குண்டூர், செல்: 9962064449
1.உலகில் அல்லாஹ்வால் முதலில் படைக்கப் பட்ட பொருள் எது? தண்ணீர். ஆதாரம் : அல்குர்ஆன் : 6:992.
2.உலகில் முதல் முதலில் படைக்கப்பட்ட ஆண் யார்? ஆதம்(அலை) அவர்கள். ஆதாரம்: அல்குர்ஆன் : 15:26
3. உலகில் முதல் முதலில் படைக்கப்பட்ட பெண் யார்? ஹவ்வா(அலை) அவர்கள். ஆதாரம்: அல்குர்ஆன் : 4:1
4. உலகில் முதல் முதலில் அல்லாஹ்வினால் சபிக்கப்பட்டவன் யார்? இப்லீஸ்(ஷைத்தான்) ஆதாரம் : அல்குர்ஆன்: 15:34,35
5. உலகில் முதல் முதலில் அல்லாஹ்வினால் தண்டிக்கப்பட்டவர்கள் யார்? ஆதம்(அலை) அவர்கள், ஹவ்வா(அலை) அவர்கள். ஆதாரம் : அல்குர்ஆன் : 2:36
6. உலகின் முதல் கொலையாளி யார்? ஆதம்(அலை) அவர்களின் மகன் காபில். ஆதாரம் : அல்குர்ஆன் : 5:27,28
7. உலகின் முதல் கொலையுண்டவர் யார்? ஆதம்(அலை) அவர்களின் மகன் ஹாபில். ஆதாரம் : அல்குர்ஆன் : 27,28
8. உலகில் முதல் முதலில் வேதம் கொடுக்கப் பட்ட நபி யார்? மூஸா(அலை) அவர்கள். ஆதாரம் : அல்குர்ஆன்: 2:53
9. உலகின் முதல் நபி யார்? ஆதம்(அலை) அவர்கள். ஆதாரம் : அல்குர்ஆன்: 3:33
10. உலகின் முதல் பள்ளிவாசல் எது? புனித கஃபா பள்ளிவாசல். ஆதாரம்: அல்குர்ஆன் : 3:96
11. உலகில் முதல் முதலில் விவாதம் செய்தவன் யார்? இப்லீஸ்(ஷைத்தான்) ஆதாரம் : அல்குர்ஆன்: 7:12
12. உலகில் முதல் அல்குர்ஆனின் வசனம் எங்கு இறங்கியது? ஹிரா குகையில். ஆதாரம் : அல்குர்ஆன்: 96:1
13. அல்குர்ஆன் முதல் வசனம் அருளப்பட்ட நபி யார்? முஹம்மது நபி(ஸல்) அவர்கள். ஆதாரம் : அல்குர்ஆன் : 96:1
14. அல்லாஹ்வால் இறக்கப்பட்ட முதல் வசனம் எது? அல்அலக். ஆதாரம் : அல்குர்ஆன் : 96:1
15. உலகில் முதல் முதலில் தொழுகை 5 வேளை யாக கட்டாய கடமை என அல்லாஹ் எந்த நபிக்கு அறிவித்தான்? முஹம்மது நபி(ஸல்) அவர்களுக்கு. ஆதாரம்: ஸஹீஹுல் புகாரி : 8/349
16. உலகில் முதல் முதலில் பாங்கு (அதான்) கூறிய வர் யார்? பிலால்(ரழி) அன்ஹு. ஆதாரம் : ஸஹீஹுல் புகாரி : 10:604
17. உலகில் நபி(ஸல்) அவர்களின் மரணத்திற்கு பின் முதல் கலீபா யார்? அபூ பக்கர் ஸித்திக்(ரழி) அன்ஹு
18. நபி(ஸல்) அவர்களின் முதல் மனைவி யார்? அன்னை கதீஜா(ரழி) அன்ஹா
19. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஈமான் கொண்ட முதல் ஆண் யார்? அபூபக்கர் ஸித்திக்(ரழி) அன்ஹு
20. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஈமான் கொண்ட முதல் பெண் யார்? அன்னை கதீஜா(ரழி) அன்ஹா
21. நபி(ஸல்) அவர்களின் காலத்தில் ஹீதான முதல் பெண் யார்? சுமையா(ரழி) அன்ஹா.