அல்லாஹ்வின் அழகிய திருநாமங்கள்…

in 2018 ஜனவரி

தொடர் – 5
தோழர் ஹம்துல்லாஹ்
(2017 டிசம்பர் தொடர்ச்சி…)

அவ்விரண்டு செய்திகள் யாவை?
1. நம் இவ்வுலக வாழ்வின் முடிவில் மரணித்து நம் நிலை என்ன? அதாவது மறுமை வாழ்வைப் பற்றிய நம்பிக்கை.

2. நம் வாழ்வில் தினசரி நிகழும் நல்லது, கெட் டது, நன்மை, தீமை, ஏற்றம், இறக்கம், உயர்வு, தாழ்வுக்கு பொறுப்பாளி யார்? அதாவது நம் செயல்வினையின் காரணகர்த்தா யார்? என்ற விதி, ஊழ்வினை பற்றிய நம்பிக்கை.

இவ்விரண்டு செய்திகளும் நம் மனித உள்ளத்தால் உணர முடியாத நம் சிற்றறிவுக்கு எட்டாத, மேன்மட்ட பகுத்தறிவுக்கு புலப் படாத வி­யங்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது. நபி(ஸல்) அவர்கள் ஒரு முஸ்லிமின் கட்டாய இறை நம்பிக்கைகள் (ஈமான்) என ஆறு வி­யங்களை விளம்பினார்கள்.

1. அல்லாஹ் ஒரே ஒருவன் என்ற ஏகத்துவ நம்பிக்கை அடுத்து
2. அவனால் படைக்கப்பட்ட வானவர் கள் மீது நம்பிக்கை
3. இறைத் தூதர்களைப் பற்றிய நம்பிக்கை
4. அத்தூதர்களுக்கு அல்லாஹ்வால் அரு ளப்பட்ட இறை நெறிநூல்களைப் பற் றிய நம்பிக்கை.
5. நம் இவ்வுலக வாழ்வின் இறுதியில் நிச்ச யமாக சந்திக்கவிருக்கும் மரணத்திற்கு பின் நிகழவிருக்கும் மறுமை வாழ்வு பற்றிய நம்பிக்கை.
6. நமக்கு இவ்வுலக வாழ்வில் தினசரி நிகழும் நல்லது, கெட்டது, நன்மை, தீமை, ஏற்றம், இறக்கம், உயர்வு, தாழ் வுக்கு பொறுப்பாளி அல்லாஹ் ஒரு வனே! அவனால் விதிக்கப்பட்ட ஆணைப்படியே அனைத்தும் நிகழ்கிறது என்ற செயல்வினைகளின் காரண கர்த்தா அல்லாஹ் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை.

இந்த ஆறு வி­யங்களில் 2 முதல் 4 வரை யிலான மூன்று வி­யங்களான வானவர் கள், இறைத்தூதர்கள், இறைநெறிநூல் பற்றி நம்மால் ஓரளவு உள்ளத்தாலும், மன தாலும், அறிவாலும் அறியவும், புரியவும் விளங்கவும் முடியும். ஆனால் மீதியுள்ள 1வது அல்லாஹ், 5வது நம் மரணத்திற்கு பின்னுள்ள மறுமை நிலை 6வது ஊழ்வினை பற்றி அவ்விதமாக அறியவோ, புரிந்து கொள்ளவோ வாய்ப்பில்லை. எனவே முதலாக இம்மூன்று செய்திகளை அல்லாஹ் வின் கட்டளைப்படி அம்மக்களுக்கு விளக்கினார்கள்.

அல்குர்ஆனில் 114 அத்தியாயங்கள் (சூராக்கள்) இருப்பதை முஸ்லிம்கள் அனைவரும் நன்கு அறிவோம். அதில் சரிபாதிக்கு மேற்பட்ட 86 அத்தியாயங்கள் (சூராக்கள்) மக்காவில் அருளப்பட்டது. மீதி 28 அத்தியாயங்கள் (சூராக்கள்) மட்டுமே மதினாவில் அருளப்பட்டது. மக்காவில் இறக்கப்பட்ட பெரும்பாலான அத்தியாயங்கள் (சூராக்கள்) மிகமிக சிறியதாக அதிகபடியாக 1 முதல் 99 வரையான ஈரிலக்க எண் களைக் கொண்ட வசனங்களாக இருப்ப தையும் கவனியுங்கள்.

அவற்றில் பற்பல செய்திகளை குறிப்பாக கோடிட்டு, தெளிவின்றி, விளக்கமின்றி இருக்கும், “”அல்லாஹ்” என்ற சொல் மிக அரிதாகவே இடம் பெற்று, அதிகமாக அம் மக்கள் சர்வ சாதாரணமாக அழைக்கும் “”ரப்பு”=இரட்சகன் என்ற பதமும், மேலும் அல்லாஹ்வின் படைப்பின அத்தாட்சி களை மட்டும் கூறி அதனை சிந்தித்து ஒரே “”ரப்பான” அல்லாஹ்வை அறிந்து கொள்ள வழிவகுத்திருப்பதையும் காணலாம்.

உதாரணமாக அல்குர்ஆனில் நம்மால் முப்பதாவது பகுதி (ஜூஸ்உ) என அழைக் கப்படும் கடைசி பகுதியை நீங்களே புரட்டி புரட்டிப் பாருங்கள் உண்மை விளங்கும். கடைசி முப்பதாவது பகுதி (ஜுஸ்உ)வில் சுமார் 563 இறை வசனங்களைக் கொண்ட 37 அத்தியாயங்களைக் காணலாம். இவற் றில் 98,99110 என்ற மூன்று அத்தியாயங்க ளில் 11 வசனங்களைத் தவிர அனைத்தும் மக்காவில் அருளப்பட்டது.

இப்பகுதியில் தான் நம் ரசூல்(ஸல்) அவர் களுக்கு அருளப்பட்ட துவக்கமான முதல் இறை வசனங்கள் 96வது அத்தியாயம் “”அல்-அலக்” (தாயின் கற்பப்பையில் மனித படைப்பின் துவக்க நிலை) இடம் பெற்றுள் ளது. இதில் மொத்தம் 19 வசனங்களிலிருந் தாலும் முதல் ஐந்து வசனங்கள் மட்டுமே முதன் முதலாக இறக்கப்பட்டது. மீதி 14 வசனங்கள் அல்லாஹ்வின் ஆணைப்படி ஒருசில அத்தியாயங்கள் இறங்கி, அல்லாஹ்வைப் பற்றி ஓரளவு அறிமுகப்படுத்திய பின் கூறப்பட்டவைகளிலிருந்து பிரித்து இணைக்கப்பட்டது. எனவே முதல் ஐந்து வசனங் களின் கூற்றை கூர்ந்து பாருங்கள்.

பொருள் : உன்னைப் படைத்த உன் இரட்ச கனின் திருநாமம் கொண்டு ஓதுவீராக! அவன் மனிதனை “”ஃஅலக்” (ஒட்டி தொங்கும்) நிலையில் படைத்தான்; கண்ணிய மிக்க உன் இரட்சகன் கூறும்படி ஓதுவீராக! அவனே எழுதுகோலைக் கொண்டு கற்றுத் தந்தான்; மனிதனுக்கு அறியாதவற்றை போதித்தான். (அல்குர்ஆன்:96:1-5)

“”அல்லாஹ்” என்ற சொல்லை கூறாமல் அன்றைய அரபு மக்களிடையே மிகவும் புழக்கத்திலிருந்த “”ரப்புக்க” = உன் இரட்ச கன் என்றும், அவனே படைத்தான். கண்ணி யமிக்க உன் இரட்சகன் எழுத்தறிவித்தவன், மற்றும் மனிதன் அறியாதவற்றையும் அவனே அறிவிப்பவன் என அவனுடைய மேம்மட்ட படைப்பு, அறிவியல் ஞானம், பண்புகளைக் கூறியே தன்னை அறிமுகப் படுத்துகிறான்.

அடுத்து அதே அத்தியாயத்தின் மீதி பதி னான்கு வசனங்களையும் பாரீர். இச்செய் தியை கூறியதால் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ஆணவக்கார அபூஜஹல் மற்றும் அவனுடைய “”தாருன்-நத்வா” நபர்களால் கடுமையாக வதைக்கப்பட்டதையும் குறிப்பிட்டு அவர்களுக்கு கிடைக்கவிருக்கும் தண்டனையை தெளிவாக்குகிற வரை தன்னை “”இரட்சகன்” என்றே கூறி முடிவில் அல்லாஹ் அனைத்தையும் பார்க்கிறான். அக்கொடியோருக்கு கடும் தண்டனை நரகம் உண்டு. எனவே நீர் அவர்களுக்கு அடிபணியாமல் உன் இரட்சகனான என்னை வழிபடு என முடிக்கிறான்.

அதாவது ஆரம்பமாக இறக்கப்பட்ட பெரும்பாலான வசனங்கள் மரணத்திற்கு பின்னுள்ள மறுமை நிலை, இவையனைத் தும் அவனின் முடிவான விதி, இதன் பொறுப்பாளி, காரணகர்த்தா உன் “”ரப்பு” இரட்சகன் அல்லாஹ் என்றே முடிப்பதை சொல்லாமல் சொல்லியிருப்பதைக் காண லாம். பற்பல கடவுள் கோட்பாடுகளில் வாழ்ந்த அன்றைய அரேபியர்களிடையே வாழ்ந்த நல்லடியார் முஹம்மது பின் அப்துல்லாஹ் அவர்களும் தன்னுடைய “”ரப்பு” = இரட்சகன் யார்? என்று அறியவே அவர் முற்பட்டிருக்க வேண்டும்.

இக்கூற்றை முஹம்மத் (ஸல்) அவர்கள் நபித்துவம் கிடைத்த ஆரம்பத்தில் ஒருசில மாதங்கள் இறைச் செய்தி வராமல் தடைப் பட்டு தடுமாறியபோது அவரின் பழைய நிலைகளைக் கூறும் சரித்திர நிகழ்ச்சியில் = மக்காவில் இறங்கிய அத் தியாயம் 93ல் = அல்லாஹ் என்ற சொல்லை பயன்படுத்தாமல் “”ரப்புக்க=உன் இரட்சகன் உன்னை கைவிடவுமில்லை; வெறுக்கவுமில்லை என ஆரம்பித்து வசனம் 6 மற்றும் 7ல் அல்லாஹ் அறிவிப்பதை கவனியுங்கள்.

“”நீர் அனாதையாக இருக்க உமக்கு நாம் புகழிடமளிக்கவில்லையா? நீர் வழி அறியாமல் தடுமாறிய நிலையில் உமக்கு நாம் நேர்வழி காட்டவில்லையா?
(அல்குர்ஆன்:93:6,7)

அரபியில் “”ழளாலத்” என்றால் “”வழி கேடு” என்று பொருள். ரசூல்(ஸல்) அவரது பிறப்பு முதல் எவ்விதமான வழிகேட்டிலும் இருந்ததில்லை என்பதை அவருடைய முழு வரலாறு அறிந்தவர்களுக்கு மட்டுமே புரி யும். இவ்வசனத்தில் “”ழளாலத்” என்றால் எது சரியான “”ரப்பு” என அறியாத நிலையில் இருந்ததையே அல்லாஹ் குறிப்பிடுகிறான். இந்த அத்தியாயத்திலும் “”அல்லாஹ்” என்ற சொல் பயன்படுத்தப்படவே இல்லை. ஆனால் பெரும்பாலான திருகுர்ஆனின் தமிழ் மொழி பெயர்ப்புகளில் “”ரப்பு” என்ற சொல்லுக்கு “”இறைவன்” என அர்த்தம் கூறியிருப்பதைக் காணலாம். இறைவன் என்ற தமிழ் சொல்லுக்கு சரியான அரபி பொருள்: மாலிக்=அரசன், இறைவன் என்பதாகும். “”ரப்பு” என்றால் இரட்சகன், படைத்து, போ´த்து, பாதுகாத்து, அனைத்தையும் வாரி வழங்குபவன் எனப் பொருள். இக் குணங்கள் அல்லாஹ்விற்கு இருப்பதை நன்கறிந்த நம் அரபி பண்டிதர்கள் “”ரப்பு” என்பதற்கு இறைவன், கடவுள், அல்லாஹ் எனக் கூறுகிறார்கள் போலும், யாமறியோம். ஆனால் இதே பொருளில் தான் அன்றைய அரேபியர்களும் பொருள் கொண்டனர் என்பதை அறிய தருகிறோம். இன்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் “”ரப்பு” என்பது அல்லாஹ்வை மட்டும் குறிக்குமென வாதிடுவோரும் உண்டு. எனவே நாம் குர்ஆனின் அடிப்படையில் “”ரப்பு” என்பதற்கு என்ன பொருள் என்பதை காண்போம்.

அல்லாஹ் நம்மை பெற்றெடுத்த தாய், தந்தைக்குரிய மரியாதை, கண்ணியம் கொடுக்க வேண்டும், அவர்களை “”ச்சீ” என்று கூட கூறி விடக்கூடாது என ஆணை யிட்டு, ஏனெனில் அவர்கள் உங்களை பிறப்பு முதல் சின்னஞ் சிறிய சிசு நிலையிலி ருந்து வளர்ந்து வலிமையான வாலிபனா கும் வரை போஷித்து, பாதுகாத்து, நாம் வேண்டிய அனைத்தையும் வாரி வழங்கி இரட்சித்த “”ரப்பு” என்றும், அவர்களுக்காக நாம் ஏற்றுள்ள அகில உலக ரப்பான அல் லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டுமென அத்தியாயம் (சூரா) 17ல் வசனம் (ஆயத்து) 24ல் கீழ்க்கண்டபடி நமக்கு ஆணையிடு வதைக் காணீர்.

பொருள் : என் இரட்சகனே! என்னை சிறு வயதிலிருந்து இரட்சித்து வளர்த்த என் பெற்றோருக்கு அருள் புரிவாயாக! என வேண்டுவாயாக! (அல்குர்ஆன்: 17:24)

எனவே, “ரப்பு” என்ற சொல்லை நம்மி டையே சில குறிப்பிட்ட கடமைகளை, செயல் களை வழமையாகக் கொண்டு இரட்சிப்பவர்களையும் “ரப்பு” = இரட்சிப் பவர்கள் எனக் கூறலாம் என்பது புலனா கிறது. இன்றும் அரேபியர்கள் வீட்டை பாது காத்து தன் கணவன், பிள்ளைகளை கவ னித்து கடமையாற்றும் வீட்டு தலைவி, மனைவி, தாய் போன்றோரை “”ரப்பத்துல் பைத்” = வீட்டை இரட்சிப்பவன் என மொழி வழக்கில் கூறுவதைக் காணலாம்.

ஆனால் இந்த இரட்சிப்புகள் வரை யறைக்குட்பட்டது. நம் அகில உலக ரப் பான அல்லாஹ்வின் “”இரட்சிப்பு” வரை யறைகளைக் கடந்தது, அளவிட முடியாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் அல்லாஹ் தன் இறுதித் தூதர்(ஸல்) அவர்களுக்கு அருளிய ஆரம்ப வசனங்களில் தன்னை அல்லாஹ் என அழைப்பதை விட அம்மக்களிடையே புழக் கத்திலிருந்த “ரப்பு” என்ற சொல்லை உப யோகித்து “”ரப்புன்-நாஸ்”= மக்களின் இரட்சகன், ரப்புல்-ஃஆலமீன்= அகில உலக இரட்சகன்; “”ரப்புஸ்-ஸ்மாவாத்தி வல்-அரழ்” = வானங்கள் மற்றும் பூமியின் இரட் சகன்; “”ரப்புல்-மஸ்ரிகைன் வால்-மஃக்ரி பைன்” = இரு கிழக்குகள், மேற்குகளின் இரட்சகன்; “”ரப்புல்-மஷாறிஃக் வல்-மஃகாரிப் = பற்பல கிழக்குகள், மேற்குக ளின் இரட்சகன் என தன்னை அறிமுகப் படுத்துகிறான் போலும். எல்லாம் நன்கறிந்த வன் ஏகன் அல்லாஹ் மட்டுமே!

மதீனாவில் அருளப்பட்ட அத்தியாயங்கள் (சூராக்கள்) மிகவும் நீண்ட அத்தியாயங்களாகவும் (சூராக்களாகவும்), மக்கத்து அத்தியாயங்களில் (சூராக்களில்) கோடிட்டு குறிப்பிட்டதின் தெளிவாகவும், விளக்கமாகவும் விவரித்திருப்பதைக் காணலாம்.

Previous post:

Next post: