மறுபதிப்பு : ஜனவரி 1995UNION ISLAMIQUE D/ENSEINGNEMENT ET DE RECHRHE, FRANCE
அல்லாஹ்வின் வழிகாட்டுதல் பொதிந் துள்ள குர்ஆனை அல்லாஹ் ஒரே நேரத்திலோ, ஒரு வினாடியிலோ அருளவில்லை. அதை ஓதிக் காண்பித்து அதன் திருவசனங்களை மக்களுக்கு விளக்கிக் காட்ட ஒரு தூதர் மூலமாகவே அருளப்பட்டது. குர்ஆனின் கருத்துக்கள் அந்த இறைத் தூதரின் வாழ்விலும், செயலிலும் நடைமுறைப்படுத்தப்பட்டன.
அன்னை ஆயிஷா(ரழி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை பற்றி வினவப் பட்டபோது ”அவர்களின் வாழ்க்கை குர்ஆனா கவே விளங்கியது” என அவர்கள் கூறிய பதிலில் குர்ஆனுக்கும், சுன்னாவுக்கும் உள்ள பிணைப்பு தெளிவு படுத்தப்பட்டுள்ளது. எனவே குர்ஆனும், ஹதீஃதும் ஒன்றில் ஒன்று தாங்கி நிற்கும் ஒரு முழுமையான அங்கமாகும். நிச்சயமாக அல்லாஹ்விடமிருந்து பேரொ ளியும், தெளிவுள்ள நெறிநூலும் உங்களிடம் வந்திருக்கிறது. அல்குர்ஆன் : 5:15
மேற்கண்ட இறை வசனத்தின் பிரகாரம் கூறுவதானால் குர்ஆனை வாசிக்க, விளங்க ஒளி யான சுன்னா தேவை என்பது விளங்குகிறது. ஹதீஃத்களின் துணையின்றி குர்ஆனை விளங்க முயல்வது இருட்டில் ஒரு நூலை வாசிக்க முயல் வது போலாகும். இஸ்லாம் “”வஹீ” என்ற மூல அடிப்படையில் அமைந்ததாகும். இந்த “”வஹீ” நம் இறைத் தூதர்(ஸல்) அவர்களுக்கு எவ்வாறு இறைவன் மூலம் அறிவிக்கப்பட்டதோ அவ் வாறே அவர்கள் அதற்காக கூறும் மார்க்க விளக் கங்களும், வஹீயின் அடிப்படையில் அமைந்த வையாகும். இதையே பின்வரும் குர்ஆன் வசனம் நமக்கு கூறுகிறது.
“”அவர் தம் இஷ்டப்படி (எதனையும்) கூறு வதில்லை. அது அவருக்கு “”வஹீ” மூலம் அறிவிக் கப்பட்டேயன்றி….” அல்குர்ஆன் : 53:3,4
நம்மில் ஒரு சிலர் மேலோட்ட எண்ணத்தில் “”குர்ஆனில் என்ன கூறப்பட்டுள்ளதோ அதுவே போதும், ஹதீஃத்கள் பலமாதிரி இருக்கின்றன. பலகீனமான ஹதீஃத்கள் என்கிறார்கள். இட் டுக்கட்டப்பட்ட ஹதீஃத்கள் என்கிறார்கள், எனவே குர்ஆனில் கூறப்பட்டிருக்கிறதா? நான் கட்டுப்படுகிறேன். ஹதீஃதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை” என்ற கருத்தில் கூறி வருகின் றார்கள். அவர்களது சிந்தனைக்குச் சிலவற்றை எடுத்துக் கூற நாம் கடமைப்பட் டுள்ளோம்.
“”விசுவாசிகளே! தொழுகையைக் கடைப் பிடித்து ஜகாத்தும் கொடுத்து அவனுடைய தூத ருக்கு முற்றிலும் வழிப்படுங்கள்; நீங்கள் இறைவனின் அருளைப் பெறுவீர்கள்” அல்குர்ஆன் : 24:56
மேற்கண்ட இறை வசனத்தின் மூலமும் இது போன்ற வேறு வசனங்கள் மூலமும் இறை வன் தொழச் சொல்கிறான், ஜகாத்தைக் கொடுக்கச் சொல்கிறான். ஆனால் குர்ஆனில் எந்த இடத்திலும் எப்படி, எத்தனை ரகாஅத்து கள் தொழவேண்டும் என்றோ, எவ்வளவு ஜகாத் கொடுக்க வேண்டும் என்றோ விளக்க வில்லை. அதை விளக்கும் கடமையை இறை வன் தன் தூதர்(ஸல்) அவர்களுக்குக் கொடுத் துள்ளான். இதைத்தான் அந்த வசனத்தின் பிற் பகுதியில் “”அவனுடைய தூதருக்கு முற்றிலும் வழிப்படுங்கள்” என்று இறைவன் கூறுகின் றான். எனவே, நாம் தொழவேண்டுமென்றால், ஜகாத் கொடுக்க வேண்டுமென்றால் நபி(ஸல்) அவர்களின் சுன்னா அடங்கிய ஹதீஃத்களைக் கண் டிப்பாகக் கடைபிடிக்க வேண்டும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.
“”நபியே! மக்களுக்கு அவர்களின் மீது அரு ளப்பட்ட இந்த குர்ஆனை, நீங்கள் அவர்க ளுக்கு தெளிவாக விளக்கும் பொருட்டும் அவர்கள் சிந்திப்பதற்காகவும் இதனை நாம் உங்களுக்கு அருள் செய்தோம்.” அல்குர்ஆன்:16:44
என்ற இறைக் கட்டளைக்கேற்ப குர்ஆனில் குறிப்பிட்டுள்ள தொழுகை, ஜகாத், ஆண், பெண் உறவு, திருமணம், வியாபாரத் தொடர்பு, சமூக உறவுகள், வாழ்க்கை நெறி முறைகள் போன்ற பலவற்றையும் வார்த்தை களால் விளக்கியும், செயல்படுத்திக் காட்டியும் நபி(ஸல்) அவர்கள் விளக்கமளித்தார்கள்.
குர்ஆனை பொதுவாக “”தொழுகையை நிறைவேற்றுவீர்களாக!” என்று கட்டளை இருக்கிறது. அந்த தொழுகையை நிறை வேற்றும் நேரங்கள், முறைகள், அதன் ரகா அத்துகள், ருகூவு, ஸுஜூது பற்றிய விதி முறைகள் போன்றவைகள் சுன்னாவிலேயே விளக்கப்படுகிறது. அவற்றை ஹதீஃதே நமக்குக் கற்பிக்கிறது.
நோன்போடு தொடர்புடைய பார்க்க அல்குர்ஆன் : அல்பகரா வசனம் (187) அருளப் பட்டபோது அதீபின்ஹாதிம்(ரழி) என்ற நபித் தோழர் இதில் குறிப்பிடப்படும் கய்துள் அப்யழு(வெள்ளை நூல்) கய்தில் அஸ்வதி (கறுப்பு நூல்) என்பது இரண்டு நூல் களைக் குறிக்கிறது என்ற கருத் தைக் கொண் டிருக்க, ரசூல்(ஸல்) அவர்கள் குர்ஆன் அவ் வாறு குறிப்பிடுவது இரவின் இருட்டையும், பகலின் வெளிச்சத்தையுமே என்று விளக்க மளித்தார்கள் (ஆதாரம்: ஸஹீஹ் புகாரி, கிதா புத் தஃப்ஸீர்) குர்ஆன் நூற்றுக்கு மேற்பட்ட வசனங்களில் ஜகாத் பற்றிக் குறிப்பிடுகிறது. ஜகாத்தோடு தொடர்புடைய நிஸாப், ஜகாத் விதியாகும் பொருள்கள், ஒவ்வொரு பொருளி லும் ஜகாத் அளவிடப்படும் முறை, அதன் பங்கீடு பற்றிய விரிவான விளக்கங்களை ஹதீஃத்களிலேயே காணமுடிகிறது.
“”உங்களுக்கு வியாபாரத்தை அல்லாஹ் அனுமதித்து வட்டியை ஹராமாக்கினான்” என குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் எல்லா வகை யான வியாபாரத்தையும் இஸ்லாம் அனுமதிக்க வில்லை என்பதையும், மதுபானம், பன்றி இறைச்சி, மக்களை ஏமாற்றும் வியாபார முயற்சிகள் ஆகியவைகளை அனு மதிக்கப் படாத வியாபாரங்கள் என்று ஹதீஃத்களே தெளிவுபடுத்துகின்றன. திருட்டுக் குற்றத்திற் காக திருடியவர்களின் கரத்தைத் துண்டித்து விடும்படி குர்ஆன் கீழ்க்கண்டவாறு பொதுப் படையாகக் குறிப்பிடுகிறது.
“”ஆணோ, பெண்ணோ எவர் திருடினாலும் இ(த்தீ)ச் செயலுக்குத் தண்டனையாக அவர் களின் கைகளைத் துண்டித்து விடுங்கள்; (இது) அல்லாஹ்வினால் ஏற்படுத்தப்பட்ட எடுத்துக் காட்டான தண்டனையாகும். அல்லாஹ் மிகைத்தோனும் ஞானமுடையோனுமாக இருக்கின்றான். அல்குர்ஆன்:5:38
ஆனால் எந்தக் கரம், எத்தகைய திருட்டிற் காக, எந்த அளவு வெட்டப்பட வேண்டும் என் பது பற்றி விளக்கப்படவில்லை. இதில் வலக் கரம்தான் முதலில் வெட்டப்பட வேண்டும் என ஹதீஃத்களே விளக்குகின்றன. ஒரு கலசத் தின் பெறுமதியை விட குறைந்த பெறுமதி யுள்ள ஒரு பொருளைத் திருட்டிற்காக ஒருவ ரின் கரம் வெட்டப்படக் கூடாது; புத்தி சுவா தீனமற்றவர்கள், குழந்தைகள் கரம் வெட்டப் படக் கூடாது. மேலும் பழங்கள், மரக்கறிகள், உணவுப் பண்டங்களைத் திருடிய குற்றத்திற் காக ஒருவரின் கரம் தூண்டிக்கப்படக் கூடாது என்று ஹதீஃத்களே விளக்கமளிக்கின்றன. ஒருவரின் கை மணிக்கட்டு வரைதான் துண்டிக் கப்பட வேண்டும்; முழங்கை வரை துண்டிக்கப் படக் கூடாது என்றும் ஹதீஃத்களே நமக்கு எடுத்துரைக்கின்றன.
குர்ஆனில் அந்நிஸா சூராவில் 11,12,176 திருவசனங்களில் வாரிசுரிமை பற்றிய விதிகளை யும், ஸூரா பகராவின் 226 முதல் 237 வரையி லும் ஸூரா அத்தலாக்கின் 1 முதல் 5 வசனம் வரையிலும் விவாகரத்துப் பற்றிய சட்டங்களை யம், ஹதீஃத்களின் துணையின்றி முறையாக விளங்குவதோ, செயல்படுவதோ எந்த வகை களிலும் முடியாத ஒன்று. குர்ஆனில் பொது வாக கூறப்படும் இது போன்ற சட்டங்களை யும், கடமைகளையும் நபி (ஸல்) அவர்களின் விளக்கம் நிறைந்த ஹதீஃத்கள் அல்லவா நமக்கு விரிவாக விளக்குகின்றன. இதனை கதீப் பக்தாதீ(ரஹ்) அவர்கள் தங்களது “”அல்கிபாயா” என்னும் நூலின் 48ம் பக்கத்திலும் “”அதப்வல் கிபாயா” என்னும் நூலின் 4ம் பக்கத்திலும் ஒரு சுவையான நிகழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்கள்.
இம்ரான் இப்னுல் ஹுஸைன்(ரழி) என் னும் ஸஹாபி அறிஞர் (பஸ்ராவில் ஹிஜ்ரி52ல் மரணித் தார்கள்) தமது நண்பரோடு அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கிறார். அப்போது அங்கு வந்த ஒரு மனிதர் “”எங்களுக்கு குர் ஆனைத் தவிர எது பற்றியும் கூறவேண்டாம்” எனக் குறிப்பிட்டார். அப்போது அவர்கள் “”சற்று என்னை நோக்கி வாரும்” எனக் கூறி, அவர் நெருங்கி வந்ததும் “”நீர் குர்ஆனில், ளுஹர் நான்கு ரகாஅத்துகள் என்றும், மஃரிப் மூன்று ரகாஅத்துகள் என்றும் குறிப்பிடக் கண்டிருக் கின்றீரா? குர்ஆனில் கஃபாவை ஏழு தடவை தவாஃப் செய்ய வேண்டும், ஸபா-மர்வாவுக் கிடையில் ஏழு தடவை ஓடுதல் வேண்டும் எனக் கூறப்பட்டதைப் பார்த்திருக்கிறீரா?” எனக் கேட்டார்கள். வந்தவர் பதில் ஏதும் கூற முடியாத நிலையில் விழித்தார். ரசூல்(ஸல்) அவர்களின் ஸஹாபாக்களில் ஒருவரான இம் ரான் இப்னுல் ஹுஸைனின் இக்கருத்து குர் ஆனை விளங்குவதில் சுன்னா எந்த அளவு முக்கி யம் என்று நபித்தோழர்கள் விளங்கி வைத்துள் ளார்கள் என்பதற்குச் சிறந்த உதாரணமாகும். “”உங்களில் இறந்த அவருக்குச் சந்ததியுமி ருந்து (பெற்றோருமிருந்தால்) தாய் தந்தை ஒவ் வொருவருக்கும் (இறந்தவர்) விட்டுச் சென்ற சொத்தில் ஆறிலொரு பாகமுண்டு. (இறந்த) அவருக்குச் சந்ததியில்லாமலிருந்து பெற்றோர் மட்டும் இருந்தால் அவருடைய தாய்க்கு மூன் றிலொரு பாகமுண்டு; அவருக்குச் சகோதரர் கள் இருந்தால் தாய்க்கு ஆறிலொரு பாக முண்டு” அல்குர்ஆன்: 4:11
மேற்கண்ட இறைவசனம் மூலம் எல்லா பெற்றோருக்கும் தனது பிள்ளைகளின் சொத்தி லிருந்து சொத்துரிமை பெறும் தகுதி உண்டு என்று கூறினாலும், இதில் எல்லா பெற்றோர் களும் அடங்கவில்லை. பெற்றோர்களும், பிள்ளைகளும் பின்பற்றும் மார்க்கம் ஒரே மார்க்கமான இஸ்லாமாக (பல மத்ஹப் அல்ல) இருந்தால்தான் சொத்துரிமை தகுதி உடைய வர்கள் என்றும், இந்த விதிமுறைக்கு உட்படா தோர் வாரிசுரிமை பெறத் தகுதியற்றவர் என் றும் குர்ஆன் கூறும் பொது விதிக்கு சில வரை யறைகளை ஹதீஃத்கள் விளக்கிக் கூறுகின்றன. ஒரு காஃபிர், முஸ்லிமின் சொத்திலிருந்து வாரி சுரிமை பெறமாட்டான். ஒரு முஸ்லிம், ஒரு காஃபிரின் சொத்திலிருந்து வாரிசுரிமை பெற மாட்டான் என்ற கருத்தில் அல்புகாரி, முஸ்லிம் ஹதீஃத் கிரந்தங்களில் காணப்படுகிறது.
ஃபர்ழு தொழுகைக்கு முன் பின் தொழப் படும் சுன்னத் தொழுகைகள், தஹிய்யதுல் மஸ்ஜித் என்ற பள்ளியில் நுழைந்ததும் தொழப் படும் பள்ளி காணிக்கை தொழுகை, பெருநாள் தொழுகை, ஜனாஸா தொழுகை, இஸ்திகாரா, லுஹர் போன்ற தொழுகைகளின் குறிப்புகள் குர்ஆனில் இல்லை. இவையயல்லாம் ஹதீஃத் களிலேயே காணப்படுகின்றன. ஜகாத்துல் ஃபித்ர், சுன்னத்தான நோன்புகள், நோன்பு நோற்க அனுமதிக்கப்படாத நாட்கள், ஹஜ்ஜில் ஆண், பெண் இஹ்ராம் அணியும் முறை, மினாவில் கல்லெறிதல், அதன் நேரம், எண் ணிக்கை முஸ்தலிபாவில் தங்குதல் போன்ற வைகள் ஹதீஃத்களிலேயே காணப்படு கின்றன.
இப்படி குர்ஆனை விளங்க, குர்ஆனில் கூறப்பட்ட இறைக் கட்டளைகளை நிறை வேற்ற ஹதீஃத்களே மிகமிக முக்கியம் என் பதை எடுத்துக் கூறுவதானால் கட்டுரை மிகமிக நீண்டு விடும்.
“”(நம்முடைய) தூதர் உங்களுக்குக் கொடுத் ததை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் எதனை உங்களுக்குத் தடுத்தாரோ அதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்” (அல்குர்ஆன் : 59:7)
எவர் அல்லாஹுடைய தூதருக்கு வழிப் பட்டு நடக்கின்றாரோ அவர் நிச்சயமாக அல்லாஹுக்கே வழிபட்டார். (அல்குர்ஆன் : 4:80) (நபியே!) நீர் கூறும், “”நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங் கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்; உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான்; மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான். அல்குர்ஆன்:3:31
அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு வியத்தைப் பற்றிக் கட்டளையிட்ட பின்னர் அவ் வியத்தில் (அதற்கு மாறாக வேறு) அபிப்பிராயம் கொள்வதற்கு விசுவாசியான எந்த ஆணுக்கும், பெண்ணுக்கும் உரிமை யில்லை; (அதில்) அல்லாஹ் வுக்கும் அவனு டைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்க வழிகேட்டி லேயே இருக்கிறார்கள். அல்குர்ஆன்: 33:36 இன்னும் இவை போன்ற பல இறைவசனங் கள் ஒவ்வொரு முஸ்லிமும் இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும். அவர்களது வழிகாட்டல் அடங்கிய ஹதீஃத் களைப் பின்பற்றி நடக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின்றன. மேலும் மார்க்கத்தை விளங்க குர்ஆன் மட் டும் போதும், ஹதீஃத்கள் தேவையில்லை என்று கூறும் சகோதரர்கள், உண்மையில் அவர்கள் ஏற்றுக் கொள்ளும் குர்ஆனிலும் பல வசனங்களை நிராகரிப்பாளர்களாக ஆகிவிடு கிறார்கள் என்பதை உணர வேண்டும். அதா வது ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மறுப்பவர் கள் குர்ஆனையே மறுக்கிறார்கள் என்பதே உண்மையாகும். இதற்கு, மேலே நாம் எடுத் தெழுதியுள்ள சில குர்ஆன் வசனங்களே போதிய சான்றுகளாகத் திகழ்கின்றன.
மேலும், ஹதீஃத்களில் பலவீனமான, இட் டுக் கட்டப்பட்ட ஹதீஃத்கள் நுழைந்து விட் டன; யூதர்கள் சதி செய்து நுழைத்துவிட்டார் கள்; ஆகவே ஹதீஃத்களை எடுக்க முடியாது என்று கூறி அவற்றை மறுப்பதும் அறிவுக்குப் பொருத்தமற்றச் செயலாகும். இறைவனின் பெயரால் பல மூட நம்பிக்கைகளும், அனாச் சாரங்களும், ஏமாற்று வேலைகளும் நுழைந்து விட்டன. புரோகிதர்களான ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டமான மக்களை ஏய்த்துப் பிழைக்க வழி ஏற்பட்டுவிட்டது; அதனால் அந்த இறைவனே இல்லை என்று கூறி ஒரே இறைவனையும் மறுக்கும் நாஸ்திகம் பேசும் அரைக் கிணறு தாண்டுகிறவர்களுக்கும், பல வீனமான, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஃத் களைக் காரணம் காட்டி ஆதாரபூர்வமான ஹதீஃத்களை மறுப்பவர்களுக்கும் வித்தியாசம் இல்லை; இவர்களும் அரைக் கிணறு தாண்டு பவர்களே என்பதை உணர வேண்டும்.
புரோகிதர்களை ஒழித்துக் கட்டி சமத்துவ சகோதரத்துவ சமுதாயம் சமைக்கப்படுவது எந்த அளவு அவசியமோ அதே போல், பலவீன மான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஃத்களை தெளிவாக அடையாளம் கண்டு அவற்றை நிராகரிப்பதோடு, ஆதாரபூர்வமான ஹதீஃத் களை எடுத்து நடக்க முன் வரவேண்டும்.
குர்ஆனை விளங்க, அதன்படி செயல்பட ஹதீஃத்கள் மிகமிக அவசியம் என்று இதுவரை விளங்கினோம். எனவே குர்ஆனுடன் ஹதீஃத் களையும் அறியும் ஆவல் கொள்ளுங்கள்; இறைவன் நமது கல்வியை விரிவாக்கப் போதுமானவன்.