக் கட்டும். இன்று நடக்கக் கூடியது, இப்போதே நடக்கட்டும். இங்கே யாரைக் கண்டு அச்சம்?” என்ற பதிலடி கொடுத்தார் கவுரி லங்கேஷ்.
இவரின் செயல்பாடுகளால், ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. விஸ்வஹிந்து பரித் ஆகியோரின் எதிர்ப்புக்கு ஆளானார். தான் கொல்லப்படு வோம் என்பதை எதிர்பார்த்திருந்தவரைப் போல, அவர் அடிக்கடி கூட்டங்களில் “”நேற்று கல்புர்கி, இன்று நான், கவுரி லங்கேஷ்” என சொல்லிக் கொண்டிருந்தார்.
ரோஹிங்கியா இஸ்லாமியரை இந்தியாவை விட்டு வெளியேற்றக் கூடாது என்று ஃபேஸ் புக்கில் பதிவிட்டார். இப்படி நாட்டின் எந்த மூலையில் அடக்குமுறை நடந்தாலும் அதற்கு எதிரான போர்க்குரலாக கவுரி லங்கேஷ் இயங்கி வந்தார்.
மதபேதமின்றி இது குறித்துப் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான், “”கவுரி லங்கே´ன் கொலை குறித்து வருத்தம் அடைந்தேன். இவை அனைத் தும் இந்தியாவில் நடக்கக் கூடாது, அப்படி நடந்தால் அது என்னுடைய இந்தியா அல்ல. என் இந்தியா வளர்ச்சியை நோக்கியும், அன்பாகவும் இருக்க வேண்டுமென்று விரும்பு கின்றேன்” என்கிறார்.
அவமானங்கள், அச்சங்கள், துயரங்கள் ஏற் படும்போது, இறை செய்தி 4:45 “”அல்லாஹ் உங்கள் பகைவர்களை நன்கு அறிவான். (உங்க ளுக்கும்) பாதுகாவலனாக இருக்க அல்லாஹ் போதுமானவன். (உங்களுக்கு) உதவியாளனாக இருக்கவும் அல்லாஹ் போதுமானவன் என்ற வசனம் மனதிற்கு பெருத்த ஆறுதல் தருகிறதல்லவா?