சென்ற நவம்பர் 2017ல், “”தியேட்டர் களில் தேசியகீதம் கட்டாயமாக பாடப்பட வேண்டும்” என்று நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்தது. இதைத் தொடர்ந்து தியேட்டர்களில் தேசியகீதம் பாடப்பட் டது; அப்போது எழுந்து நிற்காதவர்கள் கடு மையாக தாக்கப்பட்டதாக செய்திகள் பத் திரிக்கைகளில் வெளிவந்தன.
தேசியகீதம் பாடும்போது எழுந்து நிற்காத முஸ்லிம்களின் அறிக்கைகள் இந்த சட்டம் வருவதற்கு ஒரு காரணமாகக் கூட இருக்கலாம். மதச்சார்பற்ற பாரம்பரியம் மிக்க இந்திய ஜனநாயக நாட்டில், சமீப காலமாக முஸ்லிம்கள் கொல்லப்படுகின்றனர். அல்லது அவர்கள் மீது கொலைவெறி தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன இந்த சூழலில் நீதிமன்றத்தின் இப்படியான உத்தரவு ஆச்சரியத்தைத் தருகிறது.
பாடப்பட வேண்டிய தேசியகீத நிகழ்ச் சிகள், மற்றும் இடங்கள் ஆகியவைகள் அரசியல் சட்டத்தில் விரிவாக இல்லையாம். ஆகவே அவற்றை வரைமுறைப்படுத்தி, பாடப்படும் அந்த நேரங்களில் மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண் டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
இந்த உத்தரவு தொடர்பாக நீதிபதி சந்த்ரசூட் அவர்கள் தாம் இடம் பெற்றி ருந்த உச்சநீதிமன்ற 3 நீதிபதிகளின் அமர் வில், அப்போது தமது கருத்தை வெளிப் படையாகவும்,தெள்ளத் தெளிவாகவும் தெரியப்படுத்தியுள்ளார்.
1. தியேட்டர்களில் மக்கள் எழுந்து நின்று தங்களின் தேசப்பற்றை நிரூபித்தாக வேண் டும் என்று எதிர்பார்ப்பது சரியா?
2. அரசியல் சட்டம் மூலம் தேசபக்தியை வளர்க்க நினைப்பதும், அதற்கான இடங்க ளாக தியேட்டர்களையும், அரங்கங்களை யும் தேர்வு செய்வது ஏன்?
3. தேசிய கீதம், தேசத்தின் கொடி,தேசத் தின் வரைபடம் ஆகியவைகளை அவமதித் தால் என்ன என்றோ, இந்த சந்தர்ப்பங் களில் மரியாதை தந்தாக வேண்டுமா என்றோ கேட்கவில்லை. ஆனால், இவை களை எப்படி மதிக்க வேண்டும் என்று தீர் மானிக்க வேண்டியது நீதித்துறையின் வேலை அல்ல. ஜனநாயக நாட்டில் இவை களை தீர்மானிக்க வேண்டியது அரசுதான்.
4. மக்களிடம் இவைகளுக்கு இயல்பா கவே மரியாதை இருக்கிறது என நாம் எதிர் பார்ப்போம். ஆனால், அப்படிச் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்துவது தேவையற்றது என்று கூறினார் நீதிபதி சந்த்ரசூட் அவர்கள்.
நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து,
1. நீதிமன்றம் தனது அதிகார வரம்பை மீறி செயல்படுகிறது.
2. நீதிமன்றம் நிர்வாக வேலையையும் தானே கையில் எடுத்துக் கொள்கிறது என்று விமர்சனங்கள் பல தரப்பு மக்களிடையே எழுந்தன.
நீதிபதி சந்த்ரசூட் அவர்களின் நியாய மான கருத்துக்கள், மற்றும் மக்களின் பல தரப்பட்ட விமர்சனங்கள் கருத்தில் கொள்ள வேண்டியவைகள் ஆகும்.
இந்த நிலையில், ஒரு குழு அமைத்து இது சம்பந்தமான உத்தரவை மத்திய அரசு அறி விக்கும் என்று தெரிவித்ததைத் தொடர்ந்து, “”தேசிய கீதம் கட்டாயம்” என்ற உத்தரவை திரும்பப் பெற்றிருக்கிறது உச்சநீதிமன்றம்.
தேசிய கீதம் பாடும்போது, மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண் டும் என்று கூறப்பட்டுள்ளதை சற்று விரிவாக காண்போம். “”மரியாதை” என்ற வார்த்தைக்கு நம்மிடம் நடைமுறையில் உள்ள புரிதல் சரியானதுதானா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
எனவே முதலில் நம்மிடம் உள்ள நடைமுறை பழக்கத்தைக் காண்போம்.
1. தேசியகீதம் பாடும்போது எழுந்து நின்று மரியாதை செலுத்துவது,
2. மனிதன் பிற மனிதருக்கோ பெரியவர் களுக்கோ எழுந்து நின்று மரியாதை செலுத்துவதும் வணக்கம் சொல்வதும்,
3. பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெறுவது.
4. உச்சகட்டமாக, காலில் விழுவது
இதுபோன்ற பழக்கங்கள் உண்மையில் மரியாதை ஆகிவிடுமா?
நம்மிடம் உள்ள நடைமுறையை கவ னித்துப் பார்க்கும்போது, இப்பழக்கங்கள் எதிர் வினைகளை ஏற்படுத்தும் ஆற்றலை உருவாக்குகிறது. இதையும் நம்மிடம் உள்ள நடைமுறைகளிலேயே தெரிந்து கொள்ள முடிகிறது. அதாவது தனக்கு ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், எந்த மனிதரால் காரியம் நடைபெறுமோ, அந்த மனிதருக்கு மரியாதை கொடுக்க ஆரம்பிக்கிறான். அந்த மரியாதை வெளிப்படையாக பிறர் முன்னிலையில் தனக்கு கிடைக்கும்போது தாம் கவுரவிக்கப்பட்டதாக எண்ணி மரி யாதை கொடுத்தவனுக்கு என்ன வேண் டுமோ அவனுக்கு தகுதி இல்லை என்றாலும் அதை செய்து கொடுத்து விடுகிறான். இம் மரியாதையால் காரியம் நடைபெறும் என் பதை மனிதர்களில் பலர் அனுபவித்து வருவதால், “”ஊளைக் கும்பிடு” போடும் பழக்கம் மக்களிடம் உருவாகி விட்டது. ஆக இந்த மரியாதை “”சுய லாபத்திற்காக” கொடுக்கப்பட்டு, மரியாதை என்ற வார்த் தையையே கொச்சைபடுத்தப்படுகிறது.
இப்படிப்பட்ட மரியாதைகள் பதவி உயர்விற்காக, கடன் பெறுவதற்காக காரியம் சாதிப்பதற்காக, பிறர் வாகனங் களில் தொடர்ந்து பயணிப்பதற்காக போன்ற இன்னும் பற்பல காரணங்களுக் காக நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது.
இதை வேறொரு கோணத்தில் பார்ப் போம். பகவத்கீதை ராமாயணம், உபநித் துக்கள், பைபிள், குர்ஆன் போன்ற அவரவர் சமயம் சார்ந்த வேதநூல்களை பொதுவாக அனைவருமே மதிக்கிறோம். சமயம் சார்ந்த வர்கள் அவைகளைப் படிப்பதற்காக எடுக் கும்போது மரியாதையுடன் எடுக்கிறார்கள். கன்னத்தில் போட்டுக் கொள்கிறார்கள். இரு கைகளால் எடுத்து நெஞ்சில் அணைத் துக் கொள்கிறார்கள். அவைகளை எடுத்து முத்தம் இட்டுக் கொள்கிறார்கள்.
இப்படியாக மரியாதைக் கொடுக்கக் கூடிய அனைவரும், அவரவர் மதிக்கும் நெறிநூல்கள் உபதேசித்துக் கொண்டிருக் கும் நேர்மை, நாணயம், ஒழுக்கம், நம்பிக்கை, நன்னடத்தை இவைகளைப் பின்பற்றி தத்தம் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார்களா? அப்படிப்பட்ட மனிதர் களை அரிதாகத்தான் காணமுடிகிறது.
ஆனால், மாறாக நேர்மையற்ற வியா பாரம், கலப்படம், கொடுக்கல், வாங்கலில் நேர்மையின்மை, விபச்சாரம், மது, மாது, சூது, மோசடி, லஞ்சம், அவதூறு, புறம் பேசல், பெற்றோரைப் பேணாமை, ஏமாற்றுதல், துரோகம், உறவு முறைகளைத் துண்டித்தல் போன்ற பற்பல துர்குணங்கள் மக்களிடையே பரவலாகக் காணக் கிடைக்கிறது.
வெளிப்படையான இந்த மரியாதை களினால் பலன் ஏற்பட்டதா? இல்லையே! ஏன்? ஏனெனில் மனிதர்களின் உள்ளுணர் வில் இருந்து மரியாதைகள் வெளிப்பட வில்லை. எனவே மரியாதையை சட்டங்கள் மூலமாக ஏற்படுத்த முயல்வது அறிவுடைமை ஆகாது.
இதை இன்னுமொரு கோணத்திலும் பார்ப்போம். சமயம் சார்ந்த அனைவருமே தங்கள் மதகுருமார்கள், மகான்கள், தலை வர்கள், போதகர்கள், ஹஜ்ரத்கள் அனை வருக்கும் அளவு கடந்த மரியாதை செலுத்து கின்றனர். எந்த அளவுக்கு என்றால், அவர் களின் காலை பெண்கள் கழுவுகின்றனர். இதை ஒரு புனிதமாகவும் கருதுகிறார்கள்.
இவ்வாறு மரியாதை கொடுப்பது சரி என்றோ தவறு என்றோ விவாதிக்க முன் வரவில்லை. மாறாக, இந்த மரியாதைகளைப் பெறுகின்ற ஒருசிலர், இது தங்களுக்கு கிடைத்த கவுரவமாக எண்ணி புகழுக்கு அடிமையாகி விடுகின்றனர். விளைவு நெறிநூல்கள் போதிக்கும் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளமுடியாமல், தீய காரியங்கள் செய்யும் நிலைக்கு சென்று விடுகின்றனர். பத்திரிக்கைகளில் அவர்க ளின் செயல்கள் படம் பிடித்து காட்டப்பட்டு அவர்கள் இழிநிலைக்கு தள்ளப்படு கிறார்கள். எவரையும் குறிப்பிட்டு எவரின் செயலையும் விமர்சிப்பது எமது வேலை அல்ல. மனிதனுக்கு மனிதன் செய்யும் வெளிப்படையான மரியாதைகள் நற் செயல்களை இழக்கச் செய்யும் என்பதையே முன்வைக்கிறோம்.
புகழ், கண்ணியம், வணக்கங்கள் அனைத்தும் ஒரே இறைவன் அல்லாஹ் வுக்கு மட்டுமே என்பது இஸ்லாத்தின் கொள்கை. அந்த இறைவனின் இறுதி தூதர் முஹம்மது (அவர்கள் மீது சாந்தி உண்டாவதாக) அவர்கள் வரும்போது மரியாதை சம்பந்தமாக அவர்கள் கூறிய அறிவுரையை கவனியுங்கள். “”எவர் ஒருவர் தாம் வரும்போது பிற மனிதர்களை எழுந்து நிற்பதை விரும்புகிறாரோ, அவர் தமது இருப்பி டத்தை நரக நெருப்பில் ஆக்கிக் கொள்ளட் டும். (அதாவது புகழப்பட்டவர் பெருமைக் குள்ளாகி நேர்வழியிலிருந்து பிரண்டு விடு வதால் அவர் நரகை அடைய நேரிடும் என்பதே இதழ் கருத்தாகும்) எனவேதான், “”புகழ்பவன் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள்” என்றும், “”பிறரை புகழ்பவன் அந்த சகோதரரை கொலை செய்ததற்கு ஒப்பாவான்” என்றும் பல்வேறு சந்தர்ப்பங் களில் அறிவுரை கூறியுள்ளார்கள்.
நாட்டுப்பற்றை நிரூபிக்க நாட்டிற்கு என்ன செய்தோம் என்பதே முக்கியம். சடங்கு சம்பிரதாய மரியாதைகள் அல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். அஸ்ரப் குள்ளாஹ், மாவீரன் அப்துல் ஹமீது போன்ற எத்தனையோ முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்காக தியாகம் செய்திருக்கி றார்கள். ஆச்சார்யா பிரமோத் கிருஷ்ணன் அவர்கள், “”பகத்சிங்கை தூக்கில் ஏற்றியது முஸ்லிம்கள் இல்லை, காந்தியைக் கொன்றது முஸ்லிம்கள் இல்லை, ராஜீவ்காந்தியைக் கொன்றது முஸ்லிம்கள் இல்லை என்கிறார். முஸ்லிம்கள் தங்களின் செயல்களில் நாட்டுப் பற்றுடன் நடந்து கொள்பவர்கள் என்பதை தெரியப்படுத்து கிறோம்.
எனவே, சட்டங்கள் மூலமாக நாட்டுப் பற்றை வளர்க்க முயல்வது அறிவுடைமையா? என சிந்தித்து செயல்படும்படி அரசை கேட்டுக் கொள்கிறோம்.