மர்யம்பீ, குண்டூர்,
1. இறைவன் பெயர் வைத்து அனுப்பிய நபி யார்?
ஜகரிய்யா(அலை) அவர்களின் மகன் “”யஹ்யா(அலை)” 19:7
2. மூமின்கள் மீது நேரம் குறிக்கப்பட்ட கடமை எது?
தொழுகை : 4:103
3. கணவன் இறந்துவிட்டால் மனைவி எத்தனை நாட்கள் இத்தா இருக்க வேண்டும்?
4 மாதம் 10 நாட்கள் : 2:234
4. சொர்க்கத்திற்கும், நரகத்திற்கும் இடையே உள்ள தடுப்புச் சுவரின் பெயர் என்ன?
அல்அஃராப் : 7:46
5. எந்த நபியுடன் சேர்ந்து மலைகளும், பறவைகளும் துதி(தஸ்பீஹ்) செய்திட உத்தர விட்டான்?
தாவூத்(அலை) 21:79
6. நரகத்தில் நுழைவோருக்கு உதாரணமாக எந்த இரு நபிமார்களின் மனைவிகளை பற்றி அல்லாஹ் கூறினான்?
நூஹ்(அலை) லூத்(அலை) 66:10
7. நூஹ்(அலை) அவர்களுக்கு கட்டுப்படாத வர்களை அல்லாஹ் எப்படி அழித்தான்?
வெள்ளத்தில் மூழ்கடித்து 7:64
8. தொட்டில் குழந்தையாக இருந்து பேசிய நபி யார்?
ஈஸா(அலை) 3:45, 46
9. மறுமை நாளில் யாருடைய கழுத்தில் வளையங்கள் போடப்படும்?
கஞ்சன்(உலோபி) 3:180
10. தெளிவான சொல் ஆற்றல் கொடுக்கப் பட்ட நபி யார்?
தாவூத்(அலை) 38:20
11. ஆது சமூகத்திற்கு தூதராக அனுப்பப்பட்ட நபி யார்?
ஹுத்(அலை) : 7:65
12. யாருடைய காலத்தில் சனிக்கிழமை மீன் பிடித்தவர்களை அல்லாஹ் குரங்குகளாக மாற்றினான்?
மூஸா(அலை) 7:163,166
13. ஸுரத்துல் பாத்திஹாவுக்கு “”ஸப்அம் மினல் மஸானி” என்ற பெயர் கொடுக் கப்பட்டுள்ள இறை வசனம் எது?
அத்தியாயம் : 15, வசனம் : 87
14. யூதர்கள் அல்லாஹ்வின் மகன் என எந்த நபியை கூறினார்கள்?
உஸைர்(அலை) 9:30
15. அல்லாஹ்வின் கை கட்டப்பட்டுள்ளது என்று கூறியவர்கள் யார்?
யூதர்கள் : 5:64
16. கிறிஸ்துவர்களை அல்லாஹ் திருமறையில் எந்த பெயர் கொண்டு குறிப்பிடுகிறான்?
நஸாராக்கள் : 2:62
17. நயவஞ்சகர்களுக்கு பாரமான தொழுகை எது?
சுபுஹ்(பஜர்) இஷா(இரவு) புகாரி : 657
18. அல்குர்ஆனில் தொழுகையை பெயராக கொண்ட ஸுரா எது?
ஜும்ஆ (வெள்ளிக்கிழமை) ஸுரா, அத்தியாயம்: 62
19. கனவுகளுக்கு விளக்கம் அளிக்கும் நபி யார்?
யூசுப்(அலை) 12:101
20. நபி(ஸல்) அவர்கள் எந்த இரண்டு வியங் களில் முதியவரின் மனம் கூட இளமையாகவே இருக்கும் என்று கூறினார்கள்?
1. இம்மை வாழ்வின் மீதுள்ள பிரியம்
2. நீண்ட நாள் வாழவேண்டும் என்ற ஆசை. புகாரி : 6420
(இன்ஷா அல்லாஹ் தொடரும்….)