சையித் முபாரக், நாகை.
புகாரி 50 (முதல் பாகம்), முஸ்லிம் 5,7 (முதல் பாகம்) ஆகியவற்றில் இடம் பெற்ற ஹதீஃதை மூன்றுப் பிரிவாகப் பிரித்து, அதன் படிப்பினை களை நாம் பார்ப்போம்.
1. இஸ்லாம் :
தொழுகை, ஜகாத், நோன்பு, ஹஜ் போன்ற கடமைகள் நேரம் நிர்ணயிக்கப்பட்ட கடமைகள். ஒவ்வொன்றையும் அந்தந்த நேரத்தில் நாம் செயல்படுத்திய ஆகவேண்டும். இது தரும் படிப்பினைதான் நேர நிர்வாகம். நேர நிர்வாகத்தை நாம் சரி வர கடைபிடித்தாக வேண்டும் என்பது தான் இது நமக்கு தரும் முக்கியமான படிப்பினை.
அதோடு இந்த நேர நிர்வாகத்தை நாம் சரிவர கடைபிடிக்காததால்தான் ஆரோக்கியம், ஓய்வு ஆகியவற்றில் நாம் ஏமாற்றம் அடைந்து விடுகிறோம் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“”மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட் செல்வங்களின் விஷ்யத்தில் இழப்புக் குள்ளாகி விடுகிறார்கள். 1. ஆரோக்கியம், 2.ஓய்வு என அல்லாஹ்வின் தூதர்(ஸல்) கூறினார்கள். (புகாரி : 6412)
ஆரோக்கியம் இருக்கும்போது தொழுகை போன்ற நமது கடமைகளை மற்றும் செயல்களை நாம் கடைபிடித்து வரவேண்டும். நோயின் போது நமது செயல்களை சரிவர செய்ய முடியாது அல்லவா? வீண் செயல்களில் ஈடுபடுவதும் நமது ஆரோக்கியத்தைக் கெடுக்கும் என்பதும் இதிலிருந்து நாம் பெறும் படிப் பினை.
ஓய்வு கிடைக்கும்போது நாம் அதனை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இரவு சரியான நேரத்தில் தூங்க வேண்டும். அதிக நேரம் இரவில் விழித்திருப்பதும் வீண் விளையாட்டுகளில் ஈடுபட்டுக் கொண்டி ருப்பதும் நமக்கு நாமே தேடிக் கொள்ளும் தீங்கு. உடலுக்கு ஊறு விளைவிக்கும் செய லாகும் என்பதும் நமக்குக் கிடைக்கும் படிப் பினை ஆகும். ஆகவே ஓய்வையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
2. ஈமான் :
நமது நம்பிக்கைகளும் அதிலும் மிக முக் கியமான “”நீங்கள் வழிபடும், நினைக்கும் கடவுள்கள் எல்லாம் கடவுள் இல்லை; அந்த ஒரே ஒரு கடவுளான அல்லாஹ்வைத் தவிர” என்ற நமது நம்பிக்கை, நமக்கு கண் ணியத்தை, நமகு தன்னம்பிக்கையை, நமது சுயமரியாதையை, அல்லாஹ்விற்கு மட் டுமே அடிபணிவது யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை என்ற தைரியத்தை, அச்சமின்மையை; உண்மையாளர்களாக இருக்க வேண்டும் என்பது கடமை யுணர்வை, நேர்மையைப் போன்ற படிப் பினைகளைத் தருகிறது. பிரபஞ்சமே இறை வனுடைது என்பது நமது பார்வையை விரிவடையச் செய்கிறது. இதனால் குறுகிய மனப்பான்மை தவிர்க்கப்படுகிறது. நன்மை செய், தீமை தவிர் என்பன போன்ற பல படிப்பினைகளைத் தருகிறது.
இஹ்ஸான் :
அல்லாஹ் நம்மைப் பார்த்துக் கொண் டிருக்கிறான் என்பது நாம் தவறு செய்யக் கூடாது என்ற படிப்பினையையும், நன்மையை ஏவி, தீமையைத் தடுக்க வேண்டும் என்ற படிப்பினையையும் தருகிறது.