அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்…

in 2017 டிசம்பர்

தொடர் – 4
தோழர் ஹம்துல்லாஹ்

“”அல்லாஹ்வின் திருநாமங்கள்” என்ற தொடரின் முழுமுதல் திருப்பெயரான “”அல்லாஹ்” என்பதின் பொருளென்ன? இப் பெயர் சொல் அரபி மொழி ரீதியாக எப்படி உருவானது, அல்லாஹ்வைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும் என்பதைப் பற்றி தெளிவாக பார்த்தோம். நம் உள்ளத்தால் உணர முடியாத வன். நம் பகுத்தறிவால் புரிய முடியாதவன். அதற்கு தமிழில் “”கட+வுள்” என பொருள் கொள்வது சால சிறந்தது என்பதையும் விளங்கி னோம். அவனைப் பற்றி தெளிவாக அறிய அவனே நமக்கு அருள்மறை அல்குர்ஆனில் கூறியபடி அவனின் படைப்பினங்களை நம் உயர்ந்த பகுத்தறிவால் பகுத்தறிய வேண்டும் என்பதையும் அறிந்தோம். அதனடிப்படையில் அல்லாஹ்வின் நேர்வழி மார்க்கமான இஸ் லாத்தை இப்பூமியில் நிலைநிறுத்த இறுதி இறைத்தூதராக முஹம்மது(ஸல்) அவர்கள் அனுப்பப்பட்டதையும் விளக்கினோம்.

“”அல்லாஹ்” என்பது அன்றைய அரேபியர் களிடையே புழக்கத்திலிருந்தது. அவர்களுக்கு மிகவும் பரிச்சயமானது, எதனையும் அவர்கள் “”பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம” என்றே ஆரம் பித்தனர் என்பதையும் பற்பல ஆதாரங்களுடன் கண்டோம். ஆனால், அவர்கள் தங்களிடையே பற்பல சிலை வடிவிலான கடவுள்களை உரு வாக்கி அதற்கு பற்பல இடு பெயர்களை வைத் திருந்தாலும், “”பிஸ்மில்லாஹி அல்லாஹும்ம” என்று ஆரம்பம் செய்தாலும் சிலை வடிவிலான கடவுள்களை அவரவர்களின் “”இரட்சகனா கவே (ரப்பாகவே)” பாவித்தனர். அவற்றினை அவரவர்களின் கடவுள்களாக வரித்துக் கொண் டனர். அவை உயர்ந்த, மிகப் பெரியவன் அல் லாஹ்விற்கு உதவும் குட்டி கடவுள்களாகவும், அல்லாஹ்வின் அருகில் அழைத்து செல்லும் (வசீலாஹ்) உபகரணமாகவும் நினைத்து அவை களை வழிபட்டால், அவை அவர்களை அல் லாஹ்விடம் பரிந்துரை செய்யும், தாங்கள் ஈடேற்றம் பெறலாம் என எண்ணி வாழ்ந்து வந் தனர். இது இன்றைய இந்திய சிலை வணங்கி களான இந்துக்களின் “”கடவுள் கோட்பாடு” போன்றது என்றால் மிகையாகாது. இவர்களும் “”ஒன்றே குலம்! ஒருவனே தேவன்” எனக் கூறிக் கொண்டு ஏகன் அல்லாஹ்விற்கு இணை துணைகளை பற்பல சிலை வடிவில் கடவுள் களாக வணங்குவதைக் காண்கிறோம்.

இந்திய இந்துக்கள் அனுமான் என்ற பெயரில் குரங்கு; கோ மாதா என்ற பெயரில் மாடு; விநாயகரின் வாகனம் என்றளவில் எலி போன்ற வற்றை கடவுள்களாக்கி வழிபடுவதை போல அன்றைய அரபிகள் “”ஃகுராப்” = காகம், “ஃதலப் = நரி, “”அஸத்” = புலி, “”கல்பு” = நாய் போன்ற வற்றை தங்களின் இனம், குல, கோத்திர கடவுள்களாகக் கொண்டு வழிபட்டு வந்தனர். அதனை தங்களின் “”இரட்சகன் = ரப்பு” என அழைத்தனர். இப்பெயரில் தங்களின் இனம், குலம், கோத்திரங்கள் “”பனூ ஃகுராப்” = குரங்கு கோத்திரம் “”பனூ ஃதலப்” = நரி குலத்தார், “”பனூ அஸது” = புலி வம்சத்தினர், “”பனூ கல்பு” = நாய் கூட்டத்தினர் என கண்ணியமாக அழைக்கப்பட வேண்டுமென விரும்பினார் கள். இக்கடவுள்கள் மற்ற குல, இனத்தாரால் கேலி, கிண்டல் செய்யப்பட்டாலோ, அவமதிக் கப்பட்டாலோ அவர்களை எதிர்த்து நீண்ட கால போர்கள் நிகழ்ந்தன. மொழி ரீதியாக உல கில் தாங்களே நன்றாக பேசத் தெரிந்தவர்கள் என்ற அர்த்தத்தில் தங்களை “”அரபிகள்” என் றும், மற்ற மொழி பேச தெரியாத “”அஜமிகள்= ஊமைகள்” என்றும் ஆணவத்துடன் வாழ்ந்து வந்தார்கள். இதனை நாம் பண்டைய அரபு சரித்திரங்களில் பரவலாக காண முடிகிறது. அவர்களின் சமுதாய கலாச்சார பண்பாட்டு வாழ்வு “”மது, மாது, போர், கவிதை” (நிஷ்ஐe, நிலிதுழிஐ, நிழிr & Pலிeமிrதீ) என்பதை முக்கிய குறிக் கோளாக இருந்ததாக பெரும் வரலாற்று ஆசிரி யர்கள் தங்களின் சரித்திர நூல்களில் பதிவு செய் துள்ளனர்.

அன்றைய உலகளவில் முழு அரேபிய தீபகற் பமும் மத, மார்க்க, ஒழுக்க, கலாச்சார பண் பாட்டு ரீதியாக மிக மோசமாக களங்கப்பட்ட, வீணான காலக்கட்டத்தில் எல்லாமறிந்த அல்லாஹ் அம்மக்களை திருத்தி, நேர்வழி காட்ட அவனுடைய இறைத்தூதராக, முழு உலகிற்கே ஓர் உன்னத அருட்கொடையாக முஹம்மது(ஸல்) அவர்களை அனுப்பி வைக்கி றான். இந்த நிகழ்வை அல்லாஹ் அவனுடைய திருவாக்காக அல்குர்ஆனில் கூறுவதைக் காணீர்.
“”மக்கள் தாங்களே தங்களின் கரங்களால் தேடிக் கொண்ட தீய செயல்களால் பூமியிலும், கடலிலும் நாசமும், குழப்பமும் தோன்றின”.
(அல்குர்ஆன் : 30:41)

தங்களை வீரம், தீரம், விவேகமிக்கவர்களாக வும், கலாச்சார, பண்பாட்டு ரீதியில் உயர்ந்த வர்களாகவும், வாய் சவடால் ரீதியில் (அரபிகள்) பேசத் தெரிந்தவர்களாகவும், கவிதை புனை வதில் பெரும் வல்லுனர்களாகவும், பகுத்தறிவு ரீதியில் உலகளவில் சிறந்தவர்களாகவும் தங்க ளைத் தாங்களே பிதற்றி, பீற்றிக் கொண்டிருந்த அம்மக்களுக்கு, அல்லாஹ் இப்ராஹீம்(அலை) அவர்களின் பிரார்த்தனையை ஏற்று அங்கீகரித் தது போலவே, ஏகன் ஒருவன் “”அல்லாஹ்” மட் டுமே! என்பதை தெளிவாக உபதேசித்தார்கள். அதற்கென அவரை முதன் முதலாக தேர்ந் தெடுக்க வைத்தது அல்லாஹ்வின் முழு பரிணா மத்தையும் காட்டும் என்ற “”அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்” என்ற வழியைத்தான் என்பதை நாம் அல்குர்ஆனை கூர்ந்து ஆராயும் போது அறிய முடிகிறது.

“”அல்லாஹ்” என்ற சொல் நம் அருள்மறை அல்குர்ஆனில் சுமார் 3,697 இடங்களில் வருகி றது. அல்குர்ஆனில் இச்சொல் இடம் பெறாத பக்கமே கிடையாது. அகில உலகத்தையும் படைத்து, போ´த்து, பாதுகாத்து இரட்சிப்ப வன் ஏகன் ஒருவன் “”அல்லாஹ்” மட்டுமே என அறிந்தோ, அறியாமலோ, புரிந்தோ, புரியா மலோ ஏற்றுள்ள இன்றைய ஒவ்வொரு முஸ்லி மும் தன் தினசரி அன்றாட வாழ்வில், அடிக்கடி “”அஊதுபில்லாஹ்”, “”பிஸ்மில்லாஹ்”, “”அல் லாஹூ அக்பர்”. அல்ஹம்துலில்லாஹ்”, அஸ்தஃ பிருல்லாஹ்”, “”சுப்ஹானல்லாஹ்” என்று சரளமாக உபயோகிப்பதைக் காணலாம்.

ஆனால், அன்றைய அரபி மக்கள் அல் லாஹ்வை தங்களின் மிகப் பெரும் கடவுளாக ஏற்றிருந்தாலும் அவர்களின் அன்றாட வாழ் வில் அல்லாஹ்வை நினைத்தார்களா? என்றால் இல்லை என உறுதியாக கூற முடியும். அல் லாஹ்வை மறந்து அல்லாஹ்வின் தரத்திற்கு அடுத்த நிலையில் அவர்கள் கண்ணியப்படுத்தி வழிபட்ட பெரும் குட்டி கடவுள்களான “”லாத் ஃஉஜ்ஜா, மனாத்” போன்றவற்றை “”இலா ஹுனா லாத், ரப்புனா லாத்”, “”இலாஹுனா ஃஉஜ்ஜா, ரப்புனா உஜ்ஜா”, இலாஹுனா மனாத், ரப்புனா மனாத்”. (பொருள் : எங்கள் கடவுள் லாத், உஜ்ஜா, மனாத் என்றும், எங்கள் இரட்சகன் லாத், உஜ்ஜா, மனாத்) என்றும் அழைக்க கூடியவர்களாக, பிரார்த்திக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். காரணம்: அவர் கள் கடவுளைப் பற்றிய தெளிவான அறிவற்ற, ஞானமற்றவர்களாக இருந்தனர் என்பது தெளிவாகிறது. இது மிகப் பெரிய களங்கம், கசடு என்றால் மிகையாகாது. இக்களங்கத்தை, கசடை நம் இறுதித் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் எம்முறையில் அல்லாஹ் அங்கீகரித்த படி பரிசுத்தப்படுத்தினார்கள் என்பதைப் பார்ப்போம்.

நபித்துவம் கிடைத்த ஆரம்ப 13 வருடங் களில் உள்ளத்தால் உணர முடியாத நம் சிற்றறி வுக்கு எட்டாத, மேம்பட்ட பகுத்தறிவுக்கு புலப்படாத அல்லாஹ்வைப் பற்றி தெளி வாக்க, எழுத படிக்க தெரியாத (உம்மி) நபி யான முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ் கற்று தந்தபடி அதே போன்ற உள்ளத்தால் உணர முடியாத நம் சிற்றறிவுக்கு எட்டாத, மேம்பட்ட பகுத்தறிவுக்கு புலப்படாத மேலும் பல செய்திகளை அம்மக்கள் கதைகளாகவும், செவி வழி செய்திகளாகவும் தெரிந்து வைத் திருந்ததை சரியான உண்மையான சரித்திர, வர லாற்று சான்றுகள் அடிப்படையில் அல்லாஹ் வின் அத்தாட்சிகளாகக் காட்டி விளக்கினார் கள். அந்நிகழ்வுகளின் காரணகர்த்தா பொறுப் பாளி, எல்லாம் அறிந்த ஏகன் அல்லாஹ்வே! என்ற நம்பிக்கையை அவர்கள் உள்ளத்தில் விதைத்து, அவனை மட்டுமே கடவுளாக, ஏக இரட்சகனாக ஏற்க வேண்டும். அவனது ஆணைக்கு மட்டுமே கட்டுப்பட வேண்டும். அவனை மட்டுமே வழிபடவேண்டும். இதுவே இஸ்லாத்தின் அடிப்படையான(ஈமான்) நம் பிக்கை என்பதை அல்லாஹ்வின் அருள்வாக்கு களான இறுதி மறை அல்குர்ஆன் மூலம் அறிய, வைத்தார்கள்.
அவ்விரண்டு செய்திகள் யாவை?

1. நம் இவ்வுலக வாழ்வின் முடிவில் மரணித்து நம் நிலை என்ன? அதாவது மறுமை வாழ்வைப் பற்றிய நம்பிக்கை.
2. நம் வாழ்வில் தினசரி நிகழும் நல்லது, கெட்டது, நன்மை, தீமை, ஏற்றம், இறக்கம், உயர்வு, தாழ்வுக்கு பொறுப்பாளி யார்? அதா வது நம் செயல்வினையின் காரணகர்த்தா யார்? என்ற விதி, ஊழ்வினை பற்றிய நம்பிக்கை.

Previous post:

Next post: