அந்நஜாத் ஏப்ரல் 1988

in 1988 ஏப்ரல்

ஸ ஃபான் 1408 – ஏப்ரல் 1988

மூன்றாம் ஆண்டில் அந்நஜாத் !

அல்லாஹ்வின்  பேரருளால்,  எண்ணற்ற  இன்னல்ளையும், இடுக்கண்களையும் ஏச்சப்பேச்சுக்களையும், மிரட்டல்களையும் கடந்து அந்நாஜத் மூன்றம் ஆண்டிலே அடி உடுத்து வைக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ்.

தங்கள் வாயில் வந்தவைகளையயல்லாம் கற்பனை கட்டுக்கதைகளையெல்லாம்  மார்க்கம் என்று சொல்லி மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்த முல்லாக்களை  எதிர்த்து,  நீங்கள்  சொல்லுபவற்றிக்கு  குர் ஆன்,  ஹதீஸில் ஆதாரம் எங்கே இருக்கிறது? காட்டுங்கள் என்று துணிந்து கேட்கும்  மனோ  தைரியத்தை மக்களுக்கு  ஊட்டியதே  அந்நாஜத்தான்  என்று  பலர்  சொல்லுவது நமது காதுகளிலும் விழுகின்றது. அது மட்டுமல்ல, குர் ஆன், ஹதீஸில்  இல்லாததை,  மார்க்கமே  இல்லை  என்று  மக்கள் துணிந்து  தூக்கி  எறியும்  காலமும்  வெகு தூரத்தில்லை என்பதையும் மக்கள் உணர்ந்து கொண்டு வருகிறார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.  இக்குறுகிய  காலக்கட்டத்தில்  நமது  வளர்ச்சி  கண்டு Š சத்திய   இஸ்லாத்தின்  வளர்ச்சி  கண்டு  வயிறு எரிவோர் சிலர், சத்தியத்தை உணர்ந்து நல்வாழ்வு பெற முயற்சிப்போர் பலர். அவர்களுக்காகச் சில வார்த்தைகள்.

இஸ்லாத்தை,    குர் ஆன்,   ஹதீஸ்  அடிப்படையிலான  தூய நிலையில்  நிலை  நாட்ட  கூட்டப்படும்  கூட்டங்களை  தடுத்து நிறுத்த   பெரும்  முயற்சகிள் எடுக்கிறார்கள். அந்நாஜத்தை மக்கள் பார்க்காமல் தடுத்துவிட முயல்கிறார்கள் . அல்லாஹ் அவனது ரஸூலின்  வாக்குகள் வெளிவராமல்,  ஏகத்துவத்தின் குரல்வளையை நெரித்துக் கொன்று விடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள்.

பலமுனைத் தாக்குதல்களைத் தொடுக்கிறார்கள். அரசியல்வாதிகளை அந்நியர்களாவும், சமாதி வழிபாட்டுக்காரர்களை எதிரிகளாவும் இதுவரை கருதி வந்தாவர்கள், நம்மை எதிர்ப்பதற்காகŠசத்தியத்தை எதிர்ப்பதைற்காக இன்று அரபிக்கல்லூரி  விழாக்களில்,  பொதுக் கூட்டங்களில்  அவர்களுடன்  கை குலுக்கவும் கெளரவிக்கவும் ஆரம்பித்து விட்டார்கள் .”விரோதிக்கு விரோதி நண்பன்”  என்ற ராஜதந்திர நோக்கில் நேற்று வரை விரோதிகளாக இருந்தவர்கள் இன்று  நண்பர்களாக மாறியுள்ளனர். சத்தியத்தை நிலைநாட்ட அவர்கள் கூட்டு சேர்ந்திருந்தால் நாமும் அதை வரவேற்போம். அவர்களுடன் கூட்டு சேர  தயங்கவும்  மாட்டோம்  ஆனால் கைசேதம்  அல்லாஹ்  அவனது  ரசூலின்  வாக்குகளை  குழிதோண்டி  புதைக்க  மனித  அபிப்பிராயங்களை மார்க்கமாக்கி  மக்களை ஏமாற்றி – இவர்கள் அற்ப உலக ஆதாயம் அடைந்து,  இறுதியில்  கூண்டோடு நகரம் புக வழிவகுக்கிறார்கள். சத்தியத்தை உணர்ந்தவர்கள் இந்த தீச்செயலக்ளுக்குத் துணை போக முடியுமா? என்று  சற்று  நிதானமாகவே  சிந்திக்கக்  கடமைப்பட்டுள்ளோம். ஈமான் நீரு பூத்த தெருப்பாக இருக்கும் நிலையுடையவனும், இவற்றிக்கு ஒருபோதும் துணை போகமாட்டான்.

அவர்களது முயற்சிகள் எவ்வளவு கடுமையாக இருந்தபோதிலும், அவற்றை எல்லாம் மீறி, அல்லாஹ்வின் அருள்  கொண்டு பலர் தூய இஸ்லாத்தின் பக்கம் வந்த வண்ணமே உள்ளனர். நாம் பல இடங்களில் மாநாடுகள் நடத்தும் அளவுக்கு அல்லாஹ் நம்மை வளர்த்துள்ளான் . அல்லாஹ்வைப் புகழ்ந்து, அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். நமது மாநாடுகளில் பெருங்கூட்டம் இல்லையே என்ற அங்கலாய்ப்பு நமக்கு அவசியமே இல்லை. காரணம்; பெருங்கூட்டம் சத்தியத்தின் அளவுகோல் அல்ல. சினிமா நடிகர், நடிகைகள் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் பெருங்கூட்டத்தை இன்று பார்க்கிறோம். இவை கொள்கை பிடிப்புள்ள கூட்டங்கள் என்று சொல்வோமா ? சிறிது நிதானமாகவே சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

ஆதம் (அலை) முதல் இறுதி நபி முஹம்மது (ஸல்) வரை சத்தியத்தை ஏற்று தூய இஸ்லாத்தில் வந்தவர்கள் வெகுசிலரே! அவர்களும் பெரும்பாலும் சாமான்யர்களே. நபி நூஹ் (அலை) அவர்களின் 950 வருடங்கள் போதனையின் பின் சத்திய இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டவர்கள் ஒரு நூறுக்கும் குறைவானர்களே. நபி (ஸல்) அவர்களின் ஆரம்ப 13 வருடங்கள் போதனைக்குப் பின் நடந்த “”பத்ர் ” தற்காப்புப் போரில் கலந்து கொண்டவர்கள் 313 பேர்கள் மட்டுமே. அன்றைய முஸ்லிம்களின் எண்ணிக்கையே அவ்வளவு தான். அதற்கடுத்த ஆண்டு இடம் பெற்ற “” உஹது ”  தற்காப்புப் பேரில் நபி(ஸல்) அவர்களுடன் இடையில் வந்து சேர்ந்தவர்களில் சிலர், கூட இருந்தே குழிபறித்துவிட்டு, முஸ்லிம்களிடையேயும், குழப்பத்தை உண்டு பண்ணிவிட்டு, நபி(ஸல்) அவர்களை விட்டுப்பிரிந்து வெளியேறினர், இது காரணமாகவும், கனவாயில் நிறுத்தப்பட்டிருந்த நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களின் சொல்லை மீறி இறங்கி வந்ததன காரணமாகவும், குறைந்த எண்ணிக்கையில் இருந்த முஸ்லிம்களில் 70 பேர் ­ஹீதாக்கப்பட்டு  தோல்வியுறும் நிலையும் ஏற்பட்டது. ஆயினும், 21 வருடங்களுக்கு பிறகு மக்கா வெற்றிக்குப் பிறகு, மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழையும் அந்த உன்னத நிலை ஏற்படத்தான் செய்தது. அதைக் கண்ணால் பார்க்கும் பாக்கியம் நபி (ஸல்) அவர்களுக்கு கிடைக்கவே செய்தது. அதாவது நபி (ஸல்) அவர்களுக்கே, தனது உழைப்பின் பலனைப் பார்க்க 21 வருடங்கள் பிடித்தன.

இந்த நிலையில், பல நூறு வருடங்கள் தூய இஸ்லாம் மக்களிடமிருந்து அறிமுகப்படுத்தப்படாது மறைக்கப்பட்ட நிலையில் , மனிதர்களின் கற்பனைக் கட்டுக்கதைகள்  இஸ்லாமிய மக்களுக்கு நீண்டகாலமாக போதிக்கப்பட்டு, அவர்களின் இரத்தத்தோடு ஊறிப்போன நிலையில் நான்கு வருட உழைப்பிலேயே மக்கள் அனைவரும் தூய இஸ்லாத்தில் நுழைந்து விடுவார்கள், சத்தியம் நிலைநாட்டப்பட்டு விடும் என்று எண்ணுவது நமது தவறல்லவா? அவ்வளவு எளிதாக சத்திய இஸ்லாம் வளர்ந்து விட, நமது கொடிய விரோதி ஷைத்தானும், அவனது தோழர்களும் விட்டு விடுவார்களா ? யோசித்துப் பாருங்கள் !

எனவே இந்த நிலைகள் கண்டு நாம் மனம் சோர்த்து விடக்கூடாது, நமது முயற்சிகளில் எள்ளளவும் குறை செய்துவிடக் கூடாது. மக்கள் சத்தியத்தை, ஏற்பதும், ஏற்காமல் இருப்பதும்  நமது கைகளில் இல்லை. அதை அல்லாஹ் தன் புறத்தில் வைத்துள்ளான் நாம் அந்த வல்ல அல்லாஹ் மீதே பூரண நம்பிக்கை வைத்து, அவனது பொருத்ததை மட்டுமே ஆதரவு வைத்து இஃலாசுடன் அவன் நம்மீது விதித்துள்ள கடமைகளின் படி, நமது இந்தப் புனிதப் பணியை மனந்தளராமல் தொடர்ந்து செய்து கொண்டே வருவோமேயானுல், இன்ஷா அல்லாஹ் நிச்சியமாக அவனது அருள்கொண்டு இன்னும் சில வருடங்கள் ஒரு பெறும் மறுமலர்ச்சி எதிர்பார்க்கலாம் .மக்கள் கூட்டம், கூட்டமாக தூய இஸ்லாத்தில் நுழையும் காட்சியைப் பார்க்கலாம். இன்ஷா அல்லாஹ் நல்ல உள்ளங்களின் துவாவை எதிர்பார்க்கிறோம்.

 

விமர்சனங்கள் ! விளக்கங்கள் !!

மார்ச் இதழ் கண்டடேன் அலிம்கள் என்று ஒரு பிரிவு இல்லை என்று எழுதி உள்ளீர்கள். அல்லாஹ் குர் ஆனில் கற்றவர்களும் கல்லாதவர்களும் சமமா? என்கிறான் நீங்களே உங்கள்  பத்திரிக்கையில்ஆலிம்களாக எளிய வழி என்று பிரசுரித்துள்ளீர்கள். இதுவே ஆலிம்கள் என்று ஒரு பிரிவும் பாமரர்கள் என்று ஒரு பிரிவும் இருக்கிறது என்று காட்டுகிறதே  ! இதென்ன உங்கள் பத்திரிக்கையில் பல இடங்களில் பாமரர்கள் பாமரர்கள் என்று எழுதி உள்ளீர்களே ? நீங்கள் பிரிவிளைவாதம் பேசுகிறீர்களே ? உங்களுக்கு நீங்கள் முரணா ?     மல்லவி னி.க்ஷி. ஹாஜியப்பா கோட்டாறு

மேல் எழுந்த வாரியாகப் பார்ப்பவர்களுக்கு இவை முரணாகத் தென்பட்டாலும், சிந்தித்து விளங்குகிறார்களுக்குத் தெளிவாகப் புரியும் ஆலிம்களும் இருக்கிறார்கள். பாமரர்களும் இருக்கிறார்கள், எல்லோரும் ஆலிம்களாக ஆகுங்கள் என்று சொல்வதற்கும், ஒரு சாராரை ஆலிம்கள் என்றும், இன்னொரு சாராரை பாமரர்கள் என்றும் பிரித்து முத்திரை குத்துவதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு. சுவாக்கவாதிகளும் இருக்கிறார்கள், நரகவாதிகளும் இருக்கிறார்கள்எல்லாரும் சுவர்க்கவாதி என்றும் இன்னொரு பிரிவாரை நரகவாதி என்றும் முத்திரை குத்திவதற்கு எவ்வளவு வித்தியாசம்  இருக்கிறது என்று சிந்தித்துப் பாருங்கள் தக்வாவுடையவர்களும் இருக்கிறார்கள்; தக்வா இல்லாதவர்களும் இருக்கிறார்கள்; அனைவரும் தக்வா உடையவர்களாக ஆக முயற்சி செய்யுங்கள் என்று சொல்லுவதற்க்கும் ஒரு கோஷ்டியைப் பிரித்து தக்வாஉடையவர்கள் என்றும், இன்னொரு கோஷ்டியைப்பிரித்து தக்வா இல்லாதவர் என்று முடிவு செய்வதற்கும் எவ்வளவு வித்தியாசம் இருக்றிது என்று சிந்தித்துப் பாருங்கள் .
சுவர்க்கவாதி, நரகவாதி என்றோ தக்வா உடையவர், தக்வா இல்லாதவர் என்றோ சொல்வதால் எழுதுவதால் இரு பிரிவினிர்களாகப்பிரிக்கும் அதிகாரம் நமக்கு இருக்கிறது என்று நினைக்கிறீர்களா ?  இதே அடிப்படையில் தான் ஆலிம்களும் இருக்கிறார்கள், பாமரர்களும் இருக்கிறார்கள். அனைவரும் ஆலிம்களாக ஆக முன்வாருங்கள் என்று எழுதி வருகிறோம். உடனே மக்களை ஆலிம் வர்க்கமாகவும், பாமரர்வர்க்கமாகவும் பிரிக்க நாம் லைசென்ஸ் கொடுப்பதாகத் தப்புக் கணக்குப் போட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?

“” உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும் , கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் ”(58 :11) என்று அல்லாஹ் குறிப்பிடுகிறானேயல்லாமல், நீங்களாக உங்கள் பதவிகளை உயர்த்திக் கொள்ளுங்கள் என்று அனுமதி தரவில்லை மேலும் இந்த வசனத்திலிருந்து ஈமான கொண்டவர்களின் வி­யம் எப்படி மறைவானதாக இருக்கிறதோ உறுதியாகச் சொல்ல முடியாதோ அதேபோல் கல்விமான்களின் வி­யமும் மறைவாகவே இருக்கிறது. உலகில் எவரும் இவர் கல்விமான் இவர் கல்விமான் இல்லை என்று பிரிக்க முடியாது.

“” நிச்சியமாக அல்லாஹ்வின் அடியார்களின் அவனுக்கு அஞ்சுபவர்களே ஆலிம்கள்.”  (35 :28) என்ற இறை வசனமும் சமுதாயத்தில் ஒரு பிரிவாரை ஆலிம்கள் என்று பிரிக்க முடியாது என்பதையே உறுதிப்படுத்துகிறது. உண்மையில் அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் யார் என்று எவராலும் அறிய முடியாது.

“” அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள் ஏனெனில் அல்லாஹ்தான் உங்களுக்குக் கற்றுக்கொடுக்கிறான் (2 : 282) என்ற இறைவசனமும் ஈலிம்கள் என்ற பிரிவாரை உண்டாக்க முடியாது என்பதையே படம் பிடித்துப் காட்டுகிறது. நீங்கள் குறிப்பிட்டுள்ள இறை வசனத்தை முழுமையாக நோட்டமிடுங்கள்.

“” எவர் மறுமையை அஞ்சி, தன் ரப்புடைய ரஹ்மத்தை ஆதரவுவைத்து இராக்காலங்களில் ஸூஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப்போல் ஆவாரா ? நபியே ! ) நீர் கூறும் அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள்தாம் ” (39 : 9)
“” நீர் அச்சமூட்டி எச்சிரிப்பதெல்லாம் தம்முடைய ரப்பைப் பார்க்க முடியாது இருந்தும் அச்சத்துடன் எவர் தொழுகையை முறைப்படி ஒழுங்காக நிறைவேற்றுகிறாரோ அவருக்கேயாகும் எவர் பரிசுத்தமாக இருக்கறிVரோ, அவர் தம் நன்மைக்காகவே பரிசுத்தமாக இருக்கிறார் அல்லாஹ்விடமே யாவரும் மீள வேண்டியுள்ளது.( 35 : 18 )
குருடனும் பார்வையிடையவனும் சமமாக மாட்டார் ( 35 : 18 )
நிழலும் வெயிலும் சமமாகா. (35 : 21 )

அன்றியும்  உயிருள்ளவர்களும் இறந்தவர்களும் சமமாக மாட்டார்கள் நிச்சயமாக அல்லாஹ்தான் நாடியவர்களைச் செவியே ற்கும்படி செய்கிறான் கப்ருகளில் உள்ளவர்களைக் கேட்கும்படி  செய்பவராக நீர் இல்லை.(35 : 22)
ஆக குர்ஆனில்  வரும்  ஆலிம்கள் சம்பந்தப்பட்ட அனைத்து வசனங்களையும் உள்ளச்சத்துடன் ஆராய்கிறவர்கள் ஆலிம்கள் யார் என்று உலகில்  எவரும் முடிவு செய்ய முடியாது. சுவாக்கவாதி நரகவாதி தக்வாவிடையவர் தக்வா  இல்லாதவர் என்று மறுமையில்   அல்லாஹ்வே முடிவு செய்வது போல் , ஆலிம் ஆலிம் இல்லை என்று முடிவு செய்வதும் அல்லாஹ்வே ; மனிதர்கள் அல்ல உன்ற தெளிவான முடிவுக்கே வர முடியும்.

இப்போது ஆலிம்கள் என்று நீங்கள் யாரைக் குறிப்பிடுகிறீர்கள்  ? அது சரியா என்று பார்ப்போம்.
மக்களிடமிருந்து ஜக்காத்து சதகா போன்றவற்றை வசூலித்து நடத்தப்படும் அரபி மதரஸாக்களில் சில ஆண்டுக்ள் செலவிட்டு வந்து விட்டால், அவர்கள்  ஆலிம்கள்  இது தான் இன்றைய ஆலிம்களுக்குரிய அளவுக்கோல் குர் ஆன் வசனங்களோடு, ஒப்பிட்டு இந்த அளவுகோல் சரிதானா ? என்று நோட்டமிடுங்கள் . உண்மை என்ன ?  இப்படி ஆலிம்களாக தோந்தெடுத்திருப்பவர்களிலும் ஆலிம்களும் அவாம்களும் ஜாஹில்களும் இருக்கலாம். நபி ( ஸல் ) அவர்களின் காலத்தில் அரபிப் பேரறிஞர்களாவும், பண்டிதர்களாகவும் திகழ்ந்தவர்களே வடிகட்டிய ஜாஹிலகளாக ஆக்கப்பட்டார்கள். மதரஸா பக்கமே போகாதவர்களிலும் ஆலிம்களும் அவாம்களிலும் ஜாஹில்களும் இருக்க முடியும். உங்களது அளவுகோளின் படி  ஆலிம்களாக இருப்பவர்கள் தான் ´ர்க்கையும்,  குஃப்ரையும், பித் அத்தையும் மார்க்கம் மக்களிடையே சொல்லி தங்களின் வாழ்க்கை வசதிக்கு வடிகாலாக மார்க்கமாக மக்களிடையே சொல்லி,  தங்களின் வாழ்க்கை வசதிக்கு வடிகாலாக மார்க்கத்தை ஆக்கியிருக்கிறார்கள்.மார்க்கத்தை பிழைப்பாகக் கொண்டிருப்பவர்களை நீங்கள் ஆலிம்கள் என்று துணிந்து சொல்லுகிறீர்கள் மறுமையில் அல்லாஹ் கொடுக்கும் பட்டத்தை  இம்மையில் நீங்களே கொடுத்து,  மக்களை ஏமாற்றிப் படிழைக்க வழி வகுத்திருக்கிறீர்கள், சமுதாயத்தைப் பல  பிரிவினர்களாப் பிர்ந்து அவர்கள் உலக  ஆதாயம் அடைய வழி வகுத்திருக்கிறீர்கள்.
சத்தியத்தை  எதிர்த்துப்  போர்க்கொடி  தூக்கிய  அன்றைய தாருந்தத் வாவினரைப்போல், நீங்கள் கூறும் இன்றைய ஆலிம் வர்க்கத்தில் பெரும் பாலோர் இன்றும் சத்தியத்தை எதிர்த்துப் போர்க்கொடி தூக்குவது நாடறிந்த உண்மையாகும். இதையும் நீங்கள் நன்குஅறிந்துகொண்டே அவர்களுக்குத் துணை போகிறீர்கள் . இது சரிதானா? என்று தயவு செய்து நிதானமாகச் சிந்தித்துப் பாருங்கள் சமுதாயத்திலுள்ள பிரிவுகள் அனைத்தும் ஒழிந்து முஸ்லிம்கள் ஓர் அணியில் ஒன்றுபட வேண்டுமென்றால், ஆலிம், அவாம் என்ற பாகுபாடு ஒழிக்கப்பட்டேயாக வேண்டும். சமுதாய நலன் கருதி மல்லவிகள்தங்கள் இவ்வுலக அற்ப சுயலனை விட்டுக் கொடுக்க அன்புடன் வேண்டுகிறோம்.அதற்கு மறுமையில் மகத்தான பேறுகள் உண்டு என்றும் நன்மாராயம் கூறுகிறோம்.

1988 மார்ச் அந்நாஜத் இதழில் முதல் நூற்றாண்டில் முஸ்லிமாகத் திகழ்கிறார் என்ற கட்டுரையில் ஆச்சிரியாமஹந்த் டாக்டர் சரூப்ஜி மஹராஜ் ( இஸ்லாமுல்ஹக்) அவர்களும் ,அவர் மனைவியும்நபி (ஸல்) அவர்களை கனவில் கண்டதாகவும், அவர்கள் தங்கட்கு கலிமாவை சொல்லிக் கொVடுத்தார்கள் என்பதையும் நம்புகின்ற நீங்கள் பூஸரி அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கனவில் வந்து எனக்குக் கவி சொல்லிக் கொடுத்தார்கள் என்று கூறுவதையும் நம்பவேண்டியதுதானே ! இதை மறுப்பதேன் ?  மு.யூசுப் ரஹ்மத்துல்லா, நாகூர்.

நபி ( ஸல் ) அவர்கள் கனவில் வருவது குறித்து தெளிவான ஹதீஸ்கள் காணப்படுகின்றன. குர்ஆன், ஹதீஸூக்கு முரணில்லாத நிலையில் ஒருவர் கனவு கண்டதாக சொல்லும்போது அதை நாம் மறக்க வேண்டியதில்லை.
“”எனது வலது கரத்தை அவர்களது கரங்களில் பற்றி கலிமாவை எனக்குக் கற்பித்தார்கள் …………. அடுத்து அவர்கள் என்னைக் கட்டியணைத்து கலிமதாவை இந்நாட்டு மக்களுக்கு எடுத்து போதிக்கும்படி ஆணையிட்டார்கள் ” இவை ஒரு ஆணைப் பொறுத்தமட்டில் குர்ஆன் ஹதீஸூக்க மாற்றனவையல்ல.

அதே கட்டுரையில் இஸ்லாமுல்ஹக் “” தனது மனைவியும் இதே போன்று கனவு கண்டதாகக் கூறினாள் ”  என்று கூறுகிறார். ஒரு பெண்ணைப் பொறுத்தமட்டில் நபி ( ஸல் ) அவர்கள் அவளின் கரத்தைப்பிடிக்கவோ, அவளை கட்டியணைக்கவோ செய்திருக்க முடியாது. அந்தப் பெண்மணி நபி ( ஸல் ) அவர்களைக் கனவில் கண்டிருக்கலாம் என்று மட்டுமே நாம் பொருள் கொள்ள முடியும்.

நீங்கள் குறிப்பிடும் பூஸரியைப் பொறுத்தமட்டில் “” ( நம்முடைய தூதராகிய ) அவருக்கு நாம் கவிதை ( இயற்றக் )கற்றுக்கொடுக்கவில்லை, அது அவருக்குத் தேவையானதும் அல்ல,”  ( 36 : 96)
“” கவிஞர்களை வழிகேடர்கள் தான் பின்பற்றுகிறார்கள். நிச்சயமாக அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் அலைந்து திரிவதை ( நபியே ! ) நீர் பார்க்கவில்லையா ?

இன்னும் நிச்சயமாக, தாங்கள் செய்யாததை அவர்கள் சொல்லுகிறார்கள்.   ( 26 :  224, 225, 226 )
இத்தனை குர் ஆன்  வசனங்களுக்கு விரோதமாக,  நபி ( ஸல் ) அவர்கள்  கனவில்  வந்து  கவி சொல்லிக் கொடுத்தார்கள்  என்றால் இதை எப்படி ஏற்றுக்கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். 26 : 227 வசனம் குறிப்பிடுவது போல்,  அநியாயம் செய்யப்பட்டு அதற்குப் பகரம் செய்யும் ஒரு விதிவிலக்கான நிலையும் இங்கு இல்லை என்பதையும் உங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம்.

நபி வழியில் நம் தொழுகை
தொடர்   Š 16
அயூஅப்துர்ரஹ்மான்
( நபியே ) சொல்வீராக !  நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாயிருப்பின் என்னைப் பின்பற்றுங்கள் . அல்லாஹ் உங்களை நேசிப்பான் மேலும் உங்களுக்கு உங்கள் பாவங்களையும் மன்னிப்பான். அல்லாஹ் மன்னித்துக் கிருவை செய்பவனாகும்.    (3 : 31 )

“”என்னைத் தொழக் கண்டவாறே நீங்களும் தொதுங்கள் ! ” மாலிக் பின் ஹூவைரிஸ்  ( ரழி ),  புகாரி,  முஸ்லிம்
ஒளூ குளிப்பு முதவியவற்றின் விரிவான விபரங்கள் முறையே அந்நாஜ்த் 87 செப்டம்பர், அக்டோபர் இதழ்களிலும், அசுத்தத்தின் விபரங்களை 88 ஜனவரி இதழிலும் பார்த்தோம் இவ்விதழில் தொழுகைக்கு உடல்,  உடை, இடம் சுத்தம் பற்றியும் அவரத்தை மறைப்பது பற்றியும், கிப்லாவை முன்னோக்குதல்பற்றிய விவரங்களையும் இன்ஷா அல்லாஹ் காண்போம்.

தொழுகைக்கு உடல் உடை அகம் முதலியவை சுத்தமாயிருத்தல் வேண்டும்.
உடல் சுத்தம்  :
உடலை, மலம், சிறுநீர், இரத்தம் முதலிய அசுத்தங்களை விட்டு சுத்தப்படுத்திக் கொள்வதோடு,  சிறுந்தொடக்கு, பெருந்தொடக்கு ஆகியவந்நை விட்டும் முறையே ஒளூ செய்து குளித்து,  சுத்தப்படுத்திக் கொள்வதே உடல் சுத்தமாகும்.

உடை சுத்தம்
தொழும் போது அணியும் உடைகளும் சுத்தமாயிருப்பது அவசியமாகம். ( நபியே ! )  உமது ?ஆடையைப் பரிசுத்தப் படுத்திக் கொள்வீராக ! அசுத்தத்தை   வெறுத்த ஒதுக்குவீராக !    ( 74 : 4, 5 )

ஜாபிருபின் ஸமுரா ( ரழி )  அறிவித்துள்ளார்கள் :  ஒரு முறை நபி ( ஸல் ) அவர்களிடத்தில் நான் எனது மனைவியுடன்  கலந்துறவாடும் போது அணியும் அதே  ஆடையை  அணிந்து கொண்டு  தொழுவது ஆகுமா ?  என்று  கேட்க,  அதற்கவர்கள்  நீர் அவ்வாடையில் அசுத்தம் எதனையும் காணாவிட்டால் ஆகும். ஆனால் ஏதேனும் அசுத்தம் அதில் தென்பட்டால் அதை நீர் கழுவிவிடவேண்டும் என்று அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.                                 ( அஹ்மத், அப்ணுமாஜ்ஜா )

இடம் சுத்தம் :
ஒரு  முறை  மஸ்ஜிதுந்  நபவீயில்  உரு கிராமவாசி  நின்ற நிலையில்  சிறுநீர்  கழித்துக் கொண்டிருந்தார். ஸஹாபாக்கள் அவரைத் தடுக்க முயன்றனர். அதற்கு நபி ( ஸல் ) அவர்கள் ஸஹாபாக்களை நோக்கி அவரை அப்படியே விட்டு விடுங்கள் !  அவரது சிறுநீரில் ஒருவாளி தண்ணீரைக் கொண்டுவந்து ஊற்றுங்கள். ஏனேனில் நீங்கள் இச்சமுதாயத்திறகு எளிதாக்குபவர்களாவே ஏவப்பட்டுள்ளீர்களே  அன்றி  அவர்களுக்கு சிரமம் அளிப்பவராக  ஏவப்படவில்லை எனறார்கள்.   அபூஹூரைரா ( ரழி ) ( புகாரீ , அபூதாவூத்,  தீர்மதீ,நஸயீ, இப்னு மாஜ்ஜா, (அஹ்மத்)

அவ்ரத் ( மறைக்க வேண்டிய பாகத் ) தை மறைத்தல் :
ஆதமுடையமக்களே !  நீங்கள் தொழக்கூடிய இடத்தில் எல்லாம் ( ஆடைகளினால்) உங்களை நீங்கள் அலங்கரித்துக் கொள்ளுங்கள். ( 7 : 31 )

பங்ஜூபின் ஹகீம் ( ரழி ) அறிவித்துள்ளார்கள் :
நான்  ஒருமுறை   நபி   ( ஸல் )அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே !   நாங்கள்   எங்களின்  அவ்ரத் (மறைக்க வேண்டிய பாகத்)தை   எந்த சந்தர்ப்பத்தில்மறைக்க வேண்டும் ?  எந்த  சந்தர்ப்பத்தில் மறைக்காது விட்டுவிடலாம் ?  என்று கேட்டேன். அதற்கவர்கள் நீர் உடமது மனைவி உமது அடிமைப்பெண் ஆகியவங்ரகளிடத்தில்  இருக்கும்  சந்தர்ப்பம் தவிர மற்ற  நேரங்களில் எல்லாம் நீர்  உமது  மறைவுப்  பகுதியை  மறைத்துக்  கொள்வீராக  !  என்றார்கள். ( மீண்டும் ) நான் பிற மனிதர்களுடன்  கலந்திருக்கும் போது எப்படி? என்றேன். அதற்கவர்கள் உம்மால் இயலுமான அளவு உமது மறைவான பாகத்தைப் பிறர்பார்க்காத முறையில் நடத்து கொள்வீராக ! என்றார்கள். (மீண்டும்) நான் எங்களில் ஒருவர்  தாம் தனிமையில் இருக்கும்பொழுது எப்படி ? என்றேன். அதற்கவர்கள் வெட்கிப்பதற்கு  அவருக்கு  அல்லாஹ்  மிகவும்  அருகதையுடையவன் என்று கூறினார்கள்.  (அபூதாவூத், தீர்மதீ, இப்னுமாஜ்ஜா )

முன்பின் துவாரத்தின் பகுதிகள் நீங்கலாக ஏனைய தொடைப்பகுதிகள் அவ்ரத் ( மறைக்கவேண்டிய பகுதி ) அல்ல என்பதற்கான ஆதாரம் !
அன்னை ஆயிஷா ( ரழி ) அறிவித்துள்ளார்கள்  :
ஒருமுறை  நபி ( ஸல் ) அவர்கள் தமது தொடைப்பகுதி வெளியில் காணப்படும் நிலையில்  ( வீட்டில் ) அமர்ந்திருந்தார்கள் அப்பொழுது அபூபக்கர் ( ரழி ) அவர்கள் உள்ளே வருவதற்கு அனுமதி கோரினார்கள் . அந்நிலையில் இருந்து கொண்டே அனுமதி கோர, அவர்களுக்கும் அந்நிலையில் இருந்தவாறே அனுமதி வழங்கினார்கள். பின்னர் உஸ்மான் ( ரழி ) அவர்கள் அனுமதி கோரியவுடன் , அவர்கள் தமது ஆடைகளை சரி செய்து கொண்டார்கள்.

அவர்கள் அனைவரும் எழுந்து சென்றுவிட்ட பிறகு அல்லாஹ்வின் தூதரே ! அபூபக்கர் , உமர் ஆகியோர் அனுமதி கோரிய போது, தாங்கள் தமது நிலையில் இருந்து கொண்டே அனுமதி வழங்கினீர்கள். ஆனால் உஸ்மான் ( ரழி ) அவர்கள் அனுமதி   கோரியவுடன்  மட்டும்  தாங்கள்  ஆடையை  சரிசெய்து கொண்டீர்களே ( ஏன் ) என்று கேட்டேன். அதற்கவர்கள் நிச்சயமாக மலக்குகளே  வெட்கப்படும்  ஒரு நபருக்கு நான் வெட்கப்பட வேண்டாமா?  என்றார்கள்(அஹ்மத்)

அனஸ் ( ரழி ) அறிவித்துள்ளார்கள் :
கைபர் போரின் போது,  நபி(ஸல்) அவர்கள் கைலியைத் தமது தொடைப்பகுதியை விட்டும் அகற்றுவார்கள் . அப்போது தான் அவர்களின் தொடைப்பகுதியின் வெண்மையைக் கண்டேன்,   ( புகாரீ,  அஹ்மத் )
தொடைப்பகுதி அவ்ரத்து (மறைக்க வேண்டிய பகுதிதான்)     என்பதற்கான ஆதாரம் !
இப்னு அப்பாஸ் ( ரழி ) அறிவித்துள்ளார்கள்.

நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்  :  தொடைபாகம் அவ்ரத்து ( மறைக்கப்பட வேண்டிய ) பாகம் ஆகும்.   (தீர்மதீ)
முஹம்மதுபின் அப்துல்லாஹ்பின் ஜஹ்ஷ் ( ரழி ) அவர்கள் அறிவித்துள்ளார்கள்
நான் நபி(ஸல்) அவர்களுடன் மஃமர்(ரழி) என்பவரின் அருகில் சென்று கொண்டிருந்த போது அவரது இரு தொடைப் பகுதிகள் திறந்து கிடந்தன. அப்போதுநபி (ஸல்) அவர்கள் மஃமரே !  உமது(திறந்து கிடக்கும்) தொடைய பகுதிகளை மறைத்துக் கொள்கூராக ! ஏனெனில் இருதொடைப்பகுதிகளும் மறைக்கப்படவேண்டிய  பகுதிகளாகும்  என்றார்கள்.  (அஹ்மத்)

ஜர்ஹதுல் அஸ்லமீ(ரழி) அவர்கள் அறிவித்துள்ளார்கள் :  ஒருமுறை நபி( ஸல் ) அவர்ரகள் நான் என்மீது கறுப்புக் கம்பளிப் போர்வை ஒன்றைப் போர்த்தியிருக்கும்  சமயம் அவ்வழியாகச்  சென்று  கொண்டிருந்தார்கள்.  அப்போது உனது தொடைபாகம்  திறந்த  நிலையில்  இருந்தது.  அதற்கவர்கள்  உமது தொடையை மறைத்துக் கொள்ளும் ஏனெனில் நிச்சயமாக தொடையும் மறைக்கப் படவேண்டிய பகுதியாகும் என்றார்கள்.
(அஹ்மத், அபூதாவுத், திர்மதீ, முஅத்தா)

எனவே  தொடைப்பகுதி  மறைக்கப்பட வேண்டிய  பகுதி   தான்  என்பதற்கான  அறிவிப்புகளும்,  தொடை  மறைக்கப்பட  வேண்டிய  பகுதி  அல்ல என்பதற்கான அறிவிப்புகளும் ஸஹீஹான ஹதீஸ்களாவே காணப்படுகின்றன.

மாற்றுக் கருத்தையுடைய இருவகை  ஹதீஸ்களையும்  ஒன்றுபடுத்தும்  விதமாக  ஹதீஸ்கலா  வல்லுநர்களில்  சிலர் முன்பின் துவாரப்பகுதியை மட்டும் கடுமையான அவ்ரத் என்றும் அப்பகுதிகள் அன்றி முட்டுக்காலுக்கு மேலுள்ள தொடைப்பகுதிகள்  இலேசான  அவ்ரத்  என்றும் கூறி,  இருவகை  ஹதீஸ் களுக்கு இடையிலுள்ள முரண்பாட்டை  சரிசெய்கிறார்கள்.

இம்முரண்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் இமாம் புகாரி ( ரஹ்)  அவர்களின்  கருத்து மிகவும் பொருத்தமாக  அமைந்திருக்கிறது.  அதாவது, கைபர் போரின் போது  நபி(ஸல்)  அவர்கள்  தொடைப்  பகுதியை  விட்டு  தமது  ஆடையை  உயர்த்தியபோது  அவர்களின்   தொடையின்  வெண்மையை  நான் கண்டேன்  என்று  அனஸ் ( ரழி )  அவர்கள்  அறிவிக்கும்  அந்த அறிவிப்பு சரியான மிகவும் ஸஹீஹான அறிவிப்பாகும். இவ்வாறே  “” உமது தொடயை மறைத்துக் கொள்வீராக ! நிச்சயமாகத் தொடையும் அவ்ரத் (மறைக்கப்படவேண்டிய ) பாகமாகும்.” என்று ஜர்ஹத் ( ரழி ) அவர்களைப் பார்த்து நபி(ஸல்)  அவர்கள்  கூறிய  அவ்வறிவிப்பு  மிகவும்  பேணுதலானதாகும்.

எனவே  மேற்காணும்  ஹதீஸ்களைக்  கவனிக்கும்போது,  முன் பின்  துவாரப்பகுதிகள் நீங்குதலாக,  மற்றுமுள்ள தொடைப்பகுதிகள் கட்டாயம்மறைக்கப்பட்டே ஆக வேண்டும் என்பதன்றி,  அவற்றை மறைத்துக்கொள்வது நல்லது Š மிகவும் பேனுதலானது என்பதை அறிய முடிகிறது.

குறிப்பு : : –     நமது 87 ஜூன் இதழில் ஆண்களின் ஆடைகள் என்ற தலைப்பில் தொடைப் பகுதி அவசியம் மறைக்கப்பட்டே ஆகவேண்டடும் என்ற கருத்தில் எழுதப்பட்டிருப்பினும், அதை மறைத்துக் கொள்வது நல்லது Š மிகவும் பேணுதலானது என்ற மேற்கண்ட முடிவையே சரி எனக் கொள்வோமாக !    ( ஆசிரியர் )
பெண்களின் “”  அவ்ரத் ” ( மறைக்க வேண்டிய பாகம் )

பெண்களுக்கு  அவர்களின்  முகம் தவிர மற்றுமுள்ள பாகங்கள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும். நபி( ஸல் ) அவர்களிடம் ஒருமுறை அன்னை உம்முஸலமா ( ரழி ) அவர்கள் பின் வருமாறு கேட்டார்கள்  ( அல்லாஹ்வின் தூதரே ! ) ஒரு பெண் தனது இடுப்பில் எவ்வித ஆடையுமின்றி,  நீளமான ஒரு சட்டையும், தலைமுக்காடும் ஆகியவற்றை மட்டும் அணிந்தவளாக தொழுவது கூடுமா ? என்று கேட்க,  அதற்கவர்கள் அவளின் சட்டை அவளது இருபாதங்கள் வெளியாகாது மறைத்துக் கொள்ளும் வகையில் நிறைவானதாக அமைந்திருக்குமானால்  ( கூடும் ) என்றார்கள்.  உம்முஸலமா (ரழி) (அபூதாவூத்)

மேற்காணும்  ஹதீஸின்  வாயிலாக  பெண்கள் தாம் தொழும் போது முகத்தைத் Vவிர மற்ற பகுதிகள் அனைத்தையும் மறைத்தாக வேண்டும் என்பதை அறிகிறோம்.  எனவே  பெண்கள்  கையில்  மணிக்கட்டுக்கு  கீழ்  உள்ள  பாகத்தையும், காலில் கரண்டை மொளிக்குக்கீழ் உள்ள பாகத்தையும் மறைக்க வேண்டிய அவசியமில்லை என்பதற்கான ஆதாரங்கள் மிகவும் பலஹீனமானவையாகும்.

ஆண்கள் தொழும்போது அவர்களின் தலையை மறைத்தாக வேண்டுமா ?
ஆண்கள் தொழும்போது அவர்களின் தலையை  மூடித்  தொழுவது  அல்லது  Š  சிறந்தது  என்பதையும்   ஆதாரங்கள்  எதுவும்  ஹதீஸ்களில் காணப்படவில்லை.

இப்னு அப்பாஸ் ( ரழி ) அவர்கள் கூறுகிறார்கள்  :
சில நேரங்கள் நபி( ஸல் ) அவர்கள் தமது தலையிலுள்ள தொப்பியை எடுத்து தாம் தொழுவதற்கு எதிரில் “” சுத்றா ” Š தடுப்பாக வைத்துக்கொள்வரர்கள்.( இப்னு அஸாக்கீர் )

இவ்வடிப்படையில்  ஹனபி  மத்ஹபு கிதாபுகளில் ஆண்கள் தமது  தலை திறந்த நிலையில் தொழுவது பற்றி குற்றமில்லை என்று கூறப்பட்டிருப்பதோடு, ஒருவர் தமது பணிவு நலையைக் கருதி தலைதிறந்த நிலையில் தொழுவது முஸ்தஹப்புŠவிரும்பத்தக்க செயல் என்பதாகவும் கூறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தம்மை ஹனபி என்று சொல்லிக் கொள்வோர் பிறர் தலை திறந்த நிலையில்  தொழுவதை ஆட்சேபிப்பது மிகவும் ஆச்சரியபாயிருக்கிறது.

கிப்லாவை முன்னோக்குதல் :
தொழும்போது கிப்ராவை முன்னோக்கித் தொழவது அவசியமாகும். நீர்(மக்காவின்) மஸ்ஜிதுல் ஹராமின் பக்கம்  உப்முகத்தைத்  திருப்புவீராக !  இன்னும்நீங்கள் எங்கிருந்தபோதிலும் தொழுகையின் போது உங்கள் முகங்களை அந்த ( கப்லா ) பக்கமே திருப்பிக்கொள்ளுங்கள். (2 : 144)

பர்ராஉ ( ரழி ) அவர்கள் அறிவிக்கிறார்கள்  :  நாங்கள் நபி ( ஸல் ) அவர்களுடன் 16 அல்லது 17 மாதங்கள் பைத்துல் முகத்தை நோக்கி தொழுது கொண்டிருந்தோம். பின்னர் கஃபாவின் பக்கம் திரும்பி தொழுகலானோம். ( முஸ்லிம்)

அபூஹூரைரா ( ரழி ) அறிவித்துள்ளார்கள் :
“” கிழக்குக்கும், மேற்குக்கும் மத்தியில் “”கிப்லா ” இருக்கிறது ” என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். ( இப்னுமாஜ்ஜா,  திர்மதீ )

மேற்காணும் வி­யம் மதீனாவாசிகளுக்காக கூறப்பட்டதாகும் மேலும் மதீனாவின் அமைப்பிலுள்ள சிரியா,  இராக் முதலிய பகுதிகளுக்கும் பொருந்தும். எகிப்தியருக்கு  “”கிப்லா ”  கிழக்குக்கும்,  தெற்குக்கும்  மத்தியில்  உள்ளது.  யமன்  தேசத்தாருக்கு வடக்கே கிப்லாயிருக்கிறது.  அதன்படி அவர்களுக்கு கிழக்குக்கும்,  மேற்குக்கும்  மத்தியில்  “” கிப்லா ”  அமைகிறது.  இந்தியர்களுக்கு  வடக்குக்கும், தெற்குக்கும்  இடையில் மேற்கு திசையில் “” கிப்லா” இருக்கிறது. இவ்வாறு  யார்  எங்கியிருந்த  போதிலும்  குர்ஆனின்  கட்டளையின் படி  உலக  மக்கள்  அனைவரும்  மக்காவிலுள்ள  மஸ்ஜிதுல்  ஹராமை நோக்கியே தொழுதாக வேண்டும்.

கிப்லாவை   நோக்கித்   தொழுவது  பர்லாக  இருப்பினும்,  வாகனத்தின்  நபிலான  தொழுகை  தொழுபவர்  அதில்  அமர்ந்துகொண்டே அவ்வாகனம்  எத்திசையை  நோக்கிச்  சென்றபோதினும்  தொழுவது  ஆகுமானதாகும்.
ஆமிருபின் ரபீ ஆ( ரழி) அறிவித்துள்ளார்கள்  :    நான் நபி(ஸல்) அவர்களை அவர்களின்  வாகனத்தில்  இருந்தபடியே  அது  செல்லும்  திசையே நோக்கி தமது தலையைக் கொண்டு சமிக்கை செய்தவர்களாக தொழுததை நேரில் பார்த்திருக்கிறேன். ஆனால் பர்லு தொழுகையில் அவ்வாறு அவர்கள்  செய்தவர்களாக இல்லை.     ( புகாரி, முஸ்லிம், அஹ்மத் )

எதனையும்  கண்டு  பயந்தோடுபவர்,  நோயாளி,  நிர்பந்த  நிலையில்  உள்ளவர்  ஆகியோர் கப்லாவை முன்னோக்கித் தொழ இயலாவிடில்  அதை  முன்னோக்கியே ஆக வேண்டும் என்ற அவசியம் எதுவுமில்லை ,
“” ஆனால்  நீங்கள் பயந்த நிலையில்  இருந்தால் நடந்து கொண்டோ அல்லது சவாரி செய்து கொண்டோவாகிலும் தொழுதுகொள்ளுங்கள்  ”      ( 2 : 239 )

மேற்காணும்  திருவசனத்திற்கு  இப்னு  உமர் ( ரழி )  அவர்கள் “”  கிப்லாவை  முன்னோக்கியோ அல்லது முன்னோக்காமலோ ( தொழுது கொள்ளுங்கள் ) என்று விரிவுரை செய்துள்ளார்கள்.” ( புகாரீ )
இவ்விக்கியானத்தை  அடிப்படையாகக்  கொண்டு  மேற்காணும்  பயந்தோடுபவர், நோயாளி, நிர்பந்த நிலையில் உள்ளவர்கள் தமது பர்லான தொழுகையின் போது கிப்லாவை முன்னோக்குவது கட்டாயமில்லை என்பதை அறிகிறோம். ( இன்ஷா அல்லாஹ் தொடரும் )

உங்கள்  சந்தாக்களைப் புதுப்பித்து தீன் பணிக்கு எங்களுக்கு உதவுங்கள் !
எதைக் கொண்டு நோன்பு திறப்பது ?
ஸல்மானு பின் ஆமிர் ( ரழி ) அறிவித்துள்ளார்கள்  :
நீங்கள்  நோன்பு  திறக்கும்  போது  பேரீத்தம்  பழத்தால் திறவுங்கள்.  ஏனெனில்  நிச்சயமாக அது பரகத் வாய்ந்தாகும். அது கிடைக்காவிடில் தண்ணீரால் திறந்துகொள்ளுங்கள் நிச்சயமாக அது பரிசுத்தமானதாகும்.( திர்மதீ )
ரமழானில் பகற்கால நோன்பு, இரவுகாலத் தொழுகை ஆகியவற்றின் பலன்
ஒருவர்   நன்னம்பிக்கை,  நல்லாதரவுடன்  ரமழானில்  நோன்பு  நோற்றல்  அவரது  முந்தைய பாவங்கள்  மன்னிக்கப்படும். ஒருவர் நன்மைபிக்கை, நல்லாதரவுடன் ரமழானில் நின்று தொழுதால் , அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும். ஒருவர் நன்னம்பிக்கை, நல்லாதரவுடன் “” லைலத்துல கத்ரில்”நின்று தொழுதால் அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி ( ஸல் ) கூறினார்கள். அபூஹூரைரா ( ரழி ), ( புகாரி, முஸ்லிம் ).

நபிவழித் தொகுப்பு வரலாறு
தொடர் Š 15
அபூ அஸ்மா
ஆரம்பகாலத்தில் ஹதீஸ்களை ஒட்டுமொத்தமாக சேகரித்தவர் அணியில்
2. ஹிஜ்ரீ 150 ல் மக்காவில் அப்துல் மலிக்இப்னு ஜூரைஹ் ( ரஹ் ) என்பவரும்.
3. ஹிஜ்ரீ 153 Šல் யமனில் மஃமருபின் ரா´த் ( ரஹ் ) என்பவரும்
4. ஹிஜ்ரீ 157 Šல் சிரியாவில் இமாம்அவ்ஜாயீ ( ரஹ் ) அவர்களும்
5. ஹிஜ்ரீ 161 Šல் கூஃபாவில்இமாம ஸூஃப்யானுஸ் ஸவ்ரீ ( ரஹ் ) அவர்களும்.
6. ஹிஜ்ரீ 167 Šல் பயராவில் ஹம்மாதுப்னு ஸலமா அவர்களும்.
7. ஹிஜ்ரீ  181 Šல்   ஃகுராஸானில்  அப்துல்லாஹ்பின்  முபாரக்  அவர்களும்  ஹதீஸ்களைக்  திரட்டி நூலாக்கும் பணியில் முன்னணிச் சிறப்பாளர்களாக திகழ்ந்தார்கள்.

8. இமாம் மாலிக் பின் அனஸ் ( ரஸ் ) : Š ( தோற்றம் ஹிஜ்ரீ 93 மறைவு 179 ) இவர்கள் ஒருவருக்கும் மட்டும் தான் மதி²வில் இமாம் ஜூஹ்ரீஅவர்களுக்கு பிறகு ஹதீஸ்களைச் சேகரித்துத் தொகுக்கும் பாக்கியம் கிடைத்துள்ளது. இவர்கள் நாஃபிஉ, ஜூஹ்ரி முதலிய சிறந்த அறிஞர் பெருமக்களிடத்தில் ஹதீஸ்கலை பயின்றுள்ளார்கள்.  இவர்களின்  ஆசிரியர்களின்  தொகை  900  ஆகும்.    இவர்களிடமிருந்து   ஹிஜாஸ்,  சிரியா,  இராக், பலஸ்தீன்,  எகிப்து,  ஆப்பிரிக்கா, ஸ்பெயின் முதலிய தேசங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் நேரிடையாகப் பணன் அடைந்துள்ளனர்.

இவர்களின்   மாணவர்களில்  ஹிஜ்ரீ  175 Š ல்  லைஸ் பன் ஸஃது என்பவர்களும் 181 Š ல்  அப்துல்லாஹ்  பின்  முபாரக்  அவர்களும்,  189Šல்  இமாம் முஹ்ம்மது  பின்  ஹஸனுஷ் ஷைபானீ அவர்களும், 204 Š ல் இமாம்ஷாபியீ ( ரஹ் ) அவர்கள் போன்றபிரபல அறிஞர் பொருமக்களும் இடம்பெற்றிருக்கிறார்கள்
இக்கால்  கட்டத்தில்  அநேக  ஹதீஸ்  தொகுப்புக்கள்  தயாரிக்கப்பட்டடன. அவற்றுள் இமாம் மாலிக் ( ரஹ் ) அவர்களின் “” முஅத்தா ” எனும் நூல் மிகவும் மேலான ஸ்தானத்தை வகிக்கிறது.
இது  ஹிஜ்ரி  130 Š 141 – க்குமிடையில்  தயாரிக்கப்பட்டது.  இதன்  மொத்த அறிவிப்புகள் 1700 ஆகும். அவற்றில்  மர்ஃபூஉ எனும் மிக உயர்ந்த வகையைச் சார்ந்தவை 600-ம் , “” வகையைச்  சார்ந்தவை  613 -ம்,  தாபியீன்களின்  சொற்கள் 285 Š ம்  இடம் பெற்றிருக்கின்றன. ”

இக்கால கட்டத்தில் உருவாக்கப்பட்ட வேறுசில ஹதீஸ் நூல்களின் விபரமும் அவற்றின் பெயர்களும் பிள்வருமாறு : –
1. ஹிஜூரீ 161 Š ல் ஜாமிஉஸ் ஸூஃபய்Vனுஸ் ஸவ்ரி
2. ஹிஜூரீ 181 Š ல் ஜாமிஉமுபாரக்
3. ஹிஜூரீ 175 Š ல் ஜாமிஉஸ்  இமாம் அவ்ஜாயி
4. ஹிஜூரீ 150 Š ல் ஜாமிஉ  ஸூçரிஹ்
5. ஹிஜூரீ 183 Š ல் கிதாபுல் ஃகராஜ்காழீ அபூயூஸூபு
6. ஹிஜூரீ 189 Š ல் கிதாபுல் ஆஸார் இமாம் முஹம்மத் ஆகியçயாகும்
இக்கால கட்டத்தில் தான் நபி ( ஸல் ) அவர்களின் ஹதீஸ்களையும் ஸஹாபாக்கள் , தாபீயீன்களின் சன்மார்க்கத் தீர்ப்புகளையும் ஒரே தொகுப்பாக இணைக்கப்பட்டது. எனினும் அவற்றில் ஹதீஸ் இன்னவை,  சஹாபாக்களின் அறிவிப்புகளும், தாபியீன்களின் சொற்களும் இன்னவை என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மூன்றாம் காலக் கட்டம்
இக்கால கட்டம் ஏறத்தாழ ஹிஜ்ரி இரண்டாம் நூற்<ண்டின் பிற்பகுதியில்  ஆரம்பித்து நான்காம் நூற்<ண்டின் இறுதிவரை கொண்டதாகும்.

இக்கால கட்டத்தில் சிறப்புகள் பின்வருமாறு : –
1.  ஹதீஸ்களை ஸஹாபாக்கள், தாபியீன்களின் சொற்களில் இருந்து தனியாகப் பிரித்தெடுத்தல்.
2.  அவ்வாறு  பிரித்தெடுக்கப்பட்டவற்றிலிருந்து ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்பட்டவற்றை மட்டும் தனியாகத் தொகுத்த,  பின்னர் அவற்றிலிருந்து ஆய்ந்து தெளத்து வடித்த வி­யங்களை மூன்<ம் கால கட்டத்திய பெரிய நூல்களில் இணைத்தல்

3. இக்காலட்டத்தில் ஹதீஸ்களைத் திரட்டுவது மட்டுமின்றி அவற்றைப் பாதுகாப்புச் செய்வதற்காக வேண்டி என்றே அவை சம்பந்தப்பட்ட நுற்றுக்கு அதிகமான கலைகளுக்கு முன்னேற்பாடு செய்யப்பட்டு விட்டது. இவ்வடிப்படையில் ஆயிரக்கணக்கான நூல்கள்  தயாரிக்கப்பட்டுவிட்டன. அவற்றில் மிகச் சுருக்கமாக சில கலைகலை மட்டும் கீழே அறிமுகம் செய்யப்படுகிறது.

1. ஹதீஸ் அறிவிப்பாளர்களின் பெயர்கலை அறிந்துகொள்ளும் கலை !
இக்கலையில்  ஹதீஸ்  அறிவிப்பாளர்களின்  பெயர்கள்,  தன்மைகள்,  பிறந்த  காலம்,  அவர்களின் ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விக்காக அவர்கள் செய்த பயணங்களின் விபரம், இன்னவர் நம்பகமானவர், இன்னவர் நம்பத்தகாதவர் என்பது பற்றி ஹதீஸ் கலா வல்லுநர்களின் தீர்க்கமான முடிவுகள் விரிவாக  விவரிக்கப்பட்டுள்ளன.  இக்கலை  மிகவும்  விசாலமானதும்,  பயன்  மிக்கதுமாக  இருப்பதுடன்  இதயத்தை  ஈர்க்கும்  தன்மை  வாய்ந்த  கலையுமாகும்.

இக்கலையின் பய²க 5 இலட்சம் ஹதீஸ் அறிவிப்பாளர்களின் சுருக்க வரலாறுகள் பாதுகாக்கப்பட்டிருப்பதை உணர்ந்து இது உலக அரங்கில் எச்சமுதாயத்தவராலும் சாதிக்க இயலாத ஒப்பற்றதோர் சாதனை என்பதை அறிந்து உலகமே வியக்குகிறது.

இக்கலை சம்பந்தமாக நுற்றுக்கணக்கான நூல்கள்தயாரிக்கப்பட்டிருக்கின்றன.அவற்றில் ஒரு சிலவற்றின் பெயர்களும் விபரங்களும் வருமாறு :

1. ( அ ) தஹ்தீபுல் கமால் :
இயற்றியவர் இமாம் யூசுபு பஜீ ( மறைவு ஹி4ரி 742 ). இக்கலையின் அனைத்து நூல்களின் இந்நூலே அதிமுக்கியமானதும்,  நம்பகமானதுமாகும்.
( ஆ ) தஹ்தீபுக் தஹ்தீபு :
இயற்றியவர்  இமாம்  ஹாபிழ்  இப்னுஹஜர்  அஸ்கலானீ  ( ரஹ் )  அவர்களாகும்.  இவர்கள்  புகாரீயின் மிகச் சிறந்த   விரிவுரையாளருமாவார்கள். இது 12 பாகங்களைக் கொண்டது.
( இ ) தத்கிரத்துல ஹூஃப்ஃபாழ் :
இயற்றியவர் அல்லாமா தஹபீ அவர்கள் ( மறைவு ஹிஜ்ரீ 748 )                                                                                      ( இன்ஷா அல்லாஹ் தொடரும் )
———————————————————————————————————————————–

ஸஜ்தா இல்லை இயல்……………………!
ஷைத்தானால் தொல்லையே !
நல்லம்பல் Š ஷேக் அலாவுதீன்
ஈமான் கொண்டவர்களே ! நீங்கள் ருகூஃவு செய்யுங்கள் இன்னும் ஸஜ்தா செய்யுங்கள்.  இன்னும் உங்கள் ரப்பை வணங்குங்கள் மேலும் நீங்கள் வெற்றி பெறும் பொருட்டு நன்மையே செய்யுங்கள்.  22 : 77

என்று வல்ல அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான் ஆனால், முஸ்லிம்கள் எனப்பெயர் மட்டும் வைத்துக் கொண்டுத் திரியும் பெரும்பாலானச் சகோதரர்கள் தொழுவதே இல்லை ! சிலர் சில நாட்கள் தொழுவதும், பலநாட்கள் தொழாமல் இருப்பதும், கேட்டால் முக்கியமான வேலை என்றும் அல்லது கால்வலி, இடுப்பு வலி, மூட்டுவலி என்றும் காரணம் சொல்கிறார்கள். இன்னும் சில அதிசயமானவர்கள் தொழுகை ஒரு உடற்பறிசித்தான் என மிக இலேசாகச் சொல்லி விடுகி<ர்கள். ஆனால் வெள்ளிக்கிழமை ஜூம்ஆவுக்கு மட்டும் வாசனைத் திரவியங்கள் பூசி வழவழப்பான உடைகளை அணிந்து கொண்டு இமாம் தக்பீர் கட்டும்வரை பள்ளிவாசல் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு வாய்கிழிய அரட்டை அடித்துகொண்டு சினிமா,  அரசியல் விவகாரங்களை அலசிவிட்டு, அடுத்த சகோதர சகோதரிகளைப் பற்றி புறம்பேசி முடிந்துவிட்டு தக்பீர் சப்தம் கேட்டதும் தலை தெரிக்க ஒடிவந்து அவசரமாக தொழுகையில் கலந்துகொண்டு சலாம் கொடுத்ததும் இமாம் துவா என்ற பெயரில் எதையாவது ஓத இவர்கள் மூச்சுவிடும் போதெல்லாம் ஆமீன் போட்டுவிட்டு, உடனே வந்த வேகத்தில் வீட்டுக்குத் திரும்பி ஓடும் போது, தாம் என்னவோ வாழ்நாள் முழுவதும் தொழுதுவிட்டது பொல் நினைத்துக் கொண்டு நானும் முஸ்லிம் தான் என்ற போலி எண்ணத்தில் காலரை தூக்கி விட்டுக்கொண்டு செல்லும் அவலநிலையைத்தான் இன்று காணமுடிகிறது.
ஆனால் இவர்கள் நிச்சயமாக அல்லாஹ் ( ஜல் )வை அஞ்சித் தொழுவதில்லை. வெள்ளிக்கிழமைக் கூட தொழாதவன் என்று அடுத்தவர்கள் பேசிவிடக் கூடாது என்ற பீதியில்  தான் இந்த வெள்ளிக்கிழமை வெளிவே­ம் .வெள்ளிக்கிழமை ஜூம் ஆ மட்டும் தொழுதுவிட்டால் போதும் நாமும் முஸ்லிம் தான் என்று எண்ணிக் கொண்டார்களா ?
இன்னும் ( கவனமற்ற ) தொழுகையதளிகளுக்குக் கேடுதான் அவர்கள் எத்தகையோர் என்றால், தம் தொழுகையில் பராமுகுமாக இருப்போர் . அவர்கள் பிறக்குக் காண்பிக்கவே தொழுகிறார்கள். ( 107: 4-6 )

இந்த இறை வசனம் அவர்களை நோக்கிக் கூறப்படுவது போல் உள்ளது அல்லவா ?
ஆனால்  இவர்களின்  பெரும்பாலோர் தம் உடலை வருத்தி பொருளை செலவழித்துப் பிரயாணத்தை மேற்கொண்டு வலிமார்களின் கப்ருகளைத் தேடிப் பிடித்து, அந்த  கப்ரடியில்  ஸஜ்தாவில்  விழுந்துத்  தங்கள் நெற்றியைப்  போட்டு  மணிக்கணக்கில்  தேய்த்து,  அழுது  புலம்புகிறார்கள்.  என்னே இவர்கள்பேதமை !

வல்ல  அல்லாஹ்வுக்குச்  ஸஜ்தா  செய்வதென்றால்  மூட்டுவலி  வந்து விடுகிறது.  கப்ருகளில்  விழுந்து  புரண்டு  அல்லாஹ்வினாலும்  நபி (ஸல் ) அவர்களாலும்  தடுக்கப்பட்ட  ஸஜ்தாவைச்  செய்வதென்றால்  இவர்களுக்குப்  புத்துணர்வு  பிறந்து  விடுகிறது.  இத்தகையவர்கள் நபி ( ஸல்)  அவர்களின் இக் கட்டளையை சிந்திப்பார்களாக.
நீ  எனது  கப்ருக்கு  அருகில்  நடந்து சென்றால்  அதற்கு  ஸஜ்தா செய்வீரா?  என்று  நபி(ஸல்)  அவர்களின்  என்னிடம்  கேட்டார்கள்.  அவவ்வாறு  நான் செய்ய மாட்டேன் என பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம், கப்ருகளுக்குச் ஸஜ்தா செய்யாதீர்கள் ! என்றார்கள். கைஸிம்னு சயீத் (ரழி); அபூதாவூத்

இன்னும் சில தரீக்காக்காரர்கள் தொழுகையைப் பேணி கடமையான ஸஜ்தாவைச்  செய்வதில்லை. கேட்டால் நாங்கள் படித்தரத்தில்(?) உயர்ந்து விட்டோம் என்று சரடு விடுகின்றார்கள்  அதே நேரத்தில் தங்கள் பீர்கள் ஷேக்குகள் பாதத்திற்ழ ஸஜ்தா செய்து தங்கள் நெற்றிக்கு மெருகேற்றிக் கொண்டு திரிகிறார்கள். அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்வதைவிட தங்கள் ஷேக்மார்களின் பாதம் உயர்வானதாகத் தெரிவதுதான்  இவர்களின் உயர்ந்த படித்தரம் (?) போலும் !இத்தகையவர்கள்  கீழ்கண்ட  திருவசனத்தையும்  நபி ( ஸல் )  அவர்களின் கட்டளையையும் சிந்திப்பார்களாக ! திரை அகற்றப்பட்டுவிடும் நாளில் ஸூஜூத் செய்யும்படி அவர்கள் அழைக்கப்படுவார்கள் ஆனால் அவர்கள ( அதற்கு ) இயலாது போய்விடுவார்கள்.

திரை அகற்றப்படுவார்கள். ( அவ்வாறு ஸூஜூது செய்வதற்கு) அவர்கள்இயலாதவராகிவிடுவர். அவர்கள் பார்வைகள் கீழ்நோக்கி இருக்கும் இழிவு அவர்களைச் சூழ்ந்து கொள்ளும். ( இம்மையில் ) அவர்கள் சுகமாயிருக்கும் போது ஸூஜூது செய்யும் படி அழைக்கப்பட்டனர். ( 68 : 42 : 43 )

அபூஹூரைரா ( ரழி )  அறிவித்துள்ளார்கள் :
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள்  :  நான் ஒருவரை மற்றொரு  வருக்கு  ஸூஜூது செய்து  கட்டளை  இடுவதாயிருந்தால் ஒரு பெண்ணை அவளது கண வருக்கு ஸூஜூது செய்ய வேண்டும் என்று கட்டளை இட்டிருப்பேன். ( திர்மதீ )

( நபியே ) ­ரீ அத்தின் ஒரு வழியில் தான் நாம் உம்மை ஆக்கி இருக்கிறோம். ஆகவே அதனையே நீர் பின் பற்றி நடப்பீராக ! அறிவற்றவர்களின் ( சொந்த ) விருஙப்பங்களை நீர் பின்பற்றாதீர்.  ( 45 : 18 )

தரீகத்,  ஹகீகத், மஹ்ரிபத் பாதையில் இருக்கிறோம், அதாவது ­ரீ அத்தைவிட உயர்ந்த படித்தரத்தில் ( ? ) இருக்கிறோம்,  நாங்கள் தொழுகையைப் பேண வேண்டியதில்லை. ஆனாலும் எங்கள் ரூஹூதொழுது விடுகிறது ( ? ) எங்களுக்கு ஹலால், ஹராம் இல்லை என்று ­ரீஅத்திற்கு மாற்றமாக ஏமாற்றித் திரிபவர்களை நோக்கிக் கூறப்படுவது போல் மேற்கூறிய வசனம் உள்ளது அல்லவா ?

இப்படிக் கடமையான ஸஜ்தாவிலிருந்து தடுக்கப்பட்ட ஸஜ்தாவை முலாம்பூசி மெருகேற்றி இவர்களுக்குக் காட்டப்பட்டுள்ளது. இது ஷைத்தானின் வழிகெடுப்பு அல்லாமல் வேறு என்னனவாக இருக்க முடியும் ? தங்களை ஸனது பெற்ற ஆலிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் சிலரும் இவ்வாறு தடுக்கப்பட்ட ஸஜ்தாவுக்கு ஆலவட்டம் சுற்றுவது தான் மிக வேதனைக்குரிய வி­யம்.

ஷைத்தான் கீழ்கண்டவாறு அல்லாஹ்விடம் சபதம் செய்து இருப்பதை அல்லாஹ்வே சொல்லிக் காட்டுகிறான்.
( இப்லீஸ் ) நீ என்னை வழிகெட்டவனாக வெளியேற்றி விட்டதன் காரணத்தால் ( ஆதமுடைய சந்ததியரான ) அவர்கள் உன்னுடைய நேரான பாதையில்  உட்காந்து கொள்வேஙன் என்று கூறினான்.

பின் நிச்சயமாக நான் அவர்களின் வலப்பக்கமும், இடப்பக்கமும் முன்னும் , பின்னும் வந்து  ( அவர்களை வழிகெடுத்து)க் கொண்டிருப்பேன் ஆதலால் நீ அவர்களில் பெரும்பாலானோரை உனக்கு நன்றி செலுத்து வோர்களாகக் காணமாட்டாய். ( 7 : 16, 17 )

அதற்கு இறைவன் நீ நிந்திக்கப்பபட்டவனாகவும், வெறுட்டப்பட்டவனாகவும், வெளியேறி விடு . அவர்கள் உன்னை பின்பற்றுவோரையும், உங்கள் யாவரையும் கொண்டு நரகத்தை நிரப்புவேன் என்று கூறினான. ( 7 : 18 )
இப்லீஸ், அல்லாஹ்வினால் ஏன் சபிக்கப்பட்டான் ?  ஏன் நிந்திக்கப்பட்டான் ? ஏன் விரப்பட்டான் ? அதை நாம் அவசியம் சிந்த்க்க வேண்டும்.

பின்னர் நாம் மலக்குகளை ஆதாமுக்குப் பணி ( ந்து ஸஜ்தா செய்)யுங்கள் என்று சொன்னபோது இப்லீçஸ்த் தவிர மற்ற அனைவரும் ஸஜ்தா செய்தனர்அவன் ( இப்லீஸ் ) மறுத்தான் ; ஆணவமும் கொண்மான் இன்னும் அவன் காபிர்களில் ஒருவனாகிவிட்டான். ( 2 : 34 )

அல்லாஹ்வின் கட்டளையாகிய ஸஜ்தா செய்வதை மறுத்தான். அதனால் தான் சபிக்கப்பட்டான்  நிந்நிக்கப்பட்டான்,  வெறுட்டப்பட்டான் .அதுபோல் மனிதனைத் தனக்கு( மட்டும் )ஸஜ்தா செய்யச் சொல்லி கட்டளை இட்டுள்ளான். அந்த வல்ல நாயனின் கட்டளைக்கு மனிதனும் மாறு செய்தானேயானால் 7-18 ஆயத்தில் சொல்லியது போல் ஷைத்தானைப் பின்பற்றிய காரணத்தால் ஷைத்தானுடன் சேர்ந்து நாகை நிரப்புவான் என்பதில் ஐயமில்லை.

ஆகவே அன்புச் சகோதர, சகோதரிகளே !கடமையாக்கப்பட்டுள்ள வேளைத் தொழுகையில் அல்லாஹ்வுக்கு ஸஜ்தா செய்து அவன் கட்டளைக்க அடிபணிய முன்வாருங்கள். அறிவற்றவர்களின் விருப்பங்களைப் பின்பற்றி நஷ்டமடைந்தோர்களில் ஒருவராகி விடாதீர்கள். எவன் ஐவேளைத் தொழுகையின் மூலம் அல்லாஹ்விக்கு ஸஜ்தா செய்ய வில்லையோ ! நிச்சயம் அவனுக்கு ஷைத்தானால் தொல்லையே !!
ஸஹர் உணவு பரகத்மிக்கது !

அனஸ் ( ரழி ) அவர்கள் அறிவித்துள்ளார்கள் !
நீங்கள் ஸஹர் உணவு அருந்துங்கள்! ஏனெனில் நிச்சயமாக ஸஹர் உணவில் பரகத் உள்ளது” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.(புகாரி, முஸ்லிம் )
——————————————————————————————————————————————–
சமூகவியல்  :
7. எது நபி வழி !

புலவர் :  செ .  ஜஃபர் அலீ பி லிட் .

மனிதன்  சிந்தனை  செய்யக்கூடியவன்.  சிந்தித்து  தெளிவு  பெறாத   எவரும்   முழு  மனிதராகார்.   இப்புவுயையும் Š விண்ணையும்  படைத்த  அதற்குத் தேவையான  அனைத்துப் பொருள்களையும் படைத்து பயன் பெற  மனிதனையும்  படைத்து,  அம்னிதனுக்கு  தலையாய  முதன்மையான கடமையாக உணர்வுடன் தன்னை வணங்க வேண்டும் என்பதையுட் வலியுறுத்ழகின்றான் எல்லாம் வல்ல இறைவன் !

பூந்தோட்டம் ஒன்றக்கு செல்கின்ற ஒருவன் அம்மலர்களைப்பார்த்துப் பரவசப்பட்டு பூக்கள் சிலவற்றை பறித்துக்கொண்டு வந்து விட்டால் அவனுடயை பகுத்தறிவால் எப்பயனும் அவனுக்கு இல்லைமாறாக இம்மலருக்கு இத்தனை வண்ணங்களைக் கொடுத்துள்ள இறைவனின் ஆற்றல்தான் என்னே ! என்று வியந்து “”அல்ஹம்துலில்லாஹ் ” என்று புகழ்ந்து நன்றியுணர்வை வெளிப்படுத்தினால் பகுத்தறிவால் பெற்ற பயன அவனுக்கு ஏற்படும்.

ஏதோ மனிதனாகப் பிறந்து விட்டோம் : உயிர் உள்ளவரைவாழ்ந்தே ஆக வேண்டும் ;  அதற்காக பொருளீட்ட வேண்டும் ; மணம் முடிக்க வேண்டும். இவ்விரண்டுக்கும் சமுதாயத்தோடு ஒத்துப்போக வேண்டும் என்று எண்ணத்தில் சற்றும் சிந்திக்காமல், மார்க்கம் கட்டளையிடாத, மதாதையர்கள், ஹஜ்ரத்மார்களின் சொல்லாகிய மெளலூது, மீலாது பாத்தியாக்களை மார்க்கமாகக் கொள்கன்றனர்.

இம்மாதிரி சிந்திக்கமால் செயல்படும் சகோதரர்களைப் பார்த்து நீ மார்க்கப்படி நடக்காமல் மூர்க்கமாக செயல்படுகின்றாயே ! அல்லாஹ்வின் கட்டளையையும் , நபி( ஸல் ) அவர்களின் போதனைகளையும் கவனித்தாயா ? என்று கேட்டால், அதற்குத்தான் ஹஜ்ரத் இருக்கின்றாரே அவர் சொல்லாததை நீ ஏன் சொல்கிறாய்? என்று நம்மைப்பார்த்து கேட்கின்றனர். நபிவழி ( நம் வழி ) அதுவே என்று வாயளவில் கூறுகின்றவர்கள் போர்டு எழுதிபள்ளிவாசலில் தொங்க விடுபவர்கள்.

“” எது நபிவழி ” என்று தெரிந்துகொள்வதில் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதில்லை. பெயருக்கு முஸ்லிம்களாக இருப்பவர்கள் வாயிலிருந்து வருகின்றவைகள் சிந்தனையுடன் கூடியவை அல்ல  “” ­ரீ அத் ” நமது உயிர்.  “” ­ரீ அத்படி நடப்போம் ” என்று கோ­ம் போடுபவர்கள் “”  ­ரீ அத்” என்பது எது ? அறைக் கட்டளைகள் என்ன சொல்கின்றது? நபி( ஸல் ) அவர்கள் கூறுவது யாது ? என்பதை கவனிக்கத்தவறிவிடுகின்றனர்.

எவர்கள் ( நம்முடைய வசனங்களை ) நிராகரித்து விட்டார்களோ அவர்லகளுக்க நரக நெருப்புத்தான் கிடைக்கும். அவர்கள் இறந்து போகும் விதத்தில் ( அதில் )அவர்களுடைய காரியம் முடிவு செய்யப்பட மாட்டாது. ( வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கும் பொருட்டு இறக்காது உயிருடனே இருப்பார்கள் ) அன்றி, அந்த வேதனையில் அவர்களுக்கு ( ஒரு சிறதும் ) குறைக்கப்படவுமாட்டாது. இவ்வாறே சகல நிராகரிப்போருக்கும் நாம்  கூலி கொடுப்போபம்.
( அல்குர் ஆன் 35 : 36 )

எவன் அல்லாஹ்வையும்,  அவனுடைய தூதரையும் ( உண்மையாகவே ) விசுவாசங் கொள்ளவில்லையோ ( அவன் சிராகரிப்பளன்தான் ஆகவே ) அத்தகைய நிராகரிப்போனுக்கு நரகத்தையே உறுதியாக நாம் சித்தப்படுத்தி வைத்திருக்கிறோம். ( அல்குர் ஆன் 48 : 13 )

நபி ( ஸல் )அவர்கள்  எப்படி வாழ்ந்து காட்டினார்களோ,  அதுதான் நமக்கு முன்மாதிரி ! மனித வாழ்க்கையில் நிகழக்கூடிய எந்த ஒரு சிறு செயலுக்கம் முன் மாதிரி இல்லாமல் இல்லை. உங்களுக்கப்பிரியமானவர்கள் நடந்து காட்டுவது நபிவழி அன்று ! மாறாக உண்மையான நம்பகமான நபிவழிகளை, நபிகளார் தம்வாழ்வு Š வாக்குகளிலிருந்து நீங்கள் அறிந்து நடப்பதுதான் மார்க்கத்தை புரிந்து செயல்படுவதாகும்.
காலங்காலமாக நடந்துவரும் செயல்கள் எல்லாம் நேரானவை ஆகா ! எது நேராவை என்று விளங்கிச் செயல்படுவதே மனித பகுத்தறிவுக்கு உகந்தாகும்.

நபி ( ஸல் ) அவர்கள்  குறை´க் காபிர்களைட்த திருத்தும் போது “”  எங்கள் மூதாதையர்கள் செய்து வந்தவைகளைத் தானே நாங்கள் செய்கின்றோம் அவர்கள் அறிவீனர்களா ? ” என்று கேட்டான் ; அவர்கள் வினவியது நியாயம் தான் என்று, அன்று பெருமானார் ( ஸல் ) அவர்கட்ள சம்மா இருந்து விட்டால், இன்று நீங்களும், நாங்களும் எவ்வாறு முஸ்லிம்களாக இருப்போம்? அன்று அவர்கள் கூறியதையே இன்றைக்கு நீங்களும் கூறுகன்றீர்கள் ;  “” இத்தனை காலமாக உலமாக்கள் சொல்லாததை இவர்கள் சொல்ல வந்து விட்டார்கள் ” எனறு “” உங்கள் கூற்றுக்கு ஆதாரத்தைக் காட்ட இயலுமா? என்று மார்க்கத்தை முறையாக விளங்கியவர்கள் கேட்டால் விழி பிதுங்குகின்றனர்.
அல்லதஹ் நமக்குக் கொடுத்திருக்கக் கூடிய பகுத்தறவைப் பயன் படுத்தி, எது உண்மையான  நபி வழி என்பதை விளங்கி,  செயல்பட்டு இம்மையிலும் மறுமையிலும் வல்ல அல்லாஹ்வின் பேரருளைப்பெற்று வாழ்வோமாக ! ( ஆமீன் )
( இன்ஷா அல்லாஹ் வளரும்)
—————————————————————————————————————————————

ஹஜ்ரத்ஜு அவர்களிடம்  அன்பு வேண்டுகோள் !
கடந்த  50 ஆண்டுகளுக்கும் மேலாக அகில உலக அளவில் “”  தப்லீஃ” பணி நடைபெற்று வருவது அனைவரும் அறிந்ததே. இந்Vப் பணிமூலம் இஸ்லாமிய சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து வரும் மக்களிடையே ஓரளவு மறுமலர்ச்சி ஏற்பட்டு வருவதையும்யாரும் மறுக்க மாட்டார்கள்.

ஆயினும் “” தப்லீஃ ” பணியில் பயன்படுத்தப்படும் தஃலீம் தொகுப்புகளில் குர்ஆன், ஹதீஸூக்கு முரண்பட்ட பல சம்பவங்கள் இடம் பெற்றிருப்பதால்,  எதிர்பார்க்கும்  அளவுக்கு  மக்களிடையே மறுமலர்ச்சியை நம்மால் பார்க்க முடியவில்லை. நமது குறுகிய பார்வையிலேயே 200க்கும் அதிகமான முரண்பட்ட கருத்துக்களைப்  பார்க்கிறோம். அவை  அகற்றப்பட்டு குர்ஆன், ஹதீஸ் அடிப்படையிலான தஃலீம்  தொகுப்பு  அமைக்கப்படுமானால்  நல்லதொரு மறு மலர்ச்சியை முஸ்லிம் சமுதமாயத்தில்  எதிர்பார்க்கலாம்.  இந்த  நல்ல நோக்கோடு ஹஜ்ரத்ஜூ அவர்களிடம் கடந்த 19 – 3 – 88 சனிக்கிழமை கீழ்காணும் கடிதத்தை நேரில் டில்லி சென்று கொடுத்துள்ளோம் அவர்களிடம் இருந்து முஸ்லிம் சமுதாயத்திற்குப் பலன்தரும் ஒரு முடிவை எதில் பார்க்கிறோம்.

அனுப்புனர் :
அந்நஜாத்
51/.ய ஜாபர்ஷா தெரு,
திருச்சி Š 620 008.

பெறுநர் :
ஹஜ்ரத்ஜீ அவர்கள்
தப்லீஃமர்கஸ்
திஜாமுத்தீன்
புதுடெல்லி.

அஸ்ஸவாமு அலைக்கும் !
மதிப்பிற்கும், அன்பிற்கும் உரிய ஹஜ்ரத்ஜீ அவர்களின் கவனத்திற்குக் கொண்டு ஆவன செய்வதற்காகக்  கீழ்க்கண்டவைகளைச்  சமர்ப்பிக்கின்றோம்.

கடந்த  பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் முஸ்விம்களை, தொழுகையை முறையாகவும் நிலையாகவும் நிறைவேற்றி இதரவழி பாடுகளிலும் ஈடுபடச்செய்ய தப்லீஃ  என்ற  பெயரில் நடைபெற்று வரும் சேவை பிரசித்தமானது, இஸ்லாத்தின் அடிப்படைக்  கொள்ளைகளைக்  கூட அறியாமல்,  மெளட்டீகத்திலும் வழிகேட்டிலும்  உழன்று  இஸ்லாத்தை  விட்டு  அகன்று  நின்று  பெரும்பான்மை முஸ்லிம்களிடையே விழிப்புணர்ச்சியை ஊற்படுத்தி அவர்களை வீடும்,  ஊரும்,  நாடும்  விட்டு  பல்வேறு  ஊர்களுக்கும், நாடுகளுக்கும் பிரயாணம் செய்யும் மனப்பான்மையை வளர்க்கச் செய்தது தப்லீஃ செய்த மிகப் பெரும் சாதனை ஆகும். பாராட்டிற்குரிய சிறந்தசெயல்.  அல்ஹம்துலில்லாஹ் !

தொழுகையும்,  இதர  வழிபாடுகளும்  நிறைவேற்றப்படும்போது  அவை  இஸ்லாமியக்  கோட்பாடுகளின் அடிப்படையில் அமைந்து  இருந்தல் அவசியம் தப்லீக் இயக்கத்தால் தூண்டப்பட்டு இவைகளை நிறைவேற்றுபவர்களைப் பொறுத்த வரையில் இது காணப்படவில்லைதொழுகையையும்,  மற்ற  வழிபாடுகளையும்  நிறைவேற்றுபவர்களில்  பெரும்பாலானோர்  தவறானக்  கொள்கைகளாலும்,  நோக்கத்தாலும்  உந்தப்பட்டவர்களாக  இருக்கின்றனர். தொழுகையும் இதர வழிபாடுகளும் அல்லாஹ் ஈந்த திருமறையின் அடிப்படையிலும் ரசூல்(ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இவைகளின் அடிப்படையிலும்  மாத்திரம்  அமைந்தால்  அல்லாமல்  அவை  இஸ்லாமிய  முறையில்  நிறைவேற்றப்பட்டதாக  கருதவியலாது.

வழிகேட்டிலிருந்து “”தப்லீஃ” பணியால் மீட்கப்பட்டவர்கள் தாம் உண்மை இஸ்லாத்தை பின்பற்றி வாழ்கின்றோம் என்று கருதுகிறார்கள். ஆனால் அந்தோஅவர்களுக்கு ஊட்டப்பட்டவை குர்ஆன் ஹதீது இவைகளின் அடிப்படையில் உருவாகாத தவறான கருத்துக்களும், நோக்கங்களுமே ஆகும். இது உண்மையில்  அமைய  வேண்டுவதற்கு  மா<கவுள்ளது. அவர்கள் நம்பியுள்ள கோட்பாடுகளும் நோக்கங்களும் மனிதர்களால் உருவாக்கப்பட்டவை. தப்லீஃ தஃலீம் ஹல்காக்களில் வாசிக்கப்படும் கருத்துக்களில் பெரும்பாலானவை குர்ஆனுக்கும், ஹதீதுக்கும் முற்றிலும் முரண் ஆனவை. எனவே தப்லீஃ ஜமாஅத் கற்பித்தவைகளின் படி செயல்படுபவர்களின் அமல்கள் இஸ்லாமிய ரீதியில் இல்லாமல் இருப்பதால் மற்ற முஸ்லிம்களையோ இதர மதத்தினரையோகவருதில்லை.  மாறாக  மாற்று  மதத்தினரிடையே,   இஸ்லாத்தைப்  பற்றி  தவறான  அபிப்பிராயங்கள் உருவாகக் காரணமாகின்றன. மற்ற மதங்களின் கொள்கைகளுக்கேற்ப, சமுதாய பிரச்சினைகளில் ஈடுபாடு இல்லாமல் இருச்தால் மாத்திரமே ( சூபி ஸத்தைப் பின்பற்றி ) இதை வழிபாடு பூரணமாக நிறைவேற்றப் படவியலும் என்ற கருத்துக்கள் எடுத்து கூறப்படகின்றன. கராமத்துக்களும்,  அவை  போன்ற  நிகழ்ச்சிகளும் கூறப்பட்டு அவைகளுக்கு பிரதானமும்,  முக்கியத்துவமும்  அளிக்கப்படுகின்றன.  ஐம்பது  வருடங்களாக,  தப்லீஃ  உலகம்  முழுவதும்  செயல்பட்டு  வந்தபோதிலும்,  பொதுவாக மற்ற மதத்தினரை இஸ்லாத்தின் பால் ஈர்க்கத் தவறிவிட்டது.
எனவே  தஃலீம்  ஹல்காக்களில்   வாசிக்கப்படும்  நூற்கள்  மாற்றப்பட்டு  குர்ஆன்,  ஹதீதுகளின் போதனைகளை மட்டும் உள்ளடங்கியதாக வைக்கப்பட வேண்டும்.

நாங்கள் இங்கே எடுத்துரைப்வைகள், நீர் ஆராயாமல் மேல் எழுந்தவாரியாக எழுதப்பட்டவை அல்ல. பல வருடங்களாக பணியில் ஈடுபட்டோம். இஸ்லாத்தின் மறுமலர்ச்சியைக் காணும் ஆவலில், உண்மையான அறிவைத் தேட முனைற்தோம். கல்வியாளர்களோடு கலந்து ஆலோசித்தோம். நாங்கள் அணுகியவர்கள் எழுப்பிய சந்தேகங்களை குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் நிவர்த்தி செய்யமுயன்றோம். உண்மையான அறிய முனைந்த நாங்கள்  தஃலீம் நூற்களில்  பரவலாக  ஊடுருவி  விட்டக்   குறைகளைக்  கண்டோம்.   மேலும்  குர் ஆன்,  ஹதீது  இவ்விரண்டை மாத்திரமே எடுத்து இயம்பும் ஏடாக அந்நாஜத்தை தமிழ் மொழியில்  வெளியிட்டு முறையான கல்விகற்காத பாமர மக்களிடம் அது ஏற்படுத்திய விழிப்புயர்ச்சியைக் கண்டோம். எனவே தான் இவைகளை எழுத  முனைந்தோம்.  உலகம்  முழுவதும்  இஸ்லாத்தை  அதன்  தூய  வடிவில்  குர்ஆன்,  ஹதீது  இவ்விரண்டின்  அடிப்படையில்  பரப்ப,  தப்லீஃஜமாஅத்திற்கு  எல்லாவிதமான  அனுகூலங்களும்   சாத்தியங்களும்  உண்டாகி  இருப்பதால்,  நாங்கள் இக் கோரிக்கையை  உங்களிடன் சமர்ப்பிக்கின்றோம்.  விமர்சிக்க  வேண்டும் என்பதற்காக குறைகள் கூறப்படவில்லைஎங்களுடைய  அவாவும், இறைவனிடம் வேண்டும் துவாவும் இவையே-குர்ஆன் ஹதீஃது  இவைகளின்  அடிப்படையில் தூய இஸ்லாம் மக்களிடம் எடுத்துரைக்கப்பட்டு , அவர்கள் அல்லாஹ்வையும், அவனது ரசூல்( ஸல் ) அவர்களையும் மட்டுமே  வழிபட்டு  நடக்க  வேண்டும். தப்லீஃ ஜமாஅத் அதனை உருவகப்படுத்திய மவ்லானா இல்யாஸ் ( ரஅ ) அவர்கள் விரும்பியபடி அதன் தூய வடிவில் நிறைவான நிலையில் செயல்பட வேண்டும் என்ற ஆர்வமே எங்களை இவைகளை எழுதத் தூண்டியது.

எனவே, இன்று வாசிக்கப்படும் தஃலீம் நூற்கள் மாற்றப்பட்டு குர் ஆன், ஹதீது அவைகளை மாத்திரம் உள்ளடக்கி எழுதப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டால், நிச்சயமாக ஒரு புரட்சி ஏற்படும். முஸ்லிம்களிடையே குர்ஆன், ஹதீதுகளை நேரடியாகக் காற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் எழுந்துள்ள இந்நூற்றாண்டின் கால கட்டத்தில், முஸ்லிம்களுக்கு இது ஒரு பெரும் உதவியாக அமையும். பிற மதத்தினரையும், இன்ஷா அல்லாஹ் கவர்ந்து இழுக்கும். எங்களின் இந்த நியாயமான கோரிக்கைகளுக்கு ஏற்ற பதில் கிடைக்கும் என நம்புகின்றோம்.
இவண்,
. அபூ அப்துல்லாஹ்
ஆசிரியர் & வெளியிடுபவர்

அல்லாஹ்வின் பார்வையில் ஆலிம்கள் !
பு.க்ஷி. முஹம்மது அலி, சிங்கப்பூர்
ஆலிம்கள்  என்<ல்  யார்?  அவர்களின்  இலட்சணங்கள்  என்ன  என்பதைப்  பற்றி நாம் ஒவ்வொருவரும் வேண்டிய காலத்தின் கட்டத்தில் இருந்து வருகிறோம். காரணம்,  உண்மை  இஸ்லாத்தை  அறிந்து அதன்படி  செயல்பட  முன்வரும் ஒவ்வொருவரும்”” தான் அறிந்தது சரிதா² ?”, என்பதை பரீட்சித்துப்பார்க்க ஞானம் பெற்ற ஆலிம்களையே நாடவேண்டிய தேவையில் இருந்து வருகிறோம் உதாரணமாக , அந்நஜ்Vத் இதழ்களில் வெளிவரும்  சீர்திருத்தக் கட்டுரைகளையும்  ஹதீஸ்  தொகுப்புகளையும்  படிக்கும்  பொதுமக்களாகிய  நாம் “” அந்நஜ்Vத் ”கூறுவது சரிதானு என்று  உறுதி  செய்து கொள்ள நமது மஹல்லாவில்  உள்ள  ஆலிம்களிடம்  கேட்டு விசாரிக்கிறோம்.

நமது ஐயங்களுக்கும் நியாயமான கேள்விகளுக்கும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் தெளிவு செய்யவேண்டிய ஆலிம்கள் எனப்படுவோர், அந்நாஜ்த் தை படிக்காVர்கள்; அது வஹ்ஹாபி பத்திரிக்கை; சுன்னத் வல்ஜமாஅத்திற்கு முரணுன கொள்ளை உடைய பத்திரிக்கை என்று கூறி நம்மை திசை திருப்பி விடுகின்றனர். மேலும் நஜாத் பற்றி நாடெல்லாம் பொய்ப்பிரச்சார மூட்டைகளை அள்ளி வீசுகின்றனர்.

அந்நாஜ்த்Šவெளிவந்ததிலிருந்து இதுவரை ஒரு இதழைக் கூட தம் வாழ்நாளில் கண்ணெடுத்தும் பார்த்தே இராத( நாமாக ஒரு இதழை மாதிரிக்கு பார்க்கச் சொல்லி கொடுத்தாலும், நம் கண் முன்னேயே அதை உதாசீனப்படுத்தி , ஏதோ வி­ ஜந்துக்கள் தீண்டியது போல தூக்கி எறியும் ) உலகமாக்கள்  நாடெல்லாம் அள்ளி வீசப்படும் இந்த அவதூறுகளை அப்படியே நம்பிக்கொண்டு, மக்களில் ஒருசாரார் அந்த பொய்ப்பிரச்சாரத்திற்கு துணைபோவததையும் நாம்கண்ணுர கண்டு வருகிறோம்.

இவர்கள் உண்மையிலேயே இல்லாஹ்விற்கு பயந்த  தக்வாதாரிகளாக  இருக்கும்  பட்சத்தில் ஒரு முறையாவது “” அந்நாஜ்த் ”தை படித்திருந்தால், அதில் குர் ஆன், ஹதீஸிற்கு மாற்றமாக, முரணுக எதுவுமே இல்லையயன்பதை உணர்ந்திருப்பார்கள் Š ( அவர்கள் உணர்வு பெறும் காலம் இன்ஷா அல்லாஹ் விரைவிலேயே வரத்தான் போகிறது. )
நம் போன்ற வாசகர்கள் எத்தனையோ பேர் “”அந்நாஜ்த்”தை  கருத்தூன்றி  படித்து,  தெளிவுபெற்று  வழிகேட்டிலிருந்து  முற்றும் விலகி , நேர்வழி பெறும் வாய்ப்பு  இருந்தும்  இந்த  போலி  உலமாக்களின் பேச்சை  கேட்டு மனம் மாறி மீண்டும் தடம் புரண்ட சம்பவங்களை நாம் ஆங்காங்கு பார்த்தும், கேட்டும்வருகிறோம்.

இந்தக்கால்  சூழ்நிலையில்  போலி  உலமாக்களுக்கும்,  உண்மை  உலமாக்களுக்கும்,  உள்ள  வேற்றுமையை  உணர்ந்து நாம் தெளிவு பெறவேண்டிய நிலை ஏற்பட்டதினால் இந்த கட்டுரையை எழுதும் அவசியம் நமக்கு வந்திருக்கிறது. 3 வருடம், 5 வருடம், அல்லது 7 கூருடம் தொடர்ந்து ஒரு மத்ரஸாவில் ஓதி ஸனது( பட்டம்) வாங்கியவர் தான் ஆலிம் ;  பிக்ஹூ
மஸாயில்களை மனப்பாடம்  செய்து உள்ளத்தில் உருபோட்டவர் தான் ஆலிம்; கடகடவென்று மாட்டுவண்டி ஒடுவது போல குர் ஆன் வசனங்களை “” பட பட ” வென ஓதும் திறன் பெற்றவர் தான் ஆலிம் ; ஒரேமூச்சில் நீளமாக 15 நிமிடங்களுக்கு புரியாத பாஷையில் து ஆ ஓதத் தெரிந்தவர்தான் ஆலிம் என்பதாக நாம் ஆலிம்களுக்கு வரைமுறை கற்பித்து வைத்திருக்கி¼<ம்.

ஆனால் ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ் ஆலிம்கள் என்<ல் யார்  ? அவர்கள் எப்படி இருக்க லேண்டுமென்பதை மிக அழகாக  விளக்கமாக பின்வரும் வசனத்தில் விவரிக்கி<ன்.

“”இவ்வாறே மனிதர்களிலும் ஊர்வனவற்றிலும், கால் நடைகளிலும் பல நிறங்கள் இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்வின் அடியார்களில் அவனுக்கு அஞ்சுவோரெல்லாம் ஆலிம்கள் Š அறிஞர்கள் தாம். நிச்சியமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன் மிக மன்னிப்பவன் ”  ( 35 : 28 )

ஆம் தக்வா எனும் உள்ளச்சம் உடையவர்கள் தான் ஒரிஜினல் ஆலிம் என்பதை மிக நேர்த்தியாக வசனத்தில் அல்லாஹ்கூநுகி<ன். ஆலிம் பெருமக்களுக்கு அல்லாஹ் வரையறுக்கும் ஒரே இலக்கணம் “” தக்வா ” .
தக்வா என்<ல் என்ன ? பொதுமக்களாகிய நாம் நமது பழக்க பாஷையில் “”  தக்வா ” என்பதற்கு வல்லமை,  வலிமை என்று பொருள் கொண்டிருக்கிறோம்அத்தகைய தக்வா நமது தமிழக ஆலிம்களிடத்தில் நிறையவே   இருக்கிறது . மூன்று பேரை அடிக்கும் அளவுக்கு உடல்வாகு உடையவர்களாக பெரும்பாலான ஆலிம்கள் இருக்கி<ர்கள் மவ்லூது சாப்பாடுகளும், கத்தம் பாத்திஹா சாப்பாடுகளும்,  விதவிதமான பலகார பூரியதன  வகைகளையும் சாப்பிட்டு உடல் உரமாக வல்லமையாக பெரும்பாலானவர்கள் இருக்கி<ர்கள் .ஆனாங்ல இதற்கு பெயர் தக்வா அல்ல;  வேண்டுமானால் “” குவ்வத் ” என்று சொல்லலாம்.

ஆனால்  அல்லாஹ்  வரையறுத்த  தக்வா  என்பது உள்ளச்சம் எனப்பொருன்படும். எந்த ஒரு காரிறத்தை செய்யும்போதும் உள்ளச்சத்துடன் சகல நிலைகளிலும்   அல்லாஹ்விற்கு  எவர்  அஞ்சியவர்களாக  இருக்கி<ர்களோ  அவர்களைத்தான்  ஆலிம்கள்  என்று  அல்லாஹ்  கூறுகி<ன்.  ஆலிம்  என்<ல் “”இல்மை உடையவன் ” என்று பொருள்படும். இல்மு என்றால் அறிவு, அதாவது மார்க்க அறிவு இன்னும் சொல்லப்போனால் குர்ஆன், ஹதீஸைப்பற்றியஆழ்ந்த அறிவு என்றும் பொருள் கொள்ளலாம். ஆனால், குர்ஆன், ஹதீஸ் பற்றிய  ஆழ்ந்த  அறிவு  யாருக்கு பயன்படும் என்றால் தக்வாதாரிகளுக்குத் தான் என்பதை மார்க்க அறிவு, பாறையில் கொட்டிய மழைக்கு சமம்;  பிரயோஜனமே படாது.

மார்க்க அறிவு மட்டும் உள்ள ஒரு முஸ்லிம் அல்லாஹ்வுக்குசரியாக பூரணமாக வழிபட மாட்டான் உள்ளச்சம் உடைய மார்க்க அநிவை பெற்றவன் தான் அல்லாஹ்விற்கு சகல நிலைகளிலும் வழிபடுவான் என்பதற்கு ஒரு உதாரணத்தை பார்ப்போம்.

“” மார்க்கத்தின் தூணாக கருதப்படும் தொழுகையைப் பற்றி அறியாத முஸ்லிம்கள் வெகு சொற்பமானவர்களே. ஆனால் 90 % மக்கள் தொழுகைணைப் பற்றி நன்கு அறிந்த( இல்மு)வர்களாய் இருக்கிறார்கள் இன்னும் சொல்லப்போனால் தொழுகையின் முழு விபரத்தையும் அறிந்து  அதன்  உள்பர்ளுகள் எத்தனை,  வெளிபர்களுகள்  எத்தனை  வாஜிபுகள்  எத்தனை, சுன்னத்துகள்  எத்தனை  என்பதைப்  பற்றியயல்லாம்  நம்பர்கள்  போட்டு  மனப்பாடமாக சொல்லும் எத்தனையோ பேர், தொழாததின் காரணம் என்ன? தொழுகையை மிக அலட்சியமாக கருதுகிறார்கயே ஏன்? நிச்சயமாக அவர்களுக்கு தொழுகையைப்  பற்றிய இல்மு(அறிவு) இருக்கிறது.  ஆனால் அந்த அறிவை செயல்படுத்த தேவையான உள்ளச்சம்(தக்வா)  இல்லை. தக்வா இருந்தால் அவர்களால்  தொழாமல்  இருக்கமுடியாது .

ஆகையினால்  எந்த  ஒரு அமலையும்  அறிமுகப்படுத்த  தான்  “”இல்மு”  உதவுகிறது.  ஆனால்  “”தக்வா” தான்  அந்த  அமலை செய்வதற்கு வலியுறுத்துகிறது என்பதையும் மேற்கய்ட உதாரணத்தின் மூலம் நன்கு அறியலாம். வல்ல அல்லாஹ் மேற்கண்ட  வசனத்தில்  அடிப்படையில்  உலக  ஆலிம்கனை இரண்டு பிரிவாக பிரிக்கிறான்.
( 1 )    தக்வா இல்லாதவர்கள். ( இவர்கள் ஆலிம்களே அல்ல)

( 2 )  தக்Vவதாரியான ஆலிம்கள். முதலாவதாக தமிழகமெங்கம் நிறைந்து காணப்படும் மேற்கண்ட முதல் பிரிவினரைப்பற்றி கண்¼ணுட்டமிடுவோம்.

1. தக்வா இல்லாதவர்கள்
ஏழு வருடங்கள் வரை மத்ரஸாவில்  ஓதிய பெரும்பாலான  “”ஸனது”  வாங்கியவர்களுக்கு  இல்மு  இருக்கிறது.  எச்த  ஒரு  மஸாயிலுக்கும் அரபி  பிக்ஹூ கிரந்தத்தை  பார்த்து  விளக்கம் சொல்லும் ஆற்றல் இருக்கிறது. ஆனால் அதிமுக்கியமாக தேவைப்படும் “” தக்வா ” எனும், உள்ளச்சம் தான் இவர்களிடத் தில் இல்லை காரணம் இவர்கள்  போதிக்கப்படுகிறார்கள். குர்ஆனுக்கும், ஹதீஹூக்கும்  முரணான  மாற்றமான  எத்தனையோ  குப்பை  புத்தகங்களைத் தான்Š பாட நூல்களாக இவர்களுக்கு படிந்து கொடுக்கப்படுகிறது. உதவாக்கரை மஸாயில்களையும் உருப்படாத சட்டதிட்டங்களையும் இவர்களது மூளையில்  ஏற்றி குர்ஆன், ஹதீஸ் பக்கமே திரும்பாமல், ஏழு வருடங்கள் கூணுக்கியதை தவிர வேறு என்ன உருப்படியாக கற்று வந்திருக்கி<ர்கள்?

பொது மக்களாகிய நாம் இவர்களிடத்திலே சென்று அந்நஜாத்தில் வெளியான ஹதீஸ் தொகுப்புகளையும், சட்டங்களையும் பற்றி விளக்கம் கேட்டால் இவர்களுக்கு கோபம் வரத்தானே செய்யும். துர்ருல் முக்தாரும் ஆலும் கீரியும் தான் வேதவசனமாக போதிக்கப்பட்ட இவர்களிடத்தில் புகாரி, முஸ்லிம், போன்ற ஹதீஸ் கிரந்தங்களை தூக்கிக் கொண்டு போனால்  எப்படி  சகித்துக்  கொள்வார்கள்.  சில  மத்ரஸாக்களில் புகாரி,  முஸ்லிம்  போன்ற ஹதீஸ் நூல்களை அறவே  பார்க்கமால்  வெளிவருபவர்கள்  நம்மிடத்தில்  பதில்  சொல்ல  இயலாமல்  தயங்குகிறார்கள் ; தடுமாறுகிறார்கள். உள்ளுக்குள் புலம்புகிறார்கள். என்ன பதில் சொல்லி தப்பிப்பது என்று யோசனை செய்து திடீரென்று நம்மையே திருப்பி தாக்குகிறார்கள். அவர்கள் பயன்படுத்தும் முதல் ஆயுதம் என்ன தெரியுமா?  வஹ்ஹாபி  என்ற  பெயர்தான்.  அதற்கு  நாம் அசைந்து கொடுக்காமல் இருப்போமானால் இன்னொரு ஆயுதத்தை  பயன்படுத்துவார்கள்.”” சுன்னத் வல்ஜமாஅத்திற்கு மாற்றவான பத்திரிக்கை”  என்பார்கள்.

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நாம் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியான விளக்கம் சொல்லாமல்,  குர்ஆன் ஹதீஸிற்கு பல வி­யங்களில் முரண்படும்நிலையிலுள்ள பிக்ஹூ  கிதாபிகளை தூக்கி கொண்டுவந்து  நம்மிடம் காட்டுகிறார்கள் . நமக்கு “”அவாம்கள்” யன்ற பட்டத்தை சூட்டி உங்கனைப் போன்ற அவாம்கள் நேரடியாக குர் ஆன், ஹதீஸை புரிந்து கொள்ள முடியாததினால் தான்இது போன்ற பிக்ஹு களஞ்சியங்கள் இருக்கிறது என்று மார்தட்டுவார் கள். நம்மிடத்திலேயே பணம் வாங்கி,  நம் வீட்டில் சாப்பிட்டு,  நம் தயவில் வாழும் இவர்கள் நமக்கு சூட்டும் பெயர் அவாம்கள் Š பாமரர்கள்.

இத்தகு அதிமேதாவிகளில் ஒருவரான ஒரு நபருக்கும் எனக்கும் ஏற்பட்ட வாக்கு வாதத்தை இங்கு எழுதுவது பொருத்தமாக இருக்கும். சமீப காலங்களில் தொழுகை சம்பந்தப்பட்ட ஒரு புத்தகம் வெளிவந்தது. அதில் பெருமானுர்( ஸல் )அவர்கள் தொழுதவிம்பற்றி எழுதி இருந்தார்கள். பெருமானார்( ஸல் )அவர்கள் தக்பீர் கட்டும் போது தன் றெஞ்சின் மேல் இரு கைகளையும் கட்டியதாக ஆதாரபூஙர்வமான ஹதீஸ்களுடன்  எழுதி  இருந்தார்கள்  இந்த புத்தகத்தை எடுத்துக் கொண்டு மேற்படி நபரிடம் சென்றேன் ( அவர் ஹனபி மத்ஹபு  பள்ளியில்  இமாமத்  பணி  புரிகிறார்). அவரிடத்திலேயே இதைப்பற்றி விசாரித்த போது அவருக்கு வந்த கோபத்தையும் அவர் பேசிய அசிங்கமான வார்த்தைகளையும் எழுத என் பேனா கூசுகிறது.  இமாம் அபூஹனிபாவை விட  இந்த புத்தகத்தை எழுதியவன் சிறந்தவனா? என்று சரமாரியாக கேள்வி  கேட்க  ஆரம்பித்துவிட்டார்.  நானும்  விடாப்பிடியாக அப்புத்தகத்தை எழுதியவர் தனது சொந்தகருத்தை எழுதவில்லை; ஹதீஸ்களை ஆதாரமாக கொடுத்துள்ளார் யன்று பேசினேன். இறுதியாக தன் தரப்புவாதம் பலவீனமானதை உணர்ந்த அவர், “”ஹதீஸ்  கிதாபுகளில்  எங்கேயாவது  ஹனபி  மத்ஹபுகாரர்கள் செய்வது போல தொகுப்புளுக்கு கீழ் கை கட்டகூடாது?” என்ற  இருக்கிறதா? என்று என்னிடமே எதிர் கேள்வியை கேட்டார்.

அன்பு சகோதரர்களே!  இவரைப் போன்ற எத்தனையோ  நபர்கள் “”ஆலிம்கள்” என்ற போர்வையில் உலாவி வருகிறார்கள். இன்னம் கொஞ்ச காலத்திற்குபின்பு நெற்றியில் இரண்டு கைகளையும்  சேர்ந்து வைத்து “”இதுதான் தக்பீர்”  என்று சொன்னாலும் சொல்லிவிடுவார்கள் , இதற்கு ஹதீஸ் கிரந்தங்களில் ஆதாரம்  இல்லையே  என்று  சொன்னால்  “”நெற்றியில்  கட்டவே  கூடாது”  என்ற ரசூல்(ஸல்) எங்கேயாவது சொல்லி இருக்கியார்களா? என்று  நம்மிடமே எதிர் கேள்வியை போடுவார்கள்.

ஆகவே பொது மக்களாகிய நாம் இவர்களையயல்லாம்  “”ஆலிம்கள்”  என்று   நம்பி  பின்பற்றிவிடாமல்   எச்சிரிக்கையாக  இருக்க  வேண்டும்.  இவர்கள் போன்ற. இவர்கள் போன்ற “” போலி வேடதாரிகளை ”சரியான  முறையில் அடையாளம்  தெரிந்துகொள்ள  வேண்டும்.  அல்லாஹ் நம் அனைவரையும் இவர்களிடமிருந்து காப்பாற்றுவானாக அடுத்து, நமது கண்ணோட்டத்தில் வரும்,

2.  தக்வா தாரியான ஆலிம்கள்
தமிழக  மத்ரஸாக்களிலிருந்து   வெளிவரும்  “”ஸனது”  பெற்றவர்கள்  பெரும்பாலானவரிடத்தில்  “”தக்வா ” வை   எதிர்பார்ப்பது  இயலாது என்றாலும், அல்லாஹ்வின்  கிருபையால் ,  விதிவிலக்காக  சிலர்  இருக்கத்தான்  செய்கின்றனர்.   இவர்கள்,   மறைமுகமாக   “”அந்-நஜாத் ”தை  ஆதாரிக்கிறார்கள் , அந்நஜாத்தில்  இடம்பெறும்  கருத்துக்களையும், விளக்கங்களையும்  ஊன்றி  படித்து  உண்மையை  உணர்கிறார்கள்,  ஆனால்,  இவர்கள்  வெளிப்படையா அந்நஜாத்’தை பற்றி எடுத்து சொல்வதற்குத் தயங்குகிறார்கள். அதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

( 1 ) அந்நஜாத்தை வெளிப்படையாக ஆதரித்தால் முதல் கட்டாமாக இவர்களின் பணிபுரியும்பள்ளிவாசலிருந்து “” சீட்டு ”  கிழிக்கப்படுவார்கள். பெரிய எண்ணிக்கை உள்ள  உறுப்பினர்களை  கொண்ட  தன் குடும்பத்தை  இவர் ஒருவரே தன்  வருமானத்தை  கொண்டு  காப்பாற்றி வரும்  சூழ்நிலை  இருப்பதால்இமாமத் ” வேலை பறிபோனால் என்ன செய்வது என்ற ஆதங்கம்.

( 2 )  இதுகாலம்  வரை  மார்க்கம்  என்ற  பெயரில்  நடைபெற்ற பித்அத்களுக்கும், ´ர்க்கான செயல்களுக்கும் ஆதரவாக இருந்துவிட்டு திடீரென்று மனம்மாறி இவைகளை கண்டிக்க ஆரம்பித்தால் பொது மக்களிடமும், நிர்வாகத்திடமும் என்னபதில் சொல்வது என்ற தயக்கம் மேலும் இந்த சமூக தீமைகளை எடுத்துச் சொல்லி மக்களிடம் “” வஹ்ஹ்Vபி ” என்ற பட்டத்தை வாங்கிவிட்டால் பின் விளைவு என்னாகுமோ ? ! என்ற கவலை.

இந்த  இரண்டு  காரணங்கள்  தான்  மிக முக்கியமான  காரணங்களாகும்.  இதைப்  பற்றி  சற்று தைரியமாகவே சமீபத்தில் என்னடம் மனம்  விட்டு பேசிய இளம்  வயது  ஆலிம் ஒருவர், “” அனல் மீது விழுந்தபுழுவாக நான் துடிந்து கொண்டிருக்கிறேன்.  அந்நஜாத்தில்  வருவது  100 / 100 உண்மை. ஆனால் நான் ஒன்றும் செய்ய இயலாதவனாய் இருக்கிறேனே ! ( அவர் ஹனபி மத்ஹபை சார்ந்Vவர் ). ஒவ்வொருவக்தும் நான் இமாமத் செய்ய தயாராகும் போது,தக்பீர்  சொல்லி  தொப்புள் மீது கைகட்டும் வேளையில், நபி வழிக்கு மாற்றமாக தக்பீர் கட்டுகிறோம்  என்ற  எண்ணம் என் இருதயத்தையே அறுக்கிறது. ஆனால், என்னால் ஒன்றும் செய்ய இயலாதவனாய் இருக்கிறேனே ”என்று கண்ணீர் மல்க ஆதங்கத்தோடு கூறியதை  என்னால்  மறக்கவே முடியாது. இவரைப் போன்ற விரல்விட்டு எண்ணக் கூடிய சில ஆலிம்களிடம்  “”தக்வா”  என்ற  இறையச்சம்  நீறுபூத்த  நெருப்பு போல  உள்ளேயே எரிந்து கொண்டிருக்கிறது. இந்த நெருப்பு சுடர் விட்டு பிரகாசிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் நாம் அனைவரும் துஆ கேட்போமாக.

மேற்கண்ட சகோதரரைப் போன்று தக்வாவின் உந்துதலில் தத்தளித்து தடுமாறும் ஆலிம் பெருமக்களே ! உங்களுக்கு ஒரு கனிவாக வேண்டுகோள் !

குர் ஆன்,  ஹதீஸை  முழுக்க  முழுக்க  பின்பற்றி வாழ்க்கையை நடத்த தடையாயிருக்கும் இந்த “”இமாமத்” வேலையை உதறி எறிந்துவிட்டு சொந்தமாக சுயமாக,  சுதந்திரமாக  ஒரு தொழில்  புரிய முன் வாருங்கள்.  ரூ 500/-  சம்பளத்திற்காக  குர் ஆன்,  ஹதீஸிற்கு  மாற்றமாக   நடந்து  மன  உளைச்சல், போராட்டத்தோடு இம்மையில் வாழ்வதோடு மட்டுமின்றி, மறுமை வாழ்விலம் தண்டனைக்கு ஆளாகுவதை தவிர்ந்து ஈருலக வாழ்விலும் அல்லாஹ்வின் திருப்தியை பெறுவதற்கு  உடனடியாக  ஆவன  செய்யுங்கள்.

மிக மிக  குறைந்த  வருவாயாக  இருந்தாலும்  எளிய வாழ்வாக இருந்தாலும், மறுமையிலே நாம் சர்வ பாக்கியங்களையும் பெற்று திகழ்வோம் என்பதில் சந்தேகவே  இல்லை. பொது மக்களின் பழிப்புச் சொல்லுக்கு  ஆளாகும்  நிலை வந்தாலும் அதனை கிஞ்சிற்றும் பொருட்படுத்தாமல், குர்ஆன், ஹதீஸ்  அடிப்படையிலேயே நானும் வாழ்வேன், என்னை சார்ந்தோரையும் வாழச்செய்வேன் என்ற சத்திய வேட்கையோடு உங்கள் இலட்சிய பயணத்தை தொடர ஆயத்தமாகுங்கள்.

மகத்தான இந்த ஜிஹாதிற்கு நாம் தயாராகுவோம் !  இஸ்லாத்தின் கோட்பாடுகளும், கொள்கைகளும் இஸ்லாத்தின் பெயராலேயே தகர்க்கப்படும் அவல நிலைக்கு நாம் முற்றுப்புள்ளி வைத்து குழி தோன்று  புதைப்போம் !
நபி வழி நடப்போம் என சபதமேற்று நாளை மறுமையில் வல்ல நாயனின் அருளை சுகிப்போமாக !  ஆமீன்

முஸ்லிம் குரலா ? முனாபிக் குரலா ?
ம்r. அம்ரைனி  ( ஞ.க்ஷி.)
குர்ஆன்,  ஹதீஸ்  அடிப்படையில்  எதனையும் அணுகும் நாம் , எந்த தனி நபரையும் விமாசிக்ககூடாது என்பதும் அறிந்ததே.  ஆனால் அந்த தனி  நபர் மக்களை   தீய வழியில்  இட்டுச்  செல்ல  வாய்ப்பிருந்தால்,  அப்படிப்பட்ட  தனி நபர்களை  விமர்சிக்க  அல்லாஹ்வும் , அவனது ரசூல்(ஸல்)  அவர்களும் தயங்கியதில்லை. அவர் ஒரு நபியின் மகனாகவோ,  தந்தையாகவோ, இருந்தாலும் சரியே ! மனைவியாக இருந்தாலும் சரியே !

நூஹ்( அலை )  அவர்களின் மனைவியையும்,  மகனையும் லூத் ( அலை )  மனைவியையும்,  இப்ராஹிம் ( அலை )  அவர்களின்  தந்தையையும்  அல்லாஹ் குர்ஆனில் விமர்சிக்காமல் விடவில்லை. மக்களிடம் பிரபல்யமாக இருந்து அவர்களை தீயவழியில் இட்டுச்சென்ற பிர்அவன், நம்ரூத், பல்ஆம்பின்பாஊரா போன்ற தனி நபர்களையும், விமர்சித்து அடையாளம் காட்டுகின்றான் அல்லாஹ், ஏன் ? நபி ( ஸல்)அவர்களின் நெருங்கிய இரத்தபந்தமான அபூலஹ்பைபற்றியும் கடிய சொற்களைக் கொண்டு விமர்சிக்க தயங்கவில்லை எல்லாம்வல்ல அல்லாஹ்.
இதே அடிப்படையில் நபி( ஸல் ) மக்காவில்  இருந்தபோது மக்களிடையே பிரபல்யமான தலைவர்களாக இருந்து, அவர்களைத் தவறான வழியில் அழைத்துச்சென்ற Š நேரிய வழியில் சென்றவர்களுக்கு அளவிலா இடையூறு தந்த Š அபூஜஹல், உந்பா, ஷைபா, வலீத், உமைய்யா போன்ற தனி நபர்களை விமர்சித்து, ஏன் ? சபித்தேயிருக்கிறார்கள். (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்). மதீனாவில் நயவஞ்சகனாக இருந்து மக்களை தீயவழியில்  அழைத்துச் சென்ற முனாபிக் அப்துல்லாஹ் பின் உபையையும் அடையாளம் காட்டினார்கள் நபி( ஸல் ) அவர்கள்.

இதுபோல பொய்யையும், புரட்டையும் கூறி பொதுமக்களை தீய வழியில் அழைத்து சென்றவர்களையும் தனி நபர்களையும் அல்லாஹூவும் ரசூலும், விமர்சித்ததற்கு பல உதாரணங்களைத் தரமுடியும் ஆனுல் விரிவஞ்சி இத்துடன் நிறுத்தி நமது விமர்சனத்திற்கு வருவோம்.

“” முஸ்லிம் குரல் ” என்ற சுன்னத்து வல் ஜமாஅத் கொள்கை விள( ல)க்க மாத இதழின் ஆசிரியர் கனிசிஷ்டி நூரி தன்னிடம் ஒரு பத்திரிகை இருக்கிறது என்ற இறுமாப்பில்,15- 3 -88 இதழில் நம்மையும் மற்றும் அனைத்து தவ்ஹீது வாதிகளையும் சரமாரி அநாகரிக வார்த்தைகளைக் கொண்டு சாடியிருக்கிறார். நாமும் அவரது பாணியில் சாடப்போவது இல்லை. ………………. கடித்தது என்பதற்காக நாமும் கடிக்க மாட்டோம் ; அவரது கூற்றில் ஏதாவது உண்மையிருந்தால் அதை ஏற்கவும் தயங்கமாட்டோம். ஆனால் பொய்யையும், புரட்டையும் அவிழ்த்து விட்டிருப்பதால் அவரை அடையாளம் காட்டவே இதை உங்கள்  முன் சமர்ப்பிக்கின்¼<ம்.

அவர் அவிழ்த்துவிட்டிருக்கும் ஆகாசப்புளுகுகள், புரட்டல்கள் !
( 1 )  1985ல் காயல் பட்டிணத்தில் நடத்த “” முபாஹலா ”   சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைக்கும் மெளதூதி கொள்கைக்கும் இடையில் நடத்தது.
( 2 )  அம்முபாஹலாவில்  பி அலாவுதீன் அவர்களும் ஜலீல் முஹைய்யதீனும் கலந்து கொண்டு அல்லாஹ்வின் பெயரால் சபித்துக் கொண்டனர்.
( 3 ) அம் முபாஹலாவில்  கலந்து கொண்ட பி. அலாவுதீன் முந்நாள் அந் நாஜத் ஆசிரியர்.
( 4 ) அதில்  கலந்து கொண்ட பி. அலாவுதீன் ( அசத்தியத்தை ஆதரித்ததால் ) மாரடைப்பில் செத்துப்போனார் போன்ற உண்மைக்கு முற்றிலும் புறம்பான பல புளுகுகளை, புரட்டல்களை திட்டமிட்டே எழுதி தனது தர்கா தரீக்கா சமாதி வழிபாடு போன்றவற்றிற்கு வக்காலத்து வாங்கியிருக்கின்றார்.
இதில்  எள்ளளவாவது உண்மை உண்டா ?

1985ல் காயல்பட்டிணத்தில் நடந்த முபாஹலா சுன்னத்துவல் ஜமா அத் கொள்கைக்கும் மெளதூதி கொள்கைக்கும் நடந்தது அல்ல. இவ்விரு கொள்கைகளும் வரவேற்கும் தெளஹீதுக்கும் இஸ்லாத்திற்கும்  முரணான இருண்ட  அறையில் இருந்துகொண்டு ஆயிரம்தடவை”” யாமுஹைய்யதீன்  ” என அழைத்தால் அவர்கள் “” நேரில் வருவார்கள் ” என்ற “” இருட்டு திக்ரு ” கொள்கைக்கும் இடையில் நடந்தது.

அம்முபாஹலாவில்  இருட்டு  திக்ருக்கு  வக்காலத்து  வாங்கியவர்  ஜலீல்  முஹைய்யதீன் ஆவார். அவ்விருட்டு திக்ரு தவறானது பொய்யானது இஸ்லாத்திற்கு முற்றிலும் முரணானது என வாதிட்டவர். பி. அலாவுதீன் அல்ல. அவர் அதில் கலந்து கொள்ளவே இல்லை அவர் தம்பி பி. ஜெய்னுலாபுதீன் என்பது நாடறிந்த ஏன் ? உலகறிந்த வி­யம் .

முபாஹலா நடந்த போது அந் நஜாத் தோன்றவே இல்லை. 1986 Š ல் பிறந்த அந்நஜாத்துக்கு பி. அலாவுதீன் அவர்கள்  ஒரு நாள் கூட ஆசிரியராக இருந்தது இல்லை. ஏன் ? அந் நாஜத் அலுவலகம். எங்குள்ளது? எப்படியுள்ளது என்பதைக்கூட காணாதவர். தெளிஹீதுவாதிVயான அவரது கட்டுரைகள் மட்டும் அந்நஜாத்தில் இடம் பெற்றனவே தவிர, அவர் ஒரு ஆசிரியர் குழு கூட்டத்தில் கூட கலந்து கொண்டதில்லை. ஆனால் பி. ஜெயினுலாபுதீன் தான் அந் நஜாத்தின் முந்நாள் ஆசிரியராக இருந்தார் என்பதே உலகறிந்த உண்மை.

முபாஹலாவில் பொய்யாக, அசத்தியத்திற்கு துணை போனதால் பி. அலாவுதீன்  மாரடைப்பால் இறந்தார் என நாகூசாமல் பொய்யைக் கூறியுள்ளார் கனிசி ( திரு ) ஷ்டி (  பரிகாரம் ). ஏதோ உண்மைக்கு சத்தியம் செய்ததால் இருட்டு திக்ரு வீரர் ஜலீல் முஹைய்யதீன் ஆகா ! ஓகோ ! என வாழ்வதுபோல படம் பிடித்துக் காட்டுகிறார். ஆனால் உண்மையில் நடத்தது என்ன ? நடப்பது என்ன ?

இந்த முபாஹலாவுக்குப் பின் இருட்டு திக்குவீரர் ஒடுங்கி விட்டார் பள்ளிக்குப் பள்ளி “” முபாஹலாவிற்கு தயாரா ? ” என வாய்க்  சவடால் வீசியவர்  இருக்கும் இடம் தெரியாமல் பதுங்கிக்கிடக்கிறார். அவரை எதிர்த்த பி. ஜெய்னுலாபுதீன் முபாஹலா வரை “” யஹர்னியா ” வால் கஷ்டப்பட்டவர், இப்போது  நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பவனி வருகிறார். அந் நஜாத் மூலம் தமிழகம்  முழுதும் தெளஹீது பிரச்சாகராக, அழைப்பாளராக விளங்கினார். பின் ஒன்றுக்குப் பல தெளஹீது பத்திரிகைகள் தமிழகத்துக்கு தேவையயன மதுரையில் ஒன்றும், நாகர்கோவில் ஒன்றும் ஆரம்பமாக, ஆயுதமாயிருக்கிறார்.

எங்கு முபாஹலா நடந்ததோ அங்கும், அதன் சுற்றுப்புறங்களும் தெளஹீதின் கோட்டைகளாக திகழ்கின்றன. இருட்டு திக்ருகொன்கைக்கு மக்களே இருட்டடிப்பு  செய்ய ஆரம்பித்து விட்டனர், ஏன் ? மெளலூது போன்ற பஜனைப் பாடல்கள்  காயல் பட்டினத்தில் காற்றில் பறக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

உண்மை இவ்வளவு அப்பட்டமாக இருக்க முபாஹலாவில் கலந்து கொண்ட இருவரும் உயிருடன் இருக்க அம்முபாஹலாவை நேரில்  கண்ட  பல்லாயிரக்கணக்கான மக்கள் காயல் பட்டினத்தில் ஹயாத்துடன் இருக்க ;
இந்நிகழ்ச்சியை  பார்த்த பல ஊர்மக்கள் இன்றும் உயிருடனிருக்க ; தெளஹீக்கு குரல் கொடுத்தவர் உடல் நலமுடன் பவனிவர ;

அவர் ஊரறிய பல இடங்களில் இன்றும் தெளஹீதுக்கு குரல் கொடுத்து உலாவிக் கொண்டிருக்க ;
அவரே நமது  அந்நஜாத்தின் முந்நாள் ஆசிரியர் என்பது ஊரும் உலகமும் அறிந்திருக்க ;
இந்த கனி சி( திரு )ஷ்டி ( பரிகாரம் ) அவிழ்த்து விட்டிருக்கும் புளுகுகள், புரட்டுகளைப் பாரீர்! தாது புஷ்டி லேகியம், தன்  சுயசரிதை போன்ற விளம்பரத்திற்குஇசைக் குழுவினரின் பேட்டிக்கும்…………. அலையும் இந்த கனிசி ( திரு ) ஷ்டி ( பரிகாரம் ) இவ்வுண்மைகளை கிஞ்சிற்றும் அறியாமல் பொய்களை கட்டவிழ்த்து இருப்பது முஸ்லிம் களுக்கே பெரும்இழுக்காகும்.

பொய் பேசுவது முனாபிக்கி ( நயவஞ்சகனி ) ன் அடையாளம்
எது பேசினாலும் பொய்பேசுவான் ; பொய் முனாபிக்கி ( நயவஞ்சகனி )ன் அடையாளம்” என நபி ( ஸல் )  அவர்கள் கூறியது (ஆதாரம் :புகாரி , முஸ்லிம் ) இவருக்கு தெரியாதது ஏனோ ? இந்நிலையில் இவர் இஸ்லாமிய பத்திரிக்கை சங்கத்தின் செயலாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடத்தும் இதழோ, சுன்னத்துவல் ஜமாஅத் கொள்கை விள ( ல ) க்க மாத இதழ் ” தலைவன் எவ்வழி மக்கள் அவ்வழி”  என்று பழமொழிப்படி இவரை செயலாளராகக் கொண்ட சுன்னத்துவல் ஜமா அத்து கூட்டத்தினரும் இப்படிதான் பொய் புரட்டுகளை அவிழ்த்து விடுவார்களோ ? என நினைக்க தோன்றுகிறது.

இப்படி பொய்யையும், புரட்டையும் கூறும்  குரலா ? முஸ்லிம் குரல் !
தெளஹீதை குழிதோண்டி  புதைத்து பொய்க்கு வக்காலத்து வாங்கும்  குரலா ? முஸ்லிம் குரல் !
இருட்டு திக்ருக்கு வெண்சாமரம் வீசி இறைவனின் குரலை நெரிக்க குரலா ? முஸ்லிம் குரல் !
கனிசிஷ்டி என முஸ்லிம் பெயரில், முஸ்லிம்குரல் நடத்தும் இவர் கொடுக்கும் குரல் முஸ்லிம் குரலா ? முனாபிக்குரலா ? என்பதை மேற்காணும் நபிமொழியை வைத்து முடிவு செய்யுங்கள்.

மூன்று  வருடங்களுக்கு  முன்  நடந்ததையே  முழுமையாக  மறைந்து  பொய்யையும் , புரட்டையும் அவிழ்த்துவிட்டு, உண்மையை மறைக்கும் இவர்கள் 900 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைநேசச் செல்வர் ( அவ்லியாக் )கள் மீது எவ்வளவு புருடாக்களை கூறுவார்கள் என்பதை நீங்களே சிந்தியுங்கள். அப்புருடாக்களின் அடிப்படையில் தர்கா, தரீக்கா என தானும் தஞ்சம் புகுந்து, மக்களையும் தாசனாக்குகிறார்கள் என்பதை நீங்களே யோசித்து உணருங்கள்.
அடுத்து  நாகர்கோவில்  தெளஹீது  மாநாட்டில்  கலந்து கொள்வதற்காக இந்திய யூனியன்முஸ்லிம் லீக் தலைவர் இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்கள்வாக்களித்திருந்தார்கள்Šஒரு முஸ்லிம் கொடுத்த வாக்கைகாப்பார் என்ற நபிமொழிப்படி நாமும் நம்பினோம்.( இடையில் என்ன சதி நிகழ்ந்தது என்பதை யாமறியோம் ! வல்ல அல்லாஹ் எல்லாவற்றையும் நன்கறிவான் )Š  ஆனால்  கடைசி  நேரத்தில்   வெளிநாட்டு  பிராயாணத்தால்  வர முடியவில்லை ; மனம் வருந்துகிறேன் என்றும், இருப்பினும் தெளஹீது வளர பிரார்த்திப்பதாகவும், இப்ராஹிம் சுலைமான் சேட் அவர்கள்  தந்தி மூலமும், கைப்பட எழுதியகடித  மூலமும்,  மாநாட்டிற்கு தெரிவித்தார்.  இதற்கான  ஆதாரங்கள்  நாகர்கோவில்  மாநாட்டு  அமைப்பாளர்களிடம்  இன்றும்  உள்ளன. வேண்டுவோர் நேரில் பார்க்கலாம்.
நாகர்கோவில் தெளஹீது நண்பர்கள், இவ்வாதாரங்களை பிரசுரித்து ஊரறிய, உலகறிய செய்வார்களாக !  ஓரிய  ஓட்டுக்காக  ஓரியைக்  கொள்கையின் குரல் வளையை நெரித்துவிட நாடும் உன்மத்தம் பிடித்த  ஒரு சில முஸ்லிம்லீக் தலைவர்களை ( அனைவரும் அல்ல )மக்களுக்கு அடையாளம் காட்டுவார்களாக! முஸ்லிம் குரலின் ஆசிரியர் கனிசி ( திரு )ஷ்டி ( பரிகாரம் ) அவரின் பித்தலாட்டத்தை பித்தம் தெளியவைப்பார்களாக!

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் அனைவருக்கும் உண்மையை, உண்மையாக உணர்ந்து தூய இஸ்லாமிய வழியில் வாழ அருள்புரிவானாக. ஆமீன்.
ரமழானின் ஆரம்பத்தை ( பிறையை ) அறிந்துகொள்ள ­ஃபான் முதல் பிறையிலிருந்து கணக்கிடுங்கள் என நபி ( ஸல் )அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பு : அபூஹூரைரா ( ரழி ) ஆதாரம்  :  புகாரி, முஸ்லிம், அஹ்மது.
நபி ( ஸல் )  அவர்கள்  ­ஃபான்  மாதத்தின் நாட்களை மட்டும் கணக்கிடக் கூடியவர்களாக இருந்தார்கள் மற்ற மாதங்களின் நாட்களை அப்படி கணக்கிடவில்லை. ­ஃபான் எனும் அம்மாத முடிவில் ரமழான் முதல் பிறையைக் கண்ட  களேயானால், ரமழானின் பர்லான நோன்பை வைக்க ஆரம்பிப்பார்கள்இ( வானம், மப்பும், மந்தாரமுமாக இருந்து) ரமழான் முதல் பிறையைக் காண முடியவில்லையயனில், ­ஃபான் மாத்தை 30 நாட்களாக முடிந்து ரமழான் நோன்பை ஆரம்பிப்பார்கள் . அறிவிப்பு: ஆயிஷா ( ரழி) ஆதாரம் : அபூதாவூத் , அஹ்மது.

மதுவும், சூதும் பெரும் பாவமே !
அபூஉவைஸ்
ஹலாலைப் பேணி,  ஹராமைத் தவிர்ப்பீர் !
மனிதர்களே !  பூமியிலுள்ள  பொருட்களில் ஹலாலான (  அனுமதிக்கப்பட்ட) பரிசுத்தமானவற்றை சாப்பிடுங்கன் ( சம்பாதிக்கும் வகையில் ஷைத்தானின் அடிச்சுவட்டைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்கு பகிரங்கமான பகைவனாகும். ( 2: 168 )

கண்ணியமிக்க இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே ! நமது ஊர்களில் பலர் லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்வதிலும், அதனை வாங்குவதிலும் அதிக ஆர்வமுடையவர்களாக உள்ளனர் என்பது ஊரறிந்த உண்மை.
இதிலும்   குறிப்பாக,  இன்றைய  இஸ்லாமியத்  தோற்றம்  என்று  நம்மவர்களால்  சிறப்பித்துக் சொல்லப்படும், ஜூப்பா “” தலைப்பாகை ”, தொகுப்பியுடன் லாட்டரி சீட்டுக்கள் விற்பதையும், வாங்குவதையும் பரவவலாக காணுகிறோம். லாட்டரி சீட்டுகள் வாங்குபவர்களும், விற்பவர்களும், அதற்குத் துணையாக இருப்பவர்களும் லாட்டரி ( பரிசு )  சீட்டு வேறு, சூதாட்டம் வேறு என்று எண்ணிக்கொண்டார்கள் போலும் .

பரிசுத் சீட்டு என்பது சூதாட்டத்தின் மறுபெயர். மக்களை வழிகெடுப்பதற்காக செய்த ஷைத்தானின்  சூழ்ச்சியே  இம்மாற்றுப்பெயர். இதில் சில நன்மைகள் இருந்தாலும், தீமைகள் அதிகம் உள்ளது  என்பதாலேயே  வல்ல  அல்லாஹ்  இதை  விட்டும் விலகியிருக்கச் சொல்கிறான். இதில்  மிகவும் வேதனைப்பட வேண்டிய வி­யம் என்ன வென்றால் அல்லாஹ்வுடைய பள்ளியை ஒட்டி உள்ள பள்ளிக்குச் சொந்தமான கடைகளில் கூட லாட்டரி & பரிவர்த்தளை !
சூதாட்டத்தின் வருமானத்தில் கொடுக்கும் ஹராமான வாடகையைக் கொண்டு, பள்ளியையும் பள்ளியைச்  சார்ந்தவர்களையும் நிர்வாகம் செய்கிறார்கள். இத்தகைய நிர்வாகத்தினரும், லாட்டரி விற்பனை செய்பவர்களும், வாங்குபவர்களும், இறைவனுடைய மகத்துவமிக்க  வசனங்களை  அலட்சியம் செய்வதோடல்லாமல், ஒட்டு மொத்தமாக நமது சமுதாயத்திற்கு இழிவைத்  தேடித்தந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை  நல்வழிப்படுத்துவது,   இவ்வி­யம்  பற்றி மார்க்க அறிவு பெற்ற ஒவ்வொரு முஸ்லிமின் தலையாய கடமை.

நாம் திருக்குர்ஆனை ஒரு எழுத்துக்கு 10 நன்மை கிடைக்கும்  என்பதை அறிந்து அடிக்கடி ஓதி வருகிறோம். ஆனால் இது இம்மை மறுமைக்கு வழிகாட்ட வந்த  வேதம்  என்பதால்  பொருள் உணர்ந்து ஒதினோமா ? …. பொருள் உணராது  ஓதியதால், மதுவும் – சூதும் ஒன்று என்றும், பெரும் பாவம் என்றும்,  இறைவன் தனது மறையில்  தெளிவாகக்  கூறியிருந்தும்,  நம்மிலே  பலர்  மிகச்சாதாரணமாக  விற்பனை  செய்து  கொண்டும்,  வாங்கி சந்தோ´த்துக் கொண்டும் பரிசு தனக்கே கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் குர் ஆனுக்குள் பரிசு சீட்டை வைத்து  இறைவனிடம்  துஆச் செய்து கொண்டும் இருக்கிறார்கள். இதனைக் குறித்து சூரா பகராவில் 219 Šம் வசனத்தில் இறைவன் மிகத் தெளிவாகக் கூறுகிறான்.

( நபியே ! ) மதுவையும், சூதாட்டத்தையும் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். நீர் கூறும் ! இவ்விரண்டிலும் பெரும் பாவம் இருக்கிறது. மனிதர்களுக்கு( அவற்றில் ) சில பலன்களுமுண்டு, ஆனால் அவ்விரண்டிலுமுள்ள பாவம் பயனை விடப் பெரியது.

மேலும்  நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். மதுவும், சூதாட்டமும் ( லாட்டரி ) இருமுகம் கொண்ட மத்தளங்களாகும்.அறிவப்பவர் : இப்னு அம்ருப்னு ஆஸ் ( ரழி ) நூல் : அபூதாவூத்

மேற்கூறப்பட்ட வசனத்தின் பொருனையும் ஹதீஸின்  கருத்தையும் உணர்ந்த முஸ்லிம்கள் குடிகாரனும் லாட்டரி விற்பவனும் வாங்குபவனும், அதற்குத் துணை செய்பவனும் ஒரு தரத்தில் உள்ளவர்கள் என்பதை உணர வேண்டாமா ? இதில் ஈடுபடுபவர்கள் இப்பெரும்பாவத்தைத் தவிர்த்துக் கொள்ள வேண்டாமா ? முஸ்லிம்களில் பலர் இறைவனால் ஹராமாக்கப்பட்ட குடியையும்( மது ) பன்றி மாமிசத்தையும் வெறுக்கும் அளவுக்கு லாட்டரி ( சூது ) யை வெறுக்கவில்லையே ? இதிலும் அல்லாஹ்வுடைய கருத்துக்கு மாற்றாக இவர்களுடைய சொந்தக் கருத்துக்களைப் புகுத்தி வித்தியாசம் கற்பித்து விட்டாகளா ?……..

இறைவன் மது, சூதாட்டம், ( லாட்டரி ) சிலை வணக்கம், ஜோதிடம் இந்நான்கையும் இணைத்து கூறி இவைகள் ஈமான் கொண்டவர்களைச் கெடுக்கச் செய்யும் ஷைத்தானின் சூழ்ச்சி என்று தெளிவாக கூறுவதை எனதருமைச் சமுதாய மக்கள் உணர வேண்டாமா ?

ஈமான் கொண்டவர்களே ! மதுபானமும்,  சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும் ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களில் உள்ளவையாகும். ஆகவே இவற்றைத் தவிர்த்து கொள்ளுங்கள் . ஆனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.  (51  : 90)

அடுத்து இன்றைய இஸ்லாமியர்களிடையே பகைமை, வெறுப்பு இறையச்சமில்லாமை, தொழுகையில்லாமை முதலியவைகளுக்கு காரணமாக மதுவும் சூதாட்டமும் அமைகிறது என்று மிக  நயமாகக்  கூறி,  இந்த  செயலைவிட்டு  விலகிக்கொள்ள மாட்டீர்களா  முஸ்லிம்களே?  என்று   அன்பில்  மிகைத்த அல்லாஹ் அன்பாகக் கூறுவதைப் பாருங்கள்.

நிச்சயமாக  ஷைத்தான்  விரும்புவதெல்லாம் மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டுபண்ணி அல்லாஹ்வின்  நினைவிவிருந்தும்,  தொழுகையிலிருந்தும்  உங்களைத்  தடுத்துவிடத்தான். எனவே அவற்றை விட்டும் நீங்கள்  விலகிக்கொள்ள மாட்டீர்களா ? 5 : 91

ராஃபிஉபின் கதீஜ் ( ரழி ) அறிவித்துள்ளார்கள் :
நபி( ஸல் ) அவர்களிடம் எத்தொழில் சிறந்தது என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள் ஒரு மனிதனின் கைத்தாழிலும் ( அல்லாஹ்வினால்) அங்கீகரிக்கப்பட்டவியாபாரமும் என்றார்கள் ( அஹ்மத் ).

ஜாபிர் ( ரழி ) அறிவித்துள்ளார்கள் :
ஹராமினால் வளர்ந்த சரீரம் சுவர்க்கம் புகமாட்டாது ஹராமினால் வளர்ந்த ஒவ்வொரு சரீரத்திற்கும் நரகமே ஏற்ற இடமாகும்.  அஹ்மத், தாரமீ, பைஹகீ)
ஹலாலைத் தேடுவது பர்லுக்கு அடுத்துள்ள பர்லாகும்.  அப்துல்லாஹ் (ரழி) (பைஹகீ)

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் மீது ஒரு காலம் வரும். (அப்பொழுது ) மனிதன் அக்காலத்தவரிடமிருந்து தான் அடையும் எதனையும் ஹலாலானதா, அல்லது ஹாராமானதா என்பதைப் பொருட்படுத்த மாட்டான்.அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரழி) நூல்  : புகாரி,  நஸயீ

மேலும் அக்காலத்தவருடைய  துஆவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும், நபி ( ஸல் ) அவர்கள் கூறியதாக ரஜீனில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவேஎனதன்பு  நடுநிலைச் சமுதாயத்தவர்களே ! அல்லாஹ்வும் அவனது தூதரும் ( ஸல் ) பெரும்பாவம் என எச்சரித்த, இந்த ஹராமான ( தடுக்கப்பட்ட ) செயலில் ஈடுபட்டுள்ள நமது சகோதரர்களுக்கு  இதன் தீமைகள் பற்றி நயமாக எடுத்துக் கூறி ஹலாலான ( அனுமதிக்கப்பட்ட ) தொழில் செய்யத் தூண்டுவீர்களாக ! வல்ல அல்லாஹ் உலக முஸ்லிம்கள் அனைவருக்கும் ஹலாலான ( அனுமதிக்கப்பட்ட ) தொழில் வெய்யும் பாக்கியத்தைத் தருவானாக !

ஹராம்,   ஹலாலைப்  பேணி  நடக்கும் முஸ்லிமாக  நம்  அனைவரையும்  நடத்தாட்டுபவனாக ! இருதியாக இறைவனின் எச்சிரிக்கை ! ( நபியே ! ) நிச்சயமாக நாம் மிகத் தெளிவான வசனங்கள் உம்மீது இறக்கி வைத்திருக்கிறோம். பாவிகளைத் தவிர வேறு எங்கும் அவற்றை நிராகரிக்க மாட்டார்கள்.(2 : 99)

நன்மைகளை அள்ளிக் குவிக்க ஒரு அருள் மாதம் !
பு.னி.பு. னி.பு.,
விசுவாசிகளே !   உங்களுக்கு  முன்னிருந்த  சமுதாயத்திற்கு  கடமையாக்கப்பட்டது  போல  உங்கள்  மீதும்  நோன்பு நோற்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ( அதன் மூலம் ) நீங்கள் பரிசுத்தவான்களாகலாம்.  ( அல்குர் ஆன்  2 : 183 )
நோன்பு வைப்பது  நம்மீது மட்டுமின்றி, நமக்கு முன்னிருந்த சமுதாயத்திற்கும் கடமையாக்கப்பட்டது. இது நம்மீதுள்ள புது கடமையல்ல. எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருந்த கடமையே ! என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். இவ்விதம் நோன்பு வைப்பதால் நாம் பரிசுத்த மானவர்களாகலாம் எனவும் உத்திரவாதம் அளிக்கிறான். சுத்தம் , பரிசுத்தம் என்பது  வெளிரங்கமானதை மட்டும் குறக்காது. உள்ரங்கமான இதய சுத்தத்துடன் இருப்பதே சிறப்பாகும். உள்ளத்தூய்மையை நோன்பு எப்படி கொடுக்கிறது என்பதையும் நபி( ஸல் ) விளக்கினார்கள்.

நாங்கள் நபி ( ஸல் ) அவர்களுடன் இருந்தபோது , ஒரு நாள், நபி ( ஸல் ) கூறினார்கள் : உங்களில் ( உடலாலும், பொருளாதாரத்தாலும்) சக்தி பெற்றவர்கள், வயது வந்ததும் திருமணம் செய்து கொள்ளலாம். அது உங்களையும், உங்களது உறுப்புக்களையும் வீணான பார்வை, விபச்சாரம் போன்ற தீமைகளிலிருந்து பாதுகாக்கிறது. அவ்விதம் வசதியற்றவர்கள், நோன்புவைத்துக் கொள்ளட்டும். அந்நோன்பு உங்களது உடல் இச்சைகளை அடக்கி வைக்கிறது என அறிவுரைப் பகர்ந்தார்கள்.

அறிவிப்பு :  அல்கமா ( ரழி ) ; ஆதாரம் : புகாரி, அஹ்மத்.
இந்நபி மொழியிலிருந்து உபரியா( நபிலா )ன நோன்புக்கே இச்சிறப்பு இருக்குமானால் பர்லான நோன்புக்கு  இதைவிட அதிகமான சிறப்புக்கள் இருப்பதை காணலாம். பர்லான நோன்பைக் கொண்ட ரமழான் மாதத்திற்கும் அளவிட முடியாத சிறப்புக்கள், மகிமைகள் இருப்பதை இங்கு சிறிது காண்போம்.

ரமழான் மாதத்தில் தான்,  மனிதர்களுக்கு வழி காட்டியாகவும் நேர்வழியை தெளிவாக்கக் கூடியதாகவும், நன்மை, தீமையைப் பிரித்தறிவிக்கக் கூடியதாகவும் உள்ள திருக்குர்ஆன் ( என்னும் வேகம்) அருளப்பட்டது. ஆகவே உங்களின் எவர் அம்மாதத்தை  பெறுகி<ரோ அவர் அதில் நோன்பு வைக்கட்டும் ( அல்குர் ஆன் 2 : 185 )

இவ்விறை வசனம் மூலம் நமது அருள்மறை திருக்குர் ஆன் முதன் முதலில் இறக்கப்பட்டது, ரமழான் மாதத்தில் தான் என்பதை விளக்குகிறோம். நோன்பு எப்படி நம்க்கு முன்னிருந்தவர் மீது  கடமையானது போல நம்மீது கடமையானதோ, அதேப் போல நமக்கு முந்திய சமூகத்தினரின் நபிமார்களுக்கும் இம் ( ரமழான் ) மாதத்தில் தான் வேதநூற்கள் இறங்கின என்பதை கீழ்காணும் ஹதீஸ் தெளிவுபடுத்திகிறது.

இப்ராஹீம் ( அலை ) அவர்களுக்கு வேத ஏடுகள் ( சுஹ்புக்கள் ) ரமழானின் ஆரம்ப இரவுகளில் அருளப்பட்டது. மூஸா ( அலை ) அவர்களுக்கு தெளராத்  என்ற இறை வேதம் ரமழானின் இறுதி ( இரவுகளில் ) யில் இறக்கப்பட்டது. ஈஸா ( அலை ) அவர்களுக்கு இன்ஜீல் என்ற இறைநூல் ரமழான் 13 Šல் இறக்கப்பட்டது. திருக்குர்ஆன் ரமழான் 25 Šல் இறக்கப்பட்டது . எல்லா நபிமார்களுக்கும் அவரவருக்கான வேத ஏடு( சுஹ்புக்)கள் தெளராத், இன்ஜில் , ஜபூர், போன்ற இறை மறைகள் ஒரே சமயத்தில் முழுமையாக அருளப்பட்டது. ஆனால் இறுதிமறையான குர் ஆன் முழுமையாக முதலில் பைத்துல் இஜ்ஜாவிலிருந்து உலகத்தின் அருகிலுள்ள வானிற்கு ரமழானின் “” லைத்துல் கத்ரி ” அன்று கொண்டு வரப்பட்டது . அங்கிருந்து சிறிது சிறிதாக நபி ( ஸல் ) அவர்களின் சூழ்நிலை, தேவைக் கொப்ப கொடுக்கப்பட்டது.

அறிவிப்பு : இப்னு அப்பாஸ்( ரழி ) ஜாயிலா இப்னு அஸ்காப் ( ரழி )                                                                                                            ஆதாரம் : அஹ்மது, தப்ஸீர் இப்னு கதீர்.

இஸ்லாததின் ஐம்பெருங்கடமைகளில் ஒன்<ன நோன்பை கொண்டுள்ள இந்த ரமழான் மாதத்திற்கும் இன்னும் பற்பல சிறப்புக்களிருப்பதை கீழ்வரும் நபிமொழி ( ஹதீஸ் )கள் மெய்ப்பிக்கின்றன.
ரமழான் மாதம் பிறந்ததும் சுவனங்கள் திறக்கப்படுகின்றன நரகங்கள் மூடப்படுகிறது. ஷைத்தான்கள் விலக்கிடப்படுகின்றன என நபி ( ஸல்) அவர்கள் கூறி²ர்கள்.

( அல்லாஹூவின் அருட்கொடையின் வாசல்கள் திறக்கப்படுவதாக அனஸ்பின் மாலிக் ( ரழி ) கூறினார்கள். )
அறிவிப்பு:  அபூஹூரைரா( ரழி ) ஆதாரம் : புகாரி , முஸ்லிம், அஹ்மது.

ரமழான் மாதம் ஆரம்பித்தும் ஷைத்தானும், கெட்ட ஜின்களும் விலங்கிடப்படுகின்றன. நரகத்தின் எல்லா வாசல்களும் ஒன்று விடாமல் தாழிடப்படுகிறது; சுவனத்தின் எல்லா வாசல்களும் ஒன்றுவிடாமல் திறக்கப்படுகிறது. அவ்விரவுகளில் அல்லாஹூவின் வானவர் ( களில் ) ஒருவர் உரத்த குரலில் எவரொருவர் நல்லது செய்ய நாடுகி<ரோ அதனை செய்து நன்மையை பெற்றுக் கொள்ளட்டும் ; எவரொருவர் தீமையை நாடுகிறாரோ அவர் அதிலிருந்து தவிர்த்துக் கொள்ளட்டும் என அழைப்பு விடுகி<ர். ரமழானின் ஒவ்வொரு இரவிலும் அல்லா ஹூவால் சிலர் நரகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர் என நபி( ஸல் ) அறிவித்தார்கள்.  அறிவிப்பு : அபூஹுரைரா ( ரழி )ஆதாரம் : திர்மதி இப்னுமாஜ்ஜா, அஹ்மத்.

அல்லாஹூவின் ரசூல் ( ஸல் ) ரமழான் ஆரம்பிக்கும் போது எங்களுக்கு கூறினார்கள் : ரமழான், அல்லாஹுவால் அருளப்பட்ட மாதமாகும். எவர் ரமழானைப் பெறுகி<ரோ, அவர் அம்மாதத்தின் கடமையா( பர்மா)ன நோன்பு வைக்கட்டும். அம்மாதத்தில் சுவனத்தின் கதவுகள் திறக்கப்படுகிறது. நரக கதவுகள்  மூடப்படுகிறது. கொடிய ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றன. இம்மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க ஒரு இரவு இருக்கிறது. எவரொருவர் அவ்விரவை ( பெறுகிறாரோ அவர் எல்லா அருட்கொடையும் பெற்றவராவார் ) இழக்கி<ரோ அவர் எல்லாவற்றையும் இழந்தவராவார்.

அறிவிப்பு: அபூஹூரைரா ( ரழி ) ;  ஆதாரம் : அஹ்மது, நஸயீ

அல்லாஹூவால் வளவாழ்வு மறுக்கப்பட்டவரே அவ்விரவை பெ<மல் கைதேசமடைவார் என அனஸ்பின் மாலிக் ( ரழி ) கூறினார்கள்.
ஆதாரம் : இப்னுமாஜ்ஜா

சுவனத்தில் எட்டு வாசல்கள் உள்ளன. அதில் சிறப்புமிக்க அர்ரய்யான் என்ற வாசல் ரமழானில் நோன்பு வைத்தவர்கள் மட்டும் நுழைவதற்காக திறக்கப்படுகிறது என நபி( ஸல் ) கூறியதாக ஸஹல் பின் ஸ அத் ( ரழி ) கூறினார்கள். ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மது, இப்னு மாஜ்ஜா

ரமழானில் அல்லாஹுவுக்காக, அவனது கூலியை நாடி, உள்ளச்சத்தடன் நோன்பு வைத்தவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது ; அவ்விரவுகளில் ( கண் விழித்து ) தொழுதவரின் முந்திய பாவங்கள்  மன்னிக்கப்படுகிறது ; அம்மாதத்தின் சிறப்பான லைலத்துல் கத்ர் இரவை பெற்றவரின் முந்திய பாவங்கள் மன்னிக்கப்படுகிறது என நபி( ஸல் ) நவின்<ர்கள். அறிவிப்பு :  அபூஹுரைரா ( ரழி ) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மது.

“”  ஆதத்தின் மகன் செய்யும் ஒவ்வொரு நற்செயலுக்கும் அல்லாஹ் பன்மடங்கு நன்மைகளை நல்குகி<ன். ஒரு நற்செயலுக்கு பத்துமடங்கு முதல் 700 மடங்க நன்மைகள்  அருளப்படுகிறது. அல்லாஹ் ( ஹதீஸ் குத்ஸியில் ) கூறுகிறான் : Š ஆ²ல் நோன்பை தவிர, ஏனெனில் நோன்பாளியான என் நல்லடியான் எனக்காக குடிக்காமல், உண்ணுமல், உடல் இச்சைகள் அற்று இருந்தான், எனக்காக நோன்பு வைத்தான். ஆகவே அதற்கு கூலிநானே தருவேன்( மற்ற  நற்செயல்களுக்கு  வானவர்கள்  மூலம்  கூலி  வழங்கப்படுகிறது ),  நோன்பு  வைத்தவர். அந்நோன்பால், இரு மகிழ்ச்சிகளை அடைகி<ர். ஒன்று : ( இம்மையில் ) நோன்பு திறக்கும் ( இஃப்தார்) போது ஏற்படும் மகிழ்ச்சி. மற்ய<ன்று  : ( மறுமையில் )  இறைவனை  நேரில்  ( அவனிடமிருந்து கூலி பெற ) காணும் போது ஏற்படும் மகிழ்ச்சி.
நோன்பு வைத்தவரின் வாயிலிருந்து வரும் துர்நாற்றம் தூய வல்லவன் அல்லாஹுவிடம் கஸ்தூரியை விட  நறுமணமுள்ளது. நோன்பு ஒருவனுக்கு( தீமையிலிருந்து காக்கும் ) கேடயமாக உள்ளது. எனவே நோன்பாளி தீய வார்த்தைகளையோ, உரத்தகுரலிலோ பேச வேண்டாம். எவராவது அவருடன் வீண் வம்புக்கோ சண்டைக்கோ வந்தால் “” நான் நோன்பாளி ”  எனக் கூறவும் என்று நபி ( ஸல் ) அறிவுரைப் பகர்ந்தார்கள். அறிவுப்பு : அபூஹுரைரா ( ரழி )
ஆதாரம் : புகாரி, முஸ்லிம் , அஹ்மது, இப்னுமாஜ்ஜா, ஸஹீபா ஹம்மா பின் முனப்பஹ்.

நோன்பு, தொழுகை, ஜக்காத் போன்ற நற்செயல்கள் நாம் செய்த பாவங்களுக்கான பரிகாரமாக இருக்கிறது என நபி( ஸல் ) அவர்கள் அறிவித்தார்கள்.   அறிவிப்பு : ஹூதைபா ( ரழி ) ; ஆதாரம் :  புகாரி, அஹ்மது.

மனிதனுடன் தொடர்பு கொண்டுள்ள அனைத்திற்கும் ஜக்காத் ( வரி ) உண்டு. உடலுக்கான வரி நோன்பு என நபி ( ஸல்) கூறி²ர்கள்,        அறிவிப்பு : அபூஹுçரா  ( ரழி ) ஆதாரம் : அஹ்மது, இப்னுமாஜ்ஜா.

ஒருவர் வைக்கும் நோன்பு,  ஓதும் குர்ஆனும் அவருக்கு ( மறுமையில் அல்லாஹ்விடம் ) பரிந்துரை ( சிபாரிசு ) செய்யும். நோன்பு : யா அல்லாஹ் ! நான் இம்மனிதரை, அவரது ஊண், உணவு, ஆசாபாசங்களிலிருந்து தடுத்து வைத்திருந்தேன் . எனவே எனது சிபாரிசை ஏற்பாயாக; என பிரார்த்திக்கும்.

குர் ஆன் :  இரவில் ( உனது திருமறையான ) என்னை ஓதுவது கொண்டு அவரை நான் தூக்கத்திலிருந்து தடுத்து வைத்திருந்தேன். எனவே எனது சிபாரிசை எற்பாயாக !   என அல்லாஹுவிடம் பிரார்த்திக்கும் பரிந்துரை ( சிபாரிசு)கள் அல்லாஹுவால் அங்கீகரிக்கப்படும் ஏற்றுக் கொள்ளப்படும் என நபி ( ஸல் ) அறிவித்ததாக அல்துல்லா பின் அம்ர் ( ரழி ) அறிவிக்கி<ர்கள்.
வருடத்தின் ஆரம்பத்திலிருந்து, ரமழானுக்காக, சுவனங்கள் அலங்கரிக்கப்படுகின்றன. ரமழானின் முதல் பிறையன்று ஒரு இளந் தென்றல்  சுவனத்தில் வீசுகிறது. ( சுவனத்திலுள்ள மரங்களிலிருந்து )  இலைகள் சுவனத்தில் கண்ணழகிகளான “” ஹுருல் ஈன்களின் ” இமைகளில் விழுகின்றது. ( அத²ல் கண் விழித்த கண்ணழகிகள் )யா அல்லாஹ் ! உனது நல்ல ( நோன்பு வைத்த ) அடியார்களில் சிறந்தவர்களை எங்களுக்கு கணவர்களாக்கி வைப்பாயாக ! அவர்களால் நாங்கள் ( குளிர்ச்சியுற்று ) மகிழ்வுற வேண்டும். எங்களால் அவர்கள் (குளிர்ச்சியுற்று) மகிழ்வுற வேண்டுமேன பிரார்த்திப்பார்கள் என நபி( ஸல் ) தெரிவித்தார்கள். அறிவிப்பு : இப்னு உமர் ( ரழி ) ஆதாரம்  :  பைஹகீ, அஹ்மது

நபி ( ஸல் ) ­ஃபானின் கடைசி நாளன்று பிரசங்கம் செய்யும் போது கூறினார்கள் : –  ஒரு சிறந்த, கண்ணியமிக்க மாதம், அதில் ஆயிரம் மாதங்களை விட மகிமைமிக்க ஒரு இரவு உள்ள மாதம் உங்களை நோக்கி வருகிறது. அம்மாதத்தில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கினான். அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான் . அதன் இரவுகளில் நின்று வணங்குவதை சிறப்பாக்கினான். இம்மாதத்தில் ஏதாவது  ஒரு நற்செயல் செய்தால், மற்ற மாதங்களில் கடமையா ( பர்லா) ன செயலுக்குரிய கூலி வழங்கப்படும். ஒரு பர்லா ( கடமையா)ன செயல் செய்தால் மற்ற மாதங்களில் எழுபது பர்லான நற்செயலுக்குரிய கூலி அருளப்படும்.

இம்மாதம் பொறுமையின் மாதமாகும். பொறுமைக்கு கூலி சுவர்க்கம் ஆகும். இம்மாதத்தில்  ஒருவருக்கொருவர் ( முடிந்த அளவு ) உதவிக்கொள்ளுங்கள். இதனால் இறை நம்பிக்கையாளர்களின் பொருட்கள் அதிகரிக்கப்படுகிறது. நோன்பாளிக்கு ஏதாவது கொடுத்து அவர்நோன்பு திறக்க உதவினால், உதவியவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. நரகத்திலுருந்து  காப்பாற்றப்படுகிறார். நோன்பாளிக்கு கிடைத்த கூலி அளவு அவருக்கு எள்ளளவும் குறைக்கப்படாமல் கொடுக்கப்படுகிறுது.

அப்போது  நபி( ஸல் )  அவர்களிடம், யாரசூல்லாஹ்! நாங்கள் ஏழைகள் அவ்விதம் நோன்பாளிக்கு உதவ எங்களிடம் எதுவுமில்லையே ! என் செய்வது ? என ஒரு சில ஸஹாபிகள் கேட்டார்கள். நோன்பாளிக்கு உங்களால் முடிந்த அளவு தண்ணீர் கலந்த பாலோ, ஒரு பேரீத்தம் பழமோ ( அதுவும் முடியா விட்டால் சிறிது ) தண்ணீரோ  கொடுங்கன் என நபி( ஸல் ) பதிலளித்தார்கள்.

எவரொருவர் நோன்பாளிக்கு உண்ண உணவும் , குடிக்க நீரும் கொடுத்து உதவுகிறாரோ அவருக்க அல்லாஹ் தனது பெரிய நீர் தடாகத்திலிருந்து  நீர் புகட்டி , அவர் சுவனம் செல்லும் வரை தாகிக்காமல் காப்பாற்றுகிறான்.
இம்மாதத்தின் ஆரம்பம் அருட்கொடையாகவும், நடுப்பாகம் பாவமன்னிப்பாகவும்,  கடைசி பாகம் நரகத்திலிருந்து இரசிப்புமாகவிம் இருக்கிறது. இம்மாதத்தில் தன்னிடமுள்ள அடிமை ( வேலைக்காரனுக்கு) எவர் ( நோன்பு வைப்பதில் ) சிரமம் தராமலிருக்கி<ரோ. அவரை அல்லாஹ் ( எல்லா பாவங்களிலிருந்தும் மன்னித்து ) நரகத்திலிருந்து விடுவிக்கி<ன்.

அறிவிப்பு : ஸல்மான் பின் பார்ஸி ( ரழி ) ; ஆதாரம்  : பைஹகி , இஸ்லாமிய சகோதர சகோதரிகளே  !
இதுவரை நாம் குறிப்பிட்ட அல்லாஹுவின் அருள்மறை வசனங்களையும், நபி( ஸல் ) அவர்களின் திருமொழிகளையும் சிறிது சிந்தித்து பாருங்கள். ரமழானின் சிறப்பையும், நோன்பின் மகிமையையும் வரிசைபடுத்தி பாருங்கள் .

அல்லாஹுவின்  அருள் பெற்ற கண்ணியமிக்க மாதம் ரமழான்
நமது அருள்மறை உலக  இறுதிமறை திருக்குர் ஆன் இறங்கிய மாதம் ரமழான்.
நமது முன்¼²ருக்கும் இறைவேதங்கள் இறக்கப்பட்ட மாதம்  ரமழான்.
பொறுமையின் மாதம் ரமழான். பொறுமைக்கான கூலி சுவர்க்கம்
இஸ்லாத்தின் ஐங்கடமைகளில் ஒன்<ன நோன்பை கொண்ட மாதம் ரமழான்.
முன் சமுதாயத்தினருக்கும் நோன்பு கடமையாக்கப்பட்ட  மாதம் ரமழான்.
நோன்பு நம்மை பரிசுத்தவான்களாக்குகிறது.
ரமழானுக்காக சுவனங்கள் அலங்கரிக்கப்படுகின்றன.
ரமழான் மாதம் பிறந்ததும் சுவனங்களின் அனைத்து வாயில்களும் திறக்கப்படுகின்றன.
நரகங்களின் அனைத்து வாயில்களும் மூடப்படுகின்றன.
நமது கொடிய விரோதி ஷைத்தான் விலங்கிடப்படுகிறான்.
கெட்ட ஜின்கள் விலங்கிடப்படுகின்றன.
நற்செயலில் ஈடுபடவும் தீயச் செயலை தவிர்க்கவும் வானவரால் நினைவூட்டப்படுகிறோம்.
1000 மாதங்களை விட சிறப்புமிக் “” லைலத்துல் கதல் ” என்ற இரவைக் கொண்ட மாதம் ரமழான்.
அவ்விரவைப் பெற்றவர் எல்லாம் பெற்றவர் இழந்தவர் எல்லாம் இழந்தவர்.
அல்லாஹுவால் வளவாழ்வு அருளப்பெற்றவரே அவ்விரவைப் பெறுவர்.
ரமழானில் நோன்பு வைப்பதை அல்லாஹ் கடமையாக்கி²ன்
உபரியான தொழுகைகள் தொழுவதை சிறப்பாக்கி²ன்.
ஒவ்வொரு நற்செயலுக்கு 10 முதல் 700 மடங்க நன்மைகளை தருகி<ன்.
ஒரு சாதாரண நற்செயலுக்கு ஒருகடமை ( பர்லு)க்கான கூலி தருகிறான்.
ஒரு கடமை ( பர்லு )க் கான செயலுக்க 70 பர்லுக்கான கூலியை அருள்கிறான்.
நோன்பாளிக்கு உதவுவோருக்கு நோன்பாளிக்கான கூலியை தருகிறான். அவரது பாவங்கள் மன்னிக்கப்படுகிறுது.
ஏழை, ஒரு நோன்பாளிக்கு சிறிது தண்ணீர் கொடுத்து உதவினாலும் அப்பலன்கள் கிடைக்கும்.
நோன்பாளிக்கு நீர் புகட்டியவருக்கு சுவன நீர் புகட்டப்படுகிறது அவர் சுவனம் நுழையும் வரை தாகிக்காது காப்பாற்றப்படுகிறது.

தனது அடிமை  ( வேளையாள்)க்கு நோன்புக்குதவும் முதலாளியின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
ரமழானில் முதல் பத்து நாட்கள் அல்லாஹுவின் அருட்கொடைக்கானது. நடுபத்து நாட்கள் அல்லாஹுவின் பாவமன்னிப்புக்கானது கடைசிபத்துநாட்கள் நரக மீட்சிக்கானது.
நோன்பாளிக்கு அல்லாஹ் நேரடியாக கூலி தருகிறான்.

நோன்பாளிக்கு “” அர் Š ரய்யான் ”  என்ற சிறப்புமிக்க சுவனாவசலில் நுழைவர்.
அலங்கரிக்கப்பட்ட சுவனத்தில் , ரமழானில் இளந்தென்றல் வீசிசுவன கண்ணிழகிகளை எழுப்புகிறது.
அக்கண்ணழகிகள் நல்ல ( நோன்பாளி) அடியார்களை கணவர்களாகப் பெற அல்லாஹுவிடம் யாசிக்கிறார்கள்.
நோன்பாளிகளை குளர்ச்சிப்படுத்த ஹுருல்ஈன்கள் சுவர்க்கத்தில் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
நோன்பாளிக்கு “” இஃப்தார் ,” , “” லிகா உல்லாஹ் ” என்ற மகிழ்ச்சிகள் கிடைக்கிறது.
நோன்பாளியின் வாய் துர்நாற்றம், வல்ல அல்லாஹுவிடம் கஸ்தூரியை விட நற்குணமுள்ளது.
நோன்பு ( தீமையிலிருந்து ) நம்மை காக்கும் கேடய மாகவுள்ளது.
நோன்பு நமது சென்ற பாவங்களுக்கான பரிகாரமாகவுள்ளது.
நமது உடலுக்கான ஜக்காத் வருயாக நோன்பு அமைகிறது.
ரமழானின் ஒவ்வொரு இரவிலும் சிலர் அல்லாஹுவால்  நரகத்திலிருந்து விடுவிக்கப்படுகின்றனர்.
ரமழானில் உள்ளச்சத்துடன், அல்லாஹூவால் அவனது, கூலிக்காக நோன்பு வைத்தவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.

தொழுதவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது.
“”  லைலத்துல் கத்ர்  ” பெற்றவரின் பாவங்கள் மன்னிக்கப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக மறுமையில் ஒருவர் வைத்த நோன்பும் ஓதிய குர் ஆனும், அல்லாஹுவிடம் அவருக்காக மன்<டி சிபாரிசு செய்யும்.
மொத்தத்தில் ரமழான் மாதம் நற்செயல்களைக் கொண்டு அல்லாஹ்விடம் நன்மைகளை அள்ளிக்குவிக்கும் அருள் மாதமாகும். இவ்வளவு சிறப்புக்களைக் கொண்ட ரமழான் மாதத்தை முறையாக கண்ணியப்படுத்தாதவன்  பெரும கைசேதத்திற்கு உரியவன் என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை. இதனை இரத்தினச் சுருக்கமாக நமது அருமை நபி( ஸல் ) அவர்கள் கூறியுள்ளதை பாருங்கள்.

“” ரமழான் மாதத்தில் ஒரு நாளைய நோன்பை, உடல் நோய், பிராயணம் போன்ற ( அங்கீகரிக்கப்பட்ட) காரண்மின்றி விட்டவன், தனது ஆயுன் முழுவதும் நோன்பு நோற்றாலும் அதனை ஈடுகட்டமுடியாது ”                 அறிவிப்பு : அபூஹுரைரா ( ரழி  )

ஆதாரம் : திர்மதி, அபூதாவூத், அஹ்மது, தாரமி, இப்னுமாஜ்ஜா

அப்படிப்பட்ட கைசேதப்படும் முஸ்லிமாக நம்மை ஆக்காமல் அனைத்து சிறப்பையும் பெற்று வாழ, ரமழானை நாம் அதற்குரிய கண்ணியத்துடன் சிறப்பிப்போமாக ! உள்ளச்சத்துடன் அவனது ஆணைப்படியும் , நபி( ஸல் ) அவர்களது வழிமுறையிலும் வாழ்த்து நல்லடியார்களாக திகழ்வோமாக ! ஆமீன் !

“”  ரைய்யான் என்று கூறப்படும் ஒரு தலைவாசல் சுவனபதியில் இருக்கிறது. நோன்பாளியைத் தவிர்ந்து வேறு எவரும் அதன் வழியாக சுவனபதியில் நுழையமாட்டார்கள் .அவர்கள் அதனுள் நுழைந்ததும் அது அடைக்கப்பட்டு விடும். பின்னர் அதன் வழியே எவரும் செல்லமாட்டார்கள் ” என்று நபி( ஸல் ) அவர்கள் கூறினர்.
அறிவிப்பவர் : ஸஹ்லுப்னு ஸ அது ( ரழி ) ஆதாரம்  : புகாரி, முஸ்லிம்.

ஐயமும் , தெளிவும்
ஐயம் :  “” மிஃராஜ் ” இரவு என்பதாக ரஜபு மாதத்தின் 27 – வது இரைவயும்,  “”பரா அத் ” இரவு என்பதாக ­ஃபான் 15 Š வது இரவையும் தேர்ந்தெடுக்கிறார்கள்.  இவ்விரவுகளில்  சிலர்  தமது இஷ்டத்திற்கு பலவகையான நபில் தொழுகை தொழுகிறார்கள். மிஃராஜ் , பராஅத்தை முன்னிட்டு நோன்பு வைக்கிறார்கள் ; குறிப்பாக ­ஃபான் 15 Š வது இரவை முன்னிட்டு நீண்ட ஆயுளுக்காகவும், பலாமூஸீபத்துக்கள் நீங்குவதற்காகவும், ரிஜ்கு பரகத்தாக, கிடைப்பதற்காகவும் மும்முறை “” யாஸீனை ” ஓதி துஆ கேட்கிறார்கள் இவற்றிற்கெல்லாம் குர்ஆன் ஹதீஸின் வாயிலாக ஏதேனும் ஆதாரமுண்டா ?
இஹ்ஸானுல்லாஹ், திண்டுக்கல்

தெளிவு : மிஃராஜ் ரஜபு பிறை27- ல் தான் நடைபெற்றது என்பதற்கான சரியான ஆதாரங்கள் எதுவுமில்லை. இமாம் ஜுஹ்ரி, உர்வா ஆகியோர் ரபீஉல்அவ்வலில் ஏற்பட்டதாக கூறுகிறார்கள். ( தப்ஸீர்  இப்னுகதீர் ) ஆகவே நாம் நபி ( ஸல்) அவர்களுக்கு மிஃராஜ் நடந்துள்ளது என்பதைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டுமே, தவிர அது எப்போது எந்த விதத்தில் என்பது பற்றிய சர்ச்சை நமக்கு தேவையில்லை. இவ்வாறே “” பராஅத் ” பற்றி அலசிப்பார்க்கும் போது நபி( ஸல் )  அவர்கள் அப்படி ஒரு இரவு உண்டு, அது புனிதமிக்க இரவு என்று கூறினார்கள் எனபதற்கு ஒரு ஆதாரம் கூட  குர் ஆன், ஹதீஸ்களில் இருப்பதாகத் தென்படவில்லை. ஸஹீஹான ஹதீஸ்களில் பராஅத் இரவு என்ற பெயர் கூட கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே நபி( ஸல் ) அவர்கள் இவ்விரு இரவுகள் குறித்து இவைப்புனிதமான இரவுகள் என்று அவர்கள் கூறியதாக ஒரு வாசகம் கூட முறையான ஹதீஸ்களில் காண முடியவில்லை. ஒரு ­ஃபானிலிருந்து மறு ­ஃபான் வரை மரணிப்பவர்களின் பெயர்கள் பதிவு செய்யப்படுவதாக இப்னு அப்பாஸ் ( ரழி ) அவர்களின் வாயிலாக அறிவிக்கப்படும் ஹதீஸ் கூட உண்மையானதாக இல்லை.

இவ்வாறே அவ்விரு இரவுகளிலும் விசே­த் தொழுகைத் தொழவேண்டுமென்றோ, வேறு எந்த அமலும் செய்ய வேண்டுமேன்றோ  அன்றைய தினம் நோன்பு பிடிக்க வேண்டுமென்றோ நபி ( ஸல் ) அவர்கள் கூறியுள்ளார்கள். என்பதற்கான ஒரு ஆதாரமும் ஸஹீஹான ஹதீஸின் வாயீலாக காண முடியவில்லை. அது மட்டுமின்றி, எவராலும், காட்டவும் முடியாது என்பதை உறுதியாக கூறுகிறோம். குறிப்பிட்ட வகையில் மும்முறை யாசீன் ஓதி துஆ செய்ய வேண்டும் என்பதற்கான ஆதாரமும் ஹதீஸ்களில் காண இயலவில்லை. பொதுவாக இரவில் யாஸீன் ஓது பவர் அதிகாலையில் பாவம் மன்னிக்கப்பட்டவராக எழுவார், என்றும் இரவில் “” துஹான் ( புகை ) ” என்ற சூராவை ஒதுபவரும் அதிகாலையில் பாவம் மன்னிக்கப்பட்டவராக எழவார் என்றும் அபூஹுரைரா ( ரழி )  வாயிலாக ஸஹீஹான ஹதீஸ் ஒன்று அபூயஃலாவில் பதிவாகியுள்ளது. நல்ல அமல்தான்Š நன்மைதான் என்பதற்காக நமது இஷ்டத்திற்கு எதையும், எப்படியும் செய்யலாம் என்பதை இஸ்லாம் தடைசெய்கிறது.

அன்னை ஆயிஷா ( ரழி ) அறிவித்துள்ளார்கள் :
“”இம்மார்க்கத்தில்  இல்லாததொன்றை  இதில்  ஒருவர்  புதிதாக உண்டுபண்ணினால் அது மறுக்கப்படவேண்டிய ஒன்றாகும் என்று நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள் . ” ( புகாரி, முஸ்லிம் )

இந்த ஹதீஸின் அடிப்படையில் எந்த நல்ல காரியங்களையும் தன்னிச்சையாக செய்யாது அவற்றை எப்பொழுது, எந்த முறையில் நபி( ஸல் ) அவர்கள் செய்ய வெண்டுமென்று  கூறியிருக்கிறார்களோ அவற்றை அப்பொழுது அம்முறைப்படி செய்வது தான் மார்க்கம்.

ஆகவே மேற் கூறப்பட்டவை அனைத்திற்கும் மார்க்க அடிப்படையில் எவ்வாதாரமும் இல்லாததால் அவற்றை தவிர்ந்து கொள்வதே முறையாகும்.

ஐயம் Š காலம் சென்ற பெற்றோருக்காக மக்கள் ஏதேனும் செய்யக் கடமைப்பட்டுள்ளனரா ? அப்துல் வதூத், கரூர் .
தெளிவு : – அபூ உஸைதுஸ்ஸாயிதீ ( ரழி ) அறிவித்துள்ளார்கள்

ஒரு முறை  நாங்கள்  நபி (ஸல்) அவர்களிடம்  அமர்ந்திருந்த போது பனுஸலமா குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் அவர்களிடம் வந்தார். அவர்  நபி (ஸல்)   அவர்களை  நோக்கி  அல்லாஹ்வின்  தூதரே!  நான்  எனது  பெற்றோரின்  மரணத்திற்கு  பின்னரும்,  அவர்களுக்காக என் மீது ஏதேனும் கடமை இருக் கிறதா ? என்று கேட்டார். அதற்கு அவர்கள் ஆம், அவர்களுக்காக ( நல்ல ) து ஆ செய்வதும், அவர்களுக்காக ( அல்லஹ்விடம் ) பாவமன்னிப்புக் கோருவதும், அவர்கள் பிறரிடம் ஏதேனும் பொறுப்புள்ள வார்த்தை கூறியிருந்தால் அதை நிறைவேற்றுவதும்,  அவர்களின்  சுற்றத்தாரிடம் கலந்துறவாடுவதும், அவர்களின் தோழர் ( தோழியர் )களுக்கு  மரியாதை செய்வதுமாகும் என்றார்கள். ( அபூதாவூத் , இப்னு மாஜ்ஜா)

திருக்குர் ஆனில் பெற்¼<Vருக்காக பிள்ளைகள் செய்ய வேண்டிய அழகிய து ஆ ஒன்றை அல்லாஹ் கற்பித்துள்ளான்  அதாவது,
ரப்பிர் ஹம் ஹுமாகமா ரப்யானீ ஸகீரா
பொருள் :   எனது ரட்சிகளே ! நான்சிறு பிள்ளையாயிக்கும் போது என பெற்றோர் என்னைக் கருபையாய் வளர்த்தது போன்று , அவ்விருவருக்கும், நீ கிருபை செய்தருள்வாயாக ! ( 17 : 24 )

எனவே மேற்காணும் து ஆவை பெற்றோருக்காக அதிகமாக ஓதிவருவது மிகவும்  சிறப்பாகும்.

ஐயம் Š வீட்டில்  நுழையும்போது ஸலாம் கூறி உள்ளே செல்வது போன்று வெளியேறும் போதும் வீட்டாருக்கு ஸலாம் கூறுவது  நபி ( ஸல் ) அவர்களின் நடைமுறையா ? ( சுன்னத்தா)  முஃபீத், மரிச்சிக்கட்டி, இலங்கை

தெளிவு : கதாதா ( ரழி )  அறிவித்துள்ளார்கள் :
நபி ( ஸல் ) அவர்கள் கூறினார்கள். நீங்கள் ஒரு வீட்டில் பிரவேசிக்கும் போது, அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறுங்கள். நீங்கள்  வெளியேறும் போதும் அவ்வீட்டாருக்கு பயணத்தில் ஸலாம் கூறுங்கள்.  ( பைஹகீ)
அபூஹுரைரா ( ரழி ) அறிவித்துள்ளார்கள் :
நபி ( ஸல் )  அவர்கள் கூறினார்கள். உங்களில் ஒருவர் ஒரு  மஜ்லிஸை ( கூட்டத்தை )  அடைந்தால் ( அவர்களுக்கு ) ஸலாம் கூறவும். அந்த மஜ்லிஸில் உட்கார ஏதுவானால் உட்காந்து  கொள்வாராக ! பின்னர் அதிலிருந்து வெளியேறும் போதும் ஸலாம் கூறவும். முந்தைய ஸலாமைப் பார்க்கினும் விசே­மானதல்ல. ( பிந்தைய ஸலாமும் முந்தைய ஸலாத்தின் அந்தஸ்த்திலே தான் இருக்கிறது. அதைவிட சிறிதும் குறைந்தல்ல. ) ( திர்மதீ )
ஐயம் : சுரக்காய் நபி( ஸல் ) அவர்களுக்கு மிகப் பிரியமான பொருள் என்பதாக  எனது நண்பர் கூறுகிறார் உண்மைதானா ?  ஹதீஸ் ஆதாரம்  தேவை.
நிஃமதுல்லாஹ், கரடிக்குழி, இலங்கை.

தெளிவு : அனஸ் ( ரழி ) அவர்கள் கூறுகிறார்கள் :
ஒரு முறை நபி ( ஸல் ) அவர்களுக்கு ஒரு தையல்காரர் தாம் தயாரித்த உணவை சாப்பிட அழைத்தார் நானும்  ( அவர்களின் ஊழியர் என்ற வகையில் ) அவர்களுடன் சென்றேன். அப்போது  அவர் கோதுமை ரொட்டியையும், இறைச்சியும், சுரக்காயும் போட்டு தயாரித்த  குழம்பையும்  கொண்டு வந்து வைத்தார் . அது சமயம் குழம்பு பாத்திரத்தின்  ஓரங்களிலுள்ள  சுரக்காய் துண்டுகளை நபி( ஸல் ) அவர்கள் எடுத்தெடுத்து சாப்பிடக் கண்டேன். அன்றிலிருந்து சுரக்காய் எனக்கு மிக்ப்பிரியமான பொருளாகவே இருந்து  கொண்டிருக்கிறது.          அனல்  ( ரழி ), புகாரி, முஸ்லிம்
ஐயம் :  நபி (ஸல்) அவர்களை கனவில்   கண்டவர்கள் எல்லாம் சுவர்க்க வாசி என்று கூறுகிறார்களே. இது உண்மையா? காஜாமொய்தீன், பொதக்குடி
தெளிவு : நபி (ஸல்) அவர்களை நேரில் கண்டஅபூஜஹ்லு, அபூலஹ்பு போன்றோரெல்லாம் நரவாசியதக இருக்கும் போது,கனவில்கண்டவர் எவ்வாறு சுவர்க்கவாசியாக முடியும். ஈமானுடனும். உன் அச்சத்துடனும் நல்ல அமல்கள் செய்தால் தான் சுவர்க்கவாசியாக முடியும்.
ஐயம் : நாம் அறியாத நிலையில் நமது கால் பிறரின் மீது பட்டுவிட்டால் அதற்காக அவரைத் தொட்டு முத்தமிடவேண்டுமா?       பு.பு.சாதிக், கூத்தாநல்லூர்
தெளிவு : நாம் அறியாத நிலையில் பிறர் மீது நமது கால்பட்டால் தொட்டுமுத்தமிட நபி வழியில் எவ்வித ஆதாரமுமில்லை. பிறரின் மீது கால்பட்ட குற்றத்திற்காக அவரிடத்தில் அறியாமல் பட்டுவிட்டதற்காக வருந்துகிறேன் என்று கூறுவது தான் முறையாகும்.    ஸ்ரீலங்காவில் ஆசிரியர் குழுவினர்
ஸ்ரீலங்கா, பரகஹதெனிய,தாருத் தெளஹீத் அரபிக்கல்லூரி நிர்வாகத்தாரின் விசே­ அழைப்பை ஏற்று 1988 ஏப்ரல் 13,14,15  தேதிகளில் அங்கு நடைபெறும்  இஸ்லாமிய  மாநாட்டில் கலந்து கொள்ள அந்நாஜத் ஆசிரியர் குழுவில் மூவர் இலங்கை செல்கின்றனர். மற்றும் ஸ்ரீலங்காவில் சுற்றுப்பயணம் செய்து தூய இஸ்லாத்தைப் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்கவும் நாடியுள்ளனர்.  அவர்களது சுற்றுபப்யணம்  நலமாக  அமையவும், அவர்களது தீன் பணி சிறக்கவும் எல்லாம் வல்ல அல்லாஹீவிடம் து ஆ செய்ய வேண்டுகிறோம்.
—————————————————————————————————————————————
“” இஃதிகாஃப் ”
( இறை தியானத்தில் தனித் திருத்தல் )
“” ஹம்துல்லா ஜமாலி ”
“” இஃதிகாஃப் ” என்றும் சிறப்பு வணக்கம் ரமழான் மாதத்தில் நபி ( ஸல் ) அவர்கள் தொடர்ந்து செய்து காட்டிய வழிமுறையாகும் . முஸ்லிம் களாகிய பலருக்கு இவ்வணக்கத்தை பற்றிய தெளிவான ஞானமில்லை. அதன் சிறப்பும், அதனை செய்வதன் அவசியமும் தெரியாமல்  “” இஃதிகாஃப் ” என்ற இறைதியானம் மக்களிடையே மிக குறைந்த அளவிலேயே அனுஷ்டிக்கப்படுகிறது. இஃதிகாஃப் எதற்காக நபி ( ஸல் ) செய்துகாட்டினார்கள் எப்படி செய்து காட்டினார்கள் என்பதை அறிந்தால் ஒவ்வொரு முஸ்லிமும் தனது ஆயுளில் ஒரு தடவையாவது இஃதிகாஃப் இருக்க ஆசைப்படுவான். அந்த பேரவாவில் இந்த கட்டுரை உங்களுக்கு சமர்ப்பிக்கப்படுகிறது.
“”இஃதிகாஃப் ” என்றால் நமது அன்றாட உலக வாழ்வின் அவசியத்திலிருந்து விலகி, பள்ளியில் ஒரு தனி இடத்தில் தங்கி, உடல் உறுப்புக்களின் இச்சைகளைக்  கட்டுப்படுத்தி இறைதியானத்தில் இருப்பது என்று பொருள். நபி( ஸல் )அவர்களால் கற்றுக்கொடுக்கப்பட்ட இறைவணக்கங்களில் மிக்கடுமையானதும், கட்டாய  கடமையாக இல்லாவிடினும், அல்லாஹுவால் தனது அருள்மறையில் அறிவிக்கப்பட்டதும், தொடர்ந்து நபி ( ஸல் ) அவர்களாலும், அவரது தோழர்களாலும் அனுஷ்டிக்கப்பட்டது மான ஒரு வணக்க வழிமுறையாகும் இஃதிகாஃப்
நபி (ஸல்) மரணிக்கும் வரை ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள் அவரது மரணத்திற்குப்பின் அவரது மனைவிகள் அந்நாட்களில் இஃதிகாஃப் இருப்பதை தொடர்ந்து நிறைவேற்றினர். அறிவிப்பு : ஆயிஷா ( ரழி )  ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத்.
ரமழானின்  கடைசி  பத்து நாட்கள் வந்ததும், நபி( ஸல் ) இறை வணக்கங்களை மிக கடினமாக செய்தது போல வேறு நாட்களில் செய்யவே இல்லை என நபியின் அன்பு மனைவி, நமது அன்னை ஆயிஷா ( ரழி ) அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் : முஸ்லிம், திர்மிதி, அஹ்மது, இப்னுமாஜ்ஜா, இப்னு ஜரீர்.
நபி ( ஸல் ) ரமழானின் கடைசி பத்து நாட்கள் வந்ததும், தமது கீழ் ஆடையை வரிந்து  கட்டிக் கொண்டு  அந்நாட்களை ( இறைவணக்கங்களால் ) உயிர்ப் பித்தார்கள். அவரது குடும்பத்தினரும் இரவில் விழித் ( திருக்க செய்து  இறை வணக்கங்களில் ஈடுபட )ச் செய்தார்கள்.
அறிவிப்பு : ஆயிஷா ( ரழி )  ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜ்ஜா முஸ்னது அஹ்மது, இப்னு ஜரீர்.
நபி ( ஸல் ) ஒவ்வொரு ரமழானின்  கடைசி  பத்து  நாட்கள்  இஃதிகாஃப் இருப்பது வழக்கம். ஒருவருடம் அவர்கள் பிராயாணத்தில் இருந்ததால் அவ்வருடத்திய இஃதிகாஃப் இருக்கவில்லை. ஆனால் தொடர்ந்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். அறிவிப்பு : உபை இப்னு கஃபு ( ரழி .)
ஆதாரம் : அபூதாவூத், நஸயீ, இப்னு மாஜ்ஜா, ஹாக்கிம், அறிவிப்பு : அனஸ்பின் மாலிக் ( ரழி ) .ஆதாரம் : திர்மிதி, முஸ்னது அஹ்மது.
மேற்கண்ட  நபிமொழிகளிலிருந்து  நாம்,  நபி( ஸல் )  தொடர்ந்து  தான்  மட்டும்  இஃதிகாஃப்  இருந்து,  இறைவணக்கங்கள் செய்தது மட்டுமின்றி தனது மனைவி, மக்களையும், தோழர்களையும் இஃதிகாஃப் இருக்க ஊக்குவித்திருக்கிறார்கள்  என்பதை அறிகிறோம்.
இறை  வணக்கங்களை  செம்மையாக  செயலாற்ற  முழு மூச்சுடன் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பதும் விளங்குகிறது. ஒரு வருடம் பிராயாணத்தால் விடுபட்டதைக் கூடகளா செய்திருக்கிறார்கள்.
அல்லாஹ் தனது திருமறையில் ரமழான் நோன்பைப்பற்றி குறிப்பிடுகையில்,   “” அல்லாஹ் உங்களுக்கு இலகுவா ( ன, சிரமமற்ற கட்டளைகளைக் கொடு)க்க விரும்புகிறானே தவிர, உங்களுக்குக் கஷ்டத்தை ( க் கொடுக்க )  விரும்பவில்லை ” ( அல்குர் ஆன் 2 : 185 ) என்கிறான்
குர் ஆனின் வேறு இடங்களில்,
( இஸ்லாமிய ) மார்க்கத்தில்  நிர்பந்தமே இல்லை ( 2:256 )
( நபியே ! ) அவர்களை நீர் நிர்பந்திக்கக் கூடியவரன்று ( 88 : 22 )
அல்லாஹ், எந்த ஒருவனையும், அவனது சக்திக்கு மேல் நிர்ப்பந்திப்பதில்லை ( 2: 286 )  போன்ற இறை வசனங்களை தனது சொல், செயல்களில் நடைமுறைப்படுத்தி. “” இஃதிகாஃப் ” வி­யத்தில் தமது கீழ் ஆடையை வரிந்துகட்டிக் கொண்டு இறைவணக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். தனது குடும்பத்தினைரயும், தோழர்களையும் இஃதிகாஃப் இருக்கும் படி ஊக்குவித்திருக்கிறார்கள்.  இதிலிருந்து இஃதிகாஃபின் தனிசிறப்பு நமக்கு தெள்ளத் தெளிவாக தெரியவருகிறது.
இஃதிகாஃபின் நோக்கம் :
இஃதிகாஃபுக்கும், ரமழான் மாதத்தில் வரும் 1000 மாதங்களைவிட மேலான லைலத்துல் கத்ர் இரவுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை குர் ஆன், நபிமொழிகள் மூலம் நாம் அறிறோம். அல்லாஹுவால் தனது அருள்மறையில் புகழப்படும் லைலத்துல் கத்ர் இரவைப்பெற்று, அதன் மகிமைகளை அடைய செய்யப்பபடும் ஒரு சிறப்பு வணக்கம் இஃதிகாஃப்.

நபி ( ஸல் ) நான் மகிமை மிக்க ( லைலத்தல் கத்ர் ) இரவைப்பெற்ற ( ரமழானின் ) முதல் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன். ( ஆதாரம்  முஸ்லீம் ) பின் நடு பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன். ( இவ்விரு பத்து நாட்களிலும் லைலத்துல் கத்ர் இருப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டவில்லை ) அதற்குப்பின் கடைசி பத்து நாட்களில் ( லைலத்துல் கத்ர் என்ற ) அவ்விரவு இருப்பதாக ( வானவர் மூலம் ) எனக்கு அறிவிக்கப்பட்டது. எனவே உங்களில் எவர் ( லைலத்துல்கத்ர் பெற ) இஃதிகாஃப் இருக்க நாடுகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும் எனக்கூறினார்கள். எனவே நபித்தோழர்கள் இஃதிகாஃப் இருந்தனர்.
அறிவிப்பு : அபூஸயீத் அல்குத்ரீ ( ரழி ) ஆதாரம்  : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, முஅத்தா மாலிக், முஸ்னது அஹ்மது .

இந்த நபிமொழியின் மூலம் “”   லைலத்துல கத்ர் ” என்ற ஆயிரம் மாதங்களை விட மேலான ஓரிரவைப் பெறுவது  “” இஃதிகாஃப் என்ற  இறைதியான வணக்கத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்று என்பது தெளிவாகிறது.
எனவே  லைலத்துல்  கத்ர்  இரவில் சிறப்பினை சிறிது  நாம் குர்ஆன்  ஹதீஸ்கள்  மூலம்  அறிந்து  கொண்டால், அச்சிறப்பினை நாமும் பெற உந்தப்படுவோம். அண்ணல் நபி( ஸல் ) அவர்களின் அழகிய முன்மாதரியான “”இஃதிகாஃப் ” இருக்க வேணவாக் கொள்வோம்.  எனவே  லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பினை சிறிது காண்போம்.
நமக்கும்,  நமக்கு  முந்திய  சமுதாயத்தினருக்கும்  முதன் முதலில் வேதங்கள் இறக்கிய ஒரு இரவைப்பற்றி குறிப்பிடுகையில் ரமழான் லைலத்துல் கத்ர் லைலத்துல முபாரக்கா என்ற பதங்களை தனது திருமறையில் அல்லாஹ் உபயோகித்துள்ளான். அவைகளை முதலில் பார்த்துவிட்டு அதற்கு நபி(ஸல்) கூறிய  விளக்கங்களையும்  காண்போம்.
நிச்சயமாக  நாம்  இ(ந்)த  (குர்ஆ)னை  கண்ணியமிக்க  (லைலத்துல்கத்ர் என்னும்)இரவில் (முதலாவதாக) இறக்கி வைத்தோம்.(நபியே!) அந்த (கண்ணியமிக்க) லைலத்துல் கத்ர் (இரவு, அதன்  மகிமையை)  நீர் அறிவீரா ? (கண்ணியமிக்க)லைலத்துல் கத்ர் (இரவு) ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும்.  அதில் வானவர் (மலக்கு) களும்,  (ஜிப்ரயீலாகிய  பரிசுத்த)  ஆவியும்,  தங்கள் இறைவனின் கட்டளையின் பேரில் (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் Š சாத்தியும்,  சமாதனாமும் Š (என கூறிய வண்ணம், அல்லாஹுவிடம்  நமக்கு  பிரார்த்தித்த வண்ணம் அவ்விரவு) Š விடியற்காலை புலரும் வரையில் (பூமியில்) இறக்குகின்றனர். ( அல்குர் ஆன் :  அத்தியாயம் 97 ).
ஹாமீம் ! தெளிவான இவ்வேதத்தின் (குர் ஆனின்) மீது சத்தியமாக!  நிச்சியமாக நாம் இ(ந்) த (குர்ஆ)னை அருள்மிக்க (லைலத்துல் முபாரக்காஎன்ற)  ஓர்இரவில் (முதன் முதலாக) இறக்கி வைத்தோம் . அல்குர் அன் 44 :1 – 3
நமது அருள்மறை குர் ஆன் எந்த மாதத்தில் (உள்ள இரவில்) இறங்கியது என்ற விபரத்தையும் அல்லாஹ் தனது திருமறையில் தானே விளக்குகிறான்.

ரமழான் மாதம்  எத்ததைகய (மகத்துவமுடைய) தென்றால் , அதில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டி (ஹுதன்)யாகவும் , நேரான வழியைத் தெளிவாகக்க கூடிய  (பய்யுனா)தாகவும்,  நன்மை, தீமையைப் பிரித்தறிவிக்கக்கூடிய (ய்புர்கான்) தாகவும் உள்ள திருக்குர் ஆன் (என்ற இவ்வேதம்) அருளப்பட்டது.
(அல்குர் ஆன் : 2 : 185)

இந்த  மூன்று  இறை  வசனங்களையும்,  அதிய்யா  பில்  அல் அஸ்வத் (ரழி)   என்ற தோழர்,   இப்னு அப்பாஸ் ( ரழி )  அவர்களிடம்  ஓதிக்காட்டி  ஒரு  சந்தேகத்திற்கு விடை கேட்கிறார்கள். இவ்வசனங்களில் ரமழான் , லைலத்து கத்ர். லைலத்துல் முபாரக்கா என வெவ்வேறு பெயர்களை அல்லாஹ் குறிப்பிடுகிறான். அதில் நமது திருமறை அல் Š குர் ஆன் முதன் முதலில் இறக்கப்பட்டதாக அறிவிக்கி<ன் இது ­வ்வால் மாதத்திலா? துல்காயிதாவிலா? துல்ஹஜ்ஜிலா ? முஹர்ரத்திலா? ஸபரிலா ? ரபியுல் அவ்வலிலா ? ஆகிரிலா என வினவுகிறார்கள். குர் ஆனின் விளக்கவுரையதளர்களில் தலைச்சிறந்தவரும், நபி ( ஸல் ) அவர்களின் து ஆவைப் பெறற்வருமான இப்னு அப்பாஸ் ( ரழி )அவர்கள் லைலத்துல் கத்ரும், லைலத்துல் முபாரக்கா என்ற இருபெயர்களும், ஒரே இரவை குறிப்பதாகும் . அவ்விரவு ரமழான் மாதத்தில்தான் உள்ளது  என  விளக்கமளித்தார்கள்.  இதனை இமாம் இப்னுகதீர் ( ரஹ் )  தனது ( முக்தஸ்ர் ) தப்ஸீர் பாகம் 1, பக்கம் 161 Šல் குறிப்பிடுகிறார்கள்.

கண்ணியமிக்க  லைலத்துல்  கத்ர்  இரவைக் கொண்ட ரமழான் மாதத்தில் தான், நமக்கு மட்டுமின்றி, நமக்கு முன்னிருந்த, சமூகத்தினக்கும் வேதங்கள் அருளப்பட்டது  என்பதும்  நினைவு  கூறத்தக்கது.
“” இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு  வேத ஏடு  (சுஹ்புக்)கள்  ரமழானின்  ஆரம்ப  இரவுகளில்  (ஒன்றில்)  அருளப்பட்டது.   மூஸா (அலை) அவர்களுக்கு தெளராத்   என்ற   வேத நூல்  ரமழானின் இறுதியி (இரவுகளி)ல் இறக்கப்பட்டது. ஈஸா (அலை) அவர்களுக்கு இன்ஜீல் என்ற இறை வேதம் ராழான் 13 ல் இறக்கப்பட்டது.  நபி (ஸல்)    அவர்களுக்கு  இறுதிவேதம், குர் ஆன், ரமழான் 24 ல். அல்லாஹ் இறக்கி வைத்தான். முந்திய நபி, ரசூல்களுக்கு ஏடு (சுஹ்பிக்)கள் தெளராத், ஜபூர், இன்ஜில் போன்ற வேதங்கள் ஒரே சமயத்தில் முழுமையாக (ரமழானில்) அருளப்பட்டது.
ஆனால் குர்ஆனை  முழுமையாக  லைலத்துல்கத்ர்  இரவன்று,  முதலில்  பைத்துல்  இஜ்ஜாவிலிருந்து,  உலகிற்கு  அருகிலுள்ள  வானிற்கு அல்லாஹ் கொண்டு வந்தான். அங்கிருந்து சிறிது சிறிதாக நபி (ஸல்) அவர்களின் தேவைகள், சூழ்நிலைக் கொப்ப அருளப்பட்டது.

அறிவிப்பு  : இப்னு அப்பாஸ் (ரழி), வாயிலா இப்னு அஸ்கப் (ரழி) ஆதாரம் : முஸ்னது அஹ்மது, இப்னுகதீர்.
லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட ரமழான் மாதத்தில் தான் எல்லா வேதமறைகளும், நமது அருள்மறை குர்ஆனும் இறங்கியது என்பதை அறிகி¼<ம் .குர்ஆன் வசனம் 97 : 3 மூலம் அவ்விரவு ஆயிரம் மாதங்களை விட மேலானது.என்பது விளங்குகிறது.

லைலத்துல்  கத்ர்  என்ற  சிறந்த  இரவு  எனது  உம்மத்துக்கு  மட்டும்  கொடுக்கப்பட்ட  ஒரு  அருட்கொடையாகும்  என  நபி (ஸல்) கூறியதாக அனஸ்பின் மாலிக் (ரழி) அறிவிக்கிறார்கள். ஆதாரம் :  அஹ்மது, தைலமி,இப்னுகதீர்.
பனூ இஸ்ரவேலர்கள் கூட்டத்தில் ஒரு மனிதர் ஆயிரம் மாதங்கள் அல்லாஹ்வின் வழியில் புனிதப்போர் (ஜிஹாது) செய்வதற்காக ஆயத்மாக இருந்தார். அவர்  இரவிலும் விழித்திருந்து விரோதிகளுடன் போர் புரிந்தார் என்பதைக் கேட்டபோது (அது எங்ஙனம் முடியமென) நபித்தோழுர்கள் வியப்புற்றனர். அப்போது குர் ஆனின் 97 -வது அத்தியாயம் இறங்கிறது. அறிவிப்பு : முஜாஹித் (ரழி) ஆதாரம் : இப்னுஜரீர், அபூஹாதம், இப்னுகதீர்.

ரமழானின்  லைலத்துல்  கத்ர்  இரவைப்  பெற்றவர்  பனு  இஸ்ரவேலர்களின்  ஆயிரம்  மாத இறைவணக்கத்திற்கும் மேலான பலனை அடைவர்  என நபி(ஸல்) மூலம் அன்று வியப்புற்ற நபித் தோழர்களுக்கு (ம், இன்றைய நமக்கும்) அறிவிக்கப்பட்டுள்ளது

அறிவிப்பு :  அம்ர் பின்கைஸ் (ரழி) ஆதாரம் : முஸ்னது அஹ்மது, இப்னுகதீர்.
நமது சராசரி ஆயுட்காலமே  ஆயிரம் மாதமில்லையே !
ஆதி நபி ஆதபி(அலை) முதல் ஆகிர் (கடைசி) நபி முஹம்மது (ஸல்) வரையிலுள்ள நபிகளின் உம்மத்துக்களில் முஹம்மது (ஸல்)அவர்களின் உம்மத்துக்கள் தான்  வலிமையற்றவர்கள் ;  பலஹீனமானவர்கள் ; இதனை மூஸா (அலை) அவர்களே நபி (ஸல்) மிஃராஜ் சென்ற போது நினைவூட்டினார்கள். எனவேதான் மற்ற சமூகத்தினருக்கு ஒருநாளைக்கு 50 நேரத் தொழுகையாக இருந்தது நமக்கு 10 % = 5 நேரத் தொழுகையாக  குறைக்கப்பட்டது.
எனது  உம்மத்துக்களுக்கு  ஒவ்வொரு  தொழுகைக்கான  ஒளூவில்  பல்துலக்குவது  (மிஷ்வாக் செய்வது) கூட  கட்டாய கடமையாகிவிடுமோ என பயப்படுகிறேன்  என  நபி (ஸல்)  கூறினார்கள்.  ரமழானின்  இரவுத்  தொழுகை  (தராவீஹ்) கடமையாகி விடுமோ என பயப்படுகிறேன் எனக் கூறி மூன்று நாட்கள் தராவீஹ், ஜமா அத் நடத்தாமல் அதனை, ஒரு சுன்னத்துத்தான், பர்லல்ல!  என  நமக்கு படிப்பித்துச் சென்றார்கள். (ஆனால்  இன்று நமது முஸ்லிம்கள் சாதராய காலங்களில் கட்டாயக் கடமையான ஐவேளைத் தொழுகைகளைக் கூட தொழாதவர்கள் , ரமழானின் தராவீஹ் சுன்னத்தில் கலந்து சிறப்பிப்பது வேறு வி­யம்) அதுமட்டுமின்றி நமது அற்ப ஆயுள் எவ்வளவு இருக்கும் என்பதையும் நனைவூட்டத் தவறவில்லை நபி(ஸல்) அவர்கள்.

ஒருவன் செய்யும் தீயச் செயலுக்கு, அவனது கடைசி நேரம் 60 வயது வரும்வரை (அவன் அதற்காக மனம்  வருந்தி மன்னிப்புக் கேட்கிறானா ? என அறியும் வரை)   அல்லாஹ் அவனை தண்டிப்பதிலிருந்து தவிர்ந்து இருக்கிறான் என நபி (ஸல்) எச்சரித்தார்கள்.

அறிவிப்பு : அபூஹுரைரா ( ரழி ) ஆதாரம் : புகாரி.

நபி ( ஸல் ) கூறினார்கள் : எனது உம்மத்துகளில் சராசரி ஆயுட்காலம் 60 முதல் 70 வயதாகும், ஒரு சிலர்  இதிலிருந்து விதி விலாக்காகலாம்.

அறிவிப்பு : அழுஹுரைரா ( ரழி ) ஆதாரம் : திர்மிதி, இப்னுமாஜ்ஜா.

இஸலாமிய சகோதர, சகோதரிகளே !
நமது  ஆயுட்காலம்  60 லிருந்து 70 க்குள் இருக்கலாம் என்பது தெளிவாகிறது. அண்மையில் அகில உலக ஆட்தொகை கணக்கின்(ளீeஐவிற்வி) புள்ளி விவரங்கள் இதனை உண்மைபடுத்துகிறது, இவ்வளவு குறுகிய காலத்தில் நாம் இவ்வுலக வாழ்விலும், மறுமையிலும் நல்லவர்களாகவாழ ஆசைப்படுகிறோம்.

நம்மால்  நமக்கு  முந்திய  இஸ்ரவேலர்கள் போல, 1000 மாதங்கள் (1000@12=38 வருடம் 4 மாதங்கள்)  இறை வணக்கத்திலேயே ஈடுபட்டார்களே அவர்கள் போல ஈடுபட முடியுமா? என்பதை  சிந்தித்துப் பாருங்கள்!
நமது  சராசரி  ஆயுட்காலம் 60 லிருந்து 70 வருடங்களையும் முழுமையாக  மறுமையின்  நன்மைக்கே  செலவிடவும்,  தொழுகை,  நோன்பு,  ஜுஹாது போன்றவற்றில் தனித்து வாழவும் அல்லாஹுவும், அவனது ரசூலும் அனுமதிக்கவில்லை. இவ்வுலக இன்ப துன்பங்களை சுவைத்துக் கொண்டு, மனைவிமக்களுடன் வாழவே அணையிடுகிறது இஸ்லாம். உலக ஆசைகளை அறவே துறந்து வாழும் துறவரத்தை தூக்கி எறியச்சொல்கிறது இஸ்லாம். இந்நிலையில் நாம் 1000 மாதங்கள் இறை வழியும் போர்ப்புரிந்த, இறை வணக்கங்களில் ஈடுபட்ட பனு இஸ்ரவேலர்கனைளப் போல அல்லாஹுவின் அருட்பெரும் பலனை அடைய முடியுமா ? என்ற ஏக்கம் எடுக்கிறது நமக்கு.

முடியும் ! ஏன் ? அதைவிட அடிதகமான நன்மைகளையும் பெற முடியுமென அல்லாஹுவிடம், அவனது ரசூல் (ஸல்) அவர்களுக்கு நமக்கு ஆக்கம் தந்து ஊக்குவிப்பதையும் பாரீர் : Š

“” லைலத்துல் கத்ர் ஆயிரம் மாதங்களை விட மேலானதாகும். ” (97 : 3)
நமக்கு முந்திய சமுகத்தினருக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளை கொடுத்திருந்தான். எனது உம்மத்துக்களின் ஆயுட் காலத்தை சுருக்கி (குறைத்து) விட்டான். ஆனால்,  சிரமமற்ற  இலகுவான  வழியில்  நீண்ட  ஆயுட்  கொண்ட  முந்திய சமூகத்தினர், பல மாதங்கள் நற்செயல்(இறை வணக்கங்)கள் செய்து பெற்றநன்மைகளைவிட அதிகமாகப்பெற லைலத்துல் கத்ர் இரவை (இறை வணக்கங்களால்) சிறப்பிப்பதால் வழிவகைச் செய்தான் அல்லாஹ் என நபி ( ஸல் ) ஊக்க மளித்தார்கள். அறிவிப்பு : அலி இப்னு உர்வா ( ரழி )  ஆதாரம் : அபூஹாதம், இப்னுஜரீர், மு அத்தாமாலிக்
“”லைலத்துல்  கத்ர் ”  எனது  உம்மத்துக்க  மட்டும்  அருளப்பட்ட  ஒரு  அருட்கொடை  (அறிவிப்பு : அனல் (ரழி) ஆதாரம் : அஹ்மது, தைலமி)  என ஞாபகமூட்டவும் மறக்கவில்லை நபி (ஸல்) அவர்கள்.

மேற்குறிப்பிட்ட உண்மையான ஹதீஸ்கள் மூலமும், அல்லாஹுவின் அருள்வாக்கு மூலமும் ரமழான் மாதத்தில் உள்ள லைலத்துல் க்த்ர் ஆயிரம் மாதங்களை  விட சிறப்பானது.  அதில் செய்யப்படும் அமல் (நற்செயல்) களுக்கு, பனு இஸ்ரவேலர்களின் ஆயிரம் மாதங்களின் நற்செயல்களுக்கு கிடைத்தக் கூலியை விட அதிகமாக அல்லாஹ் தருவான் என்பது ஊர்ஜிதமாகிறது, அதனை கீழ்வரும் நபிமொழிகளும் மெய்ப்பிக்கின்றன.

லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட  ரமழானில்  ஒருவர்  செய்யும்  சாதாரண நற்செயலுக்கு,  மற்ற  மாதங்களில் அவர் செய்யும் பர்லான (கடமையான) செயலுக்கு, மற்ற மாதங்களில் அவரால் செய்யப்படும் எழுபது பர்லுக்குரிய கூலி தரப்படும் என நபி(ஸல்) சிறப்பித்தார்கள்.
அறிவிப்பு :  ஸல்மான் பின் பார்ஸி (ரழி) ஆதாரம் : பைஹகீ.

ஆதத்தின்  மக்கள்  செய்யும்  ஒரு  நற்செயலுக்கு,  அல்லாஹ்,  பத்து  முதல்  எழுநூறு  மடங்கு  நன்மைகளை  அளிக்கிறான்  எனவும்  நபி ( ஸல் ) குறிப்பிட்டார்கள். அறிவிப்பு :  அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மது, இப்னுமாஜ்ஜா, ஸஹீபாஹம்மாம் இப்னு முனப்பஹ்.

எவரொருவர்  உள்ளச்சத்துடன்,  அல்லாஹுக்காக  லைலத்துல் கத்ர்  இரவை  (நின்று வணங்க,  நல்ல  இறைவணக்கங்களில் ஈடுபட்டு) சிறப்பக்கிறாரோ அவரது அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுகிறது, என நபி(ஸல்) கூறினார்கள். அறிவிப்பு : அபூஹுரைரா (ரழி) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அஹ்மது

அனைத்துப்  பாவங்களும்  மன்னிக்கப்பட்டவர்   நரகத்திலிருந்து  மீட்சிப்பெற்ற,  நிரந்தரமாக  சொர்க்கத்தில்  இருப்பார்   என்பது  உள்ளங்கை  நெல்லிக் கனியாக விளங்குகிறது. எனவே தான் லைலத்துல் கத்ர் இரவைக் கொண்ட ரமழானின் கடைசி பத்து நாட்கள் நரகத்தின் இரட்சிப்புக்கானது என நபி (ஸல்) குறிப்பிட்டார்கள். முதல் பத்து நாட்கள் அல்லாஹுவின் அருட்கொடையாகவும், நடு பத்து பாவ மன்னிப்பாகவுமிருக்கிறது எனக் கூறவும் மறக்கவில்லை.அறிவிப்பு :  ஸல்மான் பின் பார்ஸி (ரழி),      ஆதாரம் : பைஹகீ.

லைலத்துல் கத்ர் என்ற ஆயிரம் மாதங்களை விட மேலான இரவை (ப் பெற்றவர் அல்லாஹுவின் அனைத்து அருட்கொடைகளையும் பெற்றவர்) இழந்தவர் எல்லாவற்றையும் இழந்தவர் என நபி(ஸல்) எச்சிரிக்கவும் செய்தார்கள். அறிவிப்பு : அபூஹுரைரா (ரழி), ஆதாரம் : நஸயீ, அஹ்மது.

இச்சிறப்பு அனைவருக்கும் கிடைக்குமா ?  என்ற நியாயமான கேள்விக்கும் பதில் தந்தார்கள் நபி (ஸல்) :
“”எவருக்கு, அல்லாஹுவால், வளமான வாழ்வு மறுக்கப்பட்டதோ அவர் இவ்விரவைப் பெறாமல் கைசேதமடைவார்” (அல்லாஹுவால் நல்வாழ்வு கொடுக்கப்பட்டவரே இவ்விரவைப் பெறமுடியும்)  அறிவிப்பு  : அனஸ்பின் மாலிக் (ரழி), ஆதாரம் : அஹ்மது, இப்னுமாஜ்ஜா.

“”எனவே தான் இச்சிறப்புமிக்க லைலத்துல் கத்ர் எந்த இரவு என இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களிடம், உபை இப்னு கஃபு (ரழி) வினவிய போது ஒரு வருடத்தில்ஒரு இரவு ” (அவ்விரவின் சிறப்புகளை அடைய முழு வருடமும் இறைவணக்கத்தில் ஈடுபட்டாலே முடியும்? என விடை பகர்ந்தார்கள்.
ஆதாரம்  : முஸ்லிம், அபீதாவூத்.

ரமழான், முழு மாதத்தில் ஒரு இரவு லைலத்துல் கத்ர் இருப்பதாக அப்துல்லா பின் உமர் ( ரழி ) அயிவித்தார்கள்.  ஆதாரம் : அபூதாவூத்

இப்பெரும் சிறப்புக்கள்,  மகிமைகள் லைலத்துல் கத்ர் இரவுக்கு இருப்பதால் .நபி(ஸல்) பெரும்பாடுபட்டு “” இஃதிகாஃப் ” என்ற இறைதியானத்தில் இருந்தார்கள்.  அல்லாஹுவின் நேரடிப் பார்வையிலிருந்து அஹ்மது (ஸல்); அகில உலகிற்கும் அருட்கொடையான ரசூல் (ஸல்) அனைவருக்கும் அழகிய முன் மாதிரியான நபி (ஸல்); அல்லாஹுவின் அருள்வாழ்வு இரு உலகிலும் பெற்ற முஹம்மது (ஸல்); மறுமையில் நமக்காக பரிந்துரை பேசும் பாக்கியம் பெற்ற ஒரேநபி(ஸல்);அல்லாஹுவால் முந்திய பிந்திய பாவங்கள் இவ்வுலகிலேயே மன்னிக்கப்பட்ட மாஹி (ஸல்) அவர்கள் அவ்விரவைப் பெற வேண்டும் எனவே ணவாக் கொண்டார்கள். எனவே தான், ஒவ்வொரு ரமழானிலும் அவர்கள்  மரிக்குவரை  இஃதிகாஃப்  இருந்தார்கள்.  தனது மனைவி, மக்களையும் அவ்விரவைப் பெற இஃதிகாஃப் இருந்து இறை தியானத்தில் வாழ ஊக்குவித்தார்கள்.

இஃதிகாஃப் ஒரு சிறப்பான சுன்னத்
ரசூல் (ஸல்)ஒரே ஒரு நாள், ஒரு செயல் செய்து காட்டியிருந்தாலும் அதனை அவர் காட்டித் தந்த ஒரு அழகிய வழிமுறையா (க சுன்னத்தா)க்கிக் கொள்வது ஒவ்வொரு முஸ்லிமுக்கும் அழகாகும். மூன்றே மூன்று நாட்கள்  ஜமா அத்தாக தொழுது காட்டிய இரவுத் தொழுகை (தராவீஹு)யை மிக முக்கிய சுன்னத் தாக்கி  செயல்படும்  இன்றைய  முஸ்லிம்கள் இதில்  கருத்து வேறுபட முடியாது. அவ்விதம்  எல்லா சுன்னத்துக்களையும், முடிந்தவரை உயிர்ப்பிப்பதன்  மூலம் நபி (ஸல்) அவர்களின் நல்லும்மத்தாக மறுமையில் எழவும், அவரது பரிந்துரைக்கு உரியவர்களாவும் வழிவகுக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

எனவே தான் இப்னு உமர் (ரழி), இப்னு அப்பாஸ் (ரழி), அனஸ் (ரழி) போன்ற நபித்தோழர்களும், அவர்களைத் தொடர்ந்த தாபிஈன்களும் கண்ணியமக்கி  இமாம்களான அஹ்மது பின் ஹம்பல் (ரஹ்), மாலிக் இப்னு அனஸ் (ரஹ்) ஷாபிஈ(ரஹ்), போன்றோரும் தங்களுக்கு ஒரு ஹதீஸ் கிடைத்ததும் உடனே அதனை செயலாக்கி, சுன்னத்தாக்கினார்கள் என ஹதீஸ் கலாவல்லுநர்கள் குறிப்பிடுகிறார்கள்.

ஆனால்  “”இஃதி காஃப்”  என்ற  இறைதியான சுன்னத்தோ ஒரே ஒரு வருடம் செய்யப்பட்டதல்ல. நபி (ஸல்) அவர்களால் தொடர்ந்து செய்யப்பட்டது. தனது மனைவி, மக்களையும் இருக்கும்படி தூண்டப்பட்டது. ஒருவருடம் இருக்காத இஃதிகாப்””களா ” செய்யப்பட்டது. இதிலிருந்து இஃதிகாஃப் என்ற இறை தியானம்  எவ்வளவு முக்கிய முள்ள நபிவழி (சுன்னத்) என்பதை உணரலாம். மகிமை மிக்க லைலத்துல் கத்ர்  இரவின்  சிறப்புகளை  தனது  உம்மத்துக்களும் பெற வேண்டும்  அதற்காக  இஃதிகாஃப்  இருத்தல்  வேண்டும்  என எல்லாம் பாவங்களும் இவ்வுலகிலேயே அல்லாஹுவால்  மன்னிக்கப்பட்ட  அருள் நபி (ஸல்) நமக்கு ஒரு அழகிய உதாரணத்தை செயலில் காட்டிச் சென்றார்கள். எனவே ஒவ்வொரு முஸ்லிமும்  “”இஃதிகாஃப்பை” மிக  முக்கிய சுன்னத்தாகக் கொண்டு (குறைந்தது ஆயுளில் ஒரு முறையாவது) நிறைவேற்ற வேண்டும் என்பதை நாம் உணரலாம்.

“”லைலத்துல் கத்ர் ” இரவைப்பெற நபி (ஸல்) எடுத்துக் கொண்ட முயற்சிகள் :
அபூஸயீத் அல்குத்ரீ விளக்குகிறார் :
ரசூல் (ஸல்) அவர்கள்,   ரமழான் மாதத்தின் முதல் பத்து நாட்கள்  இஃதிகாஃப் இருந்தார்கள் (அதில் லைலத்துல் கத்ர் இருப்பதாக அறிவிக்கப்படவில்லை. எனவே) பின்பு நடுபத்து நாட்கள் இஃதிகாஃப் துவக்கி கூடாரத்தில் இருந்தார்கள். அதன் வாயிலில் ஒரு பாய் தொங்கிக் கொண்டிருந்தது. (இருபது நாட்கள்  முடிந்தபோது) நபி (ஸல்) அவர்கள் அப்பாயை சுருட்டி மூலையில் பிடித்துக் கொண்டு தங்களது சிரத்தை வெளியாக்கினார்கள். அனைத்து நபித்தோழர்களும் அவரது அருகில் சென்றனர்.

ரசூல் (ஸல்) கூறினார்கள் : நான் மகிமைமிக்க (லைலத்துல் கத்ர்) இரவைப்பெற முதல் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன். பின் நடு பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தேன். (இவ்விரு பத்து நாட்களிலும் லைலத்துல் கத்ர் இருப்பதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை) அதற்குப் பன் கடைசி பத்து இரவுகளில் (லைலத்துல் கத்ர் என்ற)  அவ்விரவு  இருப்பதாக  (வானவர் மூலம்)  அறிவிக்கபபட்டது . எனவே  உங்களில்  எவர்  இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ இஃதிகாஃப் இருக்கட்டும் என்றார். எனவே நபித்தோழர்களும் இஃதிகாஃப் இருந்தார்கள்.
இன்னும் நபி (ஸல்) இலகுவாக்கினார்கள். எனக்கு (லைலத்துல் கத்ர் என்ற மகிமை மிக்க) இரவு (கடைசி பத்து இரவுகளின்) ஒற்றைப்படை இரவுகளின் இருப்பதாக காட்டப்பட்டது .அவ்விரவு நான் மண்சகதியின் மீது ஸஜ்தா செய்வதாக (கனவு) கண்டேன் என்றார்கள் .

இதனைத் தொடர்ந்து அபூஸயீத் (ரழி) கூறுகிறார்கள் :
21- வது இரவு முடிந்த காலை நபி (ஸல்) பஜ்ர் தொழ வைத்தார்கள்  அன்று இரவு பெய்த கடும் மழையில் பள்ளி மண்ணும் சகதியுமாக இருந்தது. பஜ்ர் தொழவைத்து திரும்பிய நபி ( ஸல்) அவர்களின் நெற்றியிலும், மூக்கு நுனியிலும் மண்ணும் , சகதியும் படிந்திருக்கக் கண்டேன்.அது கடைசி பத்து நாட்களில் உள்ள 21 வது இரவாகும் (எனவே 21 வது இரவு லைலத்துல் கத்ர் என அபூஸயீத் (ரழி) முடிவு கூறுகிறார்) என்கிறார்.   ஆதாரம்  :  முஸ்லிம், அஹ்மது

இந்த ஹதிஸில், “”முதல் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்”  என்ற வாசகமில்லாமல், நடு பத்து நாட்கள்……………. ” என்ற வாசகத்திலிருந்து கடைசி வரை அபூஸயீத்  அல்குத்ரி (ரழி) அறிவிப்பதாகவே   உள்ள  ஹதீஸ்கள் வெவ்வேறு அறிவிப்பாளர்கள் வரிசையில் பதிவு செய்யப்பட்ட மற்ற நம்பனமான ஆதார  நூற்கள் புகாரி,  முஸ்லிம்,  அபூதாவூத்,  நஸயீ, முஅத்தா மாலிக்,  முஸ்னது அஹ்மது போன்றவை,  இதே  ஹதீஸை அபூசலாமா(ரழி) அறிவிப்பதாக புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளதும் கவனிக்கத்தக்கது.

மேலே குறிப்பிட்ட நபிமொழியிலிருந்து மகிமைமிக்க அருட்கொடையான லைலத்துல் கத்ர் இரவைப் பெற நபி (ஸல்) முழு ரமழானும் இஃதிகாஃப் இருந்திருப்பது  தெரிய வருகிறது.  எனவே  தான்  இப்னு  உமர் (ரழி)  அவர்கள்  முழு  ரமழானில்  லைலத்துல்  கத்ர்   இரவு  இருப்பதாக   அறிவித்திருக்கிறார்கள் என்பது தெளிவு.

இதனடிப்படையில்  நாம்  ரமழான் முழுவதும் இஃதிகாஃப் இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ஏனெனில் முதலிரண்டு பத்து நாட்களில் நபி (ஸல்) லைலத்துல் கத்ரைபெற இஃதிகாஃப் இருந்து, அந்நாட்களில் இல்லை, மூன்றாவது பத்தில் இருப்பதாக ஜீப்ரயீல் (அலை) மூலம் அல்லாஹ் அறிவித்ததை நமக்கு  தெரிவித்துவிட்டார்கள்.  பலஹீனமான  நாம், ரமழான் முழுதும் கடுமையான  இஃதிகாஃப்  இறை  தியானத்தில்  இருக்க வலிமையற்றவர்கள் என்பதை அறிந்தே, கடைசி பத்து இரவுகளில் இருப்பதாக. அல்லாஹுவும்,  அவனது  ரசூல்(ஸல்)  அவர்களும்  நமக்கு இலகுவாக்கிவிட்டனர்.அல்ஹம்துலில்லாஹ்! எல்லாப் புகழும் அல்லாஹுவுக்கே !

“” லைலத்துல் கத்ர் ” இரவு பற்றிய வேறுபட்டக் கருத்துக்கள் :
லைலத்துல் கத்ர் கடைசி பத்து இரவுகளில் என்பது இருக்க, நபி (ஸல்) ஒரு குறிப்பிட்ட இரவு என்று கூறியிருப்பதாகவும், ஒருசில அடையாளங்களைக் கூறி அது ஏற்படும் இரவு லைலத்துல் கத்ர் என அடையாளம் காட்டியிருப்பதாகவும் பற்பல நபித்தோழர்கள் மூலம் அறிவிக்ககப்பட்ட ஹதீஸ்கள் எல்லா நம்பகமான , உண்மையான ஹதீஸ் நூற்களில் ஆதாரமாக இருக்கிறது. இதனடிப்படையில் எது லைலத்துல் கத்ர் இரவு என்பதில் வேறுபட்ட கருத்துக்களை காண்கிறோம். அதனையும் இங்கு சிறிது காண்போம்.

21- வது இரவு லைலத்துல் கத்ர் :
மேலே குறிப்பிட்ட அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்களின் அறிவிப்பில் கூறப்பட்ட அடையாளங்களை, தான் ரமழான் 21 – வது இரவு முடிந்த காலையில்  நபி (ஸல்) அவர்களிடம் கண்டதால் அது தான் லைலத்துல் கத்ர் என்கிறார் அபூஸயீத் அல்குத்ரி (ரழி) அவர்கள். ஆதார நூற்கள் : புகாரி, முஸ்லிம்,

அபூதாவூத் நஸயீ, முஅத்தாமாலிகி, முஸ்னது அஹ்மது    இதனை சரிகாணுகிறார் அபூசலாமா (ரழி) அவர்கள். ஆதாரம்  : புகாரி.

23- வது இரவு லைலத்துல் கத்ர்.
நபி (ஸல்) : எனக்கு  லைலத்துல்  கத்ர்  எந்த  இரவு  எனக்  காட்டப்பட்டது; பன் மறக்கடிக்கப்பட்டது,  ஆ²ல்,  அந்த  இரவு  முடிந்த  காலையில் நான் மணி சகதியின் மீது சஜ்தா செய்வதாக (கனவு) கண்டேன் என்றார்கள். 23 – வது இரவில் பலத்த மழை பெய்தது. காலை எங்களுக்கு நபி (ஸல்) பஜ்ர் தொழவைத்து திரும்பியபோது அவரது நெற்றியிலும், மூக்கின் நுனியிலும் மண் சகதி ஒட்டியிருக்கக் கண்டேன். எனவே, 23- வது இரவுதான் லைலத்துல் கத்ர் இரவு என்கிறார் அப்துல்லாபின் உன்னல் (ரழி) அவர்கள் . ஆதாரம் : முஸ்லிம். அபூதாவூத், தப்ரானி.

தான் மிக தூரத்தில் தங்கி இருப்பதாகவும், லைலத்துல் கத்ர் எந்த இரவு என குறிப்பிட்டு கூறும்படியும், அவ்விரவில் தான் பள்ளிக்கு வர வசதியமாக இருக்கமெனவும், அதற்கு நபி (ஸல்) 23 – வது இரவை குறிப்பிட்டதாகவும் அப்துல்லா பின் உன்னஸ் (ரழி) கூறிகிறார்கள். இதனை இப்னு உமர் (ரழி) அவர்களின் அடிமை அபூநதர் (ரஹ்) கூறியதாக இமாம் மாலிக் (ரஹ்) தனது மு அத்தாவில் பதிவு செய்துள்ளார்கள்.

இதே நபித்தோழர் அப்துல்லாபின் உன்னஸ்(ரழி) லைலத்துல் கத்ர் ரமழானின் 22 அல்லது 23 வது இரவு என குறிப்பிட்டதாகவும் அபூதாவூத்(ரஹ்) தனதுசுனனில் பதிவு செய்துள்ளார்கள்.ஆயிஷா (ரழி) அவர்கள் 23 – வது இரவில் லைலத்துல் கத்ரைக் கண்டதாக இப்ராஹீம் (ரழி) கூறுவதாக இப்னுஜரீர் (ரஹ்)தனது நூலில் அறிவிக்கிறார்.
24- வது இரவு :  லைலத்துல் கத்ர்.

லைலத்துல் கத்ர் இரவை 24 வது இரவில் தேடிக் கொள்ளுங்கள் என  இப்ன அப்பாஸ் (ரழி) கூறியதாக இமாம் புகாரி (ரஹ்) தனது சஹீஹ் புகாரியில் குறிப்பிடுகிறார்கள்.

24- வது இரவு லைலத்துல் கத்ர் என அபூசயீத் (ரழி) கூறியதாக  இமாம் அஹ்மத் இப்னு ஹம்பல் (ரஹ்) தனது முஸ்னதில் குறிப்பிடுகிறார். மேலும் வாயிலா பின் அஸ்கப் (ரழி) கூறியதாகவும் பதிவு செயதுள்ளார்.

27-வது இரவு லைலத்துல் கத்ர் :
லைலத்துல் கத்ர் இரவுக்கான அடையாளமாக நபி (ஸல்) கூறியது :
“” லைலத்துல் கத்ர்  முடிந்த பகலில் சூரியன் நீர் தட்டுப்போல குளுமையாக இருக்கும். நடு உச்சி வேளையிலும் சூரியனில் உஷ்ணக் கதிர்கள் இருக்காது.” இவ்வடையாளங்கள் 27 வது இரவு முடிந்த அன்று நிகழ்ந்தது. எனவே 27 வது இரவு தான் லைலத்துல் கத்ர் என்கிறார்கள். உபை இப்னுகஃப்(ரழி), இப்னுமஸ்ஊத் ( ரழி ) ஆதாரம் : முஸ்லிம், அபூதாவூத், அஹ்மது,                                                                                                                    வாயிலா ( ரழி ) ; ஆதாரம் : தப்ரானி.                                                                                                                                                    இப்னு அப்பாஸ் ( ரழி ) ஆதாரம்  : தயாஸிலி, பைஹகீ.                                                                                                       மேலும் 27 வது இரவு தான் லைலத்துல் கத்ர் என அறிவிப்பவர்கள்                                                                                                 முஆவியா ( ரழி ) ; ஆதாரம் : அபூதாவூத், தப்ரானீ .                                                                                                            இப்னுஉமர் ( ரழி ) ; ஆதாரம் : முஸ்லிம், அஹ்மது.
அரபி விற்பன்னர்களின் ஊகமும் 27 தான் :
நாம்  முதலில்  குறிப்பிட்ட  குர்ஆனின்  97வது  அத்தியாயத்தில் “”லைலத்துல் கத்ர் ” என்ற அரபிச் சொல்லை மூன்று தடவைகள் அல்லாஹ் உபயோகித்துள்ளான்.
ஒரு லைலத்துல் கத்ர் என்ற பதத்திற்கு ( லாம், யா, லாம், தாŠஅலிப் லாம், ஞகாப், ம்தால், ரே என ) ஒன்பது அரபி எழுத்துக்கள் உள்ளது .எனவே 3 யீ9 = 27. எனவே 27 வது இரவு தான் லைலத்துல் கத்ர் என தனது அரபி ஞானத்தைக் கொண்டு வாதிடுவோரும் உண்டு.

லைலத்துல்  கத்ர் 29 வது இரவு என அபூஹுரைரா ( ரழி )அறிவிப்பதாக முஸ்னது அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்விதிமாக ஒரு குறிப்பிட்ட நாளின் இரவைக் கூறி, இது தான் லைலத்துல் கத்ர் எனக்கூறும் இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. இதுவன்றி, ஒரு சில ஹஸ்கள் ஒருசில நாட்களைக் கூறி, இந்நாட்களில் “”  ஒன்று தான் ” லைலத்துல் கத்ர் எனவும் நமக்கு எடுத்தியம்புகிறது.

ஒரு சில நாட்களில் லைலத்துல் கத்ர் :
ஒரு சில நபித்தோழர்கள் ரமழானின் கடைசி ஏழு நாட்களில்  லைலத்துல் கத்ர் இருப்பதாக கனவு கண்டார்கள் இதனை அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறியபோது  உங்களது  கனவு உண்மைக் கொப்ப  ஒத்திருக்கிறது.  எனவே  கடைசி  ஏழு  நாட்களில் இரவுகளில் லைலத்துல் கத்ரைத்  தேடிக் கொள்ளுங்கள்  என நபி (ஸல்) கூறினார்கள் .                                                                                                             அறிவிப்பு : இப்னுஉமர் ( ரழி ) ; புகாரி, முஸ்லிம், அஹ்மது.                                                                                                                                அறிவிப்பு : அபூதர் ( ரழி ) ; அபூதாவூத்                                                                                                                                                 அறிவிப்பு ; அபூஹுரைரா ( ரழி ); முஸ்லிம்.                                                                                                                          அறிவிப்பு : இப்னு அப்பாஸ் ( ரழி ); முஸ்னது அஹ்மது .
நபி (ஸல்) கடைசி ஏழு நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைப் பெற சிறப்பு தொழுகை தொழ வைத்ததாக அபூதர் (ரழி) கூறும் ஹதீஸ் அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது.
ரமழான் முடிவிலிருந்து  9, 7,5 இரவுகளில் ( அதாவது 21, 23, 25 இரவுகளில் ) லைலத்துல் கத்ரை பெற்றுக் கொள்ளும் படி நபி ( ஸல் ) அறிவித்தார்கள்.அறிவிப்பு : இப்னு அப்பாஸ் ( ரழி), அறிவிப்பு : புகாரி, அபூதாவூத், அஹ்மது அறிவிப்பு : உபாதா பின் தாபித் (ரழி), அறிவிப்பு : தப்ரானீ.

ரமழானின் கடைசி பத்து நாட்களில், ஒன்பது இரவுகள் அல்லது கடைசி ஏழு இரவுகளில் லைலத்துல் கத்ரைப் பெற்றுக் கொள்ளும்படி நபி (ஸல்) குறிப்பிட்டதாக இப்னு அப்பாஸ் (ரழி) அறிவிப்பதாக இமாம் புகாரி தனது சஹீஹில் பதிவு செய்துள்ளார்.

லைலத்துல் கத்ர் எந்த இரவு :
மேலே குறிப்பிட்ட அனைத்து நபி மொழிகளும் சரியான அறிவிப்பாளர்கள் வரிசையில் இடம் பெற்ற ஹதீஸ்கள். அவைகளை அறிவிக்கும் நபித்தோழர்களும் அனைவராலும் புகழப்படுபவர்கள், நபி(ஸல்) அன்புக்குரியவர்கள், ஒரு சிலர் மனைவி, நெருங்கிய உறவினர்கள். இதனை பதிவு செய்துள்ள ஹதீஸ்கலா வல்லுநர்களும் இந்த ஹதீஸ்கள் ( ஹஸன் ) அழகானது, நம்பகமானது, உண்மையானது, ஏற்கத்தக்கது  என  நற்சான்றிதழ்களும்  தருகிறார்கள். இது போன்ற வேறுபட்ட கருத்துக்களைத் தெரிவிக்கும் இன்னும் பல ஹதீஸ்கள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் நிறுத்துகிறோம்.

ஒவ்வொரு நபித்தோழரும் ஒவ்வொரு நாள் இரவை லைலத்துல்  கத்ர் எனக் குறிப்பிடுகிறார்கள். ஒரு சில நபித்தோழர்கள் வெவ்வேறு ஹதீஸ்களில் வெவ்வேறு இரவுகளைக் குறிப்பிடுகிறார்கள். எனவே  ஏதாவது  ஒரு குறிப்பிட்ட நாளின் இரவை மட்டும் “” லைலத்துல் கத்ர் ” என தீர்மானிக்க முடியாது, கூடாது. அப்படி ஒரு குறிப்பிட்ட நாளின் இரவை தீர்மானித்தால், மற்ற இரவுகளைப் பற்றி கூறிய நபிமொழிகளை மறுத்தவர்களாகிறோம்.
அல்லாஹு நம்மை காப்பனாக ! நபி (ஸல்) சொல்லாததை சொல்வது எவ்வளவு பெரும் குற்றமோ,  அதே போல்  அவர்  சொல்லியதை  மறுப்பதும். குற்றமாக அமையும். எனவே எல்லா நபித்தோழர்களின் கூற்றையும்  உள்ளடக்கி  நபி (ஸல்) கூறியது  நடைமுறைப்படுத்தினால்  எல்லா நபி  மொழிகளையும் சுன்னத்தாக்கிய பாக்யவானாவோம்.

வேறுபட்ட கருத்துக்களை உள்ளடக்கும் நபி மொழிகள் :
எனக்கு லைலத்துல் கத்ர் எது என அறிவிக்கப்பட்டது. அதனை மக்களுக்கு தெரிவிக்க வந்தேன். அப்போது இரு முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர் நமது கொடிய விரோதி ஷைத்தான் அவர்களுடனிருந்தான். எனக்கு “”எது லைலத்துல் கத்ர் என்பது மறக்கடிக்கப்பட்டு விட்டது. எனவே ரமழானின் கடைசி பத்து நாட்களில் அதனைத் தேடிக் கொள்ளுங்கள் என நபி (ஸல்)அறிவுரைப் பகர்ந்தார்கள்                                            அறிவிப்பு : அபூஸயீத் அல்குத்ரீ ( ரழி ) ; ஆதாரம் : முஸ்லிம், புகாரி, அஹ்மது

                                                                                      அறிவிப்பு : உபதாபின் தாபித், ( ரழி ) ; ஆதாரம் : புகாரி, அஹ்மது.
லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி ஒரு சிலர் ரமழான் கடைசி பத்து நாட்களில் முதல் வாரம் என்றும், மறு சிலர் கடைசி வாரம் என்றும் கருத்து வேறுபடுகிறார்கள். ஆனால் கடைசிபத்து நாட்களில் லைலத்துல் கத்ர் இரவைப் பெற்றுக் கொள்ளட்டும்  என நபி (ஸல்)  அறிவித்ததாக தனது தந்தை இப்னு உமர் (ரழி)கூறியதாக அவரது மகனார் சலீம் இப்னு அப்துல்லா அறிவிக்கிறார். ஆதாரம் : முஸ்லிம், அஹ்மது.

ரமழானின் கடைசி பத்து நாட்களில்  லைலத்துல் கத்ர் இரவைத் தேடிக் கொள்ளுங்கள் என்றோ,(லைலத்துல் கத்ர் இரவைப் பெற)ரமழானின் கடைசி பத்து நாட்களில் நபி (ஸல்) இஃதிகாஃப் இருந்தார்கள் என்றோ கூறப்பட்ட ஏராளமான ஹதீஸ்கள் நம்பகமான எல்லா ஹதீஸ் நூல்களிலும் இடம் பெற்றுள்ளன உதாரணத்திற்கு ஒரு சில ஆதாரங்கள்  :
அறிவிப்பாVளர்கள்                                                                                                                ஆதார நூற்கள்
அன்னை ஆயிஷா ( ரழி )                                                                 புகாரி, முஸ்லிம், இப்னு மாஜ்ஜா,அபூதாவூத்                              இப்னு அப்பாஸ் ( ரழி )                                                                      புகாரி அபூதாவூத்                                                                                   இப்னு உமர்( ரழி )                                                                முஸ்லிம், முஅத்தா, இப்னுமாஜ்ஜா                                                       உஸாமா பின் தாபித் ( ரழி)Š                                   புகாரி.                                                                                                     உர்வா பின் ஜூபைர் ( ரழி )                                                            Šமுஅத்தா                                                                                         அபூஹுரைரா ( ரழி )                                                                     Š முஸ்லிம், அபூதாவூத்.

மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை இடம் பெறும் எல்லா நபித் தோழர்களும் ஒவ்வொரு குறிப்பிட்ட நாளை லைலத்துல் கத்ர் என்றும்குறிப்பட்டுள்ளனர். என்பது கவனிக்கத் தக்கது. ரமழானின் கடைசி பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்து இறை தியானத்தில் ஈடுபடுவது மூலம் மேலே குறிப்பிட்ட அனைத்து ஹதீஸ்களையும் நாம் உண்மைபடுத்துகிறோம். அனைத்து சஹாபிகளின் கூற்றையும் உண்மையானது  என ஏற்றுக் கொள்கிறோம்.

“” நம்மிடையே லைலத்துல் கத்ர் ”
ரமழானின் 27- வது இரவு நம்மிடையே லைலத்துல் கத்ர் இரவாக வழக்கத்திலுள்ளது. ஆயிரம் மாதங்களைவிட மேலான ஒரு இரவை நபி   (ஸல்)அவர் களுக்கு அல்லாஹ் அறிவித்து, பின் மறக்கடிக்கப்பட்ட இரவை, நாம் ஞாபகப்படுத்துகிறோம் 27 என்று, என்னே அறியாமை ! என்னே மேதாவித்தனம் !!

ஹிஜ்ரீ  2-ல்  ரமழானின் நோன்பு கடமையாக்கப்பட்டது.  ஹிஜ்ரீ 10 முடிந்த ஹி 11 ரபீஉல்   அவ்வலில் ரசூல் (ஸல்) வபாத்தானார்கள். எனவே ஒன்பது வருடங்கள் தொடர்ந்து நோன்பு வைத்திருக்கிறார்கள். லைலத்துல் கத்ரின் சிறப்பைப் பெற இஃதிகாப்பும் இருந்திருக்கிறார்கள்.  அவர்கள்  பற்பல, நாட்களில் லைலத்துல் கத்ர் இரவு எனக்கூறிய ஹதீஸ்களைக் காணும்  போது எல்லாவருடங்களிலும் ஒரே நாளில் தான் லைலத்துல் கத்ர் இரவு வந்தது, வரும் என  எண்ணவும் வாய்ப்பில்லை. ரமழானின் கடைசி பத்து நாட்களில் மாறி, மாறி லைலத்துல் கத்ர் வந்திருக்கலாம் அந்தந்த வருடங்களில் அந்த இரவுகளைக்குறிப்பிட்டிருக்கலாம் என எண்ணவும் வழி வகுக்கிறது. எனவே நாம் கடைசி பத்து நாட்களை  இஃதிகாஃப்  மூலம்  உயிர்ப்பிப்பதால்  லைலத்துல் கத்ர் இரவைப் பெற முடியுமேயன்றி ஒரே ஒரு நாளின் இரவை சிறப்பிப்பதால் பெறுவது சிரமமே !

ஆனால்  நாமோ  வாழையடி  வாழையாக  நமது  மூதாதையர்கள் லைலத்துல்  கத்ர் 27- வது  இரவு  எனக்  கூறியுள்ளனர் ; கொண்டாடியுள்ளனர் ; என நாமும் அந்த ஒரு இரவை மட்டும் சிறப்பக்கிறோம்.
ஒரு ரூபாயில் லட்சக்கணக்கான ரூபாயை லாட்டரியில் நாடுவது போல ;
கோயில் உற்சவங்களுக்கு ஒரு நாள் கடைபோட்டு கொள்ளை லாபம் அடிப்பது போல ;
இந்துக்கள் நவராத்திரி என 9 Š வது ராத்திரி மட்டம் விரதம் இருப்பது போல ;
கிறிஸ்து பிறந்த நாள் புத்தாண்டு இரவு என ஒரு இரவு விழிப்பது போல ;
நாமும் 27- வது இரவு மட்டும் விழித்துத் தொழுவதால் ஆயிரம் மாதங்களின் நன்மைகளை விட அதிகமாக கிடைத்து விடுமென நினைக்கிறோம்.

நாமே உருவாக்கிக் கொண்ட அந்த 27 வது இரவில் பள்ளிகளின் அலங்கரிப்புகள் என்ன! விளக்கு சாரங்கள் என்ன! சிறப்பு சொற்பொழிவுகளில் ஒரு சிலபள்ளிகளில் பைத்துக்கள் என்ற பெயரில் பஜனைப் பாடல்கள்  என்ன! இரவின் இறுதியில் பள்ளியில் பங்கிடப்படும் இனிப்பு தப்ரூக்குகள்என்ன! இன்னும் என்னென்ன ஆரவாரங்கள்! ஆர்ப்பாட்டங்கள்! திருவிழா தோற்றது.

அன்றைய இரவுத் ( தராவீஹ் ) தொழுகைக்கு பள்ளிக் கொள்ளாக் கூட்டம் பெருநாள் தொழுகைப் போல பள்ளி வழிய வழிய தொழுகையாளிகள் தினசரி ஐவேளைத் தொழாதவர்கள் கூட அந்த ஒரு இரவில் கண்விழித்து தொழுதுவிட்டால் 1000 மாதங்களின் நன்மைகள் கிடைத்து விடும் என்ற  பேராசையில் பள்ளிக்கு வருவர் ; இரவில் விழித்திருந்து பயான் கேட்பார்கள் ; தீன் சொற்களை செவியுறுவார்கள் தீனியாக கொடுக்கப்படும் தப்ரூக் பெற்றுக் கொண்டு ஆயிரம் மாதங்களின் பலனைப்பெற்றதாக நினைத்து வீடுசேருவர். ஸஹர் உண்டதும், இரவு முழுமுத் பள்ளியின் ஆரவாரத்தில் அசந்தவர் உறங்குவார் இரவுத்  தொழுகைக்கு,  பள்ளி வழிந்தக் கூட்டம் , பள்ளியறையில் உறங்கிக் கொண்டிருக்கும். பஜ்ருக்கு ஓரிரு( ஸப்பு )வரிசைகளில் தான் தொழுபவர்கள் தொழுவர். இது இன்னைற லைலத்துல் கத்ரை பெறும் வழியாக நினைத்து வாழ்த்து வருகிறோம்.

பாவம்!  இரவெல்லாம்  மும்முரமாக  லைலத்துல்  கத்ர்  இரவைப் பெற  நாடி விழித்தவர்கள்  காலை  பஜ்ர்  வரை  அதன்  மகிமையுண்டு வானவர்களின் வாழ்த்து உண்டு (குர் ஆன் 97:5) என்பதை உணராமல் கைசேதமடைவதை நாம் குர் ஆனின் வசனம் மூலம் காண முடிகிறது.

27- வது இரவு லைலத்துல் கத்ர் என ஒரு நாள் கூத்துக்கு வே­ம் போடும் முஸ்லிம்கள் இதுவரை கூறிய குர் ஆன் , ஹதீஸ் ஆதாரங்களின் படி கடைசி பத்து நாட்களையும் பள்ளிகளை “” இஃதிகாஃப் ” என்ற இறை தியானம் முலம் அலங்கரிக்க முன் வர வேண்டும் . பனு இஸ்ர வேலர்கள் ஆயிரம் மாதங்கள் இறை வணக்கங்களில் ஈடுபட்டு ஈன்ற நன்மைகளை விட அதிகமான நன்மைகளைப் பெற நாடவேண்டும். அல்லாஹுவின் அருள் பெற்று  நரகத்திலிருந்து மீட்சிப்பெற்று சொர்க்கவாதியாக ஆசைப்படவேண்டும். மாறாக,
நபி ( ஸல் )அவர்களுக்கு லைலத்துல் கத்ர் எது என காட்டப்பட்டு மறக்கடிக்கப்பட்ட இரவை ;
-கடைசி பத்து இரவுகளில் லைலத்துல் கத்ர் உண்டு என்ற இரவை;
-இஃதிகாஃப் என்ற இறை தியானம் மூலம் பெறச் சொன்ன இரவை;
Šஉலக மக்கள் அனைவரும் ( இஜ்மாவுடன் ) 27 என்கின்றனர்.
Šஎங்களது மத்ஹபு, தரீக்கா 27 எனப் கூறுகிறது;
Šஎங்களது மார்க்க சட்ட நூல்கள் ( பிக்ஹு ) 27 என பிதற்றுகிறது;
Šஎங்களது ஆலிம், மெனலவி, பாஜில், பாகவி 27 என அலர்கிறார்;
Šஎங்களது ஷேக், பீர், மெளலானா 27 என செப்புகிறார் ;
Šஎங்களது இமாம், வலி 27 எனக் கூறியுள்ளார்; என கூறுவீர்களேயானால், நபி ( ஸல் ) மிக கஷ்டப்பட்டு சிரமப்பட்டு, முழு மாதமும் இஃதிகாஃப் இருந்து, கடைசி பத்து இரவுகளில் லைலத்துல் கத்ர் உண்டு என்று சொன்ன மேலே குறிப்பிட்ட அனைத்து நபிமொழிகளையும் மறுக்கிறோம் என்பது விளங்கும்.

இதற்கும் மேலாக நபி (ஸல்) அவர்களை விட அவர்களுக்கு மறக்கடிக்கப்பட்ட குறிப்பிட்ட லைலத்துல் கத்ர் இரவு, நீங்கள் பின் பற்றும் பெரியோர்களுக்கும்தலைவர்களுக்கும், வழிமுறைகளுக்கும் ஞாபகப்படுத்தப்பட்டது என சொல்லாமல் சொல்கிறோம். நஊது பில்லாஹ்! அல்லாஹ் நம் அனைவரையும் இப்படிப்பட்ட தவறான எண்ணம், சொல், செயலிலிருந்து காப்பானாக! மற்றும் ஒரு பெரும்தவறு நமது முஸ்லிம் தோழர்களிடையே நிகழ்வதாக அறிகிறோம்.

நபி(ஸல்) தனது மரணம் வரை ஒவ்வொரு வருடமும் செய்து காட்டிய இஃதிகாப் என்ற வழிமுறையை ; தனது குடும்பத்தினரையிம், தோழர்களையும்  செய்யும்படி ஊக்குவித்த உன்னத நபி வழியை; ஒரு வருடம் விட்டுவிட்ட தனது நல்வழியை “” களா ” செய்து அதன் சிறப்பை உணர்த்திய கண்ணியமான சுன்னத்தை ஆயிரம் மாதங்களை: விட மேலான சிறப்புமிக்க லைலத்துல் கத்ர் இரவைப் பெற உள்ள ஒரே வழிமுறையை ஒவ்வொரு முஸ்லிமும்  செய்ய நாடவேண்டும். ஆயுளில் ஒரு தடவையாவது இஃதிகாஃப் இருப்பேன் என சபதம் ஏற்க வேண்டும். அதனை விட்டு ஒரு சில இடங்களில் நடக்கும்  அவல நிலை நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

“”இஃதிகாஃப் ” என்ற இச்சிறப்பான சுன்னத்தை தங்களது மஹல்லாவில் ஒருவராவது செய்யாவிட்டால் ஏதோ முஸீபத்து இறங்கிவிடும் என பயந்து வேலையின்றி  அலையும்  ஒருவரை  கூலிக்கு  ஆள்பிடித்து  பள்ளியில்  இஃதிகாஃப் இருக்க வைக்கின்றனர். இவர்கள் இவ்வழகிய சுன்னத்தை    (இஃதிகாஃபை) கேலி  செய்கின்ற விதத்தைப் பாருங்கள்.  அவரது  மஹல்லாவில்  இறங்க இருக்கும் முஸீபத்திலிருந்து  தப்பிக்க  நினைப்பதைப் பாரீர்! அய்யகோ! நமது அருமை நபியின் அழகிய வழி முறை அவல்பபடும் நிலையைப் பாரீர்!

இஸ்லாமிய சகோதர சகோதரிகளே !
அல்லாஹுவையும், ரசூலையும் ஏற்ற நல்ல முஸ்லிம்களாக, உண்மையான மேலே குறிப்பிட்ட, அனைத்து சஹாபிகளின் கூற்றை ஒன்றடக்கிய ஹதீஸ்களின்படி நாம் ரமழானின் கடைசி பத்து நாட்களில்  இஃதிகாஃப்  என்ற சிறந்த இறை தியானத்தில்  ஈடுபடுவோமாக! ரசூல் (ஸல்)  அவர்களை  நமது அழகிய முன் மாதிரியாக ஏற்றிருக்கும் நாம் ஒவ்வொருவரும் கூலிக்கு ஆள்பிடிக்காமல் நம்மில் ஒருவர் ஆயுனில், ஒரு வருடமாவது இஃதிகாஃப் இருப்பேன் என சபதம்  ஏற்போமாக!  ஆயிரம்  மாதங்களைவிட  மேலான  லைலத்துல் கத்ர் இரவைப் பெறுவோமாக! முந்திய சமூகத்தினரைவிட சிறப்பு அடைவோமாக! இவையனைத்திற்கும் எல்லாம் வல்ல அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக ! ஆமீன்.

“” இஃதிகாஃப்” நபி( ஸல் ) அவர்களின் வழிகாட்டல்  :
இனி  ஆயிரம் மாதங்களை  விட மேலான  லைலத்துல்  கத்ர்  இரவைப் பெற இஃதிகாஃப்  என்ற சிறப்பு வணக்கத்தை கற்றுத் தந்த  நபி (ஸல்) அவர்கள் அல்லாஹுவும்  அதற்காக  கூறியுள்ள  சட்ட திட்டங்களை  உள்ளச்சத்துடன்  நிறைவேற்றுவதால்  நாம்  நாடிய  நன்மைகளை, அல்லாஹுவின் அருளால் பெறுவோமாக!

திட்டமான வரம்புள்ள சட்டங்கள் :
“” குமரி இருட்டு நீங்கி, அதிகாலை (ம்ழிழஐ)  ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரையில் சாப்பிடுங்கள்; (நோன்பின் இரவு காலங்களில் உங்கள் மனைவியாகிய) அவர்களுடன்  சேர்ந்து , அல்லாஹ் உங்களுக்கு (ச்சந்ததியாக) விதித்திருப்பதைத் தேடிக் கொள்ளுங்கள். எனினும், (கிழக்கு வெளுத்த) பின்பு, இரவு (ஆரம்பமாகும்) வரை (மேலே கூறியவைகளைத் தவிர்த்து) நோன்புகளை (நோற்றுப்) பூரணமாக்குங்கள்.
ஆயினும், நீங்கள் (தியானம் புரிய) பள்ளிகளில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும் போது, (உங்கள் ம

னைவியாகிய) அவர்களுடன் கூடாதீர்கள். இவை அல்லாஹுடைய திட்டமான சட்ட வரம்புகள். ஆதலால், அவற்றை (மீற) நீங்கள் அணுகாதீர்கள் ” என அல்லாஹ் தனது திருமறையில் கூறுகிறான்.
(அல்குர் ஆன்  2 : 187)

நபி (ஸல்) ரமழானின் கடைசி பத்து நாட்கள் வந்ததும், கச்சைக் கட்டிக்கொண்டு அந்நாட்களின் இரவுகளை (இறை வணக்கங்ககளால்) உயிர் பித்தார்கள். அவரது குடும்பத்தினரும் அவ்விரவுகளில் விழித் திருக்கச்செய்து இறை வணக்கங்களில் ஈடுபடச்செய்தார்கள்.            அறிவிப்பு : அன்னை ஆயிஷா ( ரழி ).
ஆதாரம் ; புகாரி, முஸ்லிம், அபூதாவூத், நஸயீ, இப்னு. மாஜ்ஜா, இப்னுஜரீர், அஹ்மது.

நபி (ஸல்) அவர்கள் மனிதர்களில் (உபரியான இறைவணக்கங்களைச் செய்யும் தாராள மனம் படைத்த) பெரும் கொடையாளியாகத் திகழ்ந்தார்கள்.    (சாதாரண நாட்களில் விட) ஜிப்ரயீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களை ரமழான் மாதத்தில் சந்திக்கும் போது (அல்லாஹுவுக்கு அதிகமான உபரி வணக்கங்களை செய்து ) வாரி வழங்கும்  வன்னல் பெருமகனாராகத் திகழ்வார்கள். ஜிப்ரயீல் (அலை) ரமழானின் ஒவ்வொரு இரவிலும்  நபி (ஸல்) அவர்களை சந்தித்து அவர்கள் இருவருமாக திருக்குர் ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தனர். தொடர்ந்து வீசும் (புயற்) காற்றைவிட (வேகமாக) நபி (ஸல்) அவர்கள் நற்செயல்களில் ( இறை தியானத்தில்) மிக அதிகமாக வாரி வழங்கும் வள்ளலாகவே விளங்கினார்கள்.
(அறிவிப்பு :  இப்னு அப்பாஸ்  ( ரழி ), ஆதாரம் : புகாரி, முஸ்லிம், முஸ்னது அஹ்மது.

மேற்கண்ட இறைவசனம் (2 : 187), நபிமொழிகள் மூலம் இஃதிகாஃப் (ரமழானின்) இருப்பவர்கள் ஊண், உணவு, கணவன், மனைவி, தாம்பத்யம், உடல் இச்சைகளை அறவே அற்று இருக்கவேண்டும் என்பதை அறிகிறோம். மற்ற உடல் உறுப்புக்களின், உள்ள நினைவுகளின் தவறான எண்ணம், செயல்களிலிருந்து தவிர்த்து இருக்க வேண்டும்; வீணான சொல், செயல் நினைவுகளைத் தவிர்த்து தனித்திருக்க வேண்டும் என்பதையும் உணர்கிறோம்.
இஃதிகாஃப் இருக்கும் இரவுகளில் இறைவணக்கங்களாகிய  தொழுகை, குர் ஆன், நபி( ஸல்)  கற்றுத்தந்த திக்ரு வகைகளை ஓதுதல்போன்வற்றில் அதிகமாக ஈடுபடவேண்டும். ரமழானின் இஃதிகாஃபின் போது பகலில் நோன்பு வைத்தல் வேண்டும் என்பதும் தெளிவாகிறது.

ரமழானின் நோன்பு மட்டும் வைப்பவர்களுக்கு அவ்விரவுகளில் கணவன், மனைவி தாம்பத்யத்தை கூடுமானதாக ஆக்கி அல்லாஹ் தமது உடல் இச்சையின் சிரமத்தை போக்கியுள்ளான். ஆனால் இஃதிகாஃப் இருக்கும் இரவுகளில் அவ்வுடல் இச்சையான தாம்பத்யத்தையும் விட்டு இருக்க வேண்டியது அல்லாஹுவின் திட்டமான சட்ட வரம்பாகும்.
“” களா ” செய்யும்பபடியான சுன்னத் ( நபிவழி ) ; “” இஃதிகாஃப் ”

நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகும்  வரை ஒவ்வொரு வருடமும் ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் (இறை தியானத்தில்) இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். மாணமான வருடம் இருபது நாட்கள் இஃதிகாஃபில் இருந்தார்கள். ஒவ்வொரு வருடமும் ஒரு தடவை குர் ஆனை முழுவதும் ஓதி முடிப்பார்கள் . மரணித்த வருடம் இரு தடவைகள் குர் ஆனை முழுவதும் ஓதி முடிப்பார்கள் என்று  அபூஹுரைரா ( ரழி )  அவர்கள்  தெரிவிக்கிறார்கள்.
ஆதாரம் :  புகாரி, அபூதாவூத், அஹ்மது, இப்னுமாஜ்ஜா.

நபித்தோழர் அனஸ்பின் மாலிக் ( ரழி ) அவர்களும் இவ்விதமே உரைக்கிறார்கள் : ஆதாரம் : திர்மிதீ. அஹ்மது.
நபி ( ஸல் ) அவர்கள் ஒவ்வொரு ரமழானிலும் கடைசி பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பது வழக்கம் . ஒரு வருடம் அவர்கள் பிராயாணத்தில் இருந்தார்கள். ( இஃதிகாஃப் இருக்க முடியவில்லை, எனவே ) தொடர்ந்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.        அறிவிப்பு : உபை இப்னுகஃபு  ( ரழி )                                                                                                                                                                 ஆதாரம்      :  அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜ்ஜா, தயாலிஸி, இப்னுஹுஸைமா, இப்னுஹப்பான், ஹாக்கிம், ஸயீத் இப்னுமன்சூர்.                   அறிவிப்பு : அன்ஸ் பின் மாலிக் ( ரழி ),                                                                                                                                                                 ஆதாரம்  : திர்மிதீ, முஸ்னது அஹ்மது .

இந் நபி மொழிகள் மூலம் இஃதிகாஃப்  இருப்பது  சுன்னத் (நபிவழி) தான். கட்டாய கடமை (பர்லு)  அல்ல என்பது தெளிவாகிறது ஏனெனில் கட்டாய கடமை(பர்ழு)  எல்லாக்  காலங்களிலும்,  ஒரே திட்டத்தில், அளவில்தான் இருக்கும். இஃதிகாஃப் நபி (ஸல்)அவர்களது அழகிய வணக்க முறையா (சுன்னத்தா) கையால்  வழக்கமாக  பத்து  நாட்களும்,  கடைசி வருடம் 20  நாட்களும்  அனுஷ்டித்து  இருக்கிறார்கள் :  ஆனால்  இது சாதாரண நபி வழி (சுன்னத்) எனவும் நினைத்து விடக்கூடாது. ஏனெனில் தொடர்ந்து செய்திருக்கிறார்கள்;  ஒரு வருடம் விடுபட்டதை களாவும் செய்திருக்கிறார்கள் , எனவே வருடா வருடம் வழக்கமாக  இஃதகாஃப்  இருக்கும்  இறைநேசச்  செல்வர்கள்.  ஏதாவது  ஒரு வருடம்  இருக்க முடியவில்லையயனில்   “” களா ” செய்யவும் இந்நபி மொழிகள் வழி செய்கிறது.
குறிப்பாக ரமழானின் கடைசி பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பதும், வருடத்தில் ஒருமுறையாவது குர் ஆனை முழுவதும் ஓதி முடிப்பதும் நபியின் வழிமுறை (சுன்னத்) என்பதையும் விளக்குகிறோம்.

ஆண் பெண் இருபாலரும் எங்கு, எப்படி இஃதிகாஃப் இருக்க வேண்டும் :
நீங்கள் (இறை தியானத்திற்காக) பள்ளிகளில் தங்கி (இஃதிகாஃப்) இருக்கும்போது (உங்கள் மனைவிகளாகிய) அவர்களுடன் கூடாதீர்கள். (குர் ஆன்2:187)

ரமழானின் நடுபத்து நாட்களில் நபி (ஸல்) துருக்கி கூடாரத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள் மூன்றாவது பத்திலும் அங்கேயே தொடர்ந்தார்கள் (முன்பே குறிப்பிட்ட ஹதீஸ் சுருக்கம்). அறிவிப்பு  : அல்ஸயீத் பின் அல்குத்ரி (ரழி),  ஆதாரம் : முஸ்லிம், புகாரி,அஹ்மது, நஸயீ, முஅத்தா மாலிக்.

நபி (ஸல்) ஒரு தடவை ரமழானின் கடைசி பத்து நாட்கள் வந்த போது, தனி இஃதிகாஃப் இருக்க ஒரு கூடாரம் போட ஆணையிட்டார்கள். தனி கூடாரம் போடப்பட்டது.  ஆயிஷா(ரழி)  அவர்கள் தனக்காக  ஒரு  தனி  கூடாரமிட  ஆணையிட  ஒரு  கூடாரமிடப்பட்டது. ஹப்ஸா (ரழி) அவர்கள் தனக்காக ஒரு கூடாரம் அமைக்க ஆணையிட, ஒரு கூடாரம் அமைக்கப்பட்டது . இவைகளைக் கண்ட ஜைனப் (ரழி)அவர்களும் தனப்கென ஒரு தனி கூடாரமிட்டார்கள் (இவர்கள் அனைவரும்  நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவிமார்கள்.  இவ்விதமாக  அவர்கள்  போட்டியிட்டு  தாங்களே)  பல  கூடாரமிட்டிருப்பதைக்  கண்ட ரசூல் (ஸல்)  அவர்கள்  ஓஹோ!  இப்படியா  இவர்கள்  நன்மையை  சேர்க்க  நாடுகிறார்கள் !   எனக்கூறி  அவ்வருடம்   இஃதிகாஃப்  இருக்கவில்லை.  ஆனால் தொடர்ந்த ­வ்வால் மாதத்தில் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் நபி (ஸல்).

அறிவிப்பு :  ஆயிஷா ( ரழி ) ஆதாரம் : புகாரி, முஸ்லிம், அபூதாவூத், முஅத்தா மாலிகி, முஸ்னது அஹ்மது.
ரசூல் (ஸல்) அவர்களின் மனைவியர்களில் ஒருவர்  (உம்மு சலாமா(ரழி ) இஃதிகாஃப் இருக்கும் போது மஞ்சளும், சிவப்பும் கலந்து  ( உடல் அசெளகர்யத்தால், மாதவிடாயால் அல்ல ) இரத்தம் வெளிவரும். சில சமயங்களில். அப்பெண்மணி தொழுகும் போது நாங்கள் ஒரு தடைவை ( அந்த  இரத்தம் விழ ) வைப்போம் என ஆயிஷா ( ரழி ) கூறுகிறார்கள். ஆதாரம் :  புகாரி, அபூதாவூத், இப்னுமாஜ்ஜா.
மேற்கண்ட இறைமொழி,  நபி வழிகளிலிருந்து இஃதிகாஃப் பள்ளி வாசலில்  இருப்பது சிறப்பாகும், பள்ளியில்  தனி  அறை,கூடாரமிட்டு அன்றாட பள்ளி யின்  அலுவல்களிலிருந்து  தவிர்த்து  இருப்பதும்  நபி (ஸல்) காட்டி தந்த அழகிய முன் மாதிரி (சுன்னத்) என்பது புலனாகிறது. இப்போது பெண்கள் பள்ளி செல்லும் வழக்கம் இல்லாததால் தங்களது வீட்டில் தொழும் இடத்திலேயே அல்லது ஒரு தனி அறையை ஒதுக்கி இருந்தாலும் போதுமானது.

மனைவிகள் தங்களது கணவரின் அனுமதி பெற்று தான் இஃதிகாஃப் இருக்க வேண்டும். எனவே தாங்களாக கூடாரமிட்டு இஃதிகாஃப் இருக்க நாடிய தனது மனைவிகளுக்கு பாடம் கற்பிக்க அவ்வருடம் இஃதிகாஃப் இருக்கவில்லை.  ஆனால் ­வ்வால் மாதத்தில் அதனை “”களா ” செய்துள்ளார்கள் . ­வ்வால் மாதமிருந்த இஃதிகாஃபில் நபி (ஸல்) நோன்பு வைத்திருந்தார்களா? விளக்கமுமில்லை. சாதாரண காலங்களில் பள்ளிகளில் உள்ளச்சத்துடன் தங்கும் நேரமெல்லாம் “” இஃதிகாஃப் என நபி (ஸல்) கூறிய மற்றும் பல ஹதீஸ்கள் இருப்பதால் நோன்பு வைத்துக் கொண்டு தான் இஃதிகாஃப் , இருக்க வேண்டுமென்ற கட்டளையுமில்லை. ஆனால் ரமழானில், கட்டாயம் பர்லான நோன்பு வைத்துக் கொண்டே இஃதிகாஃப் இருக்க வேண்டும் (விதி விலக்கு அளிக்கப்பட்டவர்களைத் தவிர) என்பதையும் விளங்க வேண்டும்.

மாதவிடாய் காலங்களில் பெண்கள் இஃதிகாஃப் இருக்கக்கூடாது ஆனால் உடல் அசெகர்யத்தால் வரும் இரத்த போக்குக்காக இஃதிகாஃப்பை விட வேண்டிய அவசியமில்லை. தொடர்ந்து பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதை உம்முஸலமா (ரழி) அவர்களின் நிகழ்ச்சியிலிருந்து அறிகிறோம்.

உமர்(ரழி) அவர்கள் :  நான் ஜாஹிலிய்யா காலத்தில் (முஸ்லிமாவதற்கு முன்) ஒரு இரவு மஸ்ஜிதுல் ஹராமி (மக்காவிலுள்ள பள்ளியில் தங்கி (இஃதிகாஃப்இருப்பதாக வேண்டியக் கொண்டேன். அதனை (முஸ்லிம்Vனப் பின்) இப்போது நிறைவேற்ற வேண்டுமா ?  என நபி (ஸல்) அவர்களிடம்வினவினார்கள் . அதற்கு “” ஆமாம் ! உனது வேண்டுதலை நிறைவேற்றுவாயாக ! என விடையளித்தார்கள். அறிவிப்பு  : அப்துல்லா பின் உமர் ( ரழி ),
ஆதாரம் : புகாரி, முஸ்லிம், நஸயீ, இப்னுமாஜ்ஜா, முஸ்னது அஹ்மது.

இதே ஹதீஸை “” ஆமாம்! உனது வேண்டுதலை நோன்பு வைத்துக் கொண்டு நிறைவேற்றுவாயாக!” என நபி (ஸல்) கூறினதாக அழுதாவூத் (ரஹ்) தனது சுன்னில் பதிவு செய்துள்ளார்கள். ஹாக்கிமிலும் இடம் பெற்றுள்ளது.
முந்திய  தலைப்பில்  நபி (ஸல்) அவர்கள் ­வ்வால்  மாதத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். நோன்பு வைத்திருந்தார்களா? என்ற விளக்கமில்லை. எனவே ரமழான் மாதமற்ற , மற்ற மாதங்களில் நோன்பு வைத்துக் கொண்டு  இஃதிகாஃப்  இருக்க  வேண்டுமென்ற அவசியமில்லை எனக் குறிப்பிட்டோம். அதே கூற்றை நிரூபிக்கும் விதத்தில் மேலேயுள்ள முதல் ஹதீஸ் அமைந்துள்ளது.

ஆனால் அபூதாவூதில் காணப்படும் ஹதீஸில் நோன்புடன் இஃதிகாஃப் இருக்கும்படி உமர் (ரழி) அவர்கள் ஏவப்பட்டதாக தெரிகிறது. இதன் விளக்கமென்ன ? என்பதை அறிதல் அவசியம். உமர் (ரழி)  அவர்கள் ஒரு இரவு இஃதிகாஃப் இருப்பதாக தான் வேண்டியுள்ளார்கள். ஒரு நாள் (ஒரு இரவு , ஒரு பகல்) இஃதிகாஃப் இருக்க வேண்டியதாக வாசகமில்லை: எனவே ஒரு இரவு இஃதிகாஃப் இருக்கவே நபி (ஸல்)ஏவியுள்ளார்கள்.

இரவில்  உண்ணாமல்,  குடிக்காமல் நோன்பு வைப்பது  என்பது  இஸ்லாம்  அனுமதிக்காத  ஓன்று.  மாறாக! இரவு முழுதும் “”குமரி இருட்டு நீங்க விடியற் காலை ஆகிவிட்டதென்று உங்களுக்குத் தெளிவாகும் வரை புசியுங்கள், பருகுங்கள் ”(குர் ஆன் 2 : 187) என்றே அல்லாஹ் ஆணையிடுகிறான், எனவே உண்ணாமல்,   பருகாமலிருக்கும்  சாதாரண  நோன்பை  நபி ( ஸல் )  அவர்கள்  குறிப்பிடவில்லை.   “” இஃதிகாஃப் ”  புக்கென  திட்டமான  சட்டவரம்பான கணவன், மனைவி தாம்பத்திய உறவை விட்டு விலகி இரவில் அல்லாஹுவின் இறை தியானத்தில் மஸ்ஜிதுல் ஹராமில் தங்கவே, நபி (ஸல்), உமர் (ரழி)அவர்களை ஏவியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
இஃதிகாஃப்பின் ஆரம்பம், முடிவு எப்போது ?

நபி(ஸல்)  அவர்கள்  இஃதிகாஃப்  இருக்க  நாடுவார்களேயானால்,  (அன்றைய)  காலை  பஜ்ர்  தொழுத பின்  நேராக  இஃதகாஃப்புக்கென  ஒதுக்கப்பட்ட இடத்திற்குசென்று இறை தியானத்தில் (இஃதிகாஃபில்) அமர்வார்கள்.
அறிவிப்பு : ஆயிஷா (ரழி) ஆதாரம் : திர்மதி, அபூதாவூத், அஹ்மது, அல்பராஜ். இப்னுமாஜ்ஜா
நபி (ஸல்) அவர்கள் ஈதுல் பித்ர் பெருநாளன்று (காலை) உணவு உண்டு, பெருநாள் தொழுகை முடிக்காத வரை (இஃதிகாஃப்பை விட்டு) வெளியே வர மாட்டார்கள். அறிவிப்பு  : புரைதா ( ரழி ), ஆதாரம் : திர்மிதி, ஹாக்கிம், அஹ்மது.
நபி (ஸல்) அவர்களின் அருமைத்தோழரும்,  முதல்  குலபாயே  ரா´தீனுமான அபூபக்கர் (ரழி) அவர்கள் ஈதுல் பித்ர் பெருநாள் தொழுகையை முடிக்கும் வரை இஃதிகாஃப்பை விட்டு வெளியேறமாட்டார்கள் என அவரால்  விடுவிக்கப்பட்டு, அவரிடமே வேலையாளியாக பணிபுரிந்த  சுமையீ(ரஹ்)  கூறுவதாக இமாம் மாலிக் (ரஹ்) தனது  மு அத்தாவில் குறிப்பிடுகிறார்கள்.

எனவே  மேலே குறிப்பிட்டுள்ள நபி மொழிகளின் அடிப்படையில் ரமழான் மாதத்தின் 20 நாளுக்கான ஸஹர் உண்டபின் தொடரும் பஜ்ர் தொழுகைக்குப் பின்  “” இஃதிகாஃப் ”  இருக்க  ஆரம்பிக்க வேண்டும். ஆங்கில காலண்டர் கணக்குப்படி அது 20 வது நாளாக இருந்தாலும், அன்று மாலை இப்தாருக்குப் பின் 21 – வது ( கடைசி பத்து நாட்களின் முதல் )  இரவு  ஆரம்பமாகிறது.  எனவே 20 Š வது   இரவின்  ஸஹர்   முடிந்து  பஜ்ர் தொழுத பின்  இஃதிகாஃப் ஆரம்பிக்க வேண்டும்.
ரமழானின் கடைசி  (பத்து அல்லது  ஒன்பது)  நாட்களை முடிந்து ­வ்வால் பிறைக் கண்டு மறுநாள் காலை உணவு உண்டு பெருநாள்தொழுகை முடிந்த பின்பு இஃதிகாஃப் முடிக்க வேண்டும். அதாவது ­வ்வால் பிறை ஒன்றின் காலையில் பெருநாள் தொழுகைக்குப் பின் முடிக்க வேண்டும் என்பதை அறிகிறோம்.அவ்விதமே நபி (ஸல்)அவர்களின் அருமைத்தோழர், மாமானார், முதல் கலீபா, இவ்வுலகிலேயே, மறுமையில் சுவனம் செல்லும் பத்து பேர்களில் முதலாவதானவர் என நபி (ஸல்)அவர்களால், புகழப்பட்ட அபூபக்கர் (ரழி)வாழ்ந்து காட்டியுள்ளார்கள் என்பதையும் காணுகிறோம்.

இயற்கை உபாதைகளுக்கு மட்டும் வெளியே செல்லலாம்! மனைவியை தொடுவதால் இஃதிகாஃப் வீணாகாது.
நபி (ஸல்)  அவர்கள்  இஃதிகாஃப்  இருக்கும் போது  இயற்கை  உபாதை  (களான, மலம் ஜலம் கழிப்பதற்கு) மட்டும் வீட்டிற்கு வருவார்கள். நபி(ஸல்) இஃதிகாஃப்  இடத்தில்  அமர்ந்து  கொண்டு தங்களது  தலையை  வீட்டினுள்  நீட்டுவார்கள்.  நான் அவர்களது தலையை கழுவி சுத்தம் செய்து, சீவி விடுவேன். அப்போது நான் மாதவிடாய்காரியாகவுமிருந்து இருக்கிறேன், என ஆயிஷா (ரழி)தனது கணவர் நபி (ஸல்)அவர்களைப் பற்றி குறிப்பிடுகிறார்.
ஆதாரம் :  புகாரி, முஸ்லிம், அபூதாவூத், இப்னுமாஜ்ஜா.

இயற்கை உபாதை (மலம் ஜலம் கழிப்பதற்கு) மட்டுமே நபி (ஸல்) வெளியே வருவார்கள் என இப்னு ´ஹாப் அறிவிப்பதாக இமாம் மாலிக் ( ரஹ்) தனது நூல் முஅத்தாவில் குறிப்பிடுகிறார்கள்.
இந்நபி மொழிகளிலிருந்து மிக அத்தியாவசிய தேவையான மலம், ஜலம் கழிக்க மட்டும் வெளியே போகலாம். இஃதிகாஃப் இருக்கும் கணவனை, சாதாரணமாக மனைவி (உடல் இச்சையின்றி) தொடலாம். அப்போது மனைவி மாதவிடாய் தீட்டுடையவளாக இருந்தாலும் பரவாயில்லை என்ற விளக்கங்கள் கிடைக்கிறது.
ஒரு தடவை  நபி(ஸல்) மலம், ஜலம் கழிக்க வந்த  போது, ஒரு நோயாளியைப் பற்றி விசாரிக்க, நான்அவர்களுக்கு கூறிக்கொண்டே உடன் நடந்தேன்.இஃதிகாஃப் இடத்தில் அமர்ந்தபின் பேசவில்லை என ஆயிஷா (ரழி)  அறிவிக்கிறார்கள். ஆதாரம் : அபூதாவூத், அஹ்மது
ஆயிஷா (ரழி) அவர்கள் இஃதிகாஃப்பில் இருக்கையில், (மல, ஜல உபாதைக்காக வெளியே வருகையில்) நடந்து  கொண்டே நோயாளியைப் பற்றிக் கேட்பார்கள். இஃதிகாஃப் இடத்தில் அமர்ந்ததும் பேசமாட்டார்கள் என அம்மாரா பின்து அப்துர் ரஹ்மான் (ரழி) அறிவிக்கிறார்கள்.
ஆதாரம் :  முஅத்தா. முஸ்னது அஹ்மது.
இந்த ஹதீஸ்கள் மூலம் அன்றாட தேவையான மலம், ஜலம் கழிக்கச் செல்லும் வழியில் நோயாளிகளைப் பற்றிபேசலாம். ஆனால் இஃதிகாஃப் இருக்குமிடத்தில் அமர்ந்தப்பின் அதனையும் பேசாமல் இறை தியானத்தில் மூழ்கிவிட வேண்டுமென்பதை உணர்கிறோம்.
மேற்கூறிய  சட்டத்திற்கு  மாறுபட்ட  ஹதீஸ்  ஒரே  ஒரு  அறிவிப்பாளர்கள்  வரிசையில்  முஅத்தா  மாலிக்,  இப்னுமாஜ்ஜா என்ற ஹதீஸ் நூல்களில் இடம் பெற்றுள்ளது அதாவது :
நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவுடன் சென்றார்கள் ;  நோயாளிகளைக் காண சென்றார்கள் ” என்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இது பலவீனமானது. இதன் அறிவிப்பாளர் வரிசையில் தொடர்ந்து இடம் பெறும் அப்துல்காலிக், அன்பஸா, அல் Š ஹய்யாஜ் போன்றவர்கள் நம் பத்தக்கவர்களல்லபல வீனமானவர்கள் என ஹதீஸ்கலா வல்லுநர்கள். அடையாளம் காட்டியுள்ளனர்.  ஆதாரம் : அஜ் Š ஜவாயித் அது மட்டு மின்றி, இஃதிகாஃப்இருப்பவர் நோயாளியைப் பார்க்கச் செல்லக் கூடாது ; ஜனாஸாவுடன், செல்லக் கூடாது,( உடல் இச்சையுடன்) மனைவியை அணைக்கக் கூடாது என ஆயிஷா (ரழி)கூறும் உண்மையான ஹதீஸுக்கும் மாறுபடுகிறது. ஆதாரம் : அபூதாவூத்.
எனவே மலம், ஜலம் போன்ற அத்தியாவசிமான தேவைகளைத் தவிர வேறு எக்காரணத்திற்கும் வெளியே செல்லக் கூடாது. உலக வி­யங்கள் அனைத்தையும் மறந்து முழுமையாக இறைதியானத்தில் இருக்க வேண்டுமென்பதை உணர்கிறோம்.
அவசியமானவற்றை பேசலாம்  :
ஸபயிV (ரழி) அறிவிக்கறிVர்கள் : நபி (ஸல்) இஃதிகாஃப்பில் இருக்கும் போது நான் அவர்களை சந்திக்க சென்றேன். அவர்களுடன் சிறிது உரையாடினேன். பின் நான் புறப்பட்டபோது, தானும் எழுந்து என்னுடன், நான் தங்கி இருக்கும் உஸாமா பின் ஜைய்து (ரழி) வீடுவரை வந்தார்கள். அப்போது இரு அன்சாரி (மதீனத்து) தோழர்கள் எங்களை கடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களைக் கண்டதும், அவ்விருவரும் சிறிது வேகமாக நடந்தனர்.
இதனைக் கண்ட நபி (ஸல்) : மெதுவாக செல்லுங்கள்; இவள் (எனது மனைவி) ஸபிய்யா பின்து ஹுபாய் என்றார்கள். இதனைச் செவியுற்ற அன்சாரிகள் ! சுப்ஹானல்லாஹ் ! என வியப்புடன் கூறினர் நபி (ஸல்) : நமது கொடிய விரோதி ஷைத்தான் மனிதனின் இரத்தத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறான். அவன் உங்களது உள்ளத்தில் (என்னைப்பற்றயும், என்னுடன் வரும் பெண்ணைப் பற்றியும்)  ஏதாவது ஐயத்தை, தீய எண்ணத்தைப் போட்டு விடலாம் என எச்சரித்தார்கள்.  ஆதாரம் : புகாரி, அபூதாவூத், திர்மிதீ, இப்னுமாஜ்ஜா, அஹ்மது.
மேற்படி ஹதீஸிலிருந்து மிக அவசியமானவற்றை தனது  குடும்பத்தினருடன் இஃதிகாஃப் இருக்குமிடத்தை விட்டு வெளியேராமல், அங்கு குடும்பத்தினர் வந்தால் பேசலாம் ; உரையாடலாம். மக்களுக்கு மார்க்க சம்பந்தமான வி­யங்கரை போதிக்கலாம்  என்பது தெரியவருகிறது.
நபி( ஸல்) கற்றுத் தந்த நல்ல து ஆ :
ஒரு தடவை அன்னை ஆயிஷா (ரழி) தனக்கு இது தான் லைலத்துல்கத்ர் என நான் அறிந்துகொள்ளும் இரவில் ஓதவேண்டிய பிரார்த்தனை   (துஆ) எது?என நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) :
“” அல்லாஹும்ம இன்னக்க அஃபுவ்வன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ ”
(பொருள் : யா அல்லாஹ்! நிச்சயமாக நீ மன்னிப்பவன் ; மண்னிப்பை விரும்புபவன். எனவே எனது பாவத்தை மன்னித்தருள்வாயாக!) என ஓதும்படி கற்றுத்தந்தார்கள். அறிவிப்பு : ஆயிஷா (ரழி)    ஆதாரம் : திர்மிதீ, முஸ்னது அஹ்மது, இப்னுமாஜ்ஜா.
ஆயிரம் மாதங்களை விட மேலான இரவான லைலத்துல் கத்ரைங் பெற, இஃதிகாஃப்பில் இருப்பதே ஒரு வணக்கமாக இருப்பனும்; அப்போது நபி (ஸல்) கற்றுத்தந்த மேற்படி துஆ போன்றவைகளை ஓதுவது சிறப்பாகும் என்பதை அறியவும். மற்றும் குர்ஆன், ஒதுதல், அதிகமாக திக்ர்களில் ஈடுபடல் போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டு இறைவனின் அளப்பெரும் கருணைகளை பெறுவோமாக! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன்.
—————————————————————————————————————————————
“” இதயங்கனிந்த வேண்டுகோள் ”
இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே !
குறிப்பாக மார்க்க அறிஞர் பெருமக்களே !
அஸ்ஸலாமு அலைக்கும் ( வரஹ் ).
இதுவரை தாங்கள் “”இஃதிகாஃப் ” என்ற இறைதியானத்தைப்பற்றி குர் ஆன், ஹதீஸ் ஆதாரங்களில் படித்தீர்கள். அதன் உன்னத சிறப்பினை உணர்ந்திருப்பீர்கள். நாமும் ஆயுளில் ஒரு தடவையாவது? இஃதிகாஃப் இருக்க வேண்டுமென்ற உந்தல் உங்களது உள்ளத்தில் உதித்திருக்குமென நினைக்கிறோம். அல்ஹம்துல்லில்லாஹ் ! எல்லாம் புகழும் வல்ல அல்லாஹ்வுக்கே !
Šநபி ( ஸல்)அவர்கள் தொடர்ந்து செய்து காட்டிய அழகிய வழிமுறை ;
– ஆண், பெண் என்ற வேறுபாடின்றி அனைத்து நபித்தோழர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட நபி வழி ;
Š கண்ணியமக்கி நான்கு இமாம்களாலும் கண்ணியப்படுத்தப்பட்ட ஒரு சுன்னத்து ;
Š ஆயிரம் மாதங்களை விட மேலான பலாபலன்களை தேடிதரும் லைலத்துல் கத்ர் என்ற இரவைப்பெற ஒரே வழி ;
Š முன்னோர்களை விடவும் நம்மை அல்லாஹுவிடம் சிறப்பிக்க விருக்கும் ஒரே வழி ;
“”இஃதிகாஃப் ” என்ற இறை தியான வணக்கம் என்பதை அறிந்திருப்பீர்கள்.
இச்சிறப்புமிக்க  “சுன்னத் ‘  நமது  மக்களிடையே  மறைக்கப்பட்டிருக்கிறது.  சரியாக  அறிமுகப்படுத்தப்படவில்லை.  எனவே  இறைதியான  “”இஃதிகாஃப் ” என்ற சீரிய சுன்னத்தை நம்மிடையே ஹயாத்தாக்க வேண்டும் என்ற ஒரே பேரவாவில் இதனை உங்களுக்கு சமர்ப்பித்தோம்.
“” நாம் உங்களுக்கு வெகு சொற்ப ஞானமேயன்றி கொடுக்கவில்லை, “”(அல்குர் ஆன் 17:85) என்ற இறைவாக்குப்படி, நமக்குகிடைத்த குர் ஆன், ஹதீஸ் ஆதாரத்தில் எழுதியிருக்கறோம். எல்லா நபி மொழி (ஹதீஸ்)களும் எல்லாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை, எல்லா மறிந்தவன் எல்லாம் வல்ல அல்லாஹ்வைத் தவிர வேறு எவருமில்லை.
எனவே நமது “”இஃதிகாஃப் ” பிரசுரத்தில், ஏதாவது குறை காண்பீர்களேயானால் அதற்கு முழு பொறுப்பும் நானே ஏற்கிறேன். நாம் குறிப்பிட்டுள்ள  ஹதீஸ்களல் பலவீனமானதை கண்டால் தயவு செய்து தெரிவிக்கவும். நாம் குறிப்பிட்டுள்ள வி­யங்களுக்கு மாற்றமான நபிமொழிகளை அறிந்தால் ஆதாரத்துடன் அறிவியுங்கள். இன்ஷா அல்லாஹ். மறு பிரசுரத்தில் அதனை இடம் பெறச்செய்து மக்களுக்கு அழகிய நபி வழியை காட்டுவோம். தவறை சுட்டிக்காட்டிய பெருந்தகைகளுக்கு நன்றி செலுத்துவோம் அல்லாஹ்விடம்  பிரார்த்திப்போம்.
அனைவரின் விமர்சங்களையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். எல்லாம் வல்ல  அல்லாஹ் நம்மனைவருக்கும் நல்லருள் பாலிப்பானாக! இஃதிகாஃப் என்ற இச்சுன்னத்தை ஹயாத்தாக்க தவ்பீக தந்தருள்வானாக ! ஆமீன் ! வஸ்ஸலாம் !
இவண்,
ஹம்துல்லாஹ் ஜமாலி
—————————————————————————————————————————————
முஸ்லிம்கள் ஆலிம்களாக எளிய வழி !
எழுதப் படிக்கத் தெரியாத, நகரீகமற்ற மக்களைப் பெரும்பாண்மையாகக் கொண்டிருந்த, மிகவும் பின் தங்கியிருந்த ஒரு சமூகம், நபி(ஸல்) அவர்களின் 23 வருடகால உழைப்புக் குப்பின், ஒப்புயர்வற்றை ஓர் உன்னத சமுதாயமாக உயர்ந்தது. மனித சமுதாயத்தையே நேர்வழியில் இட்டுச் செல்லும் ஒரு மகத்தான பதவியை அடைந்தது. குர் ஆன், ஹதீதைக் கொண்டு மட்டுமே அச்சமுதாயத்தின், அவ்வற்புத ஞானத்தைப் பெற்றிருந்தனர் முஸ்லிம்கள் இன்று அத்தகைய நேர் வழியை விட்டு, வழிதவறி, வேறு பல வழிகளில் சென்றமையால், மிகக் கீழானதொரு நிலையை அடைந்துள்ளனர்.
எனவே, நபி ( ஸல்)அவர்கள் காலத்து அதே எளிய நேர் வழி முறைகளைக் கடைப்பிடித்து, எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள்  என்ற பாகுபாடின்றி, அனைவரும் மார்க்கஞானம் பெற, ஆலிம்களாக அயராது பாடுபட்டு வருகிறோம். பிரதி ஞாயிறுதோறும் மாலை 4 மணி முதல் 9 மணி வரை பயிற்சி அளித்து வருகிறோம்.
1.  குர் ஆன் பயிற்சி
2. ஹதீதுகள் பயிற்சி
3.  பேச்சுப் பயிற்சி
4. சந்தேக நிவர்த்தி
கட்டணம் கிடையாது
உள்ளூர், வெளியூர்களிலிருந்து சகோதர, சகோதரிகள் வந்து பங்கு கொண்டு, பார்வையிட்டு, அதே எளிய நேர்வழி முறைகள் தங்கள் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தலாம்.
பெண்களுக்கு தனி இடவசதியுண்டு, மகரமான ஆண் துணையுடன் அவர்களுக்கு வந்து,  பங்குபெற்று சிறந்த மார்க்க வல்லுநாகளாக ஆகலாம்.
அல்ஹம்துலில்லாஹ் !
புனித ரமழானை அடையும் பாக்கியத்தை  நம் அனைவருக்கும் கொடுத்த எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
“”அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்Vஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதர் ரஸுலுல்லாஹ் ” என்று உறுதிட்ட சாட்சி சொல்வதற்கு கொப்ப, அந்த நபி (ஸல்) அவர்களை மட்டுமே பின்பற்றி ரமழான் நோன்புகளையும், ரமழான் இரவுத் தொழுகைகளையும் நிறைவேற்றியவர்களே பாக்கியவர்ன்கள் . இவர்களே அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெறுபவர்கள். அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற மக்களின் ஏச்சுப் Š பேச்சுக்களையும், நையாண்டிகளையும். நாகூர், விருதுநகர் போன்ற இடங்களில் அடி, உதைகளையும் சசிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இவை அனைத்துத் நபி (ஸல்)அவர்கள் காலந்து ஆரம்பகால முஸ்லிம்கள் பட்ட துன்பங்களை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன. இவை இல்லாமல்  இஸ்லாத்தில் மறுமலர்ச்சி இல்லை என்பதையும், அந்த மறுமலர்ச்சி மிக விரைவில் இருக்கின்றது என்பதையும் நமக்கு இந்த  நிகழ்ச்சிகள் உணர்த்துகின்றது. இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக இந்தத் துன்பங்களை மேற்கொள்ளும் உண்மை முஸ்லிம்களுக்கு எமது நல்வாழ்த்துக்களையும், து ஆக்களையும் சொந்தமாக்குகின்றோம்.
இஸ்லாத்தின்  மறுமலர்ச்சி  மிக விரைவில், இருக்கின்றது. என்பதற்குப் பல அறிகுறிகளைப் பார்க்க முடிகின்றது. தமிழ் பேசும் மக்களிடையே தீவிரமான சிந்தனை ஏற்பட்டுள்ளதைப் பார்க்க முடிகிறது. இந்தியாவிலும் சிங்கப்பூர், மலேசியா, மற்றும் அரபு நாடுகளிலுள்ள தமிழ் பேசும் முஸ்லிம்களிடையேயும், குறிப்பாக ஸ்ரீலங்கா வாழ் முஸ்லிம்களிடையேயும் இஸ்லாம் என்றால் அது குர் ஆன், ஹதீஸ் மட்டுமே யன்ற தெளிவான சிந்தனை வளர்ந்து வருகின்றதுசுமார் 24 நாட்கள் ஸ்ரீ லங்கா சுற்றுப்பயணத்தின் போது, அங்குள்ள முஸ்ம்கள் குறிப்பாக இளைஞர்கள் காVட்டிய ஆர்வம், முழு ஒத்துழைப்பு நம்மை பிரமிக்க வைத்துவிட்டது.  இஸ்லாத்தின்  மறுமலர்ச்சிக்கு  இலங்கை ஒரு கேந்திர ஸ்தலமாக அமையும் என்ற எண்ணம் எமக்கு ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது சத்தியப்பணியில் நமக்கு முழு ஒத்துழைப்புத் தந்த ஜமா அத்துக்கள் அனைத்திற்கும், குறிப்பாக வாலிபர்களுக்கும் எமது இதயம் கனிந்த நன்றியைஉரித்தாக்குகிள்றோம்.  இஸ்லாத்தை  அதன்  தூய  வடிவில் நிலைநாட்டப் பாடுபட்டுக் கொண்டிருக்கும் அனைவரின் இம்மை, மறுமை நற்பேறுகளுக்காக துஆ செய்கிறோம்.

Previous post:

Next post: