எதிர்பாருங்கள்!

in 2018 ஜனவரி

அகில உலகங்களின் இறைவனாகிய அல்லாஹ், இந்த உலகையும், அதில் மனித ஜின் வர்க்கம் உட்பட எல்லா உயிரினங்களையும், உயிரற்றவைகளையும் படைத்து, அனைத்தையும் உலகில் தற்காலிகமாக வாழச் செய்து, பிறகு உலக முடிவு நாளுக்காக உயிரற்றவைகளை அவன் விருப்பிற்கேற்ப அழித்து, உயிருள்ளவைகளை மரணிக்கச் செய்து, மீண்டும் ஒரு தற்காலிக வாழ்வை மண்ணறையில் கொடுத்து, பிறகு மரித்தவர்கள் அனைவரையும் உயிர் கொடுத்து எழுப்பி, அதன் பின் உலகில் வாழ்ந்து முடித்த வாழ்க்கையைப் பற்றிய விசாரணை நாளை ஏற்படுத்தி, விசாரணையின் முடிவாக பாவங்கள் செய்த ஈமான் கொண்ட பலரின் பாவங்களை மன்னித்து அவர்களுக்கு சுவர்க்கத்தில் நிரந்தர வாழ்வைக் கொடுத்து சுகம் அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்து, ஈமான் கொள்ளாதவர்களுக்கு நரகில் நிரந்தர வாழ்வைக் கொடுத்து வேதனையை அனுபவித்துக் கொண்டிருக்கச் செய்து, இப்படியாக பல படித்தரங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அவன் சர்வ சக்தியுள்ளவன்; எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையவன், புகழுக்குரியவன்.

இப்படியாக பல படிநிலைகளை ஏற்படுத்தி ஒவ்வொரு படிநிலையிலும் என்ன நடந்தது? என்ன நடைபெறவிருக்கிறது என்பதை இறைவன் தனது இறுதித் தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் மூலமாக அறிவிக்கச் செய்து எச்சரித் துள்ளான்.

ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்ந்து கொண்டிருக்கும் இவ்வுலக வாழ்வில் இனி என்ன நடக்கபோகிறது என்பதை தெரிந்து கொண்டே ஆக வேண்டிய சூழலில் வாழ நேரிட்டிருக்கிறது. அதனைத் தெரிந்து கொள்ள அல்லாஹ் அருளியுள்ள இறை வேதத்தைப் படியுங்கள். எச்சரிக்கும் விதமாக உள்ள சில வசனங்களை கீழே கொடுத்துள்ளோம்.

பின்னர், நாம் வானவர்களை நோக்கி, “ஆத முக்கு பணிந்து சுஜூது செய்யுங்கள் என்று சொன்ன போது, இப்லீசைத் தவிர மற்ற அனை வரும் பணிந்தனர். அவன் மறுத்தான். ஆணவ மும் கொண்டான். இன்னும் அவன் நிராகரிப் போரை சார்ந்தவனாகி விட்டான்.” 2:34

“”ஆதமுக்குப் பணியுங்கள் என்று வானவர் களிடம் கூறினோம். இப்லீசைத் தவிர யாவரும் பணிந்தனர். அவன் பணிந்தவர்களில் ஒருவனாக இருக்கவில்லை. 7:11
அல்லாஹ் : “நான் உனக்கு கட்டளை இட்டபோது நீ பணியாதிருக்க உன்னைத் தடுத்தது யாது?”

இப்லீஸ் : “நான் அவரை விட மேலானவன், என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்’ 7:12

அல்லாஹ்: “இதிலிருந்து நீ வெளியேறி விடு; இங்கே நீ பெருமையடிப்பது தகாது. ஆதலால் நீ வெளியேறு. நிச்சயமாக நீ சிறுமை அடைந்தோரில் ஒருவனாகி விட்டாய்”. 7:13

இப்லீஸ் : எழுப்பப்படும் நாள் வரை எனக்கு அவகாசம் கொடுப்பாயாக. 7:14
அல்லாஹ் : “”நிச்சயமாக நீ அவகாசம் கொடுக் கப்பட்டவர்களில் ஒருவனாவாய்”. 7:15

இப்லீஸ் : “”என்னை வழிகெட்டவனாக ஆக்கியதன் காரணத்தால், உன்னுடைய நேரான பாதையில் செல்லாது தடுப்பதற்காக அவ்வழியில் அவர்களுக்காக திட்டமாக உட்கார்ந்து கொள்வேன்”. 7:16

“”நிச்சயமாக நான் அவர்கள் முன்னும், அவர்கள் பின்னும், அவர்கள் வலப் பக்கங்களிலும், இடப் பக்கங்களிலும் வந்து (அவர்களை) வழிகெடுத்துக் கொண்டு இருப்பேன். ஆதலால், நீ அவர்களில் பெரும்பாலோரை நன்றி செலுத்துவோர்களாகக் காணமாட்டாய். 7:17

அல்லாஹ் : “”நீ நிந்திக்கப்பட்டவனாகவும், வெருட்டப்பட்டவனாகவும், இங்கிருந்து வெளியேறி விடு; அவர்களில் உன்னைப் பின்பற்று வோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நிச்சயமாக நரகத்தை நிரப்புவேன்” 7:18

மேற்கூறப்பட்ட இறை வசனங்கள் நமக்கு எதை தெரிவிக்கின்றன?
ஜின் இனத்தை சேர்ந்த இப்லீஸாகிய ஷைத்தான் (18:50), முதல் மனிதர் ஆதம் (அலை) அவர்களிலிருந்து எல்லா மனிதர்களை யும் வழிகேட்டில் இட்டுச் செல்ல மனித இனத்தை அழித்தொழிக்க முயற்சித்துக் கொண்டிருக் கிறான், முயற்சித்துக் கொண்டிருப்பான். இந்த முயற்சி எப்படி நடைபெற்றுக் கொண்டிருந்தது. நடைபெற்றுக் கொண்டிருக்கிறது, நடைபெறப் போகிறது என்பதை உலக அரசியலில் அன்றிலி ருந்து நடந்த, நடக்கும் விநோதங்களை கூர்ந்து கவனித்தால் அனைவரும் இன்ஷா அல்லாஹ் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த முயற்சி யாதெனில், அன்றிலிருந்து இன்று வரை, நிச்சயமாக இனியும் கூட உலகில் உள்ள அரசாங்கங்களையும் மேலும் மதகுரு மார்களையும் தமது கட்டுக்குள் செல்வாக்கு மிக்க குறிப்பிட்ட சில குடும்பங்கள் வைத்திருக்கின்றன. ஒட்டுமொத்த உலகத்திலும் நடைபெறும் அக்கிர மங்கள், அநியாயங்கள், வன்முறைகள், பய முறுத்தல்கள், தீண்டாமை, தீவிரவாதம், மனித அழிப்பு, இயற்கை ஒழிப்பு, உயிர் கொல்லி மருந்துகள், போதை மருந்துகள் என இன்னும் பலபல கெடுதிகள் இக்குடும்பங்களின் உத்தரவு களின்படி உலகில் உள்ள பெரும்பான்மை அரசாங்கங்கள் மூலமாகவே நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இந்த 13 குடும்பங்கள் வழிபடும் ஸ்தலத்தின் பெயர் “”சர்ச் ஆப் சாத்தான்” ஒற்றைக்கண் இவர்களது சின்னம் ஆகும். ஒற்றைக் கண்ணன் தஜ்ஜாலின் வருகையைப் பற்றி குர்ஆனும், ஹதீஃத்களும் போதிய அளவில் தெரிவித்து இருப்பதால், மற்றவர்களை விட முஸ்லிம்களில் குர்ஆனை விளங்கிப் படிப்பவர்கள் இந்த செய்திகளை சுலபமாக புரிந்து கொள்ள முடியும்.

இறைவசனம் 6:158ல் அல்லாஹ் தெரி வித்திருப்பதாவது : உம் இறைவனின் அத்தாட்சி களில் சில வரும், அந்நாளில்(இதற்கு) முன்னால் நம்பிக்கை கொள்ளாதிருந்த அல்லது (நம்பிக் கைக் கொண்டிருந்தும்) அதனுடைய நம்பிக்கை யில் எந்த நன்மையையும் சம்பாதிக்காதிருந்த எந்த ஆத்மாவிற்கும், அதனுடைய நம்பிக்கை (அந்நாளில்) பலன் தராது. (ஆகவே அவர்களிடம் அந்த அத்தாட்சிகளை) நீங்களும் எதிர் பாருங்கள்; நாமும் எதிர்பார்க்கின்றோம் என்று (நபியே) நீர் கூறும்.
மேற்கூறப்பட்ட 6:158 இறைவசனத்திற்கு இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்கள் அறிவித்த செய்திகளாவன :

1. “”நீங்களும் எதிர்பாருங்கள், மேலும் நிச்சயமாக நாங்களும் எதிர்பார்க்கின்றோம்” என்ற இறை வசனத்திற்கு “”மேல் திசையிலிருந்து சூரியன் உதயமாதல்” என்று நபி (ஸல்) அவர்கள் பொருள் கூறினர் என அபூசயீத்(ரழி) அவர்கள் அறிவித்தார்கள். (நூல்: திர்மிதி)

2. உலக முடிவு நாளின் அடையாளங்களில் முந்தியது. சூரியன் தான் அஸ்தமனமாகும் இடத்திலிருந்து உதயமாவதும், காலையில் தாப்பத்துல் அர்ளு வெளிப்படுவதும் ஆகும். இந்த இரண்டில் எது முந்திவிடுகிறதோ, அதனையடுத்து மற்றதும் வெளிப்பட்டு விடும் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவித்துள்ளார்கள். இப்னு அம்ருப்னுல் ஆஸ்(ரழி), நூல் : முஸ்லிம், அபூதாவூது.

3. “”மூன்று செயல்கள் நடந்து விட்ட பிறகு அதற்கு முன் இறை நம்பிக்கை கொள்ளாதார். அதன்பின் இறை நம்பிக்கை கொள்வதனால், எந்த பயனும் பெற மாட்டார்கள். 1. சூரியன் மேற்கு திசையிலிருந்து உதயமாவதும், 2. தஜ்ஜால் வெளிப்படுவதும். 3.தாப்பத்துள் அர்ளு (பூமியிலி ருந்து மிருகம்) வெளியாவதும் ஆகும்” என்று நபி(ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். அபூ ஹுரைரா(ரழி), திர்மிதீ

முழு விவரங்களும் ஆங்கிலத்தில் அறிய CHURCH OF SAITAN அல்லது FREE MASONRY போன்ற இன்னும் பல தலைப்புகளில் வலைதளங்களில் தேடிப் பாருங்கள்.

கோவையிலுள்ள ஒரு சகோதரர் ஹீலர் பாஸ்கர் என்பவர் இக்குடும்பங்களைப் பற்றி விளக்கமாக 6 மணி நேரத்திற்கு மேல் தமிழில் பேசுகிறார். “”ஹீலர் பாஸ்கர்-இலுமுனாட்டி வேர்ல்டு பாலிடிக்ஸ்” (HEALER BASKAR-ILLUMUNATI-WORLD POLITICS) என வலைதளங்களில் தேடிப் பாருங்கள். நிறைய தெரிந்து கொள்ள முடியும்.

இக்குடும்பங்களைப் பற்றி “”தஜ்ஜாலை எதிர் கொள்வது எப்படி?” எனும் 24 பக்கங்கள் கொண்ட கையடக்க சிறிய நூலில் சகோதரர் அபூ ஆசியா என்பவர் குர்ஆன் வசனங்கள் ஹதீஃத் களை மேற்கோள் காட்டி எழுதியுள்ளார். இன்ஷா அல்லாஹ். அவரைத் தொடர்பு கொள்ள விரும்புவோர் அந்நூலிலேயே கொடுக்கப்பட்டுள்ள மொபைல் எண் :

9786644073 மூலமாக தொடர்பு கொள்ளவும்.

Previous post:

Next post: