Dr. அம்ரைனி
என்னருமை சகோதர, சகோதரர்களுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)
ஹிஜ்ரி 1439வது வருடம் சென்ற21.9.2017-ல் உதயமானது. அல்ஹம்துலில்லாஹ். அதாவது சந்திர நாட்காட்டிபடி 1439 வருடங்கள் என் பது இன்றைய புழக்கத்திலுள்ள ஆங்கில-கிரிகோரியன் நாட்காட்டிபடி 1386 வருடங் களாகும். காரணம் : 355 அல்லது 356 நாட் களைக் கொண்டது ஒரு வருடம், இது சந்திர ஹிஜ்ரி நாட்காட்டியாகும்.
364 அல்லது 365 நாட்களைக் கொண்டது ஒரு வருடம், இது சூரிய-கிரிகோரியன் நாட் காட்டியாகும். எனவே ஆங்கில நாட்காட் டிக்கும், சந்திர நாட்காட்டிக்குமிடையில் ஒவ்வொரு வருடமும் 10 அல்லது 11 நாட்கள் வித்தியாசம் வரும். அதாவது 3 வருடங்களுக் கொருமுறை ஆங்கில நாட்காட்டியை விட சந்திர நாட்காட்டி ஒரு மாதம் அதிகமாகும். 38 வருடங்களுக்கு ஒரு வருடம் அதிகமாகும். இதுவே இயற்கை விதி.
ரோம பேரரசின் ஆட்சியாளர்கள் ஜுலியஸ் சீஸர், அகஸ்டஸ் சீசர் போன்றோர் வருவதற்கு முன் கிரிகோரியன் நாட்காட்டி பத்து மாதங்களைக் கொண்டது ஒரு வருடம் என்றது. ஜுலியஸ் சீஸர் காலத்தில் அது 11 மாதங்களாக மாறி ஜூலை மாதம் உருவானது. அதற்கு பின் வந்த அகஸ்டஸ் சீசர் காலத்தில் 12 மாதங்கள் கொண்டது ஒரு ஆண்டு என கணிக்கப்பட்டு ஆகஸ்ட் மாதத்தை உருவாக் கினார்கள். இதனை உருவாக்கிய அகஸ்டஸ் சீசர்-ஜுலியஸ் சீஸர் பெயரிலுள்ள ஜூலை 31 நாட்களைக் கொண்டது போல தன் பெயரி லுள்ள ஆகஸ்டும் 31 நாட்களாக உருவாக் கினான்.
அதுவே இன்றுவரை பின்பற்றப்பட்டு வருகிறது. இதன் மூலம் கிரிகோரியன்-ஆங்கில நாட்காட்டி சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன் கிறிஸ்து பிறந்த நாளை வைத்து கிறித்துவர் களால் துவக்கப்பட்டது. அதற்கு முன் இப்படி யயாரு நாட்காட்டி உலகளவில் இல்லை என்பதை அறிய முடிகிறது. இந்த 2000 ஆண்டு களிலும் இந்நாட்காட்டி துள்ளியமாக இல்லை யயன கண்டறிந்து பல தடவைகள் கூடி ஆலோ சித்து பற்பல குழப்பங்களை குளறுபடிகளை செய்துள்ளனர்.
காலண்டர்-நாட்காட்டி என்பது மனிதன் உருவான காலம் முதல் வெவ்வேறு ரூபங்களில் இருந்துள்ளது. பண்டைய கால யூத, ஆரிய, சிந்து சமவெளி பாபிலோனிய சமுதாயங்களில் பூமிக்கு மிகவும் அருகிலுள்ள சந்திரனின் சுழற்சி யின் அடிப்படையிலேயே காலண்டர் இருந் துள்ளதை எவரும் மறுக்க முடியாது. இதனை அல்குர்ஆன் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது ஒரு வருடம் என்பது “”வானங் களையும், பூமியையும் படைத்த நாளிலிருந்தே உள்ளது (9:35) என சொல்கிறது.
பண்டைய மனிதன் வானில் தோன்றும் சூரியன், சந்திரனை பார்த்திருக்கிறான். சூரியன் தினமும் காலையில் உதித்து மாலையில் மறைகிறது. இதில் எந்த மாற்றமுமில்லை. ஆனால் சந்திரன் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இருப்பிடங்களில், உருவங்களில் உருவாகி வளர்வதும், தேய்வதும் ஒரு நாள் முழுவதும் மறைவதையும் கண்டான். சந்திரன் உருவாகும் இருப்பிடம், உருவத்தை தினசரி பார்த்து பார்த்து கணக்கிட ஆரமபித்தான். தொடர் முயற்சியில் ஒரு மாதம் என்பது 29, 30 நாட்களைக் கொண்டதாக இருப்பதை அறிந்தான். அதனடிப்படையில் பன்னிரண்டு மாதங்களைக் கொண்டது ஒரு வருடம் என முடிவு செய்தான். இது இயற்கை விதி ஏகனின் கட்டளை.
நபி(ஸல்) அவர்கள் பிறப்பதற்கு முன்பும், அரேபியர்களிடையே-யூத,கிறித்துவர், முஷ்ரிக் குகள் இடையிலும் சந்திரநாட்காட்டியே புழக் கத்திலிருந்துள்ளது. இன்றைய கிறித்துவ கிரிகோரியன் காலண்டர் அவர்களிடையே இருந்ததாக எந்த ஆதாரமுமில்லை. ஏன்? சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வரை கூட ஆங்கில கிறித்துவ நாட்காட்டி ஐரோப்பியர்களிடையே இருந்ததே தவிர இந்தியாவில் இல்லை.
நம்மை அடிமைகளாக ஆட்சி புரிந்த ஆங்கிலேயர்கள் அவர்களது நாட்காட்டியை நமக்கு பழக்கப்படுத்தி இன்று வரை அதற்கு நாம் அடிமையாகியுள்ளோம் என்றால் மிகை யாகாது. இதுவே இன்று நம்மிடையே பற்பல குழப்பங்களை உருவாக்கியுள்ளது.
சென்ற 21.09.2017ல் ஹிஜ்ரி 1439 துவங்கியுள்ளது. அதாவது நம் அருமை நபி (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதினாவிற்கு புலம் பெயர்ந்த நாளிலிருந்து இந்நாட்காட்டி ஆரம்பமாகிறது. இது உமர்(ரழி) அவர்கள் காலத்தில் உருவாக்கப்பட்டது, மிகவும் துல்லியமானது, எவ்வித குறைபாடுகளு மில்லாதது.
மக்கத்து குரை´களின் விரோத, குரோத சதி திட்டத்தை முறியடித்து-அல்லாஹ்வின் ஆணைப்படி ரசூல்(ஸல்) அவர்கள் தன்னு டைய 53 வயதில் 27.02.நுபுக்ஷி = 01.09.609 ஹிஜ்ரி காலண்டரின் 2வது மாதமான ஸஃபர் 27வது பிறை வெள்ளிக்கிழமை அதிகாலை (தஹஜ்ஜத் நேரம்) தன் வீட்டிலிருந்து புறப்பட்டு தஃவர் குகைக்கு, தன் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுடன் சென்றார்கள்.
அக்குகையில் ஸஃபர் 27,28,29 பிறை நாட்கள் வெள்ளி முதல் ஞாயிற்றுகிழமை வரை தங்கியிருந்து ஸஃபர் 30 திங்கள் அதிகாலை அங்கிருந்து புறப்பட்டு நபி(ஸல்) அவர்கள் பிறந்த மாதமான ரபீயுல் அவ்வல் 7ம் நாள் திங்களன்று மதீனா அடைந்தார்கள். இதனை ஹிஜ்ரி காலண்டரில் 07.03.நுபுக்ஷி எனக் குறிப்பிடுவார்கள். அன்றிலிருந்து 21.09.2017 வரை ஹிஜ்ரி காலண்டர்படி 5,09,935 நாட்கள் ஆகியுள்ளன. திருகுர்ஆனில் 36:40 வசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள “”உர்ஜுனில் கதீம்” (சங்கமம்-அமாவாசை 17,629 உருவாகியுள்ளன என்பது இன்றைய நவீன வானியல் அறிஞர் களும் ஏற்றுக் கொள்ளும் சத்தியம், உண்மை.
இந்தளவு துல்லியமான ஹிஜ்ரி சந்திர நாட் காட்டியை “”சாத்தியமில்லாத சந்திர காலண்டர்” என ஒருசில அறிவிலிகள் கூறித் திரிவது நகைப்புக்குரியதாகும். ஒவ்வொரு வருடமும் ரமழான் ஆரம்பம், முடிவில் ஈதுல் ஃபித்ர் பெருநாள்; துல்ஹஜ் மாதம் 9ம் அரபா நாள், 10ம் நாள் ஈதுல் அழ்ஹா என 4 நாட்களில் உலகளவில் முஸ்லிம்கள் இஸ்லாத்தின் அடிப் படையான அல்குர்ஆனை ஆராயாமல் ஒருசில நபிமொழிகளுக்கு தங்கள் சுய கருத்துக்களை சொல்லி அதனடிப்படையில் தங்களது ஜமாஅத், இயக்கம், சங்கம், அமைப்பு தலைவர் கள் கூறுவதை இஸ்லாமிய மார்க்க தீர்ப்பாக கொண்டு சில குழப்பங்கள், குளறுபடிகள் உரு வாகியுள்ளது உண்மையே! இன்ஷா அல்லாஹ் அது வெகுவிரைவில் சரியாகும், சரியாகி வருகிறது என்பதை நாம் கண்கூடாக கண்டு வருகிறோம். அல்ஹம்துலில்லாஹ்.
ஹிஜ்ரி ஆண்டான 1439ஐ எப்படி நாம் செலவழிக்க வேண்டும் என்பதை குர்ஆன், ஹதீஃது அடிப்படையில் காண்போம். ஹிஜ்ரி வருடத்தின் முதல் மாதம் “”முஹர்ரம்” அதாவது அல்லாஹ் ஆதி மனிதர் ஆதம்(அலை) அவரது துணைவியார் ஹவ்வா(அலை) அவர்களை படைத்து சுவனத்தில் வாழ செய்து அனைத்தை யும் ஆகுமாக்கி (ஹலாலாக்கி) “”அம்மரத்தின் பக்கம் மட்டும் போகவேண்டாம்” என ஒன்றை ஒன்று மட்டும் தடை (ஹராமாக்கி) செய்த மாதம் என்றால் மிகையாகாது. நம் வாழ்வு முழுதும் ஹராமானவைகளை விட்டொழித்து வாழ்வதே சிறப்பு.
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு ஹிஜ்ரத் வந்த பின் அங்கு வாழ்ந்த யூதர்கள் முஹர்ரம் மாதம் 10ம் நாள் நோன்பு வைப்பதைக் கண்டார்கள். காரணம் கேட்டபோது அந்நாளில்தான் யூதர்களின் இறைத் தூதர் மூஸா(அலை) அவர்களும், அவரை சார்ந்த பனு இஸ்ரவேலர்களும் கொடியோன் பிர்அவ்னின் அடிமை தலையிலிருந்து விடுபட “”பிர்அவ்ன்” நைல் நதியில் மூழ்கடிக்கப்பட்டான். அதனை நினைவு கூற தாங்கள் நோன்பு வைப்பதாக யூதர்கள் கூறினார்கள். இதனை செவியுற்ற இறை தூதர்(ஸல்) அவர்கள் அதனை நாமும் நினைவு கூற, யூதர்களை விட அதிகமாக முஹர்ரம் மாதம் 9,10 என இரு நாட்கள் நோன்பு வைக்க கட்டளையிட்டார்கள். ஆகவே இவ்வருடம் 1439ல் முஹர்ரம் 9,10 நாட்கள் வரும். செப்டம்பர் 29,30 நாட்களில் நோன்பு வைப்போமாக!
வழக்கம் போல் ஹிஜ்ரி 1439ல் சென்ற 1438ல் வந்தது போல் இரண்டு சந்திர கிரகணங் கள், இரண்டு சூரிய கிரகணங்கள் வரும். இன்ஷா அல்லாஹ்.இரு சந்திர கிரகணங்கள் :
1. ஜமாதுல் அவ்வல் – பெளர்ணமி 14.05.1439 = 31.01.2018 புதன்கிழமை
2. துல்கஃதா – பெளர்ணமி 14.11.1439 = 27.07.2018 வெள்ளிக்கிழமை
இரு சூரிய கிரகணங்கள் :1. ஜமாதுல் அவ்வல் – அமாவாசை 29.05.1439 = 15.02.2018 வியாழன்
2. துல்கஃதா – அமாவாசை 29.11.1439 = 11.08.2018 சனிக்கிழமை
இந்நான்கு கிரகண நாட்களில் நபிவழியில் கிரகணத் தொழுகை தொழ வேண்டும். இக்கிர கணங்கள் உலகில் எங்கு உருவானாலும் அகில உலக பிரஜைகளான முஸ்லிம்கள் தொழ வேண் டும் என உணரலாம். ஹிஜ்ரி 1439ன் ரமழான் மாதம் சென்ற 1438 போல 29 நாட்களைக் கொண்டது. ஹிஜ்ரி 01.09.1439 ரமழான் நோன்பு 16.05.2018 புதன் ஆரம்பம் ஹிஜ்ரி 01.10.1439 ஈதுல் பித்ர் பெருநாள் 14.06.2018 வியாழக்கிழமை பெருநாள் கொண்டாடவேண்டும். ஹிஜ்ரி 1439ன் துல்ஹஜ் மாதம் 01.12.1439= 12.08.2018 ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து அரபா நாள் : 09.12.1439 = 20.08.2018 திங்கட் கிழமை வரும். அரஃபா நோன்பு வைக்க வேண்டும். ஈதுல் அழ்ஹா : 10.12.1439=21.08.2018 செவ்வாய் கிழமை கொண்டாட வேண்டும். அன்று தொடர்ந்து இரண்டு நாட்கள் குர்பானி கொடுக்கலாம்.
ஹிஜ்ரி 1439ம் வருடத்திய பன்னிரண்டு மாதங் களில் சரியாக ஆறு மாதங்கள் 29 நாட்க ளாகவும், மீதி ஆறு மாதங்கள் 30 நாட்களைக் கொண்டதாக வும் இருக்கும்.
1. முஹர்ரம் = 29 நாட்கள்2. ஸஃபர் = 30 நாட்கள்3. ரபீஉல் அவ்வல் = 30 நாட்கள்4. ரபீஉல் ஆகிர் = 30 நாட்கள்5. ஜமாதுல் அவ்வல் = 29 நாட்கள்6. ஜமாதுல் ஆகிர் = 30 நாட்கள்7. ரஜப் = 30 நாட்கள்8. ஃபான் = 29 நாட்கள்9. ரமழான் = 29 நாட்கள்10. வ்வால் = 30 நாட்கள்11. துல்கஃதா = 29 நாட்கள்12. துல்ஹஜ் = 29 நாட்கள் மொத்தம் = 354 நாட்கள்
ஹராமை விட்டு வாழ்வோமாக!
இதனைத் தொடர்ந்து பிறை பார்த்து ஒவ் வொரு பிறை மாதத்தின் கடைசியில் அதிகாலையில் (பஜ்ருக்கு முன்) திருகுர்ஆனில் 36வது அத்தியாயம் வசனம் 40ல் கூறப்பட் டுள்ள “”உர்ஜூனுல் கதீம்” (கண்ணுக்கு தெரியும் கடைசி பிறை) பார்த்து முடிவு செய் யுங்கள்.
நாட்களில் முன்பின் மாற்றி செய்வது “”குப்ர்” (இறை மறுப்பு) என்ற இறைவனின் எச்சரிக்கையை நினைவூட்டி செயலாற்றுமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம். அல்லாஹ் வின் இயற்கை நியதிக்கு கட்டுப்பட்டு இருவுல கிலும் நாம் நலமும், வளமும் பெற்று வாழ்வோமாக! ஆமீன்!