தப்லீக் ஜமாஅத்தினரின் தஃலீம் தொகுப்பு நூல்
அமல்களின் சிறப்புகள்…
தொடர் : 30
M. அப்துல் ஹமீத்
ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட அமல் இடம் பெற்றுள்ள விவரம் :
புத்தகம் : அமல்களின் சிறப்புகள் முதலாம் பாகம்
தலைப்பு : திக்ரின் சிறப்புகள்
குறுந்தலைப்பு : திக்ரைப் பற்றிய ஹதீஃத்கள்
பக்கம் : 36:364, ஹதீஃத் எண் 10ம் அதன் விளக்கமும்.
பக்கம் 361, ஹதீஃத் எண் :10 ஹஜ்ரத் அனஸ்(ரழி) அவர்கள் அறிவிப்பதாவது:
அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை மட்டும் நாடி அல்லாஹ்வை திக்ரு செய்வதற்காக ஒரு கூட் டத்தினர் ஒன்று கூடும்பொழுது வானுலகிலிருந்து ஓர் அழைப்பாளர் (வானவர்) “”உங்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டன. உங்களுடைய பாவங்கள் நன்மைகளாக மாற்றப்பட்டு விட்டன” என்று அறிவிக்கிறார் என ரசூல்(ஸல்) அவர்கள் அருளினார்கள். (நூல் :அஹ்மத்)
பக்கம் 363ல் கூறப்பட்டுள்ள விளக்கம் :
மேற்கூறப்பட்டுள்ள தலைப்பு ஹதீஃதில், பாவங்கள் நன்மைகளாக மாற்றப்படுகின்றன என்ற நற் செய்தியும் கூறப்பட்டுள்ளது. இது பற்றி குர்ஆன் ரீஃபில் அல்லாஹுத ஆலா சூரத்துல் ஃபுர்கான் என்ற அத்தியாயத்தின் இறுதியில் முஃமின்களு டைய சில தன்மைகளை கூறியபின், “”இத்தகை யோரின் பாவங்களை அல்லாஹ் நன்மைகளாக மாற்றி விடுகிறான். அல்லாஹ் மன்னிப்போனாக வும், கிருபையாளனாகவும் இருக்கிறான்” என்று கூறியுள்ளான். இந்த ஆயத்திற்கு உலமாக்கள் பல விரிவுரைகள் கூறியுள்ளனர்.
பக்கம் 364ல் குறிப்பிடப்பட்டுள்ள விரிவுரைகளில் மூன்றாவது விரிவுரை :
மூன்றாவது அவர்களுடைய பழக்க வழக்கங்களின் தொடர்பு தீமையான விசயங்களில் ஏற்படுவதற்கு பதிலாக நன்மையான விஷயங்களில் ஏற்பட்டு விடுவதாகும். இதன் விளக்கமானது: மனித னுடைய பழக்க வழக்கங்கள் இயற்கையான குணமாகும். அதனை மாற்ற முடியாது. மலை இடம் பெயரலாம். மனிதனின் இயற்கைக் குணம் மாறாது என்பது பழமொழியாகும்.
விஷத்தைக் கக்குகிறார் நூலாசிரியர் : சூபியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோர், மனிதர்களின் தீய பழக் கங்களை மாற்றிவிடுகின்றனரே, அது எவ்வாறு சாத்தியமாகிறது? என்று கேட்கப்பட்டால், அதற்குரிய பதில் வருமாறு: அவர்கள் மனிதர்களின் இயற்கை குணங்களை மாற்றிவிடுவதில்லை. உதார ணமாக, ஒரு மனிதன் கோபம் உள்ள தன்மை உடையவனாக இருக்கிறானென்றால், அவன் ஷைகுமார்களின் சீர்திருத்தத்தினால் முற்றிலும் கோபம் இல்லாதவனாக ஆகிவிடமுடியாது. அவனுடைய கோபத்தை அல்லாஹ்வுக்கு மாறுபட்ட செயல்களில் திருப்பி விடுகின்றனர். இதற்குமுன், கோபம் வரும்போது மேற்கொண்டிருந்த அநியாயம், அக்கிரமம் ஆகிய தீமைகள் அவனிடமிருந்து ஏற்படுவதற்குப் பகரமாக அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு மாறு செய்யப்படும்பொழுது அங்கு அவனு டைய கோபத்தைப் பிரயோகிக்கக்கூடிய தன்மையை உருவாக்கி விடுகின்றனர். விஷயத்தைக் கக்குகிறா நூலாசிரியர்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள செய்திகள் யாவும், அமல்களின் சிறப்புகள் புத்தகத்தில் ஒரு தலைப்பின் கீழ் உள்ள விசயங்களிலிருந்து, நம் ஆய்வுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக் காட்டப்பட்டுள்ளது. மேலே உள்ளவற்றை மீண்டும் ஒருமுறை படியுங்கள். பாலில் வித்தை கலப்பது போல, குர்ஆன் ஹதீஃத் என்ற பெயரில், குர்ஆன், ஹதீஃதில் இல்லாததை குர்ஆன், ஹதீஃதுக்கு மாறுபட்ட கருத்தை எப்படி திணிக்கிறார்கள் பாருங்கள்.
ஒருவர் குர்ஆன், ஹதீஃதை படித்து தம்மிடம் இருந்த தீய செயல்களை விட்டு விட்டு நேர்வழி அடைந்தால், அவருக்கு அல்லாஹ் ஹிதாயத் கொடுத்துவிட்டான் என்று சொல்வோம். அதுதான் உண்மை. நேர்வழி கிடைத்தபின், குர்ஆன் ஹதீஃதுக்கு மாற்றமாக செய்யப்படும் செயல்களைக் கண்டு அம் மனிதர் வருந்த ஆரம்பிக்கும் தன்மை அவரது உள்ளத்தில் ஏற்பட்டு விட்டால், அல்லாஹ் அவரை மார்க்கத்தில் ஸ்திரப்படுத்தி விட் டான் என்று கூறுவோம் அல்லவா? அதுதானே உண்மை? ஆனால் இங்கே என்ன சொல்லப்படுகிறது? மனமாற்றம் பெற்று அவர் அடைந்த ஹிதாயத்தை கொச்சைப்படுத்தி, சூபியாக்கள், ஷைகுமார்கள் ஆகியோர் அவரை மாற்றியதாக சொல்கிறார் நூலாசிரியர்!
´ஷிர்க்கின் உச்சகட்டம் இங்கே போதிக்கப்படுகிறது: முஸ்லிம்கள் இஸ்லாம் அல்லாத வழிக்குச் செல்ல, திட்டமிட்டு போதிக்கிறார் நூலாசிரியர்! குரு-சிஷ்யன் என்ற மாற்று மத சித்தாந்தத்தை, சூபியாக்கள்/ஷைகுமார்கள்-முரீது என்ற பெயரில் முஸ்லிம்களிடம் திணித்து, இஸ்லாத்தில் இருந்து கொண்டே இஸ்லாத்தை தவறாக சித்தரிக்கும் ஈனச் செயலை-நயவஞ்சக செயலை (முனாஃபிக் தனமாக) செய்கிறார் நூலாசிரியர்!
தயவு செய்து, ஆதரவாளர்கள் கோபப்பட வேண்டாம், சூஃபியாக்கள்/ஷைகுமார்கள்-முரீது என்கின்ற சித்தாந்தம் இஸ்லாத்தில் உண்டா என்று குர்ஆனிலிருந்தும், ஹதீஃதிலிருந்தும் தேடிப் பாருங்கள். ஆனால் அமல்களின் சிறப்புகள் புத்தகத்தில் தேடி விடாதீர்கள். நீங்கள் உண்மையில் அல்லாஹ்வின் மீதும், அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மீதும் நேசம் கொண்டவர்களாயிருந்தால், உலக மாந்தர்களுக்காகவே அல்லாஹ் இறக்கி அருள் புரிந்திருக்கின்ற பரிசுத்த குர்ஆனையும், இந்த நபி சுயமாக எதையும் சொல்லவில்லை என்று அல்லாஹ் கூறியிருக்கும்,இந்த நபி கூறிய ஹதீஃத்களையும் ஆராய்ந்து பாருங்கள். குர்ஆனுக்கு சுய விளக்கம் கூறும் எவரது விளக்கத்தையும் ஏற்காதீர்கள். குர் ஆனுக்கு விளக்கம் கூறுவதற்கு அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டவர் அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் மட்டுமே.
சூஃபியாக்கள், ஷைகுமார்கள், முரீதுகள் என்ற கொள்கைக்கும் இஸ்லாத்துக்கும் எள்ளளவும் சம்பந்தம் இல்லை. உள்ளங்களை புரட்டக்கூடிய வன் தான் மட்டுமே என்று அல்லாஹ் சொல்கிறான். உள்ளங்களை புரட்டுபவர்கள் ஷைகுமார்கள் என்று போதிக்கின்றனர் தப்லீக் ஜமாஅத்தினர். அந்தோ! கை சேதமே! இந்த புத்தகத்தைப் படித்து ஏமாந்து போய்கொண்டிருக்கும் முஸ்லிம்களி டையே எமது ஆய்வுத்தொடரில் உள்ள விசயங் களை எடுத்துச் சொல்லுமாறும், அந்த சகோதரர்களுக்கு நேர்வழி கிடைக்க துஆ செய்யுமாறும் இதைப் படிக்கும் வாசகர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஷைகு-முரீது(குரு-சிஷ்யன்) என்ற சித்தாந்த அடிப்படையில் எண்ணற்ற தரீக்காக்கள் நம் நாட்டில் பரவியுள்ளது. தனது முரீதிடம் உள்ளத்தால் தொடர்பு வைத்து இருக்கிறாராம் ஷைக்கு! அதாவது முரீதின் உள்ளம் ஷைக்கின் கைவசம்! முரிதின் உள்ளத்தில் ஷைக்கு ஊடுருவுகிறார். “”எந்த மனிதனும் மற்ற மனிதனின் உள்ளத்தின் மீது ஆதிக்கம் செலுத்த முடியாது” அல்லாஹ் ஒருவனே அந்த ஆற்றல் பெற்றவன். இது இஸ்லாமிய அடிப்படை!
“”உள்ளங்களைப் புரட்டக்கூடியவனே! என் உள்ளத்தை உனது மார்க்கத்தில் ஸ்திரமாக்கி வைப்பாயாக” என்று அல்லாஹ்வின் இறுதித்தூதர் முஹம்மத்(ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள் என்ற ஹதீஃதை அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஃத் திர்மிதீ, இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ளது.
“”முஃமினுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் இரண்டு விரல்களுக்கிடையியே உள்ளன. அந்த உள்ளங்களை அல்லாஹ் தான் விரும்பியவாறு புரட்டுகிறான்” என்று இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்ற ஹதீஃத் அனஸ்(ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஃத் திர்மிதீ, இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ளது.
மனைவிமார்களிடத்தில் சமமாக அன்பு செலுத்தும் விசயத்தில், உயிருக்கும் மேலான நமது நபி (ஸல்) அவர்கள் என்னதான் கட்டுப்பாடுடன் இருந் தாலும், நமது அன்னை ஆயிஷா(ரழி) அவர்கள் மீது அதிக அளவில் நேசம் கொள்கிறார்கள். அதற்கு பல காரணங்களை அவர்கள் உள்ளம் உணர்ந்து இருந் தாலும், “”யா அல்லாஹ்! எனது சக்திக்கு உட்பட்ட விஷயங்களில் நான் சரியாக நடந்து கொள்கிறேன். எனது சக்திக்கு மீறிவிட்ட காரியங்களில், என்னை குற்றவாளியாக்கிவிடாதே” என்று பிரார்த்திக்கிறார்கள். இந்த ஹதீஃதை அன்னை ஆயிஷா(ரழி) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஃத் திர்மிதீ, அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜ்ஜா, தாரமி ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளன.
நிராகரிப்பவராக இருந்த தனது பெரிய தந்தை மீது, நபி(ஸல்) அவர்களின் உள்ளம் அளவு கடந்த பாசத்தைப் பொழிந்து கொண்டிருந்தது. அபூதாலிப் அவர்கள் மரணிக்கும் வரை ஈமான் கொள்ளவே இல்லை. அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்காக இறுதி வரை நபி(ஸல்) அவர்கள் முயற்சி செய்து வந்ததைக் கண்டித்து அல்லாஹ், “”நபியே! நீர் நேசிப்பவர்களை நிச்சயமாக நேர்வழியில் செலுத்தி விடமுடியாது. ஆனால், தான் நாடியவர்களை அல்லாஹ் நேர்வழி யில் செலுத்துகிறான். மேலும், நேர்வழி பெற்றவர்களை அவன் நன்கு அறிவான்” என்ற 28:55வது வசனத்தை இறக்கி தனது கட்டளையைத் தெரிவிக்கிறான்.
அல்லாஹ்வுடைய தூதருக்கு தனது பெரிய தந்தையின் உள்ளத்தில் ஊடுருவ முடியவில்லை. அழகிய முன்மாதிரி அல்லாஹ்வின் தூதரிடம் இருக்க (அல்குர்ஆன்: 33:21),கண்டவர்களின் பின் னால் ஓடிக்கொண்டிருக்கும் தப்லிக் ஜமாஅத் சகோதரர்களே! நீங்கள் இப்போதாவது சற்று நிதானமாக சிந்தியுங்கள்!